Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசியாவில் தமிழர்கள் போராட்டம்

Featured Replies

மலேசியாவில் வம்சாவளி இந்தியர்கள் தடையை மீறி பேரணி

போலீஸ் கண்ணீர்புகை குண்டு வீச்சு

சிங்கப்பூர்இ நவ.26-

மலேசியாவில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக சென்ற வம்சாவளி தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும் அவர்கள் மீது தடியடி நடத்தியதோடு 240 பேரை கைது செய்தனர்.

மக்கள் தொகையில் 8 சதவீதம்

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின்போதுஇ இந்தியாவில் இருந்து மலேசியா (அப்போது மலேயா) நாட்டுக்கு ஏராளமான தமிழர்கள் உட்பட இந்தியர்களை சட்டப்பூர்வமாக குடியேற்றப்பட்டனர். தன்னுடைய சொந்த நலனுக்காகவே ஆங்கிலேய அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது. கடந்த 1800-ம் ஆண்டுகளில் இவ்வாறு குடியேறிய இந்தியர்களின் சந்ததியினர் இப்போதும் மலேசியாவில் இரண்டாம் தர மக்களாக நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

மலேசிய மக்கள் தொகையில் 8 சதவீதமாக உள்ள வம்சாவளி இந்தியர்களுக்கு பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. கட்டாய குடியேற்றம் காரணமாகஇ பரம்பரை பரம்பரையாக தங்களுடைய வாழ்க்கையே பாழாகிப் போனதாக வம்சாவளி இந்தியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் ஹஇந்து உரிமைகள் நடவடிக்கை படை' என்ற அமைப்பை ஏற்படுத்திஇ இங்கிலாந்து அரசு சார்பில் தங்களுக்கு 4 டிரில்லியன் டாலர் (ஒரு கோடியே 60 லட்சம் கோடி ரூபாய்) நஷ்டஈடு தருமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

ஒரு லட்சம் கையெழுத்து

இதற்காக கோலாலம்பூரில் உள்ள இங்கிலாந்து ஹை கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று பேரணியாக சென்று மனு கொடுக்க திட்டமிட்டு இருந்தனர். அந்த கோரிக்கை மனுவில் ஒரு லட்சம் மக்கள் கையெழுத்து போட்டுள்ளனர். ஆனால்இ இந்த பேரணிக்கு போலீசார் தடை விதித்தனர். பிரதமர் அப்துல்லா அகமதுவும் பேரணிக்கு எதிராக கடுமையான கருத்துகளை தெரிவித்தார்.

இது தவிரஇ கோலாலம்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டும் பேரணிக்கு தடை விதித்தது. இந்து உரிமைகள் நடவடிக்கை படையை சேர்ந்த 5 முக்கிய பிரமுகர்களை கைது செய்யவும் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்துஇ இங்கிலாந்து ஹை கமிஷனர் அலுவலகம் நோக்கி செல்லும் அனைத்து பாதைகளிலும் போலீசார் தடுப்பு அமைத்து இருந்தனர்.

தமிழ் பேனர்கள்

இந்த நிலையில்இ இங்கிலாந்து ஹை கமிஷனர் அலுவலகத்துக்கு திட்டமிட்டபடி பேரணியாக செல்வதற்காக நேற்று காலை 6.30 மணியில் இருந்தே சுமார் 10 ஆயிரம் இந்தியர்கள் கூடினர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். கோலாலம்பூரில் உள்ள உலகின் இரண்டாவது மிகப்பெரிய கட்டிடமான பெட்ரோனாஸ் அருகே அனைவரும் குழுமினார்கள்.

மேலும்இ தங்களை அடிமையாக நடத்தும் மலேசிய அரசுக்கு எதிராகவும்இ இங்கிலாந்து ராணியிடம் நீதி கேட்டும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தால் எழுதப்பட்ட வாசகங்களை தாங்கிய பேனர்களை கையில் வைத்திருந்தனர். ஒரு சிலர் மகாத்மா காந்தி படங்களையும் எடுத்து வந்திருந்தனர். பின்னர்இ அவர்கள் பேரணியாக செல்ல முற்பட்டபோது போலீசார் தடுத்து நிறுத்தினர்.

240 பேர் கைது

ஆனால் தொடர்ந்து பேரணி செல்ல முற்பட்டதால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கூட்டத்தில் வந்த பெண்களுக்கும் அடி விழுந்தது. இதனைத் தொடர்ந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசியும்இ தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கூட்டத்தை கலைத்தனர். அப்படியும் கலைந்து செல்லாமல் சிலர் நின்றனர்.

அவர்களை போலீசார் அடித்துஇ உதைத்து ஹதர தர'வென இழுத்து சென்று போலீஸ் வேனில் ஏற்றினர். 240 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவர். இந்த போராட்டம் சுமார் 8 மணி நேரம் நீடித்தது. கைதானவர்களில் சிலர்இ நேற்று இரவு விடுதலை செய்யப்பட்டனர். கோலாலம்பூரில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலேசிய பிரதமர் பேட்டி

இதற்கிடையேஇ மலேசிய பிரதமர் அப்துல்லா நேற்று முன்தினம் கூறுகையில்இ "கோரிக்கைகளை பெறுவதற்கு சாலையில் இறங்கி போராட்டம் நடத்துவது சரியான வழி அல்ல. அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வரலாம்'' என்றார்.

பல்வேறு இனத்தவரும் வசித்து வரும் மலேசியாவில் பேரணிஇ ஆர்ப்பாட்டம் என்று சாலைகளை தடை செய்யும் போராட்டங்களை காண்பது மிகவும் அரிதானது ஆகும். ஆனால்இ இந்த மாதத்தில் மட்டும் இரண்டு பேரணிகள் நடைபெற்றுள்ளன.

அவர்களை போலீசார் அடித்துஇ உதைத்து 'தர தர'வென இழுத்து சென்று போலீஸ் வேனில் ஏற்றினர். 240 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவர்.

எங்க இருந்தாலும் அடிவாங்குறது தமிழன்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியாவில் தமிழர்கள் துன்புறுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் வழிபாட்டு மையங்கள் சிதைக்கப்படுகின்றன.

அது பற்றிய குறிப்புக்கள்:

Edited by இணையவன்

மலாசியாவின் 8 வீதமான் தமிழர்கள் மலாசிய அரசாங்கத்தின் 50 ஆண்டுகால அடக்குமுறைக்கு எதிராக முதன்முறையாக ஜனநாயக ரீதியில் போராட ஆரம்பித்ததை அந்நாட்டு பொலீசார் இரும்புக்கரம்கொண்டு அடக்குவதை இவ்வீடியோவில் காணலாம்.

http://www.policewatchmalaysia.com/index.p...amp;ucat=9&

அவர்களுக்கு ஈமெயில் மூலம் உற்சாகத்தையும் ஆதரவை நல்கவும்.

ஈமெயில் விலாசம் waytha@hotmail.com

மேலதிக விபரங்களுக்கு

http://www.policewatchmalaysia.com/

எங்க இருந்தாலும் அடிவாங்குறது தமிழன்தான்.

அக்சுவலா வசி அண்ணா அதற்கு ஒரு முக்கிய காரணம் சில பேர் தங்களின்ட வாயால கெடுறவை!! :unsure:

அப்ப நான் வரட்டா!!!

  • கருத்துக்கள உறவுகள்

மலேசிய தமிழர்கள் மீது தாக்குல்: விஜயகாந்த் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, நவம்பர் 27, 2007

சென்னை: மலேசியாவில் தங்களது உரிமைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் மீது மலேசிய அரசு தாக்குதல் நடத்தியுள்ளதை கண்டித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், இந்த விவகாரம் பெரிதாகும் முன்பு மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசியாவில் உரிமைகளை கேட்டு போராடிய தமிழர்கள் மீது அந்நாட்டு அரசு தடியடி நடத்தி, காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்களை அடித்து இழுத்துச் சென்றது அதிர்ச்சி அளிக்கிறது.

போராட்டத்தில் கைதானவர்கள் மீது ராஜதுரோகச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமரே கூறியிருப்பது காமன்வெல்த் ஜனநாயக கொள்கைகளுக்கு எதிரானது.

மலேசிய அரசின் கொள்கையினால் ஓரங்கட்டப்பட்டவர்கள் தமிழர்கள் மட்டும்தான். இந்த அநியாயத்தை தட்டிக் கேட்கவே, அங்கு மக்கள் மகாத்மா காந்தியின் படத்தை ஏந்திக் கொண்டு அமைதி ஊர்வலம் சென்றுள்ளனர். அவர்கள் மீது மலேசிய அரசு கோரத் தாண்டவம் ஆடியுள்ளது.

மலேசியாவில் உள்ள தமிழர்கள் மனிதர்களாக வாழவும், சம உரிமையையும், சம வாய்ப்பை பெறவும் மலேசிய அரசு நடவடிக்கை எடுக்க இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் வற்புறுத்த வேண்டும்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவும், கைது செய்துள்ளவர்களை விடுவிக்கவும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்கவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறு பொறியாகத் தோன்றியது எவ்வாறு இலங்கையில் காட்டுத் தீயாக மாறி உள்ளதோ, அதைப் போல மலேசியாவிலும் ஆகாமல் இருக்க, மத்திய அரசு தனது மெத்தனப் போக்கை கைவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2007/11...tack-tamil.html

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையைப் போல மலேசியாவிலும் இனப் படுகொலை: தமிழர்கள் புகார்

வியாழக்கிழமை, நவம்பர் 29, 2007

தண்ணீரைப் பீய்ச்சி | படுகேவ்ஸில் போராட்டம் | அடக்கும் போலீஸ் | கைதுகள் | போலீஸ் பாதுகாப்பு சிங்கப்பூர்: இலங்கை அரசு நடத்தும் இனப் படுகொலையைப் போல மலேசிய அரசும் தமிழர்களை அழித்தொழிக்கும் இனப் படுகொலையை நடத்தி வருவதாக மலேசியத் தமிழர்கள் பகிரங்க குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுனுக்கும் அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

மலேசிய வாழ் இந்திய வம்சாவளியினர், குறிப்பாக தமிழர்கள் மலேசிய அரசின் இனப் பாகுபாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். தங்களை இரண்டாம் தர குடிமக்களாக மலேசிய அரசு நடத்தி வருவதை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை வலியுறுத்தி இங்கிலாந்து தூதரகத்தில் மனு கொடுக்கச் சென்ற தமிழர்களை மலேசிய அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கி ஒடுக்கியது. இந்த செயலுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழக அரசியல் கட்சிகள், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய அரசு இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுனுக்கு இந்து உரிமை நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கைக் கடிதம் ஹிண்ட்ராப் அமைப்பின் பிளாக்கில் (blog) வெளியாகியுள்ளது.

அதில், மலேசிய அரசில் ஆதிக்கம் செலுத்தி வரும் உம்னோவின் (ஐக்கிய மலாய் தேசிய இயக்கம்) துணையுடன் இந்தியர்களுக்கு எதிராக, குறிப்பாக தமிழர்களுக்கு எதிராக இன ஒழிப்பு நடவடிக்கையில் மலேசிய அரசு இறங்கியுள்ளது. நூற்றுக்கணக்கான தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் இனவெறிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய சிறுபான்மையினரை அழித்து ஒழிக்கும் இனப் படுகொலையில் மலேசிய அரசு இறங்கியுள்ளது.

இலங்கை அரசு மேற்கொண்டு வருவதைப் போன்ற இன துவேஷ, இனப் படுகொலையில் மலேசிய அரசும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

எனவே உடனடியாக இந்த விவகாரத்தில் இங்கிலாந்து அரசு தலையிட வேண்டும். மலேசியாவை உலக நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி அதைத் தண்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் குறித்து மலேசிய அமைச்சர் நஸ்ரி அஜீஸ் விளக்கம் அளித்துள்ளார். சிங்கப்பூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த கடிதம் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. இந்த கடிதத்தை ஹிண்ட்ராப் அமைப்பைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் வெளியிட்டுள்ளார்.

இந்தக் கடிதம் மூலம் அரசுக்கு எதிராகவும், மலாய் மற்றும் முஸ்லீம் மக்களுக்கு எதிராகவும் இந்தியர்களைத் தூண்டி விட அவர் முயற்சிக்கிறார்.

இலங்கையைப் போல மலேசியாவிலும் தமிழ் இனப் படுகொலை நடப்பதாக அவர் கூறியிருப்பது சாதாரண வார்த்தை அல்ல. அரசுக்கு எதிராக அவர்கள் சவால் விடக் கூடாது. இந்த கடிதத்தால் ஏற்படும் விளைவுக்கு உதயக்குமார்தான் பொறுப்பேற்க வேண்டும்.

கோலாலம்பூரில் பேரணி நடத்தியவர்கள் குண்டர்கள் என்று நான் கூறியதில் தவறில்லை. இந்த வார்த்தையை நான் மறுபடியும் கூறுகிறேன். இதற்காக இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான ஜனநாயக நடவடிக்கைகக் கட்சியின் கோரிக்கையை நான் ஏற்க மாட்டேன்.

அவர்கள் சட்டத்தை மீறி போராட்டம் நடத்தியவர்கள். எனவே அவர்களை அப்படித்தான் கூற முடியும். நான் ஒட்டு மொத்த இந்திய சமுதாயத்தினரையும் குறை கூறவில்லை. போராட்டத்தை நடத்தியவர்களை மட்டுமே கூறுகிறேன்.

20 லட்சம் இந்தியர்கள் வசிக்கும் மலேசியாவில் 20 ஆயிரம் பேரின் கருத்துக்களை பெரும்பான்மையானவர்களின் கருத்து என்று கூறி விட முடியாது என்று கூறியுள்ளார் அஜீஸ்.

80 பேர் மீது வழக்கு:

இதற்கிடையே, கோலாலம்பூரில் நடந்த போராட்டத்தில் கைதானவர்களில் 80 பேர் மீது அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. சட்டவிரோதாமாக கூடியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2007/11...ls-hindraf.html

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியாத்தமிழர்கள் காந்திய வழியில் மலேசியா அரசுக்கு எதிராகப் போராடுகிறார்கள்.அவர்களின் உரிமைகள் வழங்கப்படாது தடுக்கப்பட்டால் அவர்கள் தலைவர் பிரபாகரனை பின்பற்ற வேண்டிய நிலமை ஏற்படும் - ராமசாமி.

Malaysian Indians look at LTTE

HONG KONG: Angry ethnic Indians who marched in Kuala Lumpur on Sunday to protest race-based discrimination in Malaysia carried portraits of Mahatma Gandhi as a symbol of their non-violent struggle.

“But if their genuine grievances continue to be ignored, (Sri Lankan Tamil Tigers leader) Velupillai Prabakaran could soon replace Gandhi as their inspiration,” warns P. Ramasamy, former professor of history at University Kebangsaan Malaysia.

In an interview to DNA from Singapore, Ramasamy, who was appointed by the LTTE to its Constitutional Affairs Committee in 2003, connected the dots that link the Tamil diaspora in Malaysia (which accounts for most of the Indian population there) to the Tamil Eelam movement in Sri Lanka.

The chilling picture that emerges is one that holds serious foreign policy implications for India, quite similar to what it faced in Sri Lanka in the early 1980s.

“There is a very real risk of radical groups taking over the movement if the Malay government persists with its racially discriminatory policies,” says Ramasamy, whose services at the University were terminated for criticiing government’s policies.

“Today, the ethnic Indian movement may be a loose formulation, and their ideas may not seem well-formulated. But if there’s a police crackdown, there will be retaliation.” The government’s stated intention of invoking the Internal Security Act against demonstrators could trigger such a confrontation.

Malaysian journalist Baradan Kuppusamy, who has been an up-close observer of events concerning the Indian community, too senses an increasing inclination to resort to militancy as a last resort.

“They have been knocking their heads on the wall for so long, that some form of radicalisation has already happened.” Militant views are not yet being publicly articulated, “but they are frequently voiced in private gatherings,” he notes.

It is in this context that the Tamil diaspora’s solidarity with the LTTE assumes significance. Ramasamy notes that Tamils in Malaysia are active contributors to the Tamil Eelam cause.

“Indians in Malaysia are very sympathetic to Prabakaran, and Tamil newspapers valorise Prabakaran,” adds Kuppusamy.

So is there a real risk of an LTTE-like movement getting underway in Malaysia? Says Kuppusamy: “From my study of the ethnic Indian movements, I feel that the current leadership – headed by firebrand lawyer Uthayakumar – is among the most radical, willing to take big risks, and court arrest.”

But from there to an open call to arms is a long way off, and Kuppusamy believes this leadership is incapable of making that leap. “But there could be a splinter group in the years ahead, which could be far more radical, so, yes, the possibility does exist,” he says.

For the Indian foreign policy establishment, which is still grappling with the Sri Lanka-sized problem, the prospect of Malaysia going down the same road can only be a nightmarish proposition.

http://www.dnaindia.com/report.asp?NewsID=1136140

  • கருத்துக்கள உறவுகள்

malaysiamap250_29112007.jpg

பொங்கியெழுந்த தமிழர்கள்-கொதிக்கும் மலேசியா

உலகத் தமிழர்களின் மனதில் இன்னும் ஒரு புதிய கவலை குடி புகுந்துள்ளது. இலங்கைத் தமிழர்களின் இன்னல்களைக் கண்டு உலகத் தமிழர்கள் உருகிக் கொண்டிருக்கும் நிலையில் மலேசியத் தமிழர்களுக்கு நேர்ந்துள்ள அநீதி, அடக்குமுறை, அவமரியாதை உலகத் தமிழர்களை மட்டுமல்லாது, மனித உரிமை ஆர்வலர்களையும் கூட அதிர வைத்துள்ளது.

மலாய் தீபகற்பத்தில் அடங்கியுள்ள தென் முனைப் பகுதிதான் மலேசியா. மலேகா என்ற பூர்வீகப் பெயர் கொண்ட மலேசியாவை, சிங்கப்பூரை ஆண்டு வந்த மலாய் மன்னர்கள் ஆரம்பத்தில் ஆண்டு வந்தனர்.

அதன் பின்னர் சீனா, இந்தியா, பர்மா, அரேபியாவிலிருந்து வந்த வர்த்தகர்கள் மலேசியாவை வளப்படுத்தினர். பிறகு இங்கிலாந்து ஆட்சியாளர்கள் வசம் மலேசியா சென்றது.

இங்கிலாந்து வசம் இருந்த மலேய தீபகற்பத்தை பிரித்து தனி நாடுகளாக மாற்றக் கோரி ஐக்கிய மலாய் தேசிய இயக்கம் (உம்னோ) போராட்டங்களில் குதித்தது. இந்த அமைப்பின் தீவிரப் போராட்டத்தின் விளைவாக 1951ம் ஆண்டு முதல் முறையாக உள்ளூர் தேர்தலை நடத்தியது இங்கிலாந்து அரசு.

ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக வலுவான அரசியல் அமைப்பு தேவை என்று கருதிய உம்னோ, மலாய் இனத்தவரைத் தவிர பிற இனத்தவரையும் தனது போராட்டத்தில் ஈடுபடுத்தியது.

இதன் விளைவாக மலாயன் சைனீஸ் சங்கம், மலாயன் இந்திய காங்கிரஸ் ஆகிய இரு பெரும் இனங்களின் பிரதிநிதி அமைப்புகள் உம்னோவுடன் கை கோர்த்து இங்கிலாந்துக்கு எதிராக போராட்டத்தில் இறங்கின.

அதன் பின்னர் 1955ம் ஆண்டு நடந்த முதலாவது பெடரல் தேர்தலில் இந்த கூட்டணிக்கு பெரும் வெற்றி கிடைத்தது. மொத்தம் உள்ள 52 தொகுதிகளில் 51 தொகுதிகளை இக்கூட்டணி கைப்பற்றியது.

இக்கூட்டணியின் சார்பில் மலேசியாவின் முதல் முதல்வராக துங்கு அப்துல் ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தக் கூட்டணி மிக வலுவானதாக இருந்ததால், இங்கிலாந்து ஆட்சியாளர்கள், மலேசியாவை தனி நாடாக்க தீர்மானித்தனர்.

இதையடுத்து 1957ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி மலேசியா சுதந்திர நாடாக மாறியது.

மலாய் யூனியனாக இருந்து, பின்னர் மலேசியா தனி நாடாக மாறியபோது சிங்கப்பூரை தன்னுடன் வைத்துக் கொள்ள அது விரும்பவில்லை. இதனால் சிங்கப்பூர் தனியாக பிரித்து விடப்பட்டது.

இதற்கு முக்கியக் காரணம், மலாய் இனத்தவருக்கு நிகராக சீனர்கள் வந்து விடக் கூடாது என்பதே. அப்போதே சீனர்களின் எண்ணிக்கை சிங்கப்பூரையும் சேர்த்து 40 சதவீதமாக இருந்தது. இந்தியர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருந்தது. இதன் காரணமாகவே சிங்கப்பூரை தங்களுடன் வைத்துக் கொள்ள மலேயர்கள் விரும்பவில்லை.

மலேசியாவில் இன்றுள்ள 2.7 கோடி மக்கள் தொகையில் இந்தியர்களின் எண்ணிக்கை 8 சதவீதமாகும். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்து சமுதாயத்தினர்.

இந்தியர்களிலும் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்தான். இவர்கள் அனைவரும் இங்கிலாந்து ஆட்சியாளர்களால், தோட்ட வேலைக்காக மலேசியாவுக்கு அழைத்து வரப்பட்டவர்கள். நூறாண்டுகளுக்கு முன்பு நடந்த கதை இது.

இப்போது எழுந்துள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு மூல வித்தும் இங்கிலாந்து ஆட்சியாளர்களால்தான் தூவப்பட்டது.

மலேசியாவுக்கு தோட்ட வேலைக்காக கூட்டி வரப்பட்ட தமிழர்களும், பிற இந்தியர்களும் அடிமைகள் போலவே நடத்தப்பட்டனர். குறைந்த கூலியைக் கொடுத்து அதிக வேலை வாங்கப்பட்டது.

அன்று எந்த நிலையில் இருந்தார்களோ, அதே நிலை இன்றும் மலேசியாவில் தங்களுக்குத் தொடர்வதால்தான் மலேசிய தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் கொதித்துப் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

மலேசியாவில் காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களில் மூன்றில் இரண்டு மடங்கு பேர் வறுமை, ஏழ்மை, வசதியின்மையில்தான் உழன்று கொண்டிருக்கின்றனர்.

மலாய் இனத்தவர்களின் ஆதிக்கம் முன்பை விட பல மடங்கு அதிகரித்து விட்டது. அவர்களுக்குப் போகத்தான் தமிழர்களுக்கு என்ற நிலை முன்பை விட அதிகமாகவே உள்ளது.

கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் மலாய் இனத்தவர்களுக்குத்தான் முதலுரிமை. தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே கருதப்படுகின்றனர்.

தங்களது இந்த நிலைக்குக் காரணம், தங்களது மூதாதையர்களை மலேசியாவுக்கு அழைத்து வந்த இங்கிலாந்து அரசுதான் காரணம். எனவே இங்கிலாந்து அரசு மலேசிய இந்தியர்களுக்கு 4 டிரில்லியன் டாலர் இழப்பீட்டைத் தர வேண்டும் என்று கோரி லண்டன் கோர்ட்டில் மலேசிய வாழ் இந்தியர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்குக்கு ஆதரவு தெரிவித்தும், இங்கிலாந்து தூதரகத்தில் மனு கொடுக்கவே கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் பெரும் திரளான இந்தியர்கள் கூடி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் அமைதியான முறையில் முடிந்திருக்க வேண்டிய இந்த போராட்டத்தை மலேசிய அரசும், காவல்துறையும் பெரிதுபடுத்தி, வன்முறையில் முடித்து விட்டது.

இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய போராட்ட ஒருங்கிணைப்பாளர்களான உதயகுமார், வாய்த மூர்த்தி, கணபதி ராவ் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் சரியாக இல்லை என்று கூறி கோலாலம்பூர் நீதிமன்றம் இன்று இவர்களை விடுவித்து விட்டது.

மலேசியத் தமிழர்களின் நிலை சொல்லி மாள முடியாத அளவுக்கு மிகவும் மோசமாக உள்ளது. சாதாரண வேலைக்குக் கூட அவர்களால் போக முடியாத அளவுக்கு மலாய் இனத்தவர்களின் ஆதிக்கம் படு மோசமாக உள்ளது.

இந்துக்களுக்கு மத சுதந்திரம் கூட அங்கு கிடையாது. அவர்கள் கட்டிய பல நூறு கோவில்களை மலேசிய அரசு இடித்துத் தள்ளி விட்டது. இதில் 150 ஆண்டு பழமையான மாரியம்மன் கோவிலும் அடக்கம்.

மலாய் இனத்தவர்களின் ஆதிக்கம் நிறைந்த மலேசிய அரசால் கடந்த காலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இந்தியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கிட்டத்தட்ட மலேசிய அரசு ஒரு இனப் படுகொலையை திட்டமிட்டு அரங்கேற்றி வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுவரை அடக்கப்பட்டு வந்த தமிழர்கள், இப்போது தங்களது உரிமைக்காக உரத்து குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். ஆனால் இவையெல்லாம் தேர்தல் நெருங்கி வருவதை கருத்தில் கொண்டு செய்யும் வேலைகள் என போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் மலேசிய பிரதமர் அப்துல்லா அகமது படாவி கூறி வருகிறார்.

ஆனால், வந்தபோது எப்படி இருந்தோமோ அதே நிலையில்தான் இன்றும் இருக்கிறோம். இந்த நாட்டை எங்களது சொந்த நாடாக மாற்றிக் கொண்டு விட்டோம். எங்களுக்கு மலேசியாதான் தாயகம். இந்த தாயகத்தின் வளர்ச்சிக்காக, உயர்வுக்காக உழைத்து உழைத்து ஓடாகப் போய் விட்ட எங்களுக்கு சாதாரண மனித உரிமைகள் கூட கிடையாது என்றால் எப்படி என்று குமுறுகின்றனர் தமிழர்கள்.

மலேசியா வாழ் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் இந்த உரிமைப் போராட்டம் மலேசியாவை மட்டுமல்லாது உலக நாடுகளின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது.

மலாய் இனத்தவர்களுக்கு நிகராக சம உரிமை, கல்வி, வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு கிடைக்கும் வரை எங்களது போராட்டம் நிற்கப் போவதில்லை என்று மலேசிய இந்தியர்கள் அமைப்பு திட்டவட்டமாக கூறியுள்ளதால், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து மட்டத்திலும் அதிகரித்துள்ளது.

--------------------

மலேசியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வந்து படிக்கும் பல தமிழ் மாணவர்களும் தங்களுக்கு கல்வியில் தரப்படுத்தல் இருக்கிறது என்பதைச் சொல்லி ஆதங்கப்பட்டுள்ளனர்.

மலேசியத் தமிழ் மக்களின் உரிமைக்காக ஈழத்தமிழர்களும் குரல் கொடுக்க முன் வர வேண்டும். அவர்களின் அமைதி மட்டும் சட்டத்துக்கு உட்பட்ட செயற்பாடுகளை அங்கீகரித்து அவர்களுக்கு பலம் சேர்க்க வேண்டும்.

அடிமைப்படுத்தப்படும் அல்லது அடக்குமுறைக்கு உள்ளாகும் மக்களுக்காக ஒரு அடக்கப்படும் மக்கள் இனமாக நான் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்.

நமது தேசிய தலைவர் சொன்னது போல 80 மில்லியன் தமிழனுக்கு என்று ஒரு தேசம் இல்லாததுதான் உலகில் அவன் மீதான அடக்குமுறைக்கு வசதியாகிவிட்டது. சுமார் 14 மில்லியன் சிங்களவர்களுக்கு ஒரு நாடு இருக்கிற படியால் தான் சர்வதேச அரங்கின் அங்கீகாரத்தோடு தமிழனப்படுகொலையைக் கூட செய்ய முடிகிறது. ஆனால் இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி பிறநாடுகளிலும் சரி குறிப்பிடத்தக்க எண்ணிகையில் வாழ்ந்தும் அடக்குமுறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் இலக்காகி.. ஏன் தனது சொந்த இனத்தைச் சேர்ந்த ஒருவரின் இழப்புக்கு கண்ணீர் விடக் கூட உரிமை இழந்து நிற்கின்றான் தமிழன்..! திராவிடன் இந்தியன் என்ற அடைமானங்களூடு தமிழன் தனது தனித்துவத்தை இழக்கச் செய்து அடிமைப்படுத்தப்பட்டும் உள்ளான்.

இறுதி மாவீரர்தினப் பேச்சில் தலைவரின் தீர்க்கதரிசனமிக்க அந்த வரிகள்.. அவர் உலகத்தமிழனின் இன்னல்களை மிக உன்னிப்பாக அவதானித்து வருவதையே காட்டி நிற்கிறது. 80 மில்லியன் தமிழர்களுக்கும் ஒரு தாயகமாக சர்வதேச பாதுகாப்பின் அடையாளமாக தமிழீழம் அமைய வேண்டியது அவசியமாகிறது. அண்மைய ஆண்டுகளில் ஒடுக்கப்படும் அடக்குமுறைக்கு உள்ளாகும் இனங்கள் மீது கரிசணை காட்டி வரும் ஐநா கூட தமிழர்கள் விவகாரத்தில் சிங்களர்வர்களுக்கு உதவக் காரணம்.. 14 மில்லியன் சிங்களவனின் குரலைக் கேட்க அவன் ஒரு நாட்டை வைத்திருப்பதுதான்..!

ஆண்ட பரம்பரர ஆட்சியை இழந்து நிற்கக் காரணம் பிரித்தானிய காலணித்துவம் தான். இன்றும் அதே மேற்குலக வல்லாதிக்கம் இந்திய ஹிந்திய தேசிய பிராந்திய வல்லாதிக்கத்துடனும் இதர வல்லாதிக்க சக்திகளுடனும் சேர்ந்தியங்கி சிங்களப் பேரினவாதத்தினூடு தமிழினத்தை உலகில் இருந்து அழிக்க முனைந்திருப்பதை தடுத்து நிறுத்த உலகத் தமிழர்கள் ஒன்றுணைய வேண்டும் என்பதுடன் ஒரே நோக்கோடு நெருங்கிச் செயற்படவும் வேண்டும். ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்க வேண்டும்.

அந்நியருக்கு பாதங்கழுவிப் பிழைக்கும் தமிழர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும் தங்கள் அடிமைத்தனத்தை உணர்த்தி உலகத்தமிழினத்துக்கு என்று ஒரு தேசம் இந்தப் பூமிப்பந்தில் உருவாக வேண்டியதன் அவசியத்தை தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களையும் சேர்த்தணைத்துச் செல்ல முற்பட வேண்டும்.

உலகம் பூராவும் பரந்துள்ள ஈழத்தமிழர்கள் இதில் முன்னின்று உழைக்க முன் வரவேண்டும். பிரித்தானிய அரசிடம் நட்ட ஈடுகோரி மலேசியத் தமிழ்மக்களால் போடப்பட்டுள்ள வழக்குப் போல.. ஈழத்தில் தமிழர்களின் ஆட்சி உரிமையை பறித்து சிங்களவர்களிடம் தாரை வார்த்த பிரித்தானிய காலணித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராக ஈழத்தமிழரும் சட்ட ரீதியான அணுகுமுறைகளைச் செய்ய வேண்டும். மலையத் தமிழ் மக்களும் தங்களின் உரிமைகள் தொடர்பில் சிங்களவனின் பாதம் நக்கிப் பிழைக்கும் வேலையைச் செய்யாமல் அறிவு பூர்வமாக சிந்தித்து உலகத்தமிழனத்தின் விடிவுக்கான தமிழீழப் போராட்டத்தோடு ஒருங்கிணைந்து உலக அரசுகளின் பக்கச்சார்பான நிலைப்பாடுகளுக்கு எதிராக அனைத்து வடிவங்களிலும் போராடுவதே இன்றைய உலகில் தமிழர்களின் தேவை. தமிழீழ விடுதலையைப் பலப்படுத்துவதன் முக்கியமும் இதனூடு இணைந்தே இருக்கிறது. உலகத்தமிழினத்தின் ஒருமித்த செயற்பாடும் ஒற்றுமைக் குரலுமோ தமிழனுக்கு என்று ஒரு தமிழீழ தேசத்தை மீட்டெடுத்து உலக அரங்கில் தமிழினத்தின் இருப்பை பாதுகாக்க உதவி நிற்பதுடன் உலகெங்கும் வாழும் தமிழனின் உரிமைகள் பாதுகாக்க குரல் கொடுக்க அழுத்தம் கொடுக்க சர்வதேச அரங்கில் தமிழனுக்கு அதிகாரத்தை வழங்கும். அதுவரை தமிழன் அடிமைப்படுவது அவன் விதியாகவே இருக்கும்.

Edited by nedukkalapoovan

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (25.11.07) 50 ஆயிரம் இந்திய வம்சாவழித் தமிழர்கள் பிரித்தானிய தூதரகத்திடம் மனு கொடுக்க ஒன்று திரண்டனர்.

தொடர்ந்து வாசிக்க

மலேசியாவில் அடிப்படை உரிமைகள் கோரி போராடும் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசாங்கம் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

தங்களது அடிப்படை உரிமைகளுக்காக போராடும் மலேசியத் தமிழர்கள் மீதான அந்நாட்டு காவல்துறையினரின் தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

தொடர்ந்து வாசிக்க

நம்பிக்கையூட்டும் மலேசியத் தமிழர்களின் பேரெழுச்சி

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (25.11.07) 50 ஆயிரம் இந்திய வம்சாவழித் தமிழர்கள் பிரித்தானிய தூதரகத்திடம் மனு கொடுக்க ஒன்று திரண்டனர்.

ஹின்ட்ராப் எனப்படும் இந்து உரிமைச் செயற்பாட்டுப் படை ஏற்பாடு செய்திருந்த இந்தப் பேரணிக்கு மலேசிய காவல்துறை அனுமதி தர மறுத்துவிட்டது. இதனால், இது சட்டவிரோதப் பேரணி என்றும் இதில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்றும் மலேசிய காவல்துறை முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆனால் நாடு தழுவிய நிலையில் இருந்து பலர் கோலாலம்பூரை நோக்கி வந்த வண்ணமாக இருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணிக்கு கோலாலம்பூர் பெட்ரோனாஸ் டவர்ப் பகுதிகளில் எதிர்ப்புப் பேரணிகளில் கலந்து கொள்ள வந்திருந்த தமிழர்கள் குழுமினர்.

பிரித்தானியா தூதரகத்திற்குச் செல்லும் முக்கிய சாலைகளை நான்கு கிலோ மீற்றர் தொலைவிற்கு காவல்துறை மூடிவிட்டது. வந்திருந்தோர் பலர் மகாத்மா காந்தி படம் மற்றும் தமிழர்களுக்கு நியாயமான உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற பதாகைகளை கையில் ஏந்தியவாறு அணிவகுத்துச் சென்றனர்.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் மூடப்பட்ட சாலைகளில் நுழையாமல் தடுக்கப்பட்டனர்.

கூட்டம் தொடர்ந்து முன்னேறி வரவே, கண்ணீர்ப் புகையும், அமிலம் கலந்த தண்ணீரையும் பீச்சியும் அவர்களை கலைக்க முயற்சித்தனர்.

மலேசியத் தமிழர்கள் கொதித்தெழுந்ததன் பின்னணி:

பிரித்தானியார்களால் 150 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிலிருந்து வேலைக்காக அழைத்து வரப்பட்டவர்கள் மலேசியத் தமிழர்கள்.

1957 ஆம் ஆண்டு பிரித்தானியர்கள் மலேசியாவிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக ரீட் ஆணையம் என்ற சுதந்திர மலாயாவின் புதிய அரசியல் அமைப்புக் குழுவை ஏற்படுத்தினர். அக்குழுவிடம் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க என்ன என்ன வழிமுறைகள் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழர்கள் சார்பாக ஆர்.என்.வீரப்பன், 1956 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரீட் ஆணையத்துக்கு மனு கொடுத்தார்.

ஆனால் மலேசியாவின் அரசமைப்புச் சட்டத்தை அந்த ஆணையம் உருவாக்கும்போது, அதில் தமிழர்களைப் பாதுகாக்க போதுமான வழிமுறைகளை உண்டாக்கத் தவறிவிட்டது.

கடந்த 50 ஆண்டுகளாக அதாவது மலேசியா விடுதலையடைந்த நாள் முதல் தமிழர்கள் ஓர் இனவாத ஆட்சிமுறையில் புறக்கணிக்கப்பட்டும், ஒதுக்கப்பட்டும் வாழ வேண்டிய சூழ்நிலை உருவாக்கப்பட்டது.

ரீட் ஆணையத்துக்கு தமிழர்கள் கொடுத்த ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டன.

இந்நிலையில் தொடர்ந்தும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.

மலேசிய அரசாங்கத்தில் தமிழர்களுக்கான வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. தமிழர்களின் கல்வி கலாசார உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஓராண்டுக்கு முன்பாக 20-க்கும் மேற்பட்ட தமிழர்களின் சமய, கலாச்சார அமைப்புக்கள் ஒன்று கூடி இந்து உரிமைச் செயற்பாட்டுப் படை (ஹிண்ட்ராப்) என்ற கூட்டமைப்பை உருவாக்கினர்.

இதில் வழக்கறிஞர்கள் வேதமூர்த்தி, உதயகுமார், மனோகரன் உள்ளிட்டோர் முக்கியமானவர்களாக செயற்பட்டு வருகின்றனர்.

வழக்கறிஞர் உதயகுமார், லண்டனுக்குச் சென்று 1956 ஆம் ஆண்டு ரீட் ஆணையத்திடம் தமிழர்கள் சார்பாக வீரப்பன் அளித்திருந்த கோரிக்கை மனுவை லண்டன் ஆவணக் காப்பகத்திலிருந்து பெற்று வந்தார்.

அதன் பின்னர் ஈப்போவைச் சேர்ந்த வேதமூர்த்தி பொன்னுசாமி என்ற வழக்கறிஞர் நட்ட ஈடாக பிரித்தானிய அரசாங்கம் ஒவ்வொரு மலேசியத் தமிழருக்கும் தலா ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் 10 லட்சம் வழங்க வேண்டும் என்று கடந்த 30.08.2007 ஆம் நாள் லண்டனில் உள்ள றோயல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

10 லட்சம் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் என்பது சுமார் ரிங்கிட் 70 லட்சத்திற்கு சமமாகும். இதன்வழி சுமார் 20 லட்ச மலேசிய தமிழர்களுக்காகத் தொடுக்கப்பட்டிருக்கும் மொத்த நட்ட ஈட்டின் மதிப்பு ரிங்கிட் 14 லட்சம் கோடியாகும். (ரிங்கிட் 14,000,000,000,000).

இக்கோரிக்கையை வலியுறுத்தித்தான் பிரித்தானிய தூதரகத்திடம் மனு அளிக்க மலேசியத் தமிழர்கள் தீர்மானித்திருந்தனர்.

ஆனால் தமிழர்களை பாரபட்சமாக நடத்தும் மலேசிய அரசாங்கம் மலேசிய வரலாற்றிலேயே முதல் முறையாக நீதிமன்றத்துக்குப் போய் பேரணிக்குத் தடை வாங்கியது.

ஆனாலும் மலேசியத் தமிழர்கள் மனம் தளரவில்லை. 50 ஆயிரத்துக்கும் அதிகமாக தமிழர்கள் ஒன்று திரண்டு ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

மலேசியத் தமிழர்களின் உரிமைகளை மீட்பதற்காக தாய்த் தமிழகத்தின் முதல்வர் கலைஞர், எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஜெயலலிதா, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே குரல் கொடுத்து உலகத் தமிழினத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

உலகத் தமிழினம் தமது உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய அளவில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விரைவில் வரும் என்கிற நம்பிக்கையையைத் தருகிறது மலேசியத் தமிழர்களின் பேரெழுச்சி.

http://www.puthinam.com/

20071129003.jpg

20071129004.jpg

20071129005.jpg

20071129001.jpg

20071129002.jpg

20071129006.jpg

20071129007.jpg

20071129008.jpg

20071129009.jpg

மலேசியாவில் தாங்கள் இனரீதியாகப் பாகுபாடு காட்டபட்டு ஒதுக்ப்படுகின்றார்கள் எனத் தெரிவித்து, அதற்கு ஆட்சேபனைகளை வெளிப்படுத்தும் வகையில், அஹிம்சைப் போரின் பிதாமகரான மஹாத்மா காந்தியின் உருவப்படங்களைத் தாங்கியபடி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கடந்த ஞாயிறன்று அங்குள்ள இந்திய வம்சாவளித் தமிழர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தினர்.

'இந்த மக்களின் நியாயமான ஆதங்கங்கள் தொடர்ந்தும் கவனிக்கப்படாமல் அவர்கள் புறக்கணிக்கபடுவார்களாயின் அந்த மக்களின் ஆதர்ச வழிகாட்டியாக மஹாத்மா காந்திக்குப் பதிலாக மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் விரைவில் வருவார்." இப்படி மலேசியாவின் கெபன்காஸன் பல்கலைக்கழகத்தின் சரித்திரத்துறையின் முன்னாள் பேராசிரியர் பி. இராமசாமி எச்சரித்திருக்கின்றார்.

சிங்கப்பூரின் டி.என்.ஏ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

2003 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் அவர்களது அரசமைப்பு விவகாரம் ஆலோசனைக் குழுவுக்கு நியமிக்கப்பட்டவர்களில் மலேசிய நாட்டவரான பேராசிரியர் இராமசாமியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய அரசின் கொள்களைக் கடுமையாக விமர்சித்து வந்ததால் அவரது பல்கலைக்கழக சேவை துண்டிக்கபட்பட்டுவிட்டதாகக

மலேசியாவில் சம உரிமை கோரி போராடும் தமிழர்கள் மீது அந்நாட்டு அரசாங்கம் நடத்திய தாக்குதல் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற தமிழக அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி நிராகரித்தமையால் இந்திய நாடாளுமன்ற மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து வாசிக்க

மலேசியத் தமிழர்களை காப்பாற்ற வேண்டியது என் கடமை என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

ஈழத்தமிழருக்காகக் குரல் கொடுத்தால்தான் பிழையாகக் கடிகடியென்று கடிப்பார்கள். மலேசியத் தமிழரைக் காப்பாற்றுங்கோ. அவர்களுக்காவது குரல் கொடுங்கோ. எல்லாம் காந்திக்குப் பதிலாக பிரபாகரன் வந்துவிடுவாரோ என்ற பயந்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டுத் தமிழர்கள் இவர்களைப் பார்த்தாவது திருந்த வேண்டும் ! வழ்ந்தால் மானத்துடன் தமிழனாக, இல்லையேல் மாவீரனாக !

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கியெழுந்த தமிழர்கள்-கொதிக்கும் மலேசியா

உலகத் தமிழர்களின் மனதில் இன்னும் ஒரு புதிய கவலை குடி புகுந்துள்ளது. இலங்கைத் தமிழர்களின் இன்னல்களைக் கண்டு உலகத் தமிழர்கள் உருகிக் கொண்டிருக்கும் நிலையில் மலேசியத் தமிழர்களுக்கு நேர்ந்துள்ள அநீதி, அடக்குமுறை, அவமரியாதை உலகத் தமிழர்களை மட்டுமல்லாது, மனித உரிமை ஆர்வலர்களையும் கூட அதிர வைத்துள்ளது.

மலாய் தீபகற்பத்தில் அடங்கியுள்ள தென் முனைப் பகுதிதான் மலேசியா. மலேகா என்ற பூர்வீகப் பெயர் கொண்ட மலேசியாவை, சிங்கப்பூரை ஆண்டு வந்த மலாய் மன்னர்கள் ஆரம்பத்தில் ஆண்டு வந்தனர்.

அதன் பின்னர் சீனா, இந்தியா, பர்மா, அரேபியாவிலிருந்து வந்த வர்த்தகர்கள் மலேசியாவை வளப்படுத்தினர். பிறகு இங்கிலாந்து ஆட்சியாளர்கள் வசம் மலேசியா சென்றது.

இங்கிலாந்து வசம் இருந்த மலேய தீபகற்பத்தை பிரித்து தனி நாடுகளாக மாற்றக் கோரி ஐக்கிய மலாய் தேசிய இயக்கம் (உம்னோ) போராட்டங்களில் குதித்தது. இந்த அமைப்பின் தீவிரப் போராட்டத்தின் விளைவாக 1951ம் ஆண்டு முதல் முறையாக உள்ளூர் தேர்தலை நடத்தியது இங்கிலாந்து அரசு.

ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக வலுவான அரசியல் அமைப்பு தேவை என்று கருதிய உம்னோ, மலாய் இனத்தவரைத் தவிர பிற இனத்தவரையும் தனது போராட்டத்தில் ஈடுபடுத்தியது.

இதன் விளைவாக மலாயன் சைனீஸ் சங்கம், மலாயன் இந்திய காங்கிரஸ் ஆகிய இரு பெரும் இனங்களின் பிரதிநிதி அமைப்புகள் உம்னோவுடன் கை கோர்த்து இங்கிலாந்துக்கு எதிராக போராட்டத்தில் இறங்கின.

அதன் பின்னர் 1955ம் ஆண்டு நடந்த முதலாவது பெடரல் தேர்தலில் இந்த கூட்டணிக்கு பெரும் வெற்றி கிடைத்தது. மொத்தம் உள்ள 52 தொகுதிகளில் 51 தொகுதிகளை இக்கூட்டணி கைப்பற்றியது.

இக்கூட்டணியின் சார்பில் மலேசியாவின் முதல் முதல்வராக துங்கு அப்துல் ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தக் கூட்டணி மிக வலுவானதாக இருந்ததால், இங்கிலாந்து ஆட்சியாளர்கள், மலேசியாவை தனி நாடாக்க தீர்மானித்தனர்.

இதையடுத்து 1957ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி மலேசியா சுதந்திர நாடாக மாறியது.

மலாய் யூனியனாக இருந்து, பின்னர் மலேசியா தனி நாடாக மாறியபோது சிங்கப்பூரை தன்னுடன் வைத்துக் கொள்ள அது விரும்பவில்லை. இதனால் சிங்கப்பூர் தனியாக பிரித்து விடப்பட்டது.

இதற்கு முக்கியக் காரணம், மலாய் இனத்தவருக்கு நிகராக சீனர்கள் வந்து விடக் கூடாது என்பதே. அப்போதே சீனர்களின் எண்ணிக்கை சிங்கப்பூரையும் சேர்த்து 40 சதவீதமாக இருந்தது. இந்தியர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருந்தது. இதன் காரணமாகவே சிங்கப்பூரை தங்களுடன் வைத்துக் கொள்ள மலேயர்கள் விரும்பவில்லை.

மலேசியாவில் இன்றுள்ள 2.7 கோடி மக்கள் தொகையில் இந்தியர்களின் எண்ணிக்கை 8 சதவீதமாகும். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்து சமுதாயத்தினர்.

இந்தியர்களிலும் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்தான். இவர்கள் அனைவரும் இங்கிலாந்து ஆட்சியாளர்களால், தோட்ட வேலைக்காக மலேசியாவுக்கு அழைத்து வரப்பட்டவர்கள். நூறாண்டுகளுக்கு முன்பு நடந்த கதை இது.

இப்போது எழுந்துள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு மூல வித்தும் இங்கிலாந்து ஆட்சியாளர்களால்தான் தூவப்பட்டது.

மலேசியாவுக்கு தோட்ட வேலைக்காக கூட்டி வரப்பட்ட தமிழர்களும், பிற இந்தியர்களும் அடிமைகள் போலவே நடத்தப்பட்டனர். குறைந்த கூலியைக் கொடுத்து அதிக வேலை வாங்கப்பட்டது.

அன்று எந்த நிலையில் இருந்தார்களோ, அதே நிலை இன்றும் மலேசியாவில் தங்களுக்குத் தொடர்வதால்தான் மலேசிய தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் கொதித்துப் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

மலேசியாவில் காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களில் மூன்றில் இரண்டு மடங்கு பேர் வறுமை, ஏழ்மை, வசதியின்மையில்தான் உழன்று கொண்டிருக்கின்றனர்.

மலாய் இனத்தவர்களின் ஆதிக்கம் முன்பை விட பல மடங்கு அதிகரித்து விட்டது. அவர்களுக்குப் போகத்தான் தமிழர்களுக்கு என்ற நிலை முன்பை விட அதிகமாகவே உள்ளது.

கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் மலாய் இனத்தவர்களுக்குத்தான் முதலுரிமை. தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே கருதப்படுகின்றனர்.

தங்களது இந்த நிலைக்குக் காரணம், தங்களது மூதாதையர்களை மலேசியாவுக்கு அழைத்து வந்த இங்கிலாந்து அரசுதான் காரணம். எனவே இங்கிலாந்து அரசு மலேசிய இந்தியர்களுக்கு 4 டிரில்லியன் டாலர் இழப்பீட்டைத் தர வேண்டும் என்று கோரி லண்டன் கோர்ட்டில் மலேசிய வாழ் இந்தியர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்குக்கு ஆதரவு தெரிவித்தும், இங்கிலாந்து தூதரகத்தில் மனு கொடுக்கவே கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் பெரும் திரளான இந்தியர்கள் கூடி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் அமைதியான முறையில் முடிந்திருக்க வேண்டிய இந்த போராட்டத்தை மலேசிய அரசும், காவல்துறையும் பெரிதுபடுத்தி, வன்முறையில் முடித்து விட்டது.

இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய போராட்ட ஒருங்கிணைப்பாளர்களான உதயகுமார், வாய்த மூர்த்தி, கணபதி ராவ் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் சரியாக இல்லை என்று கூறி கோலாலம்பூர் நீதிமன்றம் இன்று இவர்களை விடுவித்து விட்டது.

மலேசியத் தமிழர்களின் நிலை சொல்லி மாள முடியாத அளவுக்கு மிகவும் மோசமாக உள்ளது. சாதாரண வேலைக்குக் கூட அவர்களால் போக முடியாத அளவுக்கு மலாய் இனத்தவர்களின் ஆதிக்கம் படு மோசமாக உள்ளது.

இந்துக்களுக்கு மத சுதந்திரம் கூட அங்கு கிடையாது. அவர்கள் கட்டிய பல நூறு கோவில்களை மலேசிய அரசு இடித்துத் தள்ளி விட்டது. இதில் 150 ஆண்டு பழமையான மாரியம்மன் கோவிலும் அடக்கம்.

மலாய் இனத்தவர்களின் ஆதிக்கம் நிறைந்த மலேசிய அரசால் கடந்த காலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இந்தியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கிட்டத்தட்ட மலேசிய அரசு ஒரு இனப் படுகொலையை திட்டமிட்டு அரங்கேற்றி வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுவரை அடக்கப்பட்டு வந்த தமிழர்கள், இப்போது தங்களது உரிமைக்காக உரத்து குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். ஆனால் இவையெல்லாம் தேர்தல் நெருங்கி வருவதை கருத்தில் கொண்டு செய்யும் வேலைகள் என போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் மலேசிய பிரதமர் அப்துல்லா அகமது படாவி கூறி வருகிறார்.

ஆனால், வந்தபோது எப்படி இருந்தோமோ அதே நிலையில்தான் இன்றும் இருக்கிறோம். இந்த நாட்டை எங்களது சொந்த நாடாக மாற்றிக் கொண்டு விட்டோம். எங்களுக்கு மலேசியாதான் தாயகம். இந்த தாயகத்தின் வளர்ச்சிக்காக, உயர்வுக்காக உழைத்து உழைத்து ஓடாகப் போய் விட்ட எங்களுக்கு சாதாரண மனித உரிமைகள் கூட கிடையாது என்றால் எப்படி என்று குமுறுகின்றனர் தமிழர்கள்.

மலேசியா வாழ் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் இந்த உரிமைப் போராட்டம் மலேசியாவை மட்டுமல்லாது உலக நாடுகளின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது.

மலாய் இனத்தவர்களுக்கு நிகராக சம உரிமை, கல்வி, வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு கிடைக்கும் வரை எங்களது போராட்டம் நிற்கப் போவதில்லை என்று மலேசிய இந்தியர்கள் அமைப்பு திட்டவட்டமாக கூறியுள்ளதால், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து மட்டத்திலும் அதிகரித்துள்ளது.

http://thatstamil.oneindia.in/art-culture/...-up-291107.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.