Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணம் எனும் தீபகற்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் எனும் தீபகற்பம், வளம் கொழிக்கும் மண்ணும், பயன் தரும் மா, தென்னை, பனை, பலா மரங்களையும் கொண்ட ஒரு அழகிய நந்தவனம் எனவே கூறலாம். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் யாழ்ப்பாணம் நான்கு பிரிவுகளாக பகுக்கப் பட்டிருந்ததுதான். தீவகற்பத்தின் வடபகுதி "வடமராட்சி" (உண்மையில் இந்தச் சொல் "வடமர் ஆட்சி" என்பதில் இருந்து திரிபடைந்ததாக கூறுவர்) எனவும், தென்பகுதி "தென்மராட்சி" எனவும், மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகள் "வலிகாமம்" எனவும் தீவுக்கூட்டங்கள் நிறைந்த தென்மேற்கு பகுதி "தீவகம்" எனவும் அழைக்கப் பட்டன. இந்த ஒவ்வொரு பகுதியிலும் இருந்த மக்கள் தமக்கே உரிய தனித்துவத்துடன் மிக இறுக்கமான பிணைப்பை பேணி வந்தனர். தீவகற்பத்தின் கிழக்கு கடற்கரை மிக அருமையான மணற்திட்டிகளையும் "சவுக்கு" மரங்களையும் கொண்டிருக்கின்றது. கண்ணாடிப் பொருட்கள் செய்வதற்கு மிக அருமையான மூலப் பொருள் இந்த மணல்.

யாழ்ப்பாண மக்கள் கல்விக்கும் கடின உழைப்பு மற்றும் சேமிப்புக்கும் பெயர் போனவர்கள். வலிகாமத்தின் செம்மண்ணில் கால் வைக்காத மேதைகளோ அல்லது வடமராட்சியின் ஆழக் கிணறுகளில் "துலாவோடாத" கல்விமான்களோ இல்லை எனலாம். "எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் பிற்பகலிலும் சரி, உதயத்துக்கு முன்னும் சரி பயிர்ச்செய்கை காணிகளில் வேலை செய்வார்கள்". இது யாழ்ப்பாண பண்புகளில் ஒன்று.

இற்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன். சின்னஞ் சிறுவனாக வடமராட்சியில் நெல்லியடி எனும் இடத்தில் நான் வாழ்ந்த ஞாபகங்களை மீட்டுப் பார்க்கிறேன். மூக்கை குடையும் மணத்துடன் பச்சைப் பசேல் என செழித்து நிற்கும் புகையிலை செடிகளும், காரம் ஏற்றும் மிளகாய் செடிகளும் கண்ணுக்கு விருந்தானவை. சின்னஞ் சிறு குச்சொழுங்கைகளும், பத்தடி உயர பனையோலை வேலிகளும் அதற்குப் பின்னால் நின்று உறுமும் "கடியன்" நாய்களும் இங்கு பிரசித்தம்.

நான் பிறந்த காலத்தில் "வூல்ஸ்லி" எனும் நீர் இறைக்கும் இயந்திரம் பாவனைக்கு வந்துவிட்டது. முப்பது முழ ஆழமுள்ள கிணறுகளில் நீரிறைப்பதென்பது இலகுவல்ல. கிணற்றின் அருகில் ஆழமான நிலவறை கட்டி அதனுள் "வூல்ஸ்லி எஞ்ஞினை" வைத்திருப்பார்கள். அப்போது மின்சாரம் வராத காலம்.

உதய சூரியன் எழுவதற்கு முன் சராசரி நான்கு மணிக்கெல்லாம் மக்கள் விழித்தெழுந்து விடுவர். "அரிக்கன் விளக்கை" கொழுத்தி (Hurricane Lamp was the most popular lamp in Jaffna) அவரவர் வேலைகளுக்கு கிளம்பி விடுவர். காய்கறிகளை ஆய்ந்து சந்தைக்கு கொண்டு செல்பவர்களாயினும் சரி, மாட்டு வண்டில்களை கட்டிக் கொண்டு தோட்டங்களுக்கு செல்பவர்களானாலும் சரி சோம்பேறியாக இருந்தது கிடையாது. அதிகாலையிலேயே ஒரு உயிரோட்டமான அதிர்வை உணரலாம்.

சின்னஞ் சிறுசுகளான எங்களுக்கு அதிகாலையிலும் தூக்கம் தான். வெண்கல தண்டைகளும், வெள்ளிச் சலங்கைகளும் கழுத்தில் பூட்டி கணீரென்ற ஓசையுடன் தாளம் பிசகாது நடக்கும் "வடக்கன் மாடுகள்". மறக்க முடியுமா? ஐந்து ஐந்தரை மணிவாக்கில் எங்களை எழுப்பி, முகங்கழுவிவிடும் அம்மம்மா. நமக்கெல்லாம் இண்டைக்கு என்ன விளையாட்டு விளையாடலாம் என்பதுதான் யோசனை. ஐந்து வயதுவரை பள்ளிக்கூடம் போகவேண்டிய தேவை இல்லை. வீட்டில் நின்று "குதியன் குத்துவதாக" சிலநேரம் அடிகூட விழுவதுண்டு.

காலை உணவாக பொதுவாகவே "புட்டு" அல்லது "தோசை" செய்வார்கள். என்ன இருக்கிறதோ அதை ஒரு கை பார்த்துவிட்டு, "வளயம் உருட்டுதல்", "கள்ளன் பொலிஸ்" போன்ற கிராதகத் தனமான விளையாட்டுக்களில் மூழ்கி விடுவதுண்டு. பல வேளைகளில் இது சண்டைகளில் முடிவதும் உண்டு. நம்மது "கண்ணைக் கட்டி கோவம்" எல்லாம் ஒரு நாளைக்குத்தான். அடுத்த நாள் நேசமாகி விடுவோம்.

என்ன இருந்தாலும், தோட்டத்தில் வேலை செய்யும் பெரியாக்களுடன் சரிக்குச் சரி இருந்து "ஒடியற் புட்டும், வாளைமீன் குழம்பும் மரவள்ளிக் கிழங்கு கறியுடன்" சாப்பிடும் சந்தோசம் எங்கும் கிடைக்காது. வாடைக் காற்றின் ஈரமும், வூல்ஸ்லி மிசினின் சத்தமும் ஒரு கிறக்கத்தை தரவல்லன. இதற்காகவே தோட்டத்துக்கு வரப்போறேன் என அடம் பிடிப்பதுண்டு.

எவ்வளவுக் கெவ்வளவு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்களோ அவ்வளவுக் கவ்வளவு பக்திக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்கள் எம் மக்கள். ஊருக்கு ஊர் கோவில்கள். பிள்ளையார், அம்மன், முருகன், சிவன், வைரவர், எண்டு ஊரெல்லம் நிறந்து கிடக்கும் கோவில்கள். இதில் விசேடமாக செல்வச் சந்நதி முருகன் கோவில், நல்லூர் கந்தஸ்வாமி கோவில், மாவிட்டபுரம் கந்தஸ்வாமி கோவில், காரைநகர் சிவன் கோவில், நைனை நாகபூசணி அம்மன், கிழக்கே வல்லிபுரக் கோவில், வடமேற்கே கீரிமலை என்பவற்றை குறிப்பிடலாம். ஒவ்வொரு வெள்ளிக் கிழமை அந்திசாயும் நேரமும் எங்களூர் "சக்கலா வத்த வைரவர் கோவிலில்" ஆஜராகி விடுவோம். குருக்கள் தரும் பொங்கலின் சுவை இன்றும் நாவில் தித்திக்கும்.

பூசை முடிந்து மணல் ஒழுங்கைகளில் கால் புதைத்து நடந்து வருவதே ஒரு தனி ஆனந்தம். செந்தணலாக சூரியன் பனங்காடுகளிடையே தன் கிரணங்களை வீசி மறைவது திகிலுடனான சந்தோசமான அனுபவம். காற்றில் பனை ஓலைகள் கரகரக்க, "ஏதோ பேய் வருவதாக" எண்ணி அம்மாவின் கையை பிடித்து "வா கெதியா வீட்டுக்கு போகலாம்" என இழுத்ததை இன்று நினைத்தாலும் சிரிப்புத்தான்.

இரவில், நிலா ஒளியில் கூட்டமாக இருந்து ஊர்ப் புதினங்கள் பேசுவதும், வானொலி கேட்பதும் சுவாரஸ்யமானது.

(பூங்குன்றன்)

-------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் பிறந்தது தமிழீழ தலைநகர் இயற்கை எழில் மிக்க திருமாலையில் எனது அப்பா யாழ்பாணத்தை சேர்ந்ந்தவர் அம்மா திருமலையை சேர்ந்தவர் எனது அம்மாவின் தம்பி திருமலையில் மாவீரரானவுடன் எழுந்த பிரச்சினைகளால் பாதுகாப்பு தேடி எமது தந்தையின் கிராமமான கைதடியை நோக்கி இடம்பெயர்ந்தோம் அந்த இடம்பெயர்வின் போது எனது வயது 8 மாதம்.யாழ்பாண வாழ்கை எனது வாழ்கையின் பசுமையான நாட்கள் இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் சுத்தமான காற்று அருமையான கலாச்சாரம்.மரத்துக்க்கு கீழே மரத்திலான கட்டில் வாங்கு என ஈழத்தில் சொல்வார்கள் அதில் படுக்கும் சுகமே தனி.மிகவும் ஆழமான கினறு என்றாலும் அதில் அள்ளி குளிப்பது எங்கும் கிடைகாத சுகம் கோயில் தீருவிழாக்கள் என்றால் நமக்கு கொண்டாட்டமோ கொண்டாட்டம்.

அதைவிட இறந்த முன்னோருக்கு திரி கொடுப்பார்கள் அப்படி என்றாஅல் ஒட்டு மொத்த குடும்பமும் ஒன்று கூடும் பிறகென்ன கூட்டும் கும்மாளமும்தான் அதில் விருந்து வைப்பார்கள் நான் சிருவயதில் விருந்தில் பரிமாறுவதுக்கு சண்டை பிடிப்பேனாம் இதைவிட கொடுமை என்ன வெண்டால் அம்மாவிடம் சொன்னேனாம் உங்கட திரிக்கு நாந்தான் விருந்து பரிமாறுவேன் என இன்னும்ம் சொல்லி சொல்லி நக்கலடிப்பார்கள்

அதன் பின் அடுத்த இடம்பெயர்வு வன்னி மண்ணிற்கு அகதியாய் இடம் பெயர்ந்தோம் வன்னியில் எமது அப்பாவின் சகோதரர் இருவர் நீண்டகாலமாக வசிகின்றனர் எமது குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் அங்கு நிலம் உண்டு பெரியப்பாவின் வீட்டில் தஞ்சமடைந்தோம் அங்கு இன்னும் ஜாலியான வாழ்கை முத்தயன் கட்டுகுளத்தில் கூத்து வன்னிகாட்டுகுள் எனது பெரியப்பாமார்களின் மகன்களோடு விளாம் ப்ழம் பொறுக்க கள்ளமாக போவது அது இது என கொண்டாட்டமோ கொண்டாட்டம் பாலுக்கு பஞ்சமே இல்லை உடனடிப்பாலில் தேனீர் என ராஜ வாழ்கை

6 மாதத்துக்கு பின்னர் மறுபடியும் இடம்பெயர்வு என் சொந்த நகரான திருமலைக்கு சொந்த மண்ணுக்கு அகதியாக மீண்டும் பயணம் அதன் பின்னர் 1 வருடத்தில் அடுத்த இடம்பெயர்வு கொழும்புக்கு அங்கு சிங்களவனுக்கு பயந்ட்த வாழ்கை அதன் பின்னர் இன்று அவுஸ்திரேலியாவில் ஏதிலி வாழ்ழ்கை என்று எனது மண்ணில் நிம்மதியாக வாழ்வோம் என காத்திருகின்றேன்.எவ்வளவு கொடுமைகளை எதிர்நோக்கினாலும் எமது வாழ்கை எமது மண்ணில் ராஜ வாழ்கைதான் எனக்கு 11 வயது வரும் வரை மின்சாரம் தெரியாது ஆனால் நான் பறுவாயில்லை இன்னும் மின்சாரம் தெரியாத என்னோடு ஒத்த வயதினர் இருகின்றார்கள்.

எமது நாடு எம் கைகளில் வரட்டும் தெற்காசியாவில் இன்னொரு சிங்கப்பூராக மாற்றுவோம் எமது மண்ணை மீட்படு மட்டும் எமது கடமை அல்ல அந்த மண்ணில் எமது சந்ததி செல்வ செழிப்போடு உலகின் முதலாம்ம் தர குடிமக்களாக வாழவைக்க வேண்டும் தமிழனின் தேசம் உலகின் முக்கிய இடத்தை வகிக்க வேண்டும் நிச்சயம் செய்தே தீருவோம்

(ஈழவன்85)

மேலும் ரம்மியமான உரையாடலுக்கு

http://www.tamilnadutalk.com/portal/index....=11195&st=0

  • கருத்துக்கள உறவுகள்

பதிவிற்கு நன்றி நுணாவிலான்.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.