Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்பாறை தேர்தல் களத்தில் விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி. ??

Featured Replies

தமிழீழ விடுதலைபுலிகளின் இலங்கையில் பதிவு செய்ய பட்ட அரசியல் கட்சியான விடுதலைபுலிகள் மக்கள் முன்னணி PFLT அம்பாற்றை மாவட்டதில் 17 தேர்தல் வேட்பாளர்கள் தேர்தலில் நிற்பதுக்காக மனுத்தாக்கல் செய்து உள்ளார்கள் எண்று BBC சிங்கள சேவை செய்தி வெளியிட்டு உள்ளது

அம்பாறை அரச அதிகாரியான(GA) சுனில் கன்னன்கரா தெரிவிக்கையில் 1989 ம் ஆண்டு விடுதலைப்புலிகளினால் பதிவு செய்யப்பட்ட கட்சியான விடுதலைபுலிகள் மக்கள் முன்னணியினர் 17 வேட்பாளர் விண்ணப்பமனுக்களை சமர்பித்து உள்ளார்கள் எண்றும், அந்த விண்ணப்பங்களில் அந்த கட்ச்சியின் பொது செயலாளர் நாயகம் "யோகரட்ணம் யோகி" அவர்கள் கையொப்பம் இட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்..

17 மனுக்களில் 14 மனுக்களில் தேசிய அடயாள அட்டை இலக்கங்கள் குறிக்கப்பட்டு, 392 காலிவீதி கொழும்பு எண்று விலாசமிடப்பட்டும் உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது. இந்தமனுக்களின் இரண்டு பெண்களினதுமாம்..

LTTE political party hands in nominations

Seventeen to contest under PFLT

Peoples Front of Liberation Tigers (PFLT), the political party of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) registered with the Election Commissioner's Department has handed over nomination papers for the forthcoming Eastern Provincial Council Elections.

The nomination papers were handed on Wednesday to the Ampara Government Agent, Sunil Kannangara.

Seventeen candidates including two women handed over the nomination papers signed by the Secretary of the Peoples Front of Liberation Tigers, Yogaratnam Yogi.

http://www.bbc.co.uk/sinhala/news/story/20...new_party.shtml

Edited by அகிலன்

  • கருத்துக்கள உறவுகள்

bbc கதை விடுகிறதா அல்லது என்ன? . வேறொரு செய்தி ஸ்தாபனங்களிலும் இச்செய்தி வரவில்லை.

இது உண்மையான செய்தியாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி....

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறையில் இப்போது என்ன தேர்தல் நடைபெறவுள்ளது?

லங்கா ஈ நியூஸ் தளமும் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. ஆனால் உண்மை நிலை தெரியாது.

A political party affiliated to LTTE file nominations for two districts in the Eastern Province

(Lanka-e-News, 2008 April 02, 9.30 PM) Tamil People's Liberation Front (TPLF), a registered political party affiliated to the LTTE today filed nominations to contest for two districts, Digamadulla and Trincomalee, in the Eastern Province.

One 'Yogi' has signed the nominations.

Reportedly, the nominations have been certified by a Justice of Peace living in Colombo area.

புலிகள் சிறிலங்காவின் அரசியல் அமைப்பை தேர்தல்களை ஒருபோதும் ஏற்றது கிடையாது. அப்படி தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியமிருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பே தேர்தலில் போட்டியிட்டிருக்கலாம். புலிகளைத் கிழக்கு மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்ற பரப்புரைக்காகக் கூட தமிழ் மக்கள் விடுதலை முன்னணியின் பெயரில் அரசே ஏற்பாடுகளைச் செய்கிறதோ தெரியாது. (சில காலங்களிற்கு முன்னர் தமிழ் மக்கள் விடுதலை முன்னணி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலிலிருந்த நீக்கப்பட்டிருந்தது).

உரியவர்கள் இது தொடர்பான விளக்கத்தை தமிழ் மக்களிற்கு விரைவில் வழங்குவார்கள் என எதிர்பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் கட்சியைப் பயன்படுத்தி மோசடி

[ வியாழக்கிழமை, 03 ஏப்ரல் 2008, 11:11.06 AM GMT +05:30 ]

கிழக்கு மாகாணசபைத்தேர்தலுக்காகத் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் கட்சியின் கீழ் மட்டக்களப்பு திருகோணமலை மற்றும் அம்பாறையில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மூன்று இடங்களிலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் கட்சியின் செயலாளர் யோகரட்ணம் யோகியின் கையொப்பத்தின் கீழ் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

எனினும் இது தமிழ் மக்கள் மத்தியில் பிழையான கருத்தைக் கொண்டுசெல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் ஆணையகத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுப்பட்டியலில் யோகரட்ணம் யோகியைப் போன்ற கையொப்பத்தை இட்டு சமர்பிக்கப்பட்டுள்ள இந்த வேட்புமனுப்பட்டியலில் சிங்களவர்களின் பெயர்களே பதிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமது கட்சியின் பெயரைப் பயன்படுத்திப் போலியான வேட்புமனுப் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக யோகி மாத்திரமே ஸ்ரீலங்காவின் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யமுடியும். எனினும் அது தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமில்லை என்ற அடிப்டையிலேயே இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிள்ளையான் அணி அரசாங்கக்கட்சியுடன் இணைந்து கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் போட்டியிடும் நிலையில் கருணா அணியின் சார்பில் வீரா என்பவரின் தலைமையில் சுயேட்சைக்குழு ஒன்று மட்டக்களப்பில் தமது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/view.php?2be1Ebdjb...Ecebd0e0Jd0fCde

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.