Jump to content

டோனிக்கு ரூ.6 கோடி


Recommended Posts

பதியப்பட்டது

டோனிக்கு ரூ.6 கோடி

Wednesday, 20 February, 2008 02:24 PM

.

மும்பை, பிப்.20: ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் சென்னை அணியின் சார்பில் விளையாட மகேந்திர சிங் டோனி ரூ.6 கோடிக்கு வாங்கப்பட்டிருக்கிறார். இலங்கை வீரர் முத்தையா முரளீதரனும் சென்னை அணி சார்பில் வாங்கப்பட்டுள்ளார்.

.

கொல்கத்தா அணி சார்பில் ஷோயிப் அக்தர், ஜெய்ப்பூர் அணி சார்பில் ஷேன்வார்னே, மொகாலி அணி சார்பில் ஜெயவர்த்தனே ஆகியோர் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ள இந்தியன் பிரிமியர் லீக்கில் இடம் பெற்றுள்ள அணி களில் விளையாட உள்ள வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது.

முதல்கட்ட ஏலத்திற்கு பிறகு இந்திய வீரர் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி சென்னை அணியால் 1.5 மில்லியன் டாலருக்கு வாங்கப்பட்டி ருக்கிறார். முத்தையா முரளீதரனும் சென்னை அணியால் வாங்கப் பட்டுள்ளார்.

கில்கிறிஸ்ட் ஐதராபாத் அணி யாலும், ஜெயவர்த்தனே மொகாலி அணியாலும், ஷோயிப் அக்தர் கொல்கத்தா அணியாலும் வாங்கப் பட்டுள்ளனர். வார்னே ஜெய்ப்பூர் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

முதல்கட்ட ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக டோனி திகழ்கிறார். வார்னே, முரளீதரன், ஜெயவர்த்தனே மற்றும் கில்கிறிஸ்ட் ஆகிய வீரர்களை விட அதிக தொகைக்கு அவர் வாங்கப் பட்டுள்ளார்.

சென்னை அணியின் உரிமை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தால் வாங்கப்பட்டிருக்கிறது.

இந்த அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் என பெயர் சூட்டப் பட்டுள்ளது.

ஐபிஎல் நடத்தும் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக டோனி களமிறங்குவார்.

சென்னை ரசிகர்கள் போட்டிகளின் போது டோனிக்கு ஆதரவாக குரல் கொடுத்து மகிழலாம்.

இந்திய கிரிக்கெட் வாரியம், இந்தியன் பிரிமியர் லீக் எனும் புதிய அமைப்பை ஏற்படுத்தி 20 ஓவர் போட்டிகளை நடத்த உள்ளது.

இந்த அமைப்பில் 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. 8 அணிகளையும் ரிலையன்ஸ் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஷாருக்கான், ப்ரீத்தி ஜின்தா ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் விலைக்கு வாங்கி உள்ளனர்.

மேலை நாடுகளில் உள்ள தொழில் முறையான லீக் அமைப்பில் போட்டிகள் நடத்தப்பட உள்ளதால் வீரர்களும் மேலை நாடுகளில் இருப்பது போல ஏல முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஐபிஎல் அமைப்பில் ஆட ஒப்புக் கொண்டுள்ள வீரர்களிலிருந்து தங்களுக்கு தேவையான வீரர்களை ஒவ்வொரு அணியும் ஏலம் கேட்டு தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கான ஏலம் இன்று மும்பையில் நடைபெறுகிறது.

லண்டனை சேர்ந்த பிரபல ஏல நிபுணர் ரிச்சர்டு மேட்லே இந்த ஏலத்தை நடத்துகிறார். காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த ஏலம் நள்ளிரவு வரை நீடிக்கும் என்று தெரிகிறது.

ஏலத்திற்காக என்று பிரத்யேக சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. அணியின் உரிமையாளர்கள் தாங்கள் விரும்பும் வீரர்களை ஏலம் கேட்கலாம்.

அப்போது அவர்கள் இவர் யாரிடமும் தொடர்பு கொள்ள முடியாது. வீரர்கள் பற்றி வழங்கப்படும் விவரங்கள் அடிப்படையில் அவர்கள் ஏலம் கேட்கலாம். அதிக விலைக்கு கேட்கப்படும் அணிக்கு வீரர் வழங்கப்படுவார்.

வீரர்களின் தன்மைக்கேற்ப ஒவ்வொரு சுற்றாக ஏலம் நடத்தப்படும். குறைந்தபட்சம் 33 லட்சம் டாலர்களையும், அதிகபட்சமாக 50 லட்சம் டாலர்களையும் வீரர்களின் ஏலத்திற்கு அணிகளின் உரிமையாளர்கள் செலவிடலாம்.

வீரர்களுக்கான அடிப்படை தொகுதியிலிருந்து ஏலம் தொடங்கும். ஒவ்வொரு அணிக்கும் நட்சத்திர வீரர்கள் என ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் திராவிட், வீரேந்திர ஷேவாக் உள்ளிட்ட 5 வீரர்கள் அவர்கள் வசிக்கும் நகரங்களை சேர்ந்த அணியில் இடம் பெற்றிருப்பார்கள். அவர்களை ஏலம் எடுக்க முடியாது.

ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெறலாம். இவர்களில் இருவர் மட்டுமே ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர்களாக இருக்கலாம்.

உள்ளூரை சேர்ந்த 4 வீரர்கள் மற்றும் 22 வயதுக்குட்பட்ட 4 வீரர்கள் கட்டாயம் அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும். அதிக பட்சமாக 16 வீரர்கள் ஒவ்வொரு அணியிலும் இடம் பெறுவார்கள்.

டோனி, பாண்டிங், சைமன்ஸ், வார்னே ஆகிய வீரர்களை ஏலம் எடுக்க கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்கட்டத்தில் டோனி, அக்தர், முரளீதரன் மற்றும் கில்கிறிஸ்ட் ஆகியோர் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

maalaisudar.com

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தங்கள் தங்கள் நகரங்களுக்காக விளையாடும் வீரர்கள் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள். என்ன செய்வது அவர்கள் அங்கே பிறந்தது அவர்கள் தலைவிதி.

Posted

டோனி விலை போனது எப்படி?

.

Thursday, 21 February, 2008 11:49 AM

.

மும்பை, பிப்.21: சென்னை அணியால் மகேந்திர சிங் டோனி ரூ.6 கோடிக்கு வாங்கப் பட்டிருப்பது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இந்த ஏலத்தின் போது நடந்த பின்னணி விவரங்கள் தெரிய வந்துள்ளன.

.

ஐபிஎல் சார்பில் நேற்று நடத்தப் பட்ட ஏலத்தில் வீரர்கள் கோடிக் கணக்கான ரூபாய்க்கு விற்கப்பட்டது கிரிக்கெட் உலகையே உலுக்கி உள்ளது. மகேந்திர சிங் டோனி சென்னை அணியால் அதிகபட்சமாக ரூ.6 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

அநேகமாக எல்லா நாளிதழ்களுமே டோனி அதிக விலைக்கு வாங்கப் பட்டதை முக்கிய செய்தியாக வெளியிட்டுள்ளன. இந்த அளவுக்கு டோனிக்கு விலை கொடுக்கப்பட்டது எப்படி? எனும் கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

ஏலத்தின் போது நடந்த பரபரப்பான போட்டி பற்றிய பின்னணி தகவல்கள் தெரிய வந்துள்ளன. சென்னை அணி ஏலத்தில் பங்கேற்பதற்கு முன்பாகவே எப்பாடு பட்டாவது மகேந்திர சிங் டோனியை வாங்கி விடுவது என முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

ஏலம் தொடங்கியதும் டோனியை வாங்க அந்த அணி போட்டியிட்டது. ஆனால் எல்லா அணிகளுமே டோனிக்காக போட்டியிட்டன. இதன் விளைவாக டோனிக்கான விலை ரூ.9 லட்சம் டாலராக உயர்ந்தது. இந்த கட்டத்தில் போட்டியிலிருந்து மற்ற அணிகள் விலகி கொண்டதாக தெரிகிறது.

சென்னை மற்றும் மும்பை அணிகள் மட்டுமே களத்தில் இருந்தன. இந்த இரு அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. அப்போது சென்னை அணி டோனிக்கான விலையை 10 லட்சம் டாலராக உயர்த்தி இருக்கிறது.

மும்பை அணி உடனே 11 லட்சம் கேட்டது. சென்னை அணி 12 லட்சம் என உயர்த்தி கேட்டது. இந்த நேரத்தில் மும்பை அணி 13 லட்சம் என அறிவித்தது. அப்போதும் தயங்காத சென்னை அணி 15 லட்சம் டாலர் என உயர்த்தியது. இறுதியில் இந்த விலை முடிவானது. டோனி சென்னை அணியால் வாங்கப்பட்டார்.

மும்பை அணிக்கு ஏற்கனவே முத்திரை வீரராக சச்சின் டெண்டுல்கர் இருந்ததால் இதனை விட அதிக விலைக்கு டோனியை அவர்களால் ஏலம் கேட்க முடிய வில்லை என்று கூறப்படுகிறது.

சென்னை அணிக்கு முத்திரை வீரர் என்று யாரும் இல்லாததால் டோனி 15 லட்சம் டாலர்களுக்கு அதாவது ரூ.6 கோடிக்கு வாங்கப்பட்டி ருப்பதாக கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

malaisudar.com

  • கருத்துக்கள உறவுகள்
Posted

' ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன்"

மேல்தட்டு மக்களுக்காக மேல்தட்டு மக்களால் நடாத்தப்படும் கௌரவமிக்க அடிமை வியாபாரம் வாழ்க!!!

:wub::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவின் மானத்தை வாங்கும் கோலிக்கு ஆதரவாக இந்திய அணி, அவுஸ்ரேலிய ஊடகத்துறையினை புறக்கணிக்கும் இன்னொரு கேவலமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்தியணியின் இந்த தான் தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகமும் உடந்தையாக இருகிறதா என தோன்றுகிறது. மெல்பேர்ண் ஆடுகளம் சிட்னி ஆடுகளத்திற்கு நெருக்கமாக இருக்கும் என கூறப்படுகிறது, தற்போது நிலவும் அதிக வெப்பத்தினால் கடுமையாக இருக்க வாய்ப்பு அதிகம என்பதால் பந்து விரைவாக அதன் சுவிங், சீம் அனுகூலம் இலகுவாக இழக்கப்பட்டுவிடலாம் என கருதப்படுகிறது,  அதனால் சுழல் பந்து வீச்சாலர்களின் பங்களிப்பும் இந்த போட்டியில் காணப்படும், முதல் நாள் ஆட்ட நாளில் வெப்பம் 40 பாகை வெப்பத்தினையும் அடுத்துவரும் நாள்களில் 20 களின் மத்தியில் வெப்பம் காணப்படும் என கூறப்படுகிறது, நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் துடுபெடுதாடும் என கருதப்படுகிறது. அவுஸ்ரேலிய அணியில் மக்சுவேனி (புதிய தொடக்க ஆட்டக்காரர்) இற்கு பதிலாக சாம் கொன்ஸ்டாஸும் கேசல்வூட்டிற்கு பதிலாக பந்து வீச்சாளராக போலன்ட் களமிற்ங்கிகின்றனர், போலன்ட் இனது ஊர் மைதானம் இதுவாகும் இதில் அவர் முன்னர் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். கடந்த இரண்டு போட்டித்தொடர்களிலும் இந்தியாவே வென்றுள்ளதால் இந்தியர்கள் இந்தியணியே வெல்லும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்திய பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்துடன் ஒப்பிடும் போது அவுஸ்ரேலிய அணி மேலாதிக்கத்துடன் இருப்பதால் அவுஸ்ரேலிய அணி வெல்லவே வாய்ப்பு அதிகம், இந்த போட்டியில் மழை குறுக்கிடாது என கருதப்படுகிறது.
    • இப்படியான வேகத்தில் பயனித்தால் ஆண்மைக் குறைபாடு ஏற்படும் சாத்pயம் இருக்குதாம்.அப்புறம் உங்கள் விருப்பம்.😂
    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.