Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா, தேசியத் தலைவரைக் கொல்லப் போகிறதாம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யுத்த ஆய்வாளர் நிலவன் எழுதியது

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் மீதான சிறிலங்கா விமானப்படையினரின் வெற்றிகரமான தாக்குதலைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்த தமிழர்களை புதியதொரு அச்சமும், கவலையும் பிடித்துக்கொண்டுள்ளது. வெளியே பேசிக்கொள்ளவும் விரும்பாமல், அதேவேளை அதனை ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாமல் புலம் பெயர் நாடுகளிலுள்ள பல தேசியப்பற்றாளர்கள் தடுமாறிக்கொண்டு இருக்கின்றார்கள். என்னுடன் உரையாடுகின்ற பல அன்பர்கள் தமது இந்தப் புதிய கவலையை பல வடிவங்களிலும் வெளியிட்டும் வருகின்றார்கள். அவர்களது அந்த அச்சத்தை மேலும் அதிகரிப்பது போன்று, மேலும் பல செய்திகளும் அறிக்கைகளும் பல்வேறு தளங்களில் இருந்தும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

வீழ்த்துவோம்:

பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் அவர்கள் மீதான சிறிலங்கா வான்படை விமானங்களின் தாக்குதலைத் தொடர்ந்து, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செலயாளரும், சிறிலங்காவின் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

விடுதலைப் புலிகளின் தலைவர்கள் ஒவ்வொருவரினதும் இருப்பிடங்களையும் நகர்வுகளையும் நாம் நன்கறிவோம். ஆவர்கள் தமது இருப்பிடங்களை மாற்றிக்கொள்ளாவிட்டால், அவர்களை ஒவ்வொருவராக வீழ்த்துவோம்.." என்று கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, சிறிலங்காவின் பல்வேறு அரசியல் தலைவர்களும், அமைச்சர்களும், அதிகாரிகளும் இதனையொத்த கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள். இவை அனைத்தையும் விட, அண்மையில் சிறிலங்காவின் விமானப் படைத் தளபதி ஏயார் மார்ஷல் ரொஷன் குணதிலக தெரிவித்த கருத்தானது, புலம்பெயர் தமிழர்களின் நெஞ்சில் அதிக அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன| என்று அவர் தெரிவித்திருந்தார். சிறிலங்காவின் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே சிறிலங்காவின் விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் ரோஷன் குணதிலகே இவ்வாறு தெரிவித்திருந்தார். 'விரைவில் எங்கள் விமானப்படை வீரர்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பதுங்கு இடத்தை கண்டுபிடித்து, அவரை தீர்த்துக் கட்டுவார்கள். பிரபாகரனின் வாழ்நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. வவுனியாவில் மிகச்சிறிய பரப்பளவுக்குள் விடுதலைப் புலிகளின் எல்லை சுருக்கப்பட்டு விட்டது. எனவே, பிரபாகரன் எங்கு ஒளிந்திருக்கிறார் என்பதை துல்லியமாகக் கண்டுபிடித்து, தாக்குதல் நடத்துவது எளிதாகி உள்ளது. அவரை கண்டுபிடிப்பது பெரிய சிரமமான காரியமாக தோன்றவில்லை. இம்முறை அவரை பிடித்து விட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இதற்காகத்தான் இதுவரை நீண்ட பொறுமை காத்து வந்தோம். இப்போது அந்த நேரம் வந்துவிட்டது" - இவ்வாறு அந்த தொலைக்காட்சி செவ்வியில் ரோஷன் குணதிலகே தெரிவித்திருந்தார்.

சிறிலங்கா வான்படைத் தளபதியின் இந்தக் கூற்றை ஆமோதிப்பது போன்று, சில தினங்களுக்கு முன்னர் இந்திய ஆய்வாளர் ஒருவருடைய கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. உக்ரேன் மற்றும் பாகிஸ்தானிய விமானிகளைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளின் தலைவரை இலக்குவைக்கக்கூடிய தாக்குதல்களை சிறிலங்கா விமானப் படையினர் தீவிரப்படுத்தியிருப்பதாக|, இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஆய்வாளரும் இந்திய அமைச்சரவையின் முன்னாள் மேலதிகச் செயலாளருமான பி.இராமன் எழுதியிருக்கும் கட்டுரை ஒன்றில் தகவல் வெளியிட்டிருந்தார்.

பாகிஸ்தானின் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஆதரவுடன் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவிடத்தைக் கண்டுபிடிப்பதற்கான கண்காணிப்பு நிலையம் ஒன்று கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டிருப்பதாகவும்| அவர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

புலம்பெயர் தமிழ் மக்களை அதிக கவலையடைச் செய்து வருகின்ற செய்திகள் இவைதான். அவர்களை இன்று அதிகம் அச்சமடைய வைத்திருக்கின்ற விடயமும் இதுதான்.

உயர்ரக குண்டுகள்:

இது ஒருபுறம் இருக்க, வன்னியில் உள்ள விடுதலைப் புலி முக்கியஸ்தர்கள் மீது வானில் இருந்து ஏவுவதற்கென்று சில உயர் ரக குண்டுகளை சிறிலங்கா வான்படை பெற்று வைத்துள்ளதாகவும், தென் இலங்கை இராணுவ மற்றும் ஊடக வட்டாரங்களில் செய்திகள் கசிந்து வருகின்றன. அவற்றில் இரண்டு முக்கிய வான் குண்டுகள் பற்றி அதிகம் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றன.

MOAB ( Massive Ordnance Air Burst என்று கூறப்படுகின்ற அதிக சக்தி வாயந்த உயர் ரக வெடிகுண்டுகளை வல்லரசு நாடொன்றிடம் இருந்து சிறிலங்கா பெற்றிருப்பதாக ஊடகவியலாளர்கள் மத்தியில் பேச்சடிபடுகின்றது. அதிலும் குறிப்பாக, BLU-82B ரக சக்தி வாயந்த குண்டுகளையும், GBU-28 ரக புற ஊதாக் கதிர்களால் வழிநடத்தப்படுகின்ற குண்டுகளையும் சிறிலங்கா அரசாங்கம் பெற்றிருக்கின்றது என்று கூறப்படுகின்றது. சிறிலங்கா வான் படையின் உயர் அதிகாரிகளிடம் இருந்தே குறிப்பிட்ட இந்த வான்குண்டுகளின் விபரங்கள் சில இராணு ஆய்வாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

வன்னி மீது சிறிலங்கா வான் படை மேற்கொள்ள இருக்கும் தாக்குதல்கள், அதற்கான சாத்தியங்கள், அதன் எதிர் விளைவுகள் என்பன பற்றி நாம் பார்பதற்கு முன்னர், மேற் கூறப்பட்டுள்ள நவீன ரக வான் குண்டுகள் பற்றி மேலோட்டமாகப் பார்த்துவிடுவது நல்லதென்று நினைக்கின்றேன்.

07.10.2001 அன்று அமெரிக்கா துருப்புக்கள் அப்கானிஸ்தான் மீது போர் தொடுத்த சம்பவம் எங்களில் அனேகமானவருகளுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கின்றேன். ஓசாமா பின்லாடனையும், அல்கைதா தீவிரவாதிகளையும், அவர்களுக்கு ஆதரவு வழங்கிய தலிபான்களையும் அழித்தொழிக்கும் நோக்கத்தில் உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்கா அப்கான் மீது ஒரு பாரிய அழித்தொழிப்பு யுத்தத்தை ஆரம்பித்தது. அப்பொழுது ஒசாமா, அல்கைதா, அப்கான் போராளிகள் அனைவரும் அப்பாகிஸ்தானிலுள்ள டோராபோரா மலைகளின் கீழ் இயற்கையாக அமைந்துள்ள குகைகள், சுரங்கப் பாதைகளுக்குள் மறைந்து கொண்டார்கள். இந்த நேரத்தில்தான் அமெரிக்கப் படைகள் புதிய வடிவிலான குண்டுகளை அறிமுகப்படுத்தியிருந்தன. அந்த குண்டின்; பெயர் டெய்சி கட்டர். (daisy cutter)மலைகள், நிலக் கீழ் சுரங்கப் பாதைகள் போன்றனவற்றை ஊடறுத்துச் சென்று, கீழே வெடித்து பாரிய அழிவுகளை ஏற்படுத்தக் கூடியது. டெய்சி கட்டர் என்ற இந்த வகை குண்டுகள் 15,000 இறாத்தல் (6800 கிலோ) ஏடை உடையது. வானில் அதி உயரத்தில் (சுமார் 6,000 அடிகளுக்கும் அப்பால்) பறந்துகொண்டிருக்கும் எம்.சி.-130 ரக விமானங்களில் இருந்து இந்தக் குண்டுகள் வீசப்படும். இது விழுந்து வெடிக்கும் இடத்தில் இருந்து 900 அடி சுற்றளவை முற்றாகவே நாசமாக்கிவிடும் அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த டெய்சி கட்டர் குண்டு பற்றி அப்கான் யுத்த காலத்திலேயே வெளியே தெரியவந்திருந்தாலும் இதே வடிவிலான குண்டுகளை வியட்னாம் யுத்த காலங்களிலும் அமெரிக்கா உபயோகப்படுத்தியிருந்தது. அப்கான் யுத்த காலத்தில் இந்த வகை குண்டுகளை ‘டெஸ்சி கட்டர் குண்டுகள்’ என்ற பெயரிலும், ‘கொமாண்டோ வால்ட்’ (Commando Vault) என்ற பெயரிலும் அமெரிக்கா உபயோகப்படுத்தியிருந்து. மேற்கூறப்பட்ட இந்த ‘டெய்சி கட்டர்’ என்ற பெயரில் அழைக்கப்படும் குண்டுகளின் ஒரு இராணுவ குறியீட்டுப் பெயர்தான் BLU-82B ரக குண்டுகள். இந்த BLU-82B ரக குண்டுகளைத்தான் சிறிலங்கா தற்பொழுது பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதேபோன்று ஈராக் மீதான அமெரிக்காவின் யுத்த காலத்தில், நிலத்தின் கீழ் பாரிய, அதிக பாதுகாப்பான பதுங்கு குழிகளில் பதுங்கி இருந்த ஈராக்கிய படையினரையும், அதன் முக்கியஸ்தர்களையும் வெற்றிகரமாகத் தாக்கியழிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட மற்றொரு நவீன குண்டுதான், புற ஊதா கதிர்களினால் வழிநடத்தப்படுகின்ற GBU-28 Bunker Burst (Guide Bomb Unit-28) ரக குண்டுகள். சுமார் 5,000 இறாத்தல் எடை உடைய இந்த வகை குண்டுகள், புற ஊதா கதிர்களினால் வழிநடத்தப்பட்டு, இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் வல்லமை பொருந்தியவை. நிலத்திற்கு கீழே சுமார் நுரறு அடி ஆழத்தில், சுமார் 20 அடி கனத்தில் அமைக்கப்பட்டுள்ள கொங்கிறீட் ‘பங்கர்களை’ கூட தாக்கி அழித்துவிடும் வல்லமை பொருந்தியவை இந்த (hard Target penetrate bombs) வகை குண்டுகள்.

இந்த வகை குண்டுகளும் தன்னிடம் இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் செய்திகளை கசிய விட்டிருக்கின்றது.

உண்மையா?

சரி இனி விடயத்திற்கு வருவோம். சிறிலங்கா அரசாங்கத்தினாலும், அதன் வான் படையினாலும், அதன் இராணுவ ஆய்வாளர்களினாலும் தெரிவிக்கப்பட்டு வருகின்ற விடயங்கள் எத்தனை தூரம் உண்மை, எந்த அளவிற்குச் சாத்தியம் என்பது பற்றி நாம் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சரி இனி விடயத்திற்கு வருவோம். சிறிலங்கா அரசாங்கத்தினாலும், அதன் வான் படையினாலும், அதன் இராணுவ ஆய்வாளர்களினாலும் தெரிவிக்கப்பட்டு வருகின்ற விடயங்கள் எத்தனை தூரம் உண்மை, எந்த அளவிற்குச் சாத்தியம் என்பது பற்றி நாம் சற்று விரிவாகப் பார்ப்போம்.

முதலாவது அமெரிக்காவின் BLU-82டB ரக குண்டுகள் என்பது, அணு குண்டுகளுக்கு அடுத்த படியாக, பாரிய அழிவுகளை ஏற்படுத்தக் கூடியதான குண்டுகள் என்று கூறப்படுகின்றன. சாதாரணமாக வெடி குண்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் ரி.என்.டி. ரக வெடி மருந்துடன் 20 வீதம் அலுமினியத் துகள்களையும் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள இந்த வகை குண்டுகள் அமெரிக்காவிடம் இருக்கின்ற நவீன ரக குண்டுகளுள் ஒன்று என்று கூறப்படுகின்றது. அதே போன்று ரஷ்யாவின் அண்மைய கண்டு பிடிப்பான, அனைத்தையும் விட பெரியதான குண்டு’ (Father of all bombs) என்று அழைக்கப்படுகின்ற குண்டுக்கு நிகரானதும், பிரித்தானியாவின் அதி சக்தி வாயந்த கண்டு பிடிப்பும், நில நடுக்கத்தை ஏற்படுத்தக் கூடிய குண்டு என்று வர்ணிக்கப்படுகின்றதான T12 Cloud maker என்ற குண்டுடன் இணைத்துப் பேசப்படுவதுமான அமெரிக்காவின் ஒரு பெறுமதிவாய்ந்த கண்டுபிடிப்புத்தான் இந்த BLU-82B ரக குண்டுகள். இந்த வகை குண்டுகளை சிறிலங்கா விமானப்படைக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது என்ற கூற்றில் சிறிதளவும் உண்மை இருக்க முடியாது.

அமெரிக்காவின் நீண்ட கால நண்பனும், அப்கான் போரில் அமெரிக்காவுக்கு பெரிதும் துணை நின்ற நாடுமாகிய பாக்கிஸ்தான் விமானப் படைக்கு கூட, இந்த வகை குண்டுகளை அமெரிக்கா வழங்க முன்வரவில்லை. அப்படி இருக்க ‘கொசுறு’ சிறிலங்கா விமானப் படைக்கு இந்த வகை நவீன குண்டுகளை அமெரிக்கா வழங்கியிருக்கும் என்று கனவில் கூட யாரும் கற்பனை பண்ணிப் பார்க்க முடியாது.

இதேபோன்றுதான், அமெரிக்காவின் GBU-28 Bunker Buster குண்டுகளும். மிக மிக அண்மையில், அதுவும், ஈராக் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதலை ஆரம்பித்த பின்னரே இந்த வகை குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தன. அதுவும் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள Air Force Research Laboratory Munitions Directorate மற்றும் நியுயோர்க் மாநிலத்தில் உள்ள Watervliet Armory போன்ற ஆய்வு நிலையங்கள் இணைந்து பாரிய முயற்சிகளின் பின்னர் கண்டுபித்த தொழில்நுட்பத்தைக் கொண்டதுதான் இந்த GBU-28 Bunker Buster குண்டுகள். இவற்றை சிறிலங்கா போன்ற ஒரு ஜுஜுபி’ நாட்டிடம் கொடுத்து வேடிக்கை பார்பதற்கு அமெரிக்கா ஒன்றும் முட்டாள் கிடையாது. இந்த வகை குண்டுகள் சிறிலங்கா விமானப் படை வசம் இருக்கின்றன என்று கசியவிடப்பட்ட செய்திகள் வெறும் புரளியே தவிர வேறில்லை.

எதற்காக?

இந்த இடத்தில்தான் பல கேள்விகள், சந்தேகங்கள் எழுகின்றன. சிறிலங்காத் தரப்பின் மிகைப்படுத்தப்பட்ட அறைகூவல் வெளித்தெரிகின்றன. தன்னிடம் இல்லாத ஆயுதங்களைப் பாவித்து விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களை அழிக்கப்போவதாக சிறிலங்கா இராணுவ மற்றும் அரசியல் தலைவர்கள் எதற்காக அறிக்கை விடவேண்டும்? விடுதலைப் புலிகளின் தலைவர்கள் தங்கும் இடங்கள் தமக்குத் தெரியும் என்று பசில் ராஜபக்ஷ கூறுகின்றார். விடுதலைப் புலிகளின் தலைவர் தங்கியிருக்கும் இடம் சிறிலங்கா விமானப் படைக்கு தெரியும் என்று சிறிலங்கா விமானப் படைத் தளபதி ரொஷன் குணதிலக தெரிவிக்கின்றார். முக்கியஸ்தர்கள் பதுங்கியிருக்கும் பங்கர்கள் அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் தாக்கியழித்துவிடக் கூடியதான குண்டுகள் சிறிலங்காப் படைகளிடம் உண்டு என்றும் சிறிலங்காவின் இராணுவ ஆய்வாளர்கள் அடித்துக் கூறுகின்றார்கள். அப்படியானால் அந்தக் காரியத்தை ஏன் இன்னமும் நீங்கள் செய்யவில்லை? விடுதலைப் புலிகள் முக்கிஸ்தர்களின் தங்குமிடமும் தெரிந்து, அவர்களைத் துல்லியமாகத் தாக்கியழிக்கும் வல்லமையும் சிறிலங்கா படைத்தரப்பின் வசம் இருந்தால், எப்பாடுபட்டாவது அதனை நிறைவேற்றி விட்டுத்தான் அவர்கள் மறுவேலை பார்த்திருப்பார்கள். நிச்சயமாக ஊடகங்களில் அறிக்கை விட்டுப் பூச்சாண்டி காண்பித்துக்கொண்டு இருக்க மாட்டார்கள்.

கோத்தபாய ராஜபக்ஷ வெளியிட்ட அறிக்கையைப் பார்பவர்கள் ஒரு விடயத்தை புரிந்து கொள்ளலாம்.

விடுதலைப் புலிகளின் தலைவர்கள் ஒவ்வொருவரினதும் இருப்பிடங்களையும் நகர்வகளையும் நாம் நன்கறிவோம்’’ என்று கூறிய கோத்தபாய, 'அவர்கள் உடனடியாக தமது இருப்பிடங்களை மாற்றி அமைக்கவேண்டும். அல்லாவிடில் அவர்களை ஒவ்வொருவராக வீழ்த்துவோம்.’’ ஏன்று தனது அறிக்கையில் கூறியிருக்கின்றார். சிறிலங்கா அரசாங்கத்தின் எண்ணம் இதிலிருந்து வெளித் தெரிகின்றது. அதாவது விடுதலைப் புலி முக்கியஸ்தர்கள் தங்களது பாதுகாப்பான இடங்களை கைவிட்டு புதிய இடங்களுக்கு மாற வேண்டும் என்று சிங்களத் தலமை விரும்புகின்றது. அதாவது, பாரிய தாக்குதல் ஒன்றிற்காக விடுதலைப் புலிகளிள் தலைவர்கள் மேற்கொண்டு வருகின்ற தயாரிப்பு வேலைகள், பயிற்சிகள் அனைத்தையும் இடைநிறுத்தி விட்டு, புதிய பங்கர்களை அமைக்கும் பணிகளில் உங்கள் நேரத்தை செலவிடுங்கள்’ என்று சிறிலங்கா தலைமை கூறுகின்றது. சிங்களத்தினது அறைகூவலின் உள்நோக்கம் இப்பொழுது உங்களுக்கு நன்றாகப் புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

இன்றைய போரியலில், “உளவியல் போர்” என்பது ஒரு முக்கியமான போராக நோக்கப்பட்டு வருகின்றது. எதிரியைக் குழப்பி, அவனை அச்சமடைய வைத்து, அவனை எந்த நேரமும் ஒரு தற்காப்பு நிலைக்குள்ளேயே வைத்திருப்பதென்பது, உளவியல் போரில் ஒரு முக்கிமான அம்சம். புலித் தலைவர்களை குறிவைத்துள்ளதாகக் கதை விட்டு, ஒருவித உளவியல் போரை தமிழர் தரப்பின் மீது திணித்துவிடும் முயற்சியில்தான் சிங்களம் தற்பொழுது ஈடுபட்டு வருகின்றது.

துல்லியம்

சரி இனி மற்றொரு விடயத்தைப் பார்ப்போம்.

அமெரிக்கா வசம் இருக்கின்றதான முக்கிமான, அதி சக்தி வாய்ந்த குண்டுகள் பற்றி நாம் மேலே பார்த்திருந்தோம். ஏராளமான வேவு விமானங்கள், ஏராளமான செய்மதிகள், அதி உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய நூற்றுக்கணக்கான விமானங்கள்…. இவை அனைத்தினதும் உதவியுடன், மேற்கூறப்பட்ட அதி சக்திவாய்ந்த குண்டுகளை அப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும், யுக்கொஸ்லாவியாவிலும் அமெரிக்கா வீசி இருந்தது.

ஆனால், இத்தனை தொழில் நுட்பத்தின் உதவியுடனும் உலக வல்லரசான அமெரிக்காவினால் வீசப்பட்ட அந்த அதி சக்தி வாய்ந்த குண்டுகளின் துல்லியத்தன்மை எத்தனை தெரியுமா?

வெறும் 28 வீதம் மட்டும்தான்.

அதிக பட்சம் 40 வீதம் துல்லியத் தன்மையுடன்தான்; இலக்குகள் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

அப்படி இருக்க, வெறும் கிபிர், மிக் விமானங்களில், சாதாரண குண்டுகளை பொருத்திக்கொண்டு வீரம்பேசும்; சிறிலங்கா வான்படையின் வாய்சவடால் ரொம்ப ஓவர்.

பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் அவர்கள் மீதான வான்தாக்குதல் என்பது எதிர்பாராத ஒன்று. அனைவரும் அறிந்து, நன்கு வெளித்தெரிந்த ஒரு இலக்கின் மீது சிறிலங்கா வான்படை மேற்கொண்ட தாக்குதலில் எதிர்பாராமல் திரு.தமிழ்செல்வன் அகப்பட்டுக்கொண்டார். அவ்வளவுதான்.

ஆனால் புலிகளின் தலைவர்களை ஒவ்வொருவராக தாக்கியழிப்பது என்று சிங்களம் சவால் விடுவது என்பது, சிறிலங்கா வான்படை வசம் உள்ள பலம், திறமை, துல்லியம் என்கின்ற அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது. பொதுமக்கள் மீதும், பாடசாலைச் சிறுமிகள் மீதும், வைத்தியசாலைகள் மீதும், தேவாலயங்கள் மீதும், ஏன் சொந்தப் படைகள் மீதும் கூட குண்டுகளைப் வீசும்; கையாலாகாத சிறிலங்கா வான்படையிடம், இந்த பலம், திறமை, துல்லியம் என்கின்ற விடயம் எல்லாம் எந்த அளவிற்கு உள்ளது என்பது பெரிய கேள்விதான்.

ஒப்பரேசன் செக்மேட்:

இந்த இடத்தில் இன்னுமொரு உதாரணத்தையும் பார்த்துவிடுவோம்.

இந்தியப் படை காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களை அழிப்பதற்கு என்று மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையை இன்றுள்ள சந்தர்ப்பத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

1988 இல், விடுதலைப் புலிகளின் தலைமையை அழிப்பதற்கு என்று, இந்தியப் படைகள் பாரிய எடுப்பில் சில இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன. முதலாவது: ‘ஒப்பரேசன் திரீசூல் (Operation ‘Thrishul) இரண்டாவது: ‘ஒப்பரேசன் வீரத் (Operation Viraat) மூன்றாவது: ‘ஒப்பரேசன் செக்மேட் (Operation Check-mate)

ஒப்பரேசன் திரிசூல்’ 1988ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டது. ‘ஒப்பரேசன் வீரத்’ அதே வருடம் மே மற்றும் ஜூன் மாதங்களில் மேற்கொள்ளப்பட்டது. தேசியத் தலைவரைக் குறிவைத்து வடபகுதி முழுவதுமாக இடம்பெற்ற நடவடிக்கைகளுக்கு ‘ஒப்பரேசன் செக் மேட்’ என்று பொதுவான பெயரிடப்பட்டிருந்தது.

செக் மேட்:

என்கின்ற வார்த்தை சதுரங்க(Chess) விளையாட்டில் உபயோகிக்கப்படுவது வழக்கம். சதுரங்க விளையாட்டின் இறுதியாக ஒரு தரப்பில் உள்ள ராணிக்கு எதிரி குறிவைத்து, அந்த ராணி நகர முடியாத ஒரு நிலைக்குத் தள்ளப்படும் சந்தர்ப்பத்தை ‘செக்மேட்’ (Check- mate) என்று கூறுவார்கள். விடுதலைப் புலிகளின் தலைவரும் எங்குமே நகர முடியாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டதாகவும், இந்தியப் படையினரின் கைகளில் அகப்படுவதைத் தவிர அவருக்கு வேறு எந்த வழியுமே இல்லை என்பதை வெளிப்படுத்தவே இந்த படை நடவடிக்கைக்கு இப்படியான ஒரு பெயரை இந்தியப் படைத்துறைத் தலைமை சூட்டியிருந்தது.

“புலிகளின் தலைவர் ஒன்று தம்மிடம் சரணடைய வேண்டும்…, அல்லது சயனைட்டை உட்கொண்டு; தற்கொலை செய்யவேண்டும்… - இரண்டையும் தவிர அவருக்கு வேறு வழியே கிடையாது” என்று இந்தியப் படைத் தளபதிகள் இந்திய அரசியல் தலைமைக்கு அறிவித்திருந்தார்கள். அந்த அளவிற்கு புலிகளின் தலைமையை நோக்கி முற்றுகைகள் இறுகியுள்ளதாக அவர்கள் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்கள்.

புலிகளின் தலைவரை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட அந்த முற்றுகைகளில் இந்தியாவின் விமானப்படை, கடற்படை மற்றும் இந்திய இராணுவம் என்பன முழுப்பலத்துடன் இறக்கப்பட்டிருந்தன.

இந்தியப் படையினர் புலிகளின் தலைமை மீதான தமது சுற்றிளைப்பை ஒன்றன் பின் ஒன்றாக மூன்று அடுக்கு வளையங்களாக அமைத்திருந்தார்கள். ஏதாவது ஒரு வளைத்தினுள் புலிகளின் தலைவர் சிக்கியேயாகவேண்டும் என்பதில் அவர்கள் குறியாக இருந்தார்கள்.

சண்டைகள் ஆரம்பமான போதுதான், புலிகளின் தலைவரைப் பிடிப்பதென்பது தாம் நினைத்த அளவிற்கு இலகுவான ஒரு காரியம் அல்ல என்று இந்தியப் படையினருக்குப் புரிந்தது.

புலிகளின் தலைவரைப் பிடிப்பதாகக் கூறிக் களம் இறங்கிய குர்க்காப் படையினரின் இரத்தம் வன்னி மண்ணுக்கு உரமாகிக்கொண்டு இருக்க, புலிகளின் தலைமை நெருங்குவது இந்தியப் படைக்கு கனவாக மாறிக்கொண்டிருந்தது.

அந்தப் படை நடவடிக்கைக்குத் தலைமை தாங்கிக்கொண்டிருந்தவர் லெப்.ஜெனரல் ஏ.எஸ்.கல்கட். ஈழத்தில் இவர் நிகழ்த்திய வீரத்திற்காக பின்நாளில் இந்திய அரசின் உயர் விருதான ‘வீர் சக்ரா’ (Vir Chakra) விருதைப் பெற்ற ஒரு பெரிய வீரர்.

அப்படிப்பட்ட லெப்.ஜெனரல் ஏ.எஸ்.கல்கட். ஒரு சந்தர்பத்தில் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்திருந்தார். ‘விடுதலைப் புலிகளின் தலைவரையும், அவருடன் இருந்த போராளிகளையும் குண்டு வீசி அழித்துவிடும்படி’ அவர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இருபதுக்கு மேற்பட்ட வான் ஊர்திகள், பதினைந்திற்கு மேற்பட்ட மிராஜ்- 2000 மிகையோலி குண்டு வீச்சு விமானங்கள், சுமார் ஐந்து வேவு விமானங்கள், முல்லைத்தீவு-திருகோணமலை கடல் எல்லையைக் காவல் செய்தவாறு சுமார் எட்டுப் போர்க்கப்பல்கள், இருபதுக்கு மேற்பட்ட அதிநவீன தாக்குதல் விசைப் படகுகள் - இவைகள் அனைத்திலும் இருந்து ஒரே நேரத்தில் சகட்டு மேனிக்கு குண்டுகள் வீசப்பட்டன.

அதுவும் வன்னியின் ஒரு சிறு வனப் பகுதியான நித்திகைக்குள காடுமீது, சக்திவாய்ந்த குண்டுகள் நுற்றுக் கணக்கில் அல்ல, ஆயிரக் கணக்கில் வீசப்பட்டன. ~கார்பெட் பொம்பிங்’ (Carpet Bombing) என்று கூறப்படுகின்றதான, குண்டுகளினாலான படுக்கைஇந்தியப் படையினரால் அந்தப் பிரதேசத்தில் விரிக்கப்பட்டன. ஆனால் உறுதியும், நேர்மையும், உண்மையும் தமிழ் மக்களின் உணர்வும்| அன்று அங்கு வெற்றி பெற்றது.

அன்று நித்திகைக்குளக் காட்டின் மீது தாக்குதல் நடாத்திய இந்தியாவின் போர்க் கலங்களுடன் ஒப்பிடும் போது, இன்று சிறிலங்காவின் வசம் இருக்கின்ற கலங்கள் என்பது மிக மிகச் சிறியன. பல மடங்கு குறைந்த சக்தி கொண்டன. ஆனால் அந்த நித்திகைகுளச் சண்டைக் காலத்துடன் ஒப்பிடும் பொழுது, இன்று விடுதலைப் புலிகள் வசம் இருக்கின்ற வளங்கள் என்பன, கற்பனைக்கெட்டாத அளவு பாரியவை. இத்தனை வளங்களுடன், அன்றிருந்த அதே உறுதியும், நேர்மையும், உண்மையும் தமிழ் மக்களின் உணர்வும்தான்’ இன்றும் வன்னியில் இருந்துகொண்டிருக்கின்றது. எனவே, சிறிங்காவின் வான்படையினால் அங்கு எதனைப் பெரிதாகச் சாதித்துவிடமுடியுமென்பது சொல்லித்தான் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை.

http://www.murasam.ch/content/view/3304/159/

அதிலும் இந்த 6800 கிலோ நிறையுடைய குண்டினைத் தாங்கிச் செல்லும் சக்தி படைத்ததா இந்த மிக், கிபீர் ?????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது யாரால் எழுதப்பட்டது?? ஆப்கானிஸ்தான் புவியியலும் தமிழீழ புவியியலுக்கும் நிறைய வேறுபாடுண்டு.

அமெரிக்காவின் நீண்ட கால நண்பனும், அப்கான் போரில் அமெரிக்காவுக்கு பெரிதும் துணை நின்ற நாடுமாகிய பாக்கிஸ்தான் விமானப் படைக்கு கூட, இந்த வகை குண்டுகளை அமெரிக்கா வழங்க முன்வரவில்லை. அப்படி இருக்க ‘கொசுறு’ சிறிலங்கா விமானப் படைக்கு இந்த வகை நவீன குண்டுகளை அமெரிக்கா வழங்கியிருக்கும் என்று கனவில் கூட யாரும் கற்பனை பண்ணிப் பார்க்க முடியாது.

என்ற கட்டுரையாளரின் கூற்று அவரின் அறிவீனத்தையும், கட்டுரை எழுதப்பட்ட நோக்கத்தையும் சுட்டி நிற்கின்றது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று அமெரிக்காவின் 5 புதிய மாதிரி விமானங்களை இணையத்தில் ஒரு நண்பர் காட்டினார். அவை Area 51ல் பரீட்சார்த்த முறையில் இயக்கப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது.

மனதில் ஒரு சின்ன ஆசை தமிழீழத்திலும் இது போன்ற ஒரு இடம் உருவாக்கப்பட வேண்டும் என்று :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிலும் இந்த 6800 கிலோ நிறையுடைய குண்டினைத் தாங்கிச் செல்லும் சக்தி படைத்ததா இந்த மிக், கிபீர் ?????

யாழ்கள அங்கத்தவர்கள் தூக்கி விட்டால் போச்சு :icon_idea::D ..

இல்லை கீபீரால் முடியாது.

யாழ்கள அங்கத்தவர்கள் தூக்கி விட்டால் போச்சு :(:) ..

இல்லை கீபீரால் முடியாது.

அப்படியென்றால் யார் அதைத் தூக்கி வந்து போடுவார்கள். அல்லது இன்னொரு பாரந்தூக்கும் விமானம் வாங்கும் வரையில் காத்திருக்க வேண்டுமா? :):D:icon_idea::D

என்னதான் இருந்தாலும் எதிரியை குறைவாக எடைபோடமுடியாது. நமது தலைவரே சொல்லியிருக்கிறார் சின்னப்பாம்பாக இருந்தாலும் பெரிய தடியால அடிக்கவேணும் என்று.....

இன்று அமெரிக்காவின் 5 புதிய மாதிரி விமானங்களை இணையத்தில் ஒரு நண்பர் காட்டினார். அவை Area 51ல் பரீட்சார்த்த முறையில் இயக்கப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது.

மனதில் ஒரு சின்ன ஆசை தமிழீழத்திலும் இது போன்ற ஒரு இடம் உருவாக்கப்பட வேண்டும் என்று :icon_idea:

நீங்கள் ஜொயிண்ட் ஸ்ரைக்கரை சொல்கிறீர்களா அடுத்த தலமுறை விமானத்தின் முன்னோடி அந்த விமானம்

ஏரியா 51 என்னும் செக்டர் ஈழத்தை விட பெரிதாக இருக்கும் என நினைகிறன் :D

நன்றாகச் சொன்னீர்கள் முருகா!

இந்த நேரத்தில் இந்தக் கட்டுரை வந்திருப்பது மிகவும் நல்லதொரு விடயம். தமிழ்ச்செல்வன் அண்ணாவின் மறைவுக்குப் பின்னர், தமிழீழ ஆதரவாளர்கள் பலரே மிகவும் குழம்பிக் கொண்டிருந்தார்கள். அவரின் மீதான தாக்குதல் தற்செயலானது என்பதை இன்னும் பலர் உணரவில்லை. அவர் அரசியல் பொறுப்பாளராக இருந்ததனால் தன்மீது தாக்குதல் நடாத்தப்படாது என அவர் நினைத்து தனது பாதுகாப்பில் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்திருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். அதுமட்டுமின்றி, அவர் மக்களோடு மக்களாகத் தான் வாழ்ந்து வந்திருக்கிறார். அத்தாக்குதல் 'காகம் இருக்க பனங்காய் விழுந்த கதைதான். சிறிலங்கா குறிப்பிட்டதுபோல, உயர்தர குண்டுகளை வீசியிருந்தால், தாக்குதலுக்குள்ளானவர்களின் உடல்கள் மிஞ்சியிருக்காது. ஓரிருவர்களின் உடல்களே சிதைந்து போயிருந்தது.

கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளது போல, இந்திய இராணுவ அடக்குமுறைக் காலத்தில்கூடப் பிடிக்கமுடியாத தலைவரையோ அல்லது தளபதிகளையோ குறிவைப்பது என்பது நினைத்தும் பார்க்கமுடியாது ஒன்று. கோத்தபாய, விமானப்படைத்தளபதி ஆகியோரின் கருத்துகள் அவர்களின் இயலாமையையே உணர்த்துகிறது.

தமிழ்நக்ஸ், நீங்கள் சொன்னதுக்கான முயற்சியில் ஏன் நீங்களே இறங்கக்கூடாது? புலிகள்தான் எல்லாவற்றையும் செய்யவேண்டுமென ஏன் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அண்ணாவின் மறைவுக்குப்பின் விமானத் தாக்குதல்களில் இருந்து எமது தலைவரையும் அனைத்துப் போரளிகளையும் பதுகாக்க வேண்டிய தேவை அதிகரித்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இதற்கான ஏற்பாடுகள் வன்னியில் எப்பவோ ஆரம்பித்திருக்கும் என்பது திண்ணம். மேலும் எமது தலைமையை அழிப்பதில் எமது அயல் நாடும் அதீத அக்கறை எடுத்துவரும் இன்னிலையில்( இந்தியா இலங்கைக்கு கொடுத்திருக்கும் நவீன ராடர்களும், சக்தி வாய்ந்த பன்கர் பச்டெர் குண்டுகளும் இதற்கு ஆதாரம்) புலிகளும் தம் பங்கிற்கு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்திருப்பார்கள்.

ஒன்றுமட்டும் உண்மை, இந்தியாவிடமிருந்தும் அமரிக்காவிடமிருந்தும் இலங்கை வாங்கிக் குவித்திருக்கும் விமான ஆயுதங்களால் அதன் சண்டித்தனம் ரொம்பவும்தான் கூடிப்போச்சு !

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மீண்டும் வெளியிட்டுள்ள தகவலில் தாங்கள் வலுவான நிலையை அடைந்துள்ளதுடன் விடுதலைப்புலிகளின் தலைவரின் நகர்வுகளையும் வெற்றிகளையும் கட்டுப்படுத்தி விட்டதாகவும் தற்போது அவர் தொடர்பான இரகசிய உளவுத்தகவல்களையும் பெற்று வருவதாகவும் அவரைக் கொல்ல சிறீலங்கா உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தேசிய தலைவரின் மாவீரர்தின உரை நிகழ இருக்கும் சமயத்தில் சமாதானத்தை விரும்பும் ஒரு அரசு.. வெளியிட்டுள்ள அறிக்கை இவ்வாறு அமைந்திருக்கிறது. இது சர்வதேசத்துக்கு சிங்களவர்களின் போர் வெறியை அப்படியே எடுத்துக் காட்டுகின்ற போதும் போரின் மூலம் இராணுவ மற்றும் பேரழிவு ஆயுதங்களின் அச்சுறுத்தல் மூலம் ஜனநாயகப் போர்வை போர்த்திக் கொண்டு உலகில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி வரும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக சர்வதேசத்துக்கு இது இனிப்பான செய்தியே ஆகும்.

இதற்கிடையே ஒட்டுசுட்டானில் நேற்றும் சிறீலங்காவின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலுக்கு தமிழர் புனர்வாழ்வுக்கழக வாகனம் இலக்காகி ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று முந்தினமும் இதே பகுதியில் நடந்த தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டிருந்தனர். இவை சிறீலங்கா அரசுக்கு சாதகமான தகவல்களாகப் போய்ச் சேர்கின்றன என்பது என்னவோ.. தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது.

--------------------

Sri Lanka Vows to Kill Tamil Tiger Leader

SRI LANKA'S GOVERNMENT has marked the birthday of Tamil Tiger leader Velupillai Prabhakaran with a vow to kill him.

The island's powerful defence secretary, Gotabhaya Rajapakse, said Colombo now had the upper hand in the long-running conflict, with the elusive guerrilla chief limited in both his movements and ability to score strategic victories.

Earlier this month the political head of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), S.P. Thamilselvan, was killed in what the government said was a precision air strike on the north and not a mere lucky hit.

"The killing of Thamilselvan sent a very powerful message: they know we have good intelligence on their movements," Rajapakse told AFP in an interview Monday at the heavily-fortified defence ministry in Colombo.

Monday was also the day the LTTE chief marked his 53rd birthday, and Rajapakse said that if all goes to plan it will be his last.

"We are after him. We are specifically targeting their leadership," he said.

"For the last few months he (Prabhakaran) has been even more restricted in his movements. We want to keep them under pressure. We are gathering intelligence, information."

The threat came as Prabhakaran was set to give his annual speech from a jungle hideout in his northern mini-state marking the end of "heroes' week", commemorating around 20,000 Tamils who have died fighting for a separate homeland.

Prabhakaran's speech, due to be broadcast later Tuesday, will come at the end of a year of several setbacks for the LTTE.

Government forces regained full control over the east of the island in July, and have also managed to sink what the government says is the bulk of the rebels' fabled fleet of gun-running ships.

The outspoken defence secretary, who is also the brother of the island's president, insisted that the tide of the 35-year-old conflict -- Asia's longest-running civil war -- was finally turning in the government's favour.

He also signalled that the year ahead would see a renewed escalation of the conflict, finally closing a chapter of "phoney war' that began with a 2002 Norwegian-brokered ceasefire and its progressive collapse.

"Our objective is to weaken them. We have to defeat them militarily, we have to control Wanni," he said of the LTTE's northern stronghold.

"It is possible. We just have to squeeze them. Then a political solution becomes possible," the defence secretary said, repeating his view that the Tamil Tigers only used a truce to smuggle in more arms and can therefore only be bombed into peace.

Prabhakaran, in his speech Tuesday, is also expected to cast aside any talk of diplomacy and issue a rallying call to his thousands of hardened guerrillas.

The LTTE supremo, renowned for his ability to bring out the suicidal tendencies in his followers, has also managed to withstand successive government offensives in the past.

And over the past year, he has unleashed new weapons -- namely light aircraft sent on nocturnal missions to strike as far south as the capital and damage Sri Lanka's economy in the process.

"Black Tiger" suicide squads have also been active.

Still, Rajapakse brushed aside the significance of such rebel attacks.

"In the end it's just symbolic. it affects morale, but strategically it makes no difference," said the defence secretary, who narrowly survived a suicide bomber sent by Prabhakaran last year.

"In the end, what have they gained during the last 20 to 30 years? Just destroyed property and destroyed lives." (Courtesy: AFP)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் இருந்து வாங்கிக் குவிக்கும் ஆயுதங்களின் துணிவோடுதான் இவ்வாறெல்லாம் பேச முடிகிறது. பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் தற்செயலாக அகப்பட்டது இன்னும் வாய்ப்பாகிப் போய் விட்டது. புலிகளின் விமான எதிர்ப்புப் பிரிவு முழுவீச்சுடன் இயங்கும்வரையிலும் இவ்வாறான பேச்சுக்களை தடுக்க முடியாது. இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆகவேண்டியதைப் பார்ப்பதே நல்லது. சந்தர்ப்பம் வரும்போது ஒவ்வொன்றாய்ச் சுட்டு வீழ்த்தலாம் !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளிநாடுகளில் இருந்து வாங்கிக் குவிக்கும் ஆயுதங்களின் துணிவோடுதான் இவ்வாறெல்லாம் பேச முடிகிறது. பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் தற்செயலாக அகப்பட்டது இன்னும் வாய்ப்பாகிப் போய் விட்டது. புலிகளின் விமான எதிர்ப்புப் பிரிவு முழுவீச்சுடன் இயங்கும்வரையிலும் இவ்வாறான பேச்சுக்களை தடுக்க முடியாது. இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆகவேண்டியதைப் பார்ப்பதே நல்லது. சந்தர்ப்பம் வரும்போது ஒவ்வொன்றாய்ச் சுட்டு வீழ்த்தலாம் !

நீங்கள் நினைப்பது போல தற்போது கள நிலைமைகள் இல்லை.

தற்போது யுத்தம் தொழில் நுட்பத்துடன் நடத்தப்படுகின்றது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எமது மனவலுவை விட தொழில் நுட்பம் வேகமானது. அதற்கேற்ப நாமும் எம்மை மாற்றிக் கொள்ளல் அவசியம்.

அண்மையில் ஒரு அமெரிக்க இராணுவ வல்லுனர் சொன்ன கூற்று

1000 படையினர் செய்ய வேண்டியதை ஒரு படைவீரனுடன் தற்போதைய தொழில் நுட்பம் செய்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது ஓரளவுக்குச் சரிதான். ஆனால், இந்தத் தொழிநுட்பங்களை வாங்கிக் குவிக்குமளவிற்கு இலங்கையின் பொருளாதாரம் இடம் கொடுக்குமா என்பது சந்தேகமே. மிக் விமானக் கொள்வனவில் புதிய ரக விமானத்தை வாங்க விருப்பமிருந்த போதும், அதை வாங்க முடியாமல் மறுசீரமைக்கப்பட்ட மிக்- 29 ஐ வாங்கினதாக நினைவு. உங்கள் கருத்தை மறுக்கவில்லை, அப்படி நவீன தொழிநுட்பம் அரசிடம் இருப்பின் புலிகள் அவதானமாக இருப்பதே நல்லது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொல்வது ஓரளவுக்குச் சரிதான். ஆனால், இந்தத் தொழிநுட்பங்களை வாங்கிக் குவிக்குமளவிற்கு இலங்கையின் பொருளாதாரம் இடம் கொடுக்குமா என்பது சந்தேகமே. மிக் விமானக் கொள்வனவில் புதிய ரக விமானத்தை வாங்க விருப்பமிருந்த போதும், அதை வாங்க முடியாமல் மறுசீரமைக்கப்பட்ட மிக்- 29 ஐ வாங்கினதாக நினைவு. உங்கள் கருத்தை மறுக்கவில்லை, அப்படி நவீன தொழிநுட்பம் அரசிடம் இருப்பின் புலிகள் அவதானமாக இருப்பதே நல்லது!

அதற்கு தானே இந்தியா இருக்கின்றது வழங்க. நாம் இப்போ மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கின்றோம். சில அரசியல் தவறுகளை தொடர்ந்து மேற் கொண்டு வந்ததனால் வந்த வினை தான் இது.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த அரசியல் தவறுகளைச் சொல்கிறீர்கள் தமிழ்நக்ச் ?

அவர் தமிழ்-லினக்ஸ்!

அவருக்கு Linux (Operating System) இல் அப்படி என்ன காதலோ தெரியவில்லை?

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாணக்கியன் !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த அரசியல் தவறுகளைச் சொல்கிறீர்கள் தமிழ்நக்ச் ?

தொடர்சியாக சில நாடுகளை நம்பி வந்தது. சில நாடுகளுடன் நல்லுறவை பேணத் தவறியமை.

கட்டாயமாக புலிகள் தமது வெளிநாட்ட அரசியல் பிரிவில் மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம்.

எமக்கு ஒரு வல்லரசின் மறைமுக உதவியாவது நிட்சயமாக தேவை.

Edited by tamillinux

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் தமிழ்-லினக்ஸ்!

அவருக்கு Linux (Operating System) இல் அப்படி என்ன காதலோ தெரியவில்லை?

காதலுக்கு கண் இல்லை என்பது உங்களுக்கு தெரியாதா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வல்லரசு நாட்டின் உதவியாவது தேவை என்று சொல்லியிருந்தீர்கள். ஏற்கனவே ஒரு வல்லரசின் பிடிக்குள் அகப்பட்டு மற்றய இயக்கங்களுக்கு நடந்ததும் நாம் அறியாததா ? உதவி பெறும் ஒவ்வொரு நட்டிற்கும் நாம் அடிபணிய வேண்டி வரும். அந்நாடுகள் எமது நோக்கங்களில் செல்வாக்குச் செலுத்தும். இறுதியில் எங்களை நட்டாற்றில் விட்டுச் செல்லும்.

நீங்கள் சொல்லும் அந்த வல்லரசு எது ? எந்த நாடுகளுடன் நாம் தேவை இல்லாமல் நீண்ட காலம் பழகினோம் ? எந்த நாடுகளை நாம் புறக்கணித்தோம் ? புரியவில்லையே ??? சிறிது விளக்கமாகச் சொன்னால் நல்லது.

உங்களுடன் வாதாடுவது என் நோக்கமல்ல. எனக்குப் பட்டதைச் சொன்னேன்.

காதலுக்கு கண் இல்லை என்பது உங்களுக்கு தெரியாதா?

உஷ்...... அமைதி அமைதி இன்னும் 10 நிமிடங்களில் உரை ஆரம்பமாகவுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மம்ம்ம்ம்ம என்னத்த சொல்ல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு வல்லரசு நாட்டின் உதவியாவது தேவை என்று சொல்லியிருந்தீர்கள். ஏற்கனவே ஒரு வல்லரசின் பிடிக்குள் அகப்பட்டு மற்றய இயக்கங்களுக்கு நடந்ததும் நாம் அறியாததா ? உதவி பெறும் ஒவ்வொரு நட்டிற்கும் நாம் அடிபணிய வேண்டி வரும். அந்நாடுகள் எமது நோக்கங்களில் செல்வாக்குச் செலுத்தும். இறுதியில் எங்களை நட்டாற்றில் விட்டுச் செல்லும்.

நீங்கள் சொல்லும் அந்த வல்லரசு எது ? எந்த நாடுகளுடன் நாம் தேவை இல்லாமல் நீண்ட காலம் பழகினோம் ? எந்த நாடுகளை நாம் புறக்கணித்தோம் ? புரியவில்லையே ??? சிறிது விளக்கமாகச் சொன்னால் நல்லது.

உங்களுடன் வாதாடுவது என் நோக்கமல்ல. எனக்குப் பட்டதைச் சொன்னேன்.

திருக்குறள் போல இரண்டு வரிகளில்

உலகில் இரண்டு வல்லரசுகள் எம்மை தடை செய்துள்ளன

இரண்டுக்கும் எதிரான வல்லரசு எது?

இந்த நோக்கில் காய்களை நகர்தினால் என்னவாகும்? உங்கள் கருத்து என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.