Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க இராணுவத் தளபதி பதவி நீக்கம்: பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க இராணுவத் தளபதி பதவி நீக்கம்: பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உத்தரவு

Published By: Digital Desk 3

03 Apr, 2026 | 11:15 AM

image

(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)

அமெரிக்க இராணுவத் தளபதி ஜெனரல் ராண்டி ஜோர்ஜை வியாழக்கிழமை பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் அதிரடியாகப் பதவியிலிருந்து நீக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் இராணுவத்தின் பல சிரேஷ்ட அதிகாரிகளை ஒரே நேரத்தில் பதவி நீக்கியுள்ளார்.

இராணுவத்தின் 41 ஆவது படைத் தளபதியான ராண்டி ஜோர்ஜ், இன்னும் ஓராண்டு பதவிக்காலம் இருக்கும் நிலையிலேயே உடனடியாகப் பணி ஓய்வு பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளார்.

இராணுவத்தின் பயிற்சி மற்றும் உருமாற்றக் கட்டளையகத்தின் தலைவர் ஜெனரல் டேவிட் ஹோட்னே மற்றும் இராணுவ மதகுருமார் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் வில்லியம் கிரீன் ஆகியோரையும் ஹெக்ஸெத் பதவி நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈரானுடன் போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு இக்கட்டான சூழலில், இராணுவத்தின் மிக உயர்ந்த தளபதியைப் பதவியிலிருந்து நீக்குவது அமெரிக்க வரலாற்றில் ஒரு அரிய மற்றும் வழக்கத்திற்கு மாறான செயலாகும்.

இந்த பதவி நீக்கங்களுக்கான உத்தியோகபூர்வக் காரணத்தை பென்டகன் வெளியிடவில்லை.

ராண்டி ஜோர்ஜிற்குப் பதிலாக, ஜெனரல் கிறிஸ்டோபர் லானீவ் தற்காலிகமாக அந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீட் ஹெக்செத் பதவியேற்றது முதல் இராணுவத்தில் பல அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார்:

இந்த மாற்றங்கள் அமெரிக்கா ஈரானுக்கு எதிராகத் தனது இராணுவ பலத்தை அதிகரித்து வரும் வேளையில் நிகழ்கின்றன.

https://www.virakesari.lk/article/242629

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் தாளத்திற்கு ஆடாத அதிகாரிகளை பதவி நீக்கம், பதவியிறக்கம், இடமாற்றம் செய்வது சர்வாதிகாரிகளின் இயல்பு. சானி அபயசேகரவை பதவி இறக்கியதும், இப்போ அவரை கண்டு நடுங்குவதும் அதே காரணத்தாற்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பர் 3ம் தரம் ஜனாதிபதியாக, தேர்தல்களை தள்ளிவைக்க தேவையானது செய்யப்படுகிறதோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவ தளபதியை நீக்கிற அளவுக்கு ஈரான் பெரியம் சம்பவம் செய்திருக்கு.....😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

அமெரிக்க இராணுவத் தளபதி பதவி நீக்கம்: பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உத்தரவு

ஒரு செயலாளரின் அதிகாரத்தின் அளவு எதுவரை செல்லும்?🤔

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Paanch said:

ஒரு செயலாளரின் அதிகாரத்தின் அளவு எதுவரை செல்லும்?🤔

அமெரிக்காவில் இராணுவ மந்திரியைத்தான் செயளாளர் என்பார்கள்.

அதிபர் தேரும் இவரின் பதவியை செனேட் ஆளை நேரில் விசாரித்து வாக்கெடுப்பு மூலம் இறுதி செய்யும்.

அதன் பின் இராணுவ நியமன விடயங்களில் சட்டத்துக்கு உட்பட்டு, இவர் செயல்படலாம்.

இந்த பதவி நீக்கங்களில் சட்டம் மீறப்பட்டதாக தெரியவில்லை. இருபினும் நட்ட ஈடுதான் கிடைக்கும். மீள பதவி அல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ராணுவ தலைமைத் தளபதி பதவியிலிருந்து விலக அறிவுறுத்தல்

ராண்டி ஜார்ஜை

பட மூலாதாரம்,Getty Images

பிபிசியின் அமெரிக்கக் கூட்டு நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் தகவலின்படி, அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத், ராணுவத் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜை அவரது பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பென்டகனின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஜார்ஜ் "41வது ராணுவத் தலைமைத் தளபதி பதவியிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுகிறார்" என்று கூறியுள்ளார்.

ராணுவத் தலைமைத் தளபதி பொதுவாக நான்கு ஆண்டு காலத்திற்குப் பதவி வகிப்பார். வெஸ்ட் பாயிண்ட் ராணுவ அகாடமியில் பட்டம் பெற்ற, தொழில்முறை ராணுவ அதிகாரியான ஜார்ஜ், 2023-ல் முன்னாள் அதிபர் ஜோ பைடனால் இந்தப் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.

இரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் "மிக விரைவில்" முடிவுக்கு வரும் என்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து இந்த சமீபத்திய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

ஜார்ஜ் முதல் வளைகுடாப் போரிலும், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடந்த சமீபத்திய மோதல்களிலும் காலாட்படை அதிகாரியாகப் பணியாற்றினார். அவர் ஏன் பதவி விலகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார் என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.

"அவரது சேவைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், ஆனால் ராணுவத்தில் ஒரு தலைமை மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது," என்று பெயர் குறிப்பிடப்படாத ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரி சிபிஎஸ்ஸிடம் கூறினார்.

பென்டகன் செய்தித் தொடர்பாளர் பார்னெல் கூறியதாவது: "ஜெனரல் ஜார்ஜ் நமது தேசத்திற்கு ஆற்றிய பல தசாப்த கால சேவைக்கு போர் துறை நன்றியுடையதாக உள்ளது. அவரது ஓய்வுக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்."

அமெரிக்க ஊடகங்களின்படி, அவருக்குப் பதிலாக ராணுவத் துணைத் தலைமைத் தளபதி ஜெனரல் கிறிஸ்டோபர் லானேவ் தற்காலிக ராணுவத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்பார்.

அமெரிக்க ராணுவ தலைமைத் தளபதி பதவியிலிருந்து விலக அறிவுறுத்தல்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.