Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். மாவட்டத்தில் 27 மாணவர்கள் விசேட சித்தி; ஜி.சீ.ஈ உயர்தரப் பரீட்சையில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாவட்டத்தில் 27 மாணவர்கள் விசேட சித்தி; ஜி.சீ.ஈ உயர்தரப் பரீட்சையில் - 3713 மாணவர்களுக்கு 3 ஏ

[Thursday January 03 2008 07:41:39 AM GMT] [யாழ் வாணன்]

கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற ஜி.சீ.ஈ(உயர்தரம்)பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் 27 மாணவர்கள் விசேட சித்தி பெற்றுள்ளனர் என முற்கொண்டு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் பரீட்சை முடிவுகள் நேற்று முன்தினம் மாலை வெளியாகியிருந்தன. எனினும் குடாநாட்டுப் பாடசாலைகளுக் கான முடிவுகள் நேற்று மாலை வரை யாழ் பாணத்திற்கு வந்து சேரவில்லை.

பாடசாலைகளின் அதிபர்கள் நேற்று இணையத்தளத்தின் மூலம் தாம் பெற்ற பரீட்சை முடிவுகளை உதயனுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அந்த வகையில் நேற்றுமாலை வரை கிடைத்த பெறுபேறுகளின் அடிப்படையில் குடாநாட்டில் மொத்தம்27 மாணவர்கள் 3 ஏ அதி விசேட சித்தி பெற் றுள்ளனர்.

பாடசாலை அதிபர்களால் உறுதிப்படுத் தப்பட்டு அனுப்பட்ட முடிவுகள் வருமாறு

யாழ்.இந்து

* கணிதப் பிரிவு தனபாலசிங்கம் அஜந் தன்,பாலசுப்பிரமணியம் ஜனார்தனன், செந்தில்நாதன் சொபிசன், வரதராஜா யோக தீசன், மகாதேவன் பிருந்தாவன், சிவலிங் கம் இளமாறன்,பஞ்சாட்சரம் புஸ்பரூபன்,

* வர்த்தகம் சிவமூர்த்தி மதீசன்.

* உயிரியல் செல்வராசா கோகுலன், சகாதேவன் விதுஷன்.

வேம்படி மகளிர்

*உயிரியல் சகிலா சிற்றம்பலம், இவாஞ்சலின் மிருனாளினி ஜெயராசா, சசிகலா சுப்பிரமணியம், மேரி அனுஜா பேர்டினன்ட்.

* கணிதம் நீரஜப்பிரியா சதானந்தன்.

* வர்த்தகம் தாரணி இரகுநாதன்.

* கலை துளசி தர்மகுலசிங்கம், கலை வதனி கனகலிங்கம்

ஸ்கந்தா

* கலை சு.பாஸ்கரன்

மானிப்பாய் இந்து

* கணிதம் குகனேசன் தனன்சன்

யாழ்.இந்து மகளிர் கல்லூரி

* வர்த்தகம் சிந்துஜா முத்துலிங்கம், சிவரூபினி சிவானந்தம்.

* கலை சரண்யா ஜோசப்குமார், வினோ மகேந்திரன்.

மகாஜனா

* கலை க.சுகன்ஜா, ஆர்.பிரதாபன், ரி.தனுஜன்.

3713 மாணவர்களுக்கு 3 ஏ

க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு இம்முறை தோற்றியவர்களில் 3713 பேர் 3 பாடங்களிலும் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

2007 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கு நாடு பூராவுமிருந்து 234958 பேர் தோற்றினர்.

இவர்களில் விஞ்ஞானப் பிரிவைச் சேர்ந்த 314 பேர் 3 பாடங்களிலும் 3 ஏ சித்தியைப் பெற்றுள்ளனர்.

கணிதப் பிரிவில் 214 பேர் 3 பாடங்களிலும் 3 ஏ சித்தியைப் பெற்றுள்ளனர்.

வர்த்தகப் பிரிவில் 2013 பேர் 3 பாடங்களிலும் 3 ஏ சித்தி பெற்றுள்ளனர்.

கலைப் பிரிவில் 1172 பேர் 3 பாடங்களிலும் 3 ஏ சித்தியைப் பெற்றுள்ளனர்.

இதனடிப்படையில் இம்முறை பரீட்சைக்கு தோற்றிய 3713 பேர் 3 பாடங்களிலும் 3 ஏ சித்தியைப் பெற்றுள்ளனர்.

tamilwin.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் றோயல் கல்லூரி மாணவன் சாதனை

[03 - January - 2008] [Font Size - A - A - A]

*தமிழ் மொழிமூலத்தில் ஹாட்லி மாணவனுக்கு முதலிடம்

ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் கொழும்பு றோயல் கல்லூரி மாணவன் சரித் யசேந்திர மென்டிஸ் அகில இலங்கை ரீதியாக அதிகூடிய 3.3349 இஸட் புள்ளிகளைப் பெற்று முதலாமிடம் பெற்றுள்ள அதேவேளை தமிழ்மொழி மூலமாக பரீட்சைக்கு தோற்றிய பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் விமலநாதன் ரஜீவன் 3.1353 இஸட் புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியாக முதலாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க உறுதிப்படுத்தினார்.

இதேவேளை, கடந்த வருடம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பிரிவிலும் கூடிய இஸட் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களின் விபரங்கள் பரீட்சைகள் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டது.

கணிதப் பிரிவு

றோயல் கல்லூரி - சரித் யசேந்திர மென்டிஸ் - 3.3349 (முதலாமிடம்)

குருநாகல் மலியதேவ வித்தியாலயம்- ஜஹத் ஜயரங்க - 3.1439 (இரண்டாமிடம்)

யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரி - விமலநாதன் ரஜீவன் - 3.1353 (மூன்றாமிடம்)

கந்தானை மசெண்டோ மகா வித்தியாலயம் - சிறிமால் சில்வா 3.1350 (நான்காமிடம்)

உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி- இராமகிருஷ்ணன் சயந்தன் 3.0695 (ஐந்தாமிடம்)

விஞ்ஞானப்பிரிவு

காலி அலோசியஸ் வித்தியாலயம்- இரோஷா சந்திமல் - 3.1289 (முதலாமிடம்)

மாத்தறை ராஹுல வித்தியாலயம்- அஸ்கிரியகே செனிவிரட்ன- 3.0262 (இரண்டாமிடம்)

குருநாகல் மலியதேவ ஆண்கள் வித்தியாலயம் - சன்ஜீவ பாலசூரிய - 3.0198 (மூன்றாமிடம்)

வர்த்தகப் பிரிவு

கொழும்பு விசாகா பாலிகா வித்தியாலயம்- தரணி கமகே - 2.6917 (முதலாமிடம்)

காலி மகிந்த வித்தியாலயம்- நந்துன் விக்கிரமசிங்க 2.6851 (இரண்டாமிடம்)

கொழும்பு ஆனந்தா கல்லூரி (சுபுன் குணசேகர 2.6823 (மூன்றாமிடம்)

மொறட்டுவ பிரின்ஸ் வேல்ஸ் வித்தியாலயம்- மொஹமட் பைஸல் புஹாரி 2.6305 (நான்காமிடம்)

கலைப்பிரிவு

பத்தேகம கிரிஸ்ட் சேர்ச் பாலிகா வித்தியாலயம் - நதிஸா ஹன்ஷாமாலி 2.5577 (முதலாமிடம்)

காலி றிட்ச்மென்ட் வித்தியாலயம்- அஷான் திலங்க -2.5172 (இரண்டாமிடம்)

கண்டி டிரிண்டி கல்லூரி - பரண வித்தியாதிலகே - 2.4862 (மூன்றாமிடம்)

க.பொ.த. உயர்தரப் பரீட்சை இஸட் வெட்டுப்புள்ளிகளின்படி அகில இலங்கை ரீதியாக றோயல் கல்லூரி மாணவன் சரித்யசேந்திர மென்டிஸ் முதலாமிடத்தையும், தமிழ்மொழியில் அகில இலங்கை ரீதியாக பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் விமலநாதன் ரஜீவன் முதலாமிடத்தைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

thinakural.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்மொழியில் அகில இலங்கை ரீதியாக பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் விமலநாதன் ரஜீவன் முதலாமிடத்தைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

என் பாடசாலை மாணவனுக்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள் ஏனைய மாணவர்களுக்கு வாழ்த்துக்கள், நீண்ட நாட்களின் பின்னர் ஹாட்லிக் கல்லூரியிலிருந்து முதலாம் இடம். இராணுவ அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் தம் திறமைகளை நிரூபித்த குடா நாட்டு மாணவர்களுக்கு சல்யூட்

  • கருத்துக்கள உறவுகள்

சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இம்முறையும் அதிக பெண்கள் சித்தி பெற்றிருக்கிறார்கள். இதற்க்கான காரணம் என்ன என்பதை யாராவது சொல்வீர்களா? க்டந்த பல ஆண்டுகளாக ஆண்களைவிட பெண்களின் சித்திய்டையும் சதவீதம் அதிகம்

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறையும் அதிக பெண்கள் சித்தி பெற்றிருக்கிறார்கள். இதற்க்கான காரணம் என்ன என்பதை யாராவது சொல்வீர்களா? க்டந்த பல ஆண்டுகளாக ஆண்களைவிட பெண்களின் சித்திய்டையும் சதவீதம் அதிகம்

பெண்கள் அதிபுத்திசாலிகள்

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறையும் அதிக பெண்கள் சித்தி பெற்றிருக்கிறார்கள். இதற்க்கான காரணம் என்ன என்பதை யாராவது சொல்வீர்களா? கடந்த பல ஆண்டுகளாக ஆண்களைவிட பெண்களின் சித்தியடையும் சதவீதம் அதிகம்

ஆண்கள war mode.. Entertainment mode இல வைச்சிருந்தா அவங்க எப்படி படிக்கிறது..??!

பெண்கள Family mode தான் இன்னும் வைச்சிருக்கினம்..??! இப்ப இப்பதான் war mode.. Entertainment mode க்குள்ள கொண்டு வரப்படினம் பொறுங்கோ.. விளைவுகள் பின்னாடி தெரியும்.

எதுஎப்படியோ யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஆண்கள் தோற்கடிக்கப்படல்ல. யாழ் இந்துக் கல்லூரி தான் மொத்த அதிவிசேட சித்தியில் முன்னணியில் இருக்கிறது. கணிதத்துறையில் வழமை போல யாழ் இந்துக்கல்லூரி முதன்னிலையில் இருக்கிறது..!

உயிரியல் துறையில் வழமை போல வேம்படி மகளிர் கல்லூரி இருக்கிறது..!

உயிரியலில் சும்மா விளங்கிப் படிக்கனும் என்றில்லை. பாடமாக்கினாச் சரி. அதுக்கு அதி புத்திசாலி மூளை வேணும் என்றில்லை. நல்ல ஞாபக சக்தி ரெம்ப உதவியா இருக்கும்.

பெண்களுக்கு ஞாபக சக்தி அதிகம். எவர் என்ன செய்யுனம் என்றதை ஞாபகம் பண்ணி வைச்சு ஆக்களில குறை பிடிக்கிறதுதானே அவங்க மேஜர் தொழிலே..! :):lol:

ஆண் பெண் என்ற நிலைக்கு அப்பால பல இடர்களின் மத்தியில் கல்வி கற்று பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவியருக்கு வாழ்த்துக்கள். சித்தியடையத் தவறியவர்களும் கவலைப்படாம.. அடுத்த முறைக்கு முயலுங்க அல்லது பதிவு செய்யப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களூடு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து வழங்கும் பாட நெறிகளைப் படித்து வெளிநாட்டு பட்டங்களை இலங்கையிலேயே பெறக்கூடிய வசதிகள் தோன்றியுள்ளது தற்போது. அதைப் பாவியுங்கள்.. அல்லது வெளிநாடுகளுக்கு வந்தும் படிக்கலாம் அல்லது பல்கலைக்கழங்கள் சாரா தொழில்துறை உயர்கல்வி கற்கலாம். (உ+ம் CIMA, ACCA, AAT, CIM, BCS, ACS, CE (Charted Engineering), CChem ( Charted Chemistry) and so on)

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் ( பிரித்தானியா உட்பட ) நீங்கள் சாதாரண தரத்துடனேயே பல்கலைக்கழக அனுமதிகள் பெறலாம்..! பட்டங்களும் வாங்கலாம். குறிப்பாக கணணித்துறை மற்றும் வர்த்தகமுகாமைத்துறைகளில்.

வெளிநாடுகளில் இலங்கை போன்று பரீட்சைகளும் கடினமல்ல. காரணம் அவர்கள் நடத்துவது போட்டிப் பரீட்சையல்ல. தகுதி காண் பரீட்சை என்பதால்.. வினாக்களும் இலகுவானவை..! படிப்பதும் ஆழமான விடயங்கள் அல்ல..! சும்மா நாலு அசைன்மெண்டை எழுதினாவே 40% எடுத்திடலாம்..! :unsure:

Edited by nedukkalapoovan

சித்தியடைந்த மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

நெடுக்ஸ் சொல்லுறது ரொம்பவே உண்மை , சிறிலங்காவில் என்ன தான் கஸ்டப்பட்டு படித்தாலும் a/l கணிதத்தில் 60 மேல எடுக்கிற்தே இல்லை ஆனால் இங்கு 90 குறையிறதில்லை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா நாலு அசைன்மெண்டை எழுதினாவே 40% எடுத்திடலாம்..! :lol:

கட்டணம் அதிகம் வாங்காத காளான் பல்கலைக்கழகத்தை எட்டிப் பார்த்திருக்கிறீர்கள் போலிருக்கிறது.. ஒருக்கால் கேம்பிரிட்ஜ், ஒக்ஸ்போர்ட் பக்கம் விசிட் அடித்துப் பாருங்கள்.. போகக் கஸ்டம் என்றால் இம்பீரியல் கல்லூரி, லண்டல் ஸ்கூல் ஒf எகொனொமிக்ஸ் பக்கம் எட்டிப் பாருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

திறந்த வெளிச் சிறையில் இருந்தும் சிறப்பாகச் சித்தி எய்திய மாணவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கட்டணம் அதிகம் வாங்காத காளான் பல்கலைக்கழகத்தை எட்டிப் பார்த்திருக்கிறீர்கள் போலிருக்கிறது.. ஒருக்கால் கேம்பிரிட்ஜ், ஒக்ஸ்போர்ட் பக்கம் விசிட் அடித்துப் பாருங்கள்.. போகக் கஸ்டம் என்றால் இம்பீரியல் கல்லூரி, லண்டல் ஸ்கூல் ஒf எகொனொமிக்ஸ் பக்கம் எட்டிப் பாருங்கள்!

சும்மா கேம்பிரிஷ்சு ஒக்ஸ்போர்டு என்று படம் காட்டீதீங்க அண்ணாச்சி. அவையள் சில பாடத்துறைகளில ராங்கிங்கில பல படி பின்னால..! அவைக்கு முன்னால உள்ளதெல்லாம் அசைமெண்டோடதான் காலம் தள்ளினம்..! :lol:

பழைய புகழோட இருக்கினம்..! என்ன மற்ற இடங்களில 9000 பவுன்ஸ் என்றால் இங்க எல்லாம் 13000 அவ்வளவும் தான்..! ஆனா படிக்கிறதெல்லாம் ஒரே விசயம் தான்..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சித்தியடைந்த மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

நெடுக்ஸ் சொல்லுறது ரொம்பவே உண்மை , சிறிலங்காவில் என்ன தான் கஸ்டப்பட்டு படித்தாலும் a/l கணிதத்தில் 60 மேல எடுக்கிற்தே இல்லை ஆனால் இங்கு 90 குறையிறதில்லை :lol:

அதுமட்டுமில்லப் பிள்ளை.. ஊரில மாவட்ட மட்டத்தில கூட ஒரு போட்டிக்குப் போய் தெரிவாகி வாறது பெரிய பாடு. ஒரு சேட்டிபிக்கட் எடுக்கிறது என்றா தலையாலா நடக்கனும். ஆனா புகலிடத்தில.. ஒன்றும் செய்யத் தேவையில்ல கிரமமா பாடசாலைக்குப் போனாலே போதும்.. achievement awards என்று நிறையக் கொடுப்பாங்க. எந்தப் பிள்ளையட்ட இல்ல உந்த அவோடு..! இவ்வளவு உற்சாகம் கொடுத்துப் படிப்பிக்கினமே என்று பார்த்தா.. பிறகு ரெஸ்கோவில போய் பில்லுப் போடவும் மிசின் தான் வேணும்..! இப்ப மனிசன் செய்யுற வேலை எதுவுமில்ல.. பட்டனை அழுத்திறதுதான் வேலையே..! :):unsure:

Edited by nedukkalapoovan

வெளியாகியிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் யாழ். மாவட்ட பாடசாலை மாணவர்களில் 32 பேர் 3 பாடங்களிலும் அதி சிறப்பு சித்தி பெற்றிருக்கின்றனர்.

தொடர்ந்து வாசிக்க

உயர்தரபரீட்சை முடிவுகள்: கணிதம், உயிரியல் துறைகளில் மாவட்டத்தில் ஹாட்லி முதலிடம் கலையூனியன், வர்த்தகம்சென்.ஜோன்ஸ் கல்லூரிகளுக்கு

[saturday January 05 2008 05:43:18 AM GMT] [யாழினி]

நேற்று யாழ்பாணத்தில், கல்வித் திணைக்களம் ஊடாக வெளியான ஜி.சி.ஈ உயர்தரப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாவட்ட மட்டத்தில் கணிதம் , உயிரியல் ஆகிய இரண்டு துறைகளிலும் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளது.

கலைத்துறையில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியும் வர்த்தக துறையில் சென்.ஜோன்ஸ் கல்லூரியும் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடங்களையும் பெற்றுள்ளன.

ஜி.சி.ஈ(உயர்தரம்) பரீட்சையின் முடிவுகள் நேற்று யாழ்பாணத்தில் வெளியாகின. விமானம் மூலம் நேற்று பிற்பகல் எடுத்து வரப்பட்ட முடிவுகள் சகல வலயங்களுக்கும் உடன் அனுப்பப்பட்டன. அவற்றை பாடசாலை அதிபர்கள் இன்று பெற்றுக் கொள்ளலாம் என்று யாழ். கல்வித்தி ணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நேற்று வெளியான முடிவுகளின் பிரகாரம் மாவட்டத்தின் முதலிடம், இரண்டாம் இடம் பெற்ற மாணவர்களின் விவரங்கள் வருமாறு:

கணிதம்

விமலநாதன் ரஜீவன்பருத்தித் துறை ஹாட்லிக் கல்லூரி (மாவட்டம்1,தேசியமட்டம்3)

இராமகிருஸ்ணன் ஜெயந்தன் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பாடசாலை.(மாவட்டம்2, தேசியமட்டம்5)

உயிரியல்

ஸ்ரீசோதிநாதன் நிமலன் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி (மாவட்டம்1,தேசியமட்டம்42)

சசிகலா சிற்றம்பலம்வேம்படி மகளிர் கல்லூரி (மாவட்டம்2, தேசியமட்டம்49)

கலை

கமலச்சந்திரன் கீர்த்தனா தெல்லிப்பழை யூனியன் கல்லூரி (மாவட்டம்1, தேசியமட்டம்105)

நவநாதன் தாட்சாமினி சுண்டுக்குழி மகளிர் கல்லூரி (மாவட்டம்2,தேசியமட்டம்172)

சரண்ஜா ஜோசப்குமார் யாழ்.இந்து மகளிர் கல்லூரி (மாவட்டம் 3,தேசியமட்டம்205)

வர்த்தகம்

ரவிந்திரராஜா அனுசங்கர் சென்.ஜோன்ஸ் கல்லூரி (மாவட்டம்1, தேசியமட்டம்343)

விஜயரத்தினம் ஹனிதாஅளவெட்டி அருணோதயா (மாவட்டம்2, தேசியமட்டம்556)

நேற்று கிடைத்த முடிவுகளில் யாழ்பாணம் இந்துக்கல்லூரியின் விவரங்கள் வரவில்லை என்றும் கொழும்பில் தங்கியுள்ள அக்கல்லூரி யின் அதிபர் ஏற்கனவே அதனைப் பெற்றுள்ளதா கவும் கல்லித் திணைக்கள வட்டாரங்கள் மூலம் அறியவந்தது.

--tamilwin-

ஒரு பாடசாலையில் 37 3A இருந்த காலம் போய் யாழில் என்னும் நிலை வந்தது கவலையை தருகின்றது

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் உயர்தரப் பரீட்சையில் 32 பேருக்கு '3 ஏ'

1/5/2008 4:21:26 PM

வீரகேசரி இணையம் - வெளியாகியிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் யாழ். மாவட்ட பாடசாலை மாணவர்களில் 32 பேர் 3 பாடங்களிலும் அதி சிறப்பு சித்தி பெற்றிருக்கின்றனர்.

யாழ். இந்துக் கல்லூரியில் 10 மாணவர்களும்,

யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் 8 மாணவிகளும்,

யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் 6 மாணவிகளும்,

யாழ். இந்து மகளிர் கல்லூரியில் 2 மாணவிகளும்,

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 3 மாணவர்களும்,

ஸ்கந்தவரோயாக் கல்லூரி, உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலை, மகாஜனக் கல்லூரி, யாழ். மத்திய கல்லூரி ஆகியவற்றிலிருந்து தலா ஒரு மாணவரும்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பாடசாலையில் 37 3A இருந்த காலம் போய் யாழில் என்னும் நிலை வந்தது கவலையை தருகின்றது

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

கடந்த ஆண்டு ஜி சி ஈ சாதாரணப் பரீட்சையில் 50% மேலானோர் குண்டடிச்சது அரசுக்குப் பெரிய அவமானமாகிப் போனது.

அதைச் சரிக்கட்டத்தான் இந்த முறைக்கு விலாசமா சிறீலங்கா பூராவும் உயர்தரப் பெறுபேறுகள் பற்றி பெரிசா அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கினம். நாட்டில உள்ள 15 பல்கலைக்கழகங்களுக்குள்ள தான் எத்தனை பேர் சித்தி பெற்றாலும் சுற்றிச் சுழலனும்..! ஒரு 20 ஆயிரம் பேருக்குள்ளதான் இலவச பல்கலைக்கல்வியை பெறப்போகினம்.

பாதுகாப்பமைச்சு அறிக்கைகளிலும் இவற்றுக்கும் மேல போய் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட கிழக்கிலும் வடக்கிலும் மாணவர்கள் என்றுமில்லாத திறமையை வெளிப்படுத்தி உள்ளனர் போல தோற்றம் காட்டும் செய்திகளும் முளைத்துள்ளன..!

கல்வியும் அரசியலாகி நிற்குது நம்ம நாட்டில. என்ன தான் நடக்காது..! :D:D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயர்தரப் பரீட்சையில் ஹாட்லி மாணவர்களின் சாதனை

[06 - January - 2008] [Font Size - A - A - A]

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியை சேர்ந்த 7 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் அதிவிஷேட சித்தி பெற்றுள்ளனர்.

கணிதம் மற்றும் உயிரியல் பிரிவுகளில் தலா 2 மாணவர்களும் கலைப் பிரிவில் 3 மாணவர்களுமே அதிவிஷேட சித்தியைப் பெற்றுள்ளனர்.

இதில் கணிதப் பிரிவில் 3 ஏ பெற்ற மாணவனான வி.ரஜீவன் மாவட்டமட்டத்தில் முதலாமிடத்தையும் அகில இலங்கை ரீதியில் மூன்றாமிடத்தையும் கணிதப்பிரிவில் தமிழ் மொழி மூலத்தில் முதலாமிடத்தையும் பெற்றுள்ளார்.

இதேபோன்றே உயிரியல் பிரிவில் 3 ஏ பெற்ற மாணவனான எஸ்.நிமலன் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.

உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த ஹாட்லிக் கல்லூரி மாணவர்களின் விபரம் வருமாறு,

கணிதப் பிரிவு

வி.ரஜீவன் 3 ஏ, எஸ்.சாரங்கன் 3 ஏ, ஆர்.பிரசாந்தன் 2 ஏ, பி, கே. திவாகரன் 2 ஏ, பி, கே.நிதர்சன் ஏ, 2பி, எஸ்.பிரசாத் ஏ, 2பி.

உயிரியல் பிரிவு

எஸ்.நிமலன் 3 ஏ, எஸ். அச்சன் 3 ஏ, கே. அலன் ஜெரோசன் 2 ஏ, பி, எஸ்.நிரோசன் 2 ஏ,பி, பி.பாலச்சந்திரன் ஏ, 2பி, பி.சஞ்சயன் ஏ, 2பி, எஸ். விஜயபாலன் ஏ, 2 பி.

வர்த்தகப் பிரிவு

ஐ.நிரூபன் 2 ஏ, பி, வி.சுதர்சன் 2 ஏ, பி, வி.ராஜநாதன் ஏ, 2பி, எஸ். கோகுலன் ஏ, 2பி.

கலைப் பிரிவு

ஆர். நிரூபன் 3 ஏ, எஸ்.சங்கநாதன் 3 ஏ, ஆர்.கௌசிகன் 3 ஏ, எஸ். தினேஸ் 2 ஏ, சி, ரி.ரமணன் ஏ, 2பி, கே.உதயரூபன் ஏ, 2பி, எஸ்.நிஷாந்தன் ஏ,2பி, ஆர்.நிகாஷ் ஏ,2பி.

thinakural.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.