Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் நெறித் திருமணம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுளை வணங்குவது பற்றிக் கூட எனக்கு பெரும் ஆட்சேபணை ஒன்றும் இல்லை. வணங்கினால் வணங்கித் தொலையட்டும்

கடவுளை வணங்குவதே ஒரு மூடநம்பிக்கைதான் என இதுநாள்வரை நினைத்திருந்தேன்- இதை நேற்றே சொல்லியிருந்தால் - வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போயிருப்பேன் :D

  • Replies 180
  • Views 42.5k
  • Created
  • Last Reply

பகுத்து அறிய முடிபவர்கள் இதை புரிந்து கொள்வார்கள்.

பகுத்து அறியக் கூடியவர்கள் இங்கு நிறையவே இருப்பதனால்த் தானே உங்கள் பகுத்தறிவையும் இனம் காண முடிந்தது.

எனக்கு வசதி இருந்தால், ஒரு கோயில் கட்டி அதில் தமிழில் வழிபாடு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வேன்.

நீங்கள் எம்முடைய நிலையை புரிந்து கொள்ள வேண்டும்.

பக்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தமது தாய்மொழியில் வழிபாடு செய்ய முன்வராத போது, அதை செய்விப்பதற்கு நாம் வர வேண்டிய தேவை வருகிறது. இது காலத்தின் கட்டாயம்.

அதே போன்று திருமணச் சடங்கில் நம்பிக்கை உள்ள நமது தமிழர்கள், தமிழில் திருமணம் செய்ய முன்வராத போது, அதை நாம் செய்ய வேண்டி வருகின்றது. கடவுளையும் தாலியையும் காரணம் சொல்லி தமிழ் நெறித் திருமணத்தை மறுக்கின்ற போது, அவைகளை வைத்துக் கொண்டும் திருமணம் செய்யலாம் என்று சொல்ல வேண்டிய தேவை வருகிறது.

நாம் எமது சில கொள்கைகளை விட்டுக் கொடுத்து சில நடவடிக்கைகளை செய்ய வேண்டி வருவதன் காரணம், அனைத்துக் காரியங்களையும் நாமே செய்து தொலைக்க வேண்டியிருப்பதுதான்.

எமக்கு இது ஒரு சங்கடமான நிலைதான். ஆனால் வேறு வழியில்லை. உண்மையில் இது குறித்து வெளியில் விலகி நிற்கும் தமிழர்கள்தான் வெட்கப்பட வேண்டும். நாம் அல்ல.

இதிலே ஒன்றைச் சொல்ல மறந்து விட்டேன். என்னுடைய திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஒரு புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினேன். என்ன புத்தகம் என்று அறிய உங்களுக்கு ஆவாலாக இருக்கும்.

"இந்து மதமும் பெண்களும்" என்று தலைப்பில் ஒரு தொடர் எழுதினேன் அல்லவா? அதை சற்று மெருகுபடுத்தி ஒரு புத்தகமாக அச்சிட்டு, திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் வழங்கினேன்.

ஏன் தமிழில் திருமணம் செய்கிறேன் என்று புரியாமல் நின்றவர்கள், வீட்டில் சென்று புத்தகத்தை படித்த பின்பு காரணத்தை அறிந்து கொண்டதாக பேசிக் கொண்டார்கள் என்று கேள்விப்பட்டேன்

பகுத்து அறியக் கூடியவர்கள் இங்கு நிறையவே இருப்பதனால்த் தானே உங்கள் பகுத்தறிவையும் இனம் காண முடிந்தது.

:lol::lol::lol:

இதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். எம்மிடம் பல இலக்குகள் உண்டு. ஏதாவது ஒரு இலக்கை நாம் அடைவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்றால், இன்னொரு இலக்கை சற்றுத் தள்ளி வைப்பதில் எந்தத் தவறும் இல்லை.

பகுத்து அறிய முடிபவர்கள் இதை புரிந்து கொள்வார்கள்.

:D:lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோயில் கட்டி அதில் தமிழில் வழிபாடு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வேன்.

எனது கேள்வியென்னவென்றால்

தமிழிலோ ஆங்கிலத்திலோ வடமொழியிலேயோ

கடவுளை வழிபடுவது மூடநம்பிக்கையா ? இல்லையா

உங்கள் இனிய வாழ்க்கைக்கு எனது வாழ்த்துகள் சபேசன். ஏட்டு சுரக்காய் கறிக்கு உதாவாது என்பதற்கு அல்லது இணைய புரட்சி சல்லிகாசு பெறாது என்பதற்கு நீங்களே நிதர்சனமாக உதாரணம். மற்றவர்களின் நம்பிக்கை மூட நம்பிக்கை. அதை எப்படி பட்ட வார்த்தைகளால் விமர்சித்தீர்கள். உங்கள் சொந்த வாழ்க்கை என்று வந்த உடன் எப்படி எல்லாம் அமைதியாக நிதானமாக சிந்தித்தீர்கள். இதை தான் சொலுறது தனக்கு தனக்கெண்டா சுளகும் படக்கு படக்கு எண்டுமாம் . மனைவிக்காக சமரசம் செய்தீர்கள். கடவுளே மூட நம்பிக்கை என்ற நீங்கள் வசதியிருந்தால் கோயில் கட்டி தமிழிலேயே பூசை செய்ய தயார் எனும் நீங்கள்...... தாங்கமுடியவில்லை.

இந்த கதை சயந்தன் வேறு ஏதோ ஒரு சந்தர்ப்பத்திற்கு எழுதியிருந்தாலும் இங்கும் சரியாக பொருந்துகிறது.

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry408811

கடவுளை வழிபடுவது மூடநம்பிக்கை

ஆனால் கடவுளுக்கு தமிழ் தெரியாது என்று சொல்வதும், கடவுளுக்கு சமஸ்கிருதம் மட்டும்தான் புரியும் என்பதும் அதை விட மூடநம்பிக்கை. அத்துடன் அது தமிழினத்திற்கு செய்யப்படும் பெரும் அவமானம்.

நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இந்து மதம் தமிழினத்திற்கு எதிரானவைகளை தன்னிடம் இருந்து நீக்கி விடுகின்ற போது, அதை விமர்சனம் செய்வதை நான் நிறுத்திக் கொள்கிறேன் என்று.

இதுதான் என்னுடைய கருத்து. எனக்கும் இந்து மதத்திற்கும் எந்த ஒரு "கொழுவலும்" இல்லை. நான் தமிழர்களை தமிழில் நிகழ்வுகளை செய்யுங்கள் என்று கேட்கின்ற போது, அவர்கள் மதத்தை காரணம் காட்டி மறுக்கின்றார்கள். அப்பொழுது நான் மதத்தைப் பற்றி பேச வேண்டி வருகிறது.

என்னுடைய போராட்டத்திற்கு எதிராக "இந்து மதம்" என்ற கருவி பாவிக்கப்படுகின்ற போது, அதை உடைக்க வேண்டிய தேவை வருகின்றது.

ஆகவே என்னுடைய அடிப்படை நோக்கம் என்பது கடவுள் பற்றி பேசுவது அல்ல. கடவுள் உண்டா இல்லையா என்ற விவாதங்களில் நான் அதிகமாக பங்குபற்றுவது இல்லை என்பதையும் சிலவேளைகளில் நீங்கள் கவனித்திருக்கக் கூடும்.

தமிழர்களுக்கு தமிழுணர்வு வேண்டும். தமது நிகழ்வுகளை தமது மொழியில் செய்கின்ற தைரியம் வேண்டும். தமது தாய்மொழியை இன்னொரு மொழியை விட குறைவாக நினைக்கக் கூடாது. இவைகள் என்னுடைய தலையாய போராட்டங்கள்.

இதற்காக நான் மற்றக் கொள்கைகளோடு சமரசம் செய்யத் தயாராகவே இருக்கிறேன். தமிழில் வழிபாடு செய்யும் ஒரு கோயிலுக்கு என்னால் ஆன அனைத்தையும் செய்வேன். யாரவது தமிழ் நெறித் திருமணத்தை பக்தி முறையில் செய்து என்னை பக்திப் பாசுரங்களை பாட அழைத்தால், தயங்காமல் சென்று பாடிவிட்டு வருவேன். (ஏற்கனவே ஆலயங்களில் பாடிய அனுபவம் எனக்கு இருக்கிறது)

என்னுடைய நிலைப்பாட்டில் எனக்கு எந்தத் தடுமாற்றமும் இல்லை.

சபேசன் நீங்கள் பகுத்தறிவையும் (அதாவது கடவுள் மறுப்பையும்) தமிழ் மொழிப்பற்றையும் போட்டு குழப்புகிறீர்கள்..! திருமணம் உங்கள் தனிப்பட்ட விடயம்..! கடவுளை மறுப்பன், ஆனால் தமிழில் பூசை செய்வன். என்றால் அதுக்கு நீங்கள் இதற்கு முன் எழுதிய ஆக்கங்களை நினைக்கும் போது அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை..! நீங்கள் கடவுள் மறுப்பாளர் என்றால் கடவுள் மறுப்பை நியாயம் செய்யுங்கள்..! கடவுளுக்கு தமிழில் பூசை செய்ய சொல்லி நகைச்சுவை பண்ணாதீர்கள்.

பூசுகிறார் மெழுகுகிறார்! -அவர்

பூசுவதில் மெழுகுவதில்

புது புரட்சி செய்துவிட்டார் :D

பக்தி பாசுரம் படிப்பாராம்

அதை பகுத்தறிவு என்றவர் உரைப்பாராம் :lol:

தாலியும் கூறையும் தருவாராம்

அது இந்துக்கள் மரபதை மறுப்பாரா?!!! :lol:

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் உங்களை மனதாரப் பாராட்டுகின்றேன். பகுத்தறிவு பேசுகின்ற மற்றவர்கள் பெரும்பாலும், ஊர் முழுக்கப் பக்தியைக் கொச்சைப்படுத்திப் பேசி விட்டு, மனைவியை பின்வாசல் வழியாகக் கோவில் அனுப்பி பரிகாரம் செய்வார்கள்கள். அல்லது மஞ்சள் சால்வைக்கு வைத்தியக்காரணம் சொல்லி ஏமாற்றுவார்கள். பிள்ளையார் சிலையை உடைத்தவர் வீட்டில் பிள்ளையார் சிலை வழிபாடு நடந்திருக்கும்.

ஆனால் நீங்கள் உண்மையை ஒத்துக் கொள்கின்றீர்கள். அது பாராட்டத்தக்க ஒன்று.

குளக்காட்டான்இணைத்த கதை சற்று நீளமாக இருக்கிறது. பின்பு வாசிக்கிறேன்.

புரட்சி என்பதற்கு நீங்கள் என்ன அர்த்தம் வைத்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

தாலி கட்டாது விடுவது மட்டும் புரட்சி இல்லை.

சமூகம் தாலி கட்ட வேண்டாம் என்று தடுக்க முனைகின்ற போது, அதை மறுத்து தாலி கட்டுவதும், பின்பு இந்தத் தாலியும் சங்கிலியும் எமக்கு ஒன்றுதான் என்று அத்தனை சபையோர் முன்பும் பிரகடனம் செய்வதும், இந்தத் தாலி மீது செல்வாக்கு செலுத்துகின்ற உரிமை உங்கள் யாருக்கும் இல்லை என்று சொல்லி தாலிக்கான சமூக அந்தஸ்த்தை உடைப்பதும்..... இப்படி இவைகளும் புரட்சிதான்.

கோயிலுக்கு போகாது விடுவது புரட்சி இல்லை

கோயிலில் தமிழை தள்ளி வைத்திருப்பவர்களை வெளியே தள்ளி அங்கே தமிழை ஓதச் செய்வதுதான் புரட்சி

உங்களை சொல்லிக் குற்றமில்லை. நீங்கள் மதம் போன்று பகுத்தறிவு என்பதற்கும் சில வரையறைகளை வைத்துள்ளீhகள். மதவாதி இப்படிச் செய்வான். பகுத்தறிவுவாதி இப்படிச் செய்வான் என்றெல்லாம் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்.

மதவாதி மதம் சொல்வதை செய்வான் என்பது சரி. ஆனால் பகுத்தறிவுவாதி தன்னுடைய சொந்த மூளை சொல்வதைத்தான் செய்வான். தன்னுடைய போராட்டம் எது என்று ஆராய்ந்து, அதற்கு என்ன தேவை என்று ஆராய்ந்து அதன்படி செய்வான்.

நான் இணையப் புரட்சி நடத்தவில்லை. களத்தில் இறங்கி தமிழ் நெறித் திருமணம் செய்தேன். வந்தவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி சமஸ்கிருத மந்திர மோசடிகளை அம்பலப்படுத்தினேன்.

என்னுடைய சக்திக்கு உட்பட்ட அளவில் நான் என்னுடைய போராட்டத்தை செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

திருமணம் என்பது இருமனங்கள் சம்பந்தப்பட்ட விடயம். இருவரும் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் அது சொர்க்கம். தத்தம் கொள்கையுடன் பிடிவாதமாக வாழ்ந்தால் நரகமாகவும் மாறிவிடும். நண்பர் சபேசன் அவர்களே, வாழ்த்துக்கள். வாழ்க்கைத் துணைக்காக ஆரம்பத்திலேயே சில நெகிழ்வுகளைக் கையாண்டுள்ளீர்கள். நிச்சயம் உங்கள் வாழ்க்கை இவ்பூவுலகில் ஓர் இன்ப உலகைப் படைக்கும். வாழ்த்துக்கள்.

சபேசன் எதற்கும் நான் கோடு கீறி வரையறை பொடுவதில்லை. அது கடவுள் நம்பிக்கையாகட்டும், பகுத்தறிவாகட்டும் (பகுத்து அறிவது சிலரின் தனியுடமை அல்ல :D .)...... ஆனால் யாராக இருந்தாலும் சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடு இல்லாது அல்லது நேர்மை இருக்க வேண்டும் என்பது என் கருத்து

அவ்வையாரின் கருத்துக்கு நன்றி!

லீ!

நான் "மெய்யெனப்படுவது" பகுதியில் "நான் ஏன் இப்படி ஆனேன்" என்ற தலைப்பில் என்னைப் பற்றி எழுதியிருக்கிறேன்.

"கடவுள் நம்பிக்கை மற்றும் மறுப்பு" என்பதுதான் தனிப்பட்ட விடயம். எமது தாய்மொழி புறக்கணிக்கப்படுவது தனிப்பட்ட விடயம் அல்ல. இந்து மதத்தை நான் எதிர்ப்பதன் காரணமும் அதுதான். இந்து மதத்தின் பெயரில் எமது இனத்திற்கும் மொழிக்கும் செய்யப்படும் தீங்குகளின் அடிப்படையிலேயே நான் இந்து மதத்தை விமர்சிக்கின்றேன்.

நான் கடவுள் மறுப்பாளனாக இருக்கலாம். ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ளவன் தன்னுடைய திருமணத்தை தமிழ் நெறியில் செய்கின்ற போது அதற்கு உதவுவது என்னுடைய கடமை. அங்கே "கடவுள் மறுப்பு" என்ற என்னுடைய தனிப்பட்ட கருத்து முக்கியம் அல்ல.

நீங்கள் மீண்டும் ஒருமுறை நான் எழுதியவற்றை எல்லாம் படித்துப் பார்க்கலாம். சத்தியராஜ் பழனி முருகனை கும்பிடு என்று சொன்னதை நான் ஆதரித்து வாதாடியதை இங்கே நினைவு படுத்திப் பருங்கள்

அதற்கு முன்பே இக் கருத்தை நான் சொல்லியிருக்கிறேன். 2007;ஆம் ஆண்டு ஜனவரி 11இல் நான் எழுதிய ஒரு கட்டுரையில் கனடாவில் இருந்து ஐயப்பன் கோயிலுக்கு போபவர்களை பழனி முருகனிடம் செல்லும்படி எழுதியிருக்கிறேன்.

என்னுடைய கொள்கைகளில் எந்தக் குழப்பமும் இல்லை. நான் அன்றிலிருந்து இன்று வரை என்னுடைய கொள்கைகள், சிந்தனைகள், நோக்கம் என்பன பற்றி தெளிவாக எழுதி வந்திருக்கிறேன்.

நீங்கள் தாராளமாக நான் முன்பு எழுதியவற்றை இங்கே இணைத்து, என்னை கேள்வி கேட்கலாம். பதில் தர நான் தயாராகவே இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள். :D:lol:

"நான் கடவுள் மறுப்பாளன், ஆகவே தமிழர்களின் வழிபாடு மற்றும் கடவுள் நம்பிக்கையாளர்களின் சடங்குகளில் தமிழைக் கொண்டு வருவதற்கான போராட்டத்தில் பங்கெடுக்க மாட்டேன்"

என்று சொல்வதும்

"நாம் உயிர்க் கொலைக்கு எதிரானவர்கள், ஆகவே நாம் விடுதலைப் போராட்டத்திற்கு உதவ மாட்டோம்"

என்று ஆலேலூயாகாரர்கள் சொல்வதும் ஒன்றுதான்.

இரண்டு கருத்துக்களுமே தவறானவை. எது முதன்மையானது என்று பகுத்தறியத் தெரிந்திருக்க வேண்டும்.

லீ!

நான் "மெய்யெனப்படுவது" பகுதியில் "நான் ஏன் இப்படி ஆனேன்" என்ற தலைப்பில் என்னைப் பற்றி எழுதியிருக்கிறேன்.

"கடவுள் நம்பிக்கை மற்றும் மறுப்பு" என்பதுதான் தனிப்பட்ட விடயம். எமது தாய்மொழி புறக்கணிக்கப்படுவது தனிப்பட்ட விடயம் அல்ல. இந்து மதத்தை நான் எதிர்ப்பதன் காரணமும் அதுதான். இந்து மதத்தின் பெயரில் எமது இனத்திற்கும் மொழிக்கும் செய்யப்படும் தீங்குகளின் அடிப்படையிலேயே நான் இந்து மதத்தை விமர்சிக்கின்றேன்.

சரி சபேசன்..! கடவுளை மறுத்து விட்டு.. பின் எதற்காக அந்த கடவுளை தமிழில் வழிபடவேண்டும்...? கடவுள் நம்பிக்கை அல்லது மறுப்பு அவரவர் தனிப்பட்ட விடயம் என்றும்.. மொழி பொது விடயம் என்றும் சொல்கின்றீர்கள்..! பிறகு ஏன் தனிப்பட்ட விடயத்தில் பொது விடயத்தை திணிக்க வேண்டும்..?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமூகம் தாலி கட்ட வேண்டாம் என்று தடுக்க முனைகின்ற போது, அதை மறுத்து தாலி கட்டுவதும்

சபேசன் - சமூகத்துக்கு ஆயிரம் கருத்து இருக்கலாம் - ஆனால் பகுத்து அறிந்த ஒரு கருத்து தாலி தொடர்பில் எமக்கு இருக்குமா இல்லையா ? அந்தக் கருத்தை நடைமுறைப்படுத்துவதுதான் அக்கருத்து குறித்து நாம் முன்னர் எழுதியவை பேசியவற்றை நேர்மைப்படுத்தும்-

உங்களை நான் எப்படிப் புரிந்து கொள்கிறேன் என்றால் -

ஒரு விவாதத்திற்கு -

சமூகம் இன்று முதல் - சமஸ்கிருதத்தில் பூஜைகள் செய்வது கூடாது. தனித்தமிழில் மட்டும்தான் செய்ய வேண்டும் - என்றால்

தாலிகட்ட வேண்டாம் எனச்சொன்ன போது அதை மறுத்து தாலி கட்டியது போலவே -

சமஸ்கிருத்தில் பூஜை செய்ய வேண்டாம் எனச் சொல்லும் போதும் மறுத்தும் -

சமஸ்கிருதத்தில் பூஜையை செய்வீர்களோ என ஜயமுறுகிறேன்.

எனதின்னொரு ஐயம் -

தனித்தமிழ் திருமணங்கள் அதிகரித்து - அது வழமையாகி - மக்கள் அந்தக் கருத்தியலுக்கு அடிமைப்பட்டு - ஒரு கட்டத்தில் தனித்தமிழில் திருமணம் செய்தால் மட்டுமே கணவன் மனைவி இறுதி வரை அன்பாக இருப்பார்கள் என்றொரு மூட நம்பிக்கை பரவுமானால் -

அந்த மூட நம்பிக்கையை ஒழிப்பதற்காக

மீளவும் சமஸ்கிருத மொழி திருமணங்களை ஊக்குவிப்பீர்களோ ?

தாலி கட்டக்கூடாதென்பதற்காக நீங்கள் பகுத்தறிந்து ஆய்ந்து வைத்திருந்த காரணங்களையெல்லாம் - தூக்கி வீசிவிட்டு - கட்டக்கூடாது எனச்சொன்னவர்களின் கருத்தை முறியடிக்கக் கட்டினேன் என்பது எவ்வகை?

தாலி என்பது திருமணத்திற்கு வந்தோருக்கு அது திருமணம் குறித்த உணர்வை ஏற்படுத்த கட்டப்பட்டதெனில் - திருமணத்திற்கு வருவோரில்தானே உங்களது சமூகச்சிந்தனை அடங்கியுள்ளது. -

உங்கள் விவாத விளக்கங்களைப் பார்த்த பிறகு - உண்மையில் சாதாரண ஆரிய முறைப்படி உங்கள் திருமணம் நடைபெற்றிருந்தால் கூட - உங்கள் பகுத்தறிவுக் கோட்பாட்டிற்கு பங்கம் வர முடியாதபடி ஐயருக்கும் அவரது சமஸ்கிருத மந்திரங்களும் ஏன் இடம்பெற்றன என்பதற்கும் விளக்கம் உங்களால் தந்திருக்க முடியும்.

பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளுடன் சுயமரியாதைத் திருமணங்கள் இணைந்திருக்கின்றன. சுயமரியாதை திருமணத்தில் சாதி மறுப்பும் தாலி மறுப்பும் உள்ளடங்கியிருக்கின்றன.

நீங்கள் - வைதீக திருமணமொன்றை தமிழ்ப்படுத்தி முடித்திருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனின் தவறு ஒன்றுமில்லை. எல்லாப் பகுத்தறிவாளனும் செய்வதைத் தான் அவரும் செய்திருக்கின்றார். எனவே அது பற்றிக் குறை சொல்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

தனிப்பட்ட விடயத்தில் பொதுவிடயத்தை திணிப்பவர்கள் நாம் அல்ல. கடவுள் வழிபாட்டை குறிப்பட்ட கூட்டத்தினருக்கும் குறிப்பிட்ட மொழிக்கும் சொந்தமாக்குபவர்கள்தான் இதைப் பொதுப் பிரச்சனை ஆக்குகிறார்கள்.

"கடவுளை ஒரு குறிப்பிட்ட மொழியில்தான் வழிபட வேண்டும், உன்னுடைய தாய் மொழியில் வழிபடக் கூடாது" என்று இவர்கள் எமது தமிழர்களை நம்ப வைத்துள்ளார்கள்.

இந்த மோசடியான நம்பிக்கையின் மூலம் அந்த மக்கள் தமது தாய் மொழியில் வழிபடுவதற்கான உரிமையை இழந்து நிற்கிறார்கள். தாய்மொழி அவமதிக்கப்படுகிறது என்பது மட்டும் இங்கே பிரச்சனை அல்ல. ஒரு இனத்தின் உரிமை மறுக்கப்படுகிறது என்பதும் இங்கே பிரச்சனை

கொடுமை என்னவென்றால் இவர்களுக்கு தாம் உரிமை இழந்து நிற்கிறோம் என்பதை அறியாமலேயே இருக்கிறார்கள். அடிமை வாழ்வில் சுகம் கண்ட இனங்கள் உலகத்தில் இருப்பது போல், அவர்களும் தாம் இழிவுபடுத்தபடுவதை அறியாது சந்தோசமாக இருக்கிறார்கள்.

அதற்காக இது என்னுடைய பிரச்சனை இல்லை என்று கடவுள் மறுப்பாளர்களாகிய நாம் ஒதுங்க முடியாது.

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆகவே நான் கடவுளை வணங்கத் தேவையில்லை. ஆனால் கடவுளை நம்புகின்ற, வணங்குகின்ற என்னுடைய இனத்தவன் தன்னுடைய தாய்மொழியில் கடவுளை வணங்கும் உரிமையை இழந்து நிற்கும் போது, அவனுக்காக போராடுவது அவசியம்.

இங்கே பிரச்சனை என்னவென்றால், அவன் உரிமை இழந்து நிற்பது அவனுக்கே தெரியவில்லை. தெரிந்த நாம் போராடாது வேறு யார் போராடுவார்?

இது உரிமையும், இனமும், மொழியும் கலந்த ஒரு பிரச்சனை. போராடத்தான் வேண்டும்.

வைதீக திருமணத்தில் இடம்பெறும் பெரும்பாலான அம்சங்கள் இதில் இடம்பெறவில்லை. பார்ப்பான், மூகூர்த்த நேரம், சமஸ்கிருத மந்திரங்கள், நெருப்பு, அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் இப்படி நிறைய விடயங்கள் இடம்பெறவில்லை.

ஆனால் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களும் செய்யக் கூடியதாக என்னுடைய தமிழ் நெறித் திருமணத்தை அமைத்துக் கொண்டேன் என்பது உண்மை. அதற்காக அதை வைதீக திருமணம் என்று சொல்வது சரியல்ல.

காவடியின் மற்றைய கருத்துக்களுக்கு வருகிறேன்.

காவடிக்கு நான் தாலி கட்டியது பற்றி கூறியது சரியாக விளங்கவில்லை என்று நினைக்கிறேன்.

சமூகம் தாலியை கட்டச் சொல்கிறது. அதற்கு காரணம் தாலி சக்தி மிக்கது. தாலி தெய்வீகமானது. தாலிதான் எல்லாம்.

குறிப்பிட்ட நேரங்களில் தாலி கட்ட வேண்டாம் என்கிறது. அதற்கு காரணம் தாலி சக்தி மிக்கது. தாலி தெய்வீகமானது. தாலிதான் எல்லாம்.

நான் தாலியை எதிர்க்கவில்லை. தாலியை பற்றி சொல்லப்படும் விளக்கங்களைத்தான் எதிர்க்கிறேன்.

உதாரணத்திற்கு இப்படி வைத்துக் கொள்வோம்.

தமிழில் வழிபாடு செய்யக் கூடாது. காரணம் தமிழ் நீசபாசை

இப்பொழுது குறிப்பிட்ட நேரங்களில் தமிழில் வழிபாடு செய்தே ஆக வேண்டும் என்கிறார்கள். காரணம் கேட்டால் அந்த நேரங்களில் நீசபாசையில்தான் வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இப்பொழுது நான் தமிழில் வழிபாடு செய்வதை எதிர்ப்பேனா? மாட்டேனா? நிச்சயமாக எதிர்ப்பேன். காரணம் அங்கே தமிழில் வழிபாடு செய்யப்பட்டு "தமிழ் நீசபாசை" என்ற கருத்துருவாக்கம் நிலைநிறுத்தப்படுகிறது.

இது ஒரு உதாரணம்.

அதே போன்று தாலி பற்றிய கற்பிதங்களை எதிர்க்கின்ற நான், சமூகம் சொல்வது போன்று அதைக் கட்டாது விட்டு, அந்தக் கற்பிதங்களை நிலைநிறுத்துகின்ற செய்கையை செய்ய நான் விரும்பவில்லை.

உடைக்கப்பட வேண்டியது தாலி அல்ல. தாலி பற்றி சமூகம் கொண்டிருக்கும் முட்டாள்தனமான கருத்துக்கள். தாலியை கட்டியதன் மூலமும், தாலி பற்றிய பிரகடனம் மூலமும் அதை செய்திருப்பதாக நான் நம்புகிறேன்.

அத்துடன் தாலி கட்ட விரும்புபவர்களும் செய்யக் கூடியதான தமிழ் நெறித் திருமணத்தை அறிமுகம் செய்வது என்னுடைய நோக்கம் என்பதை நீங்கள் இங்கே கவனத்தில் எடுக்க வேண்டும்.

தாலி கட்டாமல் விட்டு, "தமிழ் நெறித் திருமணம் என்பது தாலி கட்டாது செய்வது" என்ற தவறான புரிதலை கொடுத்து என்னுடைய கொள்கையில் மட்டும் வென்று, நோக்கத்தில் தோற்றுப் போக நான் விரும்பவில்லை.

அனைவரும் செய்யக் கூடிய ஒரு திருமணத்தை அறிமுகப்படுத்தி, அதைப் பற்றி வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நல்லவிதமாக பேச வைத்திருக்கிறேன். இது என்னுடைய வெற்றி.

சபேசன்

மேலும் மேலும் உங்கள் தவறுகளை நியாயப்படுத்த நீங்களே ஏற்கனவே எழுதியதை மறந்து புதிதாக கதை அளக்கின்றீர்கள். தயவுசெய்து இப்பக்கத்தில் நீங்கள் ஆரம்பத்திலிருந்து எழுதியதை வாசித்துப் பாருங்கள், அப்போதாவது உங்கள் தவறுகள் உங்களுக்குப் புரிகின்றதா என்று பார்ப்போம்.

உதாரணமாக நீங்கள் ஏற்கனவே திருமணம் என்று நடந்தால் தாலி கட்டினால்த் தான் சமுதாயம் ஏற்றுக் கொள்ளும் என்பதற்காக தாலி கட்டுவது என்று முடிவெடுத்திருந்தீர்கள். ஆனால் பிற்பாடு உங்கள் நண்பர்கள் சிலரின் விசாரிப்பில் கர்ப்பினியாகவிருக்கும் பெண்ணுக்கு தாலி கட்டக்கூடாது என்று அறிந்து கொண்டீர்கள். ஆனாலும் தாலி கட்டுவது என்று முடிவெடுத்துக் கட்டினீர்கள். இவை யாவும் ஏற்கனவே நீங்கள் பதிந்தவை தான்.

இப்போ என்னடாவென்றால் சமுதாயம் தாலி கட்டக்கூடாது என்பதால் தாலி கட்டியதாக பூ சுற்றுகின்றீர்கள். அப்படிப் பார்த்தால் தாலி கட்டாமலேயே பல வருடங்களாக கணவன் மனைவியாக வாழ்ந்த நீங்கள் ஏன் சமுதாயப்பழிப்பிற்கு அஞ்சி திருமணம் நடாத்தித் தாலி கட்டினீங்கள். சமுதாயப் பழிப்பைப் புறம்தள்ளி உங்கள் கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்தல்லவா காட்டியிருக்க வேண்டும்??

இங்கே எத்தனைபேர் உங்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டி முயலிற்கு நான்கு கால்கள் தான் என்று வாதாடினாலும். நீங்கள் இல்லை முயலிற்கு ஒரு பக்கமாக நின்று பாருங்கள் இரண்டு கால்கள் தான் என்று உங்களை நியாயப்படுத்தவே வாதாடுவீர்கள். தொடருங்கள் உங்கள் இரண்டு கால்கள் நியாயத்தை. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

"கடவுளை ஒரு குறிப்பிட்ட மொழியில்தான் வழிபட வேண்டும், உன்னுடைய தாய் மொழியில் வழிபடக் கூடாது" என்று இவர்கள் எமது தமிழர்களை நம்ப வைத்துள்ளார்கள்.

இந்த மோசடியான நம்பிக்கையின் மூலம் அந்த மக்கள் தமது தாய் மொழியில் வழிபடுவதற்கான உரிமையை இழந்து நிற்கிறார்கள். தாய்மொழி அவமதிக்கப்படுகிறது என்பது மட்டும் இங்கே பிரச்சனை அல்ல. ஒரு இனத்தின் உரிமை மறுக்கப்படுகிறது என்பதும் இங்கே பிரச்சனை

இது தவறாகும். நீங்கள் இப்படியான தப்பிப்பிராயத்தில் இருக்கின்றது என்பது மட்டும் தான் உண்மை.

நாயன்மார்கள் பாடல்கள் மட்டுமல்லாமல், தமிழில் பக்திப் பாடல்கள் உள்ளன. இறைவன் அதை ஏற்று அவர்களுக்குத் துணை புரிவதாகப் பல வரலாறுகள் சொல்லி நிற்கின்றன. எனவே நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்ற சிந்தனை தவறானது. மேலும் சமஸ்கிருதத்தின், தமிழ் வருகை என்பது கடவுள்களுக்கான பொதுமொழிக் கொள்கை என்ற கருத்தினால் ஏற்பட்டது. அக்காலத்தில் அது நியாயமாக இருந்தது.

எனவே உங்களை நியாயப்படுத்தப் பிழையான கருத்தினை வழங்காதீர்கள்.

சபேசன்

உங்கள் சுய விளம்பரங்களைப் பார்க்கும் போது. சுவிசில் சில வருடங்கள் முன்பாக வானொலிப்புகழ் பெண்மணியொருவர் தனது குழந்தையின் முதலாவது பிறந்த நாளை ஆடம்பரமாக மண்டபமெல்லாம் எடுத்து தடபுடலாக கொண்டாடினார். ஆனால் குழந்தை கேக் வெட்டும் போது வெறும் பம்பர்ஸ் மட்டுமே அணிவித்திருந்தார். ஏன் இப்படி நல்ல உடுப்பேதாவது போட்டிருக்கலாமே என்று வினாவிய போது அப்பெண்மணி அளித்த பதிலால் எல்லோரும் அதிர்ந்துவிட்டோம்

அம்மணி சொன்ன பதில்:

:lol: நாட்டில் போர்க்கொடுமைகளால் எத்தனை குழந்தைகள் உணவின்றி, உடையின்றி வாழுகின்றார்கள். அதனால்த்தான் எனது குழந்தைக்கு ஆடம்பரமாக உடுப்பு எதுவும் போடாமல் வெறும் பம்பர்ஸ் மட்டும் தான் அணிவித்துள்ளேன். :lol:

:D அம்மணி ஒரு நகைக்கடையையே அணிந்து கொண்டு ஆடம்பரமாக உலா வந்தார். அவரிற்கு தாயகத்தில் பல பெண்கள் படும் இன்னல்கள் தெரிந்திருக்கவில்லைப் போலும். :lol:

வசம்பு!

தயவு செய்து நான் எழுதியதை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள். நீங்கள் எழுதியதைப் படித்தால் உங்களுக்கு விளக்கம் குறைவு என்று மற்றவர்கள் நினைத்து விடுவார்கள்.

உங்களுக்காக நான் எழுதிய அதே வரிகளை மீண்டும் தருகிறேன்

தாலி கட்ட வேண்டும் என்று என்னுடைய மனைவி விரும்பினாலும், தாலி கட்டுவது இல்லை என்ற முடிவில்தான் நான் இருந்தேன்.

ஆனால் என்னுடைய முடிவை இரண்டு சம்பவங்கள் மாற்றின.

எமது மக்கள் தமது திருமணத்தை தமிழில் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் நான் என்னுடைய திருமணத்தை செய்கிறேன். என்னுடைய திருமணத்தில் கலந்து கொள்பவர்கள், என்னுடைய திருமணத்தை ஒரு திருமணமாக உணர்ந்தால்தான் அதைப் பின்பற்ற முன்வருவார்கள். அந்த உணர்வு வராது விட்டால் பின்பற்றுவது பற்றி பரிசீலிக்கக் கூட மாட்டார்கள். என்னுடைய முயற்சி வீணாகி விடும்.

ஆகவே தாலியை கட்டுவோமா என்ற யோசனையில் ஆழ்ந்தேன்.

நான் தாலி கட்டாது திருமணம் செய்ய இருப்பதை என்னுடைய நண்பர் ஒருவரிடம் சொன்ன போது அவர் சொன்னார் "அதுதான் சரி, கர்ப்பமாக இருக்கும் போது தாலி கட்டக் கூடாது"

ஒரு நேரத்தில் தாலி கட்டக்கூடாது என்ற சமூகத்தின் நச்சரிப்பு அதிகரித்து விட்டது. எம்முடன் திருமணம் பற்றி பேசுபவர்களில் பெரும்பாலனவர்கள் "தெரியும்தானே! தாலி கட்டக் கூடாது" என்று முடித்துக் கொண்டார்கள்.

ஆரம்பத்தில் நாம் இருவரும் தாலி கட்டாது இணைந்து வாழ்வதை கேலி செய்த அதே சமூகம் இப்பொழுது திருமணம் செய்யப் போகும் நேரத்தில் "தாலி கட்டாதே" என்று அடம்பிடித்தது.

எனக்கு இப்பொழுது தாலி கட்டுவதை விட, தாலி கட்டாது இருப்பதுதான் மூடநம்பிக்கைக்கு துணைபோவதாகப் பட்டது.

இதிலே மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். என்னுடைய மனைவியின் விருப்பம் என்பதைத் தவிர என்னுடைய திருமணத்தில் தாலி இடம்பெற்றதற்கான காரணங்கள்.

- வருபவர்கள் தாலி மீது நம்பிக்கை உள்ளவர்கள். அவர்களுடைய வீட்டிலும் தமிழ் நெறித் திருமணம் நடைபெறத் தூண்டுவதாக என்னுடைய திருமணம் அமைய வேண்டும்

- தாலி பற்றிய கற்பிதங்களுக்கு எந்த மதிப்பும் கொடுக்கக் கூடாது.

இதற்கு மேலும் நீங்கள் நான் எழுதியதை தவறாக புரிந்து கொண்டால், என்னால் ஒன்றும் செய்ய முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.