Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசா‌ங்க‌ம் - ‌விம‌ர்சன‌ம்! [விஜயகாந்த்]

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

img1080515054_1_1.jpg

ப‌ஞ்‌ச் வசன‌ம் இ‌ல்லை, அர‌சிய‌ல் ‌சிலேடைக‌ள் இ‌ல்லை. அட, ‌‌விஜயகா‌ந்‌த் ‌திரு‌ந்‌தி‌வி‌ட்டாரா எ‌ன்று பா‌ர்‌த்தா‌ல், அதே பழைய கோ‌ட், து‌ப்பா‌க்‌கியுட‌ன் த‌னியாளாக ‌வி‌ல்ல‌ன்களை ப‌ந்தாடு‌கிறா‌ர்.

அய‌ல்நா‌ட்டு ‌வி‌ல்ல‌ன்க‌ள் உ‌ள்நா‌ட்டு ‌வி‌ல்ல‌னி‌ன் துணையுட‌ன் இ‌ந்‌திய ‌திருநா‌ட்டை நாச‌ம் செ‌ய்ய முய‌ல்‌கிறா‌ர்க‌ள். வழ‌க்க‌ம்போ‌ல ‌விஜயகா‌ந்‌த் ச‌ம்ம‌ர் சா‌ல்‌ட் அடி‌த்து நா‌ட்டை கா‌ப்பா‌ற்று‌கிறா‌ர்.

பழ‌கிய கதை‌யி‌ல் மாதே‌ஷி‌ன் ‌திடு‌க் ‌திரு‌ப்ப ‌திரை‌க்கதை சுவார‌ஸிய மே‌ற்படு‌த்து‌கிறது.

ப‌ட்டை போ‌ட்ட க‌ல்லூ‌ரி மாணவனு‌ம், க‌ல்லூ‌ரி மாண‌வியு‌ம் கொலை செ‌ய்யு‌ம் போது கொ‌ஞ்ச‌ம் பத‌றி‌த்தா‌ன் போ‌கிறோ‌ம். ‌வி‌ஞ்ஞா‌‌னிகளையு‌ம், சா‌ப்‌ட்வே‌ர் தொ‌‌‌ழில‌திப‌ர்களையு‌ம் யா‌ர் கொலை செ‌ய்‌கிறா‌ர்க‌ள் என க‌ண்ட‌றிய வரு‌ம் அ‌திகா‌ரி ‌பிஜுமேம‌ன் காணாம‌ல் போ‌கிறா‌ர்.

போ‌‌‌லீ‌ஸ் அ‌திகா‌ரி ‌பி‌ஜுமேம‌ன் தா‌ன் ச‌திகார கூ‌ட்ட‌த்‌தி‌ன் தலைவ‌ன் எ‌ன தெ‌ரியவரு‌ம்போது ஷா‌க். போ‌‌‌லீ‌ஸ் அ‌திகா‌ரி ‌பி‌ஜுமேம‌ன் வேறு, ச‌திகார‌ன் வேறு என தெ‌ரிய வரு‌ம்போது டபு‌ள் ஷா‌க்.

ஆ‌‌க் ஷ‌ன் கதை‌யி‌ல் காத‌ல் கா‌ட்‌சிக‌ள் சொத‌ப்பலாக இரு‌க்கு‌ம். அரசா‌ங்க‌ம் ஆறுத‌ல். காது கேளாத ந‌வ்‌தீ‌ப் கவுரு‌ம் அவரது உ‌யி‌ர் ‌தியாகமு‌ம் ர‌‌சி‌க்க வை‌க்‌கிற த‌னி எ‌பிசோ‌ட்.

கனடாவு‌க்கு பட‌ம் நகரு‌ம்போது பெ‌ரிதாக எ‌தி‌ர்பா‌ர்‌‌க்‌கிறோ‌ம். எ‌தி‌ர்‌ப்பை மாதே‌ஷ் ‌நிறைவே‌ற்ற‌வி‌ல்லை. கனடா ‌விமான ‌நிலைய‌த்த‌ி‌லிரு‌ந்து ‌விஜயகா‌ந்‌த் த‌ப்‌பி‌ப்பது‌ம், அ‌ந்த பாதாள ப‌ன்‌றிகளு‌ம் ‌தி‌க்... ‌தி‌‌க்...

‌விஜயகா‌ந்‌தி‌ன் ‌ரி‌ட்டைய‌ர்‌ட்மெ‌ண்‌ட் வயதை அவரது தொ‌ங்கு‌ம் சதைக‌ள் கா‌ட்டி‌க் கொடு‌க்‌கி‌ன்றன. ஆ‌க் ஷ‌ன் கா‌ட்‌சிகளா‌ல் அமு‌ங்‌கி‌ப் போ‌கிறது, ஸ்ரீகா‌ந்‌த் தேவா‌‌வி‌ன் இசை. ஒ‌ளி‌ப்ப‌திவாள‌ர் ஏ.வெ‌ங்‌கடே‌ஷூ‌க்கு பா‌ஸ் மா‌ர்‌க் தரலா‌ம்.

ஷெ‌ரி‌ல் ‌பி‌ரி‌ண்டோவு‌ம், ஸ்ரீமனுடனான ச‌ண்டை‌க்கா‌ட்‌சியு‌ம் வலு‌க்க‌ட்டாயமான ‌தி‌ணி‌ப்பு.

ஆ‌க் ஷ‌னி‌ல் ம‌ட்டுமே ராஜா‌ங்க‌ம் நட‌த்‌தி‌யிரு‌க்‌கிறது ‌விஜயகா‌ந்‌தி‌ன் அரசா‌ங்க‌ம்.

webulagam.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புல்லரிக்குதப்பா :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பம்பரம் விடுகின்ற காட்சிகள் ஏதாவது இருக்கோ ?

  • கருத்துக்கள உறவுகள்

புல்லரிக்குதப்பா :rolleyes:

விமர்சனத்தை படிச்சே புல்லரிச்சால் படத்தை பாத்தால் என்னென்னவவெல்லாம் அரிக்கப்போகுதோ??? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இன்றுதான் இந்த அரிய? படத்தை பார்த்தேன். படு முட்டாள்தனமான காட்சி அமைப்புகள்......அதுவும் கனடாவில் நடப்பதாக சொல்லப்படும் காட்சிகளை சொல்லவே வேண்டாம்.

திருட்டு விசிடியிலேயே விஜயகாந்தை பார்க்க சகிக்கவில்லை....தியேட்டரில் படம் பார்ப்பவர்களின் கதி??????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போலீசுக்கு தண்ணிக்காட்டும் குற்றவாளிகளை பிடிக்க விஜயகாந்த் போன்றவர்களை தவிர பொருத்தமானவர்கள் இருக்கமுடியாது என்பதால் மீண்டும் கேப்டனை அதே வேடத்தில் பார்க்கமுடிகிறது. இம்முறை கொஞ்சம் ஸ்டைலிஷாக.

இந்தியாவின் முன்னேற்றத்திற்கு மூளையாக இருக்கும் விஞ்ஞானிகள் சிலர் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்படுகின்றனர். இதற்கெல்லாம் காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரி பிஜூமேனன் நியமிக்கப்படுகிறார். இதற்காக மும்பையிலிருந்து விமானத்தில் வரும் பிஜூமேனன் சென்னை வருவதற்குள் மாயமாகிறார்.

ஒரு கிலோ சப்பாத்தி மாவை கொடுத்தால் ரொட்டிப்போடும் பக்குவத்திற்கு தரும் அளவிற்கு கையை பிசைந்து கொண்டிருக்கிறது காவல்துறை. இதனால் கிரிமினாலஜிஸ்ட் விஜயகாந்திடம் கேஸை ஒப்படைக்கிறது. அடிப்படை விஷயங்களில் மோப்பம் பிடிக்க ஆரம்பிக்கும் விஜயகாந்த், கொலை பின்னணியின் ஆணிவேரை கண்டுபிடிப்பதே கதை.

இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும் சக்திகளை அழித்துவிட்டால் வல்லரசு ஆவதை தடுத்துவிடலாம் என சில நாடுகள் போடும் திட்டத்தை அம்பலப்படுத்தும் பின்னணி திடுக்கிட வைக்கிறது. கதையில் காட்டியிருக்கும் இந்த தேச அக்கறைக்காக இயக்குனர் மாதேஷை மனதார பாராட்டியே ஆகவேண்டும்.

நல்லவேளை கேப்டனுக்கு காக்கிசட்டையெல்லாம் போட்டுவிட்டு பக்கம் பக்கமாக வசனம் பேச வைக்காமல் ரமணா பாணியில் அவரை காட்டியிருப்பது சிறப்பு. தலைப்பை தவிர எந்த அரசியல் வாடையும் காட்சிகளில் இடம்பெறாதது சூப்பர்.

முகத்தில் போடப்பட்ட ஒப்பனை மட்டும் தூக்கலாக தெரிகிறதே தவிர கேப்டனின் நடிப்பில் இளவம்பஞ்சின் மென்மையும் இயல்பும் அவரது பக்குவத்தை வெளிப்படுத்துகிறது. எந்தவொரு இடத்திலும் தனது கட்சிக்கொள்கைகளோ, அரசியல் கருத்துகளையோ திணிக்காதது படத்தின் பலம்.

போலீஸ் அதிகாரி, சர்வதேச குற்றவாளி என இரட்டைவேடம் போட்டுள்ள பிஜூமேனன், நடிப்பிலும் டபுள் ஷாட்.

விஜயகாந்தின் மனைவியாக காதுகேளாத கதாபாத்திரத்தில் வரும் நவ்நீத் கவுர், கணவனின் லட்சியத்திற்காக தன்னை மாய்த்துக்கொள்ளும் காட்சி செண்டிமென்ட் குவியல்.

இன்டர்போல் போலீஸான ஷெரில் பிரிண்டோ, யூனிபார்மில் வருவதைவிட கிளாமர் உடையில் கவர்ச்சி விருந்து படைப்பதுதான் அதிகம்.

கதையின் போக்கு கனடாவிற்குள் நுழைந்ததுமே ஹாலிவுட் படம் பார்க்கும் திருப்தியை அளிக்கிறார் இயக்குனர் மாதேஷ். இதற்கு கைகொடுத்திருப்பவர் கேமிராமேன் ஏ.வெங்கடேஷ்.

சென்னைக்கு வரும் வழியிலேயே பிஜூமேனன் மாயமாகிவிட்ட பிறகு படத்தில் ஏற்படும் வேகமும் சஸ்பென்சும் திரைக்கதையை சுவாரஸியமாக்குகிறது. சுவிங்கத்திற்குள் மெமரிகார்டை மறைத்துவைக்கும் ஐடியாவும் பலே.

சமீபத்தில் வெளியான இன்னொரு படத்தைப்போலவே எங்கோவரும் டிரைனில் எங்கிருந்தோ பறந்து செல்வதுபோன்ற காட்சி டூமச்.

பின்னணியில் பிரமாதப்படுத்தியிருக்கும் ஸ்ரீகாந்த் தேவா, பாடல்களில் கவனம் செலுத்தாதது குறை.

'அரசாங்கம்' இயக்குனரின் ராஜ்ஜியம்.

cinesouth.com

Edited by கறுப்பன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சற்று இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிற விஜயகாந்த் படம் அரசாங்கம். தனது 100 வது படத்தில் வீரப்பனைத் தேடி காட்டுக்குப் போன கேப்டன், இந்தப் படத்தில் நாட்டைத் துண்டாட நினைக்கிற பயங்கரவாத கும்பல் தலைவனைத் தேடி கனடாவுக்குப் போகிறார், குற்றவியல் பிரிவுத் தலைமை அதிகாரியாக!

இந்தியா வல்லரசு நாடாவதைத் தடுத்துவிடும் நோக்கத்தில் சில வளர்ந்த நாடுகள், இங்குள்ள வறுமை மற்றும் வேலையின்மையைப் பயன்படுத்தி இளைஞர்களை தேசத்துக்கெதிராகத் திருப்புகின்றன. இந்த வேலையை அந்நிய சக்திகளுக்காகச் செய்துகொடுக்கும் தீவிரவாத புரோக்கர் பிஜு மேனன். கனடாவிலிருந்தபடி காய் நகர்த்தும் விஷக் களை.

இந்த நெட்வொர்க்கை கண்டுபிடிக்கவே முடியாமல் தடுமாறுகிறது தமிழ்நாடு போலீஸ். உடனடியாக மும்பையிலிருந்து ஒரு சிறப்பு ஐ.பி.எஸ். அதிகாரியை வரவழைக்கிறது போலீஸ். ஆனால் அவரோ விமானத்திலிருந்து இறங்கும் முன்பே மாயமாகிறார்.

இந்த சிக்கல்களுக்கெல்லாம் தீர்வு காண அசாம் ஐ.பி.எஸ். பயிற்சிப் பள்ளியில் கிரிமினலாஜிஸ்டாகப் பணியாற்றும் அறிவரசன் ஒருவரால் மட்டுமே முடியும் என முடிவு செய்யும் தமிழக போலீஸ், அவரை சிறப்பு அழைப்பின் பேரில் வரவழைக்கிறது.

காணாமல் போன தனது நண்பனும் மைத்துனருமான பிஜு மேனனைக் (பிஜு மேன்னுக்கு இதில் இரட்டை வேடம்) கண்டுபிடிக்கவும், தீவிரவாத நெட்வொர்க்கை அழித்து இந்தியாவைக் காக்கவும் சென்னைக்கு வரும் கேப்டன், எப்படி அந்த அரிய சாதனையை நிகழ்த்துகிறார் என்பது மீதிக் கதை.

இடையில் நவநீத் கவுர், ஷெர்லின் பிண்டோ என இரு இளம் அழகிகளுடன் காதல், டூயட் என்று தனி ட்ராக் வேறு.

விஜயகாந்துக்கென்றே அளவெடுத்துத் தைக்கப்பட்டது போன்ற வேடம் என்பதால் அவருக்கு கனகச்சிதமாகப் பொருந்துகிறது. ஆனால் சில காட்சிகளில் கேப்டனிடம் அந்த வழக்கமான சுறுசுறுப்பும், ஆக்ரோஷமும் மிஸ்ஸிங்.

இன்னும் சில காட்சிகளில் காலம் எழுதிய ஆட்டோகிராஃப் அவர் உடலில் பளிச்சிடத் தொடங்கியிருப்பதையும் பார்க்க முடிகிறது. அதை மறைக்கக் கொஞ்சம் மெனக் கெட்டிருக்கலாம்.

மற்றபடி, படம் முழுக்க இயக்குநர் சொன்னதை இம்மி பிசகாமல் செய்து அசத்தியிருக்கிறார் விஜயகாந்த். ஒரு இடத்திலும் பஞ்ச் டயலாக்கோ அரசியல் வசனங்களோ இல்லை. அதற்கான வாய்ப்புகள் படத்தில் ஏராளம் இருந்தும் எடுத்துக் கொண்ட கதையின் இயல்பு கெட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக நின்ற கேப்டனுக்கும் இயக்குநர் மாதேஷுக்கும் பாராட்டுக்கள்.

கேப்டனுடன் டூயட் பாடுவதையும், வில்லன்களிடம் சிக்கி அவதிப்பட்டு கேப்டனின் உதவியைக் கேட்பதையும் தவிர நவ்நீத் கவுர், ஷெர்லின் பிண்டோ இருவருக்கும் பெரிதாக வேலையில்லை. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை.

போலீஸ் அதிகாரி, தீவிரவாத வில்லன் என இரட்டை வேடம் பிஜு மேனனுக்கு. ஆனால் அவரது அக்மார்க் மலையாள உச்சரிப்பு அந்த வேடங்களை ரசிக்கவிடாமல் செய்துவிடுகிறது.

மருந்துக்கும் இல்லை, படத்தில் காமெடி.

ஆரம்ப காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. ஆனால் காதல், கல்யாணம் என ட்ராக் மாறியதுமே அந்த வேகமும் எதிர்பார்ப்பும் விழுந்து விடுகிறது. இடைவேளைக்குப் பிறகு மீண்டும் கதை சூடுபிடிக்கிறது.

ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை பரவாயில்லை. க்ளைமாக்ஸில் ரயிலுக்குள் விஜயகாந்தும், பிஜு மேன்னும் பாயும் காட்சி குரு விஜய்க்கே சவால் விடும் வகையில் காதுல பூ சமாச்சாரம்

மற்றபடி, சமீபத்திய விஜயகாந்த் படங்களோடு ஒப்பிடுகையில் அரசாங்கம் எவ்வளவோ தேவலாம்.

கேப்டனின் இந்த அரசாங்கம் இயக்குநரின் கூட்டணி பலமாக இருப்பதால் தாக்குப் பிடிக்கும்!

Thatstamil.com

தமிழ்த் திரையுலகின் வரலாற்றில் விஜயகாந்த்தின் அரசாங்கம் படம் படைத்த சாதனையை வேறு எந்த படமும் படைத்ததில்லை!என்கிறார்கள்.விஜயகாந்த்தின

் 150வது படம்தான் அரசாங்கம்.விஜயகாந்த் 150 படங்கள் நடிச்சுட்டாரா என்று வியப்பவர்களுகு ஒரு தகவல்.விஜயகாந்த் 150 படங்கள் நடிக்கவில்லை.மாறாக 57 படங்கள் தான் நடித்துள்ளார்.ஆனால் தானது 150 படத்தை முதலில் வெளியிட்டு பிறகு 58,59,60 என்று மீண்டும் வரிசையாக போகலாம் என்று விஜகாந்த் முடிவெடுத்துள்ளார்.இதனால் அரசாங்கம் தன்னுடைய 150 படம் தான் என்று கேபடன் அடித்து சொல்கிறார்.கேப்டனுக்கு ஜோடியாக நடித்துள்ள நவ்னீத் கெளர்-ஷெரில் பின்டோ என இரு கவர்ச்சி குண்டுகள் தொடையையும் தட்டி அடித்து இது தன் 150 படம் தான் என்று கேபடன் கூறுகிறார்!இந்த படத்தில் கேப்டன் சிறு வயதில் ஒரு தமிழ் வாத்தியாராக இருந்து முதலமைச்சரான் ஒரு கிழ்வன் வளர்க்கிறான்.ஆனால் கேபடனுக்கும் அவர் குடும்ப உறுப்பினருக்கும் சாப்பாடு போட்டு கட்டுபடியாகாத அந்தக் கிழவன் கேபடனுக்கும் அவர் குடும்பத்துக்கும் சிக்கன் பிரியாணி என்ற பெயரில் மலிவான் எலி பிரியாணியை கலப்படம் செய்து கொடுக்கிறான்.நாட்டில் எலிகளின் எண்ணிக்கை குறைவதைக் கண்ட கேப்டன் எலிகளை காப்பாற்ற கனடா நாட்டிற்கே செல்கிறார்.அங்கே தான் உண்மையான கலப்பிடமில்லாத சிக்கன் பிரியாணியை சாப்பிடும் கேப்டன் தமிழ்நாட்டில் தனக்கும் தன் குடும்பத்திற்கும் கலப்படம் செய்த சாப்பாடு போட்டு கொல்லபார்க்கிறார்கள் என்பதை புரிந்துக் கொண்டார்.உடனெ ஒரு கல்யாண மண்டபத்தைக் கட்டி அங்கே எல்லொரும் இலவசமாக் கல்யாணம் செய்துக் கொள்ளலாம் ஆனால் கல்யாண்த்தில் நிச்சயம் கலப்பிடமில்லாத சிக்கன் பிரியாணி இருக்கு வேண்டும் என்று நிபந்தனை போட்டு நன்றாக தன் குடும்பத்துடன் ஆரோக்கியமான கலப்படமில்லாத சிக்கனை உண்டு மகிழ்கிறார்.இதில் கோபமுற்ற முதலமைச்சர் கிழவன் கேபடனின் கல்யாண மண்டபத்தை மக்கள் நலனுக்காக பொதுக்கழிவறை கட்ட வேண்டும் என இடித்து தள்ளி விடுகிறான்.கேபடன் மீண்டும் சிக்கன் பிரியாணி உண்கிறாரா? முதலமைச்சராகிறாரா?இதற்கு குறுக்கே நிற்கும் முன்னாள் கவ்ர்ச்சி நடிகை இந்நாள் சொர்ணாக்கா ஜெயலலிதாவையும், மருத்துவம் படித்து வேலைக் கிடைக்காமல் மரம் வெட்டும் வெட்டிப் பய ராமதாசையும்,குறுக்கு புத்திக்காரன் கருணாநிதியையும் எப்படி தோற்கடிக்கிறார் என்பதை படத்தில் பார்த்துத் தெறிந்துக் கொள்ளுங்கள்!

thatstamil.com Comments பகுதியிலிருந்து..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியில் விஜயகாந்த்தின் அரசாங்கம்

விஜயகாந்த் நடித்துள்ள அரசாங்கம் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யப் போவதாக அந்தப் படத்தின் இயக்குநர் மாதேஷ் அறிவித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில், தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளேன்.

இந்த படம், விஜயகாந்தின் வழக்கான பஞ்ச் டயலாக், அதிரடி சண்டைகள் இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக அமைந்துள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

ரொம்ப பேசாத, கெட்டவர்களை உதைத்து விரட்டாத வித்தியாசமான விஜயகாந்த்தை காட்டவேண்டும் என்பதற்காக நான் எடுத்த முயற்சிதான் அரசாங்கம். இதில் முழுக்க தனது புத்திசாலித்தனத்தால் விஜயகாந்த் நினைத்த காரியத்தை சாதிப்பது போல எடுத்திருந்தேன். நான் எதிர்பார்த்தபடியே படம் வெற்றி பெற்றுள்ளது.

அஜய் தேவ்கன், அக்ஷய் குமார், ஷாரூக் கான் போன்ற முன்னணி பாலிவுட் நடிகர்களுக்கு இந்த படத்தை போட்டுக் காட்டினேன். படம் நன்றாக வந்திருப்பதாக பாராட்டு தெரிவித்த அவர்களில் நடிகர் அஜய்தேவ்கன் மட்டும் இதன் இந்தி ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்தார்.

எனவே எனது அடுத்த படம் அரசாங்கத்தின் இந்தி ரீமேக். படத்தில் வேறு யார் நடிக்கிறார்கள், டெக்னிகல் குழு பற்றி பின்னர் தெரிவிப்பேன் என்றார்.

thatstamil.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.