Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொல்காப்பியம் 9 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"தொல்காப்பியம் 9 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது"

உலகப் பெருந்தமிழர் நா. மகாலிங்கம் சிறப்புரை

உலகத் தமிழர் பேரமைப்பு-சென்ற 4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ச் சமுதாயத்தை அதனுடைய பண்பாட்டு அடையாளங்களோடு பாதுகாப்பதற்காக உருவான-உண்மையான பேரமைப்பாகச் செயல்பட்டு வருகிறது.

அந்த அமைப்பு தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தொடர்ந்து அதைக் கவனித்து வருகிறேன். காரணம், அதனைத் தொடங்கியவர் எனது அரசியல் நண்பர் திரு. பழ. நெடுமாறன் அவர்கள். காங்கிரஸ் பேரியக்கத்தில் பெருந்ததலைவர் காமராஜர் அவர்களின் தலைமையில் நானும் அவரும் சேர்ந்து பணியாற்றியவர்கள்.

இந்த 5-வது மாநாட்டில் உலகப் பெருந்தமிழர் விருதினை எனக்கு வழங்க உள்ளதாக பழ. நெடுமாறன் அவர்கள் எழுதிய கடிதத்தைப் படித்தபோது மகிழ்ச்சி அடைந்தேன். என் இசைவையும் தெரிவித்தேன்.

இந்த விருதை அறிவித்த பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் எழுதிய அந்தக் கடிதத்தில் இந்த விருதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென சம்பிரதாயப் பூர்வமாகக் கேட்டுக் கொண்டிருக்கலாம்.

அப்படி அவர் கேட்கவில்லை. "அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் எழுதியிருந்தார்.

அன்பு என்ற சொல்லோடு உரிமையையும் சேர்த்து அன்புரிமை என்று வடிவமைத்திருந்த பாங்கு, என்னை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டியது.

அருள் தமிழ்க் கவிதையாக விளங்கிய வள்ளற்பெருமானும் இந்த "உரிமை" என்ற சொல்லினை வித்தியாச மாகக் கையாண்டிருக்கிறார். மனித நேயத் திற்கு அடுத்தக்கட்ட வளர்ச்சியான ஆன்ம நேயத்தைப் பரப்பியவர் வள்ளற்பெருமான்.

எத்துணையும் பேதமுறாது எவ்வு யிரும் தம்முயிர்போல மதிக்கத்தக்க மனப் பான்மை கொண்டவர். அனைத்து ஜீவ ராசிகளையும் பேதம் பாராது நேசித்தவர்.

அவர் பிரகடனம் செய்த ஆன்ம நேய ஒருமைப்பாடு என்பதை, ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்றே சொல்லி வந்தார்.

பழ. நெடுமாறன் "அன்புரிமை" என்று சொன்னதுபோல, வள்ளற்பெருமான் ஒருமைப்பாட்டு உரிமை என்று கூறி யுள்ளதை நினைததுப் பார்க்கிறேன். இந்த உரிமை, உறவை ஏற்படுத்தும் உரிமை.

அன்பு மட்டுமே கொண்டவராக பழ. நெடுமாறன் இருந்திருந்தால், இந்த விருதை தமிழர் அல்லாதவருக்கும் அவர் கொடுக்கலாம். ஆனால், இந்த அன்பிலே உரிமையை அதிகமாகக் கலந்திருப்பதால், தமிழர்களுக்கு மட்டுமே இவ்விருதினை தந்திடச் சித்தமாயிருக்கிறார்.

ஆகவேதான், இந்த விருது தமிழர் - விருது - பெருந்தமிழர் விருது - உலகப் பெருந்தமிழர் விருது எனத் திகழ்கிறது.

அன்புரிமையினால் இன்று அது எனக்கு அளிக்கப்படுகிறது. அச்சிறப்பினை ஏற்றுக்கொள்வதில் நான் பெருமைப் படுகிறேன்.

இன்றைக்கு உலகத்தில் பல நாடு களில் தமிழர்கள் பரவலாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அத்தமிழர்களில் அநேகர் யாழ்ப்பாணத் தமிழர்கள் என்றால் அது மிகையல்ல.

அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூரில் உள்ள தமிழர்களில் கணிசமானவர்கள் இந்தியாவிலிருந்து சென்றவர்கள்.

உலகம் முழுவதும் பரவிய யாழ் தமிழர்கள் இரண்டு நற்காரியங்களைச் செய் திருக்கிறார்கள். பல நாடுகளுக்குத் தமிழைக் கொண்டு சென்றிருக்கிறார்கள். தமிழோடு சேர்த்து சைவ சமயத்தையும் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

இன்றைய கணினி யுகத்தில், முத் தமிழ் மொழி, கணினித் தமிழ் என்ற 4-வது தமிழாக வளர, யாழ் தமிழர்கள் ஆற்றிய பங்கு அதிகம்.

தமிழினத்தின் தொன்மை

தமிழினத்தின் வரலாற்றைப் பற்றி எழுதிய அறிஞர்களெல்லாம் தமிழினத்தின் தொன்மையை அதிகபட்சம் 3000 ஆண்டுக் காலமே பழமையானது எனக் கூறிவந்துள்ளனர். ஆனால், தமிழர் வரலாறு 3000 ஆண்டுகளுக்கும் அதிகமானது என்பதே உண்மை.

பண்டைய தமிழகம் மேலை நாடு களுடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந் ததை வரலாறுகள் நமக்கு அறிவிக்கின்றன. மேல்நாட்டார் தமிழகத்துடன் வாணிபம் செய்து வந்ததைத் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கிடைத்துள்ள ரோமானிய, கிரேக்க தங்க நாணயங்கள் உறுதி செய்கின்றன.

"யவனர் தந்த வினைமாண் நன்கலம்

பொன்னோடு வந்து கறியோடு பெயரும்" (கறி-வாசனைத் திரவியம்)

என்னும் சங்கப் பாடலால் இதனை அறிய முடிகிறது.

யவனர் என்று தமிழ் இலக்கியங் களில் குறிப்பிடப்படுபவர்கள் நம் நாட்டிற் கும், கிரேக்க, ரோமானிய நாடுளுக்கும் இடையே வியாபாரப் பரிவர்த்தனை செய்து வந்தவர்கள்.

இதேபோல், சோனகர் என்போர் அரேபிய வியாபாரிகள், இவர்கள்தான் நம் தமிழ்நாட்டு வாசனைத் திரவியங்களை ஐரோப்பாவிற்கு அனுப்பி விற்பனை செய்து வந்தவர்கள்.

மொழியை வளர்ப்பதற்காகவே சங்கம் வைத்தவர்களாக தமிழர்கள் இருந் துள்ளனர். மொழிக்காகச் சங்கம் வைத்து அதனை வளர்த்த சிறப்பு தமிழுக்கின்றி வேறெந்த மொழிக்கும் இல்லை.

நட்சத்திரங்களைக் கொண்டு காலத்தை நிர்ணயம் செய்யக்கூடிய ஒரு புதிய முறையைப் பழைய ஆவணங் களைக் கொண்டு கண்டுபிடித்திருப்பது பாராட்டத்தக்கது. ஏனென்றால், பழைய கல்வெட்டுக்கள் அழிந்து கொண்டு வருகின்றன.

1979-லிருந்து இந்த 30 ஆண்டு களாகப் பழந்தமிழ் நாட்டைப் பற்றியும், நாகரிகத்தைப் பற்றியும் தொடர்ந்து ஆய்வுகள் செய்து கொண்டிருக்கிறோம். இவற்றை ஆய்வு செய்யும்போது தமிழ் ஆவணங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஆய்வு செய்தால், கி.மு. 3-ஆம் நூற் றாண்டுகளுக்கு மேல் தமிழில் குறிப்புகள் இல்லை.

தொல்காப்பியத்தை கி.மு. 8-ஆம் நூற்றாண்டு என்றுதான் தமிழ்ப் பண்டிதர் கள் சொல்லி வருகிறார்கள். அதாவது அது 2800 ஆண்டுகள்தான் பழமையுடையது என்கிறார்கள்.

வானியல் அறிஞர் சினீவாசராகவன் அவர்களின் கணக்கை வைத்துப் பார்க்கும் போது, தொல்காப்பியம் கி.மு. 7000 என்பது தெளிவாகிறது. ஆனால் தமிழிலுள்ள இன்றைய ஆவணங்களை வைத்துப் பார்த்தால் கி.மு. 800 ஆண்டுகளுக்கு மேல் போக இடமில்லை.

ஏனென்றால் ரிக் வேதத்தை 8000 கி.மு. என்று திலகர் நிறுவியிருக்கிறார். அதுதான் அதிகபட்ச பழமை.

தொல்காப்பியத்தை கி.மு. 7 ஆயிரம் என்று 8 ஆண்டுகளாகச் சொல்லி வருகிறேன். கி.மு. 7 ஆயிரம் என்றால் இன்றைக்கு 9 ஆயிரம் ஆண்டுகள் பழமையுடையது என்கிறேன்.

9 ஆயிரம் ஆண்டு எப்படி?

இப்போது தமிழ் வருடத்தின் ஆரம்பம் சித்திரை என இருக்கிறது. ஆனால், தொல்காப்பிய காலத்தில் வருட ஆரம்பமாக ஆவணி சொல்லப்படுகிறது. ஆயிரம் வருஷத்திற்கு ஒருமுறை வருட ஆரம்பமே மாறுகின்றது. ஆவணியில் ஆரம்பித்த வருடம் 1000 வருடங்களுக்குப் பிறகு புரட்டாசியில் ஆரம்பிக்கிறது.

பின்னர் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி, சித்திரை என்று 9 மாதங்களும் வருஷ ஆரம்பங் களாக மாறுவதால், ஒன்பது ஆயிரம் வருடங்கள் என ஆகின்றன.

இந்த 9 ஆயிரம் வருடத்தில் இப்போதுள்ள கி.பி. 2 ஆயிரம் வருடம் போக, மீதி 7 ஆயிரம் வருடங்களை 7 ஆயிரம் (கி.மு.) என்று நிர்ணயித்தால், அதுதான் தொல்காப்பியம் தோன்றிய காலம் எனக் கணக்கிடலாம்.

தமிழக அரசியல் சார்பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ராமதுரை என்பவர், "வானியல் மூலம் வரலாறு காண் போம்" என்ற ஒரு சிறு நூலை எழுதி யுள்ளார். அந்நூலில் அவருடைய இந்த யுகக் கணக்கு ஆய்வுகள் சிந்திக்கத் தக்கனவாக உள்ளன.

துடிசைக்கிழார் அ. சிதம்பரனார் என்ற மற்றுமொரு அறிஞர் நமது பழமையைப் பற்றி ஆழமாக ஆராய்ந் துள்ளார். சொந்த ஊர் கோவைக்குப் பக்கத்தில் உள்ள துடியலூர். அதன் பண்டைப் பெயர் "துடிசை".

முச்சங்கங்களுக்கு முன்பே கடல் கொண்ட தென்னாட்டில் இருந்த தமிழ்ச் சங்கங்களைப் பற்றி துடிசைக்கிழார் சான்று களுடன் நிறுவியுள்ளார். அவர் கருத்துப் படி முதற்சங்கத்திலிருந்து மொத்தம் 11 சங்கங்கள் இருந்துள்ளன என்கிறார்.

இறையனார் களவியல் என்ற இலக்கண நூலுக்கு உரை கண்டவர் நக்கீரனார். அதில் மூன்று தமிழ்ச் சங்கங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அதில் முதல் தமிழ்ச் சங்கம் கி.மு. 30,000 முதல் கி.மு. 16,500 வரை - 13,500 ஆண்டு கள் இருந்ததாக துடிசை கிழார் தனது தமிழ்ச் சங்கங்களின் வரலாறு என்ற நூலில் கூறியுள்ளார்.

இவ்வளவு நெடிய வரலாற்றையும் சிறப்புகளையும் கொண்ட தமிழ் மொழியை அறியாமல், குறுகிய நோக் கோடு ஆய்வுகள் செய்வதால்தான், தமிழின் பெருமை தமிழராலேயே அறியப்படாமல் போயிற்று.

மொகஞ்சதாரோ எழுத்துக்களை குஜராத்தில் இருந்த எஸ்.ஆர்.ராவ், சம்ஸ் கிருதமாக இருக்கலாம் என்று கூறியதால், அது சம்ஸ்கிருதமா, தமிழா என்று பல்வேறு விவாதங்கள் எழுந்தன.

அவை தமிழ் எழுத்துக்கள்தான் என்று தொல்லியல் துறைத் தலைவராக இருந்த டாக்டர் மதிவாணன் நிர்ணயம் செய்தார்.

அதன் காரணமாக அவை திராவிட நாகரிக எழுத்து என்றும், திராவிட மொழியாகத்தான் அது இருக்க வேண்டும் என்றும் உலக அறிஞர்கள் பலர் கூறிவந்ததை டாக்டர் மதிவாணனின் ஆய்வு மெய்ப்பிக்குமாறு அமைந்துள்ளது.

மொகஞ்சதோரோ எழுத்துக்களை வைத்துக்கொண்டு கணக்குப் பார்த்தோ மானால், பாரதத்திலிருந்து பிரிந்துபோன பாகிஸ்தான்கூட அன்றைய விசாலத் தமிழ்நாட்டில்தான் இருந்திருக்கிறது. குஜராத்தும் இருந்திருக்கின்றது.

டாக்டர் மதிவாணன் இமாலயம், மத்தியப் பிரதேசம் இப்படி இந்தியா முழு வதையும் சுற்றிப்பார்த்தவர். எல்லா தமிழ் மாநிலங்களிலும் மொகஞ்சதாரோ எழுத் துக்கள் இருந்திருக்கின்றன என்கிறார்.

மத்தியப் பிரதேசத்துப் பெண்கள் மொகஞ்சதாரோ எழுத்துக்களைத் தங்கள் நெற்றியில் பொட்டாக வைத்துக் கொள் கின்றனர். சில இடங்களில் வீடுகளுக்கு அலங்காரம் செய்வதுகூட இந்த எழுத்துக் களாக இருக்கின்றன. தமிழ்நாட்டுக் கல் வெட்டுகளிலும் இந்த எழுத்துக்களைக் கண்டுபிடித்துள்ளனர். பல தாழிகளில் இந்த எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக் கின்றன.

தொல்காப்பியரும், நோவாம் சாம்ஸ்கியும்

ஒலியன்களை 33 என வரையறுத் துத் தமிழ் எழுத்துக்களை சுமார் 9 ஆயிரம் ஆண்டுளுக்கு முன்பு தொல்காப்பியர் அமைத்துள்ளார். மொழியியல் மேதை சாம்ஸ்கி அவர்களும் 33 ஒலியன்கள் (டட்ர்ய்ங்ம்ங்) கொண்ட மொழிதான் முழுமையான மொழி என்று இன்றைக்கு தனது ஆய்வின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

மொழியியல் மேதை சாம்ஸ்கி கண்ட அறிவியல் உண்மையை, தொல்காப்பியர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்தார் என்பதை அறியும்போது நமக்கு வியப்பாக இருக்கிறது.

இத்தகைய பண்டைய சிறப்பைப் பெற்றுள்ள மொழி, தமிழ் மொழி என்பதில் நாம் பெருமை கொள்கிறோம்.

தமிழ் மொழியில் இலக்கிய ஞானம் உள்ள பலருக்கு அதே அளவுக்கு ஏனோ இசையில் ஞானம் இல்லை. இசையில் நல்ல ஞானம் உள்ள வித்வான்களுக்குப் போது மான அளவுக்கு தமிழ் மொழியில் ஞான மில்லை. இதுதான் முன்பிருந்த முரண் பாடான நிலை.

தமிழிலுள்ள இசைப்பாடல்களை அதற்குரிய இசையமைப்புகளுடன் இசை வித்வான்கள் பலர் இசையரங்குகளில் பாடுவதில்லை. எழுத்துப் பிழைகளுடனும், சொற் பிழைகளுடனும் பாடுகிறார்கள்.

தமிழிசை மிகவும் உயர்வான இசை, தமிழிசை மட்டுமல்ல, தாய்மொழியில் பாடி அனுபவிக்கும் ஒவ்வொரு இசையுமே உயர்வான இசைதான்.

நமது நாட்டுப்புறப் பாடல்கள், தெம்மாங்குப் பாட்டுகள் எல்லாமே தமிழிசையின் ஆதிக்கூறுகள். இதில் சாகித்யமான சொற்கள் மூலமாகப் பாட்டு இசைக்கப்படுகிறது. சுரத்துக்கு இதில் அவசியம் இல்லை. இசைக்கு தாளம் அமைக்கப்படுகிறபோது, இரண்டையும் இணைக்கும் பாலமாக சுரம் இடம் பெறுகிறது. இந்தச் சுரங்கள் வித்வான் களுக்குத்தான் தேவையே தவிர, இசை ரசிகர்களுக்கு அல்ல.

முத்தமிழில் ஒன்றான தமிழிசையும் வெகுகாலம் மங்கிக் கிடந்தது. தற்போதுதான் தமிழிசைக்கான மறுமலர்ச்சி தொடங்கி யுள்ளது. தமிழிசையைத் தடுத்து, பிற மொழி இசையைத் தமிழ்நாட்டில் புகுத்தும் போக்கு இனிமேல் கொஞ்சம் கொஞ்சமாக மந்தமடையவே செய்யும்.

தமிழகம் தன் பண்டைய தமிழி சையை அதன் பண்ணிசைக் கூறுகளோடு பாதுகாக்கும் முயற்சியில் மகத்தான வெற்றி பெறும் என்பதில் எவருக்கும் இனி ஐயமேற்படத் தேவையில்லை.

உங்களுடைய தலையாய கடமை, தமிழிசையை ஆதரித்துப் பரப்ப வேண்டும். இளம் தமிழ் இசைவாணர்கள் இப்போது அதிக அளவில் தயாராகி வருகிறார்கள். இதே அளவுக்குத் தமிழிசைச் சுவைஞர் திரண்டு வந்து தமிழிசையை ஆதரிக்க வேண்டும்.

-தென் செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின் மொழிச்சிறப்பை சீரழித்து தமிழர்களைக் காட்டுமிராண்டிகள் என்று வர்ணிக்க..தொல்காப்பியரையே ஒரு சில தமிழினத் துரோகிகள் துரோகி என்று கூறுகின்ற நிலையின் மத்தியில் தொல்காப்பியமும் தமிழின் இருப்பும் பற்றிய இந்த ஆக்கம் சிறப்பானதாக உள்ளது. பல விடயங்களை அறியக் கூடியதாக அமைந்திருந்தது. நன்றி கந்தப்ஸ்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழின் மொழிச்சிறப்பை சீரழித்து தமிழர்களைக் காட்டுமிராண்டிகள் என்று வர்ணிக்க..தொல்காப்பியரையே ஒரு சில தமிழினத் துரோகிகள் துரோகி என்று கூறுகின்ற நிலையின் மத்தியில் தொல்காப்பியமும் தமிழின் இருப்பும் பற்றிய இந்த ஆக்கம் சிறப்பானதாக உள்ளது. பல விடயங்களை அறியக் கூடியதாக அமைந்திருந்தது. நன்றி கந்தப்ஸ்.

பலமானிலங்களில் தத்தம் தாய்மொழியோடு இந்தி கலந்து அதன் செல்வாக்கே மிஞ்சி இருக்கின்றது.

ஒவ்வொரு பத்து சொற்களிலும் எட்டு இந்தி சொல் தம் தாய்மொழிச்சொல் என்று நினைத்துக் கொண்டு சொல்வார்கள். இது உங்கள் நண்பர்களின் இந்திவிசுவாசத்தின் சாதனைகளில் ஒன்றே. அது தமிழிழ் நாட்டில் பிழைக்க முடியாது அவதிப்படும் வருத்தம் உங்கள் வரைக்கும் உண்டா?

தமிழ் மொழியா அதில் எட்டு எழுத்துக்களைத்தவிர மீதி அனைத்தும் வடமொழியில் இருந்து கடன் பட்டதே அதற்க்கு என்ன பெருமை உண்டு என்று கேட்ட பார்பான் கூட்டதையா தலையில் வைத்து கொண்டாடுகின்றீர்கள்.

Edited by தேவன்

வானியல் அறிஞர் சினீவாசராகவன் அவர்களின் கணக்கை வைத்துப் பார்க்கும் போது, தொல்காப்பியம் கி.மு. 7000 என்பது தெளிவாகிறது.

ஏனென்றால் ரிக் வேதத்தை 8000 கி.மு. என்று திலகர் நிறுவியிருக்கிறார். அதுதான் அதிகபட்ச பழமை.

தொல்காப்பியத்தை கி.மு. 7 ஆயிரம் என்று 8 ஆண்டுகளாகச் சொல்லி வருகிறேன். கி.மு. 7 ஆயிரம் என்றால் இன்றைக்கு 9 ஆயிரம் ஆண்டுகள் பழமையுடையது என்கிறேன்.

அதில் முதல் தமிழ்ச் சங்கம் கி.மு. 30,000 முதல் கி.மு. 16,500 வரை - 13,500 ஆண்டு கள் இருந்ததாக துடிசை கிழார் தனது தமிழ்ச் சங்கங்களின் வரலாறு என்ற நூலில் கூறியுள்ளார்.

:wub:

இவ்வாறான கருத்துக்களையும் ஆராச்சிகளையும் நாங்கள் மட்டுமே வாசித்துப் பெருமைப்பட முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

தொல்காப்பியன் ஆரியக் கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்து விட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரிய கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் வகையில், தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.

- ராமசாமி எழுதிய "தமிழும் தமிழரும்' என்ற நூலிலிருந்து.

தமிழ் தோன்றிய 3000 - 4000 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்த புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால் இது வரை தமிழனுக்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்.

தொடுப்பு: http://www.yarl.com/forum3/index.php?showt...t=0&start=0

பொள்ளாச்சி மகாலிங்கத்திற்கு உலகப் பெருந்தமிழர் விருதை பழ நெடுமாறன் அவர்கள் வழங்கியது பல இடங்களில் கண்டனத்தை கிளப்பியுள்ளது.

சுபவீ அவர்களின் கருஞ்சட்டைத் தமிழர் இதழில் மகாலிங்கத்திற்கு விருது கொடுத்தது கண்டிக்கப்பட்டிருக்கிறது. பொள்ளாச்சி மகாலிங்கத்திற்கு 'உலகபெருந்தமிழர் விருது' வழங்கியிருப்பதைச் கண்டித்து அரங்கிலிருந்து ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் நீலவேந்தன் மற்றும் பெரியார்திராவிடர்கழகப் பொதுச்செயலாளர் கோவை.கு.ராமகிருட்டிணன் ஆகியோர் வெளிநடப்புச் செய்திருக்கிறார்கள்.

பொள்ளாச்சி மகாலிங்கம் தமிழிற்கு எதிரான கருத்தைக் கொண்டிருப்பவர்.

அவர் தொல்காப்பியத்தை 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்று சொன்னதே ஒரு உள்நோக்கத்தோடுதான். அப்படியே ரிக் வேதம் 10ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்லிவிட்டார்.

இது எத்தனை பேருக்குப் புரிகிறது?

மனிதன் ஒழுங்காக எழுதத்தொடங்கிய காலமே ஒரு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்குள்தான் வருகிறது.

தொல்காப்பியத்தை விட ரிக் வேதம் பழமையானது என்று சொல்வதற்காக, தொல்காப்பியத்தை 9ஆயிரம் ஆண்டு பழமையானது என்று ஆதாரமற்ற ஒரு செய்தியை சொல்லி, அதனை ஏற்க வைத்து, அப்படியே ரிக் வேதம் 10ஆயிரம் என்று அடித்துவிட்டு போயிருக்கிறார்.

இதில் சிலருக்கு பெருமை வேறு.. தமிழன் உருப்பட்ட மாதிரித்தான்...

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளதிலேயே இலகுவான காரியம் எங்கள் இலக்கியங்களுக்கு வயது நிர்ணயிப்பது தான். பாருங்கள் யார் யாரோ சொல்லிக் கைதட்டலும் விருதும் வாங்கிக் கொண்டு போகிறார்கள். சொன்னவருக்கு பூகோளத்தில் மனித சரித்திரம் எப்போது ஆரம்பித்தது என்ற அறிவே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் ஒழுங்காக எழுதத்தொடங்கிய காலமே ஒரு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்குள்தான் வருகிறது.

மேலே சபேசன் என்பவர் வழங்கிய தகவல் தவறானது.

மனிதனில் நாம் அடங்கும் Homo sapiens பிரிவு மனிதன் மூளையாற்றலையும் எழுத்தாற்றலையும் சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்னரே பெற்றிருக்கக் கூடும் எங்கிறது ஆய்வுகள். இருப்பினும் எழுதுருக்கள் பற்றிய ஆய்வில் இதுவரை கிட்டத்தட்ட கிமு 3100 ஆண்டுகளுக்கு முந்தைய மொசம்பத்தேனிய நாகரிக எழுத்துக்களே பழமையானது என்று கூறப்படுகிறது.

40,000 years ago homo sapiens must have been capable of performing the mental skills that are involved in speech and even writing.

c.100,000-40,000 B.C.

Modern man evolves physiological capability of speech.

c.30,000 B.C.

Primitive cave paintings appear in Europe.

c.20,000-6500 B.C.

Notches on animal bones, a forerunner of writing in Africa and elsewhere, indicate beginnings of record keeping.

c.3500-3000 B.C.

Earliest known pictograph writing appears in Sumer.

c.3000 B.C.

Egyptians use hieroglyphic writing.

c.2800-2600 B.C.

The Sumerian writing system becomes cuneiform.

c.2500 B.C.

Cuneiform begins to spread throughout the Near East.

c.2300 B.C.

Indus Valley people use pictorial symbols .

c.2000 B.C.

Sequential pictographic inscriptions, considered a true system of writing, appear on clay tablets in Crete.

c.1500 B.C.

Hittites invent their own form of hieroglyphic writing; Chinese develop ideographs.

c.1400 B.C.

People in the trading port of Ugarit devise an alphabet.

c.1100-900 B.C.

Phoenicians spread precursor of modern alphabet across the sea to Greece.

c.800 B.C.

Greeks develop concept of modern alphabet, with vowels.

http://history-world.org/a_history_of_writ...in_human_ci.htm

நான் சரியாகத்தான் சொல்லியிருக்கிறேன். மனிதன் ஒழுங்காக எழுதத் தொடங்கிய காலம் ஒரு ஐந்தாயிரம் ஆண்டுக்குள்தான் வருகின்றது.

அதற்கு முன் மனிதன் எழுதியவைகள் ஒரு ஆரம்பகட்ட முயற்சிதான். படங்களாகவே ஓரிரு எழுத்துக்களை எழுதினான். ஓரளவு கோர்வையாக கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துக்கள் சுமேரியர்களுடையது.

நெடுக்காலபோவானே "கிமு 3100 ஆண்டுகளுக்கு முந்தைய மொசம்பத்தேனிய நாகரிக எழுத்துக்களே பழமையானது என்று கூறப்படுகிறது" என்று சொல்லியிருக்கிறார்.

கிமு 3100 என்றால் இன்றிலிருந்து 5100 ஆண்டுகள்தானே வருகிறது. நான் ஒன்றும் தவறாக சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சரியாகத்தான் சொல்லியிருக்கிறேன். மனிதன் ஒழுங்காக எழுதத் தொடங்கிய காலம் ஒரு ஐந்தாயிரம் ஆண்டுக்குள்தான் வருகின்றது.

அதற்கு முன் மனிதன் எழுதியவைகள் ஒரு ஆரம்பகட்ட முயற்சிதான். படங்களாகவே ஓரிரு எழுத்துக்களை எழுதினான். ஓரளவு கோர்வையாக கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துக்கள் சுமேரியர்களுடையது.

நெடுக்காலபோவானே "கிமு 3100 ஆண்டுகளுக்கு முந்தைய மொசம்பத்தேனிய நாகரிக எழுத்துக்களே பழமையானது என்று கூறப்படுகிறது" என்று சொல்லியிருக்கிறார்.

கிமு 3100 என்றால் இன்றிலிருந்து 5100 ஆண்டுகள்தானே வருகிறது. நான் ஒன்றும் தவறாக சொல்லவில்லை.

உங்கள் கருத்தில் தவறு இருக்கிறது. மனிதன் தகவல்களை சேகரிக்கத்தக்க வகையில் எழுத ஆரம்பித்து கிட்டத்தட்ட 20,000 தொட்டகம் 6,500 ஆண்டுகள் வரை இருந்திருக்கிறது. எழுத்துரு கண்டறிந்து எழுதியதுதான் கிமு 3100 என்பதாக அமைகிறது. தமிழ் மொழி கூட முன்னர் படங்கள் வடிவில் இருந்ததை, நான் ஒரு கல்வெட்டு ஒன்றில் காட்டி இருந்ததை அவதானித்திருக்கிறேன்.

c.20,000-6500 B.C.

Notches on animal bones, a forerunner of writing in Africa and elsewhere, indicate beginnings of record keeping.

ஒழுங்கா எழுதியது என்பதற்கும் எழுத்துரு கொண்டு எழுதியது என்பதற்கும் இடையில் தெளிவான வேறுபாடு உண்டு என்பதை நீங்கள் மறுக்க முடியாது. படங்கள் கொண்டும் மனிதன் ஒழுங்கா எழுதி கருத்தைப் பதிந்திருக்கிறான். எழுத்திரு தோன்ற முதலே..! ஆக உங்கட ஒழுங்கா என்பது உங்களின் மயக்க நிலையின் வெளிப்பாடு என்பதால் அது தவறான புரிதலுக்கு வகை செய்யும் என்ற வகையில் தவறென்று தெளிவுறச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..!

அதுமட்டுமன்றி தமிழர்களின் வியாபாரம் ரோமன் சாம்பிராச்சியம் வரை பரந்திருந்தது என்பதற்கு அண்மையில் ரோம சாம்பிராச்சியப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துருவில் எழுதப்பட்ட சுவடி ஒன்றும் 1995 இல் கண்டெடுக்கப்பட்ட இன்னொரு சுவடியும் ஆதாரமாக அமைந்துள்ளன. இது தமிழர்களின் இராச்சியம் என்பது பரந்து செழிப்பாக உலகில் இருந்திருக்கிறது என்பதை எடுத்துச் சொல்கிறது. தமிழுக்கு என்று இன்னும் இனங்காணப்படாத பல தொன்மைகள் என்றிருக்கின்றன. தமிழ் மொழியை திராவிடத்துக்குள் கலந்தடித்து அதன் தனிச் சிறப்பை மகிமையை இந்திய தேசியம் சீரழிக்க முனைவதால், தமிழ் மொழி ஆராய்வுகளுக்கு அப்பால் சிறுகச் சிறுக அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இடையில் சிலர் தமிழின் தொன்மை குறித்து சந்தேகம் வேற கிளப்புகிறார். இவர்கள் தாங்களாகவும் ஒரு ஆய்வைச் செய்யார்கள். பிரேரிக்கப்படும் கருத்துக்களையும் ஆராய்ந்து ஆதாரங்களோடு அணுகமாட்டார்கள். மொழிப்பழிப்பு என்பதை பார்பர்னியத்துள் கலந்தடிக்க மட்டும் தெரிகிறது..!

Tamil Script Found In Ancient Roman Port City In Egypt

Date: 21 November, 2007 02:01

Very interesting...

CHENNAI: A broken storage jar with inscriptions in Tamil Brahmi script has been excavated at Quseir-al-Qadim, an ancient port with a Roman settlement on the Red Sea coast of Egypt. This Tamil Brahmi script has been dated to first century B.C. One expert described this as an "exciting discovery."

The same inscription is incised twice on the opposite sides of the jar. The inscription reads paanai oRi, that is, pot (suspended) in a rope net.

An archaeological team belonging to the University of Southampton in the U.K., comprising Prof. D. Peacock and Dr. L. Blue, who recently re-opened excavations at Quseir-al-Qadim in Egypt, discovered a fragmentary pottery vessel with inscriptions.

Dr. Roberta Tomber, a pottery specialist at the British Museum, London, identified the fragmentary vessel as a storage jar made in India.

Iravatham Mahadevan, a specialist in Tamil epigraphy, has confirmed that the inscription on the jar is in Tamil written in the Tamil Brahmi script of about first century B.C.

In deciphering the inscription, he has had the benefit of expert advice from Prof. Y. Subbarayalu of the French Institute of Pondicherry, Prof. K. Rajan of Central University, Puducherry and Prof. V. Selvakumar, Tamil University, Thanjavur.

According to Mr. Mahadevan, the inscription is quite legible and reads: paanai oRi, that is, ‘pot (suspended in) a rope net.’ The Tamil word uRi, which means rope network to suspend pots has the cognate oRi in Parji, a central Dravidian language, Mr. Mahadevan said. Still nearer, Kannada has oTTi, probably from an earlier oRRi with the same meaning.

The word occurring in the pottery inscription found at Quseir-al-Qadim can also be read as o®Ri as Tamil Brahmi inscriptions generally avoid doubling of consonants.

Earlier excavations at this site about 30 years ago yielded two pottery inscriptions in Tamil Brahmi belonging to the first century A.D.

Another Tamil Brahmi pottery inscription of the same period was found in 1995 at Berenike, also a Roman settlement, on the Red Sea coast of Egypt, Mr. Mahadevan said.

These discoveries provided material evidence to corroborate the literary accounts by classical Western authors and the Tamil Sangam poets about the flourishing trade between the Tamil country and Rome (via the Red Sea ports) in the early centuries A.D.

_____

http://www.cricketnetwork.co.uk/boards/rea...htm?608,8580846 :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

தொல்காப்பியம் தமிழ் இலக்கணத்தையும், மக்களின் வாழ்க்கை முறையையும், சில வரலாற்றுச் சம்பவங்களையும் சொல்கின்ற ஒரு பெரும் படைப்பு. அதை 9ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எழுத்தின் நிலையில் உருவாக்கியருக்க வாய்ப்பே இல்லை. ரிக் வேதமும் அப்படித்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.