Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

M.I.A. மாயா

Featured Replies

இசை நடன அரங்கில் மாயா

எழுதியவர் தளநெறியாளர்

200x200.jpg

உலகெங்கும் ஆங்கிலத்தில் வெளிவரும், ஈழம் பற்றிய செய்திகளுக்கான இணைப்பை தரும், தமிழ் கனடியன் இணையத் தளத்தில்தான் அந்த செய்தி இணைப்பையும் [Jan. 27, 2005 Eye Weekly] பார்த்தேன். அதனைத் திறந்து படிக்கும் ஆர்வத்தை தலைப்பும் முன்குறிப்பும் சுட்டி நின்றன. Tiger, tiger, burning bright (Tamil pop provocatrice M.I.A. wages war on the dancefloor) என்ற தலைப்புடன் காணப்பட்ட அக்கட்டுரைக்குள் நுழைந்தபோது ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியங்கள் சிதறிக்கிடந்தன. உலகெங்குமான இளவயதினரை ஈர்த்திழுக்கும் நவீன இசை நடன அரங்கில் ஈழத்து தமிழ்ப்பெண் தடம்பதித்துக் கொண்டிருக்கின்றார் என்பதுடன் சர்வதேச ஊடகங்களால் அடையாளம் காணப்பட்டார் என்பதும் முக்கியமாகப்பட்டது. (ஊடகங்களில் வெளிவந்தவை இணைப்பாக கீழே தரப்படுகின்றது). மற்றது அவரின் இசையின் உள்ளடக்கமாக அரசியல் இருந்ததென்பதும் செவ்விகளின் போது தனது அடையாளத்தையும் குடும்ப நிலையையும் வெளிப்படையாக பேசியதென்பதும் முக்கியமாகப்பட்டது.

877901p1.jpg

மாயா அருட்பிரகாசம் (மாதங்கி அருட்பிரகாசம், வயது 27) என அறிமுகப்படுத்தப்படும் அவரின் அரங்கப்பெயரும் குறியீடும் M.I.A. என்பதாகும். இலண்டனில் பிறந்து தந்தையாரின் அரசியல் ஈடுபாடு காரணமாக பெற்றோரால் கைக்குழந்தையாக ஈழம் எடுத்துச்செல்லப்பட்ட அவர் பின்னர் பதினொரு வயதில் தாயாருடனும் இரு சகோதரர்களுடனும் இலண்டன் திரும்பினார். London's Central Saint Martins Art School ல் நுண்கலைத் துறையில் தன் பட்டப்படிப்பை முடித்த மாயா, அப்பட்டப்படிப்பில் சினிமாத்துறையையும் தன் கற்கைநெறியாக கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது முதல் ஓவியக் கண்காட்சியை இலண்டனில் நடாத்தியபோது அது (nominated for the alternative Turner prize) ருனர் பரிசிற்காக பரிந்துரைக்கப்பட்டதுடன் அவ்வோவியங்கள் தொகுப்பு நுலாக்கப்பட்டு Pocko நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இவ்வோவியங்களில் போர்க்கருவிகளும் பனைமரமும் முக்கிய இடத்தை பெற்றுள்ளனவாம்.

இசை நடனத் துறையில் ஆர்வம் கொண்ட மாயா தனது Galang என்னும் முதல் தனிப்பாடல் இறுவெட்டு வெளிவந்தபோதே ஊடகங்களின் கவனத்தை பெற்றார். Sunday Times Culture, The New Yorker போன்ற பத்திரிகைகள் புகழ்ந்து எழுதின.

பின்னர் Sunshowers என்னும் இறுவெட்டை வெளியிட்டிருக்கின்றார். இந்த ஆண்டு பெப்ரவரியில் அவரது மூன்றாவது இறுவெட்டு வெளிவர உள்ளது. அதன் பெயர் அருளர் (Arular) என்பதாகும். தனது தந்தையாரின் போர்க்களப் பெயர் அருளர் எனத் தெரிவிக்கும் மாயா, அவரது கடந்தகால அரசியல் செயற்பாட்டிற்காக இந்த இறுவெட்டை அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அருளப்பு ரிச்சர்ட் அருட்பிரகாசம் என்னும் முழுப்பெயரைக் கொண்ட அருளர் முதுமாமணிப் பட்டம் பெற்ற இயந்திரவியல் பொறியாளர் என்பதும், ஈழத்து போராட்ட இயக்கங்களில் ஒன்றாக விளங்கிய ஈரோஸ் இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவர் என்பதும், லங்காராணி என்னும் புதினத்தின் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாயா தனது செவ்விகளில் தனது தந்தையார் பற்றியும் அவரது அரசியல் பற்றியும் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். எனக்கேற்பட்டு ஆச்சரியங்களை இப்போது நீங்கள் புரிந்திருப்பீர்கள்.

miacover_web.jpg

இந்த ஆச்சரியங்களுக்கு அப்பால் அவரது துணிச்சலும், கலைத்துவ சாதனையும் மிக்க இம்முயற்சியை பாராட்ட வேண்டியது எமது கடமையாகின்றது. ஈழத் தமிழ் சமூகத்தின் இளைய தலைமுறையினர் கட்டியெழுப்பப் போகும் புதிய உலகத்தின் முன்மாதிரிகளில் ஒருவராக மாயா திகழ்கின்றார் என்றால் மிகையல்ல. தன் அடையாளத்தை இழக்காமல் சர்வதேச அரங்கில் மேலும் வெற்றிகளைக் குவிக்க அப்பால் தமிழ் குழுமம் அவரை இதயம் கனிந்து வாழ்த்துகின்றது!

மகன் தந்தைக்கு ஆற்றுவது "வள்ளுவர் அறமாக" இருக்கலாம் மகள் தந்தைக்கும் தாய்க்கும் ஆற்றுவது "ஈழப்போராட்ட அறமாக" மாறுகின்றது என்பதற்கு மாயாவும் உதாரணமாகின்றார்.

மாயா பற்றிய மேலதிக விபரங்களிற்கும், அவரது படைப்புகளைப் பற்றி அறிந்துகொள்வதற்கும் அவரது இணையத் தளத்திற்குச் செல்லுங்கள்.

மாயாவின் இணையத்தளம்:

www.miauk.com

மாயா பற்றி செய்தி இதழ்களில் வந்த செய்திகள்:

http://newyorker.com/critics/music/?041122crmu_music

http://www.japantimes.com/cgi-bin/getartic...m20050116a2.htm

http://www.pitchforkmedia.com/top/2004/sin...es/index5.shtml

http://www.dustedmagazine.com/features/324

http://www.230publicity.com/mia.html

http://www.google.de/search?hl=de&q=Maya+A...tnG=Suche&meta=

நிழற்படங்கள் வேறுதளங்களில் இருந்து பெறப்பட்டவை. அத்தளங்களிற்கு எம் நன்றிகள்.

நன்றி - அப்பால் தமிழ்

http://www.appaal-tamil.com/index.php?opti...&id=198&Itemid=

  • Replies 59
  • Views 7.4k
  • Created
  • Last Reply

இந்தப் படங்களைப் பார்த்த போது இவர் ஈழத்தமிழர் என்ற எண்ணமே வரேல்ல...ஏதோ மியா மாயா என்று ஆபிரிக்க - அமெரிக்க அல்லது கறுப்புப் - பிரித்தானிய வடிவம் தான் ஞாபகம் வந்தது...ஈழத்து இளசுகளே நீங்க உலகத்தில முன்னுக்கு வாறது பெருமை வரவேற்கிறம்...ஆனா அதற்காக உங்க தனித்துவங்களக் காட்டாம...டி என் ஏ பிங்கர் பிறிண்ட் வைச்சுத்தான் ஈழத்தான் என்று காட்ட வைச்சுடாதேங்க....! :wink: :lol: :idea:

  • தொடங்கியவர்

.டி என் ஏ பிங்கர் பிறிண்ட் வைச்சுத்தான் ஈழத்தான் என்று காட்ட வைச்சுடாதேங்க....!

:lol:

  • தொடங்கியவர்

இங்கே பெரும்பாலும் ஈழத்து இளசுகள் பிரித்தானிய கறுப்பினத்தவர்களை நடை, உடை மற்றும் அனைத்து விடயங்களிலும் பின்பற்றுவதை அவதானித்திருக்கின்றேன், இவர்கள் பிரித்தானிய வெள்ளை இனத்தவரை பின்பற்றுவது குறைவு. இதற்கு ஏதாவது குறிப்பிடத்தக்க காரணம் உண்டா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

www.wtrfm.com/liveradio.gif

ஐயோ உந்தப் பிள்ளையை பற்றி அறியத்தான் நோர்வேத் தம்பி no way இல்லாமல் தவிச்சவர். இப்போ :lol::lol: பிள்ளேன்ர படங்களை பார்க்க கலைத்துறையிலே கலக்குதோ இல்லையோ பொதுவாய் கலக்கும் எண்டு தெரியுது. :wink: :lol: :wink: :D

  • 2 months later...

{Arular By M.I.A}

-டிசே தமிழன்-

இந்தப்பொழுதில், இசையின் தூறல் மெலியதாய் கணணியில் கசிந்தபடியிருக்கின்றது. காந்தக்குரலும், அற்புதமான சுருதியும் இணைந்த மாயா அருட்பிரகாசத்தின் (aka M.I.A) 'அருளர்' இசைத்தட்டு இதமாய் மனதை நனைக்க, இரவு இனிமையாக விரிக்கின்றது. போரால் பாதிக்கப்பட்டு, அகதியாய் அந்நியப்பட்டு, தனது சொந்தமண்ணைத் துறக்கவும் முடியாமல் அவதிப்படும் ஒரு பெண்ணின் வாழ்வு பின்னணியில் மங்கலாய்த் தெரிய, பாடல்கள் இன்னமும் நெகிழ்வூட்டுகின்றன. மாயா, திரைப்படம், ஒளிப்பதிவு சம்பந்தப்பட்ட முறைசார் கல்வியை ஒரு கல்லூரியில் கற்று பட்டமும் பெற்றவர். பிறகு ஒரு இசைக்குழுவின் பயணத்தின்போது, அவர்களின் இசைநிகழ்ச்சிகளை ஒளிப்பதிவுசெய்யப்போய், இசையின்பால் ஈர்க்கப்பட்டு இன்றொரு முக்கிய இசைக்கலைஞியாகிவிட்டார்.

2003ல் முதல் முதலில் வெளிவந்த Galang பாடல்மூலம் பிரித்தானியாவிலுள்ள இரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர். அந்தப்பாடல் குழுக்களின் வன்முறையை, "Shot gun get down get down/ Too late you down, d-down" என்றும் "Don't let'em get to you if he's got 1 you get 2" எனவும் பாடுபொருளாக்குகிறது. ரேடியோக்கள், தொலைக்காட்சிகள் எதிலும் அதிகம் ஒளி/ஒலிபரப்படாதுவிட்டாலும், மாயாவின் பாடல் இணையத்தின் மூலம் மிக விரைவில் பிரபலமாகின்றது. இந்தியா, மேற்கிந்திய நாட்டவர்களின் நடன அரங்கங்களை இந்தப்பாடல் நிறைக்க, தனது முதல் Single ஆல்பத்தை வெளியிடுகின்றார். பிறகு, பலரால் பாராட்டவும், விமர்சிக்கவும்பட்டதுமான பாடலான, Sunshowers பாடலை மாயா எழுதுகின்றார். இது ஒரு முஸ்லிம் தற்கொலைப் போராளியைப் பற்றிக்கூறும் பாடல். அதிகாரத்திற்கு எதிராக அறைகூவல்விடும் வரிகள் அதில் இருக்கின்றது. "You wanna go?/ You wanna war?/ Like P.L.O I don't surrender.." என்றும் "Beat heart beat/ he's made it to the newsweek/sweet-heart seen it/he's doing it for the people" என்று தற்கொலைப்படையாய் போய் இறந்துப்போகின்றவனை பரிகசிக்காமல், பரிவுடன் பார்க்கின்றார் மாயா. இந்தப்பாடலில் இடையில் எப்படி ஒருவர் முஸ்லிமாய் இருப்பதால் சித்திரவதை அனுபவிக்கிறார் என்று

"Semi-9 and snipered him

on that wall they posted him

they cornered him

and then they just murdered him

he told them he didn't know them

he wasn't there they didn't know him

they showed him a picture then:

"Ain't that you with the MUSILMS?"

எதற்கும் பயப்பிடாமல் தனக்கு நியாயமாய் தெரிவதை தன் பாடல்களில் மாயா முன்வைக்கின்றார்.

இந்த பாடல்களிலுள்ள கூர்மையான வசனங்களைப்போலவே, ஒருவிதமான காந்தக்குரலில் நன்றாகப் பாடவும் செய்கின்றார். இந்த இரண்டு பாடல்களும் கொடுத்த வரவேற்பினைப் பார்த்தபின் பலர் மாயாவின் ஒரு முழுத்தொகுப்பான இசைத்தட்டை எதிர்பார்த்துக் காத்திருந்தனர் என்று இந்த இசைத்தட்டுக்காய் எழுதப்பட்ட விமர்சனங்களை வாசிக்கும்போது தெரிகின்றது. இடையில் ஒருவர், தனது beats சிலதை மாயா திருடிவிட்டார் என்று குற்றஞ்சாட்டியதால் சென்ற ஆண்டே வரவேண்டிய தொகுப்பு, பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு இப்போதுதான் வெளிவந்திருக்கின்றது.

'அருளரில்' பதின்மூன்று பாடல்கள் இருக்கின்றன. மூன்று skits (தமிழில் எப்படிச்சொல்வது?) தவிர்த்து பார்த்தால், பத்து முழுமையான பாடல்கள் இருக்கின்றன. இரண்டாம் பாடலான 'Pull up the people, Pull up the poor'ல், மிகவும் விமர்சிக்கப்பட்டதான, "I've got the bombs/ To make you blow" என்ற வரிகள் வருகின்றது. இதைவிட, "Every gun in a battle is a son and daughter too" என்றும், I'm a fighter/ fighter god என்றும் வருகின்றது. இதை பல விமர்சகர்கள் ஈழப்போராட்டத்துடன் நேரடியாகச் சம்பந்தப்படுத்தித்தான் எழுதியிருக்கின்றார்கள். மாயா ஒரு நேர்காணலில் கூறியது நினைவிற்கு வருகின்றது. ஈழப்போர், இந்தியாவில் அகதி முகாம் வாழ்க்கை என்ற பாதிப்பில் வெறுப்படைந்து, தான் முற்று முழுதாக ஒரு மேலைத்தேயத்துக்காரியாக மாறி பல வருடங்களாக இருந்ததாகவும், பிறகு, தன்னைப்போல அதிஸ்டமில்லாது போரிலிருந்து தப்பிவர முடியாத குழந்தைகளை நினைத்துப்பார்த்தபோதுதான் தனக்கு தனது வேரும் அடையாளமும் மிக அவசியம் என்ற உணர்வு வந்தது என்று குறிப்பிட்டிருந்தார். அதையேதான் ஒரு பாடலில், "I got brown skin/ but I'm a west Londoner,/educated but a refugee still..." என்று தன்னை உலகிற்கு பிரகடனப்படுத்துகின்றார். போரின்/வன்முறையின் பீதியை Bucky Done Gun என்ற பாடலின்,

"They're comin through the window

They're comin through the door

They're bustin down the big wall

And sounding the horn"

என்று மாயா சொல்கின்றார். ஆனால் இறுதியில், "I'm armed and I'm equal" என்று கதவை, சாளரத்தை, சுவரை உடைப்பவர்களைப் பார்த்து திருப்பிக்கேட்கவும் செய்கின்றார் (இன்னொருவிதமாய் பெண்ணிற்கெதிரான ஆணின் வன்முறையாகவும் இந்தப் பாடலை வாசிப்புச்செய்யலாம்). பத்து டொலர் பாடலில் intro தமிழில் வருகின்றது (கிட்டத்தட்ட தமிழ் பாடலைப்போலவே பின்னணியும் இருக்கின்றது). இந்தப்பாடல் ஒரு சின்னப் பெண்ணை, விலைமாதராக மாற்றும் சமூகத்தின் கேடுகெட்ட நிலையை எடுத்துக்கூறுகின்றது. பத்து டொலர் தந்தால் நீ என்னவும் செய்யலாம் என்று ஒரு விலைமாதின் ( "What can I get for ten dollar/ everything you want/anything you want") குரலாய் அந்தப்பாடல் ஒலிக்கின்றது. மேலைத்தேயத்தின் அதிகாரத்தில் இருப்பவர்களையும் ("Need a Visa? Got with a geezer/ Need some money/ Paid him with a knees-up") என்று நக்கலடிக்கவும் தவறவும் இல்லை.

Hombre, Amazon ஆகிய இரண்டு பாடல்களும் காதலையும், காமத்தையும் பேசுகின்றன. Hombreல், "Take my number call me/I can get squeaky/So you can come and oil me/My finger tips and the lips/ Do the work yeah" என்று கிறங்கலாய் கூறினாலும், அமேசனில் ஒரு dating அனுபவத்தை வித்தியாசமாய் சொல்கின்றார். "When we shared raindrops/ That turned into lakes/Bodies started merging/And the lines got grey..." என்ற என்னைக் கவர்ந்த அழகான வார்த்தைகளும் அந்தப்பாடலில் இருக்கின்றது. இப்படிக் கிறங்கினாலும் இறுதியில், "Now I'm looking at him thinking/ May be he's ok" என்று ஆக உருகாமல் இயல்பாய்ச் சொல்வது இன்னும் பிடித்திருந்தது. காதலைப் பாடும் இந்தப்பாடலில் கூட "Palm tree silhouette smells amazing/blindfolds under home made lanterns/ somewhere in the amazon/ they're holding me ransom" என்றும், காதலின் களிப்பில் கூட "I'll scream for the nation" என்று நம்மைப் போன்ற பலரைப் போலத்தான் இந்தப்பெண்ணிற்கும் சொந்தமண் ஞாபகம் வந்து, இப்படித்தான் பாடமுடிகின்றது.

பாடல்கள் மட்டுமில்லாது இந்த இசைத்தொகுப்பின் முன்பக்கத்தைக் கூட வித்தியாசமாய்த்தான் செய்திருக்கின்றார் (ஓவியத்தில் மாயாவிற்கு மிகவும் ஈடுபாடுண்டு, அவரது இணையத்தளத்தில் ஓவியங்களைப் பார்க்கலாம்). பாலஸ்தீனிய முஸ்லிம் மக்களை பிரதிபலிக்க அவர்களது மொழியைக் கொண்ட எழுத்துக்களும், இலங்கை தேசப்படமும், அதில் தமிழீழப்பிரதேசம் பிரிக்கப்பட்டும் காட்டப்படுகின்றது. இறுதியில் நன்றி கூறும்போது கூட Mom, Grandma என்று எழுதாமல், Amma, Ammamma என்று எழுதியிருப்பதைப் பார்க்கும்போது, அவர் தமிழோடும் வாழவிரும்புகிறார் என்பதையும் தனது அடையாளத்தை மறைக்காமல் தனது இரசிகர்கள் முன் வெளிப்படையாக வைத்திருக்கின்றார் என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லத்தான்வேண்டும்

மாயாவின் இந்த இசைத்தட்டு நன்றாகவிருந்தாலும், இது ஜரோப்பிய, கீழைத்தேய சாயல் அதிகம் கலந்திருப்பதால், அமெரிக்காச் சூழலில் எப்படி (ஒரு விமர்சகர் சத்தம் அதிகமாய் இருப்பதாய் எழுதியிருந்தார்) ஏற்றுக்கொள்ளப்படும் என்று சரியாகச் சொல்லமுடியவில்லை. ஆனால் யாரோ ஒருவர் கூறியதுமாதிரி, இந்தவருடத்தில் வெளிவந்த, அரசியலை நேரடியாகப்பேசும் இசைத்தொகுப்பு என்ற வகையில் அருளர் மிகவும் முக்கியமானது என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள். தமிழராய், தனது நாட்டில் மட்டுமில்லாது, கொங்கோ, பாலஸ்தீனியம் என்று உலகெங்கிலும் நடக்கும் போராட்டங்களுக்காயும், மனித இழப்புக்களுக்காயும் குரல் கொடுக்கும் மாயாவின் பரந்த மனதை நாமும் பாராட்டி அவரது பாடல்கள் நியாயத்திற்காய் என்றும் உரத்துக்குரல்கொடுக்கட்டும் என்று வாழ்த்துவோமுமாக.

இறுதியில், "You could be a follower,/ but who's your leader/ Break that circle, it could kill ya." என்று மாயா கூறும் இந்த வார்த்தைகளை உங்களினதும், எனதும் சிந்தனைக்குமாய் விட்டுச்செல்கின்றேன்.

குறிப்புக்கள்: 'Freedom fighting dad' என்றொரு பாடலில் குறிப்பிடுடப்படும் மாயாவின் தந்தையார், ஒரு காலத்தில் ஈழப்போராளியாகவும், லங்கா ராணியையும் எழுதியவருமான அருட்பிரகாசம். தந்தையின் போராட்ட நினைவாகவே அருளர் என்றபெயரை இந்த இசைத்தட்டுக்கும் வைத்திருக்கின்றார். மாயாவின் இணையத்தளம்: www.miauk.com

நன்றி......மனஓசை சந்திவைதனா அக்கா

இவரை பற்றி ஏற்கனவே ஒரு தலைப்பில் விவாதம் நடந்தது. அதை தேடினேன் கிடைக்கவில்லை.

நான் பொதுவாக ஆங்கில இசைகளை கேட்பதில்லை. எதிர் பாராத விதமாக இவரது Galang பாடலை கேட்கநேர்ந்தது. அதன் பின் இங்குள்ள வானோலிகளில் அடிக்கடி அதே பாடல் மீண்டும் மீண்டும் ஒலிபரப்பப்படுவதை உணரமுடிந்து. அவரது பாடல்கள் ஏனைய நாடுகளிலும் பிரபலமாவது புரிந்தது.

  • தொடங்கியவர்

877901p1.jpg

இந்தப் படங்களைப் பார்த்த போது இவர் ஈழத்தமிழர் என்ற எண்ணமே வரேல்ல...

ஈழத்தமிழர் என்று தெரியவேண்டும் என்றால் பார்க்க எப்படி இருக்க வேண்டும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர் என்று தெரியவேண்டும் என்றால் பார்க்க எப்படி இருக்க வேண்டும்?

:(:lol::lol::lol:

877901p1.jpg

ஈழத்தமிழர் என்று தெரியவேண்டும் என்றால் பார்க்க எப்படி இருக்க வேண்டும்?

மாயா கூயா... மாயாவி மாதிரி இருக்க வேணும்...! :wink: :(

ஈழத்தமிழர் என்று தெரியவேண்டும் என்றால் பார்க்க எப்படி இருக்க வேண்டும்?

நிச்சயமா காக்கை, குருவிபோல இருக்கக்கூடாது.. :P

நிச்சயமா காக்கை, குருவிபோல இருக்கக்கூடாது.. :P

அதுகளப் போல இருக்கவே முடியாதே...அதுகளுக்கென்று உலகத்தில தனி அடையாளம் இருக்கு...( அது ஆபிரிக்காவில இருந்தால் என்ன அமெரிக்காபில இருந்தால் என்ன....!) எல்லாம் பறவையென்றாலும் காகம் என்றும் குருவியென்றும் ஏனிருக்குதுகள்...அதுகளுக்குச

3240897513ee65fffef44f.gif டிங் டிங் டிங் rooster3.gif

சண்டையை ஆரம்பிக்கலாம் :(

3240897513ee65fffef44f.gif டிங் டிங் டிங் rooster3.gif

சண்டையை ஆரம்பிக்கலாம் :(

வந்திடுவியளே...அவரவர் தங்கள் தங்கள் பார்வையை கருத்தைச் சொன்னா சண்டையா...என்ன உலகமப்பா இது...! :wink: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3240897513ee65fffef44f.gif டிங் டிங் டிங் rooster3.gif

சண்டையை ஆரம்பிக்கலாம் :(

:lol::lol::lol::lol::lol:

  • தொடங்கியவர்

மாயா கூயா... மாயாவி மாதிரி இருக்க வேணும்...! :wink: :(

படங்களை பார்க்கும் போது ஈழ தமிழர் என்ற எண்ணம் வரவில்லை என்று சொல்லுகின்றீர்கள். அந்த புகைப்படத்தில் என்ன வேறுபாடு என்pathaiyum புல தமிழர்கள் எப்படி இருந்தால் பார்த்தவுடன் தமிழர் என்று தோன்றும் என்பதையும் விளக்கமாக சொல்லுங்களேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

EKAS089t.jpg

EKDE583t.jpg

இப்படி ஆடை அணியவேணுமோ என்னமோ.. ஆனால் பாருங்கோ தமிழ் சேவல் அணிஞ்சிருக்கிற ஆடையை..

rooster3.gif :wink:

miacover_web.jpg

முதற் கண் மாயாவுக்கு என் வாழ்த்துக்கள்.

இவராவது தன்னை ஈழத் தமிழர் என்று சொல்லிக் கொள்கிறார்.

பலர் சொல்லிக் கொள்வது மட்டுமல்ல காட்டிக் கொள்ளவும் விரும்புவதில்லை.

சில சமயங்களில் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளால் என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது.

அதற்கு மேலும் பல விடயங்கள் இருக்கலாம்................

நான் அண்மையில் பிரன்சில் நடை பெற்ற

தமிழ் குறும்பட விழாவுக்கு வந்த குறும்படங்களைப் பார்த்த போது

அனைத்துப் படங்களும் பிரான்சை மையமாக வைத்தே பின்னப்பட்டிருந்தன.

இக் குறும்படங்களில் ஒரு முக்கிய விடயம் என் மனதைக் கவர்ந்தது.

அதாவது யாருமே வில்லன்களாகக் காட்டப் படாத தன்மை மற்றும் யதார்த்தத்தை ஒட்டிய கதைக் கருக்கள்.

தொழில் நுட்ப முன்னேற்றம் என்று சில திணிப்புகள் பிரச்சனையாக இருந்தன.

இதற்கான விவாத தளம் இதுவல்ல.

என் கண்ணில் பட்டதை உங்களோடு தேவை கருதி பகிர்ந்து கொண்டேன் என்றே நினைக்கிறேன்.

அதில் வந்த ஒரு சில தமிழ் குறும்படங்கள் பிரஞ்சு மொழி பேச தமிழ் உப தலைப்புகளுடன் உருவாக்கப்பட்டிருந்தன.

என்னைப் பொறுத்த வரை இதைத்தான் புலம் பெயர் இளைய தலை முறையினர் செய்வார்கள் என்று சொல்வேன்.

இதை மாற்றுவது புலத்தில் முடியாத காரியம்.

இதற்கான முக்கிய பொறுப்பு தமிழ் ஊடகங்களையே சாரும்.

இவர்கள் விரும்பும் படைப்புகளே இடம் பெறுகின்றன.

இங்கு உள்ள செலவுகளுக்கு ஈடு செய்யக் கூடிய நிலையில் இந்த ஊடகங்கள் இல்லை என்பதும் உண்மை.

ஆனால் இங்கு வாழும் கலைஞர்களுக்கு அல்லது படைப்பாளிகளுக்காக இவர்கள் செய்ய வேண்டியது என்ன?????????????????????

இதைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது

மாயா போன்றோர் சாதித்து தடம் பதித்து பேசப்படுகிறார்கள்.

இதற்கு பின்னால் இவர்கள் பட்ட வேதனைகள் அவமானங்கள் யாருக்கும் தெரியாது என்றே கருதுகிறேன்.

என்னால் ஒரு படி மேலே சென்று யோசிக்க முடிகிறதே தவிர எனக்கும் தெரியாது.

இங்கு ஐரோப்பிய இளம் தலை முறையினரே கறுப்பு இனத்தவரை நடை, உடை மற்றும் பாவனைகளில் பின் பற்றுவதை பரவலாக பார்க்க முடிகிறது.

அதற்கான காரணம் அவர்களது கலை மற்றும் விளையாட்டு துறை போன்றவற்றில் உள்ள திறமைகள்....................மற்றும்...............

............

இது தவிர கறுப்பினத்தவர் தமது தாழ்வு மனப்பான்மை மறந்து எவரோடும் கலந்து கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

நமக்கு யாராவது வழிகாட்டியாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறோம்.

இங்கு வாழும் இளைய தலை முறையினர் தனக்கு தானே வழி காட்டியாக வாழ கல்லூரிகளில் பயிற்றுவிக்கப் படுகிறார்கள்.

நாங்கள் விவாதித்திக் கொண்டு அதே இடத்தில் அல்லது தளத்தில் நிற்கிறோம்.

இங்கு உள்ள இளைய தலை முறை விவாதிப்பதை விடுத்து

அவர்கள் விரும்பியதை அவர்களாகவே செய்யத் தலைப்படுகிறார்கள்.

அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லைதான்.

நம்மை நாம் மறு பரிசீலனை செய்து கொள்ள வேண்டும் என்றே சொல்லத் தொன்றுகிறது.

காய்க்கும் மரங்களுக்குத்தான் கல்லடிகள் விழும்.

அதைப் பழக்கப்படுத்திக் கொள்வது அந்த மரங்களுக்கு நல்லது.

அப்படியானால் மட்டுமே அந்த மரங்களால் தொடர்ந்து கனிகள் தர முடியும்.

மாயாவுக்கு என் வாழ்த்துக்கள்.

அஜீவன் அண்ணா சொல்லும் கருத்து உடன்பாடானது.

ஒரு மைக்கல் ஜாக்சன் போல் எல்லோரும் இருக்க வேண்டும் என்பதல்ல.

அத்துடன் அவரால் ஈழத்தமிழ் பெண் என்று வெளிப்படையாக சொல்ல முடிகிறது.

விது இணைத்துள்ள பாடலை பார்த்தால் பின்னணியில் தமிழ் எழுத்துக்கள் குண்டு வீச்சுக்கள் வீர மரணமான மாலதியின் அவர்களது படம் போன்றவை வருகிறன. அவையும் எம்மை உலகத்திடம் பிரபலப்படுத்த ஒரு வழியே. அதை பாவிப்பதால் எம்மவர்கள் அவரது இசையை கேட்க போவது இல்லை அல்லது அவரது இசை பால் கவரப்படுவார்கள் என்பதுமில்லை. அவரது பாடலை கேட்கும் பார்க்கும் பல நாட்டவருக்கும் ஒரு காட்சிப்படுத்தவாக அவை இருக்குமே தவிர நம்மவருக்கல்ல. நாம் நமது அடையாளத்தை பேணுவதோடு உலகையும் நம்பக்கம் கவரவும் வேண்டும் அதில் அவரது பயணம் வெற்றி பெற வேண்டும் அவரது சாதனைகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

pop4mh.jpg

இதோ மேற்கத்தேய பொப் அல்பம் ஒன்றின் சாதாரண முன் பக்கம் வடிவமைப்பு...!

புலத்து இளைஞர்கள் புதிய உலகம் படைக்கவில்லை..உங்கள் பார்வைக்கு அது புதிதாகத் தெரிகிறதே தவிர புலத்துக்கு அது சாதாரணம்...அதையே பிரதிபலிக்கிறார்கள்...!

மாயாவும் அந்த வகைதான்... ஒரு மேற்கத்தைய கலாசாரப் பின்னணிக்குள் இருந்து அதன் வழி எழும் தனது சிந்தனைக்குள்ளாக தனக்குப் பிடித்தமான கலை வடிவத்தைப் பிரதிபலிக்கிறார்...அதற்குள் தனது குடும்ப பாதிப்பின் மூலம் திணிக்கப்பட்ட ஈழத்து போரியலைப் புகுத்தி...பொப்புக்குள்ள அதே பழைய சித்தாந்தத்தைத் (பொப் கலைஞர்கள் போரியலை விளம்பரமாக்குவதில் எப்போதும் நாட்டமுள்ளவர்கள் காரணம்...போரியல் என்பது எங்கும் இளைய தலைமுறையைக் கவரும் ஒரு அம்சம்...!) தழுவி வழுக்கிச் செல்கிறார்...! அது பிழைக்கத் தெரிந்த அவரின் திறமை... இப்ப பிரச்சனை அவரும் அல்ல... அவரைப் போன்றவர்களும் அல்ல...அவர்களுக்கு ஈழத்தமிழர் முத்திரை குத்த முனைவோரே...???!

இப்போ அவரை... ஈழத்தில் போரியல் பாதிப்பால் எழுந்த அல்லது அங்குள்ள மக்களின் உண்மையான எதிர்பார்ப்புக்களை உலகுக்குச் சொல்லவெனவே அவதரித்த ஈழத்தமிழ்... பொப் ஸ்ரார் என்றால் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது...! அதைக் காலம் உங்களுக்கும் உணர்த்தும் அதுவரை பொறுத்திருந்து நடப்பதைப் பார்ப்போமே...!

அவர்கள் ஈழத்தழிழர் பிரச்சினையை உலகுக்கு சொல்ல தேவையில்லை. ஈழத்தமிழன் என்று எதோ ஒருவகையில் பிரபலமாவதன்மூலம் ஈழத்தழிழரின்பால் உலக மக்களின் பார்வையை தக்க வைக்க முடியும்.. 84ல் ஜேர்மனிக்கு வந்தபோது.. சைலோனா.. சிலோனா.. இந்தியாதானே..காந்தியைத்தான் தெரியும் என்றவர்கள் இன்று ஈழத்தமிழர்களைப்பற்றி பலதை அறிந்துள்ளார்கள்.. ஆகவே.. ஈழத்தமிழர்கள் ஒவ்வொரு துறையிலும் பிரபலமாகும்போது.. அவர்களின் மொழி சூழல் போன்ற பலவிடயங்கள் பிரபலமாகின்றன.

அந்த வகையில் மாயாவின் முயற்சிகளையும் அவரது வெற்றிகளையும் பாராட்டத்தான் வேண்டும்.

அவர்கள் ஈழத்தழிழர் பிரச்சினையை உலகுக்கு சொல்ல தேவையில்லை. ஈழத்தமிழன் என்று எதோ ஒருவகையில் பிரபலமாவதன்மூலம் ஈழத்தழிழரின்பால் உலக மக்களின் பார்வையை தக்க வைக்க முடியும்.. 84ல் ஜேர்மனிக்கு வந்தபோது.. சைலோனா.. சிலோனா.. இந்தியாதானே..காந்தியைத்தான் தெரியும் என்றவர்கள் இன்று ஈழத்தமிழர்களைப்பற்றி பலதை அறிந்துள்ளார்கள்.. ஆகவே.. ஈழத்தமிழர்கள் ஒவ்வொரு துறையிலும் பிரபலமாகும்போது.. அவர்களின் மொழி சூழல் போன்ற பலவிடயங்கள் பிரபலமாகின்றன.

அந்த வகையில் மாயாவின் முயற்சிகளையும் அவரது வெற்றிகளையும் பாராட்டத்தான் வேண்டும்.

அந்த வகையில் ஈழத்தமிழன் கதிர்காமரையும் பாராட்டலாமே... மாயாவை விட ஐநா வரை துரிதமாக ஈழத்தமிழரை உலகுணர வைத்த பெருமைக்குரியவர்...! புலம்பெயர்வு என்பது சமூக விளைவு...அது உலக அரங்கில் தந்த தாக்கத்தின் வடிவம் வேறு...அதற்கான பின்னணிகளை உலகம் தனித்துப் பாக்கிறது கூர்ந்து கவனிக்கிறது...அதுவும் புலம்பெயர்ந்தவர்கள் காட்டும் தனித்துவமான அடையாளங்களே உலகை விழிக்கப்பண்ணுகிறது...மேற்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.