Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முகப்பரு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தோல் சம்மந்தமான > முகப்பரு (அக்னி)

முகப்பரு (அக்னி)..

முகப்பரு (அக்னி): வழகைமைக்கு மாறான தோலில் ஏற்படும் பரு, முகப்பரு எனப்படும். தோல் அழற்சியானது முகப்பருக்களாக, கறுப்பு அல்லது வெள்ளை முனைகளைக் கொண்ட தோல் முனைப்புக்களால் அறியப்பட்டுள்ளது. இது பன்னிரண்டு தொடக்கம் நாற்பத்து நான்கு வயதிற்கு இடைப்பட்ட, இருபாலினருக்கும் ஏற்ப்படக்கூடும். முகத்தில் தோன்றும் பருக்களின் வடுக்கள் அழகைக் கெடுப்பதோடு, அழகற்ற நிலைக்கு தள்ளப்படும் நிலையை எட்டுவதால், ஏற்படும் மன அழுத்தம், ஒருவர் தன்னைப்பற்றிய தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளப்படும் நிலை ஏற்ப்படுகிள்றது.

பூப்பெய்தல் காலத்தில்தான் பெண்களுக்கு முகப்பரு தொடங்குகின்றது. ஆண்களுக்கு, அன்ரஜென் எனப்படும் ஆண் பாலுக்குரிய ஓர்மோன் இதேகாலத்தில் அதிகமாக சுரக்கப்படுகின்றது. இந்த ஓமோனானது கெரற்ரின் எனப்படும் ஒருவகைப் புரத உற்பத்தியையும், சீபம் எனப்படும் தோலின் உராய்வு நீக்கலுக்குப் பயன்படும் எண்ணைய்ப் பதார்த்தத்தின் உற்பத்தியையும் அதிகரிக்கத்தூண்டுகிறது. சீபம் தோலில் காணப்படும் சிறு துளைகளின் வழியாக வெளிக்கொணரப்பட்டு தோலில் பரப்பப்படுகிறது. தோலில் பரப்பப்படும் வேகத்தை விட அதிகமாக சுரக்கப்படும் பொழுது, எண்ணைய்த் தன்மையான சுரப்பு ஒட்டும் தன்மையுடையதாகி, பற்றீரியாக்களைத் தன்னகத்தே அடைத்துக்கொள்கிறது. தோலின் நிறமணிகள் (பிக்மென்ற்ஸ்), சீபத்துடன் கலந்து சிறுதுளைகளை அடைத்துக் கொண்டிருக்கும் பொழுது கறுப்பு முளைகளைக்காட்டும். தோல் பரப்பின் கீழுள்ள செதிலிழையம்;, சீபத்தினால் நிரப்பட்டு, தோலின் கீழ் பரந்து, சில சமயங்களில் வெடித்து வெளிப்படும் போது தோல் அழற்சி ஏற்படுகின்றது.

பருக்கள் துப்புரவின்மையால் தோன்றுவதல்ல, தோலின் கீழமைந்த எண்ணைச் சுரப்பிகள் மேலதிகமாக சுரப்பதே காரணமாகும். இளவதினரும், வயதுவந்தோரும் பாதிப்பிற்குள்ளாகிறார்கள். இளவயதினருக்கு தோற்பருக்கள் முகத்திலும் மேலுடம்பிலும் தோன்றுகின்றன. வயது வந்தோருக்கு எண்ணிக்கையில் குறைவான ஆனால் நோவும் வேதனையும் கூடிய பருக்கள் நாடி, தாடை வரி போன்ற இடங்களில் தோன்றுகின்றன. பல பெண்கள் மாதவிடாயக்கு முன்பதாக முகத்தில் பருக்கள் திடீரென தோன்றுவதால் அவஸ்த்தைப்படுகிறார்கள். சூலகத்திலிருந்து சூல் வெளிப்பட்டவுடன், புரஜெஸ்ரோன் என்னும் ஓமோன் வெளிவிடப்படும் பொழுதும், புரஜெஸ்ரோனை அதிகம் கொண்டிருக்கும் கருத்தடை மாத்திரைகளும் முகப்பரு தோன்றுவதை அதிகரிக்கின்றன. கன்டிடாசிஸ் போன்ற நோய் இருக்குமாயின், இந்நோய் ஓமோன் சுரப்புக்களின் மாறுபாட்டை ஏற்படுத்துகின்றது. மரபுவழி முறை எண்ணைத்தன்மையான தோல், ஓமோன் சுரப்பில் சமநிலைக்குழப்பம், கன்டியாசிஸ் என்னும் நோய் ஆகியவை முகப்பரு தோன்றுவதற்கு காரணங்களாகின்றன. ஒவ்வாமை, வாழ்க்கைப்பழு, மருந்து வகைகளான ஸ்ரெறொட்ஸ், லிதியம், கருத்தடை மாத்திரைகள், வலிப்புக்கு பயன்படும் சில மருந்துகளும் பரு தோன்றுவதற்கு காரணங்கள் ஆகலாம். உணவில் போசாக்கு குறைபாடு அல்லது அதிக அளவு நிரம்பிய கொழுப்பு (சற்சுறேற்ரட் பற்), ஐதரசன் ஊட்டப்பட்ட கொழுப்பு, விலங்கு கொழுப்பு ஆகியனவும் சம்பந்தப்பட்டுள்ளன. சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இயந்திரத்திற்கான எண்ணை வகைகள், குளோரீனூட்டப்பட்ட ஐதரோக்காபன் ஆகியனவும்; பாதிப்பை ஏற்ப்படுத்துகின்றன.

உடலில் அமில அல்லது காரநிலை காணப்படும் பொழுது, இந்நிலை பருவை ஏற்ப்படுத்தும் பற்றீரியா பெருகுவதற்கு வளமான சூழலைத் தருவதால் பருக்கள் தோன்றுகின்றன். உடலைப் போர்த்தியிருக்கும் தோலானது உடலின் மிகப்பெரிய அங்கமாகும். உடலின் நச்சுப் பதார்த்த கழிவகற்றலின் ஒரு பகுதியை தோல் வியர்வையூடாக வெளியேற்றுகின்றது. ஈரல், சிறுநீரகம் போன்றவற்றினால் நச்சுப் பதார்த்தக் கழிவகற்றலை முழுவதாகச் செய்;யமுடியாமல் போகும் பொழுது, தோலே அவ்வேலையை மேற்கொண்டு செய்து முடிக்கின்றது. இந்நேரத்தில் தோலானது இன்னுமொரு சிறுநீரகம் போல் தொழிற்படுகின்;றது. நச்சுப் பதார்த்தங்கள் தோலினூடாக வெளியேற்றப்படும் பொழுது வழமையான தோலின் செயற்பாடுகளின் முறைமை மாற்றத்திகுள்ளாகிறது. அநேகமான தோல் சார்ந்த நோய்களுக்கு இதுவே காரணமாகும்.

தோலும் ஒரு வகைச் சுவாசத்தில் ஈடுபட்டுள்ளது. தோலில் காணப்படும் சிறுதுளைகள், சூழலில் காணப்படும் அழுக்கு, தூசி, எண்ணைப் பொருட்கள் போன்றவற்றால் நிரம்பி மூடப்படும் பொழுது தோற் பருவை உண்டுபண்ணும் பற்றீரியாக் கிருமிகள் பல்கிப் பெருக இடமளிப்பதோடு, சூரிய ஒளியில் காணப்படும் பற்றீரியாவைத் தடுக்கவல்ல சக்தி செயற்படவும் இடம் கொடுப்பதில்லை. தோலினைக் கழுவிச் சுத்தமாக வைத்திருப்பதனால், தோலில் காணப்படும் சிறுதுளைகள் அழுக்கினாலும், சூழல் மாசுக்களினாலும் நிரம்பி அடைபடாமல் இருக்கும். மாற்றும் வழிகள்: - நார்ச்சத்துக் கூடிய (பைவர்) உணவு அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். இது உணவுக் கால்வாயின் குடல் பகுதியை சுத்தமாக வைத்திருப்பதோடு, நஞ்சுகளை அகற்ற வாய்ப்பாகிறது. - உணவில் பச்சை (சமைக்காத) உணவின் அளவைக் கூட்டவேண்டும். இது தோல் வியாதியிலிருந்து விரைவில் நீங்கவும் குணமாக்கவும் இடமளிக்கிறது. பச்சை உணவுகளான ஆமண்ட்ஸ், பீற்ஸ், கஜூ, சுவிஸ் சார்ட், ஸ்பினாச் (கீரை), றுபார்ப் போன்றவற்றில் காணப்படும் ஒக்சாலிக் அசிட் மிகவும் நன்மைபயக்கும். - அதிகளவு பழங்களை உட்கொள்ளவேண்டும். பழங்கள் ஊட்டச்சத்துக்களையும் அதிகளவில் நீரையும் கொண்டுள்ளது. சில பழங்களின் தோலை, எமது தோலின் மீது பூசலாம். திராட்சை (கிறேப்ஸ்), ஸ்றோபெறீஸ், அன்னாசி ஆகியன அல்பா-கைட்றொக்சி அசிட் (ஏ.எச்.ஏ) ஐ போதியளவில் கொண்டிருக்கின்றன. ஏ.எச்.ஏ, தோலின் எண்ணைச் சுரப்பிக்கான்களை அடைப்பெடுத்துஇ துப்பரவாக வைத்திருக்க உதவுகிறது.

- சிங் (நாகம்) செறிவான உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். உ+ம் சிப்பி உணவுகள் (செல்பிஸ்), சோயா, தவிடுடன் கூடிய தானியங்கள், சூரியகாந்தி விதைகள், சிறிதளவு பச்சை கொட்டைகள். சிங் பற்றீரியாவுக் கெதிராக செயற்படுவதோடு, தோலின் எண்ணைச் சுரப்பிகளின் தொழிற்பாட்டிற்கும் வேண்டியதொன்றாகும். மேலும் சிங்கின் அளவு உணவில் குறையும் பொழுது தோல் அழற்சி அதிகமாக தோன்றக்கூடும். - விற்றமின்களாகிய ஏ.சி.ஈ, அத்துடன் கட்டாய கொழுப்பமிலங்கள் (எசென்சியல் பற்ரி அசிட்) உணவில் இருக்கிறதாவெனப் பார்த்துக்கொள்ள வேண்டும். விற்றமின் ‘ஏ’ தோல் முகப்பருவுக்கு எதிராக செயற்படுவதில் பங்கெடுத்தாலும் அதிகளவில் எடுக்க கூடாது. விற்றமின் ‘ஈ’ யானது, விற்றமின் ‘ஏ’ஐ கட்டுப்படுத்துவதோடு, தோல் வடு ஏற்படாமலிருக்க உதவுகிறது. - அதிகளவு தரமான நீர், (8 குவளை அல்லது நாளுக்கு) குடிப்பதோடு பின்வரும் பானங்களையும், உணவுகளையும் தவிர்த்துக் கொள்ளவேண்டும்: மது (அல்கொகோல்), பட்டர், (கபீன்) வெண்ணெய்க்கட்டி (சீஸ்), சொக்கலேற், கொக்கோ, கிறீம், முட்டை, கொழுப்பு, பொரித்த உணவு, உணவை சுவையூட்டும் பொருட்கள் (ஸ்பய்ஸ்), உறைப்பான உணவுகள், ஐதரசனூட்டப்பட்ட எண்ணைகள் (கைட்றோஜெனேற்டட் ஒயில்ஸ்), மார்கறின், இறைச்சி, கோழியிறைச்சி, கோதுமை, செயற்கையாக தயாரிக்கப்பட்ட பானங்கள் போன்றன. - பரீட்சார்த்த நோக்கில், ஒரு மாதத்திற்கு பசுப்பால் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, முகப்பருவின் நிலையை அவதானிக்கவேண்டும்.

முகப்பரு தோன்றுவதற்கு ஒவ்வாமையும் ஒரு காரணமாவதனால், பசுப்பால் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறதா எனத் தெரிந்து கொள்ளலாம். இன்றைய நாட்களில் பாலில், காணப்படும் ஓமோன், ஸ்ரெறொயிட்ஸ் பதார்த்தங்கள், உடலின் இயற்கையான ஓமோன் சமநிலையைக் குழப்பிவிடுகின்றது. பால் சேர்ந்த உணவுகளுக்கு ஒவ்வாமை காணப்படுமாயின் உணவுக் கால்வாயில் பறிறீரியாக்களைப் பேணும் பொருட்டு தயிர் உண்ணலாம். - சீனி சேர்க்கப்பட்ட பதார்த்தங்கள் தவிர்க்கப்படவேண்;டும். சீனி அளவு கூடும்போது உடலிழையங்களின் சீனி சகிப்புத்தன்மை (ரொலெறன்ஸ்) அதிகம் குறைபட்டிருக்கிறது. அத்துடன் கன்டிடசிஸ் என்னும் நோய்க்காரணியான பங்கசு செழித்து வளர இடமளிக்கிறது. - எல்லா வகையான முன் தயாரிக்கப்பட்ட) உணவுகள் கண்டிப்பாக தவிர்க்கப்படவேண்டும். இவ்வகை உணவுகளில, வேண்டிய நொதியங்கள் குறைவாகக் காணப்படுவதோடு, அயடீன் சேர்க்கப்பட்ட உப்பு சேர்க்கப்பட்டுள்ளது. நொதியங்கள், உணவு கொண்டிருக்கும் ஊட்டச்சத்துக்களை தசையிழையம், நரப்புக்கலங்கள், என்பு, தோல், சுரப்பிழையங்கள் போன்றவை பயன்படுத்தி தம்மைக் கட்டியகை;க வழிசெய்கின்றன. மேலும் அதிகளவு அயோடின் முகப்பரு தோன்றுவதை அதிகப்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது. இக்காரணத்திற்காக உணவின் மீன், வெங்காயம் போன்றவற்றை குறைக்கவேண்டும். - பரு தோன்றிய இடங்களுக்கு எண்ணை தடவவேண்டாம். தலை முழுகி சுத்தமாக வைத்திருக்கவேண்டும். தோலைக் கழுவி (நாளுக்கு இருதடவை) சுத்தமாக வைக்கவேண்டும். மென்மையாக கழுவவேண்டும்.. பருக்களை அடிக்கடி தொட்டுப் பார்க்கவேண்டாம். இது தோலின் கீழமைந்த சுரப்பிகளைத் தூண்டுவதனால், இன்னும் அதிகமாக சீபம் சுரக்கப்படும்.

- அழகு சாதனங்கள் (முகப்பூச்சுக்கள் - (மேக் அப்)) தவிர்க்கப்படவேண்டும். கட்டாயம் அணியவேண்டுமாயின் எண்ணை அடிப்பொருள் கொண்டவற்றைத் தவிர்த்து, நீரை அடிப்பொருளாக கொண்டவற்றைப் பயன்படுத்தவும். மேலும் கடுமையான இரசாயனப் பதார்த்தங்கள், சாயங்கள், எண்ணை கொண்ட பூச்சுக்களைத் தவிர்க்கவும். ஒவ்வொரு தடவையும் ஒப்பனை செய்யப்பயன்படும் தூரிகைகளை அல்ககோல் கொண்டு சுத்தம் செய்வதால் நோய்த் தொற்றைத் தடுக்கலாம். - பருக்கள் உராய்தலின் போது உடைந்துவிடக்கூடுமாதலால், பருக்கள் உள்ள இடங்களில் தளர்வாக உடையணிய வேண்டும். பாதுகாப்புப் பட்டியணியும் இடங்களை (பெல்ற்)) கவனித்து அணிய வேண்டும். கூந்தலிலுள்ள எண்ணை முகத்தில் படிந்துவிடாவண்ணம், கூந்தலை பின்புறம் இறுக கட்டுவதனால் முகத்தில் வீழ்ந்துவிடாத பாதுகாக்கலாம். - பருக்கள் தோன்றிய இடத்தை சூழவுள்ள மயிர் வளர்ச்சியை வழித்து வைத்துக் கொள்ளவேண்டும். (வ)மழிக்கும் பொழுது சாதாரணமான கூர்க் கத்தியை (ஸ்சேவிங் பிளேட்) மட்டும் பயன்படுத்தவும். பரு தோன்றிய இடத்தில் மயிர் வளர்ச்சியோட்டத்தின் படி மயிரை மழிக்கவேண்டும். - வாழ்க்கைப்பழு உடலில் ஓமோன் மாற்றங்களை ஏற்படுத்துவதனால், பருக்கள் தோன்ற வழி சமைக்கின்றது. ஒவ்வொரு நாளும் பதினைந்து நிமிடங்களுக்கு சூரிய ஒளி உடலில் படுதல், ஒழுங்கான உடல் அப்பியாசம், போதியளவு நித்திரை ஆகியன மிகவும் தேவையானவையாகும். - தோலில் பூசப்படும் அல்லது உட்கொள்ளப்படும் ஸ்ரெறோயிட்ஸ் வகையான மருந்துகளை தவிர்க்கவேண்டும். இவை முகப்பரு தோன்றுவதை அதிகமாக்குகிறது. - பருக்களை நசுக்கி உடைப்பதனால், பற்றீரியா தொற்று அதிகப்படுத்தப்படுகிறது. கைகள் சுத்தமாக இருந்தாலேயன்றி, பருக்களைத் தொட்டுப் பார்த்தல் கூடாது. - பருக்கள் தோன்றுவதன் மூலம், உடலில் இரசாயனச் சமநிலை, உணவு பற்றாக் குறைகள், தோலைச் சுத்தம் செய்யும் முறைகள் போன்றவற்றில் குறைபாடுகள் காணப்படுகின்றன என அறியப்படுகிறது. மூலிகைக் கலவை - பேடொக் கெம்பிளக்ஸ: எமதுடலில் நிணநீர்த் தொகுதியானது நோயெதிர்ப்புச் செயற்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றது. உடலிலிருந்து நோய்க் காரணிகளான, பற்றீரியா வைரசுவையும் ஏனைய அந்நிய பொருட்களையும், குருதியிலுள்ள கலச்சிதைவில் கிடைத்த துண்டுகளையும் வடிகட்டி அகற்றி அழிக்க உதவிசெய்வதோடு நிணநீரையும் தோற்றுவிக்கின்றது.

உடலின் ஆக்கச் சிதைவு தாக்கங்களில் தோன்றும் நச்சுப்பொருட்களையும் உடலின் உடல் அகச்சூழலில் கிடைக்கும் நச்சுப் பொருட்களையும் அகற்ற உதவுகிறது. இந்நஞ்சுகள் அவ்வப்போது அகற்றப்படாதபோது சிறிது சிறிதாக சேர்ந்து உடலுக்கே நஞ்சாகின்றது. இந்த சேர்மானத்திலுள்ள மூலிகைகள் நிணநீர்த் தொகுதியின் செயற்பாட்டை தூண்டிவிடுவதோடு நோய்பட்ட இடங்களிலிருந்து கழிவுகளை அகற்றிச் செல்லும் திறனையும் ஊக்குவிக்கின்றது. இவற்றுள் சில வைரஸினால் ஏற்ப்படும் நோய்களிலிருந்து உடற்கலங்களை பாதுகாத்து நிற்பதாகவும், ரி-செல் என்னும் நோயெதிர்ப்புக் கலன்களையும் ஊக்குவித்து உடலின் இயற்கையான நோயெதிர்ப்பை மேம்படுத்துகின்றது. நிணநீர்த் தொகுதியின் நஞ்சகற்றல் செயற்பாடு நன்றே நடைபெறவில்லையாயின் அது பல உடல் நோய்களுக்கு காரணமாகும். மூலிகை – கிளிவேர்ஸ்: இதுவொரு பொதுவாக வளரும் களையாகும். ஆயினும் இது உடலிலிருந்து நிணநீர்த் தொகுதியிலிருந்து நஞ்சகற்றி துப்பரவு செய்வதாகவும் நோவுபட்ட இடங்களிலிருந்து வீக்கத்தையும், அதிகரித்திருந்த வெப்பத்தையும் தணிப்பதாகவும் செயற்படுகின்றது. இம்மூலிகை மூத்திரப் போக்கை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் உடலின் நிணநீர்த் தொகுதியில் சேர்ந்த நஞ்சுகளும் கழிவுகளும் சிறுநீர்த் தொகுதியினூடாக வெளியகற்றப்பட உதவுகிறது. நிணநீர்த் தொகுதிப் பிரச்சினை, நிணநீர்ச்சுரப்பி வீக்கம், கட்டிகள் தோன்றுவதற்கெதிரான செயற்பாடுகள் (குறிப்பாக தோல், மார்பு) ஆகியவற்றிற்காக இம்மூலிகையைப் பயன்படுத்தலாம். மூலிகை – பேடொக் றூட்: இந்த மூலிகை நஞ்சகற்றலில் பயன்பட்டதாக நீண்டதொரு சரித்திரம் உண்டு. இது ஈரலையும் குருதியையும் சுத்திகரித்து, ஈரல், பித்தப்பை செயற்பாடுகளை மீளவமர்த்தி நோயெதிர்ப்பை தூண்டிவிடுவதற்காகப் பயன்படுத்தபட்டிருந்தது. இதுவுமொரு மூத்திரம் பெருக்கியாக செயற்படுவதனால் சிறுநீரகம் வழியாக கழிவகற்றலில் நஞ்சுகளை வெளியேற்றலில் உதவி, நிணநீர்த் தொகுதியை, நெருக்கடியின்றி சிறப்புற செயற்பட உதவுகின்றது.

மூலிகை புளு பிளாக் றூட்: இந்த மூலிகையானது சிறுநீர்ப்பெருக்கி, ஈரலுக்கு நலம் செய்யும், மாற்றும் திறனுடைய, கழிவகற்றல் செயற்பாடுகளை செயற்பாடுகளை உடலில் ஏற்ப்படுத்தக்கூடியது. பித்த சுரப்பு வழிகளை சுத்தம் செய்து, வழமையான பித்த சுரப்பை மீளச்செய்கிறது. நிணநீர்த் தொகுதி கழிவகற்றுவதோடு, நீண்ட நாட்களாக இருந்துவரும், ஈரல், சிறுநீரக, மண்ணீரல் குறைபாடுகளை சீர்செய்கிறது. இதனால் பொதுவாக ‘ஒடிமா’ என்னும் நீர் தங்குதலால் உடல் வீங்கும் நிலையை மாற்றியமைப்பதில் உதவுகின்றது. மூலிகை றெட் குளோவர்: இம்மூலிகை சளியப்படை துப்பரவு, குருதிச் சுத்திகரிப்பு, நிணநீர்த் தொகுதி கழிவகற்றல் ஆகிய செயற்பாடுகளில் திறம்பட செயற்படும் மூலிகைகளில் ஒன்றாகும். நோய்க் காரணிகளை எதிர்த்துச் செயற்படும் தன்மையால் பற்றீரியா நோய்த் தொற்றுக் கெதிராக போராட பயன்படுகிறது. ஈரல், பித்தப்பை, நிணநீர்த் தொகுதியிலிருந்து நஞ்சகற்றலில் உதவுகிறது. இச்செயற்பாடுகளைத் தூண்டிவிடுவதாகவும் மூத்திரப் போக்கை தூண்டிவிடும் தன்மையையும் கொண்டிருக்கின்றது. மூலிகைக் கலவை மேற்பூச்சு: ரேமறிக் அன்ட் சான்டல்வூட் கிறீம் பயன்படுத்தலாம்.

நன்றி: மருந்து இணையம்.

Edited by nunavilan

:huh: சுட்டு தரும் தகவலை கொஞ்சம் அழகுபடுத்தி யாழில் போட்டிருக்கலாமே நுணா. ஐயோ வாசிக்கவே கண்கள் நோகுது. :huh:

ம்ம்ம்..முகபருவோ...(வேஸ் என்று இருந்தா பருவும் வர தான் செய்யும் :( )...என்ன பார்க்கிறியள் சும்மா சொல்லி பார்த்தனான் விடமாட்டியளே.. :D

முகபரு வந்து யாரும் பிகர் நம்மள பார்த்தா தான் வரும் என்று சொல்லுறவை உண்மையோ..(நிசமா நேக்கு தெரியாது :wub: )..பெரியவா சொல்லுறதை கேட்டனான் பாருங்கோ ..ம்ம் அக்சுவலா ஜம்மு பேபியின் ஸ்கூல் டேயிசில பிரண்ஸ் வந்து இப்படி தான் சொல்லுறவை :wub: ..(பார்த்தியா மச்சி நம்மள இரண்டு பேர் பாத்திருக்கிறாளவை அது தான் இரண்டு பரு முகத்தில என்று :( )...நேக்கு அந்த நேரத்தில ஒரு பரு கூட இல்லாம என்ட பீலிங் நேக்கு தானே தெரியும் பாருங்கோ..(யாரிட்ட சொல்லி அழ :D )..

இது வந்து ஜம்மு பேபியின் சாட் பிளாஸ்பக் ...(இதை பார்த்து பிறகு ஒருத்தரும் அழுறதில்ல சொல்லிட்டன் பிறகு நேக்கும் அழுகை வரும் சொல்லிட்டன் :lol: )...

இப்ப எல்லாம் ஜம்மு பேபி முகத்தில பரு வந்தா தான் பீல் பண்ணுது..(இது தான் காலம் பாருங்கோ :( )...பட் முகத்தில பரு வந்தா அசிங்கமா இருக்கும் ஜ கேட் டாட்...(பட் நேக்கு இன்னும் டவுட் அதாவது யாரும் பிகர் பார்த்தா தான் பரு வரும் என்று சொல்லுறது உண்மையா என்பது தான் :lol: )..யாரும் பெரியவா என்ட டவுட்டை கிளியர் பண்ணி வையுங்கோ பார்போம்..

தாங்ஸ் நுணா அண்ணா இன்வோர்மேசனிற்கு..(உங்களுக்க

முகபரு வந்து யாரும் பிகர் நம்மள பார்த்தா தான் வரும் என்று சொல்லுறவை உண்மையோ..(நிசமா நேக்கு தெரியாது :D )..

இது வந்து ஜம்மு பேபியின் சாட் பிளாஸ்பக் ...(இதை பார்த்து பிறகு ஒருத்தரும் அழுறதில்ல சொல்லிட்டன் பிறகு நேக்கும் அழுகை வரும் சொல்லிட்டன் :wub: )...

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா பொண்ணும் பையனும் நோக்கினா கரு வரலாம் ஆனா பரு வராது"

அப்ப நான் வரட்டா!!

தம்பி மேலுள்ள பந்தியில் இபப்டி சொல்லி இருக்கு

முகப்பரு தோன்றுவதற்கு ஒவ்வாமையும் ஒரு காரணமாவதனால்,

சோ சில பிகர் நோக்குதல் ஒவ்வாமையால் பரு வரலாம் ல. :wub:

அட தம்பியின் பஞ்ச் அந்த மாதிரி இருக்கு. தம்பி இதெல்லாம் எப்படி? இப்போ அடிக்கடி பஞ்ச் வருது. அதுவும் நல்லமாதிரி வருது :lol:

தம்பி மேலுள்ள பந்தியில் இபப்டி சொல்லி இருக்கு

முகப்பரு தோன்றுவதற்கு ஒவ்வாமையும் ஒரு காரணமாவதனால்,

சோ சில பிகர் நோக்குதல் ஒவ்வாமையால் பரு வரலாம் ல. :wub:

அட தம்பியின் பஞ்ச் அந்த மாதிரி இருக்கு. தம்பி இதெல்லாம் எப்படி? இப்போ அடிக்கடி பஞ்ச் வருது. அதுவும் நல்லமாதிரி வருது :lol:

அட..நிசமாவோ அக்கா..(ம்ம்..அப்ப சில பிகர் நோக்குவது கூட ஒவ்வாமை என்று சொல்லுறியள் :lol: )...ம்ம் பிகர் நோக்கினாலும் ஓவ்வாமை தான்..(கார்ட்டில :D )...நோக்காட்டியும் ஒவ்வாமை தான்..(ஜம்மு பேபியின் ஜம் சிந்தனை).... :(

ம்ம்..பஞ்சோ அது எப்படி வருதுன்னு நேக்கே தெரியல ஆனா வர வேண்டிய நேரத்தில கரக்டா வருது :wub: ..(எப்பவுமே பஞ் முதலிலில கசக்கும் போக போக தான் இனிக்கும் பாருங்கோ).. :(

அப்ப நான் வரட்டா!!

அட..நிசமாவோ அக்கா..(ம்ம்..அப்ப சில பிகர் நோக்குவது கூட ஒவ்வாமை என்று சொல்லுறியள் :) )...ம்ம் பிகர் நோக்கினாலும் ஓவ்வாமை தான்..(கார்ட்டில :lol: )...நோக்காட்டியும் ஒவ்வாமை தான்..(ஜம்மு பேபியின் ஜம் சிந்தனை).... :(

ம்ம்..பஞ்சோ அது எப்படி வருதுன்னு நேக்கே தெரியல ஆனா வர வேண்டிய நேரத்தில கரக்டா வருது :) ..(எப்பவுமே பஞ் முதலிலில கசக்கும் போக போக தான் இனிக்கும் பாருங்கோ).. :wub:

அப்ப நான் வரட்டா!!

:lol::lol::lol::)

தம்பி பிகர்கள் ஒவ்வொண்டும் ஒருவிதம் அவர்களின் பார்வைகளும் பலவிதம்.

தம்பி பஞ்ச சுவைத்து பார்த்தனியளோ? முதலில் கசக்கும் பின்பு இனிக்கும் என்று சொல்லுறேள் அதுதான் கேட்டேன் பாருங்கோ :D

தம்பி பிகர்கள் ஒவ்வொண்டும் ஒருவிதம் அவர்களின் பார்வைகளும் பலவிதம்.

தம்பி பஞ்ச சுவைத்து பார்த்தனியளோ? முதலில் கசக்கும் பின்பு இனிக்கும் என்று சொல்லுறேள் அதுதான் கேட்டேன் பாருங்கோ :)

ம்ம்...அப்படிங்களா அக்கா...(பறவைகள் பலவிதம் என்று ஏன் பாட்டு படித்தவை :lol: )..பிகரும் பறவையும் ஒன்னு தான் எப்ப பறக்கும் என்று யாராலையும் சொல்ல ஏலாது..எப்படிக்கா இருக்கு... :wub:

ம்ம்..சுவைத்து பார்க்கிறது என்றா..(வாயால தான் என்று இல்ல :lol: )...மனதாலை சுவைக்கலாமே..(எப்ப பார்த்தாலும் சாப்பிடுற எண்ணம் :lol: )..நிசமா முடியல என்னால..அக்சுவலா நெல்லிகாய் முதலிலில கசக்கும் தண்ணி குடித்து பார்த்தா அப்புறம் இனிக்கும்.. :)

அப்ப நான் வரட்டா!!

ம்ம்...அப்படிங்களா அக்கா...(பறவைகள் பலவிதம் என்று ஏன் பாட்டு படித்தவை :) )..பிகரும் பறவையும் ஒன்னு தான் எப்ப பறக்கும் என்று யாராலையும் சொல்ல ஏலாது..எப்படிக்கா இருக்கு... :lol:

ம்ம்..சுவைத்து பார்க்கிறது என்றா..(வாயால தான் என்று இல்ல :) )...மனதாலை சுவைக்கலாமே..(எப்ப பார்த்தாலும் சாப்பிடுற எண்ணம் :lol: )..நிசமா முடியல என்னால..அக்சுவலா நெல்லிகாய் முதலிலில கசக்கும் தண்ணி குடித்து பார்த்தா அப்புறம் இனிக்கும்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

:lol: ஓ பறவைகள் பலவிதம் போல பிகரும் பறவைகளும் பறந்திடுமோ அச்சோ அச்சோ. தம்பி சில பறவைகள் சிலசில சீசன் க்கு கண்டம் விட்டு கண்டம் கூட பறக்குமாமே. அப்போ பிகருகளுமோ :)

ம்ம்ம் மனசால் சுவைத்து பார்த்தேன். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.