Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடப்பாவிகளா கோடிக்கணக்கான தமிழ் சனத்துக்கு ஒவ்வொருநாளும் இப்பிடியா படம்போட்டு காட்டுறீங்கள்?

Featured Replies

வணக்கம்,

கடைசியா உன்னாலே உன்னாலே என்ற தமிழ் படத்தை நாலு மாதத்துக்கு முன்னம் தீபம் தொலைகாட்சி ஊடாக ஓசியாக பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்து இருந்தது. நான் உன்னாலே உன்னாலே படத்தில் உள்ள அழகிய பாடல்களிற்காகவே அந்தப்படத்தை சான்ஸ் கிடைத்தபோது மிஸ்பண்ணாமல் பார்த்து இருந்தேன்.

நேற்று கிறிஸ்மஸ் தினமன்று வீட்டில் குந்திக்கொண்டு இருந்துவிட்டு ஏதாவது வித்தியாசமாக செய்வம் எண்டு நினைச்சுவிட்டு பக்கத்தில இருக்கிற எனது ஒண்டுவிட்ட அண்ணா ஒருவரிண்ட வீட்டுக்கு சென்றேன். அங்கு பெறாமக்களுடன் விளையாடிக் கொண்டு இருந்துவிட்டு தற்செயலாக தமிழ்படம் பற்றி அவர்களுடன் கதைத்தேன். அவர்கள் வீட்டில் எப்போதும் புதுபட டீவீடீக்கள் வச்சு இருப்பீனம்.

அழகிய தமிழ்மகன் எண்டும், வேல் எண்டும் ரெண்டு நல்ல படங்கள் இருக்கிது பாக்கச் சொல்லி சொன்னார்கள். எத முதலில பாக்கிறது? வேல் நடிச்சது யார் எண்டு கேட்டன்? அசினும் சூரியாவும் நடிச்சு இருக்கிறீனம் எண்டு சொன்னார்கள். அழகிய தமிழ்மகன்? விஜய்யும், வேறு ஏதோ ஒரு கேள்விப்படாத பெயரும்.. சரி அப்ப அசினோட சூரியா நடிக்கும் வேலை முதலாவதா பாக்கிறது எண்டு தீர்மானிச்சம். படம் துவங்கிச்சிது.

வேல்:

படத்தில எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டு மேல இருக்கிது. கேக்க நல்லா இருந்திச்சு.

படம் ஆரம்பத்தில நல்லாத்தான் போச்சிது. பிறகு என்னடா எண்டு பாத்தால் அரிவாளும் கையுமா துவங்கீட்டாங்கள். சூரியா கெம்பி எழுந்து, சுழண்டு சுழண்டு அடிச்சு, மெஜீக்குகள் செய்து சண்டைபிடித்தார். தலையில மிளகாய் அரைக்க துவங்கினாங்கள். சரி படம் எண்டு பாக்க துவங்கியாச்சு. சகிச்சுகொண்டு இருந்தன்.

படத்தில எனக்கு வில்லனை மிகவும் பிடிச்சு இருந்திச்சுது. உண்மையில் வேல் படத்திலஇந்த வில்லனின் நடிப்பு ரசிக்கத்தக்கதாக இருந்தது. முக்கியமாக அவர் படத்தில பகிடிகள்விட்டு நடிப்பது. அவரிண்ட பெயர் தெரிய இல்ல. ஆனா, அவரில பிடிச்ச விசயம் என்ன எண்டால் நல்லா பகிடிவிடுவார். நான் முன்பு இவர் பிரபுவுடன் சேந்து நடிச்ச ஒரு பகிடிப்படம் பாத்து இருந்தேன்.

வடிவேலின் பகிடிகள் நல்லா இருந்திச்சு. அதில அவர் காளை மாட்ட அடக்கிற காட்சியில சிங்கத்தின் சின்னம் போட்ட பெனியனை அணிந்து தண்ணிகாட்டுறது தொடக்கம் எல்லாப் பகிடிகளுமே இயல்பா சிரிக்கக்கூடியமாதிரி இருந்திச்சு.

அசினுக்கு படத்தில நிறையவேலை இருக்க இல்ல எண்டு நினைக்கிறன். சூரியா டபில் அக்டிங் எண்டபடியால் அவருக்கு நடிப்பதற்கு கூடுதலாக இருந்திச்சுது.

படத்தில.. படம் முழுவதும் வன்முறைக்காட்சிகள் அளவுக்கு மிஞ்சி கூடிப்போச்சிது.

கோடிக்கணக்கான சனத்துக்கு இப்படி வன்முறைக்காட்சிகளை படங்களில் காட்டுவது ஆரோக்கியமான ஒரு விசயம் இல்ல. வன்முறைகளால எவ்வளவு பிரச்சனைகள் எண்டு அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

என்னதான் பகிடிகள் இருந்தாலும், வன்முறைகள் அதிகமாக இருந்ததால் இந்தப்படத்தை என்னால் முழுமையாக ரசித்து பார்க்கமுடியவில்லை. நான் சென்சர் போர்டில் இருந்து இருந்தால் படத்தில அரைவாசி சீனை வெட்டி எறிந்து இருப்பேன்.

படத்தயாரிப்பாளர்கள், இயக்குனர்.. போன்றவர்கள் மெண்டலா? இல்லாட்டி இவர்கள் படத்தை பார்ப்பவர்களை மெண்டலாக்க விரும்புகின்றார்களா?.. எல்லாம் கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

ஆங்கிலப்படத்தில - ஹொலிவூட்டில வன்முறைகள் இருக்கிது. எண்டபடியால் நாங்களும் எங்கட படத்தில தாராளமா வன்முறைகள் செய்யலாம் எண்டு நினைக்கிறீனமோ தெரியாது. இதவிட..

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மறைமுகமாக கொச்சைப்படுத்தும் பலதன்மைகள் தமிழ்சினிமாக்களில் தாராளமாக இருக்கின்றது. இந்தப்படத்திலும் வன்முறைக்காட்சிகள் சிலவற்றில் அவற்றை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. எது எண்டு சொல்லத்தேவை இல்லை. படத்தை பார்த்தால் அது என்ன எண்டு உங்களுக்கும் விளங்கும்.

தமிழீழத்தில வன்முறைகள் நடைபெறுவது.. அங்க போராட்டம் நடக்கிது. அப்படியான ஒரு சூழ்நிலை அங்கு துர் அதிஸ்டவசமாக ஏற்பட்டுவிட்டது. ஆனால், இப்படி தமிழ்ப்படங்களில வன்முறைகளை போடுவது சுத்தமாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

வன்முறைகள சும்மா படத்தில பாக்க நல்லாத்தான் இருக்கும். ஆனா... அண்ணைமார்.. நிஜ வாழ்க்கையில வன்முறை புகுந்திச்சிது எண்டு வச்சுக்கொள்ளுங்கோ.. எல்லாம் சர்வநாசம்!! இத நான் படம் எடுக்கிற ஆக்களுக்குத்தான் சொல்லிறன். எத நாங்கள் திருப்பி திருப்பி படத்தில காட்டுறமோ அதுதான் நிஜத்திலும் நடக்கக்கூடும். உங்கள் படங்கள் உருவாக்கும் வன்முறைகள் எமது வீடுகளிலும், சமூகத்திலும் வன்முறைகளை உருவாக்கி எல்லாத்தையும் நாசம் செய்யுமோ, நாசம் செய்யுதோ எண்டு பயமா இருக்கிது.

அழகிய தமிழ்மகன்:

படத்தில எனக்கு பிடிச்ச பாட்டு மேல இருக்கிது. நகைச்சுவைக் காட்சிகள் வேல் படம் போல சிரிக்கக்கூடியதாக இருக்கவில்லை. இனி...

இப்ப பாருங்கோ.. நாங்கள் யாழில கூட ஏதாவது வித்தியாசமா எழுதினா கூக்காட்டி சிரிப்பீனம். எங்களுக்கு மெண்டல் எண்டு சொல்லுவீனம். ஆனா அதவிட மோசமான ஒண்டை தமிழ்படத்தில காட்டினா வாயப்பொத்திக்கொண்டு பாப்பீனம். அதுவும் விஜய் எப்பிடி நடிச்சாலும் கேக்கிறதுக்கு ஆளில்ல.

நான் சிறிது காலத்திற்கு முன்னம் யாழில அதுவும் நகைச்சுவைப்பகுதியில ஆண்கள் மகப்பேறு பெறுதல், இறந்தபின் உடலை என்ன செய்வது, சாகப்போகும் நேரத்தில் நீங்கள் நினைத்தவை என்று சில தலைப்புக்களில் கருத்தாடல் செய்து இருந்தேன். அட நகைச்சுவைப் பகுதியில சும்மா சுவாரசியமாக இருக்கட்டும் எண்டு ஏதோ எழுதி இருந்தன். ஆனா பாருங்கோ...

இந்தாபார் எண்டு நிறையப்பேர் திடீரெண்டு வேட்டிய உருவிக்கொண்டு, வியாக்கியானங்கள் சொல்லிக்கொண்டு வந்திட்டீனம்... நான் ஒரு சைகோ, மெண்டல் அப்பிடி இப்பிடி எண்டு விமர்சனங்கள் சொல்லிக்கொண்டு..

நான் இந்த தமிழ்மகன படத்த பார்த்தபோது யாழில சில விசயங்கள முன்னம் நான் நகைச்சுவையாக எழுதிபின்னர் அது எப்படி என்னை ஒரு மெண்டலாக நினைச்சு எள்ளி நகையாடுவதற்கு பயன்படுத்தப்பட்டது என்ற பழைய அனுபவங்கள் நினைவுக்கு வந்தது. நாங்கள் சும்மா பகிடிக்கு ஒண்டு எழுதினாவே எங்களுக்கு சைக்கோ, மெண்டல் எண்டு பட்டம் கட்ட சனம் ஓடித்திரியுது. ஆனா விஜய்யோ இல்லாட்டி சூரியாவோ.. தமிழ்ப்படங்களில செய்யுற கூத்துக்கள்.. அந்தப்படத்தில கதை எப்படியா இருக்கட்டும்.. அதே சனம் ஆஹா ஓஹோ எண்டு தாளம் போட்டுக்கொண்டு பாக்கும். அவர்களை கண்டபடி புகழ்ந்து தள்ளும்.

படம் ஒண்டில டபிள் அக்டிங் எண்டாலே எல்லாம் அளவுக்கு மிஞ்சி ஓவரா யதார்த்தத்துடன் இல்லாமல் ஒரே புளுகா இருக்கும். அழகிய தமிழ்மகன் படத்தில டபிள் அகிடிங் எண்டு படத்துக்க இன்னொரு படம் காட்டுறாங்கள். பிறகு என்னடாண்டு பாத்தா கதாநாயகனுக்கு பின்னாடி நடக்கப்போறது எல்லாம் சட்டலைட் வெதர் போர்காஸ்ட் அப்பிடியே துல்லியமா தெரியுதாம்.

அடப்பாவிகளா என்னாமாதிரி உலகம் எங்கனும் இருக்கிற கோடிக்கணக்கான தமிழ் ஆக்கள தினமும் மணித்தியாலக் கணக்கில ரீவிக்கு முன்னால குந்தி இருக்க வச்சு உங்கட குப்பைகள தலையில கொட்டித்தள்ளுறீங்கள்! இந்த விசயத்தில நீங்கள் கெட்டிக்காரங்கள் தான்!

சும்மா பொழுதுபோக்குத்தானே என்றுவிட்டு எப்பிடி எண்டாலும் படம் எடுத்து காட்டுவதா? படங்களில காட்டுற காட்சிகளுக்கு விஞ்ஞான வியாக்கியானங்கள் வேறு... அட போங்கடா டேய்.. உலகத்தில கோடியில பில்லியனில ஒண்டா இருக்கக்கூடிய ஒரு அசாதாரண விசயத்த அதுபற்றிய தேவை, அறிவு இல்லாத பலகோடி தமிழர்களின் தலையில் இன்னும் பொய்யாக்கி... புளுகிப் புளுகி இறக்குவதால நீங்கள் சாதிக்கப்போவது என்ன?

உங்களுக்கு என்ன! பணத்த சுருட்டிக்கொண்டு போய்விடுவீங்கள். உங்கட படங்கள பாத்துப்போட்டு மெண்டலாக திரியப்போறது யாருண்டையும் பிள்ளைகள் தானே! பாதிக்கப்படப்போவது யாரோ தெருவில போறவன் தானே! எண்டபடியால் இப்படி இன்னும் இன்னும் வன்முறைகளையும்.. கற்பனைகளையும்.. அண்டவெளிப் புளுகுகளையும் வச்சு ஏராளம் படங்கள் உருவாக்குங்கோ. உலகத்தில இருக்கிற மொத்த தமிழினமும் நாசமாப் போகட்டும்.

தமிழ்ப்படங்களில எனக்கு பிடிச்ச ஒரே ஒரு விசயம் பாட்டுக்கள் மாத்திரம் தான். பாட்டுக்களில வரும் நடனங்கள், மற்றையது இனிய இசை இவை மட்டும்தான் ரிலாக்ஸா இருந்து ரசிக்கக்கூடியமாதிரி இருக்கிது. மிச்சம் எல்லாம் சுத்த வேஸ்ட்!

சூர்யா, விஜய், அஜித் போன்றோர் படங்கள் நடிப்பதை நிறுத்திவிட்டு ஆட்டத்துடன் கூடிய தமிழ் மியூசிக் வீடியோக்கள் செய்தால் எங்கட ஆக்கள்... நாங்கள்.. பெடி பெட்டைகள்... அதப்பாத்து இன்னும் நல்லா டான்ஸ் ஆடிப்பழகிறதுக்காவது உதவியா இருக்கும்.

தவறாக ஏதாவது சொல்லி இருந்தால் விஜய், சூரியா ரசிகர்கள் மற்றும் தமிழ்ப்பட ரசிகர்கள் அடியேனை மன்னிப்பீர்களாக!

நன்றி! வணக்கம்!

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பார்த்திருக்கிறேன்.. விஜய் சாரின் ஆரம்பகாலம் ஒரே பொண்ணுங்க பின்னால சுத்திறதா அதுதாங்க லவ்வு மாற்றரா இருந்திச்சு. இப்ப எல்லாம் கையக் கால அரிவாளை வீசுறதாத் தான் இருக்கு. இரண்டுமே தப்புங்க.

கில்லி.. போக்கிரி.. ஏன் அழகிய தமிழ்மகன் என்று எல்லாம்.. வன்முறை. அதிலும்.. கில்லி அழகிய தமிழ் மகன் என்று எல்லாத்திலும் அற்பம் ஒரு பொண்ணுக்காக படம் முழுக்க வன்முறை... என்ன.. கதையும் ரசிகர்களும்..! தமிழ் ரசிகர்களின் ரசனை மட்டத்தை நினைச்சாவே வாந்தி தான் வருகுது..!

விஜய் சார் மட்டுமல்ல.. அஜித் சார்.. சூரியா சார்.. ரஜனி சார் என்று தமிழ் சினிமா நடிகர்கள் எல்லாருமே.. பொண்ணுங்களுக்காக சண்டை பிடிக்கிற பொம்பிள பொறுக்கிங்க.. அப்படின்னுதான் அவங்க படங்களப் பார்க்கேக்க நினைக்க வைக்குது..!

பொண்ணுன்னா என்ன நாடா.. அல்லது பொருளா.. சண்டை போட்டு மீட்கிறதுக்கு. சக மனிசனை மனித சிந்தனையால அணுக முடியல்ல என்றா அவன் மனிசனே இல்ல. அப்படி இருக்க சினிமாவைப் பார்த்து நாம வரக் கூடிய ஒரே முடிவு தமிழ் பொண்ணுங்களே மனிசரில்ல என்றதுதான்..!

போயும் போயும் பொண்ணுங்களுக்காக சண்டை. அதுதான் வாழ்க்கை என்று அவங்க பின்னாடியே அலையுறதாக் காட்டிறது.. ரெம்ப மோசம்..! இதாலதான் இந்தியாவின் சனத்தொகை இமயம் உச்சிக்குப் போயிட்டிருக்குது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஆழமான அன்பு இருக்கனும்.. புரிந்துணர்வு இருக்கனும்.. அப்படி அமைந்த நெருக்கம் இருக்கனும். அதற்காக எல்லாம் வன்முறையை உபயோகிச்சு.. சாதிக்கனும் என்று நினைக்கிறது.. மோசமான சிந்தனை..! அன்பிருந்தா வாடி இல்லைன்னா போடின்னு.. நாமும் நம்ம பாடும் என்றிருக்க வேண்டிய உலகில... வன்முறையா பொண்ணுங்கள கவரனும் என்று நினைக்கிறதே தப்பு.

இந்த சினிமாவின் தாக்கம் இப்ப எல்லாம் தமிழகத்தை விட புலம்பெயர் நாடுகளில உள்ள தமிழ் இளசுகளிடம் அதிகமா இருக்குது. உந்த காங்ஸ் பெருக வழிவகுத்திட்டு இருக்கிறதுக்கும் இந்த வகை வன்முறைத்தனமாக பொண்ணுங்கள அணுகும் செயல் அமைச்சிருக்கிறது..! பெண்களும் உதுகளுக்கு உடந்தையா இருக்கிறாப் போல நடந்துக்கிறது.. அவங்களும் மோசமான சிந்தனைக்குள்ளதான் வாழுறாங்க என்று காட்டுவதாகவே இருக்குது.

சில பெண்கள் தங்கள் தரத்தைக் காட்ட இப்ப எல்லாம் கதையா அவுக்கிறாங்க. நாலு காங்ஸ் தலைவர் தன்னை சைட் அடிக்கினமாம். அதில ஒருத்தன் தூக்கிட்டே போக நிக்கிறானாம். அதுதானாம் அவாவிட மவுசு. இப்படி சொல்லுறதுகளும் இருக்குதுகளுங்க உலகத்தில. இதெல்லாம் பெண்ணாம்.. உலகில எந்த ஜீவராசிக்கும் இப்படி ஒரு சிந்தனை வந்திராது..??! ஆனால் மனிசங்ககிட்ட மனிதாபிமானம் இருக்கோ இல்லையோ இப்படியா அற்பத்தனமான சிந்தனைகள் பெருகிக் கிட்டே வருகுது.

பொண்ணுங்கள.. குறை பிடிக்கிறன்னு நினைக்காதீங்க. ஒரு பொண்ணு அற்லீஸ் ஒரு படத்திலையாவது நான் வன்முறையைத் தெரிவு செய்யுறவனை தெரிவு செய்யன் என்று சொல்லுவான்னு வையுங்க.. தமிழ் சினிமாவில அரைவாசிப் படமும் பிளாப் தாங்க..! சோ.. பொண்ணுங்கட ரசனை மட்டமும் கீழ் மட்டம். ஆணுங்க அப்புரோச்சும் கீழ் மட்டம். இரண்டு இணைஞ்சா எப்படி.. இருக்கும். நம்ம விஜய் சார் படம் போல இருக்கும்..! அதெல்லாம் வெற்றிப்படமாகுதுன்னா.. நீங்களே புரிஞ்சுக்கோங்க.. நம்ம ஆக்களின்ர ரசனையை..!

இன்னொன்னு பாருங்க..புலம்பெயர்ந்த நாடுகளில மூலைக்கு மூலை பெட்டிக்கடை நடத்திற நம்ம டமிழ் வியாபாரிகளுக்கு ஒரு பவுணுக்கு ஒரு டொலருக்கு சினிமா சீடி விற்க உள்ள ஆர்வம்.. அந்தச் சீடிக்களின் உள்ளடகத்தை யார் யார் பார்க்கனும் என்ற விவஸ்தைக்கே இடமில்லாமல் செய்திருக்கு.

புலிக்கு பணம் கொடுத்தா அடுத்த நிமிசமே அது அந்தந்த நாடுகளின் ரகசியப் பிரிவுக்கு பெட்டிசமாப் போயிடுது. ஆனாப் பாருங்க.. இந்தக் கள்ள சிடி அடிச்சு விக்கிறது மட்டும் வருசக் கணக்கா தொடருது. அதுக்கு ஒருத்தனும் அல்லது ஒருத்தியும் பெட்டிசம் போடுறதில்ல. காரணம்.. தெரியும் தானே. ஆங்கிலப் படங்களில 12 வயசுக்கு என்று காட்டிறதில இருக்கிற வன்முறையை விட பல மடங்கு அதிர்ச்சி தரவல்ல வன்முறைகள் தமிழ் படங்களில வருகுது. ஆனா.. அதையெல்லாம் நாம ஒரு பவுணுக்கு இல்ல ஒரு டொலருக்கு வாங்கி வயசு வேறுபாடில்லாமப் பார்க்க முடியுன்னா.. நம்மவரின் சமூக அக்கறையைப் பாருங்க..! :D:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையைச் சொல்லப்போனால் ஏனய இனத்தவரை விட தமிழ் இனத்தவருக்கு அதிகமாக இருக்கும் நகைச்சுவை உணர்வே இத்தகைய படங்களை ஓட்டு விப்பதற்கு காரணமாக இருக்கிறது.

காட்டூன் படமான ரொம் அன் செறியின் காட்சிகளை கொப்பி அடித்து தமிழ் பட கதாநாயகனிடமும் வில்லனிடமும் கொடுப்பதால் அவை நன்றாக ஒட்டுவதற்கு காரணமாகின்றன என நினைக்கின்றேன்.

கலைஞன்

உங்கள் ஆதங்கம் புரிகின்றது. ஆனால் இப்படியான படங்கள் வருவதற்கு யார் காரணம். மேலே நீங்கள் சொன்ன விடயங்களில்லாமல் வெளிவந்த ஒன்பது ரூபாய் நோட்டு, எவனோ ஒருவன் போன்ற படங்கள் வெளியிடுவதற்கு தியேட்டர்கள் கிடைக்காமல் அவதிப்பட்டார்கள். ஆனால் நீங்கள் மேலே குறிப்பிட்ட படங்களுக்கு தியேட்டர்காரர்களே போட்டி போட்டுக் கொண்டு வெளியிட்டார்கள். மக்களும் போட்டி போட்டுக் கொண்டு வசூலில் சாதனை ஏற்படுத்தினார்கள்.

நிலைமைகள் இப்படியிருக்க; எவர் விரும்புவார்கள் ஒன்பது ரூபாய் நோட்டு, எவனோ ஒருவன் போன்ற படங்களை எடுத்து கையைச் சுட்டுக்கொள்ள???????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே படுக்கிறார்கள். உலர்ந்த தமிழன் மருந்துக்கும் அகப்பட மாட்டான்.

-மகாகவி பாரதியார்

  • கருத்துக்கள உறவுகள்

கனகாலத்துக்குப் பிறகு கலைஞன், விமர்சனமும் நல்லா இருந்தது. ஆனால் கொஞ்சம் அதிகமாகவே கவலைப்படுற மாதிரித் தெரியுது. தண்ணியடிக்க, சிகரட் குடிக்க, வயது வந்தோருக்கு மட்டுமான சினிமா பார்க்க எல்லாம் ஒரு வயதெல்லை இருக்கு. அந்த வயதுக்கு மேல ஆட்கள் முதிர்ச்சியாகி எதைச் செய்தாலும் நல்லதா கெட்டதா என்று யோசித்துச் செய்வினம் எண்டு ஒரு நம்பிக்கையில தான் இந்த வயதெல்லை எல்லாம். நான் நினைக்கிறன் வயது வந்த ஆட்கள் பார்க்கிற சினிமாவையெல்லாம் வாழ்க்கையில திணிச்சுப் பார்க்க முயல மாட்டினம். ஓரிரண்டு பேர் விதிவிலக்காக இது மாதிரியான வன்முறைகள் கற்பனைகளால பாதிக்கப் படலாம். அந்த விதி விலக்குகள் எப்படியும் ஏற்கனவே "மென்டல்" ஆனவையாகத் தான் இருப்பினம். அவையளுக்கு சினிமா தான் மென்டல் வியாதியக் குடுக்க வேண்டுமென்டில்லை. என்ன மொழிப்படமோ பார்த்தமா விசிலடிச்சமா எண்டு போறவை தான் அதிகம். ஆனால் வயதுக்கு வராத இளம்பிள்ளைகள இது மாதிரித் தமிழ்ப் படங்களிலிருந்து காப்பாற்றத் தான் வேணும். ஹொலிவூட் சினிமாக்களுக்கு இருப்பது மாதிரி விரிவான தரப்படுத்தல் (R, PG-13 etc.) தமிழ் சினிமாக்களுக்கும் கொண்டு வந்தால் இது சாத்தியம்.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

நன்றி எல்லாரிண்ட கருத்துக்களுக்கும். நான் அண்மையில சூப்பின ஸ்ராரிண்ட சிவாஜி படத்தையும் பாக்கவேண்டி வந்திட்டிது. பிறகு நேரம் கிடைக்கேக்க அதப்பற்றியும் கொஞ்சம் எழுதலாம். ஆனா நான் எழுதுறத பாத்துப்போட்டு யாராவது சண்டைக்கு வருவீனமோ எண்டுறத நினைக்க கொஞ்சம் யோசனையா இருக்கிது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி எல்லாரிண்ட கருத்துக்களுக்கும். நான் அண்மையில சூப்பின ஸ்ராரிண்ட சிவாஜி படத்தையும் பாக்கவேண்டி வந்திட்டிது.

சிவாஜி படத்தை புறக்கணிக்கப் போகிறோம் என்று யாரோ சொன்ன செய்தி யாபகத்துக்கு வருகிறது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தத்துவப் பாடல் ஒன்று:

முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா

உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா

எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே

நீ நதிபோல ஓடிக்கொண்டிரு

எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே

உன்னை உள்ளத்தில் ஊர்வைக்குமே

ஓகோகோ ஏய் தோழா

முன்னால் வாடா

உன்னால் முடியும்

கள தளபதி தளபதி நீதான் நீதான்

அன்புத் தலைவா

வெற்றி நமக்கே

அழகிய தலைமகன் நீதானே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.