Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு தேர்தல் - பிள்ளையான் குழு அமோக வெற்றி.

Featured Replies

இங்கு நான் பிரதானமாகக் குறிப்பிட்ட விடயம் முஸ்லிம் காங்கிரஸ் திருகுதாளங்களின் மூலம் வென்றது என்ற தவறான கருத்தையே. அதைப் பற்றி நீங்கள் எதுவுமே கூறாமல் முஸ்லிம் காங்கிரசின் அரசியல் சிந்தாந்தத்தைப் பற்றி வாதிக்கிறீர்கள்.

கிழக்கில் இம்முறை தேர்தலில் போட்டியிட்ட முஸ்லிம் கட்சிகளிடையே அமீர் அலி உள்ளிட்டவர்களின் திருகுதாளங்களுக்கிடையிலும் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதைத் தவறாகக் குறிப்பிட்டீர்கள் என்பதையே சுட்டிக் காட்டினேன்.

  • Replies 71
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நான் பிரதானமாகக் குறிப்பிட்ட விடயம் முஸ்லிம் காங்கிரஸ் திருகுதாளங்களின் மூலம் வென்றது என்ற தவறான கருத்தையே. அதைப் பற்றி நீங்கள் எதுவுமே கூறாமல் முஸ்லிம் காங்கிரசின் அரசியல் சிந்தாந்தத்தைப் பற்றி வாதிக்கிறீர்கள்.

கிழக்கில் இம்முறை தேர்தலில் போட்டியிட்ட முஸ்லிம் கட்சிகளிடையே அமீர் அலி உள்ளிட்டவர்களின் திருகுதாளங்களுக்கிடையிலும் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதைத் தவறாகக் குறிப்பிட்டீர்கள் என்பதையே சுட்டிக் காட்டினேன்.

எனக்கு மட்டக்களப்பில் இருந்து தகவல் கிடைத்தது. முஸ்லீம் காங்கிரசும் கள்ள வோட்டுப் போட்டது என்பதற்கு. பிள்ளையான் குழு போட்டது என்பதை எந்த ஆதாரமும் இன்றி ஏற்றுக் கொள்ளும் போது அதை மட்டும் ஏற்றுக் கொள்ள ஏன் உங்களுக்கு முடியல்ல. :wub:

We won 82% of the Muslim vote - SLMC

In an election which saw 50% of voter turn out we secured 82% of the Muslim vote, SLMC which returned seven members at yesterday’s local polls in Batticaloa, said today.

We have 10 in Eravurpattu PS!

TMVP members are seen here checking the election results at Hindu College, Batticaloa where the main vote counting centre is situated.

- டெயிலிமிரர்.

இந்த கூற்று ஒன்றே போதும் முஸ்லீம் காங்கிரஸ் என்ன செய்திருக்கும் என்பதற்கும் மட்டக்களப்பில் இருந்து வந்த தகவலை ஏற்றுக் கொள்ளவும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நான் பிரதானமாகக் குறிப்பிட்ட விடயம் முஸ்லிம் காங்கிரஸ் திருகுதாளங்களின் மூலம் வென்றது என்ற தவறான கருத்தையே. அதைப் பற்றி நீங்கள் எதுவுமே கூறாமல் முஸ்லிம் காங்கிரசின் அரசியல் சிந்தாந்தத்தைப் பற்றி வாதிக்கிறீர்கள்.

கிழக்கில் இம்முறை தேர்தலில் போட்டியிட்ட முஸ்லிம் கட்சிகளிடையே அமீர் அலி உள்ளிட்டவர்களின் திருகுதாளங்களுக்கிடையிலும் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதைத் தவறாகக் குறிப்பிட்டீர்கள் என்பதையே சுட்டிக் காட்டினேன்.

முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் உரிமையை தாங்கள் அறிந்தவகையில் வென்றெடுக்க உருவாக்கப் பட்ட கட்சசி. அது வடகிழக்கு இணைப்பு முஸ்லிம்களுக்கு பாதகமாய் அமையலாம் என்கிறதற்க்கு இனத்துவ புள்ளிவிபரங்களையும் உடுத்த உடையோடு வடபகுதி முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டதையுமே ஆதாரப் படுத்தியது. வடப்குதி முஸ்லிம் வெளியேற்றம் தவறென தமிழர் தேசியத் தலைமை மன்னிப்புக் கோரிய பின்னர் மீழ்வரவு வெற்றிபெற வகை செய்யப்படும் என்றபின்னர் மீழாய்வுக்கான சூழல் உருவானது. இது நமது தலைவர்கள் எடுத்த சரியான முடிவாகும். இவ்விடயங்களில் தோழர் அஸ்ரப் இருதபோதே அவருடனும் நமது போராளிகளுடனும் அளவளாவி இருக்கிறேன். நண்பர்கள் ஜனாப் றவ் கக்கீமுடனும், பசீர் சேகுதாவுத்துடனும் போராளித் தோழர்களுடனும் தொடர்ந்தும் விவாதிக்கிற விடயங்கள்தான் இவை. அவர்கள் முஸ்லிம் நிலை பாடு அவர்கள் சார்பில் சரியானதே. ஈழத்தாயகத்தின் பெரும்பாண்மை இனம் என்கிற வகையில் நாம் சிங்களவர் போல யோசிக்கக் கூடாது.

என்னைப் பொறுத்துப் புலம் என்பது பேரளவில்தான். நான் வருடத்தின் பெரும்பகுதியை வன்னியிலும் கிழக்கிலும் எனது முஸ்லிம் தோழர்களுடனுமே செலவு செய்கிறவன். நோர்வேயில் வாழ்கிறது குறைவு. கடந்த வருடம் பாதுகாப்புக் காரணங்களால் எனது போராளித் தோழர்களும் முஸ்லிம் நண்பர்களும் வர வேண்டாம் என்று சொல்லிலிவிட்டார்கள்.

கருணாவின் பிரிவுக்குப் பின்னர் இப்போ நிலமையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பிள்ளையான் குழுவை அரசு முஸ்லிம்களின் நலன்களுக்கெதிராக பயன்படுத்துவதால் வடகிழக்குப் பிரிக்கப் பட்டபோது முஸ்லிம் தலமை அதனை வரவேற்க்கவில்லை. எனது நண்பன் ஜனாப் றவ் கக்கீமும் நுவா தலைவர் அதாவுல்லாவும் இணைந்த வடகிழக்குள் சரிநிகர் சமத்துவம் பற்றிய ஒரு தீர்வை வரவேற்று கோடி காட்டியிருக்கிரார்கள். சிங்களவர் தமிழர் சார்பில் சொல்ல்கிற குற்றச் சாட்டுக்களை நாமும் முஸ்லிம்கள் சார்பில் வைக்கக் கூடாது.

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாற்றம் எப்போது ஏற்பட்டது. நான் அவரோடு பேசினேன் இவரோடு பேசினேன் என்றெல்லாம் பலர் இங்கு வந்து அவிச்சிட்டுப் போயிட்டினம். மீண்டும்.. ஏமாற...

முஸ்லீம்களின் உரிமைகள் தொடர்பில் கடந்த பேச்சு வார்த்தை காலத்தில் நேரடியாகவே சொல்லப்பட்டிருக்கிறது.

முஸ்லீம்களின் பிரதிநிதிகளாக முஸ்லீம் காங்கிரஸை மட்டும் சந்திக்கவில்லை. இதர தரப்புக்களையும் சந்தித்தனர்.

பேச்சு மேடையில் முஸ்லீம் காங்கிரஸ் பிரநிதித்துவம் செய்ய வேண்டும் என்பது வலியுறுத்தப்படவில்லை. முஸ்லீம் பிரதிநிதி தான் அமர்த்தப்பட்டார்.

இவற்றுக்கிடையில் பலத்த வேறுபாடு உண்டு. முஸ்லீம் காங்கிரஸ் தனது கடந்த காலக் கொள்கையை மாற்றியதாகக் கூறுவது வெளிப்படையில் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அதன் செயற்பாடுகள் ஒரு தெளிவானதாக உறுதியானதாக இருந்ததில்லை..! அது தனது அரசியல் நலனுக்கு ஏற்ப தன்னை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் ஒருநிலையற்ற கட்சி..!

இந்த நிலையில் இருந்து அது உண்மையில் மாறி வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகக் கோட்பாட்டை ஏற்பதாக சொல்லின் அதன் கீழ் முஸ்லீம் மக்கள் சமத்துவத்துடன் வாழ்வதை தாங்கள் அங்கீகரிப்பதாக சொல்லி இருப்பின் அதை நிச்சயம் வரவேற்கலாம். அப்படிச் சொன்னதாக எங்கும் எந்தக் குறிப்பும் இல்லை..! :wub:

Edited by nedukkalapoovan

''எனக்கு மட்டக்களப்பில் இருந்து தகவல் கிடைத்தது. முஸ்லீம் காங்கிரசும் கள்ள வோட்டுப் போட்டது என்பதற்கு. பிள்ளையான் குழு போட்டது என்பதை எந்த ஆதாரமும் இன்றி ஏற்றுக் கொள்ளும் போது அதை மட்டும் ஏற்றுக் கொள்ள ஏன் உங்களுக்கு முடியல்ல''

நெடுக்காலபோவான் அவர்களே

ஒரு தேர்தலில் திருகுதாளம் செய்வதற்கான வசதி யாருக்கு அதிகம் இருக்கும். அரச ஆதரவு கொண்ட குழுக்களுக்குத் தானே. அந்த வகையில் பிள்ளையானுக்காக காவல்துறை தொடக்கம் திருகுதாளங்களுக்கு உதவி செய்தது என்பது அனைவரும் அறிந்ததே.

அதே போல முஸ்லிம் பிரதேசங்களில் அரச அமைச்சராக இருக்கின்ற அமீர் அலியும் அதாவுல்லாவும் கட்டி வளர்க்கின்ற ஆயுதக் குழுவும் கள்ள வாக்குகளைப் போட்ட அதே வேளை முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

உங்களுக்கு மட்டக்களப்பில் இருந்து தகவல் கிடைத்திருக்கலாம். நான் கிழக்குப் பல்கலைக் ககழகத்தில் படித்தவன் தற்போதும் அந்தப் பல்கலைக்கழகத்துடனுமு; விரிவுலையாளர்களுடனும் மாணவர்களுடனும் தொடர்ந்து தொடர்புகளைப் பேணி வருபவன். அது மட்டுமன்றி என்னுடைய குடும்பத்தவர்கள் ஏறாவூர்ப் பகுதியிலேயே வாழ்கின்றனர். என்னுடைய தம்பிமார் கூட பிள்ளையான் குழுவினரின் அச்சுறுத்தல் காரணமாகச் சென்று சுயேச்சைக் குழு ஒன்றிற்கு வாக்களித்தவர்கள். எனவே நானுமு; களத் தகவல்களைக் கொண்டே கருத்தைப் பதிந்தேன்.

Edited by kaviya

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மட்டு நகரில் உறவுகள் உள்ளனர். அவர்களுடன் தொலைபேசியில் நேரடியாகவே பேசினேன்.

பிள்ளையான் குழு மோசடிகள் செய்ததில் இருந்து வாழைச்சேனை ஏறாவூர் என்று முஸ்லீம் காங்கிரசும் பிள்ளையான் குழுவினரும் இழுபறிப்பட்டது வரை சொன்னார்கள்.

போட்டிக்கு போட்டியா கள்ள வாக்குப் போடச் சென்ற சில முஸ்லீம் காங்கிரஸ் இளைஞர்களை பிள்ளையான் குழு விரட்டி சென்றதாகவும் அதை அடுத்து முஸ்லீம் காங்கிரஸ் ஐதேக வுடன் தொடர்பு கொண்டு.. அவர்களின் ஆதரவு பொலிஸ் மூலம் முறைப்பாட்டைச் செய்ததாகவும் சொன்னார்கள். :wub:

Edited by nedukkalapoovan

''முஸ்லீம் காங்கிரஸ் பிள்ளையான் குழு தலையெடுப்பதால் தமிழீழம் கிடைக்காமல் போய்விடப் போகிறது என்ற அக்கறையில் பிள்ளையான் குழுவை எதிர்க்கவோ.. அல்லது அதன் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டவோ முன்வரவில்லை. பிள்ளையான் குழுவின் செயற்பாடுகள் தங்களின் பிரதேச சபை இடங்களையும் சேர்த்து திருடிடப் போகுதே என்ற ஆதங்கமே இதற்குக் காரணம்''

முஸ்லிம் காங்கிரஸ் எதற்காக பிள்ளையான் குழுவினரின் அடாவடித் தனங்களை வெளிக்கொணர்ந்து என்பதை விட பிள்ளையான் குழுவினரின் அடாவடித்தனங்களை வெளிக்கொண்டுவந்த ஒரே முஸ்லிம் கட்சி முஸ்லிம் காங்கிரஸ் தான்.

ஏனைய முஸ்லிம் தரப்புக்களான பேரியல் அஸ்ரப்பின் குழுவோ அல்லது அதாவுல்லாவின் குழுவோ அல்லது அமீர் அலி உள்ளிட்டவர்களோ இதைச் செய்யவில்லை. மாறாக அதாவுல்லா அம்பாறையில் பிள்ளையான் குழுவுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அடாவடித்தனங்களில் இறங்கியுள்ளார் என்பதே உண்மை

''எனக்கு மட்டு நகரில் உறவுகள் உள்ளனர். அவர்களுடன் தொலைபேசியில் நேரடியாகவே பேசினேன்.

பிள்ளையான் குழு மோசடிகள் செய்ததில் இருந்து வாழைச்சேனை ஏறாவூர் என்று முஸ்லீம் காங்கிரசும் பிள்ளையான் குழுவினரும் இழுபறிப்பட்டது வரை சொன்னார்கள்.

போட்டிக்கு போட்டியா கள்ள வாக்குப் போடச் சென்ற சில முஸ்லீம் காங்கிரஸ் இளைஞர்களை பிள்ளையான் குழு விரட்டி சென்றதாகவும் அதை அடுத்து முஸ்லீம் காங்கிரஸ் ஐதேக வுடன் தொடர்பு கொண்டு.. அவர்களின் ஆதரவு பொலிஸ் மூலம் முறைப்பாட்டைச் செய்ததாகவும் சொன்னார்கள்''

நீங்கள் மிகுந்த அரசியல் அறிவு உள்ளவர் என்ற வகையில் மீண்டும் ஒரே கேள்வியை திரும்பத் திரும்பக் கேட்கிறேன்.

முஸ்லிம் தரப்பில் அதிகம் திருகுதாளம் செய்யும் சந்தர்ப்பம் அரச ஆதரவு பெற்ற அமீர் அலி அதாவுல்லா ஆகியோருக்கு அதிகம் இரு;நதிருக்குமா அல்லது முஸ்லிம் காங்கிரசிற்கு அதிகம் இருந்திருக்குமா?

உங்களுடைய உறவுகள் இதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையா?

Edited by kaviya

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

''முஸ்லீம் காங்கிரஸ் பிள்ளையான் குழு தலையெடுப்பதால் தமிழீழம் கிடைக்காமல் போய்விடப் போகிறது என்ற அக்கறையில் பிள்ளையான் குழுவை எதிர்க்கவோ.. அல்லது அதன் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டவோ முன்வரவில்லை. பிள்ளையான் குழுவின் செயற்பாடுகள் தங்களின் பிரதேச சபை இடங்களையும் சேர்த்து திருடிடப் போகுதே என்ற ஆதங்கமே இதற்குக் காரணம்''

முஸ்லிம் காங்கிரஸ் எதற்காக பிள்ளையான் குழுவினரின் அடாவடித் தனங்களை வெளிக்கொணர்ந்து என்பதை விட பிள்ளையான் குழுவினரின் அடாவடித்தனங்களை வெளிக்கொண்டுவந்த ஒரே முஸ்லிம் கட்சி முஸ்லிம் காங்கிரஸ் தான்.

ஏனைய முஸ்லிம் தரப்புக்களான பேரியல் அஸ்ரப்பின் குழுவோ அல்லது அதாவுல்லாவின் குழுவோ அல்லது அமீர் அலி உள்ளிட்டவர்களோ இதைச் செய்யவில்லை. மாறாக அதாவுல்லா அம்பாறையில் பிள்ளையான் குழுவுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அடாவடித்தனங்களில் இறங்கியுள்ளார் என்பதே உண்மை

அவர்கள் (நுவாவைச் சேர்ந்தோர்) அரசோடு ஒட்டிக் கொண்டிருப்பதால் பிள்ளையான் குழுவுடன் இணைந்து அரசை எதிர்த்த முஸ்லீம் காங்கிரசை வஞ்சித்தார்கள். இதே தேர்தலில்.. முஸ்லீம் காங்கிரஸ் பாதீட்டையோடு அரசை விட்டு வெளியேறி இருக்காவிட்டால்.. அதுவும் பிள்ளையான் குழு மீது எந்த குற்றமும் சுமத்தி இருக்காது. ரகசியமாப் பேசி தங்களுக்குள் இணக்கப்பட்டிருப்பர்..! இது ஒன்றும் சிதம்பர சங்கரமில்லையே. நுவா - முஸ்லீம் காங்கிரஸ் சண்டை கொஞ்சம் வெளி வந்திருக்கும்..! :lol::wub:

Edited by nedukkalapoovan

நீங்கள் மிகுந்த அரசியல் அறிவு உள்ளவர் என்ற வகையில் மீண்டும் ஒரே கேள்வியை திரும்பத் திரும்பக் கேட்கிறேன்.

முஸ்லிம் தரப்பில் அதிகம் திருகுதாளம் செய்யும் சந்தர்ப்பம் அரச ஆதரவு பெற்ற அமீர் அலி அதாவுல்லா ஆகியோருக்கு அதிகம் இரு;நதிருக்குமா அல்லது முஸ்லிம் காங்கிரசிற்கு அதிகம் இருந்திருக்குமா?

உங்களுடைய உறவுகள் இதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையா?

இதற்குப் பதிலில்லையே? :wub:

இதற்குப் பதிலில்லையே? :lol:

கள்ளம் செய்யப் போட்டி நிலவும் இடத்தில் எவன் எத்தனை வீதம் செய்தான் என்று பார்த்திட்டு இருக்கிறதல்ல எமது வேலை. செய்தது எல்லாரும் தான். அங்க சுத்தவாளி என்று எவரும் இல்லை. இந்தத் தேர்தலே ஒரு பிராடு தேர்தல் என்று சொல்லியிருக்கு ஐ தே கட்சி. ஆனா முஸ்லீம் காங்கிரஸ் தான் 82% வாக்கைப் பெற்றன் என்றுது... உதுகளில எத்தனை முரண்பாடுகள். என்ன நடத்ததென்று நுணுக்கமாய் ஆராய எங்கள் உறவுகளின் உயிர்களுக்கு நீங்கள் உத்தரவாதம் செய்து தாருங்களன். செய்து சொல்லுறம்..! :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

''எனக்கு மட்டக்களப்பில் இருந்து தகவல் கிடைத்தது. முஸ்லீம் காங்கிரசும் கள்ள வோட்டுப் போட்டது என்பதற்கு. பிள்ளையான் குழு போட்டது என்பதை எந்த ஆதாரமும் இன்றி ஏற்றுக் கொள்ளும் போது அதை மட்டும் ஏற்றுக் கொள்ள ஏன் உங்களுக்கு முடியல்ல''

நெடுக்காலபோவான் அவர்களே

ஒரு தேர்தலில் திருகுதாளம் செய்வதற்கான வசதி யாருக்கு அதிகம் இருக்கும். அரச ஆதரவு கொண்ட குழுக்களுக்குத் தானே. அந்த வகையில் பிள்ளையானுக்காக காவல்துறை தொடக்கம் திருகுதாளங்களுக்கு உதவி செய்தது என்பது அனைவரும் அறிந்ததே.

அதே போல முஸ்லிம் பிரதேசங்களில் அரச அமைச்சராக இருக்கின்ற அமீர் அலியும் அதாவுல்லாவும் கட்டி வளர்க்கின்ற ஆயுதக் குழுவும் கள்ள வாக்குகளைப் போட்ட அதே வேளை முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

உங்களுக்கு மட்டக்களப்பில் இருந்து தகவல் கிடைத்திருக்கலாம். நான் கிழக்குப் பல்கலைக் ககழகத்தில் படித்தவன் தற்போதும் அந்தப் பல்கலைக்கழகத்துடனுமு; விரிவுலையாளர்களுடனும் மாணவர்களுடனும் தொடர்ந்து தொடர்புகளைப் பேணி வருபவன். அது மட்டுமன்றி என்னுடைய குடும்பத்தவர்கள் ஏறாவூர்ப் பகுதியிலேயே வாழ்கின்றனர். என்னுடைய தம்பிமார் கூட பிள்ளையான் குழுவினரின் அச்சுறுத்தல் காரணமாகச் சென்று சுயேச்சைக் குழு ஒன்றிற்கு வாக்களித்தவர்கள். எனவே நானுமு; களத் தகவல்களைக் கொண்டே கருத்தைப் பதிந்தேன்.

காவியா, நீங்கள் கிழக்குப் பற்றிய தெளிவான அறிவோடு எழுததியதை வியந்தேன்.நீங்கள் கிழக்குப் பல்கலைக் களகம் மாணவராக இருந்தவரா. ஏறாவூர் என்றால் என்னைச் சந்திரதிருக்ககக்கூடும் (வ.ஐ.ச.ஜெயபாலன்) என நினைக்கிறேன். நான் 1996ம் ஆண்டு முழுவதும் ஏறாவூரிலும் மட்டக்களபிலும் படுவான்கரையிலும் தான் தங்கியிருந்தேன். அந்த நாட்களில் முஸ்லிம் மக்களது கோரிக்கையோடு பன்குடவெளியில் அமரர் யாழ்வேந்தனை முதலிலும் அமரர் அருள் வேந்தன் (சாள்ஸ்) பின்னரும் சந்தித்தை பதிவு செய்ய இருக்கிறேன். யாழ்வேந்தனும் பின்னர் தூயமணியும் (அற்புதன் மாஸ்டர்) என்மீதுகாட்டிய அன்பு என்னை பிரமிக்க வைத்தது. முளிம் மக்களின் கோரிக்கைகளோடு சென்றபோது அருள்வேந்தனுக்கும் எனக்கும் மிகவும் காரசாரமான விவாதம் ஏற்பட்டது. தூயமணியும் கூட இருந்தார். எனினும் விடுதலையே நோக்கமாக இருந்ததாலும் அணுகுமுறையில் மட்டுமே முரண்பட்டதாலும் இறுதியில் எல்லாம் நன்மையில் முடிந்தது. இதுபற்றி ஒரு நாவல் எழுத வேணும் என இருக்கிறேன். நிறைய முஸ்லிம் தமிழ் அன்பர்களை நேர்கண்டிருக்கிறேன். உங்களுக்கு என் நல் வாழ்த்துக்கள். கிழக்கு மாகாணத்தின் சமூக பொருளாதார அரசியல் தனித் தன்மைகளளையும் பொதுத் தன்மைகளையும் பற்றி நீங்கள் யாழ் மூலம் எங்களுக்கெல்லாம் கற்பிக்கவேண்டும்.

நல்வாழ்த்துக்கள் காவியா.

Edited by poet

''அவர்கள் (நுவாவைச் சேர்ந்தோர்) அரசோடு ஒட்டிக் கொண்டிருப்பதால் செய்தார்கள். இதே தேர்தலில்.. முஸ்லீம் காங்கிரஸ் பாதீட்டையோடு அரசை வெளியேறி இருக்காவிட்டால்.. அதுவும் பிள்ளையான் குழு மீது எந்த குற்றமும் சுமத்தி இருக்காது. ரகசியமாப் பேசி தங்களுக்குள் இணக்கப்பட்டிருப்பர்..! இது ஒன்றும் சிதம்பர சங்கரமில்லையே''

நீங்கள் வெளியேறியிரா விட்டால் அப்பிடியிருந்திருக்கும். இப்பிடியிருந்திருக்கும் என்று விவாதிக்கிறீர்கள்.

நான் நடந்ததை கூறுகிறேன். தேர்தல் மேடைகளிலும் கொழும்பில் நடந்த பத்திரிகையாளர் மாநாடுகளிலும் பிள்ளையான் குழுவின் அராஸகங்களை வெளிக்கொண்டுவந்தது முஸ்லிம் காங்கிரஸ் தான். ( அவர்கள் எதற்காக அதைச் செய்தார்கள் என்று மூக்குச் சாத்திரம் பார்க்கவில்லை ஆனால் செய்தார்கள்.) அவர்கள் செய்த பிரச்சாரத்தின் காரணமாகத் தான் கெஹெலிய றம்புக் வெல்லவைப் பேட்டி கண்ட பிபிசி சிங்கள சேவையினர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் மேற்படி கருத்துக்களை மேற்கோள் காட்டி பிள்ளையான குழு தொடர்பான கேள்விகளைக் கேட்டனர்.

வணக்கம் கவிஞரே,

உங்களுடைய கவிதைகளை வாசித்திருக்கிறேன்.

உண்மைதான் கிழக்கு மாகாணம் மிகவும் சிக்கலான பல பிரச்சினைகளைக் கொண்டது. முஸ்லிம் தமிழ் கிராமங்கள் மாறி மாறி அமைந்திருப்பதால் பூகோள ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பல சிக்கல்கள் இருக்கின்றன. ராஜதந்திர ரீதியாக அணுக வேண்டிய சமோயோசிதமாகத் தீர்க்க வேண்டிய பல பிரச்சினைகள் இருக்கின்றன. இவற்றை தமிழ் தலைமை புரிந்து கொண்டு அதற்கான காய் நகர்த்தல்களைச் செய்கிறது. ஆனால்...........................................

கள்ளம் செய்யப் போட்டி நிலவும் இடத்தில் எவன் எத்தனை வீதம் செய்தான் என்று பார்த்திட்டு இருக்கிறதல்ல எமது வேலை. செய்தது எல்லாரும் தான். அங்க சுத்தவாளி என்று எவரும் இல்லை. இந்தத் தேர்தலே ஒரு பிராடு தேர்தல் என்று சொல்லியிருக்கு ஐ தே கட்சி. ஆனா முஸ்லீம் காங்கிரஸ் தான் 82% வாக்கைப் பெற்றன் என்றுது... உதுகளில எத்தனை முரண்பாடுகள். என்ன நடத்ததென்று நுணுக்கமாய் ஆராய எங்கள் உறவுகளின் உயிர்களுக்கு நீங்கள் உத்தரவாதம் செய்து தாருங்களன். செய்து சொல்லுறம்..! :wub:

இதுவரையில் அழகாக விவாதித்துக் கொண்டிருந்தீர்களே. திடீரென்று ஏன் இந்த நையாண்டித்தனம்.

நீங்கள் நான் கேட்ட கேள்விக்கு விடையைக் கண்டுபிடிக்க உயிரைக் கொடுக்கத் தேவையில்லை. உங்கள் 'உறவுகளிடம்' தொலைபேசியிலே கேட்டாலே போதும்.

Edited by kaviya

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

''அவர்கள் (நுவாவைச் சேர்ந்தோர்) அரசோடு ஒட்டிக் கொண்டிருப்பதால் செய்தார்கள். இதே தேர்தலில்.. முஸ்லீம் காங்கிரஸ் பாதீட்டையோடு அரசை வெளியேறி இருக்காவிட்டால்.. அதுவும் பிள்ளையான் குழு மீது எந்த குற்றமும் சுமத்தி இருக்காது. ரகசியமாப் பேசி தங்களுக்குள் இணக்கப்பட்டிருப்பர்..! இது ஒன்றும் சிதம்பர சங்கரமில்லையே''

நீங்கள் வெளியேறியிரா விட்டால் அப்பிடியிருந்திருக்கும். இப்பிடியிருந்திருக்கும் என்று விவாதிக்கிறீர்கள்.

நான் நடந்ததை கூறுகிறேன். தேர்தல் மேடைகளிலும் கொழும்பில் நடந்த பத்திரிகையாளர் மாநாடுகளிலும் பிள்ளையான் குழுவின் அராஸகங்களை வெளிக்கொண்டுவந்தது முஸ்லிம் காங்கிரஸ் தான். ( அவர்கள் எதற்காக அதைச் செய்தார்கள் என்று மூக்குச் சாத்திரம் பார்க்கவில்லை ஆனால் செய்தார்கள்.) அவர்கள் செய்த பிரச்சாரத்தின் காரணமாகத் தான் கெஹெலிய றம்புக் வெல்லவைப் பேட்டி கண்ட பிபிசி சிங்கள சேவையினர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் மேற்படி கருத்துக்களை மேற்கோள் காட்டி பிள்ளையான குழு தொடர்பான கேள்விகளைக் கேட்டனர்.

இதனால் விளைந்த நன்மை என்ன. பிள்ளையான் குழு தடை செய்யப்பட்டதா இல்லையே.

பிபிசி தகவல் சொல்கிறது..

Human rights groups and opposition politicians say that a climate of violence and chaos has tainted the election.

Rasiah Thurairatnam, who ran as an independent candidate in Batticaloa, told the AFP news agency that people "voted out of fear" for the TMVP.

He alleged serious irregularities by Col Karuna's supporters at many polling stations.

"This is a victory for violence, and it will elicit serious repercussions from the people," he said. "I see this as a license for extortion and child abduction."

The island's main opposition party boycotted the elections in protest over what it said was the atmosphere of intimidation surrounding the vote.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7288942.stm

சர்வதேச மீடியாக்கள் முஸ்லீம் காங்கிரஸ் இத்தேர்தலை அடுத்து பிள்ளையான் குழுவை குற்றம் சுமத்தினதா முக்கியம் கொடுக்கல்ல. மாறாக.. மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஐ தே கட்சி சொன்னவைதான் வெளில வந்திருக்கிறது.

ஆனால் நீங்கள்.. நுவா தரப்பு பிள்ளையானுடன் சேர்ந்து தம்மை கவுத்திடுமோ என்று பிள்ளையான் குழுவை பற்றி அறிக்கை விட்டிட்டு.. தேர்தலில் நின்ற முஸ்லீம் காங்கிரஸுக்கு ஜால்ரா போடுறீங்க. உண்மையா பிள்ளையான் குழு மோசடி செய்யுது என்றால் தேர்தலை முஸ்லீம் காங்கிரஸ் பகிஸ்கரிச்சிருக்கலாமே. யு என் பி போல. தன்ர எதிர்ப்பைக் காட்டி இருக்கலாமே அரசுக்கும் பிள்ளையான் குழுவின் செயலுக்கும். :lol::wub:

முஸ்லிம் காங்கிரசும் புறக்கணித்திருந்தால் பிள்ளையான் குழு 100 வீத ஆசனங்களைப் பெற்றிருக்கும்.

என்னைப் பொறுத்த வரை தமிழர் தரப்பு 89ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் செய்தது போல ஏதாவது சுயேட்சைக்குழு ஒன்றுக்கு வாக்களிக்கும் படி சைகை காட்டியிருக்கலாம். பிள்ளையான் 'பெருந்தலைவன்' ஆகியிருக்க மாட்டான்

நீங்கள் மேற்கோள் காட்டுவது தேர்தல் முடிந்த பின்னரான செய்தி;. ஆனால் நான் என்னுடைய கருத்தில் குறிப்பிட்டது தேர்தலுக்கு முன்னர் சந்தேசிய நிகழ்ச்சியில் எல்மோ பெர்ணாண்டோ கெஹெலிய றம்புக்வெல்லவுடன் நடத்திய பேட்டி தொடர்பானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் காங்கிரசும் புறக்கணித்திருந்தால் பிள்ளையான் குழு 100 வீத ஆசனங்களைப் பெற்றிருக்கும்.

என்னைப் பொறுத்த வரை தமிழர் தரப்பு 89ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் செய்தது போல ஏதாவது சுயேட்சைக்குழு ஒன்றுக்கு வாக்களிக்கும் படி சைகை காட்டியிருக்கலாம். பிள்ளையான் 'பெருந்தலைவன்' ஆகியிருக்க மாட்டான்

நிச்சயமா 100% அமையாது. ஏனென்றால் ஈபிடிபி மற்றும் இதர குழுக்களும் போட்டியிட்டன. ஈபிடிபி இழுபறிப்பட்டது பிள்ளையானுடன். சுயேட்சைகளும் போட்டியிட்டன. நுவா நிச்சயம் அதிக அக்கறை செலுத்தி இருக்கும். அல்லது சுயேட்சைகளை நிறுத்தி இருக்கும்..!

சுயேட்சையா நிற்கிறவைட உயிருக்கு தமிழர் தரப்பு எப்படி உத்தரவாதம் அளிக்கிறது. சைகையைக் காட்டிப் போட்டு.

ஏன் கணக்கப் போவான் கிழக்குப் பல்கலைக்கழகம் யாழ் பல்கலைக்கழகம் போல மக்களை வழிகாட்டி இருக்கலாமே அத்துணை துணிச்சல் இருந்திருந்தா..???!

இத்தேர்தல் மோசடியானது என்பதை காட்ட மனித உரிமை அமைப்புக்கள் சர்வதேச ஊடகங்களுக்கு அளித்துள்ள முக்கியத்துவம் தமிழர் தரப்புக்கு அணுகூலமானது. காரணம்.. தமிழர்கள் சிறீலங்கா அரசிடமிருந்து அதன் படைப்பலத்தின் கீழ் நியாயமா தேர்தலை சந்திக்க முடியாது தமது உரிமைகளைத் தீர்மானிக்க முடியாது என்பதை தெளிவாகக் காட்டக் கூடிய சூழல் பிறந்துள்ளது. அதை உபயோகிக்க வேண்டிய பொறுப்பு புலம்பெயர் ஊடகங்களைச் சார்ந்தது. ஆனா அவை இது என்னவோ மாற்றான் வீட்டில நடக்கிறது போல.. செய்திகள் எதையும் பிரசுரிக்காம மூடி மறைச்சிட்டு இருக்கினம்..! உது நல்லதுக்கில்ல..! :wub::lol:

Edited by nedukkalapoovan

இலங்கையின் தேர்தல் சட்டத்தின் படி வன்னியில் இருந்து கொண்டு கூட மட்டக்களப்புத் தேர்தலில் போட்டியிடலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? கட்டுப்பணம் செலுத்துவதற்கு (இருவர்) மட்டக்களப்புக் கச்சேரிக்கு ஒரு நாள் போயிருக்கத் தான் வேண்டும். அப்போது பாதுகாப்பற்ற சூழல் இல்லாமல் தான் இரு;நதிருக்கும். ஆனால் இன்றைக்குப் பாராளுமன்ற உறுப்பினர்களே தமிழ்த் தேசியத்திற்காக உயிராபத்தி;ன் மத்தியில் தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கட்டுப்பணம் செலுத்துவதை யாராவது தடுத்திருந்தால் அது கூட வெயியே வந்திருக்கும். இப்பொழுது பிள்ளையானின் வெற்றியே சர்வதேச ஊடகங்களில் செய்தியாயிருக்கிறது.

பிள்ளையானின் வெற்றி மட்டுமல்ல.. அந்த வெற்றியோடு பிள்ளையான் குழு எப்படிப்பட்டது என்றதும்.. நடத்தப்பட்ட தேர்தல் எத்தகையது என்பதும்.. சூழல் என்ன என்பதும் வெளி வந்திருக்கிறது.

சப்போஸ் தமிழர் தரப்பு சுயேட்சைகளை இறக்க.. பிள்ளையான் குழு குடும்பத்துக்கு ஒருவரைக் கடத்திட்டு.. முழு அடாவடித்தனம் செய்து.. அதில் பிள்ளையான் குழு இதே வெற்றியைப் பெற்றிருப்பின்.. நிலை.. சர்வதேச ஊடகங்கள் எப்படி எழுதும்.. தமிழ் புலிகள் சார்ப்பு சுயேட்சைகளை பிள்ளையான் குழு வென்றது என்றுதான். ஆனால் இப்போ முன்னாள் புலிகள் வென்றனர் என்று எழுதுகின்றது. அதுவும் வன்முறை செய்து. :lol::wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் தேர்தல் சட்டத்தின் படி வன்னியில் இருந்து கொண்டு கூட மட்டக்களப்புத் தேர்தலில் போட்டியிடலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? கட்டுப்பணம் செலுத்துவதற்கு (இருவர்) மட்டக்களப்புக் கச்சேரிக்கு ஒரு நாள் போயிருக்கத் தான் வேண்டும். அப்போது பாதுகாப்பற்ற சூழல் இல்லாமல் தான் இரு;நதிருக்கும். ஆனால் இன்றைக்குப் பாராளுமன்ற உறுப்பினர்களே தமிழ்த் தேசியத்திற்காக உயிராபத்தி;ன் மத்தியில் தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கட்டுப்பணம் செலுத்துவதை யாராவது தடுத்திருந்தால் அது கூட வெயியே வந்திருக்கும். இப்பொழுது பிள்ளையானின் வெற்றியே சர்வதேச ஊடகங்களில் செய்தியாயிருக்கிறது.

இப்பதான் ஒரு சுத்து வாசிச்சு முடிஞ்சுது, மட்டு உள்ளூராட்சி தேர்தலில 57 வீத வாக்குப்பதிவு நடந்திருக்கு.........

உள்ளூராட்சி தேர்தலுக்கு 57 வீதம் கனக்க..........

பிள்ளையான் குழு எல்லா குழுவையும் வைப்அவுட் பண்ணியிருக்கு........ ஆயுதத்துடனோ இல்லாமலோ பெரிய அளவில வன்முறை சம்பவங்கள் இல்லாம தேர்தல் நடந்திருக்கி.........

ஏற்று கொள்ளதான் வேணும்.........................

  • கருத்துக்கள உறவுகள்

காவியா, கிழக்குமாகானம் பற்றிய உங்கள் அறிவு மண்ணும் குருதியும் கண்ணீரும் கலந்தது. மட்டகளப்பைச் சுரண்டியபடி மட்டக் களப்பு மக்களைவிட தாங்களே அறிவாளிகள் என நினைக்கிற யாழ்ப்பாண ஆதிக்க வாதிகளான என்னுடைய உறவுகளை நான் நம்புவதில்லை.

உங்கள் வார்த்தைகளின் சத்தியத்தை வரவேற்க்கிறேன். யாழ்பான ஆதிக்க மனதுடன் மட்டக் களப்பைப் பற்றி உங்களுக்கு கற்பிக்கிற முயற்ச்சியில் ஈடுபடாமல் அறிந்துகொள்கிற நோக்கத்துடனேயே உள்ளேன். உங்கள் கருத்தும் என்கருத்தும் ஒன்றாகவே இருப்பது மகிழ்ச்சி தருகிறது.

தொடர்பு கொள்ள விருப்பம் visjayapalan@gmail.com

தமிழ் தலைமைகள் கிழக்கு மக்கள் (தமிழ் மட்டுமல்ல , முஸ்லீம் சிங்கள ) மனதை வெல்லவேண்டும்.. இல்லாவிட்டால் தாயக கனவை மறக்கவேண்டியதுதான்.

நமது தமிழ் அரசியல் தலைமைகள் (கூட்டணி, தமிழரசு கட்சி) விட்ட தவறுகள்... யாழ் தமிழர்களின் ஆதிக்க போக்கு என்பவை..இன்றைய நிலைமைக்கு காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த போகும் இடமெல்லாம் கூடவே சென்று கழுவி வந்தாரே டக்கிளசு........... அவருடைய கடசி நிலமை எவ்வாறு உள்ளது?

மகிந்த போகும் இடமெல்லாம் கூடவே சென்று கழுவி வந்தாரே டக்கிளசு........... அவருடைய கடசி நிலமை எவ்வாறு உள்ளது?

மகிந்தவிற்குக் கழுவுவி விடுவதுதான் அந்தாளுக்கு அரசியல் என்றாகிவிட்டது. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தலைமைகள் கிழக்கு மக்கள் (தமிழ் மட்டுமல்ல , முஸ்லீம் சிங்கள ) மனதை வெல்லவேண்டும்.. இல்லாவிட்டால் தாயக கனவை மறக்கவேண்டியதுதான்.

நமது தமிழ் அரசியல் தலைமைகள் (கூட்டணி, தமிழரசு கட்சி) விட்ட தவறுகள்... யாழ் தமிழர்களின் ஆதிக்க போக்கு என்பவை..இன்றைய நிலைமைக்கு காரணம்.

மகிழ்ச்சி லீ, உங்களைப்போன்ற மனச்சாட்சி உள்ள குரல்கள் புலத்தில் ஒலிப்பதுதான் கிழக்கை வெல்ல முடியும் என்கிற நம்பிக்கையை தருகிறது. உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். முதலில் புலம் பெயர்ந்த நாடுகளில் கதிரைகளில் மேடைகளில் வானொலி கலை அரங்குகளில் புலம் பெயர்ந்த கிழக்குமாகாணத் தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுக்க முன்வரவேண்டும். வெளிநாடுகளில் உள்ள அமைப்புகளை மக்கள் ஆதரிப்பது வன்னியில் உள்ள போராளிகளுக்காகத்தான் என்பதையும் தங்களுக்காகவும் தங்கள் வட்டத்துக்காகவும் அல்ல என்பதையும் சம்பந்தப் பட்டவர்கள் இனியாவது உணர்ந்துகொள்ள வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வெளிநாடுகளில் தங்களுடன் தொடர்புகொள்கிறவர்கள் பட்டியலில் கிழக்கைச் சேர்ந்தவர்கள் இல்லை என்கிறதை ஐரோப்பிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சு அலுவலர்கள் உனர்ந்தே வைத்திருக்கிறார்கள். இவ் விடயங்கள் தொடர்பாக மேலிருந்து அறிவுறுத்தப் படும்வரைக்கும் இங்குள்ளவர்கள் காத்திருக்க வேண்டுமா.

நாம் சுதந்திரப் பிரகடனம் செய்வதானால் வடக்கில் முஸ்லிம் அகதிகள் பிரச்சினை மட்டும்தான் உள்ளது. கிழக்கில் கிழக்குத் தமிழர்களின் மனசை வெல்லுதல், முஸ்லிம்களுடனான உடன்பாடு சிங்கள சிறுபாண்மையினரின் பாதுகாப்பு என்கிற மூன்று பிரச்சினைகள் உள்ளது.

இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக சிறுவர் ஆட்சேர்பில் போராளிகள் உறுதியான முடிவெடுத்தததன் நன்மைகள் கிடைக்க ஆரம்பித்துள்ளது. கிழக்கை வெல்வதை புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்தும் நாம் ஆரம்பிக்க வேண்டும்.

MI7 முஸ்லிம் மக்களைப் பற்றி எழுதி என் இருப்பை உறுதிப் படுத்துவதாக வாய்கூசாமல் எழுதியிருந்தார். என் கவிதைகளில் நான் ஆயிரம் வருடம் வாழ்வேன். அரசியல் இராணுவ ஆய்வுகள் காவியங்களுக்கான என்னுடைய பொன்னான நேரங்களை எல்லாம் எடுத்துவிட்டது என்பதை அவர் அறிவாரா. இதனால் பலதடவை கொலை முயற்ச்சிகளை எதிர் நோக்கினேன் என்பதை அவர் அறிவாரா.

ஒருமுறை ஒருமுறை தமிழ் ஆயுத பாணிகள் மட்டக்களப்பு கிரான் சுடலைக்கு மண்வெட்டும் சவளுடன் என்னை எடுத்துச் சென்றார்கள். அவர்களுக்கு வாக்கி ரோக்கியில் வந்த அவசரச் சேதி ஒரு நிமிடம் பிந்தியிருந்தாலும் என் மூச்சு நின்றிருக்கும். மற்றொருமுறை முஸ்லிம் ஆயுதபாணிகளோடு மருதமுனையில் இழுபறிப் பட்டிருக்கிறேன். கொழும்பில் ஒரு ஆயுதக் குழுவைவின் தலைவரை வெளிநாட்டுத் தூதுவர் ஒருவர் எச்சரித்ததால் காப்பாற்றப் பட்டேன். அவர்கள் நாட்டுக்கும் போராளிகளுக்குமிடையில் நான் பாலம் அமைக்கிறேன் என்று அந்த ஆயுதக் குளு கருதியதால் ஏற்ப்பட்ட சிக்கல் அது. தலை பணியாத என்னுடைய எழுத்து ஒன்றும் தேனீர் விருந்தல்ல நண்பரே.

எங்கள் வாழ்நாளில் சுதந்திரப் பிரகடனம் சாத்தியமாகவேண்டும் அதன்பின் இந்தப் பேச்சையே விட்டுவிட்டு எங்காவது ஒரு மூலையில் ஒதுங்கி இருந்து காவியம் நாவல் என்று எழுதிக்குவிக்க வேண்டும் என்கிறதுதான் கனவாக இருக்கிறது என்பதை MI7 அவர்களுக்கு யாராவது சொல்லுங்கள்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கணக்கப் போவான் கிழக்குப் பல்கலைக்கழகம் யாழ் பல்கலைக்கழகம் போல மக்களை வழிகாட்டி இருக்கலாமே அத்துணை துணிச்சல் இருந்திருந்தா..???!

:wub::lol:

நண்பரே நிலமைகளை அறிந்துதான் பேசுகிறீர்களா. கிழக்குப் பல்கலைக் களகத்திலலும் மட்டக்களப்பு நகரிலும் இருக்கிற எங்கள் பகுதியைச் சேர்ந்த சில ஆதிக்க மனப்பாண்மை கொண்டவர்கள்தானே சீரளிவுகளின் மூலகாரணம். அவர்கள் தங்கள் பிரதேச வாதத்தை எதிர்த்தவர்களையே கிழக்கின் முன்னுரிமைகளை வலியுறுத்தியவர்களையே பிரதேச வாதிகளாகச் சித்தரித்தார்கள். தங்கள் பதவி போட்டிகளில் எதிர்த் தரப்பை விடுதலைக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தினார்கள். கிழக்குமாகான அறிஞர்களை அச்சுறுத்தித் துரத்திவிட்டு பதவி ஆதிக்கங்களைக் கைப்பற்று முயற்ச்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்தது உங்களுக்குத் தெரியாமல் போனதென்ன.

வரலாற்றில் திருமலை வடக்கைத் தவிர்ந்த கிழக்குமாகாணம் வடமாகான தமிழ் அரசுகளின் கீழ் இருந்ததில்லை. கண்டி அரசின்கீழ் பணியாத தமிழ் முஸ்லிம் வன்னியனார்களால் ஆளப்பட்ட சிறு சிறு சுயாட்ட்சிப் பிரிவுகளாகவே அவை இருந்தன. வன்னிமக்களும் கிழக்குமாகான மக்களும் பாரம்பரியமாக சுயாடட்சி உரிமையோடு வாழ்ந்தவர்கள் என்கிற வரலாற்றை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

யாழ் பல்கலைக்களகம் மண்ணின் மைந்தர்களின் கையில் இருக்கிறது. விடுதலை மேம்பட மட்டக் களப்புப் பல்கலைக்களகமும் மண்ணின் மைந்தர்களின் கைக்குவரவேண்டும்.

Edited by poet

நண்பர்களே வடக்கு கிழக்கு வேறுபாடு வேண்டாம்.

கிழக்கு தேர்தலில் போட்டியட்டு மேற்குலகத்திற்கு மேற்குலகத்திற்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே போட்டியிட்டு தான் இவ்வளவு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். போட்டியிடுபவர்ளின் உயிரை பாதுகாக்க மேற்குலகம் நடவடிக்கை எடுக்குமா? ஏற்கனவே போட்டியிட்டவர்களே ஆபத்தில் இருக்கும் நிலையில் இன்னும் தமிழ் செயற்பாட்டாளர்களை பலி கொடுக்கவேண்டுமா?

சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியே தேர்தலை புறக்கணித்தது. இதுவே பல செய்திகளை சொல்லியிருக்கும். எமக்கு தேவை நியாயமான தீர்வு அல்லது தனிநாடே தவிர அவர்களின் பிச்சை உள்ளுராட்ச்சி சபைகளல்ல.

Edited by Subiththiran

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.