Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களை கைதுசெய்யவதற்கு சட்டநிபுணர்களுடன் ஆராய்ந்து நடவடிக்கை - கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களை கைதுசெய்யவதற்கு சட்டநிபுணர்களுடன் ஆராய்ந்து நடவடிக்கை - கருணாநிதி

1/30/2008 1:07:13 AM

வீரகேசரி இணையம் - விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களை கைதுசெய்ய வேண்டும் என்று கோரப்படுகின்றது. அவ்வாறு கைதுசெய்ய சட்டத்தில் இடம் உள்ளதா என்பதை சட்ட நிபுணர்களுடன் ஆராய்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி கூறினார். தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்பது குற்றமாகக் கருதி நடவடிக்கை எடுக்கும் வகையில் வழக்கறிஞர் குழுவொன்றை அமைத்து அவர்கள் மூலம் ஆராய்ந்து இதை தடுப்பதற்கு சட்டம் கொண்டுவர அரசு தயாராக இருக்கின்றது என்றும் அவர் சொன்னார்.

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் உறுப்பினரான பிற்றர் அல்போன்ஸ், விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் பற்றி கவனயீர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுர வேண்டும் என்று வற்புறுத்தினார். அதற்கு இணங்க மறுத்த சபாநாயகர், இதனை தகவல் கோரல் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து விவாதம் ஆரம்பமானது.

விவாதத்தில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் செங்கோட்டையன், இந்த பிரச்சினை குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று நேற்று அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி தரவில்லை. திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் தீவிரவாதிகளான விடுதலைப்புலிகளை ஆதரத்தும், எங்கள் கட்சி தலைவரை கடுமையாக விமர்சித்தும் பேசியுள்ளார்.

விடுதலைப்புலிகளை ஆதரிப்பதில் என்ன தவறு என்றும் கேட்டுள்ளார். கருத்துரிமை என்ற பெயரில் இறையாண்மைக்கு எதிராக தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் அவரது இயக்கத்தை தடை செய்ய மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்யவேண்டும். விடுதலைப்புலிகளை ஆதரித்ததாக கைது செய்யப்படுபவர்கள் உடனுக்குடன் நீதிமன்ற காவலில் இருந்து வெளியே வந்துவிடுகிறார்கள் என்றார்.

அதற்கு முதலமைச்சர் கருணாநிதி, சில கட்சிக்காரர்கள் விடுதலைப்புலிகளை ஆதரிப்பது சரியல்ல என்று சொல்வது நியாயம். அதற்காக அரசை வம்புக்கு இழுப்பது சரியல்ல. விடுதலை செய்யப்பட்ட விடுதலைப்புலி ஆதரவாளர்களை விடுதலை செய்யலாம் என்று அரசு வக்காலத்து வாங்கவில்லை. நீதிமன்றம் மூலமே அவர்கள் விடுதலையாகி இருக்கிறார்கள். இதில் நீதிமன்றத்தையும் அரசையும் சம்பந்தப்படுத்துவது நீதிமன்றத்தை அவமதித்ததாக ஆகிவிடும். நீதிமன்ற தீர்ப்பு பற்றி விமர்சிக்கக் கூடாது என்றார்.

இதன்போது காங்கிரஸ் உறுப்பினர் ஜெயக்குமார்,

விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் மட்டும் தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. பல்வேறு நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் செய்த புண்ணியத்தால் 1 லட்சம் தமிழர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அமிர்தலிங்கம், பொன்னம்பலம் உட்பட 50 பெரும் தலைவர்களும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று கூறினார்.

உடனே முதலமைச்சர் கருணாநிதி, வரலாற்றை தவறாக சொல்லக்கூடாது. பொன்னம்பலம் அந்த பட்டியலில் இல்லை என்றார்.

தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் ஜெயக்குமார், வெப்சைட்டை பார்த்துதான் இந்த தகவலை சொல்கிறேன். 60 தலைவர்கள் இல்லை என்றால் 59 தலைவர்களை கொன்றார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்.

ராஜீவ்காந்தியை கொலை செய்தவர்களை ஆதரிக்க அனுமதிக்க கூடாது. ராஜீவ்காந்தி இறந்து 17 ஆண்டுகள் அல்ல, 17 ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அதை மறக்க முடியாது என்றார்.

ஆதரிப்பவர்களை கைது செய்யத்தான் வேண்டும்...

மற்றவர்களை சுட்டுத்தள்ளுவோம்..(தன்னினத்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை ஆதரிப்போர் மீது நடவடிக்கை: சட்டம் கொண்டு வர தயார்-கருணாநிதி

சென்னை: விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்பதை குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்கும் வகையில் வழக்கறிஞர் குழு ஒன்றை அமைத்து, ஆராய்ந்து சட்டம் கொண்டு வர அரசு தயாராக இருப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசி வருவது குறித்து காங்கிரஸ் மற்றும் அதிமுக சார்பில் பிரச்சனை கிளப்பப்பட்டது.

காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் எழுந்து விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் பற்றிய கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என்றார். ஆனால் சபாநாயகர் அதை தகவல் கோரல் என்று எடுத்துக் கொள்ளவதாகக் கூறி விவாதத்துக்கு அனுமதி தந்தார்.

இதையடுத்து நடந்த விவாதம் வருமாறு:

செங்கோட்டையன் (அதிமுக): இந்த பிரச்சினை குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று நேற்று அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி தரவில்லை. திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் தீவிரவாதிகளான விடுதலைப் புலிகளை ஆதரித்தும், எங்கள் கட்சி தலைவரை கடுமையாக விமர்சித்தும் பேசியுள்ளார்.

விடுதலைப்புலிகளை ஆதரிப்பதில் என்ன தவறு என்றும் கேட்டுள்ளார். கருத்துரிமை என்ற பெயரில் இறையாண்மைக்கு எதிராக தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் அவரது இயக்கத்தை தடை செய்ய மத்திய அரசுக்கு மாநில அரசு உடனடியாக பரிந்துரை செய்ய வேண்டும். விடுதலைப் புலிகளை ஆதரித்ததாக கைது செய்யப்படுபவர்கள் உடனுக்குடன் நீதிமன்ற காவலில் இருந்து வெளியே வந்து விடுகிறார்கள்.

முதல்வர் கருணாநிதி: விடுதலைப் புலிகளை ஆதரிப்பது சரியல்ல என்று சில கட்சிக்காரர்கள் சொல்வது நியாயம் தான். ஆனால், அதற்காக அரசை வம்புக்கு இழுப்பது சரியல்ல. விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு அரசு வக்காலத்து வாங்கவில்லை. நீதிமன்றம் மூலமே அவர்கள் விடுதலை ஆகியிருக்கிறார்கள். இதில் நீதிமன்றத்தையும், அரசையும் சம்பந்தப்படுத்துவது நீதிமன்றத்தை அவமதித்ததாக ஆகிவிடும். நீதிமன்ற தீர்ப்பு பற்றி விமர்சிக்க கூடாது.

ஜெயக்குமார் (காங்கிரஸ்): விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் மட்டும் தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. பல்வேறு நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் புண்ணியத்தால் 1 லட்சம் தமிழர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அமிர்தலிங்கம், பொன்னம்பலம் உள்பட 60 பெரும் தலைவர்களும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

முதல்வர் கருணாநிதி: வரலாற்றை தவறாக சொல்லக் கூடாது. பொன்னம்பலம் அந்த பட்டியலில் இல்லை.

ஜெயக்குமார்: ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை ஆதரிக்க யாரையும் அனுமதிக்க கூடாது. ராஜீவ் காந்தி இறந்து 17 ஆண்டுகள் அல்ல. 17,000 ஆண்டுகள் ஆனாலும் அதை மறக்க முடியாது.

செல்வம் (விடுதலை சிறுத்தைகள் கட்சி): இந்திய இறையாண்மை மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். காங்கிரசையும் மதிக்கிறோம். ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டதை நாங்கள் ஏற்றுக் கொண்டது போல் பேசுவது தவறு. கருத்துரிமையைதான் பேசினோம்.

இவ்வாறு செல்வம் பேசியதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும் எழுந்து நின்று திருமாவளவனுக்கு எதிராக கோஷமிட்டனர்.

கருணாநிதி: காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் உணர்வை நான் அறியாமல் இல்லை. ஒரு வாரமாக சென்னையிலும் மற்ற இடங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகள் அரசு அனுமதியுடன் நடப்பது போல கருதிக் கொண்டு அரசு மீது தங்களுக்குள்ள வருத்தத்தை தெரிவித்திருக்கிறார்கள்.

திருமாவளவனையும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் மற்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்களையும் சட்ட ரீதியாகத்தான் சந்திக்க வேண்டியுள்ளது.

பொடா சட்டம் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்து பேசுவது குற்றமாகாது என்று கூறப்பட்டுள்ளது. அதற்காக முன்னாள் முதல்வரை (ஜெயலலிதா) விமர்சித்தோ, விடுதலைப் புலிகளை ஆதரித்தோ பேசலாம் என்று பொருள் அல்ல. இதை நான் அறியாதவனும் அல்ல, ஆதரிப்பவனும் அல்ல. காங்கிரசும் தோழமை கட்சிகளும் இந்த பிரச்சனையில் அரசுக்கு உள்ள தர்மசங்கடங்களையும் புரிந்து கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகளை பொறுத்தவரை ராஜீவ் காந்தி கொலைக்கு முன், அவரது கொலைக்கு பின் என்று தான் இந்த பிரச்சினையை அணுக வேண்டும் என்று கூறி இருக்கிறேன். எந்த நிலையிலும் அந்த கருத்தை மாற்றிக் கொள்ள போவதில்லை.

காங்கிரஸ் நண்பர்கள் ஒன்றை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். காங்கிரசாரோ, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சிகளோ இது போன்ற செய்திகள் வராமல் நடந்து கொள்வது உங்களுக்கும் நல்லது. எங்களுக்கும் நல்லது. அரசை காப்பாற்றுவதற்காக இதை சொல்வதாக கருதி விடக் கூடாது. தமிழகத்தின் அமைதிக்கு எந்த ஒரு ஊனமும் வந்து விடக்கூடாது என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

ராஜீவ்காந்தி அன்றும் இன்றும் மதிக்கப்பட கூடிய இளம் தலைவர், பெரிய தலைவர், அவர் சரித்திரமாகி விட்டார். அவருக்காக தொடர்ந்து கண்ணீர் வடிப்பதா என்று பேசுவது தவறு. நிலைமை வக்கிரமாக மாறி விடக்கூடாது.

விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று ஞானசேகரன் கூறினார். தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க தற்போது உள்ள சூழ்நிலையில் எந்த வழியும் இல்லை.

அவ்வாறு கைது செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறதா என்பதை சட்ட நிபுணர்களுடன் ஆராய்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்பது குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்கும் வகையில் வழக்கறிஞர் குழு ஒன்றை அமைத்து அவர்கள் மூலம் ஆராய்ந்து இதை தடுப்பதற்கு சட்டம் கொண்டு வரவும் அரசு தயாராக இருக்கிறது.

இத்துடன் இந்த பிரச்சினையை சுமூகமாக முடிப்பது நமக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது என்றார் கருணாநிதி.

ஆனாலும் கருணாநிதியின் பதில் திருப்தயளிக்கவில்லை என்று கூறி முதலில் அதிமுகவும் பின்னர் காங்கிரஸ் கட்சியினரும் வெளிநடப்பு செய்துவிட்டனர்.

வழக்கமாக எல்லாவற்றிலும் அதிமுகவை பாலோ செய்யும் மதிமுக இம்முறை அமைதி காத்தது குறுப்பிடத்தக்கது.

-தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் இப்போதும் இந்தியா என்று நடேசன்(தமிழீழ விடுதலை புலிகள்) போன்றவர்களே அறிக்கை விடும் போது காங்கிரஸ் மற்றும் அ தி மு க காரர்களை எப்படி குற்றம் சொல்வது??

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இப்போதும் இந்தியா என்று நடேசன்(தமிழீழ விடுதலை புலிகள்) போன்றவர்களே அறிக்கை விடும் போது காங்கிரஸ் மற்றும் அ தி மு க காரர்களை எப்படி குற்றம் சொல்வது??

தமிழ்லினக்ஸ்,

திரு. நடேசன் அறிக்கை விட்டாரென்றால் அது புலிகளின் கொள்கையாகத்தான் இருக்க வேண்டும். அண்டை நாடு என்ற வகையில் மிதவாதப்போக்கு நியாயமானதுதான். அதுவே தமிழகத்தில் மாற்றங்கள் கொண்டுவர ஓரளவுக்கேனும் வழிகோலும். இப்போது இந்தியாவை எதிர்ப்பதால் மட்டும் என்ன நன்மை வந்துவிடப்போகிறது? :mellow:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை பகைத்து நாங்கள் என்ன லாபத்தை அடையப்போகிறோம்.?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போ ஆதரித்து அறிக்கைகள் விடுவதால் என்ன சாதகமா நடந்தது?

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ ஆதரித்து அறிக்கைகள் விடுவதால் என்ன சாதகமா நடந்தது?

அதுதான் அரசியல்.. உள்ளதையும் கெடுத்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்வது. றோ புலிகள் மீது பழிபோட முயல்வதிலிருந்தே தெரிகிறது அவர்களுக்கு புலிகளின் கொள்கையினால் நெருக்கடி உள்ளதென்று. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போ ஆதரித்து அறிக்கைகள் விடுவதால் என்ன சாதகமா நடந்தது?

எவ்வளவுக்கு எதிரிகளை உருவாக்காமல் பார்கிறோமோ அவ்வளவுக்கு நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுதான் அரசியல்.. உள்ளதையும் கெடுத்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்வது. றோ புலிகள் மீது பழிபோட முயல்வதிலிருந்தே தெரிகிறது அவர்களுக்கு புலிகளின் கொள்கையினால் நெருக்கடி உள்ளதென்று. :rolleyes:

இப்போ என்ன வர வர நிலைமை சீராகின்றதா?? அல்லது மோசமாகின்றதா??

இந்திய மத்திய வர்க்கம் வேறு ரோ வேறா??

எவ்வளவுக்கு எதிரிகளை உருவாக்காமல் பார்கிறோமோ அவ்வளவுக்கு நல்லது.

இன்று நடைபெற்ற தமிழ் நாடு பாராளு மன்ற விவாதத்தை பாருங்கள்

இதையும் பார்த்து இருப்பீர்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33992

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

லீனக்ஸ்,

அதற்கு இந்தியனை நம்பிக்கொண்டிருக்கிறோம் என்று அர்த்தமில்லை. நீண்டகால நோக்கில் அவர்களுடன் அணுக்கமான போக்கினைக் கடைப்பிடிப்பதே நல்லது என்ற வகையில் எடுக்கப்படும் அணுகுமுறை.

சும்மா எதிர்த்து அறிக்கைவிட்டு என்ன பயன். வாய்ச்சொல்லுக்காவது இந்தியா நண்பன் என்று இப்போதைக்குச் சொல்லி வைக்க வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி எதுக்கும் வரதராஜ பெருமாள் என்ன சொல்ல போறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை ஆதரித்தால் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் பாயும்- தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட இயங்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தாலோ, செயல்பட்டாலோ, துண்டு அறிக்கை-சுவரொட்டிகள் வெளியிட்டாலோ, ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம் நடத்தினாலோ சட்டவிரோத நடவடிக்கை தடுப்புப் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

புலிகளை ஆதரித்துப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை கைது செய்யக் கோரி சட்டசபையில் நேற்று காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்து திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது.

இந் நிலையில் இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் சட்ட அமைச்சர் துரைமுருகன் ஒரு அறிக்கை படித்தார். அதன் விவரம்:

தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படும் போக்கு குறித்து நேற்று (29ம் தேதி) சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது அத்தகைய செயல்கள் பற்றி வழக்கறிஞர்கள் குழு அமைத்து, ஆராய்ந்து அதைத் தடுப்பதற்கு ஒரு சட்டம் கொண்டு வர வேண்டுமேயானால், அதற்கும் இந்த அரசு தயாராக இருக்கிறது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இன்று காலையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நிதியமைச்சர் அன்பழகன், நான், தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி, அட்வகேட் ஜெனரல் மாசிலாமணி, உள்துறைச் செயலாளர், சட்டத்துறை செயலாளர், மாநில காவல்துறை டிஜிபி, புலனாய்வுப் பிரிவு எடிஜிபி ஆகியோர் கூடி விவாதித்தோம்.

இதற்காக புதிதாக சட்டம் கொண்டு வர வேண்டுமா அல்லது ஏற்கனவே உள்ள சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்க இயலுமா என்று ஆலோசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இறுதியாக எடுக்கப்பட்ட முடிவு வருமாறு:

''தடை செய்யப்பட்டுள்ள எந்த இயக்கமாயினும் அவற்றுக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதோ, செயல்படுவதோ, துண்டு அறிக்கைகள், சுவரொட்டிகள் வெளியிடுவதோ, ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதம் போன்ற செயல்களில் ஈடுபடுவதோ, அவற்றில் கலந்து கொள்வதோ சட்டவிரோத நடவடிக்கை தடுப்புப் சட்டம் 1967 (37/1967) பிரிவின் கீழ் குற்றமாகும்.

அது போன்ற குற்றம் இழைப்போர் தனிப்பட்டவராயினும், சங்கம் அல்லது அமைப்புரீதியில் இயங்குவோராயினும் அவர்கள் அரசின் இந்த அறிவிப்பினை உரிய எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதையும் மீறி மேற்கண்ட நடவடிக்கைகள் ஏதேனும் ஒன்றில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது மேலே குறிப்பிட்டுள்ள சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.

-தட்ஸ் தமிழ்

எது எப்படியோ தேன்மொழிக்கும், ஸ்டலினுக்கும் மத்தியில் மந்திரிப் பதவி நிச்சயமாகிவிட்டது. கருணாநிதியே சுயநலன்களுக்கான உங்கள் உதவிகள் என்ற போலி வார்த்தை தேவையற்றவை. ஒதுங்கியிருங்கள் எம்மால் முடியும்.

ஜானா

இது உண்மையில் ஒரு நல்லதுக்கே சும்மா ஆதரவு அது இது என்று கத்தி கொண்டு இருக்காமல் ஏதும் செய்வதுக்கு வழி வகுக்கும்

அதே போல தமிழர் தரப்புக்கும் இந்தியாவின் உண்மையான நோக்கம் தெரிந்தும் அமைதி காத்து இருக்க தேவை இல்லை

தமிழகத்தில் அனுதாப அலை ஒன்றை உருவாக்க வேண்டும் .......

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இந்தியாவை ஆதரித்து நடக்க வேண்டும் என்று வக்காலத்து வாங்குபவர்கள், இவ்வளவு காலமும் ஆதரித்து வந்ததால் எற்பட்ட நண்மைகளைக் கூற முடியுமா ?

நேரடியாக 5000 முதல் 10,000 பொதுமக்களும் 600 போராளிகளும் கொல்லப்பட்டனர். இந்தியக் காட்டேறிகளின் காமப் பசிக்கு இரையான எமது அக்கா, அம்மாக்களின் எண்ணிக்கை இன்னும் தெரியாது. அழிக்கப்பட்ட வாழ்விடங்களினதும் சொத்துக்களினதும் மதிப்புத் தெரியாது.

மறைமுகமாக இன்றுவரை இலங்கையின் தமிழ் இன அழிப்பிற்கு விடாது முண்டு கொடுத்துவருகிறது. பயிற்சி முதல் கனரக ராணுவ உதவிகள் வரை, இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டைக் காப்பது என்ற போர்வையில் செய்து வருகிறது. புலிகளின் ராணுவ பலத்தை அடக்க கடல் பாதுகாப்பு என்ற போர்வையில் இலங்கை அரசிற்கு உளவுத் தகவல்களை வழங்கி வருகிறது.

இன்னும் எதற்கு இந்த வாய்கிழியும் வக்காலத்து ???????????

இந்தியாவை எதிர்த்தால் இன்னும் பிரச்சனை வரும் என்று கூக்குரலிடும் இவர்களிடம் ஒரு கேள்வி, இன்னும் இந்தியாவால் செய்வதற்கு மிச்சம் என்ன இருக்கிறது ? நேரடியாக தனது பேய் ராணுவத்தை அனுப்பி 1987 இல் விட்ட குறை தொட்ட குறை என்று மீதமிருக்கும் தமிழனையும் அழிப்பதுதான் பாக்கி.

இந்தியாவையும், தமிழகத்தையும் சேர்த்துக் குழம்பும் இவர்கள், இந்தியாவை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப் பாட்டிற்கு வந்துவிடுகிறார்கள். இலங்கையில் தமிழனுக்கு என்ன நிலையோ, அதுதான் இந்தியாவின் தமிழனுக்கும். ஏனென்றால் கடலுக்கு அந்தப் பக்கம் மரித்தால் என்ன இந்தப்பக்கம் மரித்தால் என்ன தமிழந்தானே என்ற போக்கு இரு நாடுகளுக்கும் பொதுவானது.

தமிழ்நாட்டுத் தமிழனின் தார்மீக ஆதரவு என்பது தேவையானது. அதற்காக இந்திய ஆளும் வர்க்கத்தை ஆதரிக்க வேண்டுமென்பது மடத்தனம்.

முடியுமானால் ஒன்று செய்யுங்கள், தமிழனின் சுதந்திரத் தீயையும், எழுச்சியையும் ஒன்றாக எடுத்துக் கொண்டு போய் இந்தியாவின் காலடியில் போட்டு மண்டியிடுங்கள். அப்போதாவது இந்தியா தனது வெறியை விடுகிறதா என்று பார்க்கலாம் !

ரகுநாதன்... தொடர்ந்து இடைவிடாத முண்டுகொடுப்பையும் ராணுவ உதவியையும் தனியசெய்யவில்லை... அமரிக்கா பிருத்தானியா, மற்றும் ஜ்ரோப்பா வரை தடைசெய்யதூண்டியது மாத்திரமில்லை.

போர்நிறுத்த உடன்படிக்கை மூலம் புலிகள் ராசதந்திர தரமடைவதை பொறுக்கமாட்டாமல்.. அதை ஆரம்பம் முதல் தென்னிலங்கை இனவாத கட்சிகளை வைத்து அரசியல் வித்தையாடி இறுதில் அதை இல்லாமல் செய்யவும் உதவிதுதான் இந்த இந்தியா.

இந்தியாவுடன் எமக்கு உறவு என்றும் எட்டாக்கனி என்றுதான் படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தடையினை நீக்கவேண்டும் என்று நான் கோரியதில் தவறில்லை - திருமாவளவன்

விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்கவேண்டும் என்று நான்கோரியதில் எந்தத் தவறும் இல்லை. எந்த ஒரு அமைப்பையும் ஆதரித்தோ, எதிர்த்தோ பேசுவதற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் கருத்துரிமை உண்டு.

விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசும் பேச்சினை சட்டம் தண்டிக்குமானால் அதனை எதிர்கொள்ளத் தயார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்ற கருத்துரிமை மீட்டு மாநாட்டில் புலிகள் மீதான தடையினை நீக்கவேண்டும் என்று திருமாவளவன் கோரியிருந்தார்.

இதனையடுத்து திருமாவளவனை கைது செய்யமாறுகோரி சட்டசபையிலிருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் உயர்மட்டக் குழு கூடி புலிகளை ஆதரிப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு கச்சதீவு பகுதிக்கு அருகில், சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்ணி வெடிகளை புதைத்து இருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையே பகை முற்றும் போதுதான் இதுபோன்று செய்வார்கள். சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கும் நோக்கத்துடனும், இந்திய அரசுக்கு சவால் விடும் வகையிலும் இலங்கை அரசு நடந்து வருகிறது. போர் தொடுக்கவேண்டும் கடலுக்கடியில் கண்ணிவெடிகளை புதைத்து வைத்திருப்பதால் கச்சதீவு பகுதிக்கு சென்று மீன்பிடிக்க வேண்டாம் என்று இந்திய அதிகாரிகள் தமிழக மீனவர்களிடம் வலியுறுத்துகிறார்கள். ஆனால் இந்த விஷயத்தில் சிங்கள அரசை இந்தியா எச்சரிக்கை செய்யாதது வேதனையளிக்கிறது. இனிமேலும் இலங்கையை இந்திய அரசு ஆதரிப்பது இந்தியாவின் ஆளுமையை கேள்விக்குறியாக்கி விடும்.

-வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் புலிகளுக்கு எதிரான சட்டமூலம்

-கலைஞன்-

கடந்த வாரம் ஆரம்பமான தமிழக சட்டசபையின் 2008 ஆம் ஆண்டுக்கான முதலாவது கூட்டத்தொடரில் விடுதலைப்புலிகள் விவகாரம் விஸ்வரூபமெடுத்ததால் திரிசங்குப்பொறிக்குள் அகப்பட்ட தி.மு.க.அரசு விடுதலைப்புலிகளுக்கெதிரான சட்டத்தை மீண்டும் அமுல் படுத்தி மீண்டும் தனது சுயநல அரசியலை அம்பலப்படுத்தியுள்ளது.

அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்கு அனுதாபம், தமிழ்ச்செல்வன் இழப்புக்கு கவிதை, ஈழத்தமிழர் படுகொலைக்கு கவலையென இதுவரை நடித்து வந்த கலைஞர் அரசு இப்போது தனது முதலமைச்சர் கதிரையையும் தனது `இறுதி' ஆசையையும் காப்பாற்றுவதற்காக புலிகளுக்கு எதிரான சட்டத்தை மீண்டும் கொண்டு வந்து ஈழத்தமிழர் விரோத சக்திகளை மகிழ்ச்சிக்கடலில் குளிப்பாட்டியுள்ளது.

ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலாவின் உரைக்கு நன்றி தெரிவித்து நடக்க வேண்டிய விவாதங்கள் எல்லாம் விடுதலைப்புலிகளை ஆதரித்தும் எதிர்த்தும் நடந்ததால் சட்டசபை கடந்த ஒரு வாரகாலமாக கொதிநிலையில் காணப்பட்டதுடன் முதல் முதலாக தி.மு.க.கூட்டணிக் கட்சிகளின் முக்கியமானதான தமிழக காங்கிரஸ் கட்சி கபையிலிருந்து வெளிநடப்பும் செய்தது.

விடுதலைப்புலிகள் மீதான அ.தி.மு.க.வின் விமர்சனத்தை கருத்தில் எடுக்காத கருணாநிதி, தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வெளிநடப்புச் செய்ததனால் நடுங்கிப் போய்விட்டார். எங்கே தனது ஆட்சிக் கதிரை ஆடிப்போய் விடுமோ முதல்வர் பதவி முடிந்துவிடுமோ என்ற பதற்றத்தினால் ஈழத்தமிழர் பற்றை அறுத்து சுயநலக் குணத்தை வெளிப்படுத்தினார்.

சட்டசபையில் தமிழக காங்கிரஸ் கட்சியும் அ.தி.மு.க.வும் தினமும் விடுதலைப்புலிகள் விவகாரத்தை கையிலெடுத்ததுடன் அவர்களால் தமிழகத்துக்கு பேராபத்து வந்துவிட்டதாகவும் தமிழக அரசு புலிகள் தொடர்பில் மௌனம்காத்து வருவதாகவும் நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைய புலிகளே முக்கிய காரணமெனவும் குற்றம் சாட்டி தி.மு.க.அரசை கலங்கடித்தன.

அதிலும் காங்கிரஸ் கட்சி, தமது `புனித' தலைவரைக் கொன்ற விடுதலைப் புலிகளையோ, அவர்களுக்கு ஆதரவு வழங்குபவர்களையோ மன்னிக்க முடியாது. தமிழக அரசின் புலிகள் தொடர்பான போக்கு தமது நெஞ்சில் வேலைப்பாய்ச்சுவதுடன் கண்களில் இரத்தத்தை வரவழைப்பதாகவும் கூறி தினமும் ஒப்பாரி வைத்தனர். புலிகளை ஏதாவது செய்யுங்கள் என கூத்தாடினர்.

சட்ட சபையில் புலிகள் விவகாரம் சூடுபிடிக்க சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய பிரமாண்டமான கருத்துரிமை மீட்பு மாநாடே காரணமாக அமைந்தது, அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், கலந்து கொண்ட உள்நாட்டு வெளிநாட்டுப் பிரமுகர்கள் திரண்டிருந்த மக்களுமே காங்கிரஸுக்கும் அ.தி.மு.க.வுக்கும் பீதியைக் கொடுத்தன.

இதனாலேயே இதுவரை தி.மு.க.அரசை மிரட்டிவந்த காங்கிரஸ்கட்சி முதல் தடவையாக சட்டசபையிலிருந்து தி.மு.க.அரசைக் கண்டித்து வெளிநடப்புச் செய்தது. இது கலைஞர் எதிர்பார்க்காத விடயம். இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கும் அடுத்த கூட்டணிக்கட்சியான டாக்டர் ராமதாஸின் பா.ம.க.வும் வேறு ஒரு காரணத்துக்காக தி.மு.க. அரசைக் தண்டித்து சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தது.

தி.மு.க.அரசின் கூட்டணிக் கட்சிகளான தமிழக காங்கிரஸ், பா.ம.க.ஆகியவற்றின் சட்டசபை வெளியேற்றம் ஒருபுறம். விஸ்வரூபமெடுத்து வரும் விஜயகாந் மறுபுறம், அ.தி.மு.க., பா.ஜ.க.விடையே உருவாகவுள்ள கூட்டு இன்னொரு புறமென கருணாநிதியை மிரட்டியதாலேயே எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப்பார்த்து, புலிகளை ஆதரித்தால் சட்டம் பாயுமென சட்டசபையில் கருணாநிதி அறிவித்து தற்காலிகநிம்மதியைப் பெற்றுள்ளார்.

சட்டசபையில் இடம்பெற்ற விவாதங்களில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை கைது செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றிருந்தது. திருமாவளவனின் துணிச்சலான நடவடிக்கைகள் சட்டசபையில் கருணாநிதிக்கு நெருக்கடியை கொடுத்தன. திருமாவளவனும் தி.மு.க.கூட்டணியை சேர்ந்தவரென்பதால் கருணாநிதியால் உடனடியாக எதுவும் செய்ய முடிய வில்லை.

அதனாலேயே விடுதலைப்புலிகள் தொடர்பான சபைஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய கருணாநிதி தனது கூட்டணிக்கட்சிகள் தனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்ளக் கூடாதென வேண்டுகோள் விடுத்தார். அத்துடன் புலிகளுக்கு ஆதரவாக பேசக்கூடாதென உயர் நீதிமன்றம் சொல்லாததினால் அது குற்றமில்லையெனவும் கூறினார்.

இதன் மூலம் திருமவளாவனை தான் காப்பாற்ற வில்லை. சட்டம் தான் காப்பாற்றுகின்றதென எடுத்துக்காட்டிய கருணாநிதி காங்கிரஸை சாந்தப்படுத்தும் முயற்சியாக, சட்டத்தில் இடமில்லாது விட்டால் புலிகள் தொடர்பில் புதிய சட்டமொன்றை இயற்ற தமது அரசு தயாராக விருப்பதாகவும் கூறியதுடன் இதன் மூலம் தனது அரசை தான் காப்பாற்ற முயலவில்லையெனவும் பெருமை பேசினார்.

இந்த உரை மூலம் விடுதலைச் சிறுத்தைகளை அடக்குவதுடன் தமிழக காங்கிரஸ், அ.தி.மு.க.போன்ற கட்சிகளையும் சமாளித்து விடலாமென நினைத்த கருணாநிதிக்கு, தனது பேச்சைக் கேட்காமல் காங்கிரஸ் கட்சி சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்து பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது, அதனால் ஏதாவது ஒன்றை உடனடியாக செய்து காங்கிரஸை சமாளிக்க வேண்டிய நிலை கருணாநிதிக்கு ஏற்பட்டது.

இதையடுத்தே மறுநாள், இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகப் பேசுவோர், கூட்டங்களை, கருத்தரங்குகளை நடத்துவோர் மீது நடவடிக்கையெடுக்கத்தக்கதான சட்டம் மீண்டும் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக தி.மு.க.சார்பில் அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் அறிவித்தார். இதற்கமைய யார் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தாலும் சட்டம் அவர்கள் மீது பாயுமென தமிழக அரசு எச்சரித்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு தமிழின உணர்வாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஈழத்தமிழர் பிரச்சினையில் நழுவல் போக்கை கடைப்பிடித்து வரும் கருணாநிதி, ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளான விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசக் கூடாதென தற்போது சட்டம் பிறப்பித்துள்ளமை அவர் மீதான நம்பகமற்ற தன்மை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதேவேளை தமது தலைவரை கொன்ற விடுதலைப்புலிகளை மன்னிக்கவோ மறக்கவோ தாம் தயாரில்லையென காங்கிரஸ் கட்சி கூறிவருவது தமது அரசியல் இருப்புக்காகவேயன்றி தமது தலைவர் மீதுள்ள பற்றுக்காகவல்ல. இது காங்கிரஸுக்கும் தெரியும், கருணாநிதிக்கும் தெரியும். இதைதெரிந்து கொண்டே இருவரும் தமது நலனுக்காக ஒரு இனத்தை அழிக்கும் இலங்கையரசின் முயற்சிக்கு துணை போய்க் கொண்டிருக்கின்றனர்.

தமது தலைவரைக் கொன்ற விடுதலைப் புலிகளை மன்னிக்கவோ, மறக்கவோ மறுக்கும் காங்கிரஸ்காரர்கள், தமது தலைவி இந்திராகாந்தியைக் கொன்ற சீக்கிய இனத்தை சேர்ந்த ஒருவரைத்தான் பிரதமராக்கி விட்டு அவரின் காலடியில் கிடந்து சேவகம் செய்கின்றனர். காங்கிரஸை வழிநடத்த தலைமையில்லாத இவர்கள் வெளிநாட்டுப்பெண்ணான சோனியாவை நம்பியே தமது அரசியல் பிழைப்பை நடத்தும் கேவலமான நிலையில் இருக்கிறார்கள்.

ராஜிவ்காந்தியை கொன்றதாகக் கூறி விடுதலைப்புலிகளையும் ஈழத்தமிழர்களின் உரிமைகளையும் ஏற்க மறுக்கும் இவர்கள் தமது முகத்தை கண்ணாடியில் ஒரு தடவையேனும் பார்க்க வேண்டும். அமைதிப்படையென்ற பெயரில் இலங்கைக்கு படைகளை அனுப்பி பொது உறவுகளான ஆயிரக்கணக்கான ஈழத் தமிழரை கொடூரமாக கொலைசெய்ததையும், பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதையு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.