Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னிலங்கையை உலுக்கும் தாக்குதல்கள்

Featured Replies

தென்னிலங்கையை உலுக்கும் தாக்குதல்கள்

-அருஸ் (வேல்ஸ்)-

இலங்கையின் அமைதி முயற்சிகளை நியாயப்படுத்தவென மேற்குலகின் கைகளில் இருந்த துரும்புச்சீட்டு கடந்த புதன்கிழமையுடன் நழுவி வீழ்ந்துவிட்டது. படை நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தும் திராணியற்ற போர் நிறுத்த ஒப்பந்தமும், தங்களுக்குள்ளேயே பெரும் குத்து வெட்டுக்களை நடத்தி வரும் அனைத்துக்கட்சிக்குழுவும் இனப்பிரச்சினைக்கு ஒரு முடிவைக் கொண்டுவரும் எனக்கூறி மேற்குலகம் போட்ட நாடகத்தை தவிர்க்க முடியாத காரணத்தால் அரசே சிதறடித்துள்ளது.

போர்நிறுத்தத்தில் இருந்து விடுதலைப் புலிகள் தன்னிச்சையாக வெளியேறி விடுவார்கள் என கடந்த இரு வருடங்களாக அரசினாலும், அரசிற்கு ஆதரவு வழங்கிவரும் சர்வதேச நாடுகளினாலும் கருதப்பட்டது. அதற்காகவே பல வலிந்த தாக்குதல்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது முன்னெடுக்கப்பட்டதுடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கொல்லப்பட்டனர்.

விமானத் தாக்குதல்களும் செறிவாக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளை சீண்டும் நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டன. ஆனாலும் விடுதலைப் புலிகள் தமது நிதானத்தைக் கைவிடவில்லை. இறுதியில் அரசே தன்னிச்சையாக போர்நிறுத்தத்தில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது பலருக்கும் ஆச்சரியமானதாக இருக்கலாம். ஆனால் விடுதலைப் புலிகளை சினமூட்டும் உத்தியைக் கையாண்டவர்கள் ஒன்றை எண்ணிப்பார்க்கத் தவறிவிட்டனர். அதாவது விடுதலைப் புலிகள் ஒரு போராட்ட அமைப்பு, அவர்களுக்கு அரசியல் அழுத்தங்களோ, பதவிப் போட்டிகளோ கிடையாது.

ஆனால் தென்னிலங்கையின் நிலைமை வேறுபட்டது, அரசிற்கு தனது பெரும்பான்மையை தக்கவைப்பதே தற்போது பிரதான தொழிலாக மாறிவிட்டது. மோதலில் ஈடுபடும் இருதரப்பினரினதும் சமவலு நிலையானது, படைச்சமவலு, அரசியல்சமவலு, பொருளாதார சமவலு என பல காரணிகளின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்படுவதுண்டு. பொருளாதாரச் சீரழிவினால் சோவியத் ஒன்றியம் வீழ்ந்ததையும், அரசியல் சீரழிவின் மூலம் பாகிஸ்தானை அண்டைய நாடுகள் வீழ்த்த முனைவதையும் இதற்கான சிறிய உதாரணமாகக் கொள்ளலாம்.

படைவலுச் சமநிலையை பொறுத்தவரையில் தற்போது நடைபெறும் பிரசாரப் போரைக் கொண்டு அறுதியாக தீர்மானித்து விட முடியாது. எனவே 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டில் ஏற்பட்ட படைச் சமவலுவில் எத்தைகைய மாற்றங்கள் எற்பட்டுள்ளன என்பதை கணிப்பதற்கு கால அவகாசம் தேவை. ஆனால் அரசியல் சமவலுவை பொறுத்தவரையில் யார் மேலோங்கி உள்ளார்கள் என்பதை இங்கு கூறத்தேவையில்லை. போர்நிறுத்த உடன்பாட்டின் அவலச்சாவு அதனை இலகுவாக உணர்த்தப் போதுமானது.

நோர்வேயின் அனுசரணையில் ஏற்பட்ட போர்நிறுத்தம் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திய நன்மைகளை விட தென்னிலங்கையில் ஏற்படுத்திய நன்மைகள் தான் அதிகம். போரின் போது சராசரியான 5 வீத பொருளாதார வளர்ச்சியை எட்ட அரும்பாடுபட்டு வந்த நாடு 8 வீத வளர்ச்சியை நோக்கி முன் நகர்வதற்கு போர்நிறுத்தம் வழி ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. அக்காலப்பகுதியில் வெளிநாட்டு முதலீடுகளும், உல்லாசப்பயணத்துறையும் வேகமாக வளர்ச்சி கண்டிருந்தன.

போர்நிறுத்தத்திற்கு அனுசரணை வழங்குகின்றோம் என உருவான இணைத்தலைமை நாடுகள் இலங்கை அரசிற்கு நிதிகளை அள்ளி வழங்கியதுடன், தென்னிலங்கையின் அபிவிருத்திக்கும் பெருமளவான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கியிருந்தன.

ஆழிப்பேரலை அனர்த்த முகாமைத்துவக் கட்டமைப்பில் இருந்து தமிழ் மக்கள் ஓரங்கட்டப்பட்ட போதும், இலங்கையின் ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணத்திற்கு வழங்கிவந்த நிதிகளில் சர்வதேச சமூகம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த வில்லை என்பது அதற்கான சிறிய உதாரணம்.

போர் தவிர்க்கப்பட்டதனால் பெருமளவான சிங்கள இளைஞர்களின் உயிர்களையும், சிங்களம் மற்றும் தமிழ் மக்களின் உயிர்களையும் கூட தாம் காப்பாற்றி இருந்ததாக கண்காணிப்புக் குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதாவது தென்னிலங்கை அனுபவித்து வந்த நன்மைகள் அதிகம்.

ஆனால் மறுவளமாக அதனைப் பார்த்தால் போர்நிறுத்தம் என்ற பதத்தின் மூலம் தமிழ் மக்களின் உரிமைக்கான குரலை மழுங்கடிக்கும் முயற்சிகள் தான் முடுக்கிவிடப்பட்டிருந்தன. அதற்கு கடந்த 6 வருடங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் சான்று பகரும். எனினும் அதனை எதிர்கொண்ட விடுதலைப் புலிகளின் இராஜதந்திர நிகழ்வின் அதிர்ச்சியலைகள் தற்போதும் உலகில் ஓய்ந்த பாடில்லை.

போர்நிறுத்தத்தில் இருந்து அரசு வெளியேறியது இலங்கையில் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என பெருமளவான நாடுகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் கூறிவந்த வேளையில், தென்னிலங்கையை மற்றுமொரு தாக்குதல் உலுக்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள யால வனவிலங்கு சரணாலயத்தில் நடைபெற்ற தொடர் தாக்குதல்களினால் மூடப்பட்டிருந்த யால சரணாலயம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்திருந்த நிலையில் யாலவிற்கு வடக்குப் புறமாக மொனராகல மாவட்டத்தில் நடைபெற்ற மூன்று தொடர்த் தாக்குதல்கள் தென்னிலங்கையை உலுக்கியுள்ளன.

மொனராகல மாவட்டத்தின் புத்தல பகுதியின் ஹெலகமவில் உள்ள இரண்டாவது மைல்கல்லிற்கு அண்மையில் நடைபெற்ற கிளைமோர்த் தாக்குதலில் பேரூந்து ஒன்று சிக்கியதனால் 27 பேர் கொல்லப்பட்டதுடன், 67 பேர் காயமடைந்தனர். வீதியோரத்தில் உள்ள உயர்ந்த நிலப்பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலை தொடர்ந்து, துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் பின்னர் புத்தல கதிர்காமம் வீதியில் சென்று கொண்டிருந்த யுனிக்கோன் (தென் ஆபிரிக்கா பவள் கவச வாகனத்தின் பிரதி வடிவம்) கவச வாகனம் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் மூன்று இராணுவத்தினர் காயமடைந்திருந்தனர். அவர்களில் இருவர் மிகவும் கடும் காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் மொனராகல மாவட்டத்தின் தம்பேயாய கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொமோண்டோ பாணியில் நடைபெற்றுச் செல்லும் இந்த தொடர்த் தாக்குதல்கள் தென்னிலங்கையை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்களைத் தேடுவதற்குச் சென்ற கொமாண்டோ படையினரும் கடந்த வியாழக்கிழமை அடர்ந்த காட்டுப்பகுதியில் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர். இதில் ஒரு கொமாண்டோ படைச் சிப்பாய் காயமடைந்ததாகவும், தாக்குதலாளிகள் தப்பிவிட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தென்னிலங்கையில் நடைபெறும் இந்தத் தாக்குதல்கள் அரசியல் வட்டாரங்களில் பல குழப்பங்களை தோற்றுவிப்பதுடன், பொருளாதாரம், பாதுகாப்பு என பல்வேறு துறைகளில் தொடர்த் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது.

கடந்த வருடம் யால வனவிலங்கு சரணாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து ஏறத்தாழ 3 ஆயிரம் படையினர் அங்கு குவிக்கப்பட்டு தனியான கட்டளைப் பீடமும் அமைக்கப்பட்ட நிலையில், அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் அந்த மாவட்டத்திற்கும் ஒரு தனியான கட்டளைப் பீடத்தை அமைப்பதற்கும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினரின் பாதுகாப்புக்கும் வழியை ஏற்படுத்தியிருந்தது.

அதன் பின்னர் கடந்த ஆண்டின் இறுதியில் கொழும்பில் நடைபெற்ற இரு குண்டு வெடிப்புக்கள் 18 ஆயிரம் படையினரை கொழும்பை நோக்கி நகர்த்த வைத்திருந்தது. பின்னர் இந்த வருடத்தின் முதல் வாரத்தில் யாஎல பகுதியில் நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் அமைச்சர் டி.எம். தசநாயக்கா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து எல்லைப்புற சிங்களக் கிராமங்களில் இருந்த ஊர்காவற்படை பற்றாலியன்கள் நீர்கொழும்பு கொழும்பு வீதியை பாதுகாக்க அனுப்பப்பட்டன.

தற்போது மொனராகல மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு பெருமளவு படையினர் அனுப்பப்பட்டுள்ளதுடன், ஆயிரம் பேரை ஊர்காவற் படையில் சேர்ப்பதற்கான திட்டத்தையும் நடைமுறைப்படுத்த அரசு எண்ணியுள்ளது. இதன் முதற்கட்டமாக 500 துப்பாக்கிகளை அங்கு அனுப்பவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவை தவிர கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 300 இற்கும் மேற்பட்ட பதுங்கு குழிகளும், ஆயிரக்கணக்கான ஊர்காவற் படையினரும், கிழக்கில் குவிக்கப்பட்டுள்ள துணை இராணுவக் குழுவினர் என இலங்கை முழுவதும் போருக்குள் அமிழ்ந்து வருகின்றது.

இலங்கையின் இந்த நிலைமை நாட்டில் பெரும் அச்சநிலையையும், பெரும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றது. இந்த வருடத்தின் முதல் வாரத்தில் நடைபெற்ற தாக்குதல்களின் எதிரொலியாக பங்குச்சந்தை 35 பில்லியன் ரூபாவை இழந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஊர்காவற் படையினருக்கு என நாடு முழுவதும் வழங்கப்படும் பெருமளவான ஆயுதங்கள் அரசிற்கு எதிரான சிங்கள மக்களின் கிளர்ச்சிக்கு துணை போகலாம் என்ற கருத்தும் தென்னிலங்கை மக்களின் ஒரு சாராரிடம் வலுப்பெற்று வருகின்றது. ஜே.வி.பியின் ஒரு பிரிவினர் கூட அதனை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அரசின் மீதான பிடியை அது மெல்ல மெல்ல இறுக்கி வருவதனையும் தற்போது சிலர் அச்சத்துடன் தான் அவதானித்து வருகின்றனர்.

மன்னார் களமுனைகளில் கடந்த 11 மாதங்களாக மூன்று படையணியைச் சேர்ந்த ஏறத்தாழ 18 ஆயிரம் படையினர் கடுமையான எதிர்த்தாக்குதல்களை எதிர்கொண்டு வருகையில் நாடு முழுவதற்கும் போர் வியாபித்து வருகின்றது என்பதையே கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதல்கள் மூலம் இலகுவாக உணர முடியும்.

கடந்த திங்கட்கிழமை அதிகாலை மன்னாருக்கு வடகிழக்காக பரப்பங்கண்டல் பகுதியின் ஊடாக 58 ஆவது படையணியைச் சேர்ந்த 10 ஆவது கஜபா றெஜிமென்ட், 8 ஆவது சிங்க றெஜிமெனட், 6, 8, 9 ஆவது கெமுனுவோச் மற்றும் கொமோண்டோப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சியை தாம் முறியடித்து விட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் 30 இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதாகவும், 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், பல ஆயுத தளபாடங்கள் தம்மால் கைப்பற்றப்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்திருந்தனர்.

வயல் வெளிகள் பற்றைக் காடுகள் ஊடாக முன்நகர முனைந்த படையினர் விடுதலைப்புலிகளின் மோட்டார், மற்றும் எறிகணைத் தாக்குதல்களுக்குள் அதிகம் சிக்கி கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த மற்றும் இறந்த படையினரை வான்படையின் எம்ஐ-17 துருப்புக்காவி உலங்குவானூர்தி பல தடவைகள் ஏற்றிச் சென்றதாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் படைத்தரப்பு தமது தரப்பில் 7 பேர் கொல்லப்பட்டதாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் மூன்று வாரங்களும் பரபரப்பாக கழிந்த நிலையில் எதிர்வரும் வாரங்களும் கடுமையானதாகவே இருக்கப் போகின்றன என்பதைத்தான் களநிலைவரம் எடுத்துக் கூறி நிற்கின்றது.

போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் வெளியேற்றம் கள நிலைமைகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஏனெனில் அது கடந்த இரு வருடங்களாக காகிதத்தில் மட்டுமே உயிர்வாழ்ந்தது. எந்தப் படை நடவடிக்கையையும் தடுத்து நிறுத்தும் வல்லமை அதற்கு கிடையாது. ஆனால் அதன் முறிவு ஏற்படுத்தி வரும் இராஜதந்திர மாற்றங்கள் அதிகமானவை.

http://www.tamilnaatham.com/articles/2008/jan/arush/20.htm

"தென்னிலங்கையை உலுக்கும் தாக்குதல்கள்" குலுங்க குலுங்க சிரிக்க வேண்டியான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"உலுக்குகின்றது" கொஞ்சம் மிகைப் படுத்தல் தான். ஆனால் மகிந்தவுக்கு இவை நிச்சயமாக தலையிடியை கொடுக்கும் தாக்குதல்கள்.

  • தொடங்கியவர்

படையினரின் இழப்புக்கள் சரியான முறையில் தென்னிலங்கை மக்களுக்கு அறிவிக்கப்படுமானால், அங்கு உலுக்கல் நடைபெறும். கொழும்பில் நடந்த குண்டு வெடிப்புகள், அமைச்சரின் கொலை அனைத்தும் அந்த நாளே கொழும்பிற்குத் தொடர்பு கொண்டபோது அவர்கள் அந்த நிகழ்ச்சியை அறியாது அப்படியா? என்று கேட்கின்றார்கள். நாட்கள் கடந்துதான் படையினரின் இழப்புக்கள் அறிவிக்கப்படுகின்றது. இனிவருங்காலங்களில் மோதல்கள் அதிகரித்தால் இழப்புக்கள் இவ்வாறு மறைக்கப்பட முடியாது போகும். ஆகவே உலுக்கல் நிறையவே இருக்கும்.

அப்ப சிங்கள தொலைக்காட்சிகளில் breaking news என்று அமைச்சர் மீதான தாக்குதல் பஸ்தாக்குதல் காட்சிகள் எல்லாம் உடனை உடனை காட்டிறாங்கள் அதை யுடியூப்பிலையும் வேறை ஏத்திறாங்களே?

ஆனால் கவனிக்கவும் ரவிராஜ் மகேஸ்வரன் போன்றோரின் கொலை செய்யப்பட்ட இடத்துக் காட்சிகள் அவை பற்றிய செய்திகள் இந்தளவு வேகத்தில் யுரியூப்பில் ஏற்றப்படவில்லை.

ஏன் என்று சிந்தியுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரொம்ப ரொம்ப சூப்பரா தான் இருக்கு கட்டுரை.

எல்லா நாடுகளும் எம்மை சுற்றிவர இருந்து பயங்கரவாதிகள் என்று அடிக்கும் போது தான் தெரியும் இப்படியான கட்டுரைகளைப் பற்றி :lol:

********

Edited by மோகன்
**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப சிங்கள தொலைக்காட்சிகளில் breaking news என்று அமைச்சர் மீதான தாக்குதல் பஸ்தாக்குதல் காட்சிகள் எல்லாம் உடனை உடனை காட்டிறாங்கள் அதை யுடியூப்பிலையும் வேறை ஏத்திறாங்களே?

ஆனால் கவனிக்கவும் ரவிராஜ் மகேஸ்வரன் போன்றோரின் கொலை செய்யப்பட்ட இடத்துக் காட்சிகள் அவை பற்றிய செய்திகள் இந்தளவு வேகத்தில் யுரியூப்பில் ஏற்றப்படவில்லை.

ஏன் என்று சிந்தியுங்கள்.

இவங்க எல்லோரும் பார்பது தமிழ் இணையத் தளங்களை மட்டும் தான் போல இருக்கு.

சிங்களத்துக்கு பாதகமான ஒரு செயல் நடந்தால் 5-10 நிமிடங்களுக்குள் உலகம் முழுவதும் SMS வருகின்றது.

இவங்க எல்லோரும் பார்பது தமிழ் இணையத் தளங்களை மட்டும் தான் போல இருக்கு.

சிங்களத்துக்கு பாதகமான ஒரு செயல் நடந்தால் 5-10 நிமிடங்களுக்குள் உலகம் முழுவதும் SMS வருகின்றது

.

பேருந்து மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதல் மேற்குலகின் உள்ளுர் தொலைக்காட்சிகளில் கூட விபரமாக காட்டப்பட்டது.

உலுக்குகின்றது" கொஞ்சம் மிகைப் படுத்தல் தான். ஆனால் மகிந்தவுக்கு இவை நிச்சயமாக தலையிடியை கொடுக்கும் தாக்குதல்கள்.

தலையிடியை கொடுக்கலாம் ஆனால் மகிந்தரின் தலையிடிக்கு மருந்து கொடுக்க ஆள் உண்டு. எம்மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலால் எம்மவர் சோர்ந்து போகும் போது தண்ணி கொடுக்க கூட யாரும் வருவதில்லை. எரியும் நெருப்பில் எண்ணை ஊற்ற நிறையப்பேர் இருக்கினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரொம்ப ரொம்ப சூப்பரா தான் இருக்கு கட்டுரை.

எல்லா நாடுகளும் எம்மை சுற்றிவர இருந்து பயங்கரவாதிகள் என்று அடிக்கும் போது தான் தெரியும் இப்படியான கட்டுரைகளைப் பற்றி

tamilliunx, உலகத்திற்கு நல்ல பிள்ளை என்று பெயரெடுக்க வேண்டுமானால் ஆயுதத்தை கைவிட்டு சரணடைவதுதான் ஒரே வழி.

தலிபானை அழிப்பதற்காக புறப்பட்டவை இன்று தலிபானோடு பேச்சு நடத்தலாம் ( UK prime minster Gordon Brown) என்ற நிலைக்கு வந்திருப்பது எதனால்?

அவ்வாறு தேவைக்கேற்றபடி இவர்களின் கொள்கைகள் மாறும். இப்போது எமக்கிருக்கும் உடனடி பிரச்சினை போர் முழக்கம் செய்யும் சிங்களத்தின் ஆக்கிரமிப்பை முறியடிப்பதுதான். கடைசியாக வந்த காலக்கணிப்பை (16-01-2008) கேட்டுப் பாருங்கள். எல்லாம் புரியும்.

Edited by காட்டாறு

  • தொடங்கியவர்

ரொம்ப ரொம்ப சூப்பரா தான் இருக்கு கட்டுரை.

எல்லா நாடுகளும் எம்மை சுற்றிவர இருந்து பயங்கரவாதிகள் என்று அடிக்கும் போது தான் தெரியும் இப்படியான கட்டுரைகளைப் பற்றி :lol:

********

ஏற்கெனவே ஒன்று நடந்ததுங்கோ, இன்னமும் ஒன்று நடக்குமோ? சிங்களவர பாதுகாப்பா வாழவைக்கிறதில சர்வதேசத்தார் அக்கறையாய் இருக்கிறாங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

:lol: நான் சில சிங்கள இணையத்தளங்களுக்குச் சென்று பார்த்திருக்கிறேன். ஆனால் எமது களங்களுக்கும் அவர்களின் களங்களுக்கும் உள்ள பாரிய வித்தியாசம் என்னவென்றால், அவர்கள் தமிழர் மேல் நடக்கும் தாக்குதல்களை பிழை என்றோ, எம்மைப்போல் சர்வதேசத்திற்குப் பயந்தோ எழுதுவதில்லை. தாக்குதல்களில் கொல்லப்படுவது புலிகளாக இருந்தாலும் சரி, அப்பாவித் தமிழராக இருந்தாலும் சரி "தமிழர் செத்தால் போதும் " என்ற மனப்பாங்குடந்தான் எழுதுகிறார்கள். அவர்கள் அப்பட்டமான மனிதப் படுகொலைகளைக் கூட தாம் செய்ததாக உரிமை கோருவதோடு அவை நடக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் அலசுகிறார்கள். அவர்கள் எப்போதுமே தமக்குள் இக்கருத்துப் பற்றி வேறுபட்டது கிடையாது.

ஆனால் இங்கோ, அடிவாங்கும் நாம் எம்மைத் தற்காத்துக்கொள்ள எழுதும் நியாயங்களில் கூட ஒற்றுமையில்லை.

  • தொடங்கியவர்

:lol: நான் சில சிங்கள இணையத்தளங்களுக்குச் சென்று பார்த்திருக்கிறேன். ஆனால் எமது களங்களுக்கும் அவர்களின் களங்களுக்கும் உள்ள பாரிய வித்தியாசம் என்னவென்றால், அவர்கள் தமிழர் மேல் நடக்கும் தாக்குதல்களை பிழை என்றோ, எம்மைப்போல் சர்வதேசத்திற்குப் பயந்தோ எழுதுவதில்லை. தாக்குதல்களில் கொல்லப்படுவது புலிகளாக இருந்தாலும் சரி, அப்பாவித் தமிழராக இருந்தாலும் சரி "தமிழர் செத்தால் போதும் " என்ற மனப்பாங்குடந்தான் எழுதுகிறார்கள். அவர்கள் அப்பட்டமான மனிதப் படுகொலைகளைக் கூட தாம் செய்ததாக உரிமை கோருவதோடு அவை நடக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் அலசுகிறார்கள். அவர்கள் எப்போதுமே தமக்குள் இக்கருத்துப் பற்றி வேறுபட்டது கிடையாது.

ஆனால் இங்கோ, அடிவாங்கும் நாம் எம்மைத் தற்காத்துக்கொள்ள எழுதும் நியாயங்களில் கூட ஒற்றுமையில்லை.

ரகுநாதன் இதை ஒற்றுமையீனம் என நல்ல பெயரால் அழைக்க வேண்டாம். இதற்குப் பெயர்தான் "வக்காலத்து"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol: நான் சில சிங்கள இணையத்தளங்களுக்குச் சென்று பார்த்திருக்கிறேன். ஆனால் எமது களங்களுக்கும் அவர்களின் களங்களுக்கும் உள்ள பாரிய வித்தியாசம் என்னவென்றால், அவர்கள் தமிழர் மேல் நடக்கும் தாக்குதல்களை பிழை என்றோ, எம்மைப்போல் சர்வதேசத்திற்குப் பயந்தோ எழுதுவதில்லை. தாக்குதல்களில் கொல்லப்படுவது புலிகளாக இருந்தாலும் சரி, அப்பாவித் தமிழராக இருந்தாலும் சரி "தமிழர் செத்தால் போதும் " என்ற மனப்பாங்குடந்தான் எழுதுகிறார்கள். அவர்கள் அப்பட்டமான மனிதப் படுகொலைகளைக் கூட தாம் செய்ததாக உரிமை கோருவதோடு அவை நடக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் அலசுகிறார்கள். அவர்கள் எப்போதுமே தமக்குள் இக்கருத்துப் பற்றி வேறுபட்டது கிடையாது.

ஆனால் இங்கோ, அடிவாங்கும் நாம் எம்மைத் தற்காத்துக்கொள்ள எழுதும் நியாயங்களில் கூட ஒற்றுமையில்லை.

நல்ல கேள்வி. ஈழத் தமிழருக்கும் சிங்களவருக்கும் இருக்கும் வேறுபாடு,,,

சிங்களவருக்கு என்று ஒரு அங்கிகரிக்கப்பட்ட அரசு நாடு இருக்கின்றது.

ஈழத் தமிழருக்கு அப்படி ஒன்று இருக்கின்றதா?

இல்லை எந்த ஒரு நாடும் ஈழத் தமிழர் செய்வது அத்தனையும் சரி என்று பகிரங்கமா சொல்லுமா அல்லது ஏற்றுக் கொள்ளுமா??

சிறிலங்காவுக்கெதிராக கொண்டுவரப்படும் அத்தனை நடவடிக்கைகளும் எப்படி தடுக்கப்படுகின்றன?

இந்தியா ஒரு நாள் அங்கீகரிக்கும் என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டியது தான். அந்தளவுக்கு இந்தியா முட்டாளா இல்லை ஈழத் தமிழராகிய நாம் முட்டாள்களா?

எந்த ஒரு நாடும்(இந்தியா) வருங்காலத்தில் தான் பிரிபடலாம் என்பதை அங்கிகரிக்குமா?

Edited by tamillinux

எந்த ஒரு நாடும்(இந்தியா) வருங்காலத்தில் தான் பிரிபடலாம் என்பதை அங்கிகரிக்குமா?

அண்ணா இப்ப விளங்குது நீங்கள் எங்கை இருந்து வாறீங்கள் எண்டு.

தமிழீழம் எண்டது இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு, தமிழகம், மலேசிய சிங்கப் பூர் பகுதிகளையடக்கியது எண்டு சில தனிநபர் இயக்கங்களை வைத்து அறிவிச்ச நாட்டிலை எல்லே இருக்கிறீங்கள். இப்போது எல்லாருமே மறந்த அந்த பழைய மாவை எடுத்து அரைக்கப் பார்க்கிறீர்கள். வாழ்க உங்கள் புகழிட நாட்டிற்காக நீங்கள் ஆற்றும் பணி.

சரி, தமிழீழ விடுதலையை அங்கரிப்பதானது இந்தியா தனது நாட்டின் பிரிவை அங்கிகரிப்பது போன்றது எண்டு எழுதுறீங்கள். நாங்கள் வெண்டா இந்தியா பிரியும். இந்தியா தனது பிரிவைத் தடுக்க தமிழர் போராட்டத்தை அழிக்க வேண்டுமென ஆசைப்படுறீங்கள் போல. வாழ்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் வெண்டா இந்தியா பிரியும்

இது கொஞ்சம் ஓவரா தெரியேல்ல :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன், வக்காலத்து என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் ? புரியவில்லையே ?

  • தொடங்கியவர்

"எதிரியைச் சார்ந்து பரிந்து பேசுவது" வக்காலத்து

மின்னல் இஞ்ச பாருங்கோ... ஆற்ரயோ கைக்கூலிகளா இருந்துகொண்டு இங்க வந்து எங்களுக்கு பயப்பிராந்தி காட்ரவங்களுக்கு பதிலெளுதி சரிவராது.

மரணம் தான் தமிழருக்கு இருக்கும் வழி என்ற பிறகு உந்த கைக்கூ லிகளையும் துடைநடுங்கிகளை தூக்கி எறியவேனும்...

துரோகிகளின் யாழ் களத்துக்கு வந்து கனநாளாச்சு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.