Jump to content

நானும் என் ஈழமும் - 9 : பாலாண்ணா


Recommended Posts

பதியப்பட்டது

thooyaeelam.jpg

பாலாண்ணா, இது உங்களுக்காக மட்டும்..

இன்று தற்செயலாய் தூர தேசத்திலிருக்கும் என் அண்ணன் ஒருவருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. சந்தர்ப்பம் என சாதாரணமாய் சொல்லிவிட என்னால் முடியவில்லை. சிறுவயதிலிருந்து நான் அண்ணன்கள் செல்லம். குடும்பத்தில் பல ஆண்களுக்கு பின்னர் பல ஆண்டுகளுக்கு பின்னர் பிறந்த பெண்ணாயிற்றே. ஆயினும் எனக்கு என் குடும்பத்தில் பிறந்த சகோதரர்களை விட, ஈழத்தில் எங்கள் வீட்டின் முன்னால் இருந்த சகோதரர்களை தான் அதிகம் பிடிக்கும். நாட்டை காக்க வாழ்பவர்களை பிடிப்பதற்கு காரணம் தான் தேவையில்லையே. அப்படி சிறுவயதில் இருந்து அண்ணனானவர்களில் முக்கியமாக மதியண்ணா, முகிலண்ணா, நிலவண்ணா, பாலாண்ணாவை சொல்லலாம். இதில் நால்வரையும் மாவீரராக பார்த்தவள் நான். இன்று அவர்களின் படங்களிடம் மட்டும் பேச முடிகின்றது.

இன்று நான் உரையாடிய அண்ணண் பெயரும் பாலா. மூன்று வருடங்களாக நான் சற்றே தூர இருந்து பார்த்த அண்ணன். என்னோட பாலாண்ணாவின் பெயரும், சில குணாதிசயங்களும் இருப்பதால், இந்த பாலாண்ணா மேலும் எனக்கு அன்பு தானாக வந்ததில் ஆச்சர்யம் இல்லை தானே. என்னோட பாலாண்ணா போல் மற்றைய மூன்று அண்ணன்கள் கூட இருந்ததில்லை. மீசை வைத்த அன்னையவன் என்ற வரிகளை கேட்கும் போதெல்லாம் எனக்கு பாலாண்ணாவின் நினைவு தான் வரும்.

நான் பிறக்கும் போது பாலாண்ணாவுக்கு 15 வயதிருக்கும். எங்க வீட்டுக்கு தத்துபிள்ளையாக வந்து சொந்த பிள்ளைகளை எல்லாம் பின்னுக்கு தள்ளியவர். என்னை தன் அன்னையாக நினைத்து "அம்மா" என அழைத்தவர். ஊருக்கு போகும் நேரங்களில் என் கால் நிலத்தில் பட்டதில்லை. "ம்ம் தூக்குக்காவடி தொடங்கிட்டுதா?" என வீட்டில் யார் கிண்டல் பண்ணினாலும் என்னை கீழே விட்டதில்லை. சின்ன வயதில் சாப்பிட மாட்டேன் என நான் சொல்லும் போதெல்லாம் வீட்டின் கூரையில் ஏறி, என்னையும் தூக்கி வைத்து சாப்பாடு குடுப்பாராம். ஒரு வயதில் நடந்தவை எனக்கு நினைவில் இல்லை. ஆனால் பெரியம்மா அடிக்கடி சொல்லுவார். அதே நினைவில் ஒஸ்திரேலியாவிலும் வீட்டு கூரையில் ஏற்ற சொல்லி குளப்படி செய்வேனாம்.

சில வருடங்களின் பின்னர் ஊருக்கு செல்லும் போது பாலாண்ணா போராட்டத்தில் இணைந்துவிட்டதாக சொன்னார்கள். ஆனால் நான் எப்போதெல்லாம் ஊருக்கு செல்கின்றேனோ, அப்போதெல்லாம் பாலாண்ணாவும் வீட்டில் இருப்பார். எனக்கு சமையலில் ஆர்வம் வர முழு காரணமும் பாலாண்ணா தான். வீட்டில் இருந்தால் விதம் விதமாய் சமைத்து வீட்டிலிருக்கும் அனைவருக்கும் தருவார். நான் வளர்ந்த பின், இருவரும் ஒஸ்திரேலியாவில் சமையல்கலை படிக்கலாம் என அடிக்கடி சொல்லுவார். இறுதியில் நான் மட்டும் 3 வருடங்கள் அவருக்காக படித்தேன். தனியே. சொன்ன சொல்லை அவர் காப்பாற்றவேயில்லை.

புலத்தில் இருந்தாலும் எனக்கு சின்ன வயதிலேயே ஈழத்தை மனதில் விதைத்தவர். சின்ன சட்டி,பானை வாங்கி அதில் சமைக்க சொல்லித்தருவார். மாமரம் மேலே ஏறி மாங்காய் சம்பல் போட்டு சாப்பிட சொல்லித்தருவார். கடலுக்கு கூட்டிப்போய் குட்டி மீன் பிடிக்க சொல்லித்தருவார். வயலில் எப்படி நெல் விதைப்பார்கள் என பார்க்க அதிகாலையில் அழைத்துப்போவார்.

பாலாண்ணாவை இறுதியாக பார்த்தது நிலவண்ணாவின் இறுதி நிகழ்வில் தான். அஞ்சலி செலுத்த வந்தவர்கள் அனைவரும் கதறியழ நான் மட்டும் வெறும் கண்ணீரோடு பலாண்ணாவின் பக்கத்தில் நின்றது இப்பவும் நினைவில இருக்கு. நிலவண்ணாவை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு எடுத்து சென்ற பின் பாலாண்ணாவின் மடியில் கதறியிருக்கேன். எனக்கும் சேர்த்து இப்பவே அழுதிடும்மா. இனி அம்மா அழவே கூடாதுன்னு சொன்னார். மூன்றே மாதத்தில் அவரும் மாவீரர் ஆன போது நான் அழவே இல்லை தான். நினைவே இல்லாமல் என்னை மருத்துவமனைக்கு அனுப்பிட்டாரே. அதன் பின்னர் எங்கே அழுவது? இன்றுவரை நான் தினம் தினம் இழந்து கொண்டிருப்பது என் பலாண்ணாவின் அன்பை தான்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மீண்டும் ஒரு உருக்கமான பதிவு

நீங்கள் பாலாண்ணா என்றதும் நான் அன்ரன் பாலசிங்கம் அவர்களைப் பற்றிய பதிவாக இருக்கப்போகிறது என நினைத்தேன், அதே பெயரிலுள்ள இன்னுமொரு போராளியை அறியத் தந்திருந்தீர்கள். சிறு வயதில் புலம் பெயர்ந்திருந்திருந்தாலும் ஈழத்து மண்ணும் அந்த மண் சார்ந்த பாசமும் உங்கள் எழுத்துக்களில் மிக அதிகமாக வெளிப்படுகின்றன.

வெறும் வார்த்தைக்காகச் சொல்லவில்லை உங்களின் இந்தப் பதிவுகள் மிக அற்புதம்.

இரும்பு மனத்துடன் எதிரிகளை எதிர்க்கும் இந்த மறவர்களின் பாசத்தில்தான் எத்துணை நெகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தூயா கண்ணீர் விட்டு கதறி அழாவிட்டாலும் உங்கள் நினைவுகளில் நிலைத்து நிற்கும் தனித்துவத்தைப் பெற்ற அந்த மாவீரனுக்கு எம் வீர வணக்கங்கள்தொடர்ந்தும் உங்கள் ஆக்கங்களை வரவேற்கிறோம்

Posted

மீண்டும் ஒரு உருக்கமான பதிவு

நீங்கள் பாலாண்ணா என்றதும் நான் அன்ரன் பாலசிங்கம் அவர்களைப் பற்றிய பதிவாக இருக்கப்போகிறது என நினைத்தேன், அதே பெயரிலுள்ள இன்னுமொரு போராளியை அறியத் தந்திருந்தீர்கள். சிறு வயதில் புலம் பெயர்ந்திருந்திருந்தாலும் ஈழத்து மண்ணும் அந்த மண் சார்ந்த பாசமும் உங்கள் எழுத்துக்களில் மிக அதிகமாக வெளிப்படுகின்றன.

வெறும் வார்த்தைக்காகச் சொல்லவில்லை உங்களின் இந்தப் பதிவுகள் மிக அற்புதம்.

இரும்பு மனத்துடன் எதிரிகளை எதிர்க்கும் இந்த மறவர்களின் பாசத்தில்தான் எத்துணை நெகிழ்ச்சி.

அவர் பாலா மாமா..

இவர் அண்ணா...

போராளிகளிடம் இருக்கும் பாசம் எங்களிடம் இல்லை என்பது தான் உண்மை

தூயா கண்ணீர் விட்டு கதறி அழாவிட்டாலும் உங்கள் நினைவுகளில் நிலைத்து நிற்கும் தனித்துவத்தைப் பெற்ற அந்த மாவீரனுக்கு எம் வீர வணக்கங்கள்தொடர்ந்தும் உங்கள் ஆக்கங்களை வரவேற்கிறோம்

நன்றிகள் நண்பரே

Posted

காலத்தால் அழியாத உத்தம புத்திரர்கள் பலர்.... அந்த வீரர்களில் சிலரை பற்றி மீட்டிபார்க்க கிடைச்ச சந்தர்ப்பமாக தான் இதை பார்க்கிறன். நல்ல கோர்வையா சொல்லுறவிதம் பிடிச்சுருக்கு..... தொடர்ந்து பிரசுரிக்க விண்ணப்பம் வைக்கிறன். :)

Posted

காலத்தால் அழியாத உத்தம புத்திரர்கள் பலர்.... அந்த வீரர்களில் சிலரை பற்றி மீட்டிபார்க்க கிடைச்ச சந்தர்ப்பமாக தான் இதை பார்க்கிறன். நல்ல கோர்வையா சொல்லுறவிதம் பிடிச்சுருக்கு..... தொடர்ந்து பிரசுரிக்க விண்ணப்பம் வைக்கிறன். :)

நிச்சயமா அவங்களை பத்தி பேசனும்னு நானும் நினைக்கிறேன்.

எங்களுக்காக வாழ்ந்தவர்கள்..வாழ்பவர்கள்..

Posted

முகம் தெரியாத ஒரு மாவீரனை எம் மனகண் முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள்..(உங்கள் பாலா அண்ணாவை போல் எத்தனையோ பாலா அண்ணாக்கள்). :D .உங்கள் துயர் விளங்கிறது என்ன சொல்வதென்று தெரியவில்லை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் :D ...அந்த முகம் தெரியாத பாலாஅண்ணாவிற்கு என்னுடைய கண்ணீரஞ்சலிகளும் வீரவணக்கங்களும்.. :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வழமை போல ஊருக்கு கூட்டிச் செல்கிறீர்கள்.

ஆனால் போன கிழமை படமாளிகைக்குள் கொண்டு போய்விட்டுவிட்டீர்களே.

  • 2 weeks later...
Posted

வழமை போல ஊருக்கு கூட்டிச் செல்கிறீர்கள்.

ஆனால் போன கிழமை படமாளிகைக்குள் கொண்டு போய்விட்டுவிட்டீர்களே.

படமாளிகை?புரியலை :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தூயா,

எங்களுக்கெல்லாம் அந்த வாய்ப்புகள் கிடைக்கவேயில்லை. ஆனால் எங்கள் அக்கா இந்த விசயத்தில் கொடுத்து வைச்சவா..நாங்கள் எல்லோரும் கனடாவுக்கு வர...ஈழமே முக்கியம் என்று அங்கேயே நிண்டுட்டா. அவர் பெரும்பாலும் பழகியது இதைப்போன்ற அன்பு உறவுகளுடன் தான். கூடப்பிறந்தவர்களை விட நம் போராளிகள் காட்டும் பாசம் மிக மிக மிகத் தூய்மையானது ஏனெனில் அவர்கள் எங்களிடம் அன்பைக் கூட எதிர்பார்ப்பின்றிப் பொழிவதுதான் மற்ற எல்லா உறவுகளுமே ஒருகட்டத்தில் ஏதோ ஒரு காரணத்துக்காகவேனும் சுயநலமியாகி விடுகின்றார்கள்.

எல்லோரும் சொன்னதைப்போல 'நீங்கள் பாலா அண்ணா என்றதும் பால்ராஜ் அண்ணாவைத்தான் சொல்லுறீங்களோ என்று நினைச்சன்.

நெஞ்சத்தை தொட்டுச் செல்லும் பதிவு. நன்றாக எழுதுகின்றீர்கள். "சொன்ன சொல்லை அவர் காப்பாற்றவேயில்லை" என்கின்ற வரிகளில் அவர் மீதான உங்கள் அதீத அன்பும் அடக்க முடியாத சோகமும் ஒருங்கே ஒலித்தது. அந்த மாவீரனுக்கு எங்கள் வீர வணக்கங்கள்.

எழுத்துப்பிழை...

குளப்படி = குழப்படி

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாய் மண்ணுக்காக மாவீரரான பாலாண்ணாவின் பதிவுகளைத் தந்தமைக்கு நன்றிகள்.

மாவீரர்கள் எமக்காக விலை மதிக்க முடியாத உயிர்களைத் தியாகம் செய்கிறார்கள். ஆனால் சிட்னியில் சிலர் ஏன் இன்னும் புலிகள் தாக்கவில்லை. இப்படிச் செய்யவேணும். அப்படிச் செய்ய வேணும் என்று கதைக்கினம். கதைக்கிற இவர்கள் பொங்கு தமிழுக்கு போகச் சொன்னால் வேலை, நேரமில்லை, வேலை மினக்கேடு என்று கதைக்கினம். கரிகரன் நிகழ்ச்சி, குசேலன் படத்துக்கு போவதற்கு வேலையில் விடுமுறை எடுக்கினம்.

இவர்களில் சிலர் சென்ற ஞாயிறு நடைபெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வுக்கு நுளைவுச்சீட்டு வாங்கி சென்றிருக்கினம். வருடாவருடம் இந்நிகழ்வுக்கு செல்லினம். ஆனால் எம்மவர்கள் நடாத்தும் தமிழர் விளையாட்டு நிகழ்வுக்கு அங்கு அனுமதி இலவசமாக இருந்தும் இவர்கள் செல்வதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
    • சந்தனக்காற்றே -- சுருதி &  விக்னேஸ்    
    • இழுவை படகுகள் உலகில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வகைககளில் ஒன்று .   அவர்கள் திட்டமிட்டே வடகிழக்கு இலங்கை கடல் படுக்கையில் 3௦௦ வரையான  ரோலிங் பண்ணுவதை பார்த்தால் டெல்லியின் அரசியல் பின்புலம் உள்ளது போல் சந்தேக பட வேண்டி உள்ளது .
    • பிரித்தானிய பிரென்சு கூட்டு முயற்சியில் உருவானதும் தற்போது சேவையில் இல்லாதததுமான  concorde விமானம் Mach 2 வேகத்தில் (அண்ணளவாக  2200 km/h) பறந்து நியூயோர்க்/இலண்டன் பயண தூரத்தை சுமார் 2 மணி 45 நிமிடங்களில் கடந்தது. மஸ்க்கின் திட்டப்படி  சுரங்கவழிப்பாதையில்  இது போன்ற மிகை ஒலி வேகத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு தேவையான  விஞ்ஞான  தொழில் நுட்பம் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.