Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாசனை - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாசனை

--- வ.ஐ.ச.ஜெயபாலன்

அதிலாந்திக் சமுத்திரத்தின்மேல் பறந்தபோது

அவளது வாசனையை உணர்ந்தேன்.

நாங்கள் பிரிந்தபோது

வசந்தத்தைக் கொண்டுவந்த பறவைகளும்

ரொறன்ரொவை நீங்கின.

ஒன்ராறியோ ஏரியின்மீது

தெற்கு நோக்கிப் பறந்த வாத்துக்களுள்

கண்ணீரை மறைத்தபடி

நாம் விடைபெற்றோம்.

அந்த வசந்தத்தில்

சினைப் பிடித்த சல்மன் மீன்கள் நீந்திய

ஒன்ராறியோ ஏரிக்கரையின்

எந்தச் செடிகளை விடவும்

பூத்துப்போயும்

வாசனையோடும் என் படகில் இருந்தாள்.

படகை விட்டு இறங்கும்போது

ஈழத் தமிழர் தலைவிதி என்றாள்.

நாங்கள் மட்டக்களப்பின் வாவிக் கரைகளில்

சந்தித்திருக்கலாமே என்று பெருமூச்செறிந்தாள்.

வானை வெண்பறவைகள் நிறைத்தன.

ஒருகணம் போர் ஓய்ந்தது.

வடமோடிக் கூத்தர்களின் மத்தளமும்

மங்களப் பாடலும்

பாங்கொலியும் கேட்டேன்.

மீன்பாடும் முழு நிலவில்

அவள் கமழும் ஒரு படகு

நெஞ்சுள் நுளைய நெடுமூச்செறிகின்றேன்.

எங்கள் பிள்ளைகளை அறிமுகப் படுத்தவேணும்

நாங்கள் இழந்த

விருந்துகளையும் கந்தூரிகளையும்

மட்டுநகர் வாவியையும்

அவர்களாவது மகிழட்டும் என்றாள்.

வெல்க பெடியள் என்றேன்.

வெல்க நம் பெட்டையள் என்றாள்.

கைகோர்த்தும் இருவேறுலகம்.

நாங்கள் பிரிந்தபோது

மேப்பிள் மரங்கள் பசுமை இழந்தது.

கறுப்பு அணில்கள்

எதிர்வரும் பஞ்சம் உணர்ந்து

ஓக் விதைகளை மண்ணுள் புதைத்தன.

ஒவ்வொரு தடவையும்

சுவர்க்கங்களைத் தாண்டி

நினைவுகளில் முடிந்த

வண்ணத்துப் பூச்சி வழிகள் எங்கும்

மேப்பிள் சருகுகள் மிதிபட

உரித்துக் கொண்டு காரில் ஏறினோம்.

ஸ்காபரோவில் பசித்திருந்த

கொங்கிரீட் டைனசோர்களின் முன்னம்

கைவிட்டுப் பேருந்துச் சாரதிபோல் போய்விட்டாள்.

உடைகளுள் தாழம்பூ வைப்பதுபோல

என் நினைவுகளின் அடுக்கில்

அவள் தனது

இறுதி அணைப்பின் வாசனையை

இப்படித்ததன் விட்டுச் சென்றாள்.

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இக்கவிதையின் ஆரம்ப அடிகளைத்தான் கவிதை விழையாடலாமா என தலைப்பிட்டு இணைத்திருந்தேஎன். சுவே பதில் கவிதை எழுதியிருந்தார்.. நேரமுள்ளபோது எட்டிப் பாருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்ற 17ம் திகதி வாசனைக் கவிதையின் கீழ்வரும் பகுதியை வெளியிட்டு முடித்து வையுங்கள் என கேட்டிருந்தேன். சுவே மட்டும்தான் கவிதை அனுப்பியிருந்தார்.

எனது வரிகள்:

அதிலாந்திக் சமுத்திரத்தின்மேல் பறந்தபோது

அவளது வாசனையை உணர்ந்தேன்.

நாங்கள் பிரிந்தபோது

வசந்தத்தைக் கொண்டுவந்த பறவைகளும்

ரொறன்ரொவை நீங்கின.

ஒன்ராறியோ ஏரியின்மீது

தெற்கு நோக்கிப் பறந்த வாத்துக்களுள்

கண்ணீரை மறைத்தபடி

நாம் விடைபெற்றோம்.

அந்த வசந்தத்தில்

சினைப் பிடித்த சமன் மீன்கள் நீந்திய

ஒன்ராறியோ ஏரிக்கரையின்

எந்தச் செடிகளை விடவும்

பூத்துப்போயும்

வாசனையோடும் என் படகில் இருந்தாள்.

சுவேயின் வரிகள்:

என் படகில் இருந்தாள்..........

மலரும் அல்லி மலராய் அவள் முகம்!

பனிமலையின் மேலாய் எழுந்து வரும் நிலா!

மலரம்புகள் ஏராளமாய் எம்மையும் ஏரி மீன்களையும்...

கூடு திரும்பும் குருவிகளின் குதூகல கீதங்கள்!

இயல்பாய் என் விரல்கள் நீந்தி...

இவள் விரல்களுடன் .....

பல வருடங்களாய் பேசவேண்டியதெல்லாம்...

சில நொடிகளில் விரலசைவுகளில்...

மலர் முகம் மார்பிலே பெருமூச்சாய் வருட...

வலக்கரம் மெல்லிடையில் ஆதரவாய் தவள...

விழிகள் திறந்திருந்தும் குருடாய்...

இதழ்கள் மூடியிருந்தும் மௌனமே வார்த்தைகளாய்...

செவிக்கு இமையுமில்லை எதையும் கேட்கவுமில்லை!

கால்களுக்கு கால்களே விலங்குகளாய்...

காலத்தையும் கடந்து நடக்கின்றோம்!

ஒன்ராரியோ நீண்டு சென்று கொண்டிருக்கின்றது!

அதன் மேல் அழகாய் வெண்ணிலா!

ஒய்யாரமாய் விழுகிறது ஓர் அருவி!

மிதக்கும் படகையும் நனைக்கிறது சில துளிகள்.

சுவேயின் கடைசி வரிகள் எனக்குப் பிடித்திருந்தது .

எனது கவிதையையும் சுவேயின் கவிதையையும் வாசித்துப்பாருங்கள்.

ஒன்ராறியா ஏரி மீதிருந்து

மட்டக்களப்பு வாவிக்கரை பற்றி

பேசும் கவிதையும், காதலுணர்வும்

அருமை.

சுவே நல்ல கவித்துவமிக்கவர்.

அவரின் இறுதி வரிகளும்

அதன் கவித்துவ அழகும்

சிறப்பாய் உள்ளது. வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்ராறியா ஏரி மீதிருந்து

மட்டக்களப்பு வாவிக்கரை பற்றி

பேசும் கவிதையும், காதலுணர்வும்

அருமை.

சுவே நல்ல கவித்துவமிக்கவர்.

அவரின் இறுதி வரிகளும்

அதன் கவித்துவ அழகும்

சிறப்பாய் உள்ளது. வாழ்த்துக்கள்.

மகிழ்ச்சி இளைஞன். கனடா பற்றிய எனது காவிய நாவலின் பகுதியாக நான் மேற்கொள்ளும் பரிசோதனைகளில் இக் கவிதையும் ஒன்று. சினிமா பாட்டை மட்டுமே கவிதைகளாகக் கொண்டாடும் ஈழத்தமிழர் மத்தியில் பெரிய கவிய முயற்ச்சிகள் பெரிய சவால். தமிழகத்தில் நல்ல கலைகளின் ஆர்வலர்கள் பலருடன் உங்களைப் போன்று விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில ஈழத்தமிழர்களும்தான் கத்திரமான படைப்புகளை ஆதரிக்கிறீர்கள். இதனால் காத்திரமாக எழுதுகிற ஒரு சிலர் தொடர்ந்து தமிழக வாசகர்களை நோக்கியே எழுத நிர்பந்திக்கப் படுகிறார்கள். நான் அடுத்த தலைமுறையை நம்பி வணங்காமுடியாக எழுதுகிறேன். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள சாஸ்திரிக்கு

வ.ஐ.ச .ஜெயபாலன், சேரன், ஆகிய இந்த மாபெரும் கவிஞர்கள் தங்களைத்தவிர வேறுயாரும் ஈழத்தில் கவிஞர்களாக இருப்பதாக அறிவிப்பதில்லை. சொல்வதுமில்லை.

அடுத்ததாய் ஜெயபாலன் தான் மூச்சுவிடவே சிரமப்படுகிறார் இதக்கை எப்பிடி மற்றவை பற்றிய மூச்சைச விடுகிறது.சரி வாசுதேவன் தொடந்து எடுத்து விடுங்கோ - என் மதிப்புக்குரிய நகைச்சுவை எழுத்தாளர் சாஸ்திரியின் அறிக்கை இது.

மதிப்புக்குரிய சாஸ்திரிக்கு, நீங்கள் சொல்லுவது எனக்கு புரியவில்லை. சேரன் பற்றி சேரந்தான் பேசவேண்டும். என்பற்றி பேசுகிறேன். கவிஞர்களை விமர்சிக்க அறிமுகப் படுத்த நான் விமர்சகனோ பல்கலைக் களகமோ இலக்கிமன்றமோ அல்லது கலை இலக்கிய அதிகார பீடமோ அல்ல.உலகில் கலைஞர்களை இவர்கள்தான் விமர்சித்து அறிமுகப் படுத்துகிறார்கள். பாரதியோ பப்லோ நெரருடாவோ பாரதிதாசனோ காசி ஆனந்தனோ, அல்லாம இக்பாலோ புதுவையோ அல்லது நானோ காலம் காலமாக எங்கள் எங்கள் கலை முயற்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். இருந்தும் முன்னுரைகள் வளங்குதல் வெளியீடுகளில் இலக்கிய கலந்துரையாடல்களில் கலந்து போசுதல் என்பவற்ரைச் செய்து வருகிறோம். அவற்றை நீங்கள்தான் தேடி வாசிக்க வேண்டும். உலகக் கவிஞர்கள் கலை இலக்கிய விமர்சனம் கலை இலக்கிய கர்த்தாக்கலை அறிமுகப் படுத்துவது என்று வேறோரு துறை வேலையைச் செய்ததில்லை. இதற்க்காக அவர்கலையும் திட்டுவீர்களா. இதுபற்றி நீங்கள் அறிய அது தொடர்பான நிபுணர்கள் பதிரிகைகள் சஞ்சிகைகள் இலகீய ஆய்வு மலர்களில் புத்தகங்களில் நிறைய எழுதியிருக்கிறார்கள் வாசியுங்கள். வெளியீடுகளும் அல்ல. உலக எழுத்தாளர் கவிஞர்கள் நடை முறை இதுதானே. நியாயமான ஒரு காரனத்துக்கு விமர்சியுங்கள் சாஸ்திரி. வெறுமனவே ஏன் என்மீது இவ்வளவு வெறுப்பை கக்குகிறீர்கள். நல்ல நகைச்சுவை உள்ள உங்களிடம் நிச்சயமாக வக்கிரம் இருக்காது என்று நம்புகிறேன். என்றாலும் இது ஒரு சிக்கல் தயவுசெய்து தவிருங்கள். நான் மூச்சுவிட சிரமப் படுவதாக ஏன் கற்பனையில் மகிழ்கிறீர்கள். எனது மூச்சோ உங்கள் மூச்சோ எப்ப சிரமப் படும் எப்ப அடங்கும் என்பது எங்கள் கையிலா சாஸ்திரி இருக்கு_ நான் உங்கள் நகச்சுவையை விரும்பி வாசிக்கிறவன். உங்கள் மனசில் என்பற்றி ஏதும் வக்கிரம் இருந்தால் அதை கழுவிவிடுங்கள். உங்கள் நட்பையே நாடுகிறேன். நான் எழுத்தை விட்டுவிட்டு அரசியல் ஆய்வுகளில் நேரத்தை எரித்துக்கொண்டிருக்கிறேன். ஒருகாலம் என் பணிகளை அறிகிறபோது உங்கள் தப்பான எழுத்துக்காக மனவருத்தப் படுவீர்கள். தொடர்ந்தும் யாழ்க்களத்தில் எழுதி உங்கள் வெறுப்பைச் சம்பாதிக்க விரும்பவில்லை. விடைபெறுகிறேன். உங்களுக்கு எனது புதுவருட நல்வாழ்த்துக்கள் சாஸ்திரி.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஜெயபாலன் உங்களிற்கு சம்பத்தப்பட்ட பகுதியிலேயெ பதிலும் எழுதியுள்ளேன். உங்களில் இதுவும் ஒரு பிரச்சனை வேறொரு பகுதி சம்பத்தப்பட்ட விடயத்தை சம்பந்தமே இல்லாத பகுதிகளில் எல்லாம் பதில் எழுதுவது ஆகும் இது முன்னரும் செய்துள்ளீர்கள். இது களவிதிக்கும் பொருந்தாதது ஆகும். அதுசரி எனக்கொரு சந்தேகம் முன்பொருமுறை நீங்கள் மாற்றுகருத்தாளர்களையும் தேசியத்தின்பால்

திருப்புவதற்காகவே அவர்களுடன் கருத்தாடுவதாகவும் பாடு படுவதாகவும் எனக்கு யாழிலேயெ எழுதியிருந்தீர்கள். சாதாரணமான ஒரு பொதுக்கருத்தையே உங்களால் சீர்தூக்கிபார்த்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மூச்சுக்கு மூன்றுதரம் முன்கோபத்துடன் முரண்படுகிற உங்களால் எப்படி மாற்றுக்கருத்து மாணிக்கங்களின் மண்டை காயும் விதண்டா வாதங்களிள்கு உங்களால் பொருத்தமான வாதத்தை வைக்க முடியும் அந்தளவு பொறுமை உள்ளவராக தெரியவில்லையே ஊதாரணம் சோபா சக்தி உங்கள் நண்பர் அவரின் உலுத்தல்களிற்கு உங்களால் உறுத்தல்களை ஏற்படுத்த முடியுமா??? நான் நினைக்கவில்லை

Edited by sathiri

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி எனக்கொரு சந்தேகம்

நீயுமா சாத்திரி? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடே!

ஜெயபாலனும் யாழ்க்களத்தில் எழுதுகிறாரா?

பிந்தியென்றாலும் இப்போது வரவேற்கிறேன்.

போகிறபோக்கில் கண்டுவிட்ட உங்களிடம் இப்போதைக்கு ஒரு கேள்வி.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னான உங்களின் முதலாவது வன்னி வருகையின்போது 'ஜெயசிக்குறு காவியம்' எழுதப்போவதாகச் சொல்லியிருந்தீர்கள்.

அது என்னவாயிற்று?

தொடங்கினீர்களா?, சரியான ஒத்துழைப்புக் கிடைத்ததா? இப்போதும் கிடப்பிலுள்ளதா? அல்லது கைவிட்டுவிட்டீர்களா?

மீண்டும் கேள்விகளோடு வருவேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடடே!

ஜெயபாலனும் யாழ்க்களத்தில் எழுதுகிறாரா?

பிந்தியென்றாலும் இப்போது வரவேற்கிறேன்.

போகிறபோக்கில் கண்டுவிட்ட உங்களிடம் இப்போதைக்கு ஒரு கேள்வி.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னான உங்களின் முதலாவது வன்னி வருகையின்போது 'ஜெயசிக்குறு காவியம்' எழுதப்போவதாகச் சொல்லியிருந்தீர்கள்.

அது என்னவாயிற்று?

தொடங்கினீர்களா?, சரியான ஒத்துழைப்புக் கிடைத்ததா? இப்போதும் கிடப்பிலுள்ளதா? அல்லது கைவிட்டுவிட்டீர்களா?

மீண்டும் கேள்விகளோடு வருவேன்.

வணக்கம் நல்லவன். நான் என்ன பணிகளோடு மாய்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும் தானே. இப்ப விடுதலைப் போராட்டம் வெல்ல வேணும். தமிழரும் முஸ்லிம்களும் வடக்கும் கிழக்கும் சமத்துவமாக இணைந்து முன்னைவிட உறுதியாக ஒற்றுமைப் பட வேணும். இதற்க்கு சமூக பொருளாதார அரசியல் ரீதியாகன வெற்றிகள் அவசியம். அதியத்தின் இவை இப்ப முக்கியம்.

தோழன் கருணாகரன் ஆணையிறவு காவியம் எழுதுகிறான் அவன் முயற்ச்சியும் வெற்றி பெறவேண்டும்.

யெயசுக்குறு என்கனவுக் காவியம். ஒளியாக அலையும் பெண் மாவீரர் ஒருவரது கதையாக உரை நடையில் பெரும் பகுதி எழுதிவிட்டேன். முடிக்க லண்டன் நூலகத்தில் ஓரிரு மாதம் வாசிக்க வேணும். இப்ப வசதியில்லை. ஆஅய்வுகளில்லாமல் என்னால் எழுத முடியாது. 1824 ஊடுவில் மகளிர் கல்ல்லூரியில் இருந்து 2004புலம் பெயர்ந்த கனடிய வாழ்வுவரைக்குமமான பெரு நாவல் ஒன்று கனடாவில் என் ஆய்வுகலை பூர்த்தி செய்ய வழியில்ல்லமல் தடைப்பட்டிருக்கு. முதலில் அவற்றைப் பூர்த்தி செய்ய முயல்கிறேன். ஆய்வுரீதியானதும் பணிவில்லாததுமான விமர்சனமும் விடுதலைக்கு உறுதியான ஆதரவுமான எனது எழுத்தும் நிலைபாடும்தான் உங்களுக்கெல்லாம் தெரியுமே. 2008ல் எனது 2 நாவல்களும் ஒரு காவியயமும் முடிக்கவேணும். கவிஞர்களது எதிர்கால திட்டங்களை நம்ம்பமுடியாது என்பார்கள்.

Edited by poet

யெயசுக்குறு என்கனவுக் காவியம். ஒளியாக அலையும் பெண் மாவீரர் ஒருவரது கதையாக உரை நடையில் பெரும் பகுதி எழுதிவிட்டேன். முடிக்க லண்டன் நூலகத்தில் ஓரிரு மாதம் வாசிக்க வேணும். இப்ப வசதியில்லை. ஆஅய்வுகளில்லாமல் என்னால் எழுத முடியாது. 1824 ஊடுவில் மகளிர் கல்ல்லூரியில் இருந்து 2004புலம் பெயர்ந்த கனடிய வாழ்வுவரைக்குமமான பெரு நாவல் ஒன்று கனடாவில் என் ஆய்வுகலை பூர்த்தி செய்ய வழியில்ல்லமல் தடைப்பட்டிருக்கு. முதலில் அவற்றைப் பூர்த்தி செய்ய முயல்கிறேன். ஆய்வுரீதியான பணிவில்லாத விமர்சனமும் விடுதலைக்கு உறுதியான ஆதரவுமான எனது எழுத்தும் நிலைபாடும்தான் உங்களுக்கெல்லாம் தெரியுமே. 2008ல் எனது 2 நாவல்களும் ஒரு காவியயமும் முடிக்கவேணும். கவிஞர்களது எதிர்கால திட்டங்களை நம்ம்பமுடியாது என்பார்கள்.

வணக்கம் வ.ஐ.ச.ஜெயபாலன் அவர்களே,

உங்களை போன்ற கலைஞர்களை வாழ்த்த எனக்கு உரிமை உண்டே தெரியவில்லை, ஆனால் உங்கள் ஆசைகள்,படைப்புக்கள் அனைத்தும் நன்றாக அமைய இந்த சிறியவளின் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நீயுமா சாத்திரி? :wub:

என்ன ஜெயபாலன் யூலியஸ் சீசர் நாடகமா போகுது :unsure::wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1. அனைத்தும் நன்றாக அமைய இந்த சிறியவளின் வாழ்த்துக்கள் 2.என்ன ஜெயபாலன் யூலியஸ் சீசர் நாடகமா போகுது :unsure::wub:

இனியவளுக்க்கு, கலைஞன் நிலையில் காலமும் இடமும் Time and space இல்லை. அதனால் வயது தகுதி இடைவெளிகள் ஏதுமில்லை . நாளைக்கு என எழுதும் எனக்கு இளையவர்கள் ஏற்றுக் கொண்டு வாழ்த்தக் கொடூத்து வைத்திருக்க வேண்டும்.

நாடகமே உலகம் சாத்திரி.

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதிலுக்கு நன்றி கவிஞரே.

என் பார்வையில் நீங்கள் ஜெயசிக்குறு காவியத்தை முன்பே முடித்திருக்க வேண்டும். இனி முடிப்பது முழுமையற்றதென்பது என் கணிப்பு. அவற்றோடு தொடர்புடையவர்களோடு நேரடியாக நின்று எழுதுவதிலுள்ள முழுமை தொலைதேசத்திலிருந்து எழுதுவதில் வராது. வன்னியில் நின்று எழுதுவதற்கான காலம் போய்விட்டது.

ஆனையிறவுக் காவிய முயற்சி நிலாந்தனிடமிருந்து வருமென்று எதிர்பார்த்தேன். பரவாயில்லை, நிலாந்தன் மண்பட்டினங்கள் தந்துவிட்டதால் கருணாகரனிடமிருந்து ஆனையிறவு வரட்டும். நிச்சயம் செறிவான, காத்திரமான படைப்பாக அமையுமென்று கருதுகிறேன்.

ஆனையிறவுக் காவியம்கூட மிகமிகக் காலந்தாழ்த்திய முயற்சிதான். ஏனென்றால் தொடர்புடையவர்கள் பலர் இன்று உயிரோடு இல்லை.

குளத்தில் மூழ்கி மாண்ட தளபதி ராஜசிங்கன் இல்லாமல் இத்தாவில் சண்டையோ, ஆனையிறவு வெற்றியோ முழுமையில்லை. பின்னர் விபத்தில் மாண்ட வீரமணி இன்றி பல வெற்றிகளில்லை. இவர்கள்போல் இன்னும் பலர் இன்று இல்லை.

தனியொரு வசனநடை ஆவணமாகப் பதிவதாயின் தரவுகளும், தகவல்களும் ஓரளவு போதுமானவை.

ஆனால் கவிதை மொழியில் காவியமாக்க வேண்டின் தரவுகள், தகவல்கள் மட்டும் போதுமானவையன்று. சமர் வழிநடத்திய தளபதிகளின், போராடிய போராளிகளின் உணர்வுகளை நேரடியாகக் கேட்டு அனுபவித்து எழுதுவதற்கும், தாள்களில் தரவுகளைத் திரட்டிக் காவியமெழுதுவதற்குமுள்ள வித்தியாசம் மிகப்பெரியது. அவ்வகையில் கருணாகரனின் முயற்சிகூட மட்டுப்படுத்தப்பட்டது. ஏனென்றால் ஆனையிறவு வெற்றியோடு தொடர்புடைய பெரும்பாலானவர்கள் இன்றில்லை. வன்னியிலிருக்கும் கருணாகரனுக்கே முழுமையான காவியம் படைக்க முடியாத நிலையில், வெளிநாட்டில் இருக்கும் ஜெயபாலனுக்கு இன்னும் சிக்கல்கள் இருக்கின்றன. அதுவும் ஆனையிறவுக்கும் முந்திய, காலத்தால் நீண்ட ஜெயசிக்குறு எதிர்ச்சமரைக் காவியமாக்குவது இன்னம் சிரமமே.

ஆனாலும் யாராவது ஒருவர் செய்தே ஆகவேண்டும். அப்படியொரு படைப்பே இல்லாமலிருப்பதைவிட முக்கால்வாசித் திருப்தியோடாவது ஒரு படைப்பு வருவது வரவேற்கத்தக்கதே. காலம் பிந்தப் பிந்த இன்னும் சிக்கல்கள் வந்துகொண்டிருக்கும்.

ஜெயசிக்குறு காவியம் என்ற உங்கள் முயற்சி முழுமையடைய என் வாழ்த்து.

** இந்தக் 'கனவுக்காவியம்' என்ற சொல் எனக்குப் பயத்தை ஏற்படுத்துகிறது. பொதுவாக இப்படிச் சொல்வது, 'நிறைவேறாத ஒன்றை'க் குறிப்பது போன்று தோன்றுகிறது. கமலகாசன் 'மருதநாயகம் எனது கனவுப்படம்' என்று வருடக்கணக்கில் சொல்லிவருவது தொடக்கம் பல எடுத்துக்காட்டுக்கள் இந்த 'கனவு' தொடர்பில் உண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதிலுக்கு நன்றி கவிஞரே

என் பார்வையில் நீங்கள் ஜெயசிக்குறு காவியத்தை முன்பே முடித்திருக்க வேண்டும். இனி முடிப்பது முழுமையற்றதென்பது என் கணிப்பு. அவற்றோடு தொடர்புடையவர்களோடு நேரடியாக நின்று எழுதுவதிலுள்ள முழுமை தொலைதேசத்திலிருந்து எழுதுவதில் வராது. வன்னியில் நின்று எழுதுவதற்கான காலம் போய்விட்டது.

தோழரே, சிலப்பதிகாரம் இலியட் போன்ற காவியக்கள் வேறு நல்லதங்காள் கதைபோலாக் கதைப் பாடல்கள் வேறு. பலர் கதைப்பாடல்களைக் காவியங்கள் என்று நினைக்கிறார்கள். அது பெரும் தவறு. கதைப் பாடல்கள்போல கதைகளையல்ல, காலப் படிமங்க்களையே காவியங்கள் கதையாக்குகிறது. கதைக் கவிதைகள் சமகால மனிதரிடையில் தமது பாத்திரங்களைத் தெரிவு செய்கிறது. காவியங்கள் உலக்களாவிய தேஎசமளாவிய சமகால்ல மாந்தரின் குணாம்சங்களை அவர்களதுசவால்ககள்ளுடனும் சரி பிழைகளோடும்ம் போராட்டங்களோடும் விமர்சனரீஇதியாக காவிய மாந்தர்களாக்க வடித்தெடுக்கிறது. எல்ல முன்னணிக் காவியங்களூம் ப நூறு வருடச் சித்திரங்களைக் கொண்டே எழுதப் படுகிறது. பாண்டவம் பல ஆயிரம் வருடம் வாய்வழி செளித்த கதைகளல்லவா. கதைப் பாடலுக்கு நாள் போயிருக்கலாம் நிச்சயம்மாக காவியத்துக்கு நாள் போகாது.

இதன் அர்த்தம் கதைப்பாடல்களுக்கு இலக்கிய அந்தஸ்து இல்லையென்பதல்ல. ஆனால் அவை இரண்டும் வெவ்வேறானவை என்பதுதான்.

நான் வன்னி வந்த போது ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கவும் களப் பணி செய்யவும் பணமிருக்கவில்லை. விமர்சனங்களோடும் சத்தியத்தினோடும்தான் காஅவியம் எழுத முடியும் என்றதை சொல்லியிருந்தேனே. அறிந்திருபீர்கள் அல்லவா. நண்பர்களின் விமர்சனம் சார் படைப்புகளுக்கும் ஏனையவர்களின் விமர்ச்சன படைப்புகளுக்கும் இடையில்தான் ஏமது காலத்தின்ன் தெரிவு உள்ளது. வரலாஅறு முழுவதுமே பிரசாரங்கள் கலைப் படைப்பாக நிலைக்கவில்லை ஏன்பதையே சொல்ல்கிறாது.

ஜெயசுக்க்குறு A9 பற்றிய கதையாலவா. A9 வழியே இரத்தம் சிந்திய படி நடந்த தமிழர்களும் கண்ணிர்ர் சிந்திய படி நாடாந்த மூஸ்லிம் மக்களும் தாயகம் திரும்புவதையும் தமிழரும் முஸ்லிம்களும் வடட்க்கும் கிழக்கும் மீண்டூம் சமத்துவமாக இணைவதையும் உயிர் தியாகம் செய்த எங்கள் போராளிகள் சாகாவரம் பெறுவதையயுமே காவியக் கவிமனசு கனவு காணும் இல்லையா நல்லவன்??.

நல்லவனுக்காக என் சிறு முயற்ச்சி ஒன்று.

http://noolaham.net/library/books/03/278/278.pdf

( தொடரும்)

.

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிஞரே,

பதிலுக்கு நன்றி.

காவியம், கதைக்கவிதை என்பவற்றை விவரித்ததற்கு நன்றி. ஆனால் எனக்கு இன்னும் முழுமையான தெளிவில்லை.

நிற்க,

'ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்' நான் ஏற்கனவே வாசித்திருந்தது தான். வன்னியில் உங்களைச் சந்திக்கும் முன்பே அப்படைப்பையும் 'நெடுந்தீவு ஆச்சிக்கு' ஐயும் வாசித்திருந்தேன். அவைபற்றி அப்போது உங்களிடம் குறிப்பிட்டுமிருந்தேன்.

'ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்' நீங்கள் சொன்ன எந்த வகைக்குள் வருகிறது?

நானெதிர்பார்த்த ஜெயசிக்குறு காவியம் இதே நடையில் இருக்குமென்றுதான் நினைக்கிறேன்.

இரண்டிலுமே பாலியாற்றுக்குப் பங்குண்டு. 'ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்' இல் பாலியாறு மிகமிக முக்கிய பாத்திரம். ஜெயசிக்குறுவில் அவ்வளவுக்கு இல்லாவிட்டாலும்கூட பாலியாறு முக்கியமானதுதான். நீங்கள் ஜெயசிக்குறு காவியத்தில் எழுபதுகளின் பாலியாற்றைப் பாடுவீர்களா? அந்தக் காலத்தில் கோடையிலும்கூட பாலியாற்றில் நீர் தேங்கி நின்றிருக்கக் கூடும். ஆனால் ஜெயசிக்குறுவில் கோடையில் வறண்ட பாலியாற்றில் போராளிகள் நிலம்தோண்டித்தான் நீரெடுத்தார்கள்.

பாலியாறு பற்றிய வர்ணனையிற்கூட "காலம்" தாக்கமேற்படுத்தியிருப்பதாக

ஈழத்து போராட்டத்தைப் பற்றி கவிதை எழுதுற கவிஞர்களிடம் கேட்க வேணும் எண்டு நீண்ட நாளாக ஒரு கேள்வி...

நீங்கள் எழுதும் கவிதையின் நோக்கம் என்ன? ஆதிகாலத்தில் ஆவணப்படுத்தல் வசதியில்லாத போது கவிதை கதை மூலம் வரலாற்றை அடுத்த சந்ததிக்கு பரப்பி ஞாபகப்படுத்தலை இலகுவாக்கி காவ முயன்றார்கள்.

சரி மக்களின் உணர்வுகளை தூண்ட எழுதிறீர்களா? அப்பிடிப் பாத்தாலும் கவிதைகள் தான் தற்கால வசதிகளின் படி சிறந்த அணுகு முறையா அதற்கு?

ஏனைய இனத்தவர் நோக்கிய பிரச்சார தேவைக்காக எழுதுகிறீர்களா? புதுவை இரத்தினதுரையின் கவிதைகளைத் தவிர வேறு எதுவும் மொழிபெயர்க்கப்பட்டு வந்ததாக தெரியவில்லை.

எம்மைப் போல் புதுவை இரத்தினதுரையின் lyrics ஆம் என்று போட்டு பிறநாட்டவர் மினக்கட்டு இருந்து கேட்டு விளக்கம் பெறப்போகினமோ? அவர்களிற்கு அதற்கான motivation என்ன? இசை மெட்டு என்று ஏதாவது கவர்ச்சி கரமாக தனித்துவமாக இருக்கா?

தமிழில் கவிதை வடிவில் எழுதப்படுபவை எப்படிப்பட்ட நோக்கத்தை நிறைவு செய்கிறது தற்கால உலகிலோ எதிர்கால உலகிலோ?

கங்கை அமரனின் மாசத்தில 3 நாள் ஒதுக்கனும் பொதுவாக போன்ற கவிதைகளோடு போட்டிக்கு எழுதிறியளோ இல்லாட்டி அதைவிட தேவை ஏதாவது இருக்கோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரு குறுக்கால போவானுக்கு,

கவிதை அவசியமா இல்லையா என்கிற கேழ்வியை கலை வரலாற்று நிபுணர்களும் கலை இலக்கிய பேராசிரியர்களிடமும் விமர்ச்சகர்களிடமும்தான் நீங்கள் கேட்கவேண்டும். அது என் துறையல்ல. எனது கவிதைகள் தொடர்பான கேழ்வியென்றால் என் கருத்தைக் கூறலாம்.

தோழர் நல்லவனுக்கு, உங்களுக்கு நீண்ட பதில் எழுதி துர் அதிஸ்டவசமாக அழிந்து போய்விட்டது மீண்டும் எழுத அவகாசம் வேண்டும்.

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்கால போவான்,

நீங்கள் 'ஆஸ்தான கவி' புதுவைக்கும், இன்னும் அவரோட சேந்த ஆக்களுக்கும் சேர்த்து நுள்ளிறமாதிரிக் கிடக்கு.

இது நாரதரால் இடப்பட்ட கருத்தன்று; நல்லவனால் இடப்பட்டது. :(

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

புதுவையின் கவிதைகளை ஏன் மொழிபெயர்த்தார்களென்பது தெரியுமா குறுக்காலபோவாரே?

புலம்பெயர்ந்த, தமிழ் தெரியாத இளையதலைமுறையை அடைவதற்கா?

மேற்குலக ஆங்கிலச் சமூகத்தை அடைவதற்காகவா?

முக்கிய விடயமென்னவென்றால் புதுவையின் கவிதைகள் தொன்னூறு வீதம் களத்திலுள்ள மக்களுக்கானவை. தன்னிடம் திறமையிருந்தும் அதைத்தாண்டிய முயற்சியை அவர் செய்யவில்லையென்பதே என் கருத்து. இருமாதத்துக்கொருமுறை உலைக்களம் எழுதுவதும், வெளிச்சத்துக்கு ஒன்றிரண்டு கவிதை எழுதுவதும்தான் அவருடைய கடமையென கடந்த பதினைந்து வருடங்களாகச் செயற்பட்டு வருகிறார். அதைவிட்டு காத்திரமாக அவர் செய்தவை, பாடல்கள் எழுதுவதுதான். கவிதையில் தனது கூண்டுக்குள்ளிருந்து அவர் வெளிவரவேயில்லை.

Edited by nallavan

புதுவை அய்யாவை அவமதிக்க எழுதவில்லை. அவர் உணர்ச்சிக் கவிஞராக மக்களை எழுச்சி கொள்ள வைக்க எழுதுகிறார் என்று விளங்குது. அவற்றை இரசித்திருக்கிறன். ஆனால் கவிதை என்ற இரசனைக்கு அப்பால் அவற்றை வாசிப்பவர் மீது இன்றைய உலகில் அது ஒரு பலமா நீண்டகால தாக்கத்தை தூண்டுமா உண்டு பண்ணுமா என்பது தான் எனது கேள்வி. ஏன் என்றால் முன்னைய காலங்களில் வேறு அணுகுமுறைகள் இல்லாததால் கவிதை என்பது சரியான வடிவமாக இருந்திருக்கிறது. ஆனால் இன்று நாம் வேறு பல வடிவங்களால் வரும் பிரச்சாரங்கள் விளம்பரங்களைப் பார்த்து எமது உளவியல் பழக்கப்பட்டு விட்டது இன்னமும் பழக்கப்பட்டு வருகிறது. ஏனவே பண்டைய காலங்களில் கவிதை மக்களின் மனங்களில் செலுத்திய தாக்கத்தை பலாபலனை இன்றும் உருவாக்குமா? நிகழச்சிகளிற்கு சம்பிரதயாப்படி போட, வானொலியில போட பாட்டு வேணும் எண்டு எழுதிறதும் எண்டா விளங்குது. உவற்றுக்கு அப்பால் உண்மையான தாக்கம் என்று இருக்க முடியுமா இன்றய உலகில்? இப்புடி மக்களை எழுச்சி கொள்ள வைக்க சிந்திக்க வைக்க என்பது பற்றி கவிதைகளின் பயன்பாடு என்பது ஒரு விடையம்.

அடுத்து வரலாற்றை கவிதையால் பதிவு செய்ய முயல்றம் என்பது.

பண்டைய காலங்களில் ஆவணப்படுத்தும் வசதிகள் இல்லாத காலத்து அணுகுமுறையை இன்று ஏன் நாம் பாவிக்க முனைகிறாம்? முன்னைய வரலாறுகளை கவிதை இலக்கியம் மூலம் படிச்சனாங்கள் அப்படி நாங்களும் இண்டைக்கு செய்யிறம் என்றியள் அது தான் விளங்கவில்லை. முன்பு வேறு வசதிகள் இருக்கவில்லை வரலாற்ற பதிந்து வைக்க அடுத்த சந்ததிக்கு காவ. இன்றய அவசர உலகில் கவிதைக்கால யாராவது வரலாறு படிக்க முனைவானா வேறு வசதிகள் இருக்கும் போது? வேறு வசதிகளால் அதிக விபரங்களால் ஆவணப்படுத்தக் கூடிய இலகுவாக விளங்கக் கூடிய முறைகளில் உள்ளவை தான் இலகுவில் பரவும் வரலாறாக ஏற்றுக்கொள்ளப்படும் அது பொய்யாக தவறாக இருந்தாலும்.

உதாரணத்திற்கு நெப்போலியன் அலெக்சாண்டர் காலத்து போர்கள் சமர்களின் வரலாறுகளை சொன்ன இலக்கியங்கள் ஒப்பீட்டளவில் எத்தனை முதலாம் இரண்டாம் உலக யுத்தங்களின் போக்லண்ட் முதல் பால்கன்ட் யுத்த வரலாற்றைச் சொன்ன இலக்கியங்கள் கவிதைகள் எத்தனை?

பண்டைய காலத்தில தமிழர் இலக்கியம் எழுதினவை அதுக்காலான் அவையின்ரை வரலாறு படிச்சனாங்கள். அதுக்குள்ளை வேணும் எண்டா வரலாற்றுத்துறை இலக்கியத்துறை பேராசிரியர்களிட்டை விமர்சகர்களிட்டை கேட்டுப்பாருங்கோ என்றியள். சொந்த ஆசைக்கு சம்பிரதாயத்துக்கு எழுதுறம் எண்டு சொல்லுங்கோ. அதைவிட்டுட்டு பிரச்சாரத்துக் எழுதுறம் ஆவணப்படுத்த எழுதுறம் எண்டு பந்தா பண்ணாதேங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய காலத்தில தமிழர் இலக்கியம் எழுதினவை அதுக்காலான் அவையின்ரை வரலாறு படிச்சனாங்கள். அதுக்குள்ளை வேணும் எண்டா வரலாற்றுத்துறை இலக்கியத்துறை பேராசிரியர்களிட்டை விமர்சகர்களிட்டை கேட்டுப்பாருங்கோ என்றியள். சொந்த ஆசைக்கு சம்பிரதாயத்துக்கு எழுதுறம் எண்டு சொல்லுங்கோ. அதைவிட்டுட்டு பிரச்சாரத்துக் எழுதுறம் ஆவணப்படுத்த எழுதுறம் எண்டு பந்தா பண்ணாதேங்கோ.

நன்றி குறுக்காலபோவான். . நீங்கள் சிந்தனை எனக்குப் புரியவில்லை. நீங்கள் எழுதுவது எனது அறிவுக்கு எட்டவில்லை. அதனால் இத்தோடு விவாதத்தை விட்டுவிடுவோம்.

"If a man's livelihood depends on their not understanding something, you can pretty much bank on their not understanding it." எண்டமாதிரி கவிஞர்மாருக்கு இதுகளை விளங்க முடியாது இருக்கிறது நல்லா விளங்குதுங்கோ. இதுக்கு மிஞ்சி என்னத்தை சொல்ல விட்டுவிடுவோம். :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்கால போவான்,

உங்களின் வினாவல்கள் மகிழ்வூட்டுவதாகவும் அ-தமிழாகவும் உள்ளன. மோட்டுத்தனமாகக் கேள்விகளைக் கேட்டு அவமதிக்கப்புடுவதில் உங்களுக்கு ஏனிந்த ஆனந்தம் ? உங்களின் புத்திக் கூர்மை தமிழ் மனங்களில் ஆத்திரத்தை ஊட்டக்கூடும் என்பதை நீங்கள் நன்றாகவே அறிந்திருந்தும் ஏன் "றிஸ்க்" எடு;க்கிறீர்கள் ?

புகழ்பவர்களையும், புனைபவர்களையும் தான் தமிழ் உலகம் தலைதூக்கும் எனபதை நீங்களும் என்போல் அறிவீர்கள் தானே. நாமும் தமிழர்கள்தானெனும் தமிழர்களின் "மனநிலைபற்றிய" உண்மையைக் கூறுவதில் நமக்கேதும் ஆபத்தில்லையெனினும் நாம் எதற்காகப் பகையை வளர்த்துக்கொள்ளவேண்டும் ?

  • கருத்துக்கள உறவுகள்

நன்பரே! நீங்கள் ஊரின் பின்னனியில் காதலைக் கலந்து கோலம் போட்டுள்ளீர்கள். மிகவும் நன்று.

:lol::wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்பரே! நீங்கள் ஊரின் பின்னனியில் காதலைக் கலந்து கோலம் போட்டுள்ளீர்கள். மிகவும் நன்று.

:(:(

பரதேசி குறுக்காலபோவான் உங்கள் தனிப்பட்ட கருத்துக்களுக்காக நன்றி, சுவேயின் ரசனைக்கும் நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.