Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பரியோவான் கல்லூரி (சென்.ஜோன்ஸ் கொலீஜ்) ...!!!

Featured Replies

  • தொடங்கியவர்

ஓம் சித்திர மாஸ்டர் என்னையும் நல்லா ஊக்குவிச்சவர் படங்கள் கீறுவதற்கு. நான் முன்பு படித்த காலத்தில் அந்தமாதிரி படம் கீறுவன். அவர் நான் கீறும் படத்தை பார்த்து மிகவும் ரசிப்பார். எனது முதுகில் தட்டி கெட்டிக்காரன் எண்டு சொல்லுவார். வகுப்பில் இருக்கிற மற்றைய மாணவர்களுக்கு எனது படத்தை தூக்கிக்காட்டி பாருங்கடா இவன் எப்பிடி படம் வரைஞ்சு இருக்கிறான் எண்டு சொல்லி சந்தோசப்படுவார். நான் ப்டம் கீறும்போது எனக்கு பக்கத்தில வந்து நின்று எப்படி படம் கீறுறன், எப்படி கலர் அடிக்கிறன் என்று பார்ப்பார்.

அவரது பெயர் தேவராஜனோ... தேவானந்தனோ எண்டு தேவ என்று தொடங்கும் என்று நினைக்கின்றேன். இப்போது நினைவில் இல்லை.

அமைதியானவர், நல்லவர். பருத்தித்துறையில் இருந்து சைக்கிளில், பஸ்ஸில் வாறவர். அவரின் மகன்மாரும் சென்.ஜோசில்தான் படித்தார்கள்.

ஆனால் வகுப்பில குழப்படி செய்யுற ஆக்களுக்கு தாராளமா அடி போடுவார். :icon_mrgreen:

  • Replies 52
  • Views 12.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பாடசாலைக் கால பசுமையான நினைவுகள்:

எங்களுக்கு சிறீகரன் எண்டு ஒரு மாஸ்டர் விலங்கியல் கொஞ்சக்காலம் படிப்பிச்சார். இப்ப அவர் வைஸ் பிரின்சியா இருக்கிறதா மேலுள்ள காணொளியில் பார்த்த மாதிரி இருக்கிது.

இவர் மிகச்சிறந்த ஒரு ஆசிரியர் விலங்கியல், தாவரவியல் படிப்பிப்பதற்கு.. ஆனா ஆள் கொஞ்சம் மோசமான பேர்வழி. அதாவது ஆசிரியர்களில் ஒரு ரெளடி - பயங்கரவாதி எண்டு சொல்லலாம்.

வகுப்புக்கு வந்தா நிறைய பகிடிகள் எல்லாம் விடுவார். பகிடி விடேக்க உரத்து கதைச்சுக்கொண்டு இருந்துபோட்டு ஆகவும் அந்த சிரிப்பான கிளைமாக்ஸை சொல்லேக்க வொலியூமை நல்லா குறைச்சு இரகசியமாக சொல்லுவார். இதால முன் இருக்கைகளில இருக்கிற பெடியங்களுக்கு மாத்திரம்தான் அவர் சொன்ன பகிடி விளங்கும். அவங்கள் சத்தம் போட்டு ஹாஹாஹா... எண்டு வகுப்பு அதிரும்படியா சிரிப்பாங்கள். பின்னால இருக்கிற ஆக்களும் சும்மா சிரிப்பீனம்... ஆனா அவேக்கு பகிடி விளங்கி இருக்காது. அப்ப என்ன செய்வீனம் எண்டால் உடன முன்னால இருக்கிறவங்களிட்ட என்னவாம் என்னவாம் என்ன சொன்னவர் எண்டு கேட்பீனம். ஹாஹா.. ஒரே பகிடியா இருக்கும்.. :(

பிறகு முன் இருக்கையில யாராவது அவர் படிப்பிக்கேக்க கொட்டாவி விட்டால்... டேய் சாத்தடா கதவ! எண்டு சொல்லுவார். :lol:

பிறகு சில பெடியங்களுக்கு அவர பிடிக்காது. ஏன் எண்டால் குறிப்பிட்ட சிலரை போட்டு அறு அறு எண்டு அறுத்து நையாண்டி செய்வார். குறிப்பாக கொஞ்சம் பணக்கார ஆனால் ஒழுங்காக படிக்காத பெடியங்களுக்கு. அப்ப இவர் நக்கல் அடிக்கேக்க அவேள் டென்சனாகி முறைச்சுப் பார்ப்பீனம். பிறகு அதுக்கு இவர் என்ன சொல்லுவார் எண்டால்...

டேய் இவன் என்ன முறைச்சுப் பார்க்கிறத பார்க்க எனக்கு சரியான பயமா இருக்கிது. இவன் இப்ப என்ன எழும்பி வந்து அடிக்கப்போறான் போல இருக்கிது. ஐயோ யாராவது இவன் என்னப்பார்க்காமல் இடையில வந்து மறையுங்கோடா எண்டு சொல்லுவார். ஹாஹா.. :lol:

ஆனாலும்.. எனது பாடசாலை வாழ்க்கையில் நான் பார்த்த மிகவும் கோரமான - அகோரமான - ஓர் ஆசிரியர் ஓர் மாணவனை மிகவும் துன்புறுத்திய சம்பவமும் இவர் வகுப்பிலேயே நடைபெற்றது.

அது என்னவெண்டால்..

இவர் கொஞ்ச காலம் எமக்கு அக்டிங்க் மாஸ்டராக படிப்பிச்சார். அதாவது இன்னொரு மாஸ்டர் இல்லாத காரணத்தால் தற்காலிகமாக அவருக்கு பதிலாக இவர் படிப்பிச்சார்.

அப்ப என்ன நடந்திச்சிது எண்டால் ஒரு நாள் இவர் வகுப்புக்கு வர இல்லை. பெடியங்களும் பெல் அடிச்சுஆள காண இல்லை எண்டு தெரிஞ்சதும் இன்னொருத்தன ஸ்டாவ் ரூமுக்கு அனுப்பினாங்கள் இவர் இருந்தால் சொல்லி கூட்டிக்கொண்டு வரச்சொல்லி.

அவனும் ஸ்டாவ் ரூமுக்கு போனால் அங்க இவர் மற்ற வாத்திமாரோட இருந்து கரம்போர்ட் என்னமோ விளையாடிக்கொண்டு இருந்து இருக்கிறார். இவனும் போய் "சேர் நீங்கள் தான் இப்ப எங்களுக்கு வகுப்பு எடுக்கவேணும், ஏன் வர இல்லை" எண்டு கேட்டு இருக்கிறான். இவருக்கு அவன் அப்பிடி கேட்டது மற்ற வாத்திமாருக்கு முன்னால கொஞ்சம் அவமரியாதையா போட்டிது. "சரி நீ போ நான் வாறன்" எண்டு சொல்லிப்போட்டு சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக வகுப்புக்கு வந்தார்.

வகுப்பு வந்த உடன, தன்னை கூப்பிட வந்த பெடியனை முன்னுக்கு வரச்சொல்லி கூப்பிட்டார். அவனும் போனான்.

ஆ.. கடவுளே...

அவனுக்கு ஆடு, மாட்டை அடிப்பது மாதிரி.. தனது கையை மிகவும் பலமாக ஓங்கி "சளார் சளார் சளார்" என்று வகுப்பு அதிரும்படியாக அடுத்து அடுத்து அவனது முகத்தில் - சொக்கையில் - அதுவும் ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் மீண்டும் அடித்தார். பளீர் பளீர் எண்டு அடி விழுந்திச்சிது.

ஒவ்வொரு முறையும் அடிக்கும் போது ஒவ்வொரு அறிவுரை சொல்லி அடிவிழுந்தது.

இனி வாழ்க்கையில இப்படி செய்யாத சரியோ...

இத இனி வாழ்க்கையில நீ மறக்கக்கூடாது...

இப்பிடி சொல்லிச் சொல்லி... நான் நினைக்கிறன்.. சுமார் 05 நிமிடங்கள் சொக்கையில் அறை விழுந்தது - இருபது முப்பது தடவைகள்...!! அதாவது ஆமிக்காரன் விட்டு விட்டு ஆட்லறி குண்டு அடிக்கிறமாதிரி... :blink:

வகுப்பில எல்லாரும் மயான அமைதியுடன் இருந்தம். ஒருவருக்கும் அவருக்கு எதிராக - எமது சக மாணவனுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முடியவில்லை. இதை இப்ப நினைக்கவும் எனக்கு வெட்கமாக இருக்கின்றது. சின்னப்பிள்ளைகளிற்கு அடிப்பது வேறு பிரச்சனை. ஆனால் ஏ.எல் மாணவனுக்கு இப்படி அடித்தது மிகவும் கேவலம். ஆனால் நாங்கள் எல்லாரும் மூளை சலவை செய்யப்பட்டு இருந்ததால் அந்த துன்பகரமான - கேவலமான காட்சியை பார்ப்பது தவிர வேறு ஒன்றும் எங்களால் செய்ய முடியவில்லை.

இறுதியில் அடி ஓய்ந்தது. அவன் அப்படியே தனது மேசையில் போய் குப்பறப்படுத்துக்கொண்டு அழுதுகொண்டு இருந்தான். அவர் அடித்த அடியில் அவனது முகம் - சொக்கை கொழுக்கட்டை மாதிரி சுமார் இரண்டு அங்குலம் தடிப்பில் பயங்கரமாக வீங்கி இருந்தது. முகத்தில் இருந்த பருக்கள் எல்லாம் உடைந்து இரத்தல் கசிந்து வடிந்தது. ஒரு கோரமான காட்சி என்று சொல்லலாம். ஆமிக்காரன் ஆக்களுக்கு இப்பிடி அடிப்பானோ எண்டுறதே கேள்வி. ஏன் எண்டால் அவ்வளவு கோரமாக அடிவிழுந்தது. :blink::blink::lol:

அவன் மறுநாள் ஸ்கூலுக்கு வரவில்லை. அவனது அப்பா ஒரு பேராசிரியர். அவர் மகனுக்கு நடந்தவிடயம் பற்றி அறிந்து மிகவும் கோவம் அடைந்து இருந்தார். மறுநாள் அதிபரிடம் வந்து சிறீகரன் மாஸ்டர் பற்றி முறைப்பாடு செய்தார். இதனால் சிறீகரன் மாஸ்டருக்கு இன்னும் வெட்கம் வந்துவிட்டது. இதன்பிறகு அவர் அந்த மாணவனுடன் கதைப்பதே இல்லை. வகுப்புக்கு வந்தால் அவன் பக்கம் அவர் பார்க்கக்கூட மாட்டார்.

இப்போது அந்த மாணவன் மிகச்சிறந்த ஒரு மருத்துவராக பணியாற்றிக்கொண்டு இருக்கின்றான். :(

எனது வாழ்க்கையில் ஒரு ஆசிரியர் மாணவனை இவ்வளவு கேவலமாக ஆடுமாட்டை போட்டு அடிப்பதுபோல் நான் வேறு ஒரு இடமும் காண இல்லை.. :blink: சும்மா டிசுப்பிலின் எண்டு சொல்லிவிட்டு பிழையான வழிகளில் மாணவர்களுக்கு தண்டனை கொடுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதே சம்பவம் இங்கு கனடாவில் நடைபெற்று இருந்தால் மேற்கண்ட ஆசிரியர் கம்பி எண்ணி இருக்கவேண்டியதுதான். இதைவிட அவரது ஆசிரியர் பதவியும் பறிபோய் இருக்கும்.

ஓர் சிறந்த ஆசிரியர் - மிகச்சிறப்பாக மாணவர்களுக்கு கற்பிக்கக்கூடியவர் - இப்படியான செயலில் ஈடுபட்டது மிகவும் துரதிஸ்டம்...!!

தொடரும்..

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன காட்டுமிராண்டித் தனமா இருக்குது. சென் ஜோன்ஸ் என்று பெயர்தான் வெளில.. உள்ள காட்டுமிராண்டித்தனமா எல்லோ பிகேவ் பண்ணி இருக்கினம்.

நாம படிச்ச பள்ளிக்கூடத்தில இப்படி எல்லாம் இல்லை. பாடம் பிடிக்கவில்லை ஆசிரியரைப் பிடிக்கவில்லை என்றால் எழும்பி லைபிரரிக்குப் போகலாம்..! யாரும் கேட்கமாட்டார்கள். ஆனால் சோதனை வரும் போதுதான் பிரச்சனை..! :blink:

  • கருத்துக்கள உறவுகள்

சென்ரல், சென்ஜோன்ஸ் மாட்ச் நடக்கும்போதெல்லாம் எப்பவும் நான் சென்ஜோன்ஸ் பக்கம்தான். காரணம் வேறொன்றுமில்லை எனது அண்ணா சென்ரலில் படித்தவர். அதுதான். சென்ரல் தோக்கும்போதெல்லாம் எனக்கு அண்ணாதான் அந்த ஆசிரியர். :blink::blink:

அதே போல் தான் ரோனி கணேசனும்... சின்ன சின்ன தவறுகளை மதிப்பார்...ஆனால் எல்லை மீறினால் ...மல்ரி பரல்தான்....

முன்னாள் அதிபர் தனபாலனும் அப்படித்தான்... அவரிட்ட விடயம் போனால் அவ்வளவு தான்... சிக்சர்தான்..!

மற்ற ஆசிரியர்கள் பரவாயில்லை...ஜொசப் ஆசிரியர் காதில தோடு போடுவார்....அதாவது காதில நுள்ளுவார்...!

  • தொடங்கியவர்

நெடுக்காலபோவான், பெரும்பாலும் கிறீஸ்தவப் பாடசாலைகளில் இப்படி மாணவர்களுக்கு தண்டனை வழங்குவது அதிகம். எங்கட ஸ்கூலாவது பரவாயில்லை. ஆனா சென்.பற்றிக்ஸ் கல்லூரி என்றால் சொல்லி வேலை இல்லை. எதற்கு எடுத்தாலும் அடிதான். எமது கல்லூரியில் ஓரிரண்டு பாதிரியார்கள் (பாதேர்ஸ்) படிப்பிச்சார்கள். ஆனால், சென்.பற்றிக்ஸ் கொலீஜில் பாதிரியார்கள் ஆசிரியர்களாக இருப்பது அதிகம். அவர்களிடம் அடி வாங்கினால் அதோ கதிதான். :icon_mrgreen:

எனது நண்பர்கள் பலர் சென்.பற்றிக்ஸ் ஹொஸ்டல் - விடுதியில் இருந்து படித்தார்கள். அவர்கள் அங்கு நடைபெறும் கொடுமைகள் பற்றி எனக்கு அடிக்கடி சொல்லுவார்கள். சாப்பாடுகூட குறிப்பிட்ட அளவுக்கு மேல் கொடுக்கமாட்டார்களாம். எங்கட ஸ்கூல் ஹொஸ்டலில் சாப்பாட்டுக்கு ஆப்பு வைக்க மாட்டார்கள். சாப்பாடு தாராளமாக கொடுப்பார்கள்.

மாணவர்களை ஆசிரியர்கள் வெளிப்படையாக ஆக்களுக்கு முன்னாலும் அடிப்பார்கள். இளவாலை சென்.ஹென்றீஸ் கல்லூரி உதைபந்தாட்டத்திற்கு பெயர் பெற்றது. அதுவும் ஒரு கிறீஸ்தவ கல்லூரி. உதைபந்தாட்ட போட்டியின்போது வடிவாக விளையாடாத மாணவர்களிற்கு இடைவேளை, மற்றும் மட்ச் முடிந்தபின் அவர்களது கோர்ச், மற்றும் பாதர்கள் பிழைவிட்டவர்களை கூட்டிக்கொண்டு போய் கண்டபடி அடிப்பார்கள்.

பிள்ளைகளை அடிப்பதன் மூலம்தான் ஒழுங்காக வளர்த்து எடுக்கமுடியும் என்ற கொள்கையுடன் எனக்கு உடன்பாடு இல்லை. கொஞ்சம் வெருட்டி வைப்பதில் பிழை இல்லை. ஆனால், எடுத்ததற்கெல்லாம் அடிப்பது மற்றும் கடுமையான, மோசமான தண்டனைகள் கொடுப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதோடு அது பயனும் அற்றது...

மற்றது சென்ரல் கொலீஜ் பெடியங்கள் செய்யும் சேட்டைகள், குழப்படிகள், ரவுடித்தனங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. இது எல்லாருக்குமே தெரியும். வேணுமென்றால் அப்படி அளவு கணக்கு இல்லாமல் குழப்படி செய்யும் பெடியங்களுக்கு ரெண்டு தட்டு தட்டினாலும் பரவாயில்லை. :wub: ஆனால், சும்மா அப்பாவிகளை தண்டிப்பது சுத்த வேஸ்ட். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கு,

கொலை செய்வது மிலேச்சதனம். அதில் மரணதண்டனையும் அடங்கும். அப்புறம் டெலோதானே ஆனந்தராஜாவை கொன்றதாக சொன்னனீர்கள்? நீங்கள் சொல்லுற படி பார்த்தால் ஒட்டுக்குழுக்களும் சில நல்ல வேலையள் செய்திருக்கிறது போல தெரியுது.

மூளை வளர்ச்சியை பற்றி நீங்கள் சொன்னது சரிதான். ஆறு வயசுக்கு மேல வளரவில்லை போலதான் கிடக்குது. சும்மா தமாசுதான் கோவிக்காதீங்கள். நீங்கள் சொன்னது உயிரியல் ரீதியா சரியா பிழையோ தெரியாது. நான் சொல்ல வந்தது மூளையின் விருத்தியை. வளர்ச்சி என்பதை விட விருத்தியே சரியான பதமயிருக்கும்.

இது உங்களுக்கும் முதலே விளங்கியிருக்கும் ஆனாலும் சும்ம ஒருக்க நெடுக்கால போய் பாக்கிறீர்கள் போல.

நடக்கட்டும் நடக்கட்டும்.

ஆனா அடிக்கிரதை பற்றி நீங்கள் சொன்னது ரொம்பச்சரி. ஊரில எம்மை பாடசாலைகளில் செக்கு மாடு மாதிரியெல்லொ போட்டடிக்கிரவை. அதிலும் பற்றிக்ஸ் என்டால் அடி தூள் தான்.

இஞ்ச என்னடாண்டா பிள்ளையள் டீச்சருக்கு அடித்து கட்டாய லீவில போக வைக்குதுகள். இதுவும் சரியில்லை அதுவும் சரியில்லை. ஒரு நடுநிலையான கண்டிப்பு வேணும்.

Edited by yarlpriya
ஒருமையில் எழுதியவை திருத்தப்பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி குறைனினையாதேயுங்கோ. உங்கட பதிப்பில ஓ எல் என்பதை தவறாக அடித்திருக்கிறீர்கள். ஒரே சமயத்தில் விரசமாயும் அதே நேரம் சிரிப்பாயும் இருக்கு. ஒருக்கா மாத்திவுடுங்கள்.

டோனி கனேசனுக்கு ஒருநாள் கொஸ்டலில லைட்டை நூத்துபோட்டு போட்டு இருட்டடி விழுந்ததாய் கேள்வி. 1990 என் நினைக்கிறேன். சேர் சில நாட்க்கள் ஸ்கூலுக்கு வரேல்ல.

Edited by yarlpriya
ஒருமையில் எழுதியவை திருத்தப்பட்டுள்ளன.-யாழ்பிரியா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம படிச்ச பள்ளிக்கூடத்தில இப்படி எல்லாம் இல்லை. பாடம் பிடிக்கவில்லை ஆசிரியரைப் பிடிக்கவில்லை என்றால் எழும்பி லைபிரரிக்குப் போகலாம்..! யாரும் கேட்கமாட்டார்கள். ஆனால் சோதனை வரும் போதுதான் பிரச்சனை..! :icon_mrgreen:

சூப்பர் பள்ளிக்கூடமா கிடக்கு! எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் படிச்ச(?) பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் படிப்பிக்கிறது பிடிக்காட்டி வெளிய போய் "தம்மே" அடிக்கலாம். சோதனை வந்தாலும் பிரச்சினை இல்லை ஆசிரியரே குதிரையும் ஓடுவார்.

டோனி கனேசனுக்கு ஒருநாள் கொஸ்டலில லைட்டை நூத்துபோட்டு போட்டு இருட்டடி விழுந்ததாய் கேள்வி. 1990 என் நினைக்கிறேன். சேர் சில நாட்க்கள் ஸ்கூலுக்கு வரேல்ல.

மனுசன் 1995 ல் இராணுவம் முன்னேறிப் பாய்ஞ்சு வட்டுகோட்டையை கைப்பற்றினபோது அகப்பட்டவர்... பிறகு புலிப்பாய்ச்சலுக்கு பின் தான் பாடசாலை திரும்பினவர்...! இராணுவத்துக்கு கீழ இருந்து தான் பட்ட அனுபவங்களை எல்லாம் கதை கதையாய் சொன்னார்...!

இவர் இராணுவத்திட்ட மாட்டுபட்டுட்டார் என்று நம்ம் பசங்க ரொம்ப சந்தோசப்பட்டாங்க...

  • தொடங்கியவர்

ஐயோ பாவம் இஞ்ச கொஞ்சப்பேரி ரொனியிட்ட அடிவாங்கி இருக்கிறீங்கள் போல இருக்கிது. நான் ரொனியிட்ட படிக்க இல்ல. ஆனா அவரப் பார்த்தால் எனக்கு கோமாளி மாதிரி இருக்கும் - அவரது நடை, உடை, பாவனை.

அவர் கூட அடிக்கிறவரா ஆக்களுக்கு.. ஹாஹா இப்பத்தான் இது தெரியும்.

உங்களுக்கு கணபதிப்பிள்ளை மாஸ்டர் எப்பிடி அடிக்கிறவர் எண்டு தெரியுமோ? அடிக்கிறது குறைவு. ஆனா... ரெண்டு காதுக்கும் பக்கத்தில இருக்கிற தலைமயிரை பிடிச்சு அப்பிடியே அந்த மயிரால ஆக்கள தூக்குவார். பெடியங்கள் ஊஊஊஊஊ :icon_mrgreen: எண்டு வேதனை தாங்க ஏலாமல் கத்துவாங்கள். அவர் காதுக்கு பக்கத்தில இருக்கிற - (முகத்தின்ட இரண்டு பக்கமும் இருக்கிறது - நாங்கள் முகச்சவரம் செய்யேக்க வெட்டிறது - அதுக்கு என்ன பெயர் எண்டு தெரிய இல்ல) மயிர பிடிச்சு தூக்கேக்க ஆக்கள் அப்பிடியே சிலோ மோசனில நோ கூடக் கூட குதிக்கால காலத்தூக்குவீனம். :icon_mrgreen: ஹாஹா

நான் ஒருநாளும் கணபதிப்பிள்ளை மாஸ்டரிட்ட அடி வாங்க இல்லை. அவர் என்ட காது மயிரப்பிடிச்சு என்ன தூக்கவும் இல்ல ஒருநாளும்.. :wub:

ரொனி அடிச்சாலும் அவர் ஒரு நல்ல நகைச்சுவையான ஆசிரியர்..! கொஞ்சம் நடிகர் கமல் சாடை அவரிட்ட உண்டு...

எங்களுக்கு அவர் உடற்கல்வி, மற்றும் உடற்பயிற்சி வகுப்புக்கள் எடுத்தவர்...அவரது அணுகுமுறை ரொம்ப வித்தியாசம்..நோட்ச் தாராமலே வடிவா படிப்பிப்பார்..

உடற்பயிற்சி வகுப்பின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விளையாட்டு.. கிரிக்கட், உதைபந்து.. கிளித்தட்டு...சில சமயம் தொடர் ஓட்டம்.. எல்லா மாணவருக்கும் கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கொடுப்பார்...!

சில நேரம் இடைவேளையின் போது எங்களுடன் கிரிக்கட் விளையாடுவார்..!

கணபதிப்பிள்ளை ஆசிரியர் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன்....! அவரிட்ட நான் படிக்கவில்லை..!

  • தொடங்கியவர்

ரொனியில கமலின்ட சாயல் இருக்கிதா? ஆள் கொஞ்சம் ஸ்டைலான ஆள்தான். :wub:

ஓம் அவருக்கு சின்னப்பிள்ளைகளோட நல்லா பொழுதுபோகும்.. ஆளும் ஒரு சின்னப்பிள்ள மாதிரித்தான்.

நேற்று பிக் மட்ச் ஆரம்பமானதாம்.. பார்ப்போம் என்ன ரிசல்ட் என்று..?

Edited by லீ

  • தொடங்கியவர்

ஓம் நானும் உதயன் இணையத்துக்கு போய் தேடிப்பார்த்தன். ஒரு இளவையும் காண இல்ல. வழமையா உதயன் இணையத்தில பிக் மட்ச் பற்றி உடனுக்குடன் தகவல் வாறது. யாருக்காவது ஸ்கோர் தெரிஞ்சால் அறிவியுங்கோ. இல்லாட்டி யாழ்ப்பாணத்துக்கு கோல் எடுத்தும் அறியலாம் எண்டு நினைக்கிறன். ஆனா இப்ப எனக்கு அங்க ஸ்கோர் சொல்லக்க்கூடிய அளவில தெரிஞ்ச ஆக்கள் ஒருத்தரும் இல்ல. :D

  • தொடங்கியவர்

சென்.ஜோன்ஸ் பிக் மட்சில தோத்துப் போச்சிது. தோல்விய ஒப்புக்கொள்ளத்தான் வேணும்.

தோற்கிறது, வெல்லிறது வேற பிரச்சனை. ஆனா இவேள் இப்பிடி 50, 100 ஓட்டங்களோட கைவீசிக்கொண்டு திரும்பி வந்து இருக்கிறீனம் எண்டால் இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

நான் அறிஞ்ச ஒரு காரணம்...

சென்.ஜோன்ஸ் கிரிக்கட் ரீமில் விளையாடும் பெடியங்களுக்கு தலைக்கனம், பெருமை அடிக்கிற பழக்கம், படம் காட்டிற பழக்கம் அதிகம்...

பலராலும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட மகாலிங்கம் மாஸ்டரிண்ட மகன் காண்டீபன் தலமை தாங்கி நடந்த பிக் மட்சில்... காண்டீபன் காலை வாறினதுக்கும் இப்படியான தலைக்கனம்தான் காரணம். இதைவிட அவர்கள் அந்தநேரம் யாழ் இந்துவிடமும் தோல்வி அடைந்து இருந்தார்கள்.

விளையாட்டு விளையாடுறது சரி.. இந்த தலைக்கனங்களை கொஞ்சம் இறக்கி வச்சுப்போட்டு விளையாடினால் இன்னும் சிறப்பாக விளையாட முடியும் என்பதுதான் எனது கருத்து..!

சிலது இவர்கள் இந்தமுறையும் பவுண்டரி சிக்ஸ்ர் அடிக்கிறம் பார் எண்டு சுண்டுக்குளி பெண்டுகளுக்கு படம்காட்ட வெளிக்கிட்டுத்தான் கடைசியில 50, 100 ஓட்டங்களோட வீடு திரும்பிச்சீனமோ...? கடவுளுக்குத்தான் தெரியும்..

  • கருத்துக்கள உறவுகள்

சிலது இவர்கள் இந்தமுறையும் பவுண்டரி சிக்ஸ்ர் அடிக்கிறம் பார் எண்டு சுண்டுக்குளி பெண்டுகளுக்கு படம்காட்ட வெளிக்கிட்டுத்தான் கடைசியில 50, 100 ஓட்டங்களோட வீடு திரும்பிச்சீனமோ...? கடவுளுக்குத்தான் தெரியும்..

அப்ப சென் ஜோன்ஸ் காரர் பெண்டுகளக் கண்டிட்டா வீக்காகிடுவினம் என்றீங்க. :D

பட் சென்றல் காரர் விளாசி இருக்கிறாங்களே..! செம விளாசு..! வேம்படிப் பெட்டையள் இருக்கிற பக்கம் தானாம் அனேகம் சிக்ஸ் இறக்கினது..! :D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

இன்னொரு காரணமா நான் நினைக்கிறன். எப்பவும் சென்ரல் கொலீஜ் மைதானத்தில தான் போட்டி வைக்கிறது. எங்கட சென்.ஜோன்ஸ் மைதானத்தில வைக்கிறது இல்ல. இதுபற்றி நாங்கள் ஒருமுறை அதிபரிடம் கேட்டு முறைப்பாடு செய்தபோது அதற்கு அவர் சொன்ன காரணம், சென்ரல் குழப்படிக்கார பெடியங்கள் ஸ்கூலுக்க வந்து வாங்கு மேசை எல்லாம் உடைச்சு போடுவாங்களாம். எமது மைதானம் பாடசாலையினுள் இருப்பதால் போட்டி அங்கு வைக்கப்படுவது பாடசாலைக்கு பாதுகாப்பு இல்லையாம். ஆனால் சென்ரல் எண்டால் திறந்தவெளிதானே? ஸ்கூலுக்க போகவேண்டிய தேவை இல்லை. இப்பிடியும் ஒரு பிரச்சனை இருக்கிது. எப்பவும் தங்கட பாடசாலை மைதானத்தில விளையாடுறது எப்பவும் சென்ரலுக்கு ஒரு அட்வாண்டேஜ் எண்டு சொல்ல வேணும். இதேமாதிரிதான் யாழ் இந்துவும்... யாழ் இந்துவுடன் தோற்றபோது எல்லாம் சென்.ஜோன்ஸ் அவர்கள் ஸ்கூல் மைதானத்தில விளையாடி இருந்தார்கள். நான் தோல்வியை ஜஸ்டிபை பண்ண இல்ல. ஆனால், கிரவுண்ட் சிட்டுவேசனையும் கொஞ்சம் சொன்னன். :wub:

Edited by முரளி

  • கருத்துக்கள உறவுகள்

இதைவிட அவர்கள் அந்தநேரம் யாழ் இந்துவிடமும் தோல்வி அடைந்து இருந்தார்கள்

குருஜி! கிரிக்கட்டாயினும் சரி, புட்பாலாயினும் சரி யாழ்.இந்து பெரும்பாலன போட்டிகளில் அரையிறுதிக்கு வந்து விடும். ஆனால் பைனல் மாட்ச்சில் மட்டும் சிலமுறை வென்றும் பலமுறை தோற்றும் இருக்கிறது. ஆனால் எந்தக் கல்லூரி விளையாட்டுகளிலும் ரகளையோ அன்றி பிரச்சனைகளோ செய்யாத ஸ்போட்டிவ்வான கல்லூரி யாழ். இந்து.!!! :wub::lol:

  • தொடங்கியவர்

இல்லை சுவை அண்ணை நான் பொதுவாகச் சொன்னேன்.

சென்றலிலும் நல்ல கெட்டிக்கார அமைதியான பெடியங்கள் இருக்கிறாங்கள். சென்.ஜோன்சிலும் த*தலைகள் இருக்கிதுகள். ஆனால் பொதுவாக பிக் மட்ச் என்று வந்தால் சென்ரல் பெடியங்கள் ஆவேசம் வந்து ரகளையில் ஈடுபட்டதாக வரலாறு சொல்லிது.

முந்தி சென்.ஜோன்சிலும் சென்ரலிலுமாக மாறி மாறி பிக் மட்ச் ஒவ்வொரு வருடமும் வைக்கப்பட்டதாகவும் ஆனால், பிறகு சென்.ஜோன்ஸ் கல்லூரியினுள் பார்வையாளர்களாக வந்த சென்ரல் பெடியள் ரகளை செய்தமையால் சென்ரல் திறந்தவெளி அரங்கில் மட்டும் போட்டி வைக்கப்படுவதாகவும் ஒருத்தர் சொன்னார். உண்மை பொய் தெரியாது. யாராவது பழைய விசயம் தெரிஞ்ச ஆக்கள் இதை ஒருக்கால் தெளிவுபடுத்துங்கோ.

Edited by முரளி

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை சுவை அண்ணை நான் பொதுவாகச் சொன்னேன்.

சென்றலிலும் நல்ல கெட்டிக்கார அமைதியான பெடியங்கள் இருக்கிறாங்கள். சென்.ஜோன்சிலும் த*தலைகள் இருக்கிதுகள். ஆனால் பொதுவாக பிக் மட்ச் என்று வந்தால் சென்ரல் பெடியங்கள் ஆவேசம் வந்து ரகளையில் ஈடுபட்டதாக வரலாறு சொல்லிது.

முந்தி சென்.ஜோன்சிலும் சென்ரலிலுமாக மாறி மாறி பிக் மட்ச் ஒவ்வொரு வருடமும் வைக்கப்பட்டதாகவும் ஆனால், பிறகு சென்.ஜோன்ஸ் கல்லூரியினுள் பார்வையாளர்களாக வந்த சென்ரல் பெடியள் ரகளை செய்தமையால் சென்ரல் திறந்தவெளி அரங்கில் மட்டும் போட்டி வைக்கப்படுவதாகவும் ஒருத்தர் சொன்னார். உண்மை பொய் தெரியாது. யாராவது பழைய விசயம் தெரிஞ்ச ஆக்கள் இதை ஒருக்கால் தெளிவுபடுத்துங்கோ.

முரளியின் இக்கருத்தை என்னால் முற்றாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சென் ஜோன்ஸ் கிரவுண்ட் சிறியது அதுமட்டுமன்றி அது ஒரு மூடிய காணிக்குள் உள்ளது. அதனால் பார்வையாளர்களை உள்ளடக்குவது உட்பட பல சிரமங்கள் உள்ளன. மக்கள் குடியிருப்புக்கள் மிக அருகாமையில் உள்ளன. பந்துகள் வீழ்ந்து வீட்டுக் கண்ணாடிகள் உடைவதும் உண்டு.

சென்ரல் பொடியளால் மட்டும் ஆபத்து வரும் என்று சொல்வது ஏற்புடையதல்ல. சென் ஜோன்ஸ் காரரும் சென்றல் கல்லூரி கண்ணாடிகளைக் கல்லெறிந்து உடைத்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன. சென்ரல் மிக நீண்ட கட்டடத் தொகுதிகளைக் கொண்ட கல்லூரி. மைதானத்தையும் கல்லூரியையும் ஒரு வீதிதான் பிரித்து நிற்கிறது. வீதியில் நின்று சென்றல் கல்லூரிக்கு கல்லால் அடித்தால் கல்லூரிக்கு சேதம் விளையும். மதில் பாய்ந்தால்.. கேற்றால் பாய்ந்தால்.. கல்லூரிக்குள் நுழைய முடியும். இதையெல்லாம் செய்ய முடியாத நல்லவர்களாக சென் ஜோன்ஸ் காரரைக் காட்டுவதை என்னால் ஏற்க முடியவில்லை. சென்ரல் பொடியளால் எவ்வளவுக்கு எவ்வளவு ஆபத்தோ அவ்வளவுக்கு அவ்வளவு.. சென் ஜோன்ஸ் காரராலும் சென்றலுக்கு ஆபத்து இருக்கிறது.

எனவே இதைக் காரணம் காட்டி.. சென் ஜோன்ஸ் தன்ர "வளவு.." மைதான விசயத்தை மறைக்க முற்படுறது சரியாப் படவில்லை. யாழ் இந்துவும் அப்படித்தான். அதற்கும் ஒரு உருப்படியான மைதானம் கிடையாது. இருந்தாலும் இப்போ.. காணிகளை வாங்கி விரிவாக்கங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் சென்ரல் மைதானம் பார்வையாளர்களுக்கு அதிக வசதியானது என்பது மட்டுமன்றி பல ஆயிரம் பார்வையாளர்களை உள்வாங்கக் கூடியது..! சென் ஜோன்ஸ் அப்படி அன்று. பிக் மச்சுக்கு அநேகம் மக்கள், வெளியார் வருவர் என்பதால் தான்.. இப்படி மாற்றங்கள் செய்யப்படுகின்றன..!

எப்போதும் சென் ஜோன்ஸ் கிரவுண்டில் மச் நடக்கும் போது.. இடநெருக்கடிகள்.. வெளியார் ரகளைகள் என்பது அதிகரித்திருக்கும். ஆனால் சென்ரலில் நடக்கும் போது.. இவை குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருக்கும். வெளியார் ரகளையில் சென்றலும் ஈடுபடலாம்.. சென்ரலுக்கு எதிரா சென் ஜோன்ஸ் இல்ல வேற கல்லூரிகள்.. இல்ல தனிநபர்களும் ஈடுபடலாம்..!

எனவே ஒரு கல்லூரியை மட்டும்.. இங்கு குற்றம் சுமத்திறதை என்னால ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுமட்டுமன்றி கள நிலவரத்தை சென்ரல் கிரவுண்ட் கல்லூரியில் இருந்து ஏதோ 10 கிலோமீற்றர்கள் தள்ளி உள்ள பொட்டல் வெளி என்றாப் போல சொல்லிக்கிறது சரியாப் படல்ல. ஆபத்து என்று வந்தால் சென்ரலுக்கும் சென் ஜோன்சுக்கும் ஓரளவுதான்..! அதைத் தெளிவுறுத்துவதோடு.. சென்ரல் கிரவுண்ட் வசதிகள் அதிகம் கொண்டது என்பதையும் சுட்டிக்காட்டுவதும் தான் இப்பதிவின் சாரம்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

சென்ரல் கிரவுன்ட் வசதியானது...விசாலமானது...ஆகவே பிக் மட்சுக்கு அது தான் சரி..!போதாக்குறைக்கு நமக்கு பக்கத்தில ஒல்ட் பார்க்கு வேற..! சும்மாவே எங்கட பெடியள் பொலிசுக்கு சோக்கால் அடிக்கிறவங்கள்..! பிக் மட்சுன்னா கேக்கவா வேணும்..? சென்ரல் கிரவுன்டில என்ன நடந்தாலும் கொஞ்ச நேரத்தில் ஆமி செல் அடிப்பான்..! பிரச்சினை சோல்வ்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் நெடுக்ஸ்! யாழ்.இந்துவில் அந்த டென்னிஸ் கோட்டும் பாஸ்கட்போல்கோட்டும் இருந்த பக்கமாக அப்படியே போடிங்வரை கொலிஜ்லேன்மட்டும் வீடுகளையும் காணிகளையும் வாங்கி பெரிதாக்கியுள்ளார்கள் என்று நானும் கேள்விப்பட்டேன். அப்படியாயின் இப்போ அது மிகவும் பெரிய மைதானமாக இருக்கும் இல்லையா!

சென்.ஜோன்சுக்கு மகோக்கனி மரங்கள் நிறைந்த அடர்ந்த காடுபோன்ற அழகிய ஓல்ட்பார்க். அதேபோல் சென்ரவுக்கும் பக்கத்தில் சுப்பிரமனியம் பார்க். அத்துடன் முன்பு யாழ்கோட்டையும் இருந்தது. :huh::huh:

  • தொடங்கியவர்

நான் படிக்கிற காலத்திலயே அப்ப சென்.ஜோன்ஸ் 300 மீற்றர் சுற்றுவட்ட மைதானமாக இருந்தது. ஓட்டப்போட்டி நடக்கேக்க ஒருக்கால் மைதானத்தை சுற்றி ஓடினால் 300 மீற்றர். இதைவிட பவுண்டரி லைன் இன்னும் சற்று விசாலமானது என்று நினைக்கிறன். மேலும், சென்.ஜோன்சிலையும் மைதானத்தை பெருப்பித்தார்கள். இப்ப இன்னும் பெரிய மைதானம் எண்டு நினைக்கிறன்.

ஓ சிக்ஸ் அடிச்சால் பந்து பொறுக்கிறது பெரிய வேலையோ? மைதானத்த சுத்தி இருக்கிற சனம் மச் பார்க்கேக்க பந்து ஓல் பார்க்கில விழுந்தால் சனங்களே ஓடுப்போய் பந்தை எடுத்து உள்ளுக்க எறியுங்கள். இதுல ஒரு சிக்கல் இல்லை.

மற்றது கண்ணாடி உடையிற அளவில எண்டால் அதிபர் பங்களாப் பக்கமாக மட்டும்தான் சாத்தியம் இருக்கிது. மிச்ச கட்டடங்களில கண்ணாடி உடையுற அளவுக்கு பேஸ் பண்ண இல்ல, மற்றும் கண்ணாடியும் இல்ல.

என்ன இருந்தாலும் சொந்த மைதானத்தில விளையாடேக்க பசங்கள் விளாசி விளாசி அடிப்பாங்கள் எண்டுறத ஏற்றுக்கொள்ளத்தான் வேணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.