Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டிங்கிரி.சிவகுரு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டிங்கிரி.சிவகுரு

புராண இதிகாச நாடகங்களையே பார்த்து வாளும்.வேலும்.விழியும் .கண்ணாளா.மன்னா.மந்திரி என்று பழக்கப்பட்டுபோயிருந்த மக்களிற்கு வித்தியாசமான அதுவும் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை முளுக்க முளுக்க நகைச்சுவையாக இருவர் மட்டுமே மேயில் தோன்றி நடித்த இரட்டையர்கள்தான் டிங்கிரி மற்றும் சிவகுரு என்பவர்கள்.இவர்களின் வருகை சமூக மற்றும் நகைச்சுவை நாடகங்களிற்கென மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது மட்டுமல்ல. பினர் பல நகைச்சுவை நடிகர்கள் தோன்றுவதற்கும் காரணமாக இருந்தது என்றும் சொல்லலாம்.

அது மட்டுமல்ல சாதாரணமாக ஒரு நாடகம் போடுவதென்றால் விளம்பரத்தில் நாடகத்தின் பெரைச்சொல்லி பின்னர் அதில் நடிக்கும் நடிகர்களின் பெயரைச்சொல்லி விளம்பரப்படுத்துவதுதான் வழைமை ஆனால் இவர்கள் நடிக்கும் நாடகங்களிற்கு டிங்கிரி சிவகுரு நாடகம் என்றாலே போதும் நாடகத்தின் பெயர் அது என்ன நாடகம் என்கிற கவலையெல்லாம் மக்களிற்கு தேவையில்லை அரங்கம் நிரம்பிவிடும். இவர்களில் டிங்கிரி என்பவரது பெயர் அவரது பெயரல்ல பட்டப்பெயர்தான். ஆனாலும் அவரை டிங்கிரி என்றால்தான் எல்லலோரிற்கும் தெரியும் அவரது சொந்தப்பெயர் அனேகமானவர்களிற்கு தெரியாது. இவரது சொந்தப்பெயர்-கனகரத்தினம் ஆகும். இவர்கள் மேடைகளில் தமிழ் சினிமா பாடல்களை நகைச்சுவையா வசனங்களை மாற்றி பாடி நடிப்பார்கள்.

ஆனால் இவரிற்கு டிங்கிரி என்கிற பட்டப்பெயர் எப்படி வந்தது என்று எனக்கு தெரியாது.சிலவேளை இவர் டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே என்கிற திரைப்பட பாடலை பாடி நடித்தால் வந்திருக்கலாம்.டிங்கிரி அவர்கள் ஈழத்தில் தயாரிக்கப்பட்ட அனுராகம் படத்திலும்.இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பான ரத்தத்தின் ரத்தமே திரைப்படத்திலும் நடித்திருந்தார்.இவர் கொழும்பில் ஒருநாடகத்தில்நடித்துகொண்ட??ருந்தபோதே மாரடைப்பால் மரணமடைந்தார்.

இவர்கள் நடித்த நாடகத்தின் சிலபகுதிகளை நீங்களும் கீழே உள்ள இணைப்பில் கேட்டு மகிழுங்கள்.

http://www.eu-avalam.com/

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு டிங்கிரி சிவகுருவின் ஞாபகங்களை கொண்டு வந்ததற்கு உங்களுக்கு நன்றி. உண்மையில் அவர் ஒரு சிறந்த கலைஞன். அவரின் நாடகங்கள் பலவற்றை நான் எங்கள் ஊர் கோவில் திருவிழா மேடையில் கண்டிருக்கிறேன். இது 26 வருடங்களுக்கு முற்பட்ட கதை . உண்மையில் எங்கள் எழுத்தாளர்களை எங்கள் கலைஞர்களை நாம் இழந்து விட்டோம். அவரின் இயல்பான நகைச்சுவையுணர்வு அபரிதம். அந்த கலைஞனின் வெளிப்பாடுகளை அந்தக்காலத்தில் றைக்கோட் பண்ணி யாராவது வைத்திருப்பார்களோ தெரியாது. முந்தி சில ஓடியோ கசட்டுகள் என்னிடமிருந்தன. ஆனால் அவை இப்போ இல்லை கவலையாக உள்ளது.

அனஸ்

Edited by ANAS

  • தொடங்கியவர்

நான் இந்த இரட்டையர்களின் நாடகங்களை நேரில் பாத்தது கிடையாது ஒலிப்பதிவுகளில்தான் கேட்டிருக்கிறேன். அதுவும் வயித்தலை அடியெண்டு வைத்தியரிடம் போனதும் வைத்தியர் மருந்தை தந்திட்டு அடிக்கடி அடிச்சால் அரக்கி அரக்கி இருக்க சொன்னவர் என்கிற வசனம் நான் அடிக்கடி நினைச்சு சிரித்த வசனம். யுத்தத்தால் உறவுகள் உடைமைகள் மட்டுமல்ல பல கலைஞர்களின் படைப்பின் பதிவுகளையும் பறிகொடுத்து விட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் நடித்த நாடகத்தின் சிலபகுதிகளை நீங்களும் கீழே உள்ள இணைப்பில் கேட்டு மகிழுங்கள்.

http://www.eu-avalam.com/

வணக்கம் சாத்திரி அங்கிள்... :lol:

இது எந்த கால கட்டத்தில வந்த நாடகம்? நல்ல நகைச்சுவையாக உள்ளது. நேரம் கெட்ட நேரத்தில கேக்கிறதால சத்தமாக கேக்கேலாது அதனால முழுவதுமாக விளங்கவில்லை நாளைக்கு பகல் திரும்பவும் கேட்டுட்டு சொல்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாத்திரி அங்கிள்... :(

இது எந்த கால கட்டத்தில வந்த நாடகம்? நல்ல நகைச்சுவையாக உள்ளது. நேரம் கெட்ட நேரத்தில கேக்கிறதால சத்தமாக கேக்கேலாது அதனால முழுவதுமாக விளங்கவில்லை நாளைக்கு பகல் திரும்பவும் கேட்டுட்டு சொல்றேன்.

சபேஸ் இந்த நாடகம் 79 அல்லது எண்பதுகளில் வெளிவந்தது என நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

சபேஸ் இந்த நாடகம் 79 அல்லது எண்பதுகளில் வெளிவந்தது என நினைக்கிறேன்

நான் பிறக்க முன்னமே வெளிவந்திட்டுது அதுதான் அரைவாசி பகிடியள் விழங்க இல்லை. :lol::wub: ஆனாலும் அந்த காலத்திலையே நல்லாதான் சுண்டல் சீ கடலை போட்டிருக்கினம் நைலோன் சாறியளை பற்றியெல்லாம் எடுத்து விட்டிருக்கினம். நல்ல காலம் அவையள் இந்த காலத்தில இல்லை.

உண்மையா நீங்க பிறக்கல்யா...(நேக்கு தெரியாம போச்சே :D )...அப்ப அந்த காலத்திலை கூட சுண்டல் அண்ணா மாதிரியான ஆட்கள் இருந்து இருக்கீனம்.. :) (அப்ப எம்.எஸ்.என்)...மாதிரி என்ன இருந்திருக்கும் மாமோய் :wub: ...சாத்திரி அங்கிள் எப்படி பொண்ணுக கூட எல்லாம் கடலை போட்டிருப்பார் நேக்கு இது பெரிய டவுட்டா இருக்கு... :( (இதை ஒருக்கா கிளியர் பண்ணி விடுங்கோ சாத்திரி அங்கிள் :lol: )...அப்படியே சபேஷ் மாமா பொண்ணுக கூட எப்படி கடலை போட்டவர் என்று சொல்லுங்கோ... :(

சாத்திரி அங்கிள் நாடகம் நன்னா தான் இருக்கு..(ஆனா சில பகிடிகள் சிரிக்க முடியல்ல :D )

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அற்புதமான எம் தாயகக் கலைஞர்களை நினைவ+ட்டிய நண்பர்களுக்கு நன்றி. ஈழத்தில் தரமான நகைச்சுவையை மக்களுக்கு வழங்கிய இவர்கள் போற்றப்பட வேண்டிய கலைஞர்களே!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையா நீங்க பிறக்கல்யா...(நேக்கு தெரியாம போச்சே :D )...

இல்லை அதுக்கும் 5 - 6 வருடம் பின்னர் தான் பிறந்தனான். அட நம்புங்கப்பா :) ..... சாந்தி வரக்கு முன்னம் நான் எஸ்கேப். :D

Edited by Sabesh

இல்லை அதுக்கும் 5 - 6 வருடம் பின்னர் தான் பிறந்தனான். அட நம்புங்கப்பா :) ..... சாந்தி வரக்கு முன்னம் நான் எஸ்கேப். :D

நிசமாவா மாமா...(என்னால நம்மமுடியாம இருக்கு :D )...என்னதிற்கு சாந்தி அக்காவிட்ட கேட்போம்...(சாந்தி அக்கா சபேஷ் மாமா சொல்லுறது உண்மையோ :lol: )...

அப்ப நான் வரட்டா!!

டிங்கிரி.சிவகுரு

புராண இதிகாச நாடகங்களையே பார்த்து வாளும்.வேலும்.விழியும் .கண்ணாளா.மன்னா.மந்திரி என்று பழக்கப்பட்டுபோயிருந்த மக்களிற்கு வித்தியாசமான அதுவும் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை முளுக்க முளுக்க நகைச்சுவையாக இருவர் மட்டுமே மேயில் தோன்றி நடித்த இரட்டையர்கள்தான் டிங்கிரி மற்றும் சிவகுரு என்பவர்கள்.இவர்களின் வருகை சமூக மற்றும் நகைச்சுவை நாடகங்களிற்கென மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது மட்டுமல்ல. பினர் பல நகைச்சுவை நடிகர்கள் தோன்றுவதற்கும் காரணமாக இருந்தது என்றும் சொல்லலாம்.

அது மட்டுமல்ல சாதாரணமாக ஒரு நாடகம் போடுவதென்றால் விளம்பரத்தில் நாடகத்தின் பெரைச்சொல்லி பின்னர் அதில் நடிக்கும் நடிகர்களின் பெயரைச்சொல்லி விளம்பரப்படுத்துவதுதான் வழைமை ஆனால் இவர்கள் நடிக்கும் நாடகங்களிற்கு டிங்கிரி சிவகுரு நாடகம் என்றாலே போதும் நாடகத்தின் பெயர் அது என்ன நாடகம் என்கிற கவலையெல்லாம் மக்களிற்கு தேவையில்லை அரங்கம் நிரம்பிவிடும். இவர்களில் டிங்கிரி என்பவரது பெயர் அவரது பெயரல்ல பட்டப்பெயர்தான். ஆனாலும் அவரை டிங்கிரி என்றால்தான் எல்லலோரிற்கும் தெரியும் அவரது சொந்தப்பெயர் அனேகமானவர்களிற்கு தெரியாது. இவரது சொந்தப்பெயர்-கனகரத்தினம் ஆகும். இவர்கள் மேடைகளில் தமிழ் சினிமா பாடல்களை நகைச்சுவையா வசனங்களை மாற்றி பாடி நடிப்பார்கள்.

ஆனால் இவரிற்கு டிங்கிரி என்கிற பட்டப்பெயர் எப்படி வந்தது என்று எனக்கு தெரியாது.சிலவேளை இவர் டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே என்கிற திரைப்பட பாடலை பாடி நடித்தால் வந்திருக்கலாம்.டிங்கிரி அவர்கள் ஈழத்தில் தயாரிக்கப்பட்ட அனுராகம் படத்திலும்.இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பான ரத்தத்தின் ரத்தமே திரைப்படத்திலும் நடித்திருந்தார்.இவர் கொழும்பில் ஒருநாடகத்தில்நடித்துகொண்ட??ருந்தபோதே மாரடைப்பால் மரணமடைந்தார்.

இவர்கள் நடித்த நாடகத்தின் சிலபகுதிகளை நீங்களும் கீழே உள்ள இணைப்பில் கேட்டு மகிழுங்கள்.

http://www.eu-avalam.com/

சாத்திரி அவர்களே.. திருவிளையாடல் படத்தில் நக்கீரர் ஒரு வசனம் சொல்வார். - "நல்ல பாடலுக்கு பரிசு கிடைத்தால் பெருமைதான். ஆனால் தவறான பாடலுக்கு பாண்டியன் சபையில் பரிசு கிடைத்ததென்று அவப்பெயர் வரக்கூடாதென்று'

அதே நோக்கில் சில திருத்தங்கள்.,

டிங்கிரி கனகரத்தினம் - சிவகுரு இருவரும் ஆரம்பகாலத்தில் "மன்னா, மந்திரியே" நாடகங்களில், இடையிடையே வரும் பபூன்களைப்போல நடித்துக் கொண்டிருந்தவர்கள்தான். இவர்களுக்கு பல காலத்துக்கு முன்னரே சக்கடத்தார் ராசரத்தினம்(அச்சுவேலி) தனது சகபாடி சிசு நாகேந்திரா (தற்போது அவுஸ்திரேலியவில் இருப்பவர்) உடன் பலமேடைகளில் கலக்கிக்கொண்டிருந்தார்.

ஒரு பிரபல கலைஞர், டிங்கிரி சிவகுருவை இராச நாடகங்களை விட்டு இரட்டையராக நடிக்கச்சொல்லியபின்னர் அவர்கள் சோடியாக மேடைகளில் தோன்றி அசத்தினார்கள்.

டிங்கிரியும், சிவகுருவும் நடித்த இலங்கைப்படம் " வாடைக்காற்று'. அனுராகம் அல்ல.

இரத்ததின் இரத்தமே படத்தில், நாகேஷின் மைத்துனராக டிங்கிரி மாத்திரம் நடித்தார்.

டிங்கிரி வவுனியா நகரின் எல்லையில் ஒரு கராஜ் வைத்திருந்தவர். அதானால் சிங்களச்சூழலில் டிங்கிரி என்று பெயர் வந்ததோ தெரியாது.

மற்றது டிங்கிரி கனகரத்தினம் மேடையில் நிகழ்ச்சி செய்யும் பொழுதே மயங்கிவிழுந்தது தையிட்டி என்ற இடத்தில். உடனே காங்கேசந்துறை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மரணமானார்.

பாமர மக்களை கவரும் அவர்களது நகைச்சுவையில் சற்று அருவருப்பானது நீங்கள் இணைத்த " அடிக்கடி...அரக்கி " பகுதி.

வேறு மிகச்சுவையான பகுதிகள் அவர்கள் இறந்தபின்னர் வெளி வந்த சீடியில் இருக்கின்றது. இணையுங்கள்.

எது எவ்வாறு இருப்பினும் உங்கள் உணர்வுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

காலஞ் சென்ற டிங்கிரி அவர்கள் எனது வீட்டிலிருந்து சற்று தொலைவில் தான் வசித்து வந்தார். சிறுவயதில் அவரின் பிள்ளைகளைகளும் நான் படித்த பாடசாலையிலே படித்ததாக ஞாபகம். அவரின் நாடகங்களில் பலவற்றைப் நானும் நண்பர்களும் பலமுறை பார்த்து மகிழ்ந்திருக்கிறோம். எனது பள்ளிக் காலங்களில் தெருவில் அவரைச் தற்செயலாக சந்திக்க நேர்ந்தபோதெல்லாம் பகிடியாக ஏதோ ஒன்று சொல்லி எங்களைச் சிரிக்கவைப்பார். எனக்குத் தெரிந்தளவில் ஆரம்பத்தில் அவர் யாழில் உள்ள கராஜ் ஒன்றில் ரிங்கர் (Tinker) ஆக வேலை பார்ந்து வந்தார். அதனால் தான் அவருக்கு டிங்கிரி என்ற பட்டப்பெயர் நிலைத்து விட்டது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவரைப் பற்றிய பல இனிய சம்பவங்கள் இப்போது எனக்கு நினைவிலில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் பொன்னியின் செல்வன் மற்றும் வணங்காமுடி. நான் முதலில் சொன்னதைப்போல எனக்கு அவர்களை நெரடியாகத் தெரியாது தகவல்களை திரட்டுவதற்காக பழைய நாகக்கலைஞர் ஒருவரின் உதவியை நாடியபொழுது அவர் தந்த தகவல்களே அவை எனவே தவறுகளைதிருத்திக் கொள்கிறேன். நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டிங்கிரி சிவகுருவின் நாடகத்தை பலமுறை பார்த்திருக்கின்றேன்.

இவரின் நாடகங்கள் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் என்றுமே சலிப்பு தட்டாதவை.

நன்றி சாத்திரியார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.