Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமரர் சுஜாதாவோடு வாழ்ந்தது பற்றி ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமரர் சுஜாதாவோடு வாழ்ந்தது பற்றி

வ.ஐ.ச.ஜெயபாலன்

எதிர் பாராமல் வந்த சுஜாதாவின் மரணச் சேதியில் கனத்த மனசு கொஞ்ச நேரம் முடங்கிப்போனது.

கோடை காலம்வரை அவர் வாழ்ந்திருந்தால் இப்படித் துன்பப் பட்டிருக்க மாட்டேன். நினைவில் முள்ளாகச் சஞ்சலப் படுத்தும் ஒரு கணக்கு தீர்க்கப் பட்டிருக்கும்.

1981 தைமாத ஆரம்பத்தில் மதுரை தமிழாராட்சி மாநாட்டு மண்டபத்தில் என்னைச் சந்திததில் இருந்து 1999ல் எனது அவசர புத்தியால் முரண்பட்டதுவரை நமது நட்ப்பு எப்போதாவது நேரிலும் எப்போதும் இணையத்திலும் செளித்தபடியே இருந்தது. நட்பு மனசுக்கு பல்லாயிரம் கிலோ மீட்டரும் நடந்து போகிற தூரம்தானே.

மைதொட்டு எழுதுகிற பேனாக்குச்சிக் காலத்தில் இருந்து அதி நவீனக் கணனிக் காலம்வரைக்கும் சுஜாதா விஞ்ஞானத் தொழில் நுப்பத்தாலும் மனசாலும் மீண்டும் மீண்டும் பிறந்து காலத்தை வென்றுகொண்டிருந்தார். என்னை கனனியில் எழுதவைத்ததில் சுஜாதாவுக்குத்தான் முதல் மரியாதை. அடுத்த மரியாதைகள் அவுஸ்திரேலிய பாலப்பிள்ளைக்கும் சிங்கப்பூர் முத்துநெடுமாறனுக்குமே சேரும். என்னைப்போலவே வேறு பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் அவரது கைவிரலலைப் பற்றித்தான் கணனித் தமிழ் உலலகினுள் காலடி எடுத்து வைத்தார்கள் என்று பின்னர் அறிந்தேன். மாறும் உலகோடு மீண்டும் மீண்டும் பிறந்து தலைமுறைகளைக் கடந்து செல்கிற கலை கைவர அமரர் சுஜாதாவின் நட்பும் எனக்கு உதவியிருக்கிறது. அவரைப்போலவே நானும் இளைய கலைஞர்களது படைப்புகளை தேடி தேடி வாசிக்கவும் மனம் திறந்து பாராட்டவும் பழகிக் கொண்டேன்.

கால் நூற்றாண்டுகளின் முன்னம் 1981ம் ஆண்டு தைமாதம் மதுரைத் தமிழாராட்ச்சி மாநாட்டு மண்டபதில்தான் நாங்கள் முதன் முதலாகச் சந்தித்தோம். கோமல் சுவாமிநாதந்தாதான் சுஜாதாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். கோமல் சுவாம்நாதனை தலித் இலக்கிய முன்னொடியும் எனது ஆதர்சமுமான கே.டானியல் அண்ணாதான் எனக்கு அறிமுகப் படுத்திவைத்தார். அந்த பயணம் முழுவதிலும் எங்களோடு டானியல் அண்ணாவும் இருந்தார்.

ஆச்சரியப் படும்வகையில் பிரபல எழுத்தாளரான சுஜாத்தா என்னுடைய கவிதைகளை அறிந்து வைத்திருந்தார். 1970பதுகளின் பிற்பகுதியில் யாழ்ப்பாணம் வந்திருந்த எழுத்தாளர் அசோக மித்திரனூடாக என்னுடைய ஆரம்ப காலக் கவிதைகள் சில ஏற்க்கனவே தமிழ் நாட்டை எட்டியிருந்தது. அசோகமித்திரன் கணையாழியிலும் வேறு சிறு பத்திரிகைகளிலும் அவற்றை வெளியிட்டிருந்தார். எனது முதல்கப் படைப்பான பாலியாறு நகர்கிறது கவிதையும் மூன்றாவது படைப்பான இளவேனிலும் உளவனும் கவிதையில் வருகிற “காட்டை வகுடு பிரிக்கும் காலச்சுவடான ஒற்றையடிப் பாதை” என்கிற அடியும் பலருக்குப் பிடித்திருந்தது.

ஒல்லி உடலும் குறுந்தாடியும் தோழில் புரழும் தலைமுடியும் தொங்கும் ஜொல்னாப் பையுமாக மதுரை உலகத் தமிழர் மாநாட்டரங்கில் அலைந்த என்னை சுஜாத்தாவுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இப்படித்தான் எங்கள் கதை ஆரம்பமானது. பிரபலமில்லாத இளையவர்களின் எழுத்துக்களை சலிக்காமல் படிக்கிறது உலகறியப் பாராட்டுகிறது என்று அவர் எல்லோரையும் ஆச்சரியப் படுத்துகிற மனிதராக இருந்தார். அதுதான் அவரது காயகல்பமாகவும் இளமையின் இரகசியமாகவும் இருந்தது. அந்த பயணத்தில் என்னைக் கவர்ந்த கலைஞர்களுள் கோமல் சுவாமிநாதனும் சுஜாதாவும் முக்கியமானவர்கள். பின்னர் நான் இலங்கைக்குத் திரும்பிவிட்டேன்.

அதேவருடம் ஜூன் மாதம் எங்கள் யாழ்ப்பாணம் நூலகம் ஒரு லட்சம் புத்தகங்களோடு எரியூட்டப் பட்டது. நாங்கள் கூட்டம் கூட்டமாகப்போய் எங்கள் நூலத்தின் வெந்து தணியாத சாம்பரில் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தோம். சற்றுத் தள்ளி துரயப்பா மைதானத்தில் எங்கள் நூலகத்தை எரித்த சிங்கள படை கிண்டலாகக் கூச்சலிட்டபடியே பைலா பாட்டுக்கு நடனமாடிக் கொண்டிருந்தது. அன்றுதான் எங்களில் பலர் இதற்க்கு ஆயுதப் போராட்டத்தின்மூலம்தான் பதில் சொல்ல முடியுமென்கிற தீர்னமானத்துக்கு வந்தோம். நாங்கள் ஆயுதத்தை எடுத்ததுபோலவே அந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட எழுத்தாளர் சுஜாதா பேனாவை எடுத்திருக்கிறார். எனினும் என்னுடைய தமிழக நண்பர்கள் சிலர் அவர் பிராமணர் என்ற காரணத்தால் அவரது பங்களிப்பை கண்டு கொள்ள மறுத்தார்கள். ஆனால் கோமல் சுவாமி நாதன் அசோகமித்திரன், இந்திராபார்த்தசாரதியில் இருந்து மங்கை கிருஸ்னாடாவின்சி வரை பல தலைமுறைகளைச் சேர்ந்த எனது கலைத்துறை நண்பர்கள் பலரின் பிராமண பின்னணி பிறப்பின் விபத்து மட்டுமே என்பதை என்பதை நான் அறிந்திருந்தேன். ராமானுஜரைப் போலவே நண்பர் சுஜாதாவுக்கும் வரித்துக்கொண்ட நாலாயிர திவ்ய பிரபந்த தமிழ்க் கலாச்சாரத்தைத் தவிர மற்ற எல்லா அடையாளங்களும் பிறப்பின் விபத்துத்தான்.

சுஜாதா ஈழத் தமிழ்க் கலைஞர்களின் உண்மையான நண்பர். தனது வன்னிப் பயணத்தின்போது பிரபாகரன் தன்னிடம் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ எங்களைச் சரியாக முன்னெடுத்து வைக்கவில்லை என்று சுட்டிக்காட்டிதாகத் திரைப்பட இயக்குனர் மகேந்திரன் குறிப்பிட்டிருக்கிறார். சுஜாதாவின் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்பட சுவடி என்னைப்போன்ற ஈழத்து நண்பர்களது ஆலோசனைகளோடு செம்மையும் செழுமையும் படுத்தப் பட்டிருக்கலாம். அந்த திரைப்படம் பற்றி எனக்கும் விமர்சமனம் இருந்தாலும் சுஜாதாவின் நன்நோக்கத்தை நான் ஒருபோதும் சந்தேகப் படவில்லை. அமரர் ரஜீவ் காந்தியின் மரணத்தை தொடர்ந்து இறங்கிய கொடிய இருள் நாட்களிலும்கூட தொடர்ந்து ஈழத்து இலக்கிய முயற்ச்சிகளை குறிப்பாகக் கவிதைகளை ஆதரித்து தனது கடைசிப் பக்கத்தில் எழுதியதை அத்தனை சுலபமாக மறந்துவிடமுடியாது.

நாங்கள் நண்பர்களாய் இருந்தபோதும் பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவில் வாழ்ந்தோம். அடிக்கடி சந்திததில்லை. இணையம் அறிமுகமானபின்னர் அடிக்கடிசந்திக்காமல் இருந்ததுமில்லை. ஒருமுறை எப்படி கணனியில் தமிழ் எழுதுவது என்று ஒரு தாயிடம் கேட்பதுபோல கேட்டு அவருக்கு மின்னஞ்சல் எழுதினேன். மணலில் அம்மா அனா ஆவன்னா எழுதப் பழக்கியதுபோல கணனியின் மாயத் திரையில் அவர்தான் எனக்குத் தமிழ் அரிச்சுவடி தொடக்கி வைத்தார்.

1999ல்தான் நான் அவரை கடைசியாகச் சந்தித்தேன். அவருடைய வீட்டில் விருந்து சாப்பிட்டேன். என்னோடு மிகவும் அன்பு பாராட்டினார். ஒரு மாலைப் பொழுதில் தனது குலதெய்வமான பார்த்தசாரதி கோவிலுக்கு என்னை அழைத்துச் சென்றார். நாலாயிரத் திவ்வியப் பிரபந்த சேதிகளைச் சொன்னபடி சென்னைச் சுவர்க் காட்டுக்குள் நடந்த சுஜாதாவைத் தொடர்ந்த என்னோடு கதை கேட்டபடி மஞ்சள் சூரியனும் வந்தது. பாரதியார் பற்றியும் நிறையச் சொன்னார். பாரதியாரை யானை மிதித்த இடத்தைச் எனக்குச் சுட்டிக் காட்டினார். அவர் வாழ்ந்த வீட்டையும் எனக்குக் காட்டினார். திரும்பிச் சென்றபோது சூரியன் போய்விட்டிருந்தான். எனினும் நிலா எங்களோடு துணை வந்தது. இரவுச் சாப்பாட்டு மேலசையில் அவரது அன்பான வார்த்தைகளில் அவரது இல்லத் தோழியின் உபசரிப்பில் திழைதிருந்தோம். பேச்சினிடையே மறுநாள் தனது திரைஉலக நண்பர்களைச் சந்திக்கவருமாறு அழைத்தார். எனினும் அந்த இரவு கொடிய விதி எங்கள் நட்பின்மீது இறங்கியது. உண்மையில் வானத்தில் போன சனியனை ஏணிகட்டி இறக்கியது நான்தான். சின்னப் பிரச்சினைக்காக அவரது மனசு புண்பட நடந்துகொண்டேன். அதன்பின்னர் அந்த உயர்ந்த ஆழுமையை நான் சந்திக்கவில்லை. வருகிற கோடை விடுமுறையில் அவரைச் சந்தித்து மன்னிப்புக் கேட்கவேண்டும் என்கிற தீர்மானத்தில் இருந்தேன்.

என்னை அசாத்திய துணிச்சல் உள்ளவன் என்று சொல்லுவார்கள். நீழும் துப்பாக்கிகளை புறம்கையால் தட்டி விட்டு நடந்துவசெல்கிற எனக்கு அவரை நேரில் சந்திக்கவும் மன்னிக்க வேண்டுகிறேன் என்று சொல்லவும் துணிச்சல் ஏற்ப்படவில்லை. பின்னர் என் கவலையை கவிஞர் இந்திரனிடமும் பிறரிடமும் சொல்லி அனுப்பினேன். 2002ல் எனது கவிதை தொகுப்பு பெருந்தொகை வெளிவந்தபோது மன்னிக்க வேண்டுகிறேன் என எழுதி அவருக்கு அனுப்பி வைத்தேன். கிடைத்ததா என்பதும் தெரியவில்லை. கோடை காலம் வரைக்குமாவது இருந்திருக்கலாம். குற்ற உணர்வாம் சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே நில்லென்று கூறி நிறுத்தி வழி போய்விட்டார்.

ஈழத் தமிழரைப் பொறுத்து இந்த வருடம் பெப்ருவரி மாதம் மிகக் கொடுமையானது. எழுத்தாளர் சுயாதா ஓவியர் ஆதிமூலம் முன்னைநாள் அமைச்சர் ராசாராம் உட்பட எங்களது தமிழக நண்பர்கள் மூவரை அது காவு கொண்டுவிட்டது. சுயாத்தாவுக்கும் ஆதிமூலத்துக்கும் இன்னொரு ஒற்றுமையுமுண்டு ஆதிமூலத்தின் கோடுகளும் சுயத்தாவின் வசனங்களும் ஒன்றுதான். அவற்றின் நடையும் சக்தியும் ஒன்றுதான். ஆதிமூலமும் சுஜாதாவும் இராசாராமும் வேறு வேறு வழிகளில் பயணித்தபோதும் ஈழத்தமிழர்களை நேசித்ததிலும் விருந்தோம்பலிலும் ஒன்றுபோலவே இருந்தார்கள். இவர்களது மரணம் ஈழத் தமிழ் நண்பர்கள் வட்டத்தில் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது சுயாதா ஆதிமூலம் இருவரது மரனமும் கலைத் தமிழுக்குப் பெரிய இழப்பாகும்..

என் வாழ்நாளில் அமரர் சுஜதாபோல தமிழ் நடையால் பல்துறை விடயங்களையும் இலக்கியத்தையும் ஜனரங்சகப் படுத்திய இன்னொருவரை சந்திததில்லை. அவரது துணைவிக்கும் பிள்ளைகளுக்கும் தேசிகன்போன்ற அவரது ஆப்த நண்பர்களுக்கும் எனது அனுதாப அஞ்சலிகளை சமர்ப்பிக்கிறேன்.

.

Edited by poet

அவர் விரும்பிய ஈழத்து எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர்.

இதை அவரே சகோதரன் கானபிரபாவுக்கு வழங்கிய நேர் காணலில் சொல்லியிருக்கிறார்.

இதோ:-

http://www.radio.ajeevan.com/

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கூட்டம் கூட்டமாகப்போய் எங்கள் நூலத்தின் வெந்து தணியாத சாம்பரில் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தோம். சற்றுத் தள்ளி துரயப்பா மைதானத்தில் எங்கள் நூலகத்தை எரித்த சிங்கள படை கிண்டலாகக் கூச்சலிட்டபடியே பைலா பாட்டுக்கு நடனமாடிக் கொண்டிருந்தது. அன்றுதான் எங்களில் பலர் இதற்க்கு ஆயுதப் போராட்டத்தின்மூலம்தான் பதில் சொல்ல முடியுமென்கிற தீர்னமானத்துக்கு வந்தோம்.

அது என்னவோ தெரியவில்லை ஒரு காலத்தில ஆயுதம் தூக்கின கோஷ்டிகள் பல இப்ப புலத்தில வந்து பெரிய பெரிய பெயர் போன படைப்பாளிகளாகவும்,கவிஞர்களா

  • கருத்துக்கள உறவுகள்

அமரர் சுஜாதாவோடு வாழ்ந்தது பற்றி எம்மோடு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி

  • கருத்துக்கள உறவுகள்

அமரர் சுஜாதவின் நினைவுகளை எமக்கும் அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல கவிஞருக்கும், அஜீவனுக்கும் உரித்தாகட்டும்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர் விரும்பிய ஈழத்து எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர்.

இதை அவரே சகோதரன் கானபிரபாவுக்கு வழங்கிய நேர் காணலில் சொல்லியிருக்கிறார்.

இதோ:-

http://www.radio.ajeevan.com/

நன்றி அஜீவன், கானப்பிரபாவுக்கு வளங்கிய பேட்டி எந்த வருடம் கொடுக்கப் பட்டது என்று தெரியுமா, என்னுடைய அஞ்சலி குமுதம் ஆசிரியர் கடற்கராய் கேட்டு எழுதியது. காலதாமதாமாகிவிட்டது. பின்னர் திண்னையிலும் சுபி தமிழிலும் பிரசுரமானது. நானும் சுயத்தாவும் முரண்பட்டது 1999ல் அதன்பின்னர் வெளிவந்த பேட்டியாயின் மகிழ்ச்சி. அதன்பின் அவர் என்னைப்பற்றி பேசுவதைத் தவிர்த்தே வந்தார். தயவுடன் இப்பேட்டி வெளிவந்த திகதியை அறியத்தாருங்கள்.

என்னால் அதிகம் எழுத முடியவில்லை. என்னுடைய ஆய்வுகள் எழுதும் ஆற்றலை உறிஞ்சி விடுகின்றன. போராட்டம் முடிந்துவிடும் ஒதுங்கியிருந்து எழுதிக்குவிக்கலாம் என்கிற கனவுகளோடுதான் வாழ்கிறேன்.

புத்தன் அவர்களது கருத்தை வாசிக்கும்போது புளகாங்கிதம் அடைந்தேன். என்னைப்போல விடுதலைக்காக சிறு துரும்புகளை அசைக்க முனையாமால் மலைகளையே அசைக்கிற மாபெரும் செயற்பாட்டாளராக அவர் இருப்பார் என்று தோன்றுகிறது. யாழில் எழுதி அதனைப் புத்தன் அவர்கள் வாசித்ததால் நான் என்னைப் பிரபலப் படுத்திவிடேன். திரு புத்தன் அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.

மதிப்புக்கும் அன்புக்கும் உரிய கறுப்பிக்கும் தமிழ் சிறிக்கும் எனது நன்றிகள்.

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிஞரின் சுஜாதாவுடனான அனுபவம் படித்தேன். என்ன விடயத்தில் முரண்பட்டீர்கள். அரசியல் ரீதியாகவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரின் சுஜாதாவுடனான அனுபவம் படித்தேன். என்ன விடயத்தில் முரண்பட்டீர்கள். அரசியல் ரீதியாகவா?

அது சிவ நாடார் என்கிற இந்திய பல்தேசிய கூட்டுதாபன அதிபரின் கருத்துமீதான எனது கட்டுக்கு அடங்காத கோபம்தான் காரணம். அதுபற்றிப் பேச விருப்பமில்லை. என்னைப் பற்றி உனக்குத் தெரியும்தானே தோழா. திருமலை கொழும்பு பயணத்தின்போது இராணுவம் நிரம்பியிருந்த மினி பஸ்ஸில் நடந்த சம்பவம்தொடர்பாக தோழன் பெளசார் உன்னிடம் சொல்லியிருப்பான் அல்லவா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது சிவ நாடார் என்கிற இந்திய பல்தேசிய கூட்டுதாபன அதிபரின் கருத்துமீதான எனது கட்டுக்கு அடங்காத கோபம்தான் காரணம். அதுபற்றிப் பேச விருப்பமில்லை. என்னைப் பற்றி உனக்குத் தெரியும்தானே தோழா. திருமலை கொழும்பு பயணத்தின்போது இராணுவம் நிரம்பியிருந்த மினி பஸ்ஸில் நடந்த சம்பவம்தொடர்பாக தோழன் பெளசார் உன்னிடம் சொல்லியிருப்பான் அல்லவா.

நலமா தோழா. சிவ நாடார் என்கிற இந்திய பல்தேசிய கூட்டுதாபன அதிபர் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் எனக்கேற்ப்பட்ட கட்டுக்கு அடங்காத கோபம்தான் எல்லாவற்றுக்கும் காரணம். அதுபற்றிப் பேச விருப்பமில்லை. துறவிக்கு வேந்தன் துரும்பென்று வாழ்கிற என்னைப் பற்றி உனக்குத் தெரியும்தானே தோழா. திருமலை கொழும்பு பயணத்தின்போது இராணுவம் நிரம்பியிருந்த பேருந்தில் நடந்த சம்பவத்தை தோழன் பெளசார் சொல்லியிருப்பான் அல்லவா.

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் அவர்களே, உங்களின் சுஜாதாவிடனான அனுபவங்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் அவர்களே, உங்களின் சுஜாதாவிடனான அனுபவங்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள்.

நன்றி நுணாவிலான், நான் மதிக்கிற எழுத்தாளர் தோழி தமிழ்க்கவியின் பேட்டியை இணைதிருந்தீர்கள் மிகவும் மகிழ்ச்சி. தோழி தமிழ்கவியிடம் எனது அன்பைத் தெரிவியுங்கள்.

ஜெயபாலன் அண்ணா.... உங்களுக்கு நிச்சயம் என்னை நினைவிருக்காது...கடந்த வருடமும் உங்களுக்கு 'மெயில்' போட்டுப் பார்தேன்,,,பதில் இல்லை

95/96 களில் 'சவோய்' திரையரங்கிற்கு முன்னால் உள்ள வீதியில் உள்ள உங்களின் வீட்டில் உங்களை சந்தித்து இருக்கின்றேன்... நானும் என் மன்னார் நண்பன் அமுதனுமாய்... வாசுகி அக்காவின் தேனீர் இன்னமும் நினைவில் இனிக்குது. அப்போது தான் 'சரிநிகரில்' எழுத ஆரம்பித்து இருந்தேன். நான் யாழ் பல்கலைகழக அனுமதி கிடைத்தும் போகாததனையிடு மிகவும் வருத்தம் அடைந்து போகுமாறு அறிவிரை கூறினீர்கள்....

சரிநிகர் 'சிவா', பெளசர், றஷ்மி, திருக்கோவில் கவியுவன், ஷகீப், நட்ச்சத்திரன் செவ்வியந்தியன் ஆகியோருடன் இலக்கியமும், அரசியலும் பேசி திரிந்த காலத்தில் உங்களின் தொடர்பு இனிமையாக இருந்தது. கவிதை மற்றும் வாழ்வு தரும் அனுபவங்கள் பற்றி நீண்ட நேரம் அளவளாவினீர்கள்...

எந்த உங்களின் குணம் எமக்கும் இடையிடையே சங்கடங்களை தேற்றுவித்ததோ அதே உங்களின் முரட்டுத்தனத்தால் சுஜாதாவுடன் முரண் பட்டுள்ளீர்கள்.. நானும் 'அம்பலத்தில்' சுஜாதாவுடன் 'கன்னத்தில் முத்தமிட்டால்' தொடர்பாக நீண்ட விவாதத்தில் ஈடுபட்டவன்...ஆனால் அவர் மிகுந்த பொறுமையாக பதில் தந்து கொண்டு இருந்தார்....

..காலம் எதற்காகத்தான் காத்திருக்கின்றது....ஒரு மன்னிப்பிற்காக இன்னொருவரின் உயிரை பற்றி வைக்கும் அளவிற்கு காலம் இரக்கம் கொண்ட வஸ்து அல்லவே....

Edited by NIZHALI

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் அவர்களே,

சிவாஜி சிவராமலிங்கம் உங்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர்.

ஏன்,எப்போது என்று கேட்க வேண்டாம்.

ஞானசம்பந்தா நீ எங்கே ....

நன்றி அஜீவன், கானப்பிரபாவுக்கு வழங்கிய பேட்டி எந்த வருடம் கொடுக்கப் பட்டது என்று தெரியுமா?

மிக தாமதமாக நான் இதை பார்க்கிறேன்.

சில வேலைப்பளுகளால் இங்கு வரவில்லை.

கானபிரபா எப்போது இப் பேட்டியை எடுத்தார் என்று தெரியாது............?

(சில காரணங்களுக்காக மின் அஞ்சலை நான் அகற்றியுள்ளேன் : நன்றி)

எனக்கு உங்களை 1985 களிலேயே தெரியும்!

என்னை உங்களுக்கு தெரியும்! :lol:

அப்போது நீங்கள் அடையாறில் இருந்தீர்கள் என்று நினைக்கிறேன்.

நான் சென்னை கே.கே.நகரில் இருந்தேன்........... :lol:

( அம்மன் கோயில் அருகே...)

Edited by AJeevan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[நலமா நிழலி,

இப்போது ஓரளவு சாதுவாகிவிட்டேன் என்று நினைக்கிறேன். என்னுடைய முற்கோபத்துக்கு எப்பவும் என்னைச்சூழ்கிற பெரும் பேறுகளளில் தடுமாறியோ அல்லது கொலை மிரட்டல்களுக்கு அஞ்சியோ என்னை இழந்துபோவேனோ என்கிற அச்சம் ஒரு முக்கியமான ஒரு காரணமாக இருக்கலாம். நீங்கள் குறிப்பிடும் 90களின் நடுபகுதியில் நடந்த முன்று சம்பவங்கள் நினைவு வருகிறது. மட்டக்களப்பு இராணுவமுகாமில் எனது நண்பர்கள் பசீர் சேகுதாவுத் ஒய்விண்ட் புக்க்ளரூட் முன்னிலையில் மேஜர் ஜெனரல் சக்கியுடன் வாதாடியது ஒன்று, ஆனைச் சோடாக் கம்பனிபோல இலங்கையில் நீங்கள்தான் பெரிய நிறுவனம் ஆனால் எங்கள் பையன்கள் கோக்காகோலா கம்பனிபோல. என்றாவது அரசைப் புறக்கணித்துவிட்டு இராணுவமும் புலிகளும் நேரடியாக பேசுகிற அவசியம் வரும். அப்போது என்னால் உதவ முடியுமென்று சொன்னேன். அதன்பின்னர் மருதமுனையில் ஒரு இரவு முஸ்லிம் அடிப்படைவாதிகளோடு மோதியது.நீ ஒருதமிழன்தானே என்றவர்களிடம் தமிழரது ஆயுதங்களுக்குப் பயந்து வன்னியிலோ மட்டக் களப்பிலோ முஸ்லிம்களது நியாயத்தைப் பேச ஒருபோதும் அஞ்சியதில்லை உங்களது ஆயுதத்துக்குப் பயந்து அம்பாறையில் தமிழர் தரப்பு நியாயங்கலை சொல்ல அஞ்சுவேன் என்று நினைக்கிறாயா என்று பாய்ந்தேன். அதே மாசம் படுவான்கரையில் துயமணி ஒழுங்கு செய்த சந்திப்பில் அமரர் அருள்வேந்தனிடம் முஸ்லிம்களின் கோரிக்கைகள் பற்றியே பேச வந்திருக்கிறேன் உங்கள் தகவலலாளர்களோடு பேசுவதுபோல என்னோடு பேசவேண்டாம் என பாய்ந்தேன். தமிழர்களையும் முஸ்லிம்களையும் உடைந்த இரும்பை ஒட்டுவதுபோல ஒட்டுவதையே எனது தவமாக செய்கிறேன் என்று உறுதிபடச் சொன்னேன். எல்லாத் தருணத்திலும் தலைக்குமேல் தொங்கிய வாழைப் பற்றிக் கவலைப் படவில்லை. பொறுமையாகப் பேசியிருக்கலாம். தளர்ந்து போய்விடுவேனோ என்கிற அச்சம் காரணமாக இருந்திருக்கலாம். நிறைய இழந்திருக்கிறேன் என்று என்னைச் சுற்றி இருப்பவர்கள் சொல்கிறார்கள். எனக்கு வேண்டிய சோறும் கூறையும் என் மனைவி தருகிறாள். ஆனால் நான் விரும்பிய வாழ்வை அடைந்திருக்கிறேன். உலகம் முழுவதும் என்னைக் காதலிக்கிற தோழர் தோழியர்கள் இருக்கிறார்கள். ஒரு எழைக் கவிஞனுக்கு இது போததாதா. நிழலி எனது மின் அஞ்சல் visjayapalan@gmail.com கடிதம் எழுது தோழா.

நன்றி தமிழ்ச் சிறி, உங்களை எனக்கு சிவாஜி அறிமுகப் படுதியிருக்கிறார் என்கிறீர்கள், எங்கென்று கேட்க்கவேண்டாம் என்கிறீர்கள். அப்படியானால் அது பல்கலைக் களகத்துகுப் பின்னே ரெயிவே கடவைப் பக்கமாய் இருந்த கள்ளுக் கொட்டிலாக இருக்கும் இல்லாவிட்டால் சுபாஸ் கபே தவறணையாக இருக்கும். சரிதானே? சிவராமலிங்கம் மாஸ்டர் மிகப் பெரிய மனிதர். சிவாஜி இப்ப சுவிசில் என்று சொன்னார்கள். எனக்கு மின்னஞ்சல் எழுதுங்களேன்

மகிழ்ச்சி அஜீவன், விரைவில் சுவிஸ் வர திட்டமிடுகிறேன். உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சிதரும்.

Edited by poet

மகிழ்ச்சி அஜீவன், விரைவில் சுவிஸ் வர திட்டமிடுகிறேன். உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சிதரும்.

நிச்சயமாக , தோளில் ஒரு பையோடு அடையாறில் சற்று நேரம் பேசினேன்.

நான் சத்துணவு திட்ட கட்டிடத்தில் ஒரு விழாவில் (T3S) பேசும் போது நீங்கள் என் பேச்சைக் கேட்டு விட்டு பாராட்டினீர்கள்.

லண்டனில் வாழும் ராஜா நித்தியன் அவர்களும் இன்று உயிரோடு இல்லாத : உயிரோடு இருக்கும் முக்கியமானவர்கள் பலரும் என்னோடு நின்றிருந்தார்கள்.

seedqv2.jpg

இருந்ததை இல்லை என்று சொன்னால்

அது பொய்யல்ல , நடிப்பு

தேவையற்றதை விட்டு வந்தால்

அது தொடரல்ல , கதை

அகம் தெரியாமல் உமிழ்கிறார்கள்

அகம்பாவமாய்

முகமல்ல இது

முகமற்ற மனிதர்களின்

சவம்.....

யார் நட்டாலும்

மரத்தின் கனியை சுவைப்பதற்கு

நட்டியவர்கள் இருப்பதில்லை

அடுத்த பரம்பரைக்காக

அதை விட்டுச் செல்கிறோம்......

இதுவே யதார்த்தம்!

நன்றி

Edited by AJeevan

கவிஞரே

கானபிரபா 2002ம் வருடம் எடுத்த பேட்டி அது!

sujathavai naan 2002 il interview eduthen.

Anbudan

Praba

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.