Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெண்ணிலா அக்காவின் கவிதைகள்!!

Featured Replies

நிலா அக்காவின் கவிதைகள் நேக்கு மிகவும் பிடிக்கும் நேரம் கிடைக்கிற நேரம் பழையகளம் யாழ்களத்தில் போய் படித்தேன் :unsure: அதில் பல கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன :huh: சோ அங்கே இருந்து தூக்கி கொண்டு வந்துட்டேன் :huh: ................நிலா அக்கா ஏசமாட்டீங்க தானே :unsure: (அது தானே போட்சாச்சு பிறகு என்ன என்று கேட்கிற மாதிரி இருக்கு )

வெண்ணிலா அக்கா யாழ்களம் 2 யில் எழுதிய கவிதைகளிள் சில!!

காத்திருக்கிறேன்

வாழ்வின் தேடுதலுக்காக

நகர்ந்த நாட்களில்

என்னை நீதான்

அடையாளப்படுத்தினாய்

உன் மௌனத்தின்

வேர்களில் பூத்திருக்கிறது

என் காதல் பூ

பனித்துளியை பேட்டி

காணும் மேகங்கள்

விண்மீனைப் பிடிக்கும்

மூங்கில்களில் அவசரம்..

இப்படியான என்

கனவுகளின் தொடர்ச்சியில்

அலைகள் மறந்த

கடலுக்குள் நாம்...

என நீட்சித்தது

என்னைத் தோற்கடிப்பதாய்

உனக்குள்ளே சந்தோஷப்படும்

தருணங்களில் தானடி

நினைக்கிறேன் தோற்காத

நம்முடைய காதலை...........!

மீன்களின் லயிப்பில்

ரசிக்கும் நாணல்

நதிக்குள் ஏற்படும்

சலனத்தை மறப்பதுவாய்

என் ஞாபக நதிக்கரையில்

கூட உன் வெட்கமே சலனமாய்..

அன்றைய மழை

இன்றுவரை விடாமல்........

காத்திருக்கிறேன்

குடை தருவாயென!

வட்ட..... வட்ட ....வெண்ணிலாவே...

வட்ட..... வட்ட ....

வெண்ணிலாவே...

தொட்டு தொட்டு பேச வாவேன்..!

நெட்டநெடு வானதிலே

தன்னம் தனியாக நீ

என்னை... என்னை சுற்றி வாறாய்

இதை நிறுத்தாயா...?

உன்னை...... உன்னை....

நித்தமுமே நான்நினைத்து வருந்துகிறேன்..

நிம்மதியாய்... நித்தியமாய்

இரண்டு வார்த்தை

கொஞ்சி... கொஞ்சி ....பேசிடலாம்

கீழ் இறங்கி வராயோ..?

நீல நீள வானத்திலே

நீ வரும் காட்சி

கண் கொள்ளாக் காட்சி.....

அதைக் காணும் போது

உனைக் கட்டியணைச்சு முத்தமிட ஆசை

ஆனால் ....முடியவில்லை..என்னால்..

கதிரவன்...

கண்ணுறங்கும்நேரத்தில்...

நீ என் வீட்டுக்கு விளக்கேற்ற வாறாயே....

எப்படித் தான் நன்றி சொல்வேன்..

நான் உனக்கு...

மல்லிகை மொட்டவிழும்

மாலை நேரத்தில்

ஒவ்வொரு நாளும்

ஒவ்வொரு வடிவத்தில்

ஒய்யாரமாக நீ

வான வீதியில்

வலம் வருவது

என்னைக் கொள்ளை கொள்ளுதே....

நிலவே என்னைக் கொள்ளை கொள்ளுதே......

சுட்டியே...................!

சிரிப்பை மறந்த சுட்டி வெண்ணிலவே!

உன் வாழ்வில்

நெருப்பையள்ளிக் கொட்டியோர்

நெஞ்சமில்லாதவர்

தவிப்பை நானறியேன்.

இருப்பினும் ஒருதடவை களத்தில்

புன்னகையுடன் உலாவா வெண்ணிலா!

கொதிப்பை மறந்து

குளிர்தென்றலாய் வா வெண்ணிலா!

யாழ்களம் நோக்கி

சிரிப்புடன் வா வெண்ணிலா!

பசுஞ்சோலை நீயே!

பைந்தமிழும் நீயே!

பாசமுடன் களஉறவுகள்

பரிவுடன் தான் ஏந்தியே

நேசமுடன் வாழவைப்பர்

தினமும் நீ வா வெண்ணிலா!

கை நழுவிய பறவை........!

காதலின் சுகத்தை காயமின்றி

தந்தாய் அன்று

காதலின் வேதனையை கண்ணீராக

மாற்றினாய் இன்று

சொல்ல நினைத்தேன் சோகத்தை

சொந்தமின்றி போனதேனோ

சேர நினைத்தேன் உன்னோடு

சோதனை வந்தது வாழ்க்கையில்

உறவென்று உரிமையோடு இருந்தேன்

பகையென்று சொல்லி பிரிந்ததேனோ

களங்கமின்றி கரைசேர முயன்றேன்

இன்று கை நழுவிப்போனதேனோ

ஆயிரம் ஆசையுடன் நித்தமும்

நான் கட்டிய அன்பு மாளிகை

நேற்று பெய்த மழையினால்

நீராகப் போனதேனோ

மீண்டும் அன்பு மாளிகையை

உயிரெழுப்ப முயல்கிறேன்

கை நழுவிய பறவை

கைகொடுத்து உதவவருமா?

இறைவனை கண்மூடி மனதார

கரங்குவித்து பிரார்த்திக்கிறேன்

என்னை விட்டு கை நழுவிய

இரக்கமில்லா பறவை

மீண்டும் என்னிடம் வந்து சேர

நீயா பேசியது?

என் உள்ளத்தில் புகுந்து

உன் உருவத்தை இழைக்க வைத்து

என் கனவுகளையும்

இனிமையாக்கிய என் இனியவனே!

நீயா பேசியது

அந்தக் கொடிய வார்த்தையை

சோகத்திலும் உனது

சொர்க்கவைக்கும் வார்த்தைகளை

நினைத்த எனக்கு இன்று

தீயால் செய்த பூவைத்

தூவி நோயால் என்னை

வாட வைத்து பேயாய்

நடந்து கொண்டாயே

உன் பேச்சில் நான்

வார்த்தையாய் இருக்க

நினைத்தேன் - ஆனால்

நீயோ வார்த்தையைப்

பிழையாகப் பேசிவிட்டாயே!

என் இதயத்தில் இருண்டு

கிடந்த மேகத்தை - உன்

மின்னல் பார்வையால்

மழையாய்ப் பொழிய வைத்து

என்னை நீல வானம்

ஆக்கியவனே

நீயா பேசியது?

இரக்கமில்லாதவளே!

உனக்குள் இனியும்

எதற்கு என் ஞாபக உறக்கம்

கலைந்துவிடு உனது

காதல்த் தூக்கத்தை

என்னை மறந்த விடு

வேறு ஆடவனை மணந்து விடு

என்ற பஞ்சமில்லாத பொல்லாத

பொய்யான வார்த்தையை

நீயா பேசியது?

பிரியாவிடை

பட்ட மரமான என்னை விட்டு

பறந்து செல்ல

நீ நினைத்துவிட்டாய்

பரவாயில்லை- நீ

பறந்து செல்

அழகிய பட்சியே

ஓர் பசுமையான சோலைதனில்

படர்ந்து வளர்ந்த அடர்ந்த

மரமொன்றிலே

அமைத்துக் கொள்

உனக்காக ஒர் அழகிய கூடுதனை

பட்டுப்போன மொட்டை மரமான

நான் உன் ஞாபகத்தோடே

மீதமாயிருக்கின்ற -என்

காலத்தைக் கடத்திக் கொள்கிறேன்

இன்னும் சில நாட்களிலே

நிலத்திலே சரிந்து விழுவேன்

அல்லது

சரிக்கப்பட்டு விழுவேன்

நிதமும் உன் நினைவுக் கோடரி

என்னிதயமதை கொத்தி தின்கிறது

என்ன செய்வது

எனக்கிது கண்ணீர் கலந்த

கடும் கோடையாயிற்று

இறுதியாய் உன் இரைப்பையின்

பசி தீர்த்திடவென

ஒரு கனிகூட இல்லாது போயிற்று

இந்த காய்ந்த காயப்பட்ட கிளையிலே

நிழலுக்காகவென நீ

ஒதுங்கியதை உறவுக்காக

என் பக்கம் ஒதுங்கிடுவதாய் உவகைகொண்டு

உள்ளமதை சிதைத்துக்கொண்டது தான் மிச்சம்

மொட்டை மரமான என்மீதும்

நீ மோகம் கொண்டு ஓய்வு தேடி

உறவாடியதற்காக உயிர்மூச்சுள்ளவரை

உன் நினைவினை நான் இழக்கமாட்டேன்

மரமான மனமும் ரணமான வாழ்வும்

உரமான உன் நினைவால்

உயிர்வாழ்ந்திடும் என்பது

உன் நினைப்பு.

ஒரு உறுதியற்ற அஸ்திவாரம்

ஒரு நாள் சரிந்துவிடும்

பட்சியே நீயாவது

சந்தோசமாக வாழ்ந்திடு

உதயமாவாயா....?

தொலைநகரில் வசிக்கும் நண்பிக்கு

தொலை நகல் அனுப்பி விட்டு

தொலைபேசியில் உரையாடலாமென

தொலைதொடர்பு நிலையம் வந்த என்னிடம்

தொலைத்தாயா உன் இதயத்தை

தொலைத்த இதயத்தை

தேடி அலைவதாக

நடந்தாய் தினமும்

நான் நடக்கும் சாலையோரம்

தொடர்பை ஏற்படுத்தினாய்

தொலைபேசி சினுங்கல் மூலம்

இணைந்தாய் இதயத்தை தேடி

இணைய முகவரி ஊடாக

இறுமாப்புள்ளவனே

இந்த இம்சை எதற்காக

களைப்பின்றி தேடியலைந்து

கண்டுபிடித்தாய் உன் இதயம்

பத்திரமாய் என் இதயத்துள்

பொத்தி வைத்திருப்பதை

நாடோடி மன்னவனே

சனிக்கிழமை சிட்டாக

சிறகின்றி வானில் பறந்தவனே

ஞாயிற்றுக்கிழமை உன் இனிய

ஞாபகத்துடன் நானிருந்தேன்

திங்கட்கிழமை கதைத்தாய்

தொலைபேசியில் அமெரிக்காவில் இருந்து

இணைந்தாய் செவ்வாய்க்கிழமை

இணைய வழியாக கனடாவில் இருந்து

புதன் கிழமை ஐரோப்பாவில் இருந்து

புன்முறுவலுடன் தகவல் தந்தாய்

வியாழக்கிழமை உவ்விடம் வருவேன்

விடிவெள்ளியாய் காத்திரு அன்பே என

சாத்தியமாகும் என்று

சத்தியமாக நான் நம்பவில்லை

தல கேட்ட தோட்டா பதிலுக்காக

தலைசுற்றலுடன் சிந்தித்திருந்த வேளை

எதிர்பாராவிதமாக திடீரென

எதிர்கொண்டாய் என் முன்னால்

உனைக் கண்ட ஆச்சரியத்தில்

இமைகளை மூட மறந்து நின்ற என்னை

நிலா என்ற உன் அழைப்பால் தான்

நிஜம் என நான் உணர்ந்தேன்

உலகம் சுற்றும் வாலிபனே

சூரியன் மறையும் முன்

சுதந்திர சதுக்கத்தில்

சந்தித்த நீயோ

வானிலா மறையும் முன்பே

வானில் பறக்க திட்டமிட்டாய்

இனி மீண்டும் எப்போது

இந்த வெண்ணிலா முன் உதயமாவாய்?

(உதயமாவான்)

பிரிவு

எங்கிருந்தோ ஓர் சுடர்

இங்கு வந்தது எனை நோக்கி

நன்கு சிலகாலம் கூடி மகிழ்ந்தது

அன்பு பெருக கோடி பிரகாசமாகியது

நாட்கள் மெல்ல நகர்ந்தன

நயவஞ்சகர் சிலரின்

நெஞ்சில் இருந்து வந்த

வஞ்சக மூச்சுக் காற்றால்

சுடர் ஓய்ந்தது

இடர் தொடர்கிறது....

இவ்வளவும் பழைய களத்தில் நான் ரசித்தேன் நிலா அக்கா வாழ்த்துகள் :huh: இப்ப எல்லாம் ஏன் இப்படி எழுதுவதில்லை தொடர்ந்து பல கவிதைகளை நிலா அக்கா தரவேண்டும் :huh: .........என்னடா இவன் இப்படி எடுத்து போடுறான் என்று பேபியை ஏசி போடாதையுங்கோ பாவம் பேபி :) ...........இந்த கவிதைகள் ஒன்றும் பல கதைகளை சொல்லுது போல இருக்கு இதை வைத்து நாம அடுத்த படம் எடுக்கலாம் போல!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

கவிதை இங்கே இருந்து எடுக்கபட்டது!! :unsure:

http://www.yarl.com/forum/index.php?act=idx

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலாவின் கவிதைகள் படிக்க கிடைத்ததில் மகிழ்ச்சி.

பதிவினை தந்த யம்முவுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நிலா, நல்ல கவிதைகள்.இணத்த ஜம்மு பேபிக்கு நன்றிகள்.

நிலவின் கவிதைகளை

நானும் ரசித்தேன் நன்றிகள் என் பேபிக்கு......

என்ன நடந்தது பேபிக்கு? பழையதெல்லாம் மொத்தமாக தூசு தட்டிட்டீங்க போல இருக்கு. நன்றிகள் நானும் கனநாளாக தேடித்திரிஞ்சேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வரிகள், ரசிக்கத்தக்கவை.

இணைப்புக்கு நன்றி, படைப்புக்கு பாராட்டுக்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.