Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் ஆக்கள் எல்லாரும் இந்தமுறை வெளிநாடுகளில பொங்கல் கொண்டாடுறீங்களோ?

தமிழ் ஆக்கள் எல்லாரும் இந்தமுறை வெளிநாடுகளில பொங்கல் கொண்டாடுறீங்களோ? 34 members have voted

  1. 1. தமிழ் ஆக்கள் எல்லாரும் இந்தமுறை வெளிநாடுகளில பொங்கல் கொண்டாடுறீங்களோ?

    • ஆம் - விமரிசையா கொண்டாடுறம்
      6
    • ஆம் - சிறிய அளவில அடக்கமா கொண்டாடுறம்
      18
    • இல்லை - இந்தமுறை கொண்டாட இல்லை
      0
    • இல்லை - ஊரைவிட்டு வெளிக்கிட்டபின் ஒருதடவையும் கொண்டாடுவது இல்லை
      9
    • வேறு ஏதாவது பதில்?
      1

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னால முடியல்ல கு.சா. சொந்த மன்ணில நிம்மதியா ஒரு உலை மூட்டி பொங்கல் பண்ணி.. வெடி சுட்டு.. நண்பர்கள் கூடிக் குலாவி மகிந்த இடத்தில்.. இன்று விடிந்தால் எதிரியின் வெடிகணை எத்திக்கில் இருந்து வெடிக்கும் என்று சாவை முன்னிலைப்படுத்தி எதிரியின் வரவுக்காய் காவலரணில் காத்திருக்கும் எங்கள் நண்பர்களின் நண்பிகளின்.. நிலையை எண்ணிப் பார்க்கிறேன்.

நெடுக்கு சாமி... உங்கள் கருத்தே என் கருத்தும். இது வேண்டுமென்றே கொண்டாடக்கூடாது என்பதில்லை. ஏதோ மனம் ஒப்பவில்லை. ஊரைவிட்டு வெளிக்கிட்டபிறகு நல்ல நாள் பெரு நாள் எல்லாம் யோசிக்கிற அளவுக்கு இல்லை.

கனடாவில் குளிரிலும் வெளியில் பானை வைத்து சூடு பானையில் ஏறாமல் அவதிப்பட்டு பொங்குபவர்களும் இருக்கிறார்கள். அது அவரவர் விருப்பம். ஆனால் எந்த ஊரிலிருந்து வந்தமோ அவையளையும் கொஞ்சம் நினைத்துப்பார்க்க வேணும் என்பது என் தனிப்பட்ட கருத்து..

:D

  • Replies 92
  • Views 12.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கனடால சினோ கொட்டுது உதுக்கை நான் வெளியால போய் சூரியனைத் தேடிப்பிடிச்சு பொங்கல் படைச்சு இது எல்லாம் நடக்கிற காரியமா? அதால நான் என்ட வீட்டு குசினிக்கை உள்ள அடுப்புல வெண்பொங்கல் காச்சி நானே சாப்பிட்டுட்டன் :D

செவ்வாய்க்கிழம தானே பொங்கல்? நீங்கள் இண்டைக்கே பொங்கி சாப்பிட்டாச்சோ?

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய்க்கிழம தானே பொங்கல்? நீங்கள் இண்டைக்கே பொங்கி சாப்பிட்டாச்சோ?

கலைஞன்,

என்ன இப்பிடி கேட்டிட்டீங்கள்? கனடாவில் எல்லா கல்குலேசனும் பண்ணி மண்டே பொங்கல் எண்டுட்டாங்கள்.. எல்லாரும் பொங்கிட்டீனம்..!! :D

  • தொடங்கியவர்

கலைஞன்,

என்ன இப்பிடி கேட்டிட்டீங்கள்? கனடாவில் எல்லா கல்குலேசனும் பண்ணி மண்டே பொங்கல் எண்டுட்டாங்கள்.. எல்லாரும் பொங்கிட்டீனம்..!! :D

ஓம் நானும் இப்ப கேட்டனான். சீபீசியில சொன்னவேள், கனடியப் பிரதமர் ஸ்றீபன் கார்ப்பர் அமைச்சர்களோட ஜாலியா சேந்து நிண்டு ஸ்காபுரோ கந்தசாமி கோயிலில சக்கரப்புக்கை சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர். லிபரல் கட்சி ரிச்மண்ட் பிள்ளையார் கோயிலில பொங்கல் கொண்டாடிச்சுதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில், ஜரோப்பாவில் குளிர்காரணமாக கொண்டாடுகிறார்களோ தெரியாது. ஆனால் அவுச்திரெலியாவில் சில தமிழர்களின் வீடுகளின் வெளியே முற்றத்தில் கொண்டாடுகிறார்கள். சில தமிழ் அமைப்புக்களும் அவ்வமைச்சேர்ந்தவர்களுடன், நண்பர்களோடு சேர்ந்து கொண்டாடுகிறார்கள். சிட்னி முருகன் கோவிலில் இம்முறை பெரதெனியா பல்கலைக்கலகத்தில் கல்விகற்ற பொறியியளாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அன்னதானமாக பொங்கல், வடை,அவல், கடலை, பாயசாத்துடன் கொண்டாடுகிறார்கள். தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் அவர்களது அலுவகத்தின் வெளியே முற்றத்தில் பொங்குகிறார்கள். அனைவருக்கும் எனது தைப்பொங்கல் தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்( திருவள்ளுவர் ஆண்டு 2039).

  • தொடங்கியவர்

என்ன கந்தப்பு திருவள்ளூவர் ஆண்டு 2039 எண்டு உங்கட கருத்தில ஒருவால் இருக்கிது?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கந்தப்பு திருவள்ளூவர் ஆண்டு 2039 எண்டு உங்கட கருத்தில ஒருவால் இருக்கிது?

சித்திரை மாதத்தில் வரும் முதலாம் திகதியை தமிழ்ப்புத்தாண்டு என்று சொன்னால்...... அம்முறைப்படி பார்த்தால் 60 ஆண்டுகளே வரும்.2007ஜ சர்வசித்து ஆண்டு என்று அழைக்கப்படும் .அப்படியானால் சர்வசித்து ஆண்டு சித்திரை 10ம் திகதியில் ஒருசம்பவம் நடைபெற்றது என்று சொன்னால், அச்சம்பவம் 2007 சித்திரை 10லா அல்லது 1947 சித்திரை 10லா நடைபெற்றது.

எப்போதுமே தனித்து இயங்கும் ஆற்றல் தமிழனுக்குண்டு. தமிழ் மொழிக்குண்டு. அதனைக் கருத்தில் கொண்டே இந்த வரலாற்றுத் திணிப்பை, திரிப்பை மாற்றி தமிழறிஞர்கள் 1921-ல் ஒழுங்குபடுத்தியவாறு, திருவள்ளூவர் ஆண்டை தமிழர் புத்தாண்டாக ஏற்றுச் செயல்படுத்திவருகிறார்கள். அதன் படி, திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பு கணக்குப்படி கி.மு.31- என்று முடிவு செய்யப்பட்டது.

அப்படிக் கணக்கிடும்போது, இப்போது "2039" என்பது தமிழாண்டுக் கணக்கு. ஒவ்வொரு தமிழ்ப் புத்தாண்டும், தமிழர் திருநாளான, உழைப்பாளர், உழவர் திருநாளான தை முதல் நாள் தொடங்குகிறது.

எது தமிழ்ப் புத்தாண்டு? -- அறிவியல் மற்றும் வரலாற்று முடிவு

--மஞ்சை வசந்தன்

திராவிட இயக்கத்துக்கு பார்ப்பனரைத் தலைமைத் தாங்கச் சொல்லி இன்றைக்குத் தமிழன் எப்படி தரம் கெட்டு இழிந்து கிடக்கின்றானோ அதேபோல அன்றைக்கும் ஏமாந்து வாழ்ந்ததன் விளைவு சமஸ்கிருத ஆண்டை தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடும் மடமை.

தமிழாண்டு என்று 60 ஆண்டுகளைக் கூறுகிறார்களே அதில் ஏதாவது ஒன்று தமிழாண்டு என்றோ தமிழ்ச்சொல் என்றோ காட்ட முடியுமா? அத்தனையும் சமஸ்கிருதப் பெயர்கள் அல்லவா?

தன் இனப் பெருமையை எல்லாம் இழந்து அடுத்தவன் அடையாளங்களை ஏற்று அலைகின்ற அவலம் நீங்கும்போதுதான் தமிழன் வாழ்வான்; தமிழும் வாழும்!.

நாடார் சங்கத்திற்கு வன்னியர் தலைவர் என்றால் நாடே சிரிக்காதா? அது பைத்தியக்காரத்தனம் என்று சொல்லமாட்டார்களா? அப்படியிருக்க சமஸ்கிருத ஆண்டைத் தமிழாண்டு என்று மட்டும் எப்படி ஏற்றுக் கொண்டாடுகின்றனர்? அப்போது மட்டும் ஏன் சிந்திப்பதில்லை? அறிவைப் பயன்படுத்துவது இல்லை?

மரபை மீறலாமா என்கின்றனர். எது மரபு? சமஸ்கிருத ஆண்டை தமிழாண்டு என்று சொல்லி தொல்காப்பியக் காலத் தமிழன் கொண்டாடினானா?

தண்ணீர் என்பதற்கு ஜலம் என்று சொல்வதிலும் சோறு என்பதற்கு சாதம் என்று சொல்வதிலும் பெருமை கொண்ட ஏமாளித் தமிழன் ஏற்றுக்கொண்டதல்லவா இந்தத் தமிழ்ப்புத்தாண்டு?

உண்மையில் தமிழ்ப்புத்தாண்டு என்பது தை முதல் நாளே யாகும். உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்; உயர்வான வாழ்வியலைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்.

உயரிய மொழி இலக்கணத்தைக் கொடுத்தவர்கள்!

உயரிய திருக்குறளைக் கொடுத்தவர்கள்!

உயரிய கலைகளைக் கொடுத்தவர்கள்!

உயரிய பண்பாட்டைக் கொடுத்தவர்கள்!

அவ்வகையில் உலகிற்குச் சரியான ஆண்டுக் கணக்-கீட்டைக் கொடுத்தவர்களும் தமிழர்களேயாவர்!. அதுவும் அறிவியல் அடிப்படையில் இயற்கையோடு இயைந்து கணக்கிட்டுச் சொன்னவர்கள்.

ஒரு நாள் என்பது என்ன?

சூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்றுவதற்கு ஆகும் காலம்.

ஒருமாதம் என்பது என்ன?

ஒரு முழு நிலவுத் தோன்றி மீண்டும் ஒரு முழு நிலவு தோன்ற ஆகும் காலம். அதனால் தான் மாதம் என்பதற்கு திங்கள் என்ற தமிழ் சொல் உள்ளது. திங்கள் என்றால் நிலவு என்று பொருள். திங்களை (நிலவை) அடிப்-படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் மாதம் திங்கள் என்று அழைக்கப்பட்டது.

அதேபோல் ஆண்டு என்பது என்ன?

சூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி நகர்வதாய்த் தோன்றும் (உத்ராயணம் தொடங்கும்) நாள் முதல் மீண்டும் அதே நிலை (உத்ராயணம் மீண்டும்) தொடங்கும் வரையுள்ள

கால அளவு ஓர் ஆண்டு.

அதாவது சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற எடுத்துக் கொள்ளும் காலம் ஒருநாள்.

சூரியன் தென் கோடியில் தோன்றி மீண்டும் தென் கோடியில் தோன்றும் வரையிலான காலம் ஓராண்டு.

சுருங்கச் சொன்னால் ஓர் உத்ராயணத் தொடக்கத்திலிருந்து மீண்டும் அடுத்த உத்ராயணத் தொடக்கம் வரும் வரையுள்ள காலம் ஓர் ஆண்டு.

உத்ராயணம் என்றால் வடக்கு நோக்கல் என்று பொருள். தட்சணாயனம் என்றால் தெற்கு நோக்கல் என்று பொருள்.

சூரியன் தை மாதத் தொடக்கத்தில் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் பங்குனி சித்திரையில் உச்சியில் இருக்கும் பின் ஆடியில் வடகோடியில் இருந்து தென்கோடி நோக்கும் பின் தென் கோடிக்கு வந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரும். இவ்வாறு சூரியன் வடக்கு நோக்கி நகரத் தொடங்கியதிலிருந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் வரையிலான கால அளவு ஓர் ஆண்டு.

சூரியன் நகர்வதில்லை என்பது அறிவியல் உண்மை. ஆனால் நம் பார்வைக்கு நகர்வதாகத் தெரிவதை வைத்து அவ்வாறு கணித்தனர்.

இவ்வாறு சூரியனின் இருப்பைக் கொண்டுதான் நாளும் கணக்கிடப்பட்டது. ஆண்டும் கணக்கிடப்பட்டது. நிலவைக் கொண்டு மாதம் கணக்கிடப்பட்டது. ஆக காலக் கணக்கீடுகள் என்பவை இயற்கை நிகழ்வுகளை வைத்தே கணக்கிடப்பட்டன. இவ்வாறு முதலில் கணக்கிட்டவர்கள் தமிழர்கள்.

தை முதல் நாள் அன்றுதான் சூரியன் வடதிசை நோக்கி (உத்ராயணம் நோக்கி) நகரத் தொடங்கும். எனவே தை முதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்-டாடப்பட்டது. ஆனால் சித்திரை முதல் நாளை ஆண்டின் முதல் நாள் என்பதற்கு எந்தக் காரணமும் அடிப்படையும் இல்லை.

தை முதல் நாளைக் கொண்டு ஆண்டுக் கணக்கீட்டைத் தமிழர்கள் தொடங்கியதை ஓட்டியே ஆங்கில ஆண்டின் கணக்கீடும் பின்பற்றப்பட்டது. தமிழாண்டின் தொடக்கத்தை (தை மாதத் தொடக்கத்தை) ஒட்டியே ஆங்கில ஆண்டின் தொடக்கம் இருப்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். 12 நாள்கள் வித்தியாசம் வரும். அந்த வித்தியாசம் கூட ஆங்கில நாட்டின் இருப்பிடம் தமிழ்நாட்டின்

இருப்பிடத்திலிருந்து வட மேற்கு நோக்கி 6000 மைல்களுக்கு அப்பால் இருப்பதால் ஏற்பட்டது.

ஏசு பிறப்பை வைத்து கணக்கீடு என்பது சரியன்று. காரணம் ஏசு பிறந்தது டிசம்பர் 25. மாறாக சனவரி 1ஆம் தேதியல்ல. 2006 ஆண்டுகள் என்பதுதான் ஏசு பிறப்பைக் குறிக்குமே தவிர சனவரி என்ற ஆண்டின் தொடக்கம் ஏசு பிறப்பை ஒட்டி எழுந்தது அல்ல.

ஆக இயற்கை நிகழ்வுகளின் சுழற்சியை அடிப்படையாக வைத்துத்தான் காலக்-கணக்கீடு என்பது உறுதியாவதோடு தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்பதும் உறுதியாகிறது.

மாறாக பிரபவ தொடங்கி அட்சய வரையிலுள்ள 60 ஆண்டுகள் எந்த அடிப்படையில் உருவானவை? ஏதாவது அடிப்படை உண்டா? கிருஷ்ணனுக்கும் நாரதருக்கும் 60 ஆண்டுகள் பிறந்தன என்ற நாற்றப் புராணத்தைத் தவிர வேறு ஆதாரம் இல்லையே!

அதுமட்டுமல்ல அந்த அறுபது ஆண்டு-களில் எந்தப் பெயரும் தமிழ்ப் பெயர் அல்ல. எல்லாம் சமஸ்கிருதப் பெயர். தமிழாண்டு என்றால் தமிழ்ப் பெயரல்லவா இருக்க-வேண்டும்?

தமிழர்களும் தமிழர் தலைவர்களும் அறிஞர்களும் தமிழ் வரலாற்றாளர்களும் இவற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டிலிருந்தாவது தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட ஆவன செய்ய வேண்டும்! தமிழக அரசும் அதை அதிகாரப்பூர்மாக அறிவிக்க வேண்டும்! தமிழாய்ந்த தலைவர் கலைஞர் காலத்திலே இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கலைஞர் இதை நடைமுறைப்படுத்துவார் என்று தமிழர்கள் குறிப்பாக அயல்-நாடுகளில் வாழும் தமிழர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். தமிழறிஞர்கள் ஒன்று சேர்ந்து 1921-இல் எடுத்த இந்த முடிவை இந்த ஆண்டாவது அரசு ஏற்று அறிவிக்க வேண்டும். அதை யாரும் எதிர்க்கப்-போவதில்லை. எதிர்ப்பவன் தமிழனாக இருக்கமாட்டான்!

சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி நமக்கு வழி காட்டுகிறார்கள்; உணர்வூட்டுகிறார்கள். கலைஞர் வார்த்தை-களில் சொல்ல வேண்டுமானால் கடல் கடந்த அந்தத் தமிழுணர்வு காலங்-கடந்தாவது நமக்கு வரவேண்டுமல்லவா?

சொந்த அப்பனுக்குப் பிறந்தேன் என்பது தானே ஒருவனுக்குப் பெருமையாக இருக்க முடியும்? அடுத்தவனுக்குப் பிறந்தால் அவமானம் அல்லவா?

தமிழன் ஆண்டு சமஸ்கிருத ஆண்டாய் இருப்பது அதுபோன்ற அவமானத்தின் இழிவின் அடையாளம் அல்லவா?

உலகிற்கு வழிகாட்டிய வாழ்ந்து காட்டிய தமிழன் அடுத்தவனுடையதை இரவல் பெறவேண்டிய இழிவு ஏன்? இழிவு என்று தெரிந்தும் உண்மை என்பது விளங்கியும் இழிவைச் சுமப்பது இந்த இனத்திற்கு அழகாகுமா? எனவே தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடி தலை நிமிர்ந்து தமிழனாக வாழ்வோம்!

1971 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதனால்தான் தமிழனுக்கு ஒரு தொடர் ஆண்டு கிடைத்துள்ளது.

அதேபோல் தமிழனுக்கு உரிய ஓர் ஆண்டுப் பிறப்பு உறுதி செய்யப்பட வேண்டும் அல்லவா? அதை உறுதி செய்த பெருமையும் வழக்கம் போல் கலைஞரையே சேரவேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.

தமிழ் ஆண்டு (திருவள்ளுவர் ஆண்டு)

தமிழ் உலகில் தமிழ் ஆண்டு என்னும் பெயரில் வழக்கில் இருக்-கின்ற பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டுகளின் பெயர்கள் தமிழ் இல்லை. அவை பற்-சக்கர முறையில் இருப்-பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை. அதற்கு வழங்கும் கதை அறிவு அறிவியல் தமிழ் மண் மரபு மாண்பு பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாக இல்லை.

எனவே தமிழ் அறிஞர்கள் சான்-றோர்கள் புலவர்கள் 1921-ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது திருவள்ளுவர் காலம் கி.மு. 31 தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்-தார்கள்.

இந்த முடிவை 18.1.1935 ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை தாங்கிய தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் உறுதி செய்து அறிவித்தார். திருவள்ளுவர் ஆண்டு கணக்கிட கிறித்து ஆண்டுடன் 31 கூட்டல் வேண்டும் என்றுகூறி திருவள்ளுவர் ஆண்டைத் தொடங்கி வைத்தார். 193531=1966. அதை அறிஞர் அவை ஏற்றுக் கொண்டது. அன்று தொட்டு அறி-ஞர்களால் அவ்வாண்டு நடைமுறைப்-படுத்தப்பட்டு வருகிறது. (பக்கம் 117 திருவள்ளுவர் நினைவு மலர் 1935)

- வ. வேம்பையன்

- உண்மை(ஜனவரி 16-30, 2007)

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு

முதலில் திராவிடப் புத்தாண்டு கொண்டாடுவதாக இருந்தால் தனியாகக் கொண்டாடுங்கள். பெருமைமிகு உழவர் பண்டிகைக்குள் உதைப் புகுத்தி அதைக் கொச்சைப்படுத்துகின்ற செயலில் ஈடுபட வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு

முதலில் திராவிடப் புத்தாண்டு கொண்டாடுவதாக இருந்தால் தனியாகக் கொண்டாடுங்கள். பெருமைமிகு உழவர் பண்டிகைக்குள் உதைப் புகுத்தி அதைக் கொச்சைப்படுத்துகின்ற செயலில் ஈடுபட வேண்டாம்.

சித்திரைப் புத்தாண்டில் வரும் 60 ஆண்டுகளிலும் தமிழ்ப் பெயர் வருவதில்லையே?. ஏன்?.

கீழே உள்ள் இணைப்பை வாசித்து பாருங்கள். உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும்

http://www.tamilcanadian.com/page.php?cat=189&id=4861

தமிழ் பேசும் இந்துக்கள் என்று தான் குறிக்கப்பட்டிருக்கிறது

வ. வேம்பையன் அவர்களின் தெளிவான கட்டுரையை இணைத்தமைக்கு கந்தப்பு அண்ணனுக்கு நன்றிகள்.

சித்திரைப் புத்தாண்டில் வரும் 60 ஆண்டுகளிலும் தமிழ்ப் பெயர் வருவதில்லையே?. ஏன்?.

இந்த ரெடிமேட் கேள்வியை பாக்க எனக்கு அடக்க முடியாத சிரிப்பு வாறது. :D

சரி பெயர் விடயத்துக்கே வருவோம். பெயர்கள் தமிழில் இல்லை என்றதன் படி வருடங்கள் தமிழ் இல்லை....

கடாரம் வென்ற சோழன், என்று பாடி மகிழும் இராஜ இராஜ சோழன், அவன் மகன் இராஜெந்திர சோழன் இரண்டும் தமிழ் பெயர் இல்லை எனவே அவர்கள் இருவரும் தமிழர் இல்லை

அடுத்து இப்ப இருக்கிற தமிழ் ஆக்களிலை பாதி பேரோட பெயர்

பிரகாஸ், ரமேஸ், சுகேஸ்........ எண்டு வட மொழி பெயரா இருக்கும், இன்னும் சில பேரோட பெயர் அன்ரன், ஜோன், மரியதாஸ் எண்டு இருக்கும் இதெல்லாம் தமிழ் பெயர் இல்லை எனவே இப்பிடி பெயர் வச்சிருக்கிற ஆக்கள் எல்லாம் தமிழர் இல்லை

இதுகும் சரி தானே கந்தப்பு.

:(

சித்திரைப் புத்தாண்டில் வரும் 60 ஆண்டுகளிலும் தமிழ்ப் பெயர் வருவதில்லையே?. ஏன்?.

இந்துக்களின் 60 வருடங்களில் தமிழ் பெயர் இல்லை என்று கூறும் மேதாவிகளே சித்திரை முதல் பங்குனி வரையிலான மாதங்கள் மட்டும் தமிழ் பெயர்களா? அவையும் வடமொழி பெயர்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் சித்திரை தமிழ் வருடப்பிறப்பைத் தான் புதுவருடமாக எடுத்துக் கொள்ள நாங்கள் வலியுறுத்துவதாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தாங்கள் விரும்பினால் வேறு எந்த்த திகதியையும் திராவிடப் புதுவருடமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஏன் பெரியார் மண்டையைப் போட்ட தினம் கூடப் புதுவருடத்தி;ற்கு சிறப்பினைக் கொடுக்கக் கூடும்.

ஆனால் தைப்பொங்கலைச் சிதைக்காதீர்கள்.

சிலர் சித்திரை தமிழ் வருடப்பிறப்பைத் தான் புதுவருடமாக எடுத்துக் கொள்ள நாங்கள் வலியுறுத்துவதாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தாங்கள் விரும்பினால் வேறு எந்த்த திகதியையும் திராவிடப் புதுவருடமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஏன் பெரியார் மண்டையைப் போட்ட தினம் கூடப் புதுவருடத்தி;ற்கு சிறப்பினைக் கொடுக்கக் கூடும்.

ஆனால் தைப்பொங்கலைச் சிதைக்காதீர்கள்.

இதுவே என்து கருத்தும். தமிழர் பண்பாட்டின் தனித்தன்மையை பறைசாற்றும் பொங்கல் திருநாளை, எல்லா கலாச்சாரங்களிலும் பொதுவாக காணப்படும் புத்தாண்டு தினமாக மாற்றுவது, தமிழர்களின் பண்பாட்டிற்கு இழைக்கப்படும் கொடுமை. அறிவற்றவர்களின் செயல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொங்கலை கொண்டாடுவோம் எல்லோரும். இவ்வருடம் தமிழர்க்கு முழு விடுதலை கிடைக்கும் என்று நம்புவோம். தாயகத்திலை இவ்வருடம் விசேடமாக கொண்டாடினம் எண்டு கேள்வி. மாவீரர்நாள் துக்கதினம் இல்லை என்பது போன்று இவ்வருட பொங்கலும் தமிழர் எழுச்சிபெறும் நாளாக நினைப்போம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏற்கனவே தமிழனுக்கு நாடு இல்லை.

தமிழ் மொழியையும் இப்போது அநேகமானோர் அரைகுறையாகத்தான் கதைகின்றார்கள்.

தற்போது ஒருசில வருடங்களாக தமிழ் பண்டிகைகளிலும் கண்வைத்தாயிற்று.

உழவர் திருநாளான தைப்பொங்கலும் இனிமேல் என்ன மாதிரியோ தெரியவில்லை?

இனிவரும் காலங்களில் தமிழர்களுக்கு கதிர்காமக்கந்தனின் நிலைமையை விட மோசமாகத்தானிருக்கும் .

எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு அரோகரா போடுங்கோ :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய மாட்டுப் புதுவருட வாழ்த்துக்கள்.

அடுத்தது

அம்பேத்காரும், ஒரு தொகுதி மக்களும் பவுத்த மதத்தை தளுவியவர்களை உதாரணம் காட்டவும் பட்டது.

பவுத்தர்களுக்கு என்றே அர்பணிக்கப்பட்டதாக உரிமை கொன்டாடும் சிறிலங்கா பவுத்த சிங்களவரிடையே சாதி இல்லையா என்று கெட்டால் ? இல்லை என்று யாராலும் பதிலளிக்க முடியாது.

இங்கு சொல்ல வருவது சாதியை நியாய படுத்துவதல்ல. சாதி ஒழிக்கப்பட வேண்டியது தான்.

ஆனால் மதம் மாறுவது மட்டும் சாதியை நீக்க உதவாது எனது மட்டுமே.

குளக்கட்டானின் இந்த கருத்துக்கு பதில் எழுதவேண்டியுள்ளது காரணம் அம்பேத்காரை என்னுமொரு கருத்தாடலில் நான் உதாரணம் காட்டியுள்ளேன்.

முதலாவது. மதம் மாறுபவன் எல்லம் காசுக்கு மாறுகின்றான் என்பதற்கானது தவறு என்பதை சுட்டிக்காட்ட எழுதப்பட்ட கருத்து அது.

இரண்டாவது மதம் மாறுபவன் எல்லாம் சாதி ஒழியவேண்டும் என்று கருத்துக்கொள்வது ஒரு குறுகிய வட்டம். அவனது அடிப்படை உரிமைகள் தேவைகளை ஓரளவாவது பூர்த்தி செய்ய முனைவது மதமாற்றத்திற்கு தூண்டுகோலாய் அமைந்ததை நிராகரிக்கலாகது.

1981 ல் தமிழ்நாடு திருநெல்வேலியில் மீனாட்சிபுரம் என்ற தலித்துக்கள் கிராமம் இஸ்லாமிய சமயத்திற்கு மாறியது. இது அதிர்ச்சிகரமாக அப்போது இருந்தது. பணம் தருகின்றோம் மீள இந்து மதத்திற்கு வரும்படி இந்து அமைப்புக்கள் கோரிக்கை விடுத்தது. அந்த மக்கள் வர மறுத்து விட்டனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் நான் உயர்ந்த சாதிக்கு நிகராக இஸ்லாத்தில் மதிக்கப்படுகின்றேன் என்பதல்ல. ஊரில் உள்ள கிணற்றில் என்னால் தண்ணி எடுக்க முடியும். நாலைந்து மைல் தொலைவுக்கு நடக்க தேவையில்லை. பள்ளி வாசலுக்கு சென்று தொழ முடியும். கோயிலுக்குள் நுழைய கூடாது என்பது போல் இங்கு சட்டமில்லை. மதம் மாறியபின்பு இரண்டு திருமணத்திற்கு சென்று வந்திருக்கின்றேன். அடிப்படையில் மனுசனாக மதிக்கிறாங்கள். இவ்வாறான காரணங்களே சொல்லப்பட்டது.

ஈழத்தின் நிலவும் சாதி நிலவரங்கள் சிங்கள பொளத்த பேரினவாதம் என்பவற்றோடு முடிச்சுப்போட்டு பொதுவாக கருத்துக்கூறக்கூடிய விசயம் இதுவல்ல என்பதை நாம் கவனிக்க வேண்டும். மதம் என்பது ஈழத்திலும் இந்தியாவிலும் ஒரேமாதிரியான செயற்பாட்டை கொண்டுள்ளது என்றும் அதனை வழிநடத்துபவர்களும் அதன் ஆதிக்கமும் ஒரேமாதிரியாய் உள்ளது எனவும் நாம் எல்லோரும் இந்துக்கள் என்ற பொதுப்பார்வையில் கருத்து எழுதுவது மிகவும் தவறானது. ஆனால் அந்த தவற்றை தெரிந்து செய்து கொண்டு மதமாற்றம் என்ற விடயத்தை அணுகும் போது முரண்பாடுகளை சுட்டிக்காட்டுவதாக எனது கருத்து அமைந்தது.

சாதி பெயரளவில் ஏற்படுத்தம் கெளரவக்குறைவு என்ற நிலையை கடந்து அதன் சுமைகள் அடிமைத்தனம் விழைவுகள் என்பன மக்களின் வாழ்வை எவ்வாறு சீரளித்து நிற்கின்றது , மக்களின் அடிப்படைத்தேவைகள் பெருளாதாரம் என்பவற்றை எவ்வாறு பாதிக்கின்றது என்ற பரந்த கண்ணோட்டம் அன்றியும் சம்மந்தப்பட்ட தரப்பு மக்கள் பற்றிய புரிதல் இன்றியும் மத மாற்றம் என்னும் விசயத்தை அணுகுவது பாதிக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் கரங்களுக்கு துணைக்கரமாகவே அமையும்.

-----------------------------------------------------------------------------------

கேரளத்தில் காலடியில் உள்ள சிறி சங்கராச்சாரியார் சமஸ்கிருதப் பல்கலைக்களகத் துணைவேந்தர் கே . என் . பணிக்கர் அண்மைணியில் சென்னை வந்த போது பேசியதை இந்து நாளேடு (9-11-2002) வெளியிட்டுள்ளது. "மத மாற்றத்திற்கு காரணம் , அடிமைப்படுத்தப்பட்ட , பலவீனப்படுத்தப்பட்ட மக்கள் , அம் மதமாற்றத்தை ஒரு கருவியாக ஏற்று , தங்களை மேன்மைப்படுத்திக்கொள்ள எடுக்கும் முயற்சியாகும். இந்துயிசத்தின் உள்ளேயுள்ள மக்களை அழுத்தி மிதிக்கும் தன்மையே பலரை மதம் மாற தூண்டுகின்றது. இந்துயிசத்தைப்போல் மக்களை அடிமைப்படுத்தும் சமயம் உலகில் வேறெங்குமே இல்லை. (There is no religion nowhere in the world as oppressive as Hinduism) இவ்வாறு ஒரு சமஸ்கிருத பேரறிஞ்ஞர்- துணைவேந்தராகுமளவுக்கு அம்மொழியை பயின்றவர் கூறுகின்றார்.

(தமிழுக்கு ஆகமங்கள் தடையாகுமா? பக்கம் 16 முதல் பந்தி அப்படியே மேற்கோள் காட்டியுள்ளேன்.)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.