Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் உயிர்த்தியாகம், அலரி மாளிகையில் கொண்டாட்டம்!

Featured Replies

பொதுமக்கள் உயிர்களை தியாகம் செய்யும் போது அலரி மாளிகையில் கொண்டாட்டம்

60ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்ற நேற்றைய தினத்திற்கு முந்தைய தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 28 பேர் கொல்லப்பட்டதுடன், 114 காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பபட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நேற்றைய தினம் இரவு அலரி மாளிகையில் பாரிய விருந்துபசாரமொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.

சுதந்திர தினம் கொண்டாட்டப்பட்ட நேற்றைய தினத்தில் மட்டும் 4 குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

வெளிஓயாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இராணுவ வீரர் உட்பட 14 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர். புத்தள கால்கே பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் இராணுவ படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மூன்று இராணுவ வீரர்கள் காயமடைந்துள்னர். கல்கிஸ்ஸ பிரதேசத்தில் மின்மாற்றி ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் இலங்கை மின்சாரசபைக்கு மூன்று மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. வெலி ஓயா தாக்குதலில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸிற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. மொரட்டுவை பிரதேச சேற்று நிலப்பகுதியில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சுதந்திர தினத்திற்கு முதல் நாள் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 14 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் 104 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இவ்வாறான துர்ப்பாக்கிய நிலைமையின் கீழ் கொண்டாடப்பட்ட இலங்கை 60ஆவது சுதந்திர தின நிகழ்வு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வைபவமாக ஏற்றுக்கொள்வதில்லை சிக்கல்கள் இல்லை. எனினும், அத்துடன் நின்றுவிடாது ஜனாதிபதி தலைமையில் அலரி மாளிகையில் விருந்துபசாரங்கள் நடாத்தப்படுவது யுத்தத்தினால் உயிர் நீத்த மக்களுக்கு செய்யப்படும் அவதூறாகவே கருதப்பட வேண்டும்.

இந்த விருந்துபசாரத்திற்காக அரசாங்கத்தின் அமைச்சர்கள், வியாபாரிகள் மற்றும் சட்டத்தரணிகள், ஜனாதிபதி, அவரின் சகோதரர்களின் உறவின நண்பர்கள் கலந்து கொண்டதாகத் தெரியவருகிறது.

ஆதாரம்: Lankadissent.com

Edited by சாணக்கியன்

  • தொடங்கியவர்

"பொதுமக்கள் உயிர்தியாகம் செய்ய வேண்டும், ஏனெனில் பயங்கரவாதத்தை ஒழிப்பது ஒன்றும் ரோசா பூ மெத்தையல்ல!" - கெகலிய ரம்புக்வல்ல மக்களுக்கு அறிவுரை!

Ambulance from Vavuniya turned back without hospital supplies.

keheliyarambukwellaface.jpg

An ambulance from the Vavuniya Hospital, on its way to Anuradhapura to collect essential medical equipment and medicine, has been turned back in Medavachchiya.

Citing security reasons, authorities do not allow vehicles coming from Vavuniya to cross Medavachchiya.

Meanwhile, a large number of people wanting to travel to Anuradhapura, Colombo and Kandy are stranded in Vavuniya, together with around 20 private buses.

Drivers and conductors of these buses say that they are without any income for the past three days, and have requested the District Secretary to allow them to proceed out of Vavuniya without the passengers.

The District Secretary, who had raised the matter with security authorities in Vavuniya, has been told that they were not in a position to change a decision taken by Colombo.

Speaking to BBC Sandeshaya, Defence Spokesman Keheliya Rambukwella has urged the people to make sacrifices, as the path to defeating terrorism was not a bed of roses.

ஆதாராம்: Lankadissent.com

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி, தமிழ்மக்களைப் பாதுகாக்க தனது சொந்த இனத்தையே உயிர்த்தியாகம் செய்யக் கேக்கிறார். இந்தமாதிரி மனசு ஆருக்கு வரும் ?

இவ்வளத்தையும் கேட்டுப்போட்டு சிங்களச்சனம் இவரை பாதுகாப்புப் பேச்சாளரா நம்பிக் கதை கேட்டுக்கொண்டுதானே இருக்கு !

கோவிந்தா....கோவிந்தா!

பொதுமக்களுமில்லை... அமைச்சர்களும் உயிர்த்தியாகம் செய்யவேணும்....

உங்கடை அரசியலுக்குகாக முழு சிங்களவங்களையும் குடுப்புயல் போலகிடக்கு.... விபச்சாரியின் முதல்வா... ச்ச விபச்சாரிக்கெண்டாலும் மற்றவருக்கு இன்பம் கொடுத்து தான் துன்பமனுபவிப்பாள்... இவங்கள் அதுக்கான மாமாக்கள்

ஏன் நாங்களும் நவம்பர் 26 கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடிறனாங்கள் தானே. 2006 பொருளாதார தடைக்கு மத்தியில் யாழ்பாணத்திலேயே கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடினனாங்கள்.

செந்த நாட்டில 60 வருசமாக இருக்கிறான் அதை சிங்கள நாடு எண்டு உத்தியோக பூர்வமாக்கியே 37 வருடங்கள் ஆகிவிட்டது. அவங்கள் கொண்டாடிறதில என்ன தப்பு?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நாங்களும் நவம்பர் 26 கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடிறனாங்கள் தானே. 2006 பொருளாதார தடைக்கு மத்தியில் யாழ்பாணத்திலேயே கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடினனாங்கள்
.

30 வருடங்களாக தமிழ் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த தலைவருக்கு கேக் வெட்டினால் ஒன்றும் குறைந்து போகாது.அதுவும் அவரின் விருப்பப்படி இல்லாமல் மக்கள் தலைவர் பால் கொண்ட அன்பால் பாசத்தால் கேக் வெட்டினார்கள்.தலைவர் நினைத்திருந்தால் உங்களை ,எங்களை போல வெளிநாட்டுக்கு வந்து ஆடம்பர வாழக்கை வாழ்ந்திருக்கலாம்.ஒரு போதும் தலைமை கேக் வெட்டி கொண்டாடவில்லை.மாறாக மாவீரர்கட்கு விளக்கேற்றியதை தான் பார்த்திருக்கிறோம்.

இப்ப யார் தலமை கொண்டாடுது அல்லது ஊக்குவிக்குது எண்டவை. வால்கள் செய்யும் கூத்துகளால் வெளிக்காட்டப்படும் தவறான செய்தி முன்மாதிரி.

  • கருத்துக்கள உறவுகள்

வால்கள் செய்கிறது என்று சாதாரணமான எங்களுக்கு புரிகிறது? வேறு யாருக்கு புரிய வேண்டும்.இதனை பெரிய விடயமாக எடுத்து நவம்பர் 26 ல் என கோடிட்டு கூறியது நான் இல்லையே.

குழம்பிபோன தலை சரிவந்துட்டுதுபோல கிடக்கு.... இனி அடுத்த தரம் சன்னம் கின்னம் பட்டாத்தான் மறும் போல?

நாங்கள் மாத்திரம் விளங்கினா காணும் எண்டு தானே குண்டுச் சட்டீக்கை குதிரை ஓட்டிறம் 30 வருசமா.

வால்களின் கூத்துகள் சர்வாதிகாரம் cult என்ற பிரச்சாரங்களை பலப்படுத்துகிறது. 30 வருடங்களிற்கு மேலாக தனது வாழ்க்கை அர்ப்பணித்து இயங்கு ஒருவருக்கு பிரச்சனைகளை கூட்டி அவப்பெயரை எடுத்துக் கொடுப்பது தான் நாங்கள் செய்யும் கைமாறு?

  • கருத்துக்கள உறவுகள்

குண்டு சட்டிக்குள் ஒருவரும் குதிரை ஓடி 30 வருடம் கழியவில்லை.பல அன்னிய சக்திகளுக்கு எதிரான போராட்டம், வெளிநாடுகளுக்கு எங்களை போல ஆயிரம் ஆயிரம் பேர் ஓடியது, வெளிநாடுகளுக்கு வந்தவர்கள் தங்களது கடமையை சரிவர செய்யாதது என்பன சில முக்கிய காரணங்கள்.களத்தில் உள்ள போராளிகளும், மக்களும் மிக தெளிவாக உள்ளார்கள்.

  • தொடங்கியவர்

களத்தில் உள்ள போராளிகளும், மக்களும் மிக தெளிவாக உள்ளார்கள்.

:wub: :wub:

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் உள்ள போராளிகளும், மக்களும் மிக தெளிவாக உள்ளார்கள்

:wub:போர்க்களத்தில் :wub::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.