Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெகிவளை ஆஞ்சிநேய சுவாமி

Featured Replies

கொழும்பில் தெகிவளையில் இருக்கும் ஆஞ்சிநேயர் சுவாமிகள் பற்றி பல்வேறு செய்திகள் கேள்விபட்டிருப்பீர்கள். ஆரம்பத்தில் சாதாரண கார் ஓட்டுனராக இருந்து மேல்மருத்துவத்துர்ர் ஆதிபராசக்தி பங்காரு அடிகளார் போன்று தன்னையும் பாவித்து இன்று பெரிய நிலைக்கு இட்டுச்சென்றுள்ளார். இப்படிப்பட்டவர்களை நாம் இலகுவில் நம்பிவிடாது கூர்ந்து அவதானித்து இனங்காண வேண்டும்.

இவர் ஒரு தடவை அவுஸ்ரேலியா வந்தபோது அவரை பார்த்திருக்கிறேன். பலர் முன்னிலையில் தான் ஆஞ்சிநேயர் என நடித்தாலும் மற்ற நேரத்தில் அவர் டாம்பீகமான வாழ்வை வாழும் ஒரு சதாரண மனிதன்போலவே காணப்பட்டார். சிங்கள அரசியல் வாதிகளின் நட்பைப்பெற்றவாராகவும் இருக்கிறார்.

கோவிலுக்கு வரும் அடியார்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார். தனது முறைப்படி ஆஞ்சிநேயரை வணங்கவேண்டும் என கட்டாயப்படுத்துகின்றார். அவர் ஆஞ்சிநேயர் முன் அமர்ந்து பிதற்றும் போது யாரும் நடமாடினால் அடித்து கெட்டவார்த்தைகளால் திட்டுகிறார். இந்தியாவில் நான் ஒரு வயதான அம்மாவைச்சந்தித்தேன் அவரை முதுகில் பிடித்து தள்ளி திட்டியதாக கூறினார்.

இந்த ஆஞ்சிநேய (கள்ள)சுவாமியைப்பற்றி தெரிந்தவர்கள் இங்கு மேலும் தொடர்ந்து எழுதுங்கள்.

இந்த **** ஒரு திருட்டு ***** என்பது எனக்கும் தெரியும், ஆனால் சில விசருகள் இருக்கும் வரை இதை ஒழிக்கமுடியாது. கொஞ்சம் முகம் குரங்கு மாதிரி தெரிவதால் ஆஞ்சி நேயர் கரக்டர் எடுத்துட்டார் இல்லையென்றால் இராமனாக மாறியிருப்பார்

இந்தப்பாடல் இவருக்கும் பொருந்தும்

http://video.google.com/videoplay?docid=2318659536095967739

ஒருமையில் எழுதியது திருத்தப்பட்டுள்ளது. யாழ்பிரியா

Edited by yarlpriya

இந்த ஆஞ்ஞநேய சுவாமியார் ஒரு முறை கனடா வந்தபோது அவரை காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு கோவிலில் இரவு நேரம் பூஜை முடிந்த பின் கொடிக்கம்பத்தருகில் கதிரைபோட்டு அமர்ந்து தரிசனம் கொடுத்து பக்கதர்களின் குறைகளை கேட்டு நிவர்த்திகளை கூறிக்கொண்டிருந்தார். ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தும் கொடுத்து கொண்டிருந்தார்.

நான்கு முழ வேட்டி மாத்திரம் கட்டி வெறும் மேலுடன் இருந்தார். அவருடைய வயிறு ஒரு பெரிய பானை அளவு இருந்தது. அதனால் தான் பாயில் அமர முடியாது கதிரையில் இருந்தார் போலும். இப்படி ஒரு பெரிய வயிறுள்ள சுவாமியாரை நான் ஒருபோதும் கண்டதில்லை. சுக வாழ்வு வாழ்கிறார் போலிருக்கு என்று அன்றே எண்ணினேன்.

ஆஸ்துமா நோய்க்கு மருந்து பெற்றுக்கொண்டவரை பிறிதொரு நாள் கண்டு விசாரித்தேன். மருந்தை ஒரே ஒரு தடவை குடித்தால் போதும் என்று சொல்லி கொடுத்தாரம். அப்படி அல்லாமல் தான் இரண்டு மூன்று முறை குடித்ததாகவும் தனக்கு மாறவில்லை என்றும் சொன்னார்.

இங்கே உள்ள கோவில்களுக்கெல்லாம் வரும்போதும் ஒரு ஆஞ்ஞநேயர் சுவாமிகளின் சிலையை அவரின் சீடர்கள் காவிக்கொண்டு வந்து அவரின் பக்கத்தில் வைப்பார்கள். தரிசனம் ஆரம்பிப்பதன் முன் சிறிய சொற்பொழிவை ஆற்றுவார். அப்போது தன்னை புகழ்வார். தன்னடக்கம் அவரிடம் குறைவாக காணப்பட்டது. இவை எல்லாம் போலி நடவடிக்கை என்பதுபோல் எனது மனம் கூறியது.

மொத்தத்தில் இவரிடம் எனக்கு நன்னம்பிக்கை ஏற்படவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரே ஒரு முறை சென்றேன் அவரது பூஜை முறைகளூம் பக்தர்களை ஏளனம் செய்வதும் அடிப்பதும் எல்லாம் புருடா போல் தெரிந்தபடியால் செல்வதில்லை. அத்துடன் ஆஞ்சனேயர் சைவர்களின் கடவுள் அல்ல. சின்மயா மிஷன் போன்ற நிறுவனங்கள் எமது நாட்டிலும் வைஷ்ணவத்தை நிலை நாட்ட முயல்கின்றார்கள் முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் இல்லையென்றால் கஷ்டம்தான்,

தெகிவளை சந்திரசேகரருக்கு நிறைய அரசியல்வாதிகள் நண்பர்கள். அவர் ஏதோ ஒரு அரச திணைக்களத்தில் வேலை செய்தவர். கொழும்பில்தான் முட்டாள் பக்தர்கள் செல்கிறார்கள் என்றால் புலம் பெயர் தேசங்களுக்கு இவரை அழைப்பவர்களை என்ன சொல்வது? இவர் தனது பிறந்த நாளை ஏதோ கிருஷ்ண ஜெயந்தி இராம நவமி போல கொண்டாடுவார். .

ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பாருங்கள். ஆனால் மதம் என்ன விதை என்று சிலர் கூவிக்கூவி விற்பார்கள். அவர்களைப் பற்றிப் பேசாமல் இருங்கள்.

இப்போது வைஸ்ணவம் என்பது இந்து மதத்தில் உள்ளடக்கப்பட்ட ஒன்று. எனவே, அதைப் பின்பற்றுவதில் தவறு கிடையாது.

தொண்ணூறுகளின் தொடக்கதிலிருந்தே தனது நாடகத்தை ஆரம்பித்தவர் இந்த பம்மாத்துக்காரர்... ஆரம்பத்தில் வசதிபடைத்தவர் களிடம் அதிகமான வலைப்பின்னலை உண்டாக்கி பின்னர் ஏமாந்த் நடுத்தர மக்களையும் தனது வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டார். இவர் விகாரை லேனுக்கு வரமுன்னமிருந்தே இவரை நான் நன்கறிவேன். இவரதுலீலைகளை பார்ப்பதற்கு எனதுநன்பர்களுடன் சென்று பாத்திருக்கிரேன்.. அவரின் அதிர்ஸ்டம் ஒருநாளாயினும் எங்களிடம் ஒருவார்த்தையேனும் சொல்லவில்லை. அப்பாவிகளை மட்டும் தேடித்தேடி அடிப்பார்.

இவர் சுத்த பம்மாத்துதான்... அதில் சந்தேகமேயில்லை... நான் பிருத்தானியாவில் மாணவனாக இருந்த பொளுது ஜ். பீ. சி வில் வந்து பொய் பேசினான் நானும் எனது சிலநன்பர்களும் இவரை சந்திக்க முயன்றபொளுது மறுத்து விட்டார்...

இவருக்கும் டக்கிளஸுக்கும் நெருங்கியதொடர்புகளுன்று....

மேலும் தொடரும்

ஒருமையில் எழுதியது திருத்தப்பட்டுள்ளது. யாழ்பிரியா

Edited by yarlpriya

  • தொடங்கியவர்

உள்ளூர் சாமிகள் மற்றும் யோசியர்கள் பணமும் தன்னம்பிக்கையும் பிறந்ததும் வெளிநாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிக்க கிழம்பிவிடுகிறார்கள். இவர்களை அழைத்து அவர்களுக்கு தங்க இடம் கொடுத்து வால்பிடிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த சாமியார் மிகவும் புத்திசாலியாக காணப்படுகிறார். திட்டமிட்டு காரியங்களை செய்கிறார். இவர் கோவில் கட்டியதும் அங்குய இலவச உணவிடுவதும் மக்களை தன்பக்கம் மயக்குவதற்கே. அப்பாவி மக்கள் ஏதோ பெரிய நற்காரியங்கள் செய்வதாக எண்ணி ஏமாந்துபோகின்றார்கள்.

இவர் ஒரு கதாயுதத்தையும் கொண்டுவாந்தார். அதை தோளில் அடித்து பெரிய வேடிக்கை எல்லாம் காட்டினார். கையாலும் அடித்து ஒலி எழுப்பினார். ஆண்டவனை பார்த்து சந்ததமாக அலட்டியபடி இருந்தார். இதையெல்லாம் வேடிக்கை பார்க்க மக்கள்கூடிவிட்டனர். ஆனால் எல்லோருமே வேடிக்கைதான் பார்த்தார்கள். யார் எதற்கு இந்த விளையாட்டு செய்கிறாய் என்று கேட்கவில்லை. கோவில்காரர்களும் கொஞ்சமேனும் விசாரிக்காது நம்பிவிடுகின்றனர். கோவிலுக்கு ஆட்கள் சேருவார்கள் உண்டியில் பணம் சேரும் என்று மறைமுகமாக இவற்றை ஊக்குவிக்கின்றனர்.

(சில மாதங்களுக்கு முன் வந்த ஒரு சோதிடர் போகும்போது 40ஆயிரம் டாலர்களை எடுத்துச்சென்றபோது விமானநிலையத்தில் மாட்டிக்கொண்டுள்ளார். இந்தப்பணத்ததை நாம் சம்பாதிக்க குறைந்தது 6 அல்லது 7 மாதங்கள் ஆகின்றது ஆனால் இவர்கள் 1 அல்லது 2 மாதத்தில் சம்பாதித்துவிடுகிறார்கள். அதுகும் தொழிற்சாகளுக்குசென்று முதுகு முறித்து வேலைசெய்தாது. (எவ்வளவு பொறாமையாக உள்ளது) இதில் நகைச்சுவை என்ன என்றால் அவர்போகும்போது அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்த அழகுசாதனப்போருட்களையும் திருடிச்சென்றுள்ளார். )

கொழுமபில் உள்ளவர்கள் இந்த சாமியைப்பற்றி இன்னும் தெரிந்து எழுதவேண்டும்.

சில மாதங்களுக்கு முன் வந்த ஒரு சோதிடர் போகும்போது 40ஆயிரம் டாலர்களை எடுத்துச்சென்றபோது விமானநிலையத்தில் மாட்டிக்கொண்டுள்ளார். இந்தப்பணத்ததை நாம் சம்பாதிக்க குறைந்தது 6 அல்லது 7 மாதங்கள் ஆகின்றது ஆனால் இவர்கள் 1 அல்லது 2 மாதத்தில் சம்பாதித்துவிடுகிறார்கள். அதுகும் தொழிற்சாகளுக்குசென்று முதுகு முறித்து வேலைசெய்தாது.

40ஆயிரம் டாலர்களை (30 ஆயிரம் யூரோக்கள் ?) சேமிக்க வேண்டுமாமால் அய்ரோப்பாவில் குறைந்தது மூன்று வருடங்கள் ஆகும்.

என்ன செய்யுறது? இப்ப சாமிமார் கோயில்களோட குடியிருக்க துவங்கீட்டீனம். சனம் சாமியாரில விசயம் இல்லை எண்டாலும், கோயிலில இருக்கிற சாமி தங்கள கைவிடமாட்டார் எண்டு போகிதுகள். இப்ப ஸ்டைல் - லேட்டஸ்ட் டிரண்டும் இதுதான்.

நீங்களும் உங்களுக்கு பக்கபலமா ஒரு கோயில் இருக்குமாய் இருந்தால் சாமியாராக வரமுயற்சித்து பார்க்கலாம். முதலில் சும்மா போய் கோயிலுக்கு பக்கத்தில நிண்டு ஏதாவது வித்தைகள் செய்யவேணும். உரு ஆட வேணும். இதுக்கு பிறகு எதிர்கால பலன்கள், சாதங்கள் பார்க்கலாம். இதுக்கு பிறகு மருந்துகள் குடுக்கலாம். எல்லாம் மெல்ல மெல்லத்தான் செய்ய வேணும். சும்மா இலகுவா செய்ய ஏலாது. மல்ரி மில்லியன் பிஸ்னஸ் ஐ பில்டப் செய்யுறது எண்டால் சும்மாவா?

எல்லாத்துக்கும் முதலில நீங்கள் ஆக்களை கூச்சப்படாமல் ஏமாத்துறதுக்கு பழகிக்கொள்ளவேணும். இது ஒரு ஸ்டெப் பை ஸ்டெப் புரஸஸ். இந்த துறையில் இறங்கும் எல்லாருக்கும் வெற்றி கிடைக்கும் எண்டும் சொல்லஏலாது.

இப்ப வாற தமிழ்சினிமா படங்களில கூட சாமியார் பிஸ்னஸ் எப்பிடி ஆரம்பிக்கிறது, செய்வது எண்டு சொல்லித் தாறாங்கள்.

குட் லக் இன் யுவர் கரியர் (சாமியார் இண்டஸ்ரி)!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.