Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவசர விளம்பரம் ஏற்படுத்திய பாதிப்பு!

Featured Replies

கல்விச் சமூகம் என்று பெருமை கொள்கின்ற தமிழர்களில் பலர் புலம்பெயர்ந்து வருகின்ற போது அவர்களினுடைய படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வரவேண்டியிருந்தது.

கல்வி மீது பெரும் பற்று இருந்தும், அதை தொடர முடியவில்லையே என்ற வருத்தத்தோடு இருக்கின்ற பலரை புலம்பெயர்ந்த நாடுகளில் காண முடியும். இவர்கள் தமது கல்வியை ஏதாவது வகையில் தொடர முடியாதா என்று ஏக்கத்தோடு ஒரு வாய்ப்பினை எதிர்நோக்கியிருப்பார்கள். இவர்களோடு தமிழ் மொழியின் மீது பற்றுள்ளவர்களும் ஏதாவது வகையில் மேற்படிப்பை தொடர விரும்புவதை காணக் கூடியதாக இருக்கும்.

இவர்களுக்காக பல்கலைக் கழகப் பட்டப் படிப்புக்களை புலம்பெயர்நாடுகளில் நடைமுறைப்படுத்துவதற்கு பல நிறுவனங்கள் முயன்றன, முயன்றுவருகின்றன. ஆனால் அவைகளில் பெரும்பாலான முயற்சிகள் தோல்விகளையே தழுவின.

இலங்கையில் இருக்கின்ற ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களுக்கு தொலைதூரக் கல்வி மூலம் பட்டப்படிப்பிற்கான வாய்ப்பை வழங்குமா என்று சிலரால் முயற்சித்துப் பார்க்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைகழகத்துடன் கூட இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால் இதில் ஒரு பெரிய சிக்கல் இருக்கின்றது. பல்கலைக் கழகங்களிற்குப் பொறுப்பாக துணைவேந்தர்கள் இருப்பார்கள். இப்படிப் பொறுப்பாக இருப்பவர்களை வேந்தர்கள் என்று சொல்லாமல், துணைவேந்தர்கள் என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. பொதுவாக ஒரு நாட்டின் பல்கலைக் கழகத்தின் வேந்தராக அந்த நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே இருப்பார். அதேவேளை ஒவ்வொரு பல்கலைக் கழகத்திற்கும் "வேந்தர்" என்ற பெயரில் ஒருவர் அதிகாரமற்ற "கௌரவ" வேந்தராக இருப்பார். அவர் உண்மையான வேந்தரை பிரதிநிதித்துவப் படுத்துகிறார் என்பதுதான் அதன் பொருள். இலங்கையைப் பொறுத்தவரை அங்குள்ள பல்கலைக் கழகங்களின் அதிகாரம் மிக்க வேந்தராக இலங்கை ஜனாதிபதியே இருக்கின்றார்.

ஆகவே புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு தொலைதூரக் கல்வியை வழங்குவதற்கு பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் யாராவது சம்மதம் தெரிவித்தாலும் கூட, இலங்கையின் ஜனாதிபதி அதற்கு தடை போட்டுவிடுவார். தமிழர்களின் கல்வியை அழிப்பதற்கு அன்றிலிருந்து இன்றுவரை முழுமூச்சாக பாடுபட்டு வரும் சிங்களப் பேரினவாத அரசின் ஜனாதிபதி புலம்பெயர்ந்த வாழும் தமிழர்களுக்கு மட்டும் பல்கலைக் கழகப் படிப்பை வழங்க சம்மதிப்பார் என்று எதிர்பார்க்கவும் முடியாது.

இலங்கைப் பல்கலைக் கழகங்கள் புலம்பெயர்ந்த நாடுகளிற்கு தொலைதூரக் கல்வியை வழங்குவதற்கு பேரினவாதம் தடை போட்டு நிற்கின்ற நிலையில், சிலர் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களை அணுகினர். அங்கு அவர்கள் வேறுவிதமான சிக்கல்களை சந்தித்தார்கள்.

ஈழத் தமிழர்கள் என்றவுடனேயே தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் தயங்கின. அத்துடன் இந்தியாவில் கல்வித்துறை ஏதோ ஒரு வகையில் பார்ப்பனியத்தின் கையில்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் இருந்தாலும், பல பல்கலைக்கழகங்களில் பார்ப்பனிய சிந்தனை மிக்கவர்கள் அதிகாரமையத்தில் அமர்ந்திருக்கிறார்கள். இவ்வாறு வெளிப்படையாக கண்ணுக்குத் தெரியாத சில தடைகள் வந்தன.

ஆனால் இவைகளை எல்லாம் தாண்டி பாரிஸில் வசிக்கும் பேராசிரியர் சச்சிதானந்தம் அவர்கள் ஐரோப்பாவிற்கான தொலைதூரக் கல்வி ஒப்பந்தத்தை 2001ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் செய்தார். இதை அவரால் சாதிக்க முடிந்ததற்கு அவருடைய கல்வித்தகமை ஒரு முக்கிய காரணமாக இருந்தது. பேராசிரியர் சச்திதானந்தம் அவர்களின் "சர்வதேச உயர்கல்வி நிறுவனத்தின்" ஊடாக பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி, சுவிஸ், நோர்வே போன்ற நாடுகளைச் சேர்ந்த பலர் பட்டப் படிப்புக்களை மேற்கொண்டு வருகின்றார்கள். பலர் ஏற்கனவே பட்டம் பெற்றிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் ஓரிரு துறைகளில் மட்டும் பட்டப்படிப்பிற்கான வாய்ப்புக்களை வழங்கியிருந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகம், பின்பு சிறப்பான செயற்பாட்டின் காரணமாக தமிழ், ஆங்கிலம், கணினியியல், வங்கியியல், பொருளியல், சந்தையியல், வணிகவியல், கணக்கியல், நிதியியல், சமூகவியல், அரசியல், சட்டவியல், நூலகவியல், கணிதவியல் என்று பல துறைகளில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியது.

உலகப் புகழும், அங்கீகாரமும் பெற்ற அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் ஊடாக இத்தனை துறைகளில் பட்டப்படிப்புக்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்பை ஐரோப்பாவில் வாழும் தமிழ்மக்கள் பெற்றிருப்பது மிக மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகவே அனைவராலும் கருதப்படுகிறது.

இந்த வேளையில் ஐரோப்பாவில் இருந்து வெளிவரும் சில முக்கிய பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் வெளிவந்த ஒரு விளம்பரம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. ஐரோப்பாவில் சிறுவர்களுக்கான தாய்மொழிக் கல்வியை கற்பிக்கும் பாடசாலைகளை நடத்தி வரும் ஒரு பெரிய நிறுவனம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து தமிழிலக்கியப் பட்டப்படிப்புக்களை ஐரோப்பாவில் மேற்கொள்ள உள்ளதாக அந்த விளம்பரங்கள் தெரிவித்தன.

விளம்பரங்கள் வெளியான கையோடு குறிப்பிட்ட நிறுவனத்தை சேர்ந்தவர்களால் அதற்கான விண்ணப்பப்படிவங்களும் வினியோகிக்கப்பட்டன. சிலரிடம் விண்ணப்பக் கட்டணங்களும் அறவிடப்பட்டன. குறிப்பிட்ட நிறுவனம் தமிழிலக்கியப் பட்டப்படிப்பை ஐரோப்பாவில் நடத்த உள்ளது என்ற செய்தி சிலரிடம் மகிழ்ச்சியை தோற்றுவித்தது.

ஐரோப்பாவில் சிறுவர்களுக்கு தாய்மொழிக் கல்வியை புகட்டும் ஆசிரியர்கள் பலர் போதிய கல்வித் தகமை இன்றி இருக்கிறார்கள். கல்வித் தகமை உள்ள பலர் சமூகப் பொறுப்புணர்வு இன்றி ஒதுங்கியிருப்பதன் காரணமாக, இருப்பவர்களைக் கொண்டு சிறுவர்களுக்கு தாய்மொழி அறிவை புகட்ட வேண்டிய கட்டாயம் புலம்பெயர் நாடுகளில் உண்டு. ஆகவே குறிப்பிட்ட நிறுவனம் தமிழிலக்கிய படிப்பை ஐரோப்பாவில் நடத்தும் பொழுது, இந்த ஆசிரியர்கள் தமிழிலக்கியப் படிப்பை மேற்கொண்டு தமிழில் சிறந்த தேர்ச்சி பெறுவார்கள் என்ற நம்பிக்கையில், இந்தச் செய்தி இவர்களால் வரவேற்கப்பட்டது.

ஆனால் ஏற்கனவே சர்வதேச உயர்கல்வி நிறுவனத்துடன் இணைந்து அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தொலைதூரக் கல்வியை வழங்கிவரும் நிலையில், இந்த விளம்பரம் உண்மையானதுதானா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டது. அவர்களுடைய சந்தேகத்தை மேலும் அதிகரிப்பது போன்று, விளம்பரத்தில் போடப்பட்டிருந்த தொடர்பு எண்களில் யாரையும் தொடர்பு கொள்ள முடியாது இருந்தது.

இந்த நேரத்தில் ஐரோப்பாவில் தொலைதூரக் கல்விக்கான ஒப்பந்தத்தை பேராசிரியர் சச்சிதானந்தன் அவர்களுடைய சர்வதேச உயர்கல்வி நிறுவனத்துடன் மட்டுமே செய்துள்ளதாகவும், ஊடகங்களில் வந்த விளம்பரம் தவறானது என்று அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அறிவித்தது.

இந்தக் குழப்பத்தின் ஆரம்பம் கனடாவில் தொடங்குகின்றது. கனடாவில் உள்ள ஒருவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் தமிழிலக்கியம் மற்றும் இசை ஆகிய இரண்டு துறைகளில் தொலைதூரக் கல்வியை மேற்கொள்வதற்கான பத்து வருட ஒப்பந்தத்தை செய்திருந்தார். ஆனால் அவருக்கு கனடாவில் மட்டுமே குறிப்பிட்ட துறைகளில் தொலைதூரக் கல்வியை ஏற்பாடு செய்வதற்கான அனுமதியை அண்ணாமலை பல்கலைக்கழகம் வழங்கியிருந்தது.

ஆனால் அவர் இதைக் கவனத்தில் எடுத்ததாக தெரியவில்லை. இதுவே "கனடா வளாகம்" குறிப்பிட்ட நிறுவனத்துடன் இணைந்து ஐரோப்பாவில் தமிழிலிக்கிய பட்டப்படிப்பை செய்ய உள்ளதாக விளம்பரம் வெளிவருவதற்கு காரணமாக இருந்தது.

இந்த விளம்பரம் தவறானது என்றும், ஐரோப்பாவில் "சர்வதேச உயர் கல்வி நிறுவனம்" மட்டுமே அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் ஊடாக தொலைதூரக் கல்வியை நடத்த முடியும் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தவறான விளம்பரம் தொடர்ந்தும் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தது.

இதனால் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. கனடாவைச் சேர்ந்தவருடன் போட்டிருந்த பத்து வருட ஒப்பந்தத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உடனடியாக ரத்து செய்தது. தொடர்ந்து தமது பெயரைப் பாவித்து தவறான விளம்பரம் செய்தால், சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குப் போட நேரிடும் என்ற எச்சரிக்கையையும் பல்கலைக் கழகம் விடுத்தது.

சிலருடைய அர்த்தமற்ற நடவடிக்கையால் கனடாவில் உள்ள தமிழ் மக்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் ஊடாக உயர் படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பு பறிபோய்விட்டதுதான் இதில் மிகவும் வேதனையான விடயம்.

ஏற்கனவே கூறியது போன்று புலம்பெயர் நாடுகளில் பல்கலைக் கழக தொலைதூரக் கல்வியை பெறுவது சாதாரண விடயம் அல்ல. பௌத்த பேரினவாதம், பார்ப்பனியம், அரசியல் என்று நிறையத் தடைகள் உண்டு. இவைகளை எல்லாம் மீறி எமக்கு கிடைக்கின்ற சில வாய்ப்புக்களை நாம் எமது தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளால் கெடுத்துக்கொள்ளக் கூடாது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உலகப் புகழ் வாய்ந்தது. தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல்வாதிகள், அறிஞர்கள் என்று பலர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்தான் படித்திருக்கிறார்கள். இவ்வாறான ஒரு பல்கலைக் கழகம் ஈழத் தமிழர்களின் அமைப்பு ஒன்றின் மீது வழக்குப் போடுவோம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இது எதிர்காலத்தில் ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டின் பல்கலைக் கழகங்களை அணுகும் போது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபடும் ஒரு அமைப்பு கவனம் இன்றி நடந்து கொண்டது வருந்தத்தக்கது. எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது சம்பந்தப்பட்டவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Edited by சபேசன்

ஆனால் இதில் ஒரு பெரிய சிக்கல் இருக்கின்றது. பல்கலைக் கழகங்களிற்குப் பொறுப்பாக துணைவேந்தர்கள் இருப்பார்கள். இப்படிப் பொறுப்பாக இருப்பவர்களை வேந்தர்கள் என்று சொல்லாமல், துணைவேந்தர்கள் என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. பொதுவாக ஒரு நாட்டின் பல்கலைக் கழகத்தின் வேந்தராக அந்த நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே இருப்பார்.

இலங்கையைப் பொறுத்தவரை அங்குள்ள பல்கலைக் கழகங்களின் வேந்தராக இலங்கை ஜனாதிபதியே இருக்கின்றார்.

ஆகவே புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு தொலைதூரக் கல்வியை வழங்குவதற்கு பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் யாராவது சம்மதம் தெரிவித்தாலும் கூட, இலங்கையின் ஜனாதிபதி அதற்கு தடை போட்டுவிடுவார். தமிழர்களின் கல்வியை அழிப்பதற்கு அன்றிலிருந்து இன்றுவரை முழுமூச்சாக பாடுபட்டு வரும் சிங்களப் பேரினவாத அரசின் ஜனாதிபதி புலம்பெயர்ந்த வாழும் தமிழர்களுக்கு மட்டும் பல்கலைக் கழகப் படிப்பை வழங்க சம்மதிப்பார் என்று எதிர்பார்க்கவும் முடியாது.

உங்கள் தகவல் தவறானது.

இலங்கையின் ஜனாதிபதி தான் முப்படைகளின் தளபதி. ஆனால் பல்கலைகழகங்களுக்கு வேந்தர் அவரல்ல.

யாழ்ப்பாண பல்கலைகழகத்துக்கு வேந்தர் முன்னாள் மருத்துவபீட பேரசிரியர் சிவசூரியா

அதே போல கிழக்கு பல்கலைகழகத்துக்கு வேந்தர் வைத்தியகலாநிதி வரகுணம்.

இதே போன்றே எனைய பல்கலைகழகங்களுக்கும். தேவையெனில் அந்தந்த பல்கலைகழக இணைய தளங்களை தேடி பாருங்கள்.

வேந்தர் எனும் பதவி ஒரு கௌரவ பதவி. எந்த நிர்வக நடவடிக்கைகளிலும் தீர்மானம் எடுக்கும் அல்லது ஒப்புக்கு கையொப்பம் இடும் அதிகாரம் கூட அற்றது. வேந்தர் பல்கலைகழக நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் ஒரே ஒரு நிகழ்வு பல்கலைகழக பட்டமளிப்பு விழாக்களில் கலந்துகொண்டு பட்டங்களை வழங்குவது. பல்கலைகழக நிர்வாகத்திலோ அல்லது பல்கலைகழக நிர்வாக நடவடிக்கைகளை முடிவு செய்யும் பேரவை, மூதவை போன்றவற்றின் கூட்டங்களை தலைமை தங்கவோ அல்லது அங்கு சமமூகமளிக்க வேண்டிய தேவையோ அற்ற பதவி. பல்கலைகழகத்தை பொறுத்தவரை துணைவேந்தர் தான் தீர்மானம் எடுத்து கையொப்பம் இடும் அதிகாரம் கொண்டவர்.

வேண்டுமானால் பல்கலைகழகங்களை கட்டுபடுத்தும் அதிகாரம் கொண்ட பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவையோ அல்லது கல்வி அமைச்சரையோ அல்லது சர்வாதிகாரமும் கொண்டவர் என்ற ரீதியில் ஜனதிபதியையோ சுட்டுங்கள். ஆனால் தவறான தகவலை கொடுக்காதீர்கள்.

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் பல்கலைக்கழக வேந்தர் என்பவர் பல்கலைக்கழகத்துக்கு கழகம் மாறுபடுவர். அவர் ஜனாதிபதியல்ல. ஆனால் இலங்கையில் ஜனாதிபதிதான் இறுதித் தீர்மானம் எடுப்பார் உபவேந்தர் மற்றும் வேந்தர் தெரிவுகளில்..!

  • தொடங்கியவர்

ஒவ்வொரு பல்கலைக் கழகத்திற்கும் ஒரு கௌரவ வேந்தர் இருப்பார் என்பது உண்மைதான்.

ஆனால் நான் அறிந்தவரையில் இலங்கையின் அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்குமான அதிகாரம் மிக்க வேந்தராக இலங்கை ஜனாதிபதிதான் இருக்கிறார். அவரால் பல்கலைக் கழகங்களின் முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். துணை வேந்தர்கள் எடுத்த முடிவுகளை தடுக்கவும் முடியும்.

எதற்கும் நான் மீண்டும் ஒரு முறை விசாரித்துப் பார்க்கிறேன்.

குளக்காட்டன் சொல்லியிருப்பது சரியான தகவல். அதுபோல் நெடுக் குறிப்பிட்டது போல் ஏற்கனவே பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படும் பெயர்ப்பட்டியலிலிருந்து வேந்தர் உபவேந்தர் தெரிவில் ஜனாதிபதிதான் இறுதித் தீர்மானம் எடுப்பார்.

  • தொடங்கியவர்

குளக்கோட்டன் சொல்லியிருக்கும் தகவல் சரியானதுதான். அதை மறுப்பதற்கு இல்லை.

ஆனால் நானும் தவறான தகவலை சொல்லிவிடவில்லை. சற்று குழப்பம் வருவது மாதிரி எழுதி விட்டேன்.

ஒரு பல்கலைக் கழகங்கத்திற்கு துணைவேந்தர் இருப்பார். அதே போன்று அதிகாரமற்ற "கௌரவ" வேந்தர் இருப்பார்.

இந்தக் "கௌரவ" வேந்தரின் வேலை உண்மையான வேந்தராகிய ஜனாதிபதியை பிரதிநிதித்துவப் படுத்துவதுதான். உதாரணமாக அனைத்து பட்டமளிப்பு விழாக்களிலும் ஜனாதிபதியால் கலந்து கொள்ள முடியாது. அங்கே "கௌரவ" வேந்தர் ஜனாதிபதியை பிரதிநிதித்துவப் படுத்தவார்.

ஜனாதிபதிதான் அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் அதிகாரம் மிக்க உண்மையான வேந்தராக இருக்கிறார்.

அவரை மீறி முக்கிய மாற்றங்கள் எதுவும் பல்கலைக் கழகங்களில் நடைபெற முடியாது. துணைவேந்தரை நியமிப்பது மட்டும் அல்ல. ஒரு துணைவேந்தர் வெளிநாடு ஒன்றில் பட்டப்படிப்பை வழங்குவது என்றால், அதற்கும் ஜனாதிபதியின் அனுமதி தேவை.

ஜனாதிபதியை "வேந்தர்" என்ற பதத்தில் குறிப்பிடப்படாது இருக்கலாம். ஆனால் நடைமுறையில் அவர்தான் வேந்தர்.

தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், அங்கே கவர்னர் "வேந்தர்" நிலையில் இருப்பார்.

"வேந்தர்" என்ற பதம் சற்றுக் குழப்பம் தருவதாக இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். தற்பொழுது குறிப்பிட்ட பந்தியை சற்றுமாற்றியுள்ளேன்

Edited by சபேசன்

நீங்கள் சொல்ல வந்த பிரதான விடயம் என்பது தவறான ஒரு விளம்பரம் அரிய வாய்ப்பை தவற விட செய்துவிட்டது என்பதே. அந்த விடயம் சார்பில் விவாதம் இன்னும் போக தொடங்கவில்லை. அதற்கு வருந்துகிறேன்.

ஆனால்

அந்த செய்திக்கு பக்க துணையாக சேர்த்த விடயங்கள் சில தவறானவை. அதை சுட்டி காட்டினேன்.

சிறிலங்காவின் ஜனாதிபதி பதவி என்பது ஆணை பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றும் வல்லமையை தவிர மற்றைய அனைத்தையும் கொண்டது என விமர்சிக்கப்படும் பதவி.

எனவே ஜனாதிபதியின் அதிகாரத்தை வைத்து கொண்டு எந்த தீர்மானத்தையும் ரத்து செய்ய முடியும்.

ஆனால் பல்கலை கழகங்கள் எடுக்கும் முக்கிய விடயங்கள் பற்றி தீர்மானங்கள், நிதிவழங்கல்களை தீர்மானிக்கும் இடம் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு. எனவே சிங்கள அரசின் கட்டுபாட்டில் இருக்கும் ஒரு ஆணைக்குழு நீங்கள் சொல்வது போன்று இப்படியான விடயங்கள் நடக்க அனுமாதிக்கது என்பது ஏற்றுகொள்ள கூடியதே.

பல்கலைகழங்களுக்கு நீங்கள் சொல்வது போல் கௌரவ வேந்தர், நிஜமான அதிகாரம் மிக்க வேந்தர் (ஜனாதிபதி) , என்றெல்லாம் பதவிகள் கிடையாது.

நீங்கள் சொன்ன கருத்தை தவறானது என்றால் அதை திருத்திகொள்ளம். அதற்காக இப்படி நீங்கள் அப்படியும் இருக்கலாம் இப்படியும் இருக்கலாம் என்ற பாணியில் விளக்கம் தர தேவையில்லை என்பது எனது கருத்து. நீங்களே இட்டுகட்டி நிஜவேந்தர் கௌரவ வேந்தர் பதவிகளை உருவாக்க தேவையில்லை. அத்துடன் வேந்தர் என்ற பதத்தில் எந்த குழப்பமும் இல்லை.

நான் சொன்னதற்கு ஆதாரம் சிறிலங்கா பல்கலைகழக சட்ட கோவையில் இருந்து கீழே தந்துள்ளேன்.

வேந்தர் -Chancellor

The President shall nominate the Chancellor (வேந்தர்) of each University. The Chancellor shall be the Head of the University, The Chancellor hold office for a period of five years reckoned from the date of his nomination, and shall, preside at any Convocation of the University. .

33 The Officers of a University shall be the following:- Officers of the University.

(i) the Vice-Chancellor -உப வேந்தர்

(ii) the Deputy Vice-Chancellor, if any;

(iii) the Rector of each Campus, if any;

(iv) the Dean of each Faculty;

(v) the Registrar;

(vi) the Librarian;

(vii) the Bursar; and

(viii) the holder of any other post declared by Ordinance to be a post, the holder of which is an Officer for the purpose of this section.

the Vice-Chancellor -உப வேந்தர்

The Vice-Chancellor of a University shall, subject to the provisions of paragraph (b), be appointed for a term of three years by the President, upon the recommendation of the Commission, from a panel of three names recommended by the Council of that University.

(b) No person shall be appointed as Vice-Chancellor of the same University for more than two consecutive terms.

© The Vice-Chancellor of a University may be removed from office by the President, after consultation with the Commission.

The Vice-Chancellor shall be a full-time officer of the University, and shall be the principal executive officer and principal academic officer thereof. He shall be an ex officio member and Chairman of both the Council and the Senate. The Vice-Chancellor shall be entitled to convene, be present and speak at, any meeting of any other Authority of the University or other body, but shall not be entitled to vote at any such meeting unless he is a member of such other Authority or other body.

http://www.ugc.ac.lk/policy/university%20act/part_6.html

http://www.ugc.ac.lk/policy/university%20a...sity%20act.html

Edited by KULAKADDAN

  • தொடங்கியவர்

குளக்காட்டான்!

நீங்கள் சொல்வதை நான் மறுக்கவில்லை. அத்தடன் நான் புதிய பதவிகள் எதையும் சொல்லவில்லை.

ஒரு பல்கலைக் கழகத்தின் அதிகாரம் துணைவேந்தரிடம்தான் இருக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள். ஒரு பல்கலைக் கழகத்தின் "வேந்தர்" உண்மையில் அதிகாரங்களைக் கொண்டவர் அல்ல என்பதையும் நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்.

அதிகாரம் மிக்க துணை வேந்தரை நியமிப்பது ஜனாதிபதி என்பதையும் நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்.

நீங்கள் சொன்ன முப்படைத் தளபதி உதாரணத்திற்கே வருகிறேன்.

தரைப்படைத் தளபதியாக ஒருவர் இருப்பார். கடற்படைத் தளபதியாக ஒருவர் இருப்பார். வான்படைத் தளபதியாக ஒருவர் இருப்பார்.

ஆனால் இவர்கள் எல்லோருக்கும் சேர்த்து முப்படைகளுக்கும் தளபதியாக ஜனாதிபதிதான் இருக்கிறார். இலங்கையில் யுத்தம் இல்லையென்றால், பெரும்பாலான மக்களுக்கு இந்த விடயமே தெரிந்திருக்காது.

இன்றும் பலர் அத்துலத்முதலி, ரஞ்சன்விஜேயரத்ன, ரத்வத்தை போன்றவர்கள் "பாதுகாப்பு அமைச்சர்கள்" என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர்கள் என்பதுதான் உண்மை. பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதிதான்.

மீண்டும் பல்கலைக் கழகத்திற்கு வருவோம். இலங்கையில் எத்தனையோ துறைகள் இருக்கின்றன. அனைத்துத் துறைகளிற்கும் பொறுப்பானவர்களை ஜனாதிபதி நியமிப்பது இல்லை. ஆனால் பல்கலைக் கழகத்தின் அதிகாரம் மிக்க துணைவேந்தரை ஜனாதிபதிதான் நியமிக்கிறார்.

பொதுவாக "வேந்தர்" என்பவர்தான் அதிகாரம் மிக்கவராக இருக்க வேண்டும். ஆனால் பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர் அதிகாரம் மிக்கவராக இருப்பதன் காரணத்தை யாராவது சிந்தித்தீர்களா?

துணைத் தலைவரை விட தலைவர் அதிகாரம் மிக்கவராக இருக்கும் போது, துணைத் தளபதியை விட தளபதி அதிகாரம் மிக்கவராக இருக்கும் போது, துணைச் செயலாளரை விட செயலாளர் அதிகாரம் மிக்கவராக இருக்கும் போது, துணைப் பிரதமரை விட பிரதமர் அதிகாரம் மிக்கவராக இருக்கும் போது,....இப்படி அனைத்துத் துறைகளிலும் இருக்க...பல்கலைக் கழகங்களில் மட்டும் "வேந்தரை" விட துணை வேந்தர் அதிகாரம் மிக்கவராக இருப்பது ஏன்?

காரணம் ஒரு பல்கலைக் கழகத்தின் "வேந்தர்" உண்மையான வேந்தர் அல்ல.

எப்படி அனைத்துப் படைகளுக்கும் ஜனாதிபதி தளபதியாக இருக்கிறாரோ, அதே போன்று அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் ஜனாதிபதி வேந்தராக இருக்கிறார்.

ஜனாதிபதியை யாரும் தளபதி என்றோ, பாதுகாப்பு அமைச்சர் என்றொ விழிப்பதில்லை. அதே போன்ற அவரை வேந்தர் என்று சொல்வது இல்லை.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் நீங்கள் அநாவசியமாக நீங்கள் கூறுவதே சரியென்ற பாணியில் கருத்தை திணிக்க முயல்கிறீர்கள்.

தெளிவாக வேந்தர் உபவேந்தர் என்பன வரையறுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி உபவேந்தர் மற்றும் வேந்தர் நியமனங்கள் தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்க அதிகாரம் படைத்திருக்கிறார் என்பது அவரை வேந்தர் ஆக்காது.. என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி முப்படைத்தளபதி என்ற நிலைக்குரியவர் அதற்கான அதிகாரங்களைக் கொண்டவர்.அதற்காக அவர் தரைப்படைத் தளபதியாக கடமையாற்ற முடியாது. ஜனாதிபதி விரும்பினால் கூட வேந்தரின் பணியை ஆற்ற முடியாது. ஜனாதிபதி சிறப்பு விருந்தினராகத்தான் பட்டமளிப்புக்கு வரலாம். வேந்தராக வர முடியாது..!

உங்களின் கதை எப்படின்னா ஜனாதிபதியை தெரிவு செய்யும் மக்களும் ஜனாதிபதியே என்று விதண்டாவாதம் செய்வதாகவே இருக்கிறது.

தவறான தகவல்களை சொல்லி போலியான நியாயப்பாடுகளை உருவாக்காதீர்கள்..! :unsure::lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நானும் நீங்களும் வேறு வேறு கோணங்களில் பார்க்கின்றோம் என்பதுதூன் இதில் பிரச்சனை.

பலாலிப் படைத் தளத்தின் தளபதி யார் என்றால் அங்கே சிறிலங்கா ஜனாதிபதியை யாரும் சொல்வதில்லை.

இலங்கையின் கடற்படைத் தளபதி யார் என்றால் அங்கேயும் சிறிலங்கா ஜனாதிபதியை சொல்வது இல்லை.

அதே போன்று

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் யார் என்றால், அது சிறிலங்கா ஜனாதிபதி அல்ல. அங்கே "வேநதர்" என்ற பதத்தோடு வேறு ஒருவர் இருப்பார்.

இதை நான் எவ்வித தயக்கமும் இன்றி ஒத்துக் கொள்கிறேன்.

நான் சொல்வது அனைத்துப் படைகளுக்கும் தளபதியாக இருப்பது போன்று, இலங்கையின் அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் "வேந்தராக" ஜனாதிபதி இருக்கிறார் என்பதைத்தான். (தளபதி என்பதற்காக ஜனாதிபதி களத்தில் போய் சண்டை செய்வது இல்லை, அதே போன்று வேந்தர் என்பதற்காக ஜனாதிபதி பல்கலைக்கழகங்கிற்கு போய் விரிவுரை ஆற்றுவது இல்லை)

நீங்கள் சில விடயங்களை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எந்தத் துறையிலும் இல்லாதவாறு, பல்கலைக் கழகங்களிற்கு பொறுப்பானவருக்கு "வேந்தர்", அதாவது "அரசர்" என்ற பதம் பாவிக்கப்படுவது ஏன்?

பல்கலைக் கழகங்களில் நியமிக்கப்பட்ட வேந்தரை விட துணை வேந்தர் அதிகாரம் மிக்கவராக இருப்பது ஏன்?

இதற்கான பதில்களை தெளிவான முறையில் எனக்கு விளக்கிக் கூறுவீர்கள் என்றால், நான் என்னுடைய கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் குறிப்பிடும் விடயம் தவறானது. "ஜனாதிபதி வகிக்கும் அனைத்துப் பல்கலைக்கழக வேந்தர்" பதவியின் அடையாளமாகவே வேந்தர் இருக்கிறார் என்பது தவறானது.

வேந்தர் ஜனாதிபதியின் "வேந்தர் பதவி என்று நீங்கள் கற்பனையில் உச்சரிக்கும் பதவியின்" அடையாளமாக நியமிக்கப்படுவதில்லை. இலங்கையில் பல்கலைக்கழக நிர்வாக அதிகாரம் ஜனாதிபதியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை..! ஜனாதிபதி பல்கலைக்கழக அவைகள், மானிய ஆணைக்குழுக்கள் எடுக்கும் தீர்மானத்துக்கு அமைய நியமனங்களை அங்கீகரிக்கும் அதிகாரத்தை மட்டுமே கொண்டுள்ளார்..! தன்னிச்சையாகக் கூட அவர் நியமனங்களைச் செய்ய முடியாது..! அப்படி இருக்க.. நீங்களோ.. இல்லாத ஒரு பதவியை உருவாக்கி மக்களை நோக்கி தவறான தகவல்களை வழங்குறீர்கள்..!

இது விடயமாக சிந்திக்க வேண்டியது நாமல்ல சபேசன். ஜனாதிபதிக்கு இல்லாத ஒரு நிலையை உருவாக்கி அதை இருப்பதாகச் சித்தரிக்க முனையும் உங்களின் நிலை குறித்தே சிந்திக்க வேண்டி இருக்கிறது..! :unsure::lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

இங்கே யாழ் களத்தில் நான் இதுவரை "என்னுடைய கருத்தை மாற்றிக்கொள்ளத் தயார்" என்று சொன்னதில்லை.

இந்து மதம், தமிழீழ விடுதலை போன்ற விடயங்களில் நான் கொண்டிருக்கும் கருத்தை மாற்றிக் கொள்ளவும் நான் தயாராக இல்லை.

ஆனால் இந்த "வேந்தர்" விடயத்தில் என்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன். ஒரு தகவல் சார்ந்த விடயத்தில் நான் சொல்வதுதான் சரி என்று அடம்பிடிக்கவும் நான் விரும்பவில்லை.

எனக்கு கிடைத்த தகவல்கள் தவறாகவும் இருக்கக்கூடும்.

ஆனால் என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன

துணைத் தலைவரை விட தலைவர் அதிகாரம் மிக்கவராக இருக்கும் போது, துணைத் தளபதியை விட தளபதி அதிகாரம் மிக்கவராக இருக்கும் போது, துணைச் செயலாளரை விட செயலாளர் அதிகாரம் மிக்கவராக இருக்கும் போது, துணைப் பிரதமரை விட பிரதமர் அதிகாரம் மிக்கவராக இருக்கும் போது,....இப்படி அனைத்துத் துறைகளிலும் இருக்க...பல்கலைக் கழகங்களில் மட்டும் "வேந்தரை" விட துணை வேந்தர் அதிகாரம் மிக்கவராக இருப்பது ஏன்?

எந்தத் துறையிலும் இல்லாதவாறு, பல்கலைக் கழகங்களிற்கு பொறுப்பானவருக்கு "வேந்தர்", அதாவது "அரசர்" என்ற பதம் பாவிக்கப்படுவது ஏன்?

இவைகளை தயவு செய்து யாராவது விளங்கப்படுத்தினால், எனக்கு தெளிவு கிடைக்கும். என்னுடைய அறிவு வளர்வதற்கும் உதவியாக இருக்கும்

துணைவேந்தர் எப்போதும் பேராசிரியர்களிலிருந்தே தெரிவு செய்யப்படுகின்றார். ஆனால் வேந்தர் அப்படியல்ல. அது ஒரு கௌரவப் பதவியே.

குளக்காட்டான்!

நீங்கள் சொல்வதை நான் மறுக்கவில்லை. அத்தடன் நான் புதிய பதவிகள் எதையும் சொல்லவில்லை.

ஒரு பல்கலைக் கழகத்தின் அதிகாரம் துணைவேந்தரிடம்தான் இருக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள். ஒரு பல்கலைக் கழகத்தின் "வேந்தர்" உண்மையில் அதிகாரங்களைக் கொண்டவர் அல்ல என்பதையும் நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்.

மேலே சிவப்பால் சுட்டியதை முதலில் சுட்டிக்காட்டியது நான் சபேசன். அதை ஏதோ நீங்கள் சொன்னது போலவும் அதை நான் ஏற்று கொள்வது போலவும் மயக்கம் வர கருத்தை திரிக்கிறீகள் பாருக்கள் அங்கு தெரிகிறது உங்கள் திறமை :lol: .

இங்கு துணைவேந்தரை ஜனாதிபதி நியமிக்கிறார். ஆனால் அதற்கு 3 பேரை சிபாரிசு செய்ய வேண்டியது அந்த பல்கலைகழகங்களே, அதன் பின் மானியங்கள் ஆணைக்குழு அதை ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்ய வேண்டும்.. ஜனாதிபதி விருபிய ஒருவரை நியமிக்க முடியாது

சபேசன் ஒரு தவறான எடுத்துகாட்டை சொல்லிவிட்டு அதை நிறுவியே ஆக வேண்டும் என்று அடம் பிடித்து கொண்டிருக்கிறீர்கள்.

ஜனாதிபதியின் பதவி நிலைகள் மற்றும் அவரின் கீழ்வரும் அதிகாரங்கள் என்பன கீழே உள்ளன.

The Executive Presidency

The Head of State of the Republic of Sri Lanka is the President. The President is also the Head of the Executive, the Head of the Government, and the Commander in Chief of the Armed Forces.

The President is elected by the people and holds office for a period of six years. The President has the right to attend, address and send messages to Parliament at any time. The President is also entitled to all the privileges, immunities and powers of a Member of Parliament other than the right to vote, and shall not be liable for any breach of the privileges of Parliament, or of its Members.

The President is the Head of the Cabinet of Ministers, presides at meeting of the Cabinet and appoints the Prime Minister from among the members elected to Parliament.

The powers of the President include that of summoning, proroguing and dissolving Parliament and calling for a Referendum, in keeping with the relevant provisions of law.

The Constitution also confers upon an elected President the power to:

Make the Statement of Government Policy in Parliament at the commencement of each parliamentary session

Preside at ceremonial sittings of Parliament

Receive and recognize, and to appoint and accredit Ambassadors, High Commissioners, Plenipotentiaries and other diplomatic agents

Keep the Public Seal of the Republic and to make and execute under the Public Seal the Acts of Appointment of the Prime Minister and other Ministers of the Cabinet of Ministers, the Chief Justice and other Judges of the Supreme Court, such grants and dispositions of lands and immovable property vested in the Republic as The President is by law required or empowered to do, and to use the Public Seal for sealing all things whatsoever that shall pass that Seal

Declare War and Peace

Perform all such acts and things, not being inconsistent with the provisions of the Constitution or written law, as by international law, custom or usage The President is required or authorized to do, and

Grant pardon, grant any respite, substitute a less severe form of punishment for any punishment and remit the whole or any part of any punishment imposed.

Under the immunities granted to the President, no legal proceedings may be initiated or continued with regard to official or private matters against the President while in office. If the President is unable to perform his duties due to illness or absence from the country, the Prime Minister will be appointed to exercise, perform and discharge the powers, duties and functions of the President. A Minister of the Cabinet will then be appointed to act for the Prime Minister.

The Commissioner General of Elections conducts the Presidential Elections where the entire country is considered to be a single constituency. The winner is required to receive more than 50% of votes and takes his oaths as President before the Chief Justice.

http://www.president.gov.lk/about_presidency.asp

இதிலே எந்த இடத்தில் வேந்தர் என்ற பதம் வேண்டாம் ஒரு வரியாவது இலங்கை பல்கலைகழகங்களின் தலைவர் என இருக்கிறதா பாருங்கள். அதற்காக இலங்கை முழுமைக்கு அதிகாரம் மிக்க தலைவராக ஜனாதிபதி இருக்கும் போது பல்கலைகழகத்துக்கு மட்டும் வேறு யாருமா தலைவராக இருப்பார் ? என்பது போல் நிறுவாதீர்கள். :lol:

ஒரு விடயத்தை நிறுவ வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி முப்படை தளபதி, தரைப்படைக்க் தரைப்படை தளபதி இருந்தாலும் அவரிலும் ஜனாதிபதி தான் அதிகாரம் மிக்கவர் என்கிறீர்கள் அங்கு சட்ட்பூர்வமாக அதிகாரம் வழங்கபட்டுள்ளது.

.தவறை ஒத்து கொள்ள நேர்மை வெண்டும் சபேசன். அதற்காக மாட்டை பற்றி எழுத சொன்னா மாட்டை பனையில் கட்டி விட்டு பனை பற்றி எழுதுவது பொன்று உங்கள் நிறுவலை செய்யதீர்கள்.

Edited by KULAKADDAN

  • தொடங்கியவர்

நான் மாட்டைப் பற்றித்தான் எழுதினேன். நீங்கள் அதிலே பனையைப் பற்றி எழுதிய விடயம் தவறு என்றீர்கள்.

இப்பொழுது பனையைப் பற்றி இருவரும் கருத்தாடல் செய்கிறோம்.

தவறை ஒத்துக்கொள்ளும் நேர்மை எனக்கு நிறையவே உண்டு.

ஆனால் என்னுடைய கருத்து தவறா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது.

அதே வேளை நான் சொல்வது சரி என்று அடம்பிடிக்கவில்லை என்பதையும் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன்.

என்னிடம் சில கேள்விகள் உண்டு.

இலங்கையில் அனைத்து துறைகளின் பொறுப்பாளர்களையும் ஜனாதிபதி நியமிப்பதில்லை. ஆனால் ஜனாதிபதி தலைமை வகிக்கும் முப்படைகள், அமைச்சுகள் போன்றவற்றை ஜனாதிபதியே நியமிக்கிறார். பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களையும் ஜனாதிபதிதான் நியமிக்கிறார். இது சொல்லும் செய்தி என்ன?

அதிகாரம் உள்ளவரை "வேந்தர்" என்று சொல்லாது "துணைவேந்தர்" என்று சொல்வதன் காரணம் என்ன?

"வேந்தர்" என்ற பதிவியில் நியமிக்கப்படுபவர் அதிகாரமற்றவராக இருப்பதன் காரணம் என்ன?

எந்தத் துறையிலும் இல்லாதவாறு, பல்கலைக் கழகங்களில் மட்டும் "வேந்தர்" (அரசர்) என்ற பதம் பாவிக்கப்படுவதன் காரணம் என்ன?

இவைகயை யாராவது தெளிவான முறையில் விளக்குவீர்களா? அப்படி விளக்குகின்ற போது, நான் கூறியது தவறா, சரியா என்ற முடிவுக்கு என்னால் வரமுடியும்.

தவறென்றால் தவறென்று ஒத்துக்கொள்வதோடு, புதிய விடயங்களை கற்றது குறித்து மகிழ்ச்சியும் அடைவேன்.

போற போக்கில சபேசன்; ஐ.நா சபையில் ஏன் செயலாளருக்குத்தான் அதிகாரமுள்ளது என்பதும் தவறென்று வாதாட ஆரம்பித்துவிடுவார். அவர் ஒருபோதும் தவறை ஒத்துக் கொள்ள மாட்டார். மற்றையவர்கள் பேசாமல் ஒதுங்குவதே மேல்.

Edited by Vasampu

  • தொடங்கியவர்

தவறு செய்தால் அதை நான் நிச்சயமாக ஒத்துக் கொள்வேன்.

குளக்காட்டான் "வேந்தர்" என்று ஒருவர் நியமிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய பிறகு சிறிய மாற்றங்களை செய்துள்ளேன்.

என்னுடைய மற்றச் சந்தேகங்களையும் தீர்த்து வைத்தால், தவறு என்று கருதப்படுகின்ற மற்றைய வசனங்களையும் தயக்கம் இன்றி நான் மாற்றுவேன்.

இப்பொழுது "வேந்தர்" பற்றிய என்னுடைய கருத்தை சற்று ஒதுக்கிவிட்டு பொதுவாகவே சில கேள்விகளை கேட்டு பதிலை ஆராய்வோமா?

என்னுடைய வாதத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டாம்: பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் எண்ணத்தோடு பாருங்கள்.

ஐநா சபையில் செயலாளர் அதிகாரம் உள்ளவர். துணைச் செயலாளர் அல்ல.

சில நாடுகளில் பிரதமர் ஜனாதிபதியை விட அதிகாரம் உள்ளவராக இருப்பார். ஆனால் துணைப் பிரதமர் பிரதமரை விட அதிகாரம் உள்ளவராக இருக்க மாட்டார்.

சில நாடுகளில் ஜனாதிபதி பிரதமரை விட அதிகாரம் உள்ளவராக இருப்பார். ஆனால் துணை ஜனாதிபதி ஜனாதிபதியை விட அதிகாரம் உள்ளவராக இருக்க மாட்டார்.

உலகின் எல்லாத் துறைகளிலும் குறிப்பிட்ட பதவியோடு, "துணை" என்ற சொல்லை சேர்க்கும் போது, அவர் இரண்டாம் இடத்தில்தான் இருப்பார்.

ஆனால் உலகம் முழுவதும் பல்கலைக் கழகங்களில் மட்டும் "துணை"வேந்தர் எனப்படுபவர் அதிகாரம் மிக்கவராக இருக்கிறார்.

;இது ஏன் என்று ஆராயும் சிந்தனை யாருக்காவது வந்ததா? பேராசிரியர் ஒருவரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பல அதிகாரங்கள் அளிக்கப்பட்டும் அவரை "வேந்தர்" என்று அழைக்காது "துணை"வேந்தர் என்று அழைப்பதன் காரணம் என்ன? அதிகாரமற்ற ஒருவர் ஒப்புக்கு "வேந்தர்" என்ற பெயரோடு இருப்பதன் காரணம் என்ன?

இதுவரை யாழ் களத்தில் பலமுறை பல்கலைக் கழகங்கள் குறித்தும் துணைவேந்தர்கள் குறித்தும் விவாதம நடந்தும், யாருக்கும் இந்த சிந்தனைகள் வரவில்லை.

எனக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே வந்தது. அப்பொழுது நான் விசாரித்த பொழுது, எனக்கு கிடைத்த விளக்கம்தான் "வேந்தர்" குறித்த விடயத்தில் நான் தெரிவித்திருக்கும் கருத்துக்கள்.

என்னுடைய கருத்து தவறு என்று சொல்கின்ற ஒருவருக்கு, என்னுடைய சந்தேகங்களையும் தீர்த்து வைக்கின்ற கடப்பாடு இருக்கின்றது.

"நான் தவறை ஏற்றுக் கொள்ள மாட்டேன்" என்று அபாண்டமாக குற்றம் சாட்டி விட்டு, தப்ப முனைவது, இந்தக் கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.

இதற்கு சம்பந்தம் இல்லையென்றாலும் வேறு சில விடயங்களைச் சொல்கிறேன். தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளிடம் பெரும்பாலும் தலைவர் என்ற பதவி கிடையாது. பொதுச்செயலாளர் என்பவர்தான் தலைமைப் பதவியில் இருப்பார். ஆனால் காங்கிரஸ், பிஜேபி போன்ற கட்சிகளிடம் தலைவர் என்ற பதவி உண்டு.

திராவிடக் கட்சிகளிடம் தலைவர் பதவி இல்லாததற்கு காரணம் இருக்கிறது.

அறிஞர் அண்ணா திமுகவை உருவாக்கிய போது ஒரு அறிவிப்பை வெளியிட்டார். எங்கள் கட்சிக்கு தலைவர் தந்தை பெரியார்தான் என்று. அது அப்படியே மரபாக தொடர்கிறது. திமுகவில் இருந்து பிரிந்த அதிமுக, மதிமுக போன்ற கட்சிகளிடமும் தலைவர் பதவி இல்லை. பொதுச் செயலாளர்தான் இருக்கிறார். சில கட்சிகளில் "அவைத் தலைவர்" என்ற பதவியை வைத்திருக்கிறார்கள்.

இப்படி ஒவ்வொன்றிற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

அதிகாரம் மிக்கவரை "வேந்தர்" என்று சொல்லாது "துணைவேந்தர்" என்று சொல்வதன் காரணம் என்ன?

இந்தக் கேள்விக்கு என்னுடைய பதிலை இரண்டு மணித்தியாலங்கள் கழித்து எழுதுகிறேன். அதற்குள் யாருக்காவது தெரிந்தால் எழுதுங்கள்

Chancellor is honorary head of University

Vice-Chancellor is the head of University administration.

Below is from wikipedia

Strictly speaking, the VC is only the deputy to the Chancellor of the university, but the Chancellor is usually a prominent public figure who acts as a ceremonial figurehead only (e.g., the Chancellor of Cambridge University is HRH The Duke of Edinburgh), while the Vice-Chancellor acts as the day-to-day chief executive. An assistant to a Vice-Chancellor is called a Pro-Vice-Chancellor or Deputy Vice-Chancellor — these are sometimes teaching academics who take on additional responsibilities. In some universities (e.g., Macquarie University, Deakin University), there are several Deputy Vice-Chancellors subordinate to the Vice-Chancellor, with Pro-Vice-Chancellor being a position at executive level ranking below Deputy Vice-Chancellor.

http://en.wikipedia.org/wiki/Vice-chancellor

I do not know anything about Srilankan higher education system as I received all of my education out of Sri Lanka

  • தொடங்கியவர்

உலகம் முழுவதும் துணைவேந்தர்தான் அதிகாரம் உள்ளவராக இருக்கின்றார்.

அதிகாரம் உள்ளவரை துணைவேந்தர் என்று ஏன் அழைக்கிறார்கள்? வேந்தர் என்று ஏன் அழைப்பதில்லை?

இப்படியான கேள்விகளுக்கு என்னுடைய அறிவைக் கொண்டு ஆராய்ந்து நான் அறிந்தவைகளை சொல்லி விடுகிறேன்.

(இந்த விளக்கம் சரியாக இருக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை)

பல்கலைக் கழகங்களுக்கு பொறுப்பானவர்களை அழைப்பதற்கு பயன்படும் Rector, Chancellor,Magnificus ஆகிய சொற்களின் உள் அர்த்தத்தை ஆராய்ந்தால், அது முதலானவர், அதிகாரம் கொண்டவர் போன்ற அர்த்தங்களை தரும்.

ஐரோப்பாவில் பல்கலைக் கழகங்கள் ஆரம்பிக்கப்பட்ட போது, இந்தச் சொற்களின் மூலம் அழைக்கப்பட்டவர்கள் மன்னர்களும், மதகுருக்களுமே ஆகும். இருவருமே மக்கள் மத்தியில் சம அதிகாரத்தோடும் செல்வாக்கோடும் விளங்கினார்கள்.

இந்தச் சொற்கள் பின்பு பல்கலைக் கழகங்களிலும் பயன்படுத்தப்பட்டன. அதற்கு காரணம் அன்றைய காலங்களில் கல்வித் துறையில் தேவாலயங்கள் முக்கிய பங்கு வகித்தன. மதகுருக்களே பல இடங்களில் ஆசிரியர்களாக இருந்தார்கள்.

அவர்களை அழைப்பதற்கு பயன்பட்ட சொற்களே, பின்பு மற்றவர்கள் பல்கலைக் கழகங்கள் கற்பித்த போதும் பயன்படுத்தப்பட்டன.

இந்தச் சொற்களில் பல்கலைக் கழகத்திற்கு பொறுப்பானவர்களை அழைப்பதற்கு மிக அதிகமாக பயன்படுத்தப்பட்ட சொல் Magnificus ஆகும்.

அதே போன்று பல்கலைக் கழகத்தின் காவலரும் மிக அதிகாரம் கொண்டவரையும் அழைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட சொல் Rector Magnificus ஆகும்

Rector Magnificus என்பவர் யார் என்று பார்த்தீர்கள் என்றால், அவர் அப் பகுதியை ஆள்பவராக, மன்னராக இருப்பார்.

இந்த மரபே இன்று வரை தொடர்கிறது.

இதிலே இன்னும் ஒரு உப தகவல். தமிழ்ச் சங்கங்களின் தலைவர்களாகவும் மன்னர்களே இருந்தனர். மதுரையிலே இருந்த கடைச் சங்கத்தின் தலைவனாக இருந்த பாண்டிய மன்னனை, சிவனோடு இணைத்து சிலர் பேசுவார்கள்.

இப்படி உலகம் முழுவதும் கல்வி சார்ந்த கழகங்களில் மன்னர்களே தலைவர்களாக இருந்தனர். அந்த மரபே இன்றும் தொடர்கிறது.

வேந்தர்களே தலைவர்களாக இருந்ததனால், பொறுப்பாக இருந்தவர் துணைவேந்தராகத்தான் இருக்க முடியும்.

இலங்கையில் ஜனாதிபதியும், இந்தியாவில் கவர்னர்களும் குறிப்பிட்ட அதிகாரங்களை பல்கலைக்கழகங்களில் கொண்டிருப்பதும் இந்த மரபின் அடிப்படையிலேயே.

"வேந்தர்" என்பவர் நாட்டின் தலைவர் என்பதன் வெளிப்பாடாகத்தான் பல்கலைக் கழகங்களின் முக்கிய நியமனங்களையும், முக்கிய முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இருக்கிறது.

ஜனாதிபதியால் பட்டமளிப்பு விழாக்கள் போன்ற பல்கலைக் கழக நடவடிக்கையில் எப்பொழுதும் கலந்து கொள்ள முடியாததால், ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும் ஒருவர் "வேந்தர்" என்ற கௌரவ பட்டத்தோடு நியமிக்கப்படுகிறார்.

சரி! நண்பர்களே!

சில விடயங்களை தேடி என்னுடைய அறிவுக்கு உட்பட்ட வகையில் ஆராய்ந்து எனக்கு விளங்கியதை சொல்லியுள்ளேன்.

உங்களுடைய விளக்கங்களையும் சொல்லுங்கள்.

பொதுஅறிவு வளர்வதற்கு உதவியாக இருக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே,

இப்படி திசை மாறி விவாதிப்பதில் என்ன பலன் ?

ஒருவர் தவறான கருத்தை தெரிவித்தால் அதை திருத்த வேண்டியதுதான், இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் தலைப்பை விட்டு விலகி ஒருவருக்கொருவர் விவாதம் செய்துவிட்டு, கடைசியாக அந்த தலைப்பை பற்றி ஒரு கருத்துப் பரிமாற்றமும் இல்லாமல் விவாதம் முடிவடைந்துவிட்டது.

இப்படி தான் நம் தமிழ் இனம் எப்போதும் அதன் இறுதி குறிக்கோளை அடையும் முன் இடையில் எதாவது கவனத்தை திசை திருப்பும் முயற்ச்சிகளுக்கு ஆட்பட்டு, இறுதி குறிக்கோளை முழுமையாக மறந்து விட்டு திசைமாறி சென்று விடுகிறது.

ஏன் நாம் மட்டும் இப்படி திசைமாறி போவதில் முதன்மையாய் இருக்கிறோம்?

மாற்றம் நம்மில் இருந்து தான் வர வேண்டும். நாம் தான் உருவாக்க வேண்டும். பிறரை குறை சொல்லுவதால் மட்டும் மாற்றம் வந்து விடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.