Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தினசரி தூறல்கள்...

Featured Replies

  • தொடங்கியவர்

அனி அன்புக்கு நன்றி...

ஆனால் உண்மையா உங்க கருத்தை பார்த்தவுடன்..

வாய் சொன்னது

கிளம்பிட்டாங்கைய்யா...கிளம்ப

  • Replies 513
  • Views 102k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

தூறல் நாள் 62

சிவப்பு மழைக்குளிக்கும்

ஈழ மண்ணே..உன்

இயற்கை மணம்

மீண்டும் வருவதெப்போ...

அழகான ஆல மரமே

உன் வேரைக்கூட

அறுத்துப்போட்ட செல்லடியை

மனம் மறந்து..உன்மடி சாய்வதெப்போ

பள்ளி மைதானமே

துள்ளிய வயது தொலைந்தாலும்

உன்னை பாரத்தாவது

என் நினைவுகளை மீட்டுவதெப்போ..

குளிக்க மறுக்காத

கோயில்குளமே...

பயத்திலேயே பாசி கொண்டாயோ..

நீ புதிதாய் வருவதெப்போ..

வண்ண விளக்குகளால்

இரவெல்லாம் பகலாய்

எண்ண இனிக்கும்..

பாவடைத்தாவணிகளும்..

பழகக்கேட்கும் பருவமும்..

தரைதொடாப் பாதங்கொண்டு

வீதி சுற்றும் கோயில் திருவிழாவே..

மீண்டும் கோலாகலம் கொள்வதெப்போ...

அலைகளால் பாதம் தடவும்

அன்னைக் கடலே...

உன் கரையோரம் தவழ

என் கிழவுடலே ஏங்கும்

ஆசைகள் தீர்வதெப்போ...

நிலாமுற்றமும்..

அன்னைக்கை குழையல் சோறும்..

அப்பா செல்லமும்..

அனுபவிக்கும் போதே..

அழிந்துபோன வாழ்க்கை கோலமே..

சிதறிப்போன சித்திரமே...

கலைந்து போன நிஜங்களே..

கதறி மனம் கேட்கிறது...

காலங்கள் சேர்வதெப்போ..

கதறிமனம் அழுகிறது...

அற்புதத்தின் அற்புதம்..

அம்மா அருகில் இல்லை

ஆசான்களின் ஆசான்

அப்பா அருகில் இல்லை

அன்பான அண்ணாவும்..

ஆசைத் தங்கையும்..

யாரும் அருகில் இல்லை

தொலைந்த சுற்றம்..

இழந்த நண்பர்கள்..

காணமுடியாத சொந்தங்கள்..

ஏக்கத்தோடே முடியும் என் வாழ்வு

மீண்டும் வேண்டும்..

என் மண்ணில்..இறைவா

அன்றாவது எம் ஈழமண்

சுதந்திரதேசமாய் இருக்கட்டும்..இனி

ஒருமுறை இழப்பதென்றால்..

பிறப்பே தேவையில்லை!.

ஆஹா ..... கவித்தூறல் எல்லாம் அருமையாயிருக்கே......! பாராட்டுக்கள்...

விகடகவி அண்ணா....தல அண்ணா சொன்னது போல் ஒரு புத்தகமாக வெளியிடலாம் போலருக்கே ........ :wub:

:D விகடகவியின் தூறல்களை புத்தகமாக்குவதெனில் .................... எவ்வளவு பெரிய புத்தகமாகும்? எவ்வளவு தூறல்? நினைச்சுப்பார்க்கவே.................. :)

தொடருங்கள் உங்கள் தூறல் மனதுக்கு மென்மையாகவே தூறாட்டும் தொடர்ந்து.

  • தொடங்கியவர்

காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடிச்சே

மெல்ல மெல்ல என்னைக் கொல்ல துணிஞ்சிடிச்சே

எடுத்ததெற்கெல்லாம் காதலை குறை சொல்லாதீங்கோ...காதல் ரொம்ப பாவம்....

அது சரி வெண்ணிலா காதல் கொண்ட நீள...(ல)வானம் யாரோ... :lol:

எடுத்ததெற்கெல்லாம் காதலை குறை சொல்லாதீங்கோ...காதல் ரொம்ப பாவம்....

அது சரி வெண்ணிலா காதல் கொண்ட நீள...(ல)வானம் யாரோ... :lol:

:lol::lol: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை

கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை :)

நீள..(ல) வானம் இல்ல்லீங்கோ. செவ்வானம் ஆக்கும் :(:(:(

  • தொடங்கியவர்

அடடா வாழ்த்துகள் வெண்ஸ்

அது சரி செவ்வானம்..அமெரிக்காவா..பிரித

அடடா வாழ்த்துகள் வெண்ஸ்

அது சரி செவ்வானம்..அமெரிக்காவா..பிரித

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூறல் நாள் 61

அத்தனையும் தந்தாய்..

பித்தனாயானேனே...

செத்துவிடத்தோணுதடி-உன்

மெத்தைமடி மோனத்திலே...

...

கட்டிலறை மக்கானேன்<<<

எல்லோரும் அப்படித்தான் போல :lol:

ஆயிரம் காலம் போதுமடி

பாயினில் ஆசைகள் கூடுதடி

தூயவளே வந்து ஆடடி-என்

நோய் விரகமென்றால் விட்டு ஓடுமடி!!

<<<<

காதலின் உச்சம்!!! கவிதைகளில் மிச்சம் வைக்காமல் வழிகிறது தம்பி!! போற போக்கைப் பார்த்தால்!! :D

தூறல் நாள் 62

சிவப்பு மழைக்குளிக்கும்

ஈழ மண்ணே..உன்

இயற்கை மணம்

மீண்டும் வருவதெப்போ...

ஊரின் நினைவலைகளை மீண்டும் அலையடிக்க வைத்துவிட்டீர்களே மனசுள்

பள்ளி மைதானமே

துள்ளிய வயது தொலைந்தாலும்

உன்னை பாரத்தாவது

**பார்த்தாவது**

வண்ண விளக்குகளால்

இரவெல்லாம் பகலாய்

எண்ண இனிக்கும்..

பாவடை<<

**பாவாடை** இப்படி எழுதவே எழுத்துப் பிழைக்குது :lol:

அலைகளால் பாதம் தடவும்

அன்னைக் கடலே...

உன் கரையோரம் தவழ

என் கிழவுடலே ஏங்கும்

ஆசைகள் தீர்வதெப்போ<<<

உங்களைத் தம்பி என்று நினைச்சன்...என்ன நீங்க இப்படிச் சொல்லுறியள் :lol:

...

நிலாமுற்றமும்..

அன்னைக்கை குழையல் சோறும்..

அப்பா செல்லமும்..

அனுபவிக்கும் போதே..

அழிந்துபோன வாழ்க்கை கோலமே..

சிதறிப்போன சித்திரமே...

கலைந்து போன நிஜங்களே..

கதறி மனம் கேட்கிறது...

காலங்கள் சேர்வதெப்போ..***

உணர்வலைகளை சுண்டி இழுக்கும் வரிகள்

என் மண்ணில்..இறைவா

அன்றாவது எம் ஈழமண்

சுதந்திரதேசமாய் இருக்கட்டும்..இனி

ஒருமுறை இழப்பதென்றால்..

பிறப்பே தேவையில்லை!.

இந்த ஏக்கம் தான் எல்லோர் மனதிலும் தம்பி.....சொல்ல வார்த்தைகள் இல்லை.

  • தொடங்கியவர்

போற போக்கைப் பார்த்தால்!! :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போற போக்கைப் பார்த்தால்!! :unsure:

நாங்கள் எழுதுவதை எல்லாம் கவிதை என்று சொல்லுறதை மூட்டை கட்டி வைக்க வேணும் என்று நினைக்கிறன் :lol:!

  • தொடங்கியவர்

தூறல் நாள் 63

மேடையில் பேசும்போது

பரந்த மனது..

விரிந்த கடல்...

திறந்த ஆகாயம்... என்று

தாராளமாகவே பேசுகிறேன்..

வீட்டுக்குள் நுழைந்தால்

கடுகின் அளவாய்..

கொலுவில் பொம்மையாய்...

பேசா மடந்தையாய் போகிறேன்..

புரட்சியாளன் ஆனாலென்ன..

பேச்சாளன் ஆனாலென்ன..-இல்

அவளின் ஆட்சிக்குள்..

அடிமை ஆண்தான் போல!..

சுட்டெரிக்கிறாயே சூரியனே..

என்று திட்டிவிட்டு..நிழலுக்காய்

மரத்துக்கு நன்றி சொல்லும்

மானிடா...அந்த..

நிழலுக்கு மூலம்..

மரமா...சூரியனா?...

பதினெட்டு வயது

நவரசம் நீயாக இருக்கலாம்..

ஆனால் காதல்ரசம்

மட்டும் உன்னிடம்..

கம்மியாக இருக்கிறது..

உனக்கு தேவையான

அளவு தந்து உதவ

தயாராக இருக்கிறேன்..

பெற்றுக்கொள்வாயா?...

நூறு மடங்கு

ஆசையை அடக்கமுடியாத

ஆண் மாட்டிக்கொள்வதும்..

ஆயிரம் மடங்கு

ஆசைகொண்ட பெண்

அடக்கிக்கொள்வதும்..

அகப்படாமலேயே..

தப்பிச்செல்வதும்..

பேராச்சரியங்கள்!.

சிரிப்பு மட்டும்

இல்லையென்றால்..

மனிதன் அருகில்

மனிதன் கூட

மரம்தான்..

சிரிப்பை..செயலாக்கிய

சித்தன் யார்?..

பாட்டுக் கேட்;கமாட்டாள்...

சினிமா பார்க்கமாட்டாள்..

நகைச்சுவைக்கும் சிரிக்கமாட்டாள்..

நல்ல சமையல் கூட ருசிக்கமாட்டாள்..

என் பாட்டி..அவளை

ஏன் பாட்டி என்றேன்..

தாத்தாவோடு அனுப்பி வைத்து

விட்டாளாம்.. அனைத்து

இன்பங்களையும்....

தொலைந்த வாழ்க்கை யெண்ணி

துயருறும் என் மூதாட்டி..

உன் தொலையாத காதல்..

என்னை அசர வைக்கிறது..

காதலில் ஆசையும் வைக்கிறது!.

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டெரிக்கிறாயே சூரியனே..

என்று திட்டிவிட்டு..நிழலுக்காய்

மரத்துக்கு நன்றி சொல்லும்

மானிடா...அந்த..

நிழலுக்கு மூலம்..

மரமா...சூரியனா?...

அழகான வரிகள்.

இப்படித்தான் பலசந்தர்ப்பங்களில் மனித வாழ்வில் மூலத்தை மறந்து விடுகிறோம்

  • தொடங்கியவர்

அழகான வரிகள்.

இப்படித்தான் பலசந்தர்ப்பங்களில் மனித வாழ்வில் மூலத்தை மறந்து விடுகிறோம்

ம்ம்... :rolleyes:

ம்ம்... :D

அட..மாமாவின் கண்ணில் இருந்து கண்ணீர் துளி :D ..(அவரின் கண்ணீர் துளியும்)..சிந்தும் ஒரு கவி தூறல்..அது தான் அந்த துளியை ஏந்த ஓடி வந்தனான் பாருங்கோ.. :o

"என் மேல் விழுந்த

மழை துளியே

இத்தனை நாளா

எங்கிருந்தாய்" :o

எண்டு பாடுமளவிற்கு இருக்கிறது எங்கண்ட மாமவின்ட தூறள்கள் :o ..தொடரட்டும் தூறள்கள் மாமோய் அப்பப்ப வாரேன் என்ன.. :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

சிரிப்பு துளியே

இத்தனை நாளா

எங்கிருந்தாய்

  • தொடங்கியவர்

தூறல் நாள் 64

அம்மா

என்னைப் படைத்த

பெண் பிரம்மாவே..

உன் அன்புக்கு

ஈடில்லாத உலகிலே

அலைக்கழிக்கப்பட்டுக்

கொண்டிருக்கும் ஜீவனே..

சேவகம் செய்யவேண்டிய

உன் மகன் சித்தத்தில்

தினசரி குற்றவுணர்வு

குத்திக்கிழித்துக்கொண்டிரு

  • தொடங்கியவர்

தூறல் நாள் 65

நள்ளிரவின் அமைதிக்குள்

யார் விசும்பும் சத்தம்..

நாயகனே..யாரும்

அறியாத கண்ணீரோ அட்டா

ஆறாய் ஓடுகிறதே..

அவளையன்றி வேறொரு

பெண்ணை ஏற்றிடாத மனமோ..

அவளைத் தொட்ட பின்னர்

தொடர்ந்த வினையால்

விளைந்ததிந்த ரணமோ

அவளிடம் நீ பேச பல வழிகள் உண்டு

அவளிடம் நீ பேச பல மொழிகள் உண்டு

அவளிடம் நீ பேச உனக்கு உரிமையும் உண்டு

அவளுக்குமுன் மீது ஆசை உண்டு

அவளுக்கு உயிரில் கரைய பாசமுண்டு

அவளுக்கு உறவில் நனைய மோகம் உண்டு

இது என்ன லீலை காதலர்கள்

தம்மைத் தாமே தடுக்கவில்லை

தாகங்கொண்ட கொக்கு இரண்டும்

ஏனோ நாடவில்லை..

பிரிப்பதென்ன விதியோ..சதியோ..

மதிக்கூர்மை கொண்ட குழுக்களின்

செயலோ..சீற்றங்களோ..

அவள் அங்கே...

நீ இங்கே...

அழுவதை...துயர்

எழுவதை...காண்பதே

பெரு வதை..

பேசாதவனே... காதல் மூடா..

உன் ஆண்மைதான் குருடா..

பின்னிக்கொண்ட விரல்களை வெறுக்கிறாய்..

முத்தமிட்ட உதடுகளை சபிக்கிறாய்..

குலவிக்கொண்ட கோதையையும்..

கலவிகொண்ட இரவையும் தேடுகிறாய்..

அவள் நினைவோடு வாழகிறாய்..

உன் சுயத்தை தொலைத்துவிட்டாய்..

இல்லாத மறுஜென்மக் கனவுகள் கொண்டு

இப்போது முடியாததை எப்போது கேட்கிறாய்..

இருமனம் சேர்ந்தபின் திருமணம்தானே..

இடையில் இருப்பவர் தடைக்கல் மூடா..

வீரன்தானே விலக்கிப் போடா..

முட்டத்தெரியாத காளை-காதலில்

வெல்லமுடியாத கோழை

உன்னை நினைப்பவள்

உருகி வடிகிறாள்..

கூண்டில் கிளியென

குறுகிக்கிடக்கிறாள்...

கிளியை மீட்டு வாடா...

உன் வீரம் காட்டு தோழா!!

  • தொடங்கியவர்

தூறல் நாள் 66

நீயில்லாத

வாழ்க்கையை

நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை

என்று அவன் சொன்னான்..

அவள் சொன்னாள்..

எனக்கும்தான்...

நீயுள்ள

வாழ்க்கையை நினைத்துக்கூட

பார்க்கமுடியவில்லை என்று

ஒரு துறவியிடம்..

மனிதன் வசைக்கு உள்ளாவது எப்போதென்றால்...

கற்றதை தொழிலாக்காதவன்..

கட்டியவளை தாயாக்காதவன்..

பெற்றபிள்ளையை முறையாக வளர்க்காதவன்..

வாழ்வுமுறைப் பாதை விலகியவன்..

பஞ்சமகா பாதகங்களை புரிபவன்..

யாராயிருந்தாலும் ஊர் வையுமென்றார்..

சாமி தங்களைப்பற்றி என்றவுடன்

நானா வசைக்கு பயந்து துறவியான பிறவி என்றார்

நீ

நீல வானத்தை நிறைக்கிறாய்

நீண்ட சாலையை நிறைக்கிறாய்

வீட்டுக்கூரையை நிறைக்கிறாய்

வெற்று சுவரை நிறைக்கிறாய்

மலர்ந்த இமைக் காட்சியை நிறைக்கிறாய்..

மூடிய இமை முழுவதையும் நிறைக்கிறாய்

இப்போது பெண்ணே

நீ மட்டும் தெரியும் குருடனாக்கிவிட்டாய்!

அவள் மேனி காகிதமாம்..

அவன் விரைல்கள் எழுத்தாயுதமாம்..

அவள் சொல்கிறாள்..

"என்ன வேண்டும் எழுது-வரிகள்

எண்ணவேண்டும் எழுது"என

அவன் செயல்வீரன்..

எழுதஆரம்பித்துவிட்டான் எப்போதோ..

நிலவாய்

என் கனவுகளில் தினம் எழும்

என் கனவு தேவதையே..

இரவில் வருவது

நீ மட்டுமல்ல

பல சினிமா நடிகைகள் கூடத்தான்

பகலில் வா..

உன்னை மட்டும்

நிரந்தரமாக்குகிறேன்

உறவுக்கு பகை கடனாம்..

யார் சொன்னது..

ஊருக்கே பகை

காதலாக இருக்கும்போது!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விகடகவி .................

தினசரி தூறல் நன்றாக உள்ளது .சோகம் சிலவும் தாகம் பலவும் மழையாக பொழிகிறது .

.தினமும் நனைய மிக்க ஆவலுடன் உள்ளோம்

நன்றி வணக்கமுடன்

நிலாமதி

  • தொடங்கியவர்

தூறல் நாள் 67

பெருமை பேசிக்கொண்டிருக்கும்

தமிழ்த் தாத்தா

உன் பேரன் தமிழ் மறந்ததேன் தாத்தா

என்றால்...

மகனை மேலே படிப்பானென்னு அனுப்பிவைத்தேன்..

அவன் தமிழை விற்பானென்பதை அறிந்திருக்கேன்..

என்றார்...

தாத்தா "ஐயையோ"என்கிறார்..

தந்தை"என்ன செய்வது"என்கிறார்..

தனயன்"அம்மி"என்கிறான்

கலப்பு மணங்களுக்குள்

கரைந்து போக

கலாச்சாரத்தைப் பற்றி

கவலையெதற்கு அம்மா

உன் பைந்தமிழே

பாதித் தமிழாய்

தேய்ந்துகொண்டிருக்கும் போது

வெள்ளைக்கார நாட்டில்

வேட்டி சட்டை

அவமானமா..பரவாயில்லை..

தமிழ்நாட்டில் தமிழ்

பேசுவதையே அவமானம்

என்கிறார்கள்..

பொங்கு தமிழ்

பானையில்..ஆங்காங்கே

ஏராளமான ஓட்டைகள்

அடைக்க ஆளில்லை

தமிழ்த்தாய் நெருப்பை..

பிள்ளையின்

அலட்சியப்போக்குகள்..

கசியும் நீராய்

அணைத்துக்கொண்டிருக்கிறது..

தமிழின் சுவை

அருமை அருமை

தமிழின் தொல்மை

பெருமை பெருமை

தமிழின் நிலமை

வறுமை வறுமை

தமிழை இரசிக்கும்

என் தமிழா....

நம் மொழியை கரையான்கள் போல

நம் அகதி நிலமை

அரித்துக்கொண்டிருக்கிறது

நம் அலைச்சல் நிலமை

அரித்துக்கொண்டிருக்கிறது

நம் அந்நிய தேவைகள்

அரித்துக்கொண்டிருக்கிறது

நம் அலட்சியப்போக்குகள்

அரித்துக்கொண்டிருக்கிறது

நம் மேலைத்தேய மோகங்கள்

அரித்துக்கொண்டிருக்கிறது

காப்பாற்றுங்கள்..நம் தாயின்

அடையாளத்தை ...

நம் தேசியத்தின்..

சின்னத்தை...

நம் பிறப்பின் பெருமையை

காப்பாற்றுங்கள்..

எப்படி...?

எப்படியாவது.

  • கருத்துக்கள உறவுகள்

கலப்பு மணங்களுக்குள்

கரைந்து போக

கலாச்சாரத்தைப் பற்றி

கவலையெதற்கு அம்மா

உன் பைந்தமிழே

பாதித் தமிழாய்

தேய்ந்துகொண்டிருக்கும் போது

தினசரி தூரல்கள்

தினம் தினம்

சிந்தனைகளை

தூண்டுகிறது.

தூரல் கள் அழகு விகட கவி

  • தொடங்கியவர்

தினசரி தூரல்கள்

தினம் தினம்

சிந்தனைகளை

தூண்டுகிறது.

தூரல் கள் அழகு விகட கவி

நன்றி கபி

தினசரி தூறல்களில் நனைய கொடுத்துவைக்கவில்லை என்று கவலை இன்றுடன் கலைந்தது. இன்று தெப்பமாக நனைந்துவிட்டேன்.

எனக்கு ஒரு சந்தேசகம் நீங்கள் விகடகவியா அல்லது கவிச்சுரங்கமா ?

  • தொடங்கியவர்

நன்றி :lol::o:wub:

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி உங்கள் தூறல்கள் மிகவும் அருமை. தொடர்ந்தும் நனையக் காத்திருக்கிறேன்.பாராட்டுக்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.