Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் காதில் பூச்சுற்றும் இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குட்டக் குட்டக் குனிபவனும் மடையன்; குனியக் குனி யக் குட்டுபவனும் மடையன்' என்றோர் அனுபவமொழி நம் மத்தியில் உண்டு.

ஈழத் தமிழர் தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்த உண்மையைப் புரிந்து கொண்டுதான் தமிழினம் இனி மேலும் குனிவதில்லை என்ற உறுதியோடு நிமிர்ந்து நிற்கத் தலைப்பட்டது. அதனால் இதுவரை குட்டியவர் அதற்கான பலனை அனுபவிக்கும் நிலைமை உருவாகத் தொடங்கியது.

ஈழத் தமிழர் தேசிய இனப்பிரச்சினை விடயத்தில் இவ் வாறு நடந்து கொள்ளும் தென்னிலங்கை அரசியல் நிர் வாகம், அந்தத் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறி சர்வதேச சமூகத்துக்குப் போடும் ஆடும் நாடகத்திலும் அதே பாணியைத்தான் பின்பற்றுகின்றது.

தாம் அதிகாரத்துக்கு வந்தால் நாட்டின் தேசிய இனப்பிரச் சினைத் தீர்வுக்கான தென்னிலங்கையின் நல்லிணக்க யோச னையை மூன்று மாதங்களுக்குள் உருவாக்கி, தீர்வு முயற் சியை முழு வீச்சில் முன்னெடுப்பார் என்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எழுத்தில் கறுப்பு வெள்ளையில் உறு தியளித்தே ஆட்சிக்கு வந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இப்போது இரண்டு வருடங்கள் இருபத்தினான்கு மாதங் கள் கடந்து விட்டன. இன்னும் தென்னிலங்கையில் இணக் கப்பாடு எட்டப்படவேயில்லை.

இதோ வருகிறது, அதோ வருகிறது தென்னிலங்கை யின் இணக்கப்பாட்டுத் திட்டம் என்று இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்துக்கு காதில் பூச்சுற்றிக்கொண்டு, தனது இரா ணுவ நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கான கால அவகாசத் தைப் பெறும் தந்திரோபாயத்தை மெல்ல சாதித்துக் கொண் டிருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

ஆட்சிக்கு வந்த பின்னர் மூன்று தடவைகள் வரை இந்தி யாவுக்கு விஜயம் செய்துவிட்டார் இலங்கை ஜனாதிபதி. தவிர வும் இந்தியாவின் சிரேஷ்ட தலைவர்கள் அவரை மூன்று, நான்கு தடவைகளுக்கு மேல் கொழும்பிலும் பிற இடங் களிலும் நேரடியாகச் சந்தித்துப் பேசிவிட்டனர்.

ஒவ்வொரு சந்திப்பின் போதும் இலங்கை இனப்பிரச் சினைத் தீர்வுக்கான மிகவுயர்ந்த அதிகாரப் பகிர்வுடன் கூடிய யோசனைத் திட்டத்தை முன்வைத்து, நடைமுறைப்படுத் துங்கள் என்று இந்திய உயர்மட்டம் வற்புறுத்துவதும், இதோ யோசனைத்திட்டம் அடுத்த ஓரிரு மாதங்களில் வெளியிடப் படப் போகின்றது என இலங்கையின் அரசுத் தலைமை உறு தியளிப்பதுமாக இந்தச் சந்திப்புகளும், அவற்றின் பின்ன ரான மேற்படி உறுதியளிப்புகள் அடங்கிய அறிவிப்புகளும் தொடர்ந்துகொண்டிருக்க, காலம் இழுத்தடிக்கப்படுகின்றது.

கடந்த வருட இறுதிக்குள் இத்தகைய யோசனைத் திட்டம் வெளியாகிவிடும் என கடந்த வருட நடுப்பகுதியிலேயே இலங்கை ஜனாதிபதியே இந்தியத் தலைவர்களுக்கு நேரில் உறுதியளித்தார் என்பதை, தேவையானால் புதுடில்லி, தொடர்பான தனது உத்தியோகபூர்வ ஆவணத்தில் உறுதி செய்து கொள்ளலாம்.

இதோ ஜனவரியில், இதோ மார்ச்சில், இதோ ஏப்ரலில், இதோ ஓகஸ்ட்டில் என்று கொழும்பு ஏய்க்காட்ட இப்போது இந்த வருடம் முடிவடைவதற்கு இன்னும் ஐந்து வாரங்கள் தான் எச்சமுள்ளன.

இப்போதும்கூட இதோ வருகிறது தீர்வுக்கான தென்னிலங் கையின் இணக்க யோசனை என்ற அறிவிப்போடு இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கம்பாலா வில் காதில் பூச்சுற்றிவிட்டு வெற்றிகரமாக அந்தச் சந்திப்பை முடித்திருக்கின்றார் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான விட யத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சி நிர்வாகத்தின் அணுகுமுறையும், உள்ளார்ந்த திட்டமும், கபடநோக்கமும் எவை என்பவை வெளிப்படை.

போரியல் ரீதியாகத் தமிழர் தேசத்தின் மீது பெரும் படையெடுப்பை மேற்கொண்டு, தமிழரின் வலுவான பிரதிநிதித் துவ சக்தியாக இருக்கும் விடுதலைப் புலிகளின் இராணு வப் பலத்தை சிதறடித்து, அதன்மூலம் இனப்பிரச்சினை விவ காரத்தில் தமிழர்களின் பேரம்பேசும் வலிமையைச் சின்னா பின்னமாக்கி, தனது உரிமைகளுக்காகக் கிளர்ந்து நிற்கும் தமிழர்களை தென்னிலங்கைச் சிங்களத்தின் காலில் விழ வைத்து, தான் விரும்பும் உருப்படியற்ற ஒரு திட்டத்தை, தீர்வு யோசனையாகத் தமிழர்கள் மீது திணிப்பதுதான் அந் தக் கபட நோக்கம்.

இந்தக் கொடூரத்தை நிறைவேற்றுவதில் கொழும்பு குறி யாய் இருக்கும் உண்மை, அதன் போரியல் முகம் மூலம் அம் பலமாக, மறுபுறம் அதை மறைத்துக்கொண்டு சர்வதேச சமூ கத்துக்கு "நல்ல பிள்ளை' நாடகம் நடிக்கிறது கொழும்பு. அமைதி வழித் தீர்வில் ஆர்வம் இருப்பதாகக்காட்டிக் கொண்டு, தனது போரியல் திட்டத்துக்குத் தேவையான கால அவகாசத்தைத் தேடு கிறது மஹிந்த அரசு.

இது தெளிவாகப் புரிந்தும், ஏதும் செய்ய முடியாமல், ஒவ் வொரு சந்திப்பின்போதும், தீர்வு யோசனைத்திட்டத்தை வெளி யிடுங்கள், வெளியிடுங்கள் என புதுடில்லி, கொழும்பைப் பார்த்துக் கெஞ்சுவதும் கோருவதும்

இதோ வெளியிடுகிறோம், அதோ வெளியிடுகிறோம் என்று கொழும்பு தெரிவித்தபடி புதுடில்லிக்கு தலையில் மிள காய் அரைப்பதும்

துன்பியல் நாடகமாகத் தொடர்வதைப் பார்த்து அழு வதா, சிரிப்பதா என்று தெரியாமல் விசனிக்கின்றார்கள் ஈழத் தமிழர்கள்.

தாம் எடுக்கும் தீர்மானத்தை உறுதியாகச் செயற்படுத்தக்கூடிய அரசியல் வலிமையும், தலைமைத்துவ உறுதியும், அடக்கப்பட்ட இனங்களுக்காக வாஞ்சையுடன் குரல் எழுப் பும் மேன்மையான பண்பும் கொண்ட இந்திராகாந்தி போன் றோரிடம் புதுடில்லி அரசியல் தலைமை போகும்வரை, இவ் வாறு தென்கோடி முனையில் உள்ள சிறிய நாடான இலங்கை போன்றவை நடத்தும் ஏமாளி நாடகங்களுக்கு "பெருமாள் கோயில் மாடு போல' தலையசைப்பதைத் தவிர புதுடில்லிக்கு வேறு மார்க்கம் இருக்காது என்பது உண்மைதான்.

http://www.uthayan.com/

இரண்டுகாதிலையும் பூச்சுற்றி நிரம்பிவிட்டது. இனி எதில் சுற்றுவது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் மகிந்தவும் இந்தியாவும் சேர்ந்து அமெரிக்காவுக்கே பூ சுற்றுறாங்க.

இந்தியா ஈழ தமிழ் வயோதிபர்களுக்கு மட்டும் தான் பூ சுற்றலாம். ஆனால் ஈழ தமிழ் வாலிபர்களுக்கு பூ சுற்றுவதென்பது முடியாத காரியம்

உதாரணமாக எனது பாட்டனார் தனது அறையில் இந்திய தலைவர்கள் அத்தனை பேரின் படங்களையும் வைத்துள்ளார்.

இந்த படங்களை ஏன் வைத்துள்ளீர்கள் என்று நான் கேட்டதற்கு அவரின் பதில் உனக்கு அவர்கள் பற்றி என்ன தெரியும்?? இதற்கு மேலும் நான் அவரிடம் கேள்வி கேட்டால் அவரின் ஊன்று கோல் தான் பதில் சொல்லி இருக்கும் என்று மெளனமாக ஒதுங்கிவிட்டேன் :icon_idea:

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஒன்றும் தெரியாத மாதிரிப் பிழை விடுவதாக இன்னும் நாம் நம்பிக் கொண்டிருப்பது முட்டாள் தனம். இந்தியாவுக்கு மறைமுக நோக்கங்கள் நிறைய உண்டு, அதன் ஒரு வெளிப்பாடாக ஈழப் பிரச்சினை குறித்த அணுகு முறை இருக்கிறது. மேலும், ஈழ வயோதிபர்கள் மட்டுமல்ல இந்த இந்திய மாயையிலிருந்து விடுபடாத இளைய தலைமுறையினரும் நிறைய உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வதுசரிதான். ஆனாலும், இலங்கை சொல்வதை அப்படியே நம்புவதற்கு இந்தியாவில் ஆட்சியில் இருப்போர் ஒன்றும் பாப்பாக்கள் இல்லை. இலங்கை விடயத்தில் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையும், இலங்கையின் தமிழின ஒடுக்கலும் நன்கு ஒத்துப்போவதால்தான் இந்தியா இலங்கையின் தாளத்திற்கு ஆடுகிறது. அதாவது தான் நினைப்பதை இலங்கை செய்து வருகிறது என்பதால் இந்தியா வேலை சுலபமாகி விட்டது. அவ்வளவே! நாங்கள் எல்லோரும் 1987 இல் அமைதி காக்க என்ற போர்வையில் தமிழீழத்தில் நடந்த அட்டூழியங்களை இலகுவில் மறந்து விடுகிறோம்.

நீங்கள் சொல்வதுபோல் இந்திரா அம்மையார் தமிழருக்கு உதவி செய்தது உண்மைதான். அதில் இரக்கமும் இருந்தது. ஆனால் அதை விடவும், அமெரிக்கரின் பின்னால் ஓடும் அன்றய ஜனாதிபதி ஜே ஆரை வழிக்கு கொண்டுவருவது இன்னும் முக்கியமாக இருந்தது. அதற்கு ஒரே வழி அரசாங்கத்திற்கு எதிராகப் போராடும் இயக்கங்களுக்கு பயிற்சி மற்றும் ஆயுத உதவிகளை வழங்குவதுதான். இதில் எங்களுக்கும் சாதகம் இருந்ததை மறுக்கவில்லை.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அரசாங்கங்கள் மாறும்போது மாறுவதில்லை. ஏனெனில் வெளியுறவுக்கொள்கை எப்பொதுமே ஒரு குறிப்பிட்ட குழுவினரால்தான் தீர்மானிக்கப்படுகிறது. அரசாங்கங்களின் வேலை அக்கொள்கையை நிறைவேற்றுவது மட்டுமே. ஆனால் அக்கொள்கையின் தீவிரம் அரசாங்கத்திற்கு அரசாங்கம் மாறுபடும். இதை எம்மில் பலர் புரிந்துகொள்வது இல்லை. ஒரு சின்ன உதாரணம், வாஜ்பேயின் அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது புலிகளிற்கு ஆதரவானவர் என்று பரவலாகப் பேசப்பட்ட ஜார்ச் பர்னான்டச் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். அப்பொதுதான் புலிகள் யாழ்ப்பாணம் நோக்கிய தமது முற்றுகையை இறுக்கியிருந்தார்கள். 40,000 ராணுவத்தை புலிகள் சுற்றி வளைத்திருந்த போது இந்தியாவின் அச்சுறுத்தலால் அம்முயற்சி கைவிடப்பட்டதோடு பின்னர் புலிகள் சுண்டுக்குளியிலிருந்து பின்வாங்கி சாவகச்சேரியையும் இழந்து முகமாலையில் வந்து நிற்கவேண்டியதாயிற்று. அக்காலத்திலும் நாம் சில ஆயுதக் கப்பல்களை இழந்திருந்தோம்.

ஆகவே புலிகளுக்கு ஆதரவானது என்று சொல்லப்பட்ட வாஜ்பேய் அரசுக்கும், புலிகளின் பரம வைரி எனக் கருதப்படும் சோனியாவின் காங்கிரச் அரசுக்கும் அடிப்படையில் வேறுபாடு கிடையாது.

இதை விளங்கிக் கொள்ளாதவரை இந்தியாவை ஒன்றும் தெரியாத அப்பவியாக நினைப்பதும், இலங்கை இந்தியாவை தவறாக வழிநடத்துவதாக எண்ணுவதையும் தடுக்க முடியாது!

  • கருத்துக்கள உறவுகள்

ஒருக்கால் இலங்கை எமது போராட்டத்தின் வெற்றியினால் எமக்கு சுதந்திரம் தர முன்வந்தாலும், அதற்கு குறுக்கே நிற்கும் முதல் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் ! இது பல பேருக்கு தெரிந்தும் தெரியாதது மாதிரி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஏனிந்த முக்காடு ? தலைக்குமேல் வெள்ளம் போனபின் சாணென்ன, முழமென்ன ?இன்னும் இந்தியாவிற்கு ஆதரவாகப் பேசிக்கொண்டு என்னத்தைக் காணப்போகிறோம் ? இவ்வளவு காலமும் பட்ட அழிவும், அறிவும் போதாதா ? எதெற்கு எடுத்தாலும் "எமது தந்தையர் நாடு" எண்டு பழம் பெருமை பேசிக்கொண்டு இருக்கிறோம். தந்தையே மகனை வெட்டிக்கொல்லும் காலம் வந்தபின் உறவை அறுத்தெறிவதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது ? எமது தமிழ்நாட்டு சொந்தங்களைத் தவிர இந்தியாவில் எமக்கு எதுவுமே இல்லை !

எந்த நாடும் எமக்கு உதவப்போவதில்லை. எம்மை நாமேதான் பார்த்துக்கொள்ளவேண்டும். ஆனால் இப்போதிருக்கும் சூழ்நிலையில் எமக்கு இந்தியாவின் ஆதரவு இல்லாவிட்டாலும் எதிர்ப்பு இருக்கக்கூடாது. தமிழீழத்தை தனிநாடாகப் பிரகடனப்படுத்தும்போது, இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் முக்கியம்.

இதுவரைகாலமும் இந்தியா சிறிலங்காவை பொருளாதார ரீதியில் வளர்ச்சியடையமுடியாமால் தடுத்து வந்திருக்கிறது. ஆனால் தமிழீழத் தனியரசு உருவாகும்போது, அது ஒரு வளர்ச்சி கண்ட நாடாகவே அமையும். இந்தியாவிற்கு அது மிகவும் ஆபத்தானது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாடு வளர்ச்சியடைந்த நாடாகவும் மாறிவிட்டால், இந்தியா பொருளாதார ரீதியில் பலத்த வீழ்ச்சியை அடையும். இப்போதைய காலகட்டத்தில் இந்தியா தடுமாற்ற நிலையிலேயே உள்ளது. அவர்களால் வெளிப்படையாக எதையுமே செய்யமுடியாது. எந்தவொரு முடிவையும் தன்னிச்சையாக எடுக்கக்கூடிய நிலையில் இந்தியா இப்பொழுது இல்லை. காரணம் எந்தவொரு கட்சியும் அங்கு பெரும்பான்மையாக இல்லை. கூட்டணி ஆட்சி நடப்பதால் ஆதரவுக் கட்சிகளை அனைத்தையும் அனுசரித்துப் போகவேண்டிய ஒரு நிலை உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்ல வருகிறீர்கள் தமிழாச்சி ? இப்போது மட்டும் இந்தியா எங்களை ஆதரித்துக் கொண்டா இருக்கிறது ? இல்லையே ! எங்களை அழிப்பதற்கு எதிரியுடன் சேர்ந்து சதியல்லவா செய்து வருகிறது ? எங்கள் ஆயுதக்கப்பல்களை காட்டிக் கொடுப்பதிலிருந்து எதிரிக்கு ராடர், ரோந்துக் கப்பல், விமானப் பயிற்சியும் ஆயுதங்களும், புலநாய்வுத்தகவல்கள், ராணுவப் பயிற்சி, ராணுவ ஆலோசனை என்று வாரி வழங்கிக் கொண்டல்லவா இருக்கிறது ? இதையெல்லம் என்னவென்று சொல்கிறீர்கள் ? எங்கள் மேல் உள்ள ஆதரவினாலா எதிரிக்கு கொடுத்து மகிழ்கிறது இந்தியா ?

இந்தியா எங்களை எதிரியாகப் பார்த்து கனகாலமாகிவிட்டது தமிழாச்சி. யதார்த்தத்துக்கு வாருங்கள். நாய் கூட சாகும்போதும் தன்னை அடிக்க வருபவனுக்கு எதிர்ப்புக் காட்டுமாம் ! ஆனால் நாங்கள்....!!!!!?????? இன்னும் வாய் மூடி மவுனிகளாய், கண்ணிருந்தும் குருடர்களாய் இருப்போம். ஏனென்றால் இந்திய எங்களுக்கு வேண்டும் ! அது இல்லாமல் எதுவும் இல்லையல்லவா ????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் இந்தியாவை நம்பியிருக்காமல் அமெரிக்காவுடன் ஆரம்ப காலத்திலேயே நெருக்கமான உறவை ஏற்படுத்தியிருந்தால் இன்று நிலமை எப்படி இருந்து இருக்கும்?

இந்தியா எக்காரணத்தை கொண்டும் தமிழீழம் உருவாகுவதை ஆதரிக்க மாட்டாது

இந்திய மத்திய அரசுக்கு தெரியும் தமிழ் நாட்டு மக்களை எப்படி ஏமாற்றலாம் என்று. அதற்கு ஏற்றவாறு சினிமா உலகை பயன்படுத்தும்.

உதாரணமாக அரசியலில் மூத்த அரசியல்வாதியான கருணாநிதிக்கு சரிசமமாக கன்னட வாசியான ரஜனியை பக்கத்தில் உட்கார வைக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அரசாங்கங்கள் மாறும்போது மாறுவதில்லை. ஏனெனில் வெளியுறவுக்கொள்கை எப்பொதுமே ஒரு குறிப்பிட்ட குழுவினரால்தான் தீர்மானிக்கப்படுகிறது. அரசாங்கங்களின் வேலை அக்கொள்கையை நிறைவேற்றுவது மட்டுமே. ஆனால் அக்கொள்கையின் தீவிரம் அரசாங்கத்திற்கு அரசாங்கம் மாறுபடும். இதை எம்மில் பலர் புரிந்துகொள்வது இல்லை.

நிட்சயமாக மறுக்க முடியாத உண்மை.

இப்போ இங்கு பலர் பேசுகின்றார்கள் ஏதோ கிலாரி வந்தால் சாதகமாய் இருக்கும் என்று. ஆனால் அங்கு ஒருவித மாற்றமும் வராது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

pg14.jpg

விடுதலைப் புலிகளைக் கொண்டு விரும்பத்தகாத அரசியல் சர்ச்சைகள் தமிழக அரசியலில் அடிக்கடி நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப.தமிழ்செல்வன் அவரது சமாதானச் செயலகத்தில் சற்றும் எதிர்பாராதவிதமாக இலங்கை அரசால் குண்டுவீசிக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி எழுதிய ‘இரங்கற்பா...’ அவரை, ‘ஆட்சியை விட்டு இறங்கப்பா...’ என்ற அளவுக்கு ஆவேச அலைகளை உருவாக்கி உள்ளது.

‘கருணாநிதியைக் கைது செய்யவேண்டும்.’

‘இந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்யவேண்டும்’ என்கிறார் ஜெயலலிதா.

‘‘விடுதலைப்புலிகள் இயக்கம் என்பது தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம். இதற்கு யார் ஆதரவு தெரிவித்தாலும் அது தேசவிரோதமாகும்’’ என்றும் கூறுகிறார் ஜெயலலிதா.

எனில், விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் வைகோ எப்படி அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறார்? எனக் கேட்டால், ‘‘கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் மேற்கொள்ளப்படுவது’’ என்கிறார். அப்படியானால் தேர்தல் நேரத்தில் கூட்டணிக்காக தேசத் துரோகத்தை ஜெயலலிதா மன்னித்து மறந்துவிடுவார் போலும்!

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு மனநிலை கொண்டிருப்பதும், எதிர்ப்பு மனநிலை கொண்டிருப்பதும் அவரவர் விருப்பம். ஆனால் அந்த மனநிலை சார்ந்து இந்திய நலன்களுக்கு எதிராக செயல்படாதவரை ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோர முடியாது.

ஜனநாயக நாட்டில் எவருக்குமுள்ள கருத்துச் சுதந்திரத்தை, எந்தப் பூச்சாண்டியைக் காட்டியும் பறிக்க முயல்வது தீவிரவாதத்தையும் மிஞ்சிய தீவிரவாதமாகவே அர்த்தப்படும்.

ராஜீவ்காந்தியை தமிழ் மண்ணில் கொன்று சாய்த்த விடுதலைப்புலிகளை காங்கிரஸ் கட்சி மன்னிக்காது, மறக்காது என்கிறார்கள் தமிழக காங்கிரஸார்.

ராஜீவ்காந்தியை துப்பாக்கி மட்டையால் தாக்க முயன்ற விஜயமுனி என்ற சிங்களச் சிப்பாய் இன்று இலங்கையில் அரசியல் அந்தஸ்து பெற்ற முக்கியஸ்தராக வலம் வருகிறார்.

இப்படிப்பட்ட இலங்கைக்கு இரண்டு போர்க் கப்பல்களை (ஐ.என்.எஸ்.சரன்யூ, சி.ஜி.எஸ்.வார்த்தா) இந்தியா இலவசமாக தந்தபோது அதை இங்குள்ள காங்கிரஸார் தடுத்திருக்க வேண்டாமா?

தமிழகத்தின் மக்கள்தொகை யில் மூன்றில் ஒன்றேயுள்ள சின்னஞ்சிறிய இலங்கையின் ராணுவத்தினர் குருவி சுடுவது போல் தமிழக மீனவர்கள் சுமார் 400க்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்ததற்கு அந்த அரசின் மீது மத்தியஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

இப்போது, ‘‘கண்ணீர் அஞ்சலி இரங்கற்பா எங்களின் கண்களில் ரத்தக்கண்ணீரை வரவழைத்துவிட்டது’’ என்று குமுறும் காங்கிரஸாருக்கு இதற்கெல்லாம் சாதாரண கண்ணீர் கூட வராதா?

இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மாகாந்தியை ஆர்.எஸ்.எஸ்.சின் நாதுராம் கோட்சே சுட்டுக்கொன்றார். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்பட்டது. அந்தத் தடை சுமார் 16 மாதங்களில் விலக்கிக்கொள்ளப்பட்டது. எந்த ஆர்.எஸ்.எஸ்.ஸை மிகக் கடுமையாக விமர்சித்தாரோ அதே ஆர்.எஸ்.எஸ்.ஸை மிகவும் மதித்து ‘இதன் அருமை பெருமைகளை குறைத்து மதிப்பிட முடியாது’ என்றார் ஜவஹர்லால் நேரு. 1963_ல் நடந்த குடியரசு தினவிழாவில் ஆர்.எஸ்.எஸ்.ஸை அரசுப் படைகளோடு அணிவகுக்கச் செய்து அழகு பார்த்தார் நேரு.

ராஜீவ்காந்தியைப் படுகொலை செய்ததுதான் விடுதலைப்புலிகள் செய்த பெருந்தவறு. ஆனால் அதற்கு முன்பும் சரி, பின்பும்சரி விடுதலைப்புலிகள் இந்தியாவுக்கு எதிரியாகச் செயல்பட்டதில்லை.

இதன் மற்றொரு எதிர்வினையாக சிங்கள அரசு இந்திய அரசோடு நெருங்கவும், அதன் அத்துமீறிய மனித உரிமை மீறல்களை இந்திய அரசு அலட்சியப்படுத்தவுமான அவலம் நேர்ந்துவிட்டது.

ஆனால் இலங்கை அரசோ இந்தியாவிற்கு என்றுமே நம்பிக்கை நண்பனாக இருந்ததில்லை.

இலங்கை தீபகற்ப பகுதியை அமெரிக்காவின் ராணுவத்திற்கு தாரைவார்த்து இந்தியாவிற்கு அச்சுறுத்தல் தந்ததால்தான் இந்திராகாந்தி விடுதலைப்புலிகளுக்கு இந்திய மண்ணில் பயிற்சி தந்தார்.

இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமான உரிமைகளை குறைந்தபட்சம் கொடுக்க ஒப்புக்கொண்டு, இந்திராகாந்தியால் பரிந்துரைக்கப்பட்ட ‘அனெக்சர் சி’ திட்டத்தை அம்போவென்று கைவிட்டது இலங்கை அரசு.

ராஜீவ்காந்தி காலத்தில்அதைக் காட்டிலும் குறைவான உரிமை களை தமிழர்களுக்குத் தரும் அட்டர்னி ஜெனரல் பராசரனால் பரிந்துரைக்கப்பட்ட ஒப்பந்தத்தையும் இலங்கை அரசு அமல்படுத்தவில்லை.

இப்போது இந்தியாவின் பாதுகாப் புக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் இந்தியாவுடன் பங்காளிச்சண்டை கொண்ட சீனாவுடனும், பகை கொண்ட பாகிஸ்தானோடும் இலங்கை ராணுவ உடன்படிக்கை செய்து கூடிக்குலவுகிறது.

இந்நிலையில், ‘சிங்கள அரசுக்கு ஒரு ‘செக்’ வைக்கும் விதத்தில் விடுதலைப்புலிகளை பயன்படுத்திக்கொள்ளலாமா’ என்று கூட இந்தியா ராஜதந்திர ரீதியாக யோசிக்கலாம்.

விடுதலைப்புலிகள் ஆதரவு, எதிர்ப்பு என்பதற்கு அப்பால் இலங்கைப் பிரச்னையின் யதார்த்தங்களை பார்க்கவேண்டும். இந்தியாவைப் போல் இலங்கை மதச்சார்பற்ற நாடல்ல. அது சிங்களபௌத்த நாடாக அதன் அரசியல் சட்டத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நாடாகும். அங்கே அதிபராகவோ, பிரதமராகவோ, முப்படைத் தளபதிகளில் ஒருவராகவோ தமிழர்கள் வருவதை நினைத்தும் பார்க்க முடியாது. இந்நிலையில் சர்வதேச ரீதியில் அமெரிக்காவின் செனட் உறுப்பினரான ஹிலாரி கிளிண்டன் பிரிட்டனின் ‘தி கார்டியன்’ இதழுக்கு ‘‘இலங்கையின் விடுதலைப்புலி களையோ, ஸ்பெயினின் பாஸ்க் போராளி களையோ பயங்கர வாதிகள் பட்டியலில் சேர்க்க முடியாது’’ என பேட்டியளித்துள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

கருணாநிதியின் ‘கண்ணீர் இறங்கற்பா’ என்பது இழந்து கொண்டிருக்கும் தமிழினத் தலைவர் பட்டத்தை தக்க வைத்துக்கொள்ள எழுதப் பட்டிருக்கலாம். அதைப்பற்றிய கவலையை கருணாநிதிக்கே விட்டுவிடலாம். ஏனெனில் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்பதில் இன்றுவரை கருணாநிதி இரண்டுங்கெட்டா னாகத்தான் இருக்கிறார். பெரும்பாலும் அவரது அரசியல் ஆதாயத்திற்குத் தக்கபடியே இந்த ஆதரவையும், எதிர்ப்பையும் முடிவு செய்கிறாரேயன்றி, இந்திய நலன்களையும், இலங்கைத்தமிழர் நலன்களையும் இணைத்து முடிவு எடுப்பவரல்ல கருணாநிதி.

ஆனால் அந்தப் பொறுப்பு காங்கிரஸாருக்கு இருக்கவேண்டும். இலங்கைப் பிரச்னையை வெறுமனே விடுதலைப்புலிகள் மீதான வெறுப்பு என்ற கண்ணோட்டத்தில் மட்டும் பார்ப்பது ஜனநாயகத்திற்கு ஆபத் தானது, வறட்டுத்தனமானது, ஆரோக்கியமற்றது..

நன்றி : குமுதம்

இந்தியா எம்மை ஆதரிக்கிறது என்று நான் சொல்லவரவில்லை தமிழ்நக்ஸ். இந்தியாவிற்கு தமிழீழத் தனியரசு உருவாவதில் விருப்பம் இல்லை. அதேநேரத்தில் அவர்களுடைய எதிர்ப்பை நேரடியாகவும் காட்டமுடியாது. அப்படிக் காட்டினால் தமிழகத்தின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடும். இப்போதைய நிலையில் தமிழகத்தின் ஆதரவு அவர்களுக்குத் தேவை. அதற்காக தி.மு.க எமக்கு ஆதரவு என்று சொல்லவரவில்லை. ஆனால் முன்புபோல, அவர்கள் எமக்கு எதிராகவும் இல்லை. தமிழீழப் பிரமுகர்களின் அறிக்கைகளை, செய்திகளைப் பார்த்தீர்களானால், அவர்கள் இந்தியாவின் ஆதரவை வேண்டி நிற்பதாக அமைகிறது. அவர்களை விடவா எங்களுக்கு அதிக விடயங்கள் தெரிந்திருக்கிறது?

எமது போராட்டம், போராட்டம் என்ற நிலையைத் தாண்டி உலகத்தின் அங்கீகாரத்திற்காக வேண்டி நிற்கும் ஒரு நிலையை அடைந்துள்ளது. இந்த நேரத்தில் மற்றவர்களின் ஆதரவு இல்லாவிட்டாலும் வெளிப்படையான எதிர்ப்புகள் இல்லாமல் இருப்பதுதான் இன்றைய எமது தேவையாக உள்ளது. இந்தியா மட்டுமல்ல, எந்தவொரு நாடும் எமக்கு உதவப்போவதில்லை. அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக, இப்போது மற்றவர்கள் ஆதரவு எமக்குத் தேவை.

நாம் இந்தியாவின் ஆதரவை நாடாமல், அமெரிக்காவை நாடியிருந்தால் எமது போராட்டம் எப்போதோ அழிந்திருக்கும். தனது நலனுக்காக மட்டுமே பாவித்துவிட்டு அவர்களை பூண்டோடு அழிப்பதுதான் அமெரிக்காவின் வாடிக்கை. இந்தியாவிற்கு பெயரளவிலேனும் மனிதாபிமானம் இருக்கிறது. ஆனால் அமெரிக்காவிற்கு மனிதாபிமானம் என்பதே இல்லை. எமது அமைப்பின் அடையாளமே இல்லாமல் செய்திருப்பார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Thamilachchi,

இந்திய மத்திய அரசு தான் காலத்துக்க காலம் தமிழ் நாடு மாநில அரசை நிர்ணயிக்கின்றது. தமிழ் நாட்டில் எதுவித அதிகாரமோ மத்திய அரசை கட்டுப்படுத்தும் செல்வாக்கோ ஒரு துளியேனும் அவர்களிடமில்லை.

தமிழ் நாட்டில் காலம் காலமாக வருவது தலையாட்டும் பொம்மலாட்ட அரசியல் கட்சிகள் தான்.

அதை நம்பி ஈழத்தமிழர்கள் இருந்தால் ???? என்ன நடக்கும்.

தமிழ் பிரமுகர்கள் என்று கூறிப்பிட்டிருந்தீர்கள்..... அவர்களும் சாதாரண மனிதர்கள் தான்.

ஆரம்ப காலத்தில் அமிர்தலிங்கத்தை சந்திக்க தம்பியும் (தேசியத் தலைவர்) காத்திருக்க வேண்டி தான் இருந்தது. அப்போ அவரை எப்படி அழைப்பீர்கள்??? இப்போ எப்படி அழைக்கீன்றீர்கள்??

அந்த நாள் ஞாபகம் வந்ததே.... வாழைப்பழ கடை.... :)

தனது நலனுக்காக மட்டுமே பாவித்துவிட்டு அவர்களை பூண்டோடு அழிப்பதுதான் அமெரிக்காவின் வாடிக்கை.

அப்போ இஸ்ரேல் இப்பவும் தலை நிமிர்ந்து நிற்க யார் காரணம்??

சில நாடுகளை அமெரிக்கா அழிப்பதற்கு காரணம் உள்ளது. அதை தற்போது எழுத விரும்பவில்லை. அதேபோல தமிழீழத்திலும் சில சம்பவங்கள் நடந்துள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

சரியாகச் சொன்னீர்கள் தமிழ்நக்ச். கில்லரி கிலின்டன் ஆட்சிக்கு வருவதால் எமக்கு ஒன்றும் கிடைத்துவிடப் போவதில்லை. அது இன்னொரு அமரிக்க ஏகாதிபத்திய அரசாகத்தான் இருக்கும். அது இலங்கைக்கு தொடர்ந்தும் மனிதாபிமான உதவி என்ற பெயரில் ஆயுதங்களை வழங்கிக் கொண்டுதான் இருக்கும் ! இதை நாம் எதிர்பார்க்கவில்லை என்றால் நம்மைவிட முட்டாள்கள் வேறு இருக்கப்போவதில்லை !

தமிழ்நக்ஸ், நீங்கள் குறிப்பிட்டதையேதான் நானும் குறிப்பிடுகிறேன். ஆரம்பகாலங்களில் இந்தியா எமது போராட்டத்திற்கு பலவிதமான உதவிகளைச் செய்தது என்பதை மறுக்கமுடியாது. அதே இந்தியா எமக்கெதிராகத் திரும்பியபோது, நாங்களும் திருப்பித் தாக்கினோம். ஆனால் இப்போதைய சூழ்நிலையில் எமக்கு, இந்தியாவின் பகைமை நல்லதல்ல என்பதுதான் எனது வாதம். நான் முதலே குறிப்பிட்டது போல, எமக்கு நாமேதான் உதவி. மற்ற நாடுகள் தங்கள் சுயநலங்களுக்காக எம்மை விற்கவும் தயங்க மாட்டார்கள். இந்தியா சிறீலங்காவிற்கு உதவிகள் செய்யாமல் இருக்கப்போவதில்லை. அதனைத் தவிர்ப்பதும் மிகவும் கடினம்.

என்னைப் பொறுத்தவரையில் அமெரிக்காவை நம்புவதைவிட இந்தியாவை நம்புவதே எமக்கு சிறந்தது. இந்தியா எமக்கு உதவ வேண்டுமென நாம் எதிர்பார்க்கமுடியாது. அண்டை நாடு என்றமுறையில் எமது போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேனே தவிர, அவர்களை எம்முள் ஒருவராக என்னால் நினைக்க முடியவில்லை. காரணம் அவர்கள் வேறினத்தவர்கள். அவர்களுக்கும் சிங்களவர்களுக்கும் நான் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை. தமிழ்நாடு இந்தியா என்ற நாட்டுக்குள் அடங்கியிருப்பதால் மட்டுமே இந்தியாவிடமிருந்து ஆதரவை எதிர்பார்க்கிறேன். இந்தியாவிற்குள் தமிழ்நாடு அடங்கியிராவிட்டால், இந்தியாவையும் நாம் பாகிஸ்தானைப் போலவோ அல்லது சீனாவைப் போலவோதான் பார்த்திருப்போம். நாம் எதிர்பார்க்கும் ஆதரவு தமிழ்நாட்டிடமிருந்து கிடைக்கிறது. இந்திய அரசியலுக்குள் இருந்துகொண்டு எமக்குத் தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தாயகத்தைச் சேர்ந்த பலர் செய்யாத விடயங்களை தமிழகத்திலிருந்து பல உறவுகள் செய்து கொண்டு இருக்கின்றார்கள். அவர்களை நாம் நிச்சயமாக நம்பமுடியம். அதற்காக கருணாநிதியையோ அல்லது அரசியல்வாதிகளையோ நான் இங்கு குறிப்பிடவில்லை. கருணாநிதியை நீங்கள் மூத்த அரசியல்வாதி எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் நான் அவரை ஒரு பக்கா சுயநலவாதியாகத்தான் பார்க்கிறேன். அவருடைய அனுபவத்திற்கும் வயதிற்கும் இருக்க வேண்டிய பக்குவம் அவரிடம் இல்லை. தி.மு.க.வுக்குள்ளும் அவரது குடும்பத்திற்குள்ளும் அவர் எவ்வளவு பாரபட்சமாக நடக்கிறார் என்பதை இந்தியப் பத்திரிகைகளைப் படித்தால் தெரியும். அவரது குடும்பத்திற்குள் சொந்த அண்ணன் தம்பிகளுக்கிடையேயே பதவி காரணமாக போட்டி பொறாமைகள் நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் தங்களுக்குள் அடிபடுவது மட்டுமல்ல அவர்களது கட்சிக்காரர்களுக்குமிடையேக

  • கருத்துக்கள உறவுகள்

சரி தமிழச்சி, உங்கள் வழிக்கே வருகிறேன்.

தற்போது இந்திய மத்திய அரசாங்கத்தில் உள்ள தமிழ்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு ? எமது வைக்கோ முதல் கருனாநிதி வரை பலரும் நாடாளுமன்றத்திற்கு தமது உறுப்பினர்களை அனுப்பி இருக்கிறார்கள். இலங்கைக்கு ராணுவ உதவிகள், பயிற்சிகள் என்று இந்தியா அள்ளி அள்ளி வழங்கும்போது எமது தமிழ்நாட்டுத் தலைவர்கள் எத்தனை அறிக்கைகள், கண்டனங்கள் என்று வெளியிட்டு இருப்பார்கள்? ஆனாலும் ராணுவ உதவியைத் தடுக்க முடிந்ததா ? இல்லையே!!! ஆகவே தமிழ்நாட்டுத் தலைவர்களின் செல்வாக்கு மத்தியில் எவ்வளவு தூரத்துக்கு எடுபடும் என்று எமக்குத் தெரிகிறது அல்லவா? தமிழ்நாட்டு தமிழர் இந்திய அரசைப்பொறுத்தவரை கிள்ளுக்கீரைகள். ரெண்டாம் தரக் குடிமக்கள். நீங்கள் நினைப்பதுபோல தமிழ்நாட்டு தமிழரின் எதிர்ப்புக்குப் பயந்துதான் இந்தியா இன்னும் இலங்கைக்கு உதவாமல் இருக்கிறது என்றால் அது முழு முட்டாள்தனமே அன்றி வேரொன்றுமில்லை. இயக்குனர் சீமானின் பேச்சைக் கேட்டுப்பாருங்கள் புரியும்.

இப்போது பிரச்சனை தமிழ்நாட்டு ஆதரவு பற்றியதல்ல, மத்திய அரசின் புலி எதிர்ப்பு பற்றியது. ரெண்டையும் போட்டுக் குழப்ப வேண்டாம். தமிழ்நாட்டு தார்மீக ஆதரவு எமக்கு எப்போதும் தேவையானது. இதில் மறு பேச்சுக்கு இடமில்லை. ஏனென்றால் அவர்கள் எமது சகோதரர்கள். எம்மைப்போல் வன்சிக்கப்பட்டவர்கள்.

நாம் கூறுவது இந்திய ஆளும் வர்க்கத்தின் தமிழ் எதிர்ப்பு நிலைப்பாடு பற்றித்தான். எமது தமிழ் சகோதரங்கள் பற்றியதல்ல!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்சி,

இந்தியாவின் பகைமையை இப்போதுள்ள நிலையில் நாம் தேடவேண்டாம் என்கிறீர்கள். சரி இன்னும் பகைமையை வளர்த்துக்கொண்டு எதிரிக்கு உதவுவது யார்? புலிகள் இந்தியாவுக்கு எதிராக 1987 ற்குப்பின் ஏதாவது செய்து இருக்கிறார்களா?( ரஜீவின் கொலையை விடுங்கள்). நாம் எமது பாட்டில் இருந்தாலும் எமக்கெதிராக அரசிற்கு முண்டு கொடுத்து வருவது யார்? இந்தியா தானே?

இன்னும் எதிர்ப்பைச் சம்பாதிக்க என்ன இருக்கிறது ? தமிழீழம் அமையக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டுதானே இவ்வளவும் நடக்கிறது. பிற்கு என்ன அவர்களிடம் இருந்து அங்கீகாரம் வேண்டி கிடக்கிறது ? அவர்களின் அங்கீகாரம் கிடைத்தால்தான் எமக்கு விடிவு என்றால் எமக்கு ஒருபோதுமே அவ்விடிவு கிடைக்கப்போவதில்லை. கியூபாவைப் பாருங்கள். அமெரிக்காவின் கொல்லையில் இருந்தும் கூட தன்மானத்துடன் வாழவில்லையா ? இன்றும் கூட அமெரிக்கா தனது ஏகாதிபத்திய சதி வேலைகளை அங்கு அரங்கேற்றிக் கொண்டுதானே வருகிறது. அப்படியிருக்கும்போது அமெரிக்காவிடம் கியூபர்கள் அங்கீகாரம் கேட்டார்களா? இல்லையே, பிறகு எமக்கு மட்டும் எதற்கு எம்மை அழிக்க விரும்பும் ஒரு நாட்டின் அங்கீகாரம் ?

பகைமையை வளர்த்து வருவது இந்தியவே, நாமல்ல! தமிழச்சி, உலகில் இன்னும் பல நாடுகள் இருக்கின்றன, இந்தியா மட்டும்தான் என்று நினைக்க வேண்டாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழச்சி,

ரகுநாதன் சொல்லுவது தான் என் கருத்தும். அவர் சொல்வது போல இந்தியா மட்டும் தான் என்று என்ன வேண்டாம். நீங்கள் சொல்லலாம் பக்கத்து நாடு என்று. ஆனால் இஸ்ரேலை பாருங்கள் அதை சுற்றிவர இருக்கும் நாடுகளை பாருங்கள். அதன் துணிவுக்கு காரணம் என்ன? புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் இஸ்ரேலியர்களும் மற்றது யார் என்று உங்களுக்கே தெரியும்.

தமிழ் நாட்டு மக்களை வைத்துக் கொண்டு இந்தியாவை நாம் நம்பினால் உள்ளதும் இல்லாமல் தான் போகும்.

காலத்துக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும்.

நாளை நடிகர் ரஜனிகாந்தும் தமிழ் நாட்டு முதலமைச்சராய் வரலாம். அப்போ ஸ்டான்லின் சென்னை மேயராவும் இருக்கலாம். இது தான் அங்குள்ள நிலமை.

இப்படியே காலம் கணியவில்லை என்று பேசிக்கொண்டு இருந்தால் நிலைமை மோசமாகி கொண்டே தான் போகும்.

தமிழீழ விடுதலைப்புலிகளும் சில வெளி நாட்டு கொள்கை மாற்றங்களில் ஈடுபட தான் வேண்டும். இது என் தனிப்பட்ட கருத்து.

உதாரணமாக மகிந்தவை பாருங்கள்.... ஏதாவது உலக நாடுகள் அவரை அடக்குகின்றனவா என்று?? தமிழீழ பகுதிகளில் தினமும் எத்தனை குண்டு வீச்சுக்கள்...யார் தட்டி கேட்பது. அதற்கு பதிலாக ஆயுதம் தான் இந்தியா வாரி வழங்குகின்றது. இதற்காக தான் இந்தியாவை நாம் பகைக்க கூடாதா?

தமிழீழம் காண்பதற்கு முன்னர் இந்திய எதிர்ப்பு உணர்சியை தான் நாம் ஈழ மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் போல உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கும் இந்தியாவின் உண்மையான முகம் தெரியாமலில்லை. ராஜதந்திர ரீதியில் இந்தியாவை அனுசரித்துப் போவதாகக் காட்டிக் கொள்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால், யார் தயவிலும் இல்லாமல் தனியே ஒரு போராட்டத்தை நடாத்தும் அவர் இந்தியாவின் தேவை அவசியமென்று கருதியிருந்தால், இன்று அவர்களும் மற்றய குழுக்கள் போல பத்தோடு பதினொன்றாவதாக இருந்திருப்பார்கள்.

புலிகளைப்பொறுத்தவரை இந்தியாவின் இன்னொரு தமிழீழ ஆக்கிரமிப்பென்பது விரும்பத்தகாதது. அதை நடக்க விடாமல் தடுப்பதற்காகவே ராஜதந்திர ரீதியில் இந்தியாவின் அனுசரனை தேவை என்று கூறுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

புலிகளுக்கு இந்தியாவின் குள்ளநரித்தனமும் தெரியும், ஈழம் உருவாவதை தடுப்பதற்கு தன்னாலான சகலதையும் இந்தியா செய்யும் என்பதும் தெரியும். ஏனென்றால் இந்தியாவின் போலி முகத்திரையை உலகிற்கு முதன் முதலில் துகிலுரித்துக் காட்டியவர்கள் புலிகளே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.