Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்கள் பார்வையில் என்றும் பெண்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் பார்வையில் என்றும் பெண்கள் - ராமச்சந்திரன் உஷா

காலம் மாறிக் கொண்டே இருக்கிறது. மனிதர்களின் மன ஓட்டங்களும், வெளி தோற்றமும் முற்றிலும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. நேற்று எல்லோராலும் ஒத்துக் கொண்ட ஒரு விஷயம் இன்று தவறு என்று நிரூபிக்கப்படுகிறது. ஆனால் எவ்வளவு காலம் ஆகியும் மாறாமல் இருப்பது ஒன்றே ஒன்றுதான்.

நூறு, ஆயிர வருட பழங்கால சிற்பத்தைப் பாருங்கள். அது பெண்ணோ, வழிபடும் தெய்வமோ, கண்ணகி போன்ற கற்புக்கரசியோ அல்லது இக்காலத்திய பெண் சித்திரமோ எல்லாமே இடை சிறுத்து, மேலாடை பேருக்கு சுற்றிய பெருத்த மார்பகத்தைக் காட்டிக்கொண்டு இருக்கும். சிலைகளை உருவாகியவனோ, சித்திரக்காரனோ சரி எத்தனை நூற்றாண்டு ஆகியும் அவன் கற்பனை மாறவேயில்லை.

அத்தனை பெண் சிற்பங்களும் சிறுத்த இடை, குழிந்த வயிறு, அளவான பின்பக்கம் இருக்கும். ஆனால் மேல்பகுதி மட்டும் சம்மந்தமேயில்லாமல் சிற்பியின் வானளாவிய கற்பனைக்கு ஏற்றார் போல் பரந்து விரிந்து காணப்படும்.

அதேப் போல உடையணிந்து சினிமாவிலும் இந்திரன் சபையில் கவர்ச்சி கன்னிகள் நடனமாடுவார்கள்.

பெண் தெய்வங்களுக்கும் ஏன் இந்த நிலைமை என்றுக் கேட்டால், உலக மாதா அல்லவா, அத்தனை ஜீவராசி களுக்கும் உயிர்பால் தருபவள் என்ற விளக்கம் வரும்.

இன்றைய அன்றைய, சினிமாவையும் பாருங்கள். கதாநாயகியோ, வில்லியோ இதை சரிவரக் காட்டுவதுதான் டைரக்டரின் ஆணைப்படி காமிராமேனின் வேலை. சம்பூரணராமாயணத்தில் பத்மினி சீதையாக வந்தாலும் மெல்லிய புடைவையில் மேல்உடம்பை முக்கால் பாகம் காட்டிக்கொண்டு நிற்பார். சினிமாவின் முதல் விதி இதுதான் போலும்!

சினிமாவில் சின்னஞ்சிறு பெண் பார்த்தாலே வயது பதினாறுக்கும் கீழ் என்று சொல்லிவிடலாம், ஆனால் எடுத்துக்கட்டப்பட்ட பஞ்சு மூட்டையுடன் கொஞ்சம் பார்ப்பவர் கண்களை உறுத்த செய்வார். எந்த நடிகையானாலும் சரி, உடம்பிற்கு சம்மந்தமே இல்லாமல் செயற்கை அளவுடன் காட்சியளிப்பார்.

ஆனால் ஒரு விஷயத்தை மெச்சிதான் ஆகவேண்டும். இதில் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என்ற பாகுபாடே கிடையாது. ஆண்களை திருப்திபடுத்த செயற்கை முறையில் அளவை பெரியதாக்க முயற்சிக்கும் பெண்கள் உலகளாவிலும் உண்டு.

ஆணுக்கு ஏன் இந்த உறுப்பில் இவ்வளவு மோகம்? தாயிடம் பால் குடித்ததை அவனுக்கு மறக்க முடியவில்லையா? பெண் என்பதற்கு அடையாளமே இந்த உறுப்பாகத்தானா கொள்ள வேண்டும்? முதன் முதலில் குளோனிங் முறையில் உருவாகிய ஆட்டுக்குட்டிக்கு பெயர் டாலி என்று சூட்டப்பட்டது. பெயர் காரணத்தை கேட்டதற்கு, விஞ்ஞானி அந்த பெயர் முலைபெருத்த, தன் அபிமான மேற்கத்திய நடிகை என்று பதிலளித்தார்.

அனைத்து பத்திரிக்கையில் வரும் படங்களிலும் மேலாடை சரிவர மூடாத படங்கள்தான் எங்கும் காட்சியளிக்கும். புடைவை ஓவியர்களுக்கு இந்த விஷயத்தில் தாராளமாய் கைக் கொடுக்கும். மற்ற உடைகள் என்றால் மேல் சட்டையை சிறிது கீழே தளர்த்தினால் போதும்.

புகை படங்களுக்கு போஸ் கொடுக்கும் நடிகைகளும், மாடல்களும் நிமிர்ந்துதான் நிற்பார்கள் அல்லது பக்கவாட்டு காட்சி. குடும்ப பத்திரிக்கை என்று அழைக்கப்படுபவைகளிலும் இதே கதைதான். அட்டைபடம் என்றால் கட்டாயம் இப்படிதான் இருக்க வேண்டும் என்று விதிமுறையே உண்டு.

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மாறாது ஆண்கள் பார்வையில் பெண் ஜென்மங்கள்.

marathtahdi.com

  • கருத்துக்கள உறவுகள்

முலைச்சுரப்பி பால் உற்பத்தி செய்ய மட்டும் தான் என்றால் ஆண்கள் சும்மா இருந்திருப்பாங்க. ஆனால் முலைச்சுரப்பியில் உள்ள நரம்பு முடிவிடங்கள் பெண்களில் பாலுணர்வுத்தூண்டலுக்கான காரணிகளாகவும் உள்ள என்பதால்.. ஆண் - -பெண் என்ற படைப்பியலின் இயற்கையியல் விதிமுறையின் கீழ் ஆண்களுக்கு முலைச்சுரப்பி மீது ஒரு கண்ணோட்டம் இருப்பது இயற்கையானது.

அதையும் தாயின் முலைச்சுரப்பியில் பால் குடிக்கும் குழந்தையும் ஒரு சேர நோக்கக் கூடாது. குழந்தைக்கும் பாலியல் தூண்டல் இருப்பின்.. சில நேரம் அதுவும் உணர்ச்சி வசப்பட்டிருக்கும். அதனால் தான் குழந்தை வளர்ந்து பருவமடையும் வரை பாலியல் உணர்வுத் தூண்டல் தடுக்கப்பட்டிருக்கிறது.

இயற்கையின் விதிநிலைகளை உணராமல் ஆண்கள் மீது கொட்டும் கொடூரப்பார்வையை பெண்கள் எப்ப மாற்றப் போறாங்க. பார்க்கிற ஆண்கள் எல்லாம்.. பாற் சுரப்பி மீது காமத்தோடு பார்ப்பதில்லை. அழகுக்காகவும் பார்க்கலாம்..! அதனால் தான் பெண்களும் சிலிக்கன் பைகளை அடைத்து அவற்றைப் பெரிதாக்கி அரைகுறை ஆடைகள் அணிந்து அங்கும் இங்கும் காட்டிக் கொண்டு திரிகிறார்கள்..??! இதை எங்க போய் சொல்லிக்கிறது..! :wub::mellow:

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவற்றை பெண்கள் மீதான வெறுப்பின் பால் சொல்லவில்லை. ஏலவே நான் கற்றுக்கொண்ட மனித உயிரியல் ஆய்வுகளில் வெளியிடப்பட்ட உண்மைகளில் இருந்து சொல்கின்றேன்.

ஆதாரத்துக்கு...

Women are more aroused by breast and nipple stimulation than men during lovemaking according to the first ever evidence-based research, published in the May 2006 issue of The Journal of Sexual Medicine. There are limited studies in the medical literature examining the importance, during lovemaking, of nipple or breast stimulation in enhancing sexual arousal in females and males.

http://www.emaxhealth.com/48/5744.html

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் ...... வயதுவந்தவர்கு மட்டும் நடக்கும் கருத்தாடல் போல் உள்ளளது. அதுதான் எனக்கு ஏதும் புரிய மாட்டேன் என்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மருதம், பாலக் குடிச்சிற்றுப் படு பிள்ளை. உனக்கு எதுக்கு இந்த நரம்பெல்லாம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் ...... வயதுவந்தவர்கு மட்டும் நடக்கும் கருத்தாடல் போல் உள்ளளது. அதுதான் எனக்கு ஏதும் புரிய மாட்டேன் என்கின்றது.

அது வயதுக்கு வந்தவர் மட்டும் என்றான விடயமல்ல. மனித உடற்தொழில் சம்பந்தப்பட்ட விடயம். நீங்கள் அண்டை அயலவருக்குப் பயப்பிடாமல் உரையாடலாம். அவை ஒன்றும் உங்களை குறைவா நினைச்சு உங்களின் தராதரத்தைக் குறைச்சிட மாட்டினம். இது பாலியல் மருத்துவம் சார்ந்த விடயப்பரப்பில் நங்கு ஆராய்ந்து அலசப்படும் விடயம்..! இப்போ 9 வயதுப் பிள்ளைக்கே.. மாதவிடாய் பற்றி கற்றுக் கொடுக்கினம். கருவுறுதல் பற்றிக் கற்றுக் கொடுக்கினம். எனவே நீங்கள் பயப்பிடத் தேவையில்லை. வெட்கப்படத் தேவையில்லை.

பெண்களின் உடலை ஆண்களின் உடலைப் பற்றி ஒருவருக்கு ஒருவர் அறிஞ்சிருக்கிறது அவங்க அவங்க நலங்களை பாதுகாக்க தேவைகளை பூர்த்தி செய்ய உதவும்..! :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

அது வயதுக்கு வந்தவர் மட்டும் என்றான விடயமல்ல. மனித உடற்தொழில் சம்பந்தப்பட்ட விடயம். நீங்கள் அண்டை அயலவருக்குப் பயப்பிடாமல் உரையாடலாம். அவை ஒன்றும் உங்களை குறைவா நினைச்சு உங்களின் தராதரத்தைக் குறைச்சிட மாட்டினம். இது பாலியல் மருத்துவம் சார்ந்த விடயப்பரப்பில் நங்கு ஆராய்ந்து அலசப்படும் விடயம்..! இப்போ 9 வயதுப் பிள்ளைக்கே.. மாதவிடாய் பற்றி கற்றுக் கொடுக்கினம். கருவுறுதல் பற்றிக் கற்றுக் கொடுக்கினம். எனவே நீங்கள் பயப்பிடத் தேவையில்லை. வெட்கப்படத் தேவையில்லை.

பெண்களின் உடலை ஆண்களின் உடலைப் பற்றி ஒருவருக்கு ஒருவர் அறிஞ்சிருக்கிறது அவங்க அவங்க நலங்களை பாதுகாக்க தேவைகளை பூர்த்தி செய்ய உதவும்..! :mellow:

ஊக்கத்திற்கு நன்றி நெடுக்ஸ் அண்ணா! முயற்சி செய்கிறேன்.

ஆண்களுக்கு பெண்கள் பற்றி கதைக்காவிடில் அன்றைய நாள் விடிவதில்லை போல :wub::mellow:

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களுக்கு பெண்கள் பற்றி கதைக்காவிடில் அன்றைய நாள் விடிவதில்லை போல :wub::mellow:

உண்மைதான். பெண்களின் உடலுறுப்புகளை வர்ணிக்கிறது.. பருவ வயதிலேயே (10 - 16) ஆண்களிடம் வந்துவிடுகிறது. அதேபோல் ஆண்களை பற்றி பேசுறதும் பெண்களிடம் தாராளமா இருக்கிறது. அது பல ஆண்களுக்குப் புரிவதில்லை. அதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பெண்களின் முலைச்சுரப்பியை பற்றி.. காலத்துக்கு காலம் ஆண்கள் பல ரகசிய சொல்லாடல்கள் கொண்டு கதைத்து ஏதோ மகிழ்ந்து கொள்கிறார்கள்.

அவை தமிழ் சினிமாவிலும் இடம்பெற்றுள்ளன.

பழைய காலத்தில்.. இலந்தை..குரும்பை.. செவ்விளநீர், முயல் என்றார்கள். இடையில் மாங்காய் என்றார்கள்.. அப்புறம் கோழி என்றார்கள்.. அப்புறம் "மில்க் போட்" என்றார்கள்..இப்படிப் பலவாறு உச்சரிப்பார்கள் பெண்கள் உணராத வகைக்கு..! ஆனால் பல சகோதரிகளுக்கு இந்த உண்மை தெரியும்..! என்ன செய்யுறது.. உணர்ச்சி வேகத்தில மனசை விடுற ஆண்கள் அப்படிச் செய்து உணர்ச்சியை தனிச்சுக்கிறாங்க. அதேபோல பெண்களிலும் ஆண்களைப் பற்றி ரகசிய சொல்லாடல்கள் கொண்டு விமர்சிக்கிறவங்க இருக்கிறாங்க. ஆனால் ஒப்பீட்டளவில் குறைவு.

ஆங்கிலம் உட்பட சகல மொழி பேசும் ஆண்களிடமும்.. பெண்களின் பாலுறுப்புக்கள் பற்றிய பற்றிய ரகசிய விமர்சனத்துக்கான பிரத்தியேக சொற்கள் இருக்கின்றன. அப்படிப் பேசுவது ஒன்றும் தகாததென்று கருதிட முடியாது. அது இயற்கையின் விளைவு.

இக்களத்தில் பெண்களின் முலை பற்றி கவிதையில் எழுதியதை.. பேசாப் பொருளை பேச விளைந்த தமிழன் என்று காட்ட முனைந்தனர் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நான் நினைக்கிறேன் எனது 10 வயதில் கோழி என்று சொல்லி பொடியள் கதைச்சதை கேட்டிருக்கிறன்..! அப்ப விளங்கல்ல.. வளர வளர விளங்கிச்சு. கோழி என்றால் என்ன என்று..! :lol:

ஒரு ஆண் பெண்ணை தூர இருந்து அவளுக்கு எந்தப் பாதிப்பும் வராது எனும் நிலையில் இருந்து விமர்ச்சிக்கிறது ரசிச்சுக்கிறது பிரச்சனையே இல்லை. ஆனால் பெண்களை ஆபாசமாக காட்டி ஆண்களைத் தூண்டி விட்டு அதன் மூலம் பெண்களுக்கு ஆபத்தை உண்டு பண்ணுவது மன்னிக்க முடியாத குற்றம். அது கடும் குற்றம் ஆகும்..!

பெண்ணின் அழகு அவளின் உடல் பூராவும் இருக்கிறது.. என்று ஆண்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அது பெண்களுக்கு பெருமைதானே..! :lol:

என்ன செய்யுறது ஆண்களின் உணர்ச்சியை தூண்ட என்று பெண்ணையும்.. பெண்ணின் உணர்ச்சியை தூண்ட என்று ஆணையும் படைத்துள்ள இயற்கையை தான் இதற்கு குற்றம் சொல்லனுமே தவிர ஆண்களை.. சொல்லி என்ன பயன்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் பார்வையில் என்றும் ஆண்கள்..............இப்படி யாரும் தொடர்ந்து எழுதக் கூடாதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்கள் பார்வையில் என்றும் ஆண்கள்..............இப்படி யாரும் தொடர்ந்து எழுதக் கூடாதா?

நீங்க தொடங்குங்கோ கறுப்பி அக்கா என்னுடைய ஆதரவு உங்களுக்கே

எனது கேள்வி: புடவைக்கு அணியும் சட்டையை ஏன் மிகவும் இறுக்கமாக அணிகிறார்கள். அதில ஜன்னல், கதவு என்று பேஷன் வேறு.

மேலும், ஷிவோன், ஜோர்ஜெட் வகை புடைவைகள் மிகவும் மெல்லியவை. அவற்றை ஏன் விரும்பி அணிகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

எனது கேள்வி: புடவைக்கு அணியும் சட்டையை ஏன் மிகவும் இறுக்கமாக அணிகிறார்கள். அதில ஜன்னல், கதவு என்று பேஷன் வேறு.

மேலும், ஷிவோன், ஜோர்ஜெட் வகை புடைவைகள் மிகவும் மெல்லியவை. அவற்றை ஏன் விரும்பி அணிகிறார்கள்?

:mellow: ஆஆஆஆஆஆஆஆஆ.....இதுகூட தெரியாதா எல்லாமே அழகுக்குதாங்க.

நீங்களே அழகு (உண்மையில் அது கவர்ச்சியாக்கும்) என்று சொல்லி உங்கள் பாகங்களை எடுப்பாக காட்டுவீங்கள், பிறகு ஆண்கள் அதை பார்க்கினம், வர்ணிக்கினம் என்று அழுவீங்கள். நாங்கள் எங்க போய் முட்டிறது? lol..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முலைச்சுரப்பி பால் உற்பத்தி செய்ய மட்டும் தான் என்றால் ஆண்கள் சும்மா இருந்திருப்பாங்க. ஆனால் முலைச்சுரப்பியில் உள்ள நரம்பு முடிவிடங்கள் பெண்களில் பாலுணர்வுத்தூண்டலுக்கான காரணிகளாகவும் உள்ள என்பதால்.. ஆண் - -பெண் என்ற படைப்பியலின் இயற்கையியல் விதிமுறையின் கீழ் ஆண்களுக்கு முலைச்சுரப்பி மீது ஒரு கண்ணோட்டம் இருப்பது இயற்கையானது.

அதையும் தாயின் முலைச்சுரப்பியில் பால் குடிக்கும் குழந்தையும் ஒரு சேர நோக்கக் கூடாது. குழந்தைக்கும் பாலியல் தூண்டல் இருப்பின்.. சில நேரம் அதுவும் உணர்ச்சி வசப்பட்டிருக்கும். அதனால் தான் குழந்தை வளர்ந்து பருவமடையும் வரை பாலியல் உணர்வுத் தூண்டல் தடுக்கப்பட்டிருக்கிறது.

இயற்கையின் விதிநிலைகளை உணராமல் ஆண்கள் மீது கொட்டும் கொடூரப்பார்வையை பெண்கள் எப்ப மாற்றப் போறாங்க. பார்க்கிற ஆண்கள் எல்லாம்.. பாற் சுரப்பி மீது காமத்தோடு பார்ப்பதில்லை. அழகுக்காகவும் பார்க்கலாம்..! அதனால் தான் பெண்களும் சிலிக்கன் பைகளை அடைத்து அவற்றைப் பெரிதாக்கி அரைகுறை ஆடைகள் அணிந்து அங்கும் இங்கும் காட்டிக் கொண்டு திரிகிறார்கள்..??! இதை எங்க போய் சொல்லிக்கிறது..! :D:)

நல்ல கருத்து நெடுக்குசாமி :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.