Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளவத்தை குண்டு : இலக்கு மகிந்தவின் மகனா?

Featured Replies

ரொக்ஸிக்கு அண்மையில் குண்டு வெடித்ததாக நண்பரினூடு அறிந்தேன் உண்மையா

ஆம் ரொக்ஸி தியேட்டர் அருகில் பாரிய சத்தத்துடன் வெடித்துள்ளது. மூன்று சிறுவர்களுக்கு காயம் என்று மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் கிடைக்ப் பெறவில்லை.

ஜானா

விகாரலேனுக்கு அருகில் புதர் ஒன்றிலிருந்து குண்டு வெடித்துள்ளதாகவும், வெடிப்பில் ஒருவர் கொல்லபட்டதாகவும், நான்கு பேர் காயமடைந்துள்ளனர் எனவும், காயமடைந்தவர் நால்வரும் பாடசாலைச் சிறுவர் எனவும் அதில் ஒரு சிறுவனின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வெள்ளவத்தைப் பொலிஸ் நிலையப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.. காயப்பட்டவர்கள் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.

ஜானா

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படுகாயமடைந்த சிறுவனும் இறந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ரொலேக்ஸ் என்ற உணவுக்கடைக்கு எதிர்பக்கமாக குண்டு வெடித்திருக்கின்றது போலுள்ளது. காலி போகும் வீதிப்பக்கமாக. தமிழ் மக்கள் அதிகமாக நடமாடும் பிரதேசம்.

இதற்கு அருகில் தான், யாழ்பாணத்துக்கான பஸ் சேவை நடத்திய பாலா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

சிறிலங்கா தலைநகர் கொழும்பு வெள்ளவத்தையில் இன்று திங்கட்கிழமை காலை 6.55 மணியளவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளவத்தை குண்டுதாக்குதலில் ஒருவர் பலி 6 பேர் காயம்

3/10/2008 9:54:09 AM

வீரகேசரி இணையம் - கொழும்பு வெள்ளவத்தை விஹார மாவத்தை அருகே இன்று திங்கட்கிழமை காலை 06.50 மணியளவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 6 பேர் காயமடைந்துள்ளனர்.

வெள்ளவத்தை ரொக்ஸி திரையரங்குக்கு முன்னாலுள்ள காலி வீதியின் நடுப்பகுதியில் பூங்கன்றுகளுக்கு இடையில் குண்டு மறைத்து வைக்கப்பட்ட குண்டே வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இக் குண்டுவெடிப்பை அடுத்து அப்பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினரும், பொலிஸாரும் , படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இக் குண்டு தாக்குதலையடுத்து காலி வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பொலிஸார் இவ் வீதியூடாக பயணிக்கும் வாகனங்கள் அனைத்தும் கடற்கரை வீதியூடாக திசைதிருப்பி விடப்பட்டுகின்றன.

எனினும் வீதியில் பெரும் வாகன நெரிசல் காணப்படுவதுடன் குண்டுவெடித்த பகுதிக்குச் செல்ல படையினர் உடனடியாக அனுமதி வழங்கவில்லை. இக்குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் 6 பேர் காயமடைத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இக் குண்டு தாக்குதலில் கயாமடைந்த 6 பேரும் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 4 பேர் பாடசலை மாணவர்களாவர்.காயமடைந்தவர்கள

  • கருத்துக்கள உறவுகள்

தெகிவளையில் பஸ் ஒன்றில் குண்டு கண்டு பிடிக்கப்பட்டதாகச் செய்தி வந்தது. உண்மையா

கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் நேற்றுக்காலை வெடித்த குண்டு அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் புதல்வனை இலக்கு வைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவரும் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றார்கள்.

அரசுத் தலைவரின் மகன் இந்தப்பாதையூடாகவே வழமையாகப் பாடசாலைக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இல்லையெனில் இப்பகுதியில் வழமையாக ரோந்து சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளும் படையினரை இலக்காக வைத்து இந்தக் குண்டு வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றார்கள்.

இது ஒரு கிளேமோர் குண்டெனவும், இரண்டு கிலோ எடையுள்ள இக்குண்டை தொலைதூர இயக்கி மூலம் செயற்படக் கூடிய முறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணைகளை மேற்கொண்டுவரும் குண்டு செயலிழக்கவைக்கும் பிரிவினர் தெரிவித்தனர்.

இருந்தபோதிலும், வீதியால் சென்ற ஒருவர் குண்டுப் பொதியைக் கண்டு அதனைப் பிரிப்பதற்கு முயற்சித்த போது அது வெடித்துச் சிதறியுள்ளது. பிச்சைக்காரர் ஒருவரே இதனைத் திறப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக ஐந்து தமிழர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்: http://www.webeelam.com

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சைக்காரங்களுக்கு ஏன் இந்த பொதி பிரிக்கின்ற வேலை.

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சைக்காரங்களுக்கு ஏன் இந்த பொதி பிரிக்கின்ற வேலை.

ஏதும் காசு பணம் இருக்கும் எண்டுதான்

இந்தக்குண்டை வைத்ததே இலங்கை இராணுவத்தின் ஒரு பிரிவாம். யுனிசெப்பில் இருந்து யாரோ வருகிறார்கள் என்பதால் அனுதாபத்தைப்பெறும்நோக்கில் வைக்கப்பட்டதாம்.

பிச்சைக்காரர் ஒருவரே இதனைத் திறப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக ஐந்து தமிழர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

பாவம் அந்த பிச்சைகாரர்... :D (சரியான கவலையா இருக்கு நேக்கு :D )...எவ்வளவு ஆசையா போய் அந்த பார்சலை திறந்து இருப்பார்... :( (கொழும்பில் உள்ள அனைத்து பிச்சைகாரர்களும் பாதுகாப்பா இருக்கும்படி நான் கேட்டு கொள்கிறேன்) :o ...ரொம்ப பாவம் பெகர்ஸ்...(இப்படியும் அவை கஷ்டபடவேண்டுமா என்ன :D )...

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.