Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரியாரிஸ்டுக்களே,பிராமணிஸ்டுக்களே ஒரு நிமிடம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே வந்து கருத்து சொல்லும் பெரியாரின் வாரிசுகளுக்கும் பிராமணத்தின் காவலர்களுக்கும் இந்த பகிரங்க மடல்.

பெரியாரிஸ்டுக்களே,

நீங்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஈழத்தில் பிராமண ஆதிக்கம் என்றுமே இருந்ததில்லை. ஆதிக்கம் செய்யும் அளவுக்கு அவர்கள் இங்கு கணிசமான அளவில் இருந்ததில்லை. எனவே நீங்கள் சொல்லும் பிராமண ஆதிக்க கருத்துக்கள் எமக்கு, தமிழகத்தின் அண்மைய வரலாறை பற்றிய பட்டறிவு இல்லாதவர்களுக்கு, அன்னியமாகவே இருக்கிரது.

எமக்கு தெரிய ஈழத்தில் பிராமணர்கள் நல்லவர்களாயும், தமிழ் தேசியத்துக்கு ஆதரவானவர்களாயும் தாமுன்டுதன் பாடுண்டு என இருப்பவர்களாயுமே உள்ளனர்.

எம்மிடம் வந்து நீங்கள் சொல்லும் பெரியார் கொள்கைகள் எமக்கு அன்னியமாக இருப்பது இதனால்தான்.

அப்புறம் நீங்கள் சொல்லும் இந்து சமய மருப்பும் அப்படித்தான். சமயத்தின் பெயரால் எம்மன்ணில் கொடுமைகல் நடந்தது மிக குறைவு.

எமது நாட்டில் பிரபாகனுக்கு முந்திய காலத்தில் சாதி கொடுமை தலை விரித்தாடியது என்பது உண்மைதான், ஆனால் அந்த சாதியத்தின் அடிப்படையாக அமைந்தது வெள்ளாளர்களின் மேலோன்மையே அன்றி பிராமணர்களின் மேலாண்மை அல்ல.

இப்போது அதுவும் படிப் படியாக வழக்கொழிந்து வருகிறது.

எமது போராட்டத்தில் நாம் மத வேற்றுமைகளை கடந்து வந்து வெகுகாலமாகி விட்டது.

எமது போராட்டத்தில் நாம் மாவிட்டபுரம் போன்ற இந்து சமய தலங்களையும், மடு போன்ற கிறீஸ்தவ தளங்களையும் பாதுகாக்கவே போராடுகிறோம்.

எம்மிடம் வந்து நீங்கள் இந்து மத எதிர்ப்பு பிரச்சாரம் செய்வது எமக்கு எரிச்சலைதருவது இதனால்தான்.

நமக்கு இந்து மதமோ, பிராமணர்களோ என்றும் எதிரிகலாக இருந்ததில்லை. இதை நீங்கல் புரிந்து கொள்ள வேண்டும்.

எதிர் பெரியாரிஸ்டுக்களே,

தமிழகத்தில் தமிழர்களின் வளர்ச்சிக்கு, தமிழ் தேசியத்துக்கு முதல் எதிரிகளாக, பெரும் தடைக்கல்லாக இருப்பது பிராமணர்களே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் சொல்வதை போல திராவிடம் என்பது தமிழகதை தவிர தென் இந்தியாவில் வேறு எங்கும் இல்லை என்பதே உண்மை. ஆகா இப்போது தமிழகத்தில் திராவிடம் என்று பேசப்படுவது தமிழ் தேசியமே அன்றி வேறொன்றும் இல்லை.

கீழே ஒரு கணக்கு தந்திருக்கிறேன் புரிகிறதா என்று பாருங்கள்.

ஈழத்து தமிழ்தேசியம் = தமிழகத்து திராவிடம்- (பிராமண எதிர்ப்பு+இந்து சமய எதிர்ப்பு)

ஆகா நீங்கள் எதிப்பது சேற்றை வாரி இறைப்பது எல்லாம் தமிழ் தேசியத்தின் மீதே.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஈழத்தில் தலித்தியம் எதிர்ப்பு இந்தியாவில் தலித்தியம் ஆதரிப்பு என்று போக்குக் காரணம் பொருந்தாதது.

மேலும் பிராமணர்கள், இந்து மதம் தான் காரணம் என்பதற்க எவ்விதமான ஆதாரங்களும் இவர்கள் பகிர்ந்து கொண்டதுமில்லை. ஏதோ மட்டுக்கட்டி மத்தியஅரசு பிராமணிகளின் கையில் என்பார்கள். நான் அறிந்தவரை அவ்வாறன நிலையில் மத்தியஅரசில் இல்லை. 5 வருடம் பா.ஜ.கவின் ஆட்சியைத் தவிர மற்றய நேரங்களில் மதச்சார்பற்ற அமைப்புக்கள் தான் ஆட்சியில் இருந்திருக்கின்றன. நேரு குடும்பத்தைத் தவிர்த்தால் மற்றய தலைவர்கள் பெரும்பாலும் பிராமணர்கள் அல்லாதவர்கள் தான்.

அதை விடவும், இந்தியாவின் சட்டத்தை அமைத்த அம்பேத்கார் கூடத் தாழ்த்தப்பட்டவர் தான். இன்றைய சட்டநிலமையைக் காரணம் சொன்னாலும் அவர் தான் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன் பெரியார் திராவிடம் என்று பரந்து விரித்ததற்க்கு இரு காரணங்கள்.

1) தனியே தமிழ் தேசியம் என்று தொடங்கி இருந்தால்- பூர்வீகத்தால் தமிழர் அல்லாத பெரியாரே அன்னியப் பட்டு போயிருப்பார்.(இது சுயநலக் காரணம்)

2) அன்று சென்னை மாகாணம் என்ற பிரிவின் கீழ், தமிழர், தெலுங்கர், கன்னடர், துலுவர், மலையாளிகள் என்ற எல்லா பிரிவினரும் ஒன்று பட்டே இருந்தார்கள். கேரளத்திலும், ஆந்திராவிலும், கன்னடத்திலும் அன்று மொழிவாரி பிரிவினை இருக்கவில்லை. அந்த நிலையில் பெரியார் மட்டும் தமிழ் தேசியம் பேசி இருந்தால் அது இன்றைய ஈழத்தில் பிரதேசவாதம் பேசுவது போல "ஒற்றுமையை குழப்பும்" ஒரு செயலாக இருந்திருக்கும்.

(இது பொது நலக் காரணம்)

இவ்விருகாரணக்களுக்காகதான் பெரியார் தனித்தமிழ் நாடு கேட்க்காமல் தனித்திராவிட நாடு கேட்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரியார் காங்கிரசிலிருந்து ஏன் வெளியேறினார்?

குலக்கல்வி முறையையும், தனிப் பந்தி முறையையும் காங்கிரஸ் தலைமை(ராஜாஜி) மாற்ற முன்வராததால்.

இப்படி பலப் பல காரணங்கள். தூயவன் நீங்கள் தமிழ் நாட்டுக்குப் போய் அங்கே இன்றும் தம்மை பிறப்பால் உயர்ந்தவராக கருதி, மற்றையவர்களை மிருகத்திலும் கேவலமாக நடத்தும் பிராமணர்களை கண்டால் இங்கே வந்து குமுறும் பெரியாரிஸ்டுக்களின் கோபம் உங்களுக்கும் புரியலாம்.

அப்புறம் பெரியார் தலித்துகளினதும், தமிழ்த்தேசியத்தினதும் எதிரி எனும் வகையில் நீங்கள் சொல்லுவது முகாந்திரமற்ற அபாண்டமாகவே எனக்குத்தெரிகிறது.

பெரியார் நாயக்கர் வம்சத்தில் பிறந்தாளும் தலித்துக்களை அவர் தனக்கு நிகரானவராகவே நடத்தினார் என்பது அவரின் வாழ்க்கையை படித்தவருக்கு தெரியும். அறிஞர் அம்பேத்கார் பெரியார் மீது மிகப் பெரும் அன்பு காட்டியதும் இதனால்தான்.

பெரியார் தலித்துக்களின் விரோதி எனில் இன்றும் திருமா போன்றோர் அவரை ஏன் ஏற்றி பேசுகிரார்கள்.

பெரியார் எல்லா சாதியினரையும் அரவணைத்தார், பிராமணரைதவிர.

பிராமணர் மீதான அவரின் கோபமும் கூட அன்றைய இந்தியவின் நிலையில் நியாயமானதாகவே இருந்தது என்பதை கமலகாசன் போன்ற, சாதியத்தினின்றும் விடுபட்ட பிராமணர்களே பெரியாரை ஆதரிப்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது பகிரங்க மடல் பல உண்மைகளை உள்ளடக்கியாதாக உள்ளது......... உண்மை உள்ளவர்கள் இதை புரிந்து கொள்வார். அல்லாலதார் இதிலும் ஏதாவது தர்க்கம் செய்வார். அதை வைத்தே நாம் உண்மையுடையோரையும் பொய்காரரையும் புரிந்து கொள்ள முடியும். சாதியம் உலகில் எங்கு இருப்பினும் அது துடைத்தெறிய படவேண்டும்...... அடக்குமுறை எங்கு இருப்பினும் மனிதநேயத்தின் அடிப்படையில் அதற்காக நாம் குரல் கொடுக்க வேண்டும்......... இவற்றை இலகுவில் சாதிக்க சிறந்த வழி பகுத்தறிவை (கல்வியை) உலகெங்கும் தங்கு தடையின்றி பரப்புதலே ஆகும்........ இதுதான் என்னுடைய தனிபட்ட நிலைப்பாடு. இது நேரடியாகவோ மறைமுகமாகவோ தமிழ் தேசியத்தை தாக்குவதாக இருப்பின் தயவு செய்து சுட்டி காட்டவும். அதுவே புரிதலுக்கு இடமளிக்கும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்து மதம் எமக்கு எதிரியா எனக்கு தெரியவில்லை. எமது தலைமை கொஞ்சம் நயமாக நடந்து கொண்டால் பால்தாக்ரே போறோர் மூலம் அது எமக்கு ஆதரவான மிகப் பெரும் சக்தியாக கூட வர வாய்ப்பிருக்கிறது.

ஆனால் தமிழின விடிவுக்கு இந்தியா காட்டும் எதிர்ப்பில் பாரிய பங்கு பார்ப்பானியர்களுக்கு உண்டு என்பதற்க்கு சோவும், இந்து ராமும் மட்டுமே போதுமான உதாரணம்.

நான் நினைக்கிறேன், இந்த பிராமனவாதிகள் புலிகளை பெரியாரிஸ்டுகள் என தப்பாக புரிந்து கொண்டே ஈழவிடுதலைக்கு ஆப்பு அடிப்பதில் இவ்வளவு கரிசனம் காட்டுகிரார்கள் என.

  • கருத்துக்கள உறவுகள்

வழமை போலச் சோவையும், ராமையும் காட்டி ஒட்டுமொத்த பார்ப்பான எதிர்ப்பை நியாயம் செய்கின்றீர்கள். அதற்கு முன்பு விளக்கம் கொடுத்திருந்தேன். மாக்கிசவாதியான இந்துராம், மற்றும் இதர சிலர் ராஜிவ் கொலைக்குப் பின்னர் தான் மாறினார்கள் என்று.

அடக்குமுறைகளை எல்லா மேல்தட்டினரும் செய்திருக்க, ஏன் பிராமணர்களை மட்டும் எதிர்க்க வேண்டும் என்ற கேள்விக்குத் தான் நான் பதில் தேடுகின்றேனே தவிர, அடக்குமுறைகளை நியாயப்படுத்தவில்லை.

1. ராஜாஜி என்ற தனது பால்ய நண்பனுடன் ஏற்பட்ட போட்டி, பொறாமை ராஜாஜி சார்ந்த சாதி மீது வெறுப்பை உமிழ வைத்திருக்கின்றது.

2. வெள்ளையன் இந்தியாவில் நடந்த எல்லா மேல்தட்டு வர்க்கத்தின் அடக்குமுஐறகளையும் அறியாமல் உச்சத்தில் இருந்த பிராமணி தான் பொறுப்பு என்று கதை புணர, அதை விளக்கமில்லாமல் பின்பற்றிப் பிரச்சாரம் செய்தமை

வடநாட்டில் பார்த்தாலே தெரியும் அங்கே பூலான் தேவை தொடக்கம், மாயதேவி வரைக்கும் கொடுமைகள் செய்த மேல்த்தட்டு வர்க்கம் என்றால் அது பிராமணரில்லாத சாதியினர் தான். தமிழ்நாட்டில் 2000ம் ஆண்டிற்கு முன்னர் வரைக்கும் தலித், வன்னியர் இனமுறுகல் பயங்கரமாக இருந்தது.

அதற்காக எந்தச் சாதியினரையும் தண்டிக்க வேண்டும் என்பது என் அவா அல்ல. சாதியே இல்லை என்று நிலை உருவாக்க வேண்டும்.

திராவிடவாதம் பற்றி ராமசாமி எடுத்த முடிவுக்குக் காரணம் சொன்னீர்கள். பிராமணர்களைத் தமிழரில்லை என்று சொல்ல மட்டும், தான் தமிழனா என்ற சிந்தனை அவருக்கு வரவில்லையோ??

பூலான் தேவை???

மாயதேவி?????

இவர்கள் எல்லாம் யார்?

இவர்கள் யாருக்கு என்ன கொடுமை செய்தார்கள்?

பூலான் தேவை???

மாயதேவி?????

இவர்கள் எல்லாம் யார்?

இவர்கள் யாருக்கு என்ன கொடுமை செய்தார்கள்?

நிச்சயமாக அவர்கள் திராவிட இயக்கத்தினர் கிடையாது... !

இவர்கள் மதத்துக்கு எதிராக போராடினார்களா...? இல்லை அடக்கு ் முறைக்கு எதிராக போராடினார்களா...? எதுக்காக எல்லாத்தையும் போட்டு குளப்புகிறீர்கள்...

அவர்கள் சோசலீச வாதிகள்..

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதம் எமக்கு எதிரியா எனக்கு தெரியவில்லை. எமது தலைமை கொஞ்சம் நயமாக நடந்து கொண்டால் பால்தாக்ரே போறோர் மூலம் அது எமக்கு ஆதரவான மிகப் பெரும் சக்தியாக கூட வர வாய்ப்பிருக்கிறது.

ஆனால் தமிழின விடிவுக்கு இந்தியா காட்டும் எதிர்ப்பில் பாரிய பங்கு பார்ப்பானியர்களுக்கு உண்டு என்பதற்க்கு சோவும், இந்து ராமும் மட்டுமே போதுமான உதாரணம்.

நான் நினைக்கிறேன், இந்த பிராமனவாதிகள் புலிகளை பெரியாரிஸ்டுகள் என தப்பாக புரிந்து கொண்டே ஈழவிடுதலைக்கு ஆப்பு அடிப்பதில் இவ்வளவு கரிசனம் காட்டுகிரார்கள் என.

"நான் தமிழன்" (அப்படியா?) என்ற நண்பருக்கு வணக்கம்,

பகிரங்க மடலை பெரியாரிஸ்டுகளுக்கும் பிராமணிஸ்டுகளுக்கும் என்று ஆரம்பித்தீர்கள். பொதுவான கருத்துடைய ஒருவர் தனது நடுநிலைக்கருத்தைச் சொல்கிறார் எனப் பார்க்க வந்தேன். கடைசியில் இந்து ராச்சியம் பற்றிப் பேசும் பால் தக்கரே தமிழ் தேசியத்திற்கு உறுதுணையாக வரக்கூடும் என்று முடித்திருக்கிறீர்கள். தமிழ் தேசியப் போராட்டம் மதம், பிரதேசம் தாண்டி வந்து காலம் பல கடந்து விட்டதாகக் சொல்லி சில மணி நேரங்களிலேயே ஒரு மதவாதியின் நிழலில் அது வளர முயற்சிக்க வேண்டும் என்று சொல்லும் உங்களுக்கு உண்மையிலேயே இந்தப் பகிரங்க மடல் எழுதத் தகுதி இருக்கிறதா என நீங்கள் சொல்ல வேண்டாம், நடு நிலையான யாராவது வந்து சொல்லட்டும். :mellow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.