Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவாரசியமான ஒரு தொலைக்காட்சி விவாதம்

Featured Replies

ஒரு சுவாரசியமான தொலைக்காட்சி விவாதம் பற்றிப் பகிர்ந்து கொள்வதற்காக இப்பதிவு.

ஆறு புத்திசீவிகள், அவர்களுள் மூவர் நாத்திகர் மற்றையோர் ஆத்திகர். விவாதத் தலைப்பு "கடவுள் நம்பிக்கை நமக்கு நல்லதா அல்லது கெட்டதா" என்பதாகும்.

நாத்திகர் பிரிவினரின் தராதரம்: ஓருவர் நாடறிந்த ஓய்வுபெற்ற ஒன்கோலஜிஸ்ற் மற்றும் சிந்தனையாளர் இன்னொருவர் பிரபல பல்கலைக்கழகம் ஒன்றில் இருந்து ஓய்வு பெற்ற தத்துவவியல் பேராசிரியர். இன்னொருவர் அயல் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர், சிந்தனையாளர்.

ஆத்திகர் பிரிவினரின் தராதரம்: ஒருவர் நரம்பியல் விஞ்ஞானம் மற்றும் உளவியல் பேராசிரியர் (அடியேன் இவரது தீவிர இரசிகன்), இன்னொருவர் ஒரு பல்கலைக்கழத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் சிந்தனையாளர் மற்யைவர் எழுத்தாளர், ஆய்வாளர் என்பதோடு ஆன்மீகம்சார் சமூகவியற் செயற்பாட்டாளர்.

வாதப் பிரதிவாதங்கள் (எனது நினைவில் இருந்து...)

நாத்திகர்: அண்மையில் ஒரு பல்கலைக்கழகத்தில், கடவுள் நம்பிக்கை உடையோராகத் தம்மை அடையாளப் படுத்திய மாணவர் மத்தியில், "கடவுள் உங்களிடம் யாரையேனும் கொல்லச் சொன்னால் கொல்வீர்களா?" என்று ஒரு கருத்துக்கணிப்பினை நடாத்தியபோது, பதிலளித்தவர்களில் ஏழு விழுக்காடானோர் "ஆம"; என்று பதிலளித்திருந்தனர். என்னை யாரேனும் இப்படிக் கேட்டிருப்பின் நான் கூறியிருக்கக் கூறிய பதில், கடவுள் என்னிடம் யாரையேனும் கொல்லச் சொல்வதாக நான் உணர்ந்தால் நான் எனது மருந்துகளின் அளவினைத் தான் கூட்டுவேனே தவிர கொல்ல மாட்டேன் என்பதாயே இருந்திருக்கும். ஆக, கடவுள் நம்பிக்கை என்பது ஒரு மனிதனின் சிந்தனையை மழுங்கடித்துப் பேராபத்து விளைவிக்கின்றது (தனக்கு நிகழ்வது கடவுளுடனான சம்பாசனை அல்ல கலூசினேசன் என்ற வருத்தம் என்று கூட அவன் உணராது செய்வது). இதனால் தான் இன்று நம் உலகில் மதங்களின் பெயரில் ஒருவரை ஒருவர் கொன்று திரிகிறார்கள்.

ஆத்திகர்: "கடவுள் உங்களிடம் வந்து ஆரையேனும் கொல்லச் சொன்னால் கொல்வீர்களா?" என்ற கேள்வியைக் கேட்டதும் தயங்காது "எனது மருந்தின் அளவைத் தான் கூட்டுவேன்" என்கின்ற நீங்கள், கேள்வி ஒருவேளை இவ்வாறு இருந்திருந்தால், அதாவது "ஒரு பில்லியன் டொலர்களிற்காகக் கொல்வீர்களா?" என்றோ அல்லது "உங்கள் குழந்தையின் உயிர் பிழைக்கவேண்டும் என்றால் இன்னாரைக் கொல்லுங்கள் என்றால் கொல்வீர்களா" என்றோ அல்லது இவ்வாறு வேறொன்றாக இருந்திருந்திருந்தாலோ கொல்வீர்களா என்றால் உங்களது பதில் அத்தனை இலகுவில் வெளிவந்திருக்காது. அதாவது உலகில் எத்தனையோ காரணங்களிற்காக ஆத்திகரும் நாத்திகரும் கொலை செய்கின்றார்கள். கமியூனிசவாதிகள் செய்த மில்லியன் கணக்கான கொலைகளும் ஹிட்லரின் கொலைகளும் மதத்தால் விளைந்தன அல்ல. உலகில் நாத்திகர் நடாத்திய பெருங்கொலைகளிற்கான உதாரணம் மலிந்து கிடக்கின்றது, எனவே கொலைஞர் என்ற சமூக விரோதிகளை கடவுள் நம்பிக்கை தான் தோற்றுவிப்பதாகவும், கடவுள் நம்பிக்கை இல்லை எனின் உலகு அமைதிப்பூங்காவாக இருக்கும் என்பதும் அபத்தமான வாதம். கடவுள் நம்பிக்கை என்ற விடயத்தை நீக்கின் தேசியவாதம் போன்ற பிறிதொரு நம்பிக்கை அவ்வெற்றிடத்தை நிரப்பும். ஏனெனில் மனிதர்களின் உயிரியல் அமைப்போடு நம்பிக்கை பின்னிப் பிணைந்தது. ஏதாவது ஒரு நம்பிக்கை நமப்கு அவசியமானது.

ஆத்திகர்: ஒரு நம்பிக்கை அழிக்கப்படின் அதனால் உருவாகும் வெற்றிடத்தை பிறிதொரு நம்பிக்கை நிரப்பும் என்பதற்கு ஒரு விஞ்ஞானபூர்வமற்ற (anecdotal) ஒரு சம்பவத்தை உதாரணமாகக் கூற விரும்புகின்றேன். சிலகாலங்களிற்கு முன்னர் அரசியல் மற்றும் நம்பிக்கை தொடர்பான சமூகவியல் தொடர்பில் ஒரு கலந்துரையாடலிற்காக பலரதரப்பட்ட பங்காளர்களோடு ஒரு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கான தயார் படுத்தல்களில் ஒன்றாக எமது நாட்டின் பிரசித்திபெற்ற கருத்துக்கணிப்பு நிறுவனம் (கலப் போல்) கனடாவின் கியூபெக் மாநிலத்தில் (குறிப்பு: பிரிவினைவாதப் போக்குடைய கனடாவின் கியூபெக் மாநிலத்தின் மிகப்பெரும்பான்மையான சமயமாகக் கத்தோலிக்கம் இருக்கின்றது) ஒரு சுவாரசியமான கருத்துக் கணிப்பொன்றை மேற்கொண்டிருந்தது. அக்கருத்துக் கணிப்பு கண்டறிந்த விபரம் என்னவெனில், கத்தோலிகத்தை நிராகரித்த மிகப்பெரும்பான்மையானோர் பிரிவினைவாதிகளாக, அதாவது கியூபெக் தேசிய வாதிகளாக உள்ளார்கள். அதாவது, கடவுள் நம்பிக்கை நிராகரிக்கப்பட்டதனால் ஏற்பட்ட வெற்றிடத்தைத் தேசியவாதம் கியூபெக் மக்களில் நிரப்பியுள்ளது.

நாத்திகர்: நீங்கள் கூறுகின்ற கருத்துக்கணிப்பு கண்டறிந்த விபரத்தை இவ்வாறு கூட அர்த்தப்படுத்திக்கொள்ளலாமே: அதாவது, தேசியவாத பிரிவினைப்போக்கினைக் கொண்டிருந்த மக்களால் நெடுங்காலத்திற்கு கத்தோலிக்கம் என்ற அடாவடி மதத்தைப் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை...(பலத்த சிரிப்பு).

நாத்திகர்: ஒரு விடயத்தை நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். அதாவது, விலங்கு இராச்சியத்தில் இன்று மனிதன் ஆதிக்கசக்தியாகப் பரிணமித்து உள்ளான் என்றால், அதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக மனிதனின் நம்பிக்கை என்ற விடயம் ஏற்றுக்கொண்டே ஆகப்படவேண்டியது. அதாவது, ஆதி மனிதன் மரம் ஒன்று மின்னல் தாக்கி எரிவதைக் காண்கையில் "மின்னல் கடவுள்" "மரக்கடவுளுடன்" சேர்ந்து "தீக்கடவுள்" பிறந்தாக நம்பியதும், இத்தகைய ஒரு நம்பிக்கை அந்த மனிதனின் பயம் என்ற தடையை வெற்றி கொள்வதில் அவனிற்கு உதவியதும், பயத்தை வெற்றி கொண்டமை மனிதனின் உயர்வில் மிகமுக்கிய காரணி என்பதும் ஏற்றுக் கொள்ளப்படவேண்டியதே. மனிதர்களின் உயிரியல் அமைப்பானது நம்பிக்கை என்ற விடயத்தை உள்ளடக்கியதாகவே அமைகிறது. அதாவது, ஏதேனும் ஒன்றில் நம்பிக்கை வைக்க முடிவது எமது இருப்பிற்கும் உயர்விற்கும் இன்றியமையாதது. நம்பிக்கை என்ற மகத்தான தன்மையினால் ஏற்படக்கூடிய எண்ணற்ற நன்மைகள் தொடர்பில் எவரும் எதிர்க்கருத்து வைக்கமுடியாது. கடவுள் நம்பிக்கை என்பது இத்தகைய ஒரு ஆக்கபூர்வமான வழியில் மக்களால் பாவிக்கப்படுமேயாயின் கடவுள் நம்பிக்கை பற்றி எவரும் நோண்டத் தேவையில்லை. ஆனால் பிரச்சினை என்னவெனில், எனது கடவுள் மட்டும் தான் சரி நீ எனது கடவுளை நம்பவில்லை எனவே நீ சாத்தான் என்று மக்கள் கிளம்புவது தான் பிரச்சினை. கிறீஸ்தவ மதத்தை எடுத்துக் கொண்டால் அதற்குள்ளே ஏகப்பட்ட உப பிரிவுகள் என்பதோடு அந்த உப பிரிவுகள் ஒன்றோடொன்று பொருதுவது பிரச்சினையானது. ஓவ்வொருபிரிவும் தனது மார்க்கம் தான் சொர்கத்திற்கான வழி என்று மற்றையவர்களைச் சாத்தான்கள் என்பது தான் கடவுள் நம்பிக்கை ஏற்படுத்தும் பிரச்சினை.

ஆத்திகர்: கடவுள் நம்பிக்கை என்பது பல பொருதல்களிற்கு இன்றைய உலகில் காரணமாகின்றவற்றுள் ஒன்று என்பது உண்மை தானெனினும், பலரை ஒற்றுமைப்படுத்தி ஒன்றிணைக்கவும் அது பயன்படுகின்றது என்பதும் மறுக்கப்பட முடியாதது. நம்பிக்கை என்ற ஒன்று மட்டும் இல்லை எனில் மோதி மாண்டுபோகக் கூடிய பலரை நம்பிக்கை தனக்குள் இணைத்து வைத்துள்ளதும் கண்கூடு. இந்நேரத்தில் ஒரு விடயத்தை நாம் அவதானிக்க வேண்டும். அதாவது நம்பிக்கையும் அதனால் விளையும் சமூகப் பிரச்சினைகளும் என்பன கடவுள் நம்பிக்கைக்கு மட்டும் தான் பொருத்தம் என்று திரும்பத்திருப்ப நாத்திகர்கள் ஒரு அபத்தமாக வாதம் புரிகிறார்கள். ஆனால் இது உண்மைக்குப் புறம்பானது என்பதோடு அனைத்து நம்பிக்கைகளும் இத்தன்மை உடையனவே . இப்போ நாத்திகரை எடுத்துக் கொண்டால் இன்று நாத்திகம் "Atheist Evangelist" என்று கூறப்படும் அளவிற்கு அடிப்படைவாத நாத்திகமாக மாறிப்போயுள்ளது. எவ்வாறு கிறீஸ்த்தவ இவான்ஜலிஸ்ற் குழுமத்தினர் ஓயாது மற்றையவர்களைத் தமது மார்க்கத்திற்கு மாற்றும் வித்தத்தில் செயற்படுகிறார்களோ எவ்வாறு தம்மார்க்கத்தைச் சாராத அனைவரும் பரிதாபப்படவேண்டியவர்களாகவு

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விவாதத்தினை இலகு தமிழாக்கி தந்ததற்று நன்றிகள் :(:)

அப்பிடியே யாழிலை சபேசனின்ரை மற்றும் நெடுக்கின்ரை வாதத்ததையும் ஆங்கிலமாக்கி ஏதாவது ஆங்கில கருத்து களத்திலை போட்டு விடலாமே. சரி சரி என்னை முறைக்கிறது தெரியிது :wub::(

Edited by sathiri

வாதப் பிரதிவாதங்கள் (எனது நினைவில் இருந்து...)

அதாவது ஒரு ஆத்திகரின் "நினைவில்" இருந்து

  • தொடங்கியவர்

நன்றி சாத்திரி.

அதாவது ஒரு ஆத்திகரின் "நினைவில்" இருந்து

மொழிபெயர்ப்பு என்பதே கருத்துத் தொலைவிற்கும் திரிவிற்கும் வழிவகுக்கும் ஒன்று. இந்நிலையில், வேறு ஒரு மொழியில் பார்த்து இரசித்த ஒன்றை நேர இடைவெளியின் பின்னர் நினைவில் இருந்து தமிழ் படுத்தி எழுதி விட்டு நூற்றுக்கு நூறு வீதம் இதைத் தான் அவர்கள் சொன்னார் என்று கூறுவது

சாத்தியமற்றது. எனது பதிவை வாசிப்பவர்களிற்கும் அதை கோடிட்டுக் காட்டுவதற்காகத் தான் "எனது நினைவில் இருந்து" என்பதைக் குறிப்பிட்டிருந்தேன்.

இருப்பினும், எனது நினைவில் இருந்தவற்றை எனக்கு நான் நேர்மையாக எழுதியுள்ளேன் என நம்புகின்றேன்.

வார்த்தை ஜாலம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது... புரிந்து கொள்ள இரு முறை படிக்க வேண்டி இருந்தது... நண்றி...

  • தொடங்கியவர்

வார்த்தை ஜாலம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது... புரிந்து கொள்ள இரு முறை படிக்க வேண்டி இருந்தது... நண்றி...

என்னால் முடிந்தவரை முயன்றுள்ளேன். வாசித்துக் கருத்துக்கூறியமைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட விடயம்.

இதற்கு வாதவிதண்டாவாதம் தேவையில்லை

  • தொடங்கியவர்

கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட விடயம்.

இதற்கு வாதவிதண்டாவாதம் தேவையில்லை

ஒரு வகையில் நீங்கள் கூறுவது சரியாகப் படினும், இம்முனையில் விவாதங்கள்

நடக்கத் தான் செய்கின்றன. அவ்வாறு நடந்த ஒரு விவாதம் தான் இங்கு பகிரப்பட்டுள்ளது.

எதனால் இத்தகைய விவாதங்களிற்கான ஆர்வம் பலதரப்பட்டவர்களிடையேயும் உலகளாவிய அழவில்

தொடர்ந்தும் காணப்படுகின்றது என்பது சிந்தனைக்குரியதொன்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.