Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகேஸ்வரி வேலாயுதத்தின் கொலையுடன் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தொடர்பு ?

Featured Replies

யாழ் நெல்லியடி பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகர் மகேஸ்வரி வேலாயுதத்தின் கொலையுடன் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தொடர்புள்ளதாக யாழ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 7.30மணியளவில் நெல்லியடி நவிண்டில் இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள படையினரின் பெரும் பாதுகாப்பு மத்தியில் உள்ள மகேஸ்வரியின் வீட்டுக்கு இராணுவ உடையில் சென்ற மூன்று ஆயுததாரிகளே துப்பாக்கிசூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாவிண்டில் இராணுவ முகாமில் படையினருடன் இணைந்து ஈ.பி.டி.பி.ஒட்டுக்குழுவினரும் செயற்பட்டுவருவதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் டக்ளஸ் தேவானந்தாவுடன் அண்மைக்காலமாக இவருக்கு பலத்த முரண்பாடுகள் தோன்றியிருந்ததாகவும் அதன் காரணமாக அவர் வெளியேறி யாழ் வந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாகவே கடந்த காலங்களில் பாதுகாப்பு படையினருடன் வந்துபோகும் மகேஸ்வரி வேலாயுதம் எந்தவித பாதுகாப்பும் இன்றிவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு மகேஸ்வரி வேலாயுதம் சுடப்பட்டதும் அப்பகுதிக்கு வந்த படையினர் பொலிஸாரின் எந்தவித அனுமதியும் பெறாமல் உடனடியாகவே சடலத்தை பலாலி கொண்டுசென்று விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பியது டக்ளஸ் மீதான சந்தேகத்தை உறுதிப்படுத்துவனவாக உள்ளது.

கடும் பாதுகாப்பு நிறைந்த பகுதிக்குள் விடுதலைப்புலிகள் வந்து துப்பாக்கிசூட்டை நடத்திவிட்டுச்சென்றதான தகவலை டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துவருகின்றார்.

கடந்த காலங்களில் டக்ளஸ{டன் முரண்பட்ட தினமுரசு ஆசிரியர் அற்புதன் உட்பட பலர் கொல்லப்பட்டு அப்பழிகள் விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி : சுவிஸ் முரசம்

மகேஸ்வரியின் சடலம் எந்த அடிப்படையில் கொழும்பு கொண்டு செல்லப்பட்டது.

யாழ்.பருத்திகதுறையில் ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் பலியான வேலாயுதம் மகேஸ்வரியின் சடலம் எந்த அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டது என்ற கேள்வி பொதுமக்களிடம் பலத்த கேள்வியாக ஏற்பட்டு;ள்ளது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நீதிமன்றத்தின் எல்லைக்குள் இடம்பெற்ற இந்த குற்றச் செயல் சம்பந்தமாக உரிய பொலிஸ் விசாரணையோ அன்றி குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று நீதிபதியோ விசாரணை மேற்கொள்ளாத நிலையில் சடலத்தை எதன் அடிப்படையில் அகற்றினார்கள் என்பதும் மற்றும் பொது மக்களுடைய சடலங்கள் நாள்கணக்காக வைத்திய சாலை பிரேத அறையில் காத்துக்கிடக்கும் நிலமையில் எவ்வாறு மகேஸ்வரி வேலாயுதத்தின் சடலம் மட்டும் எந்த வகையான விசாரணையும் இன்றி நள்ளிரவுடன் அகற்றப்பட்டு பலாலி படைத்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டது.

என்ற கேள்வியும் பொது மக்களிடமும் மற்றும் கல்வியலாளர்களிடமும் சட்டவாதிகளிடமும் காணப்படுகின்றது.

இந் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் ஒரு சரியான நேர்மையான நீதித்துறை இருக்கின்றதா? என்ற கேள்வியையும் மறுபுறத்தே யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கு என்பது இல்லையென்பதை இந்த சம்பவம் அப்பட்டமாக எடுத்துக் காட்டுவதாவும் பலரும் தெரிவிக்கின்றார்கள்

சட்டம் என்பது யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் நீதித்துறையின் கைகளில் இல்லையென்பதும் மாறாக இராணுவத்தின் கைகளிலேயே காணப்படுகின்றது என்பது இந்தச் செயற்பாடு சிறந்த உதாரணம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

நன்றி : சங்கதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமைச்சர் டக்ளஸின் ஆலோசகர் மகேஸ்வரி நேற்றிரவு கரவெட்டி வீட்டில் சுட்டுக்கொலை! சுகயீனமுற்ற தாயாரைப் பார்க்கக் கொழும்பிலிருந்து வந்தவர்

சமூக சேவைகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வின் அமைச்சு ஆலோசகரும் மனித உரிமைகள் சட்டத்தரணியுமான செல்வி மகேஸ் வரி வேலாயுதம்(வயது53) நேற்று மாலை கரவெட்டியில் உள்ள அவ ரது தாயின் வீட்டில் வைத்து இனந் தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உடல் நலம் பாதிக்கப் பட்ட தனது தாயைப் பார்ப்பதற்காகச் சில தினங்களுக்கு முன்னர் அவர் யாழ்ப்பாணம் வந்திருந்தார் என்றும்.

இராணுவச் சீருடையில் சென்ற விடு தலைப்புலிகள் அமைப்பினரே அவரை சுட் டுச் சென்றதாகவும் சமூக சேவைகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பி.பி.ஸி. தமிழோசைக்கு தெரிவித்தார்.

மகேஸ்வரிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருந்தபோதும், அவர் பாதுகாப்பை கோரவில்லை என்றும் அமைச்சர் மேலும் சொன்னார்.

சடலத்தை பருத்தித்துறை ஆஸ்பத்திரிக்கு அனுப்புமாறு பொலீஸாருக்கு பருத்தித்துறை நீதிவான் க.அரியநாயகம் உத்தரவிட்டார். இன்று காலை மரண விசாரணை இடம் பெறும் என்றும் அவர் பொலீஸாருக்கு அறிவித்துள்ளார்.

http://www.innovaylk.com/uthayan/FullView.php?ntid=2464

Remains of Maheswari Velayutham flown to Colombo

[TamilNet, Wednesday, 14 May 2008, 13:11 GMT]

The remains of Maheswari Velayutham, the advisor of EPDP leader Douglas Devananda, shot and killed Tuesday, was flown to Colombo in a special aircraft with security arrangements Wednesday around 7.30 p.m, along with her family members and relatives, sources in Jaffna said. Her remains will be interred in Borella Saiva crematorium Thursday, the sources added.

Tension prevailed in Vadamaraadchi, where the killing took place.

SLA forbid the public to use roads in the area close to Ms Velayutham's house in Navi'ndil until 8:30 a.m Wednesday.

Public transport in the area has returned to normalcy, but people kept to their houses instead of venturing out to attend matters.

Pedastrians and others attending to personal business in Nelliyadi and Point Pedro Wednesday morning were rounded up by Sri Lanka Army (SLA) troops and made to assemble in the main playing fields, temples and theatre halls for interrogation and kept detained for long hours.

Students on their way to participate in inter-school athlectic meet too were denied permission to go beyond Vallai by the SLA.

They were sent back to their schools.

Inquires into the death was conducted before the remains of the victim was flown to Colombo.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25641

  • கருத்துக்கள உறவுகள்

ஆர் குத்தினாலும் அரிசியானால் போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆர் குத்தினாலும் அரிசியானால் போதும்.

நீங்கள் சொல்லுறது சரிதான் ஆனால் சிலதுகள் அரிசியையும் எல்லோ குத்துதுகள்,

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: தலைப்பையே பிழையாக எழுதினா எப்படி ? டக்கிளசுக்கும், மகேசக்காவுக்கும்தானே தொடர்பு ? பிறகு ஏன் மகேசக்காவின்ர கொலையோடு தொடர்பு எண்டு எழுதீனம்.

தொடர்பில இருக்கேக்க போட்டுத்தள்ள ஏலாது, தொடர்பெல்லாம் முடிந்து சேவை எல்லாம் ஆறின பிந்தானே போட்டுத் தள்ள முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.