Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கேயும் ஒரு அவலம்!!

Featured Replies

இங்கேயும் ஒரு அவலம்!!

deadwaitingjb0.jpg

ஆக்கம் -

களுவாஞ்சிக்குடி யோகன்!!

கடிதம் வந்திருந்தது.நாட்டிலிருந்து தங்கை அனுப்பியது.பிரித்து சாதரணமாகத் தான் படிக்க ஆரம்பித்தாள்.வாசித்து முடிந்ததும் அழுதே விட்டாள் யாமினி.கண்களிலிருந்து நீர் பெருக்கெடுக்கத் தொடங்கியிருந்தது. :)

நிறைந்த கண்ணீரோடு மீண்டுமொருமுறை அதை வாசிக்கத் தொடங்கினாள்.அக்கா,நாட்டுப் பிரச்சினை இன்னமும் தீர்ந்தபாடில்லை.அது தீர்ந்து மறுபடியும் சமாதானம் உருவாகுமென்ற நம்பிக்கையும் எம்மிடமிருந்து விட்டுப் போயிற்று.அப்படியான நிகழ்வுகள் இன்னமும் இங்கு நடக்கின்றன.

செல் விழுந்து அப்பாவிற்கு ஒரு கால் ஊனமானது உனக்குத் தெரியும்,அன்று இராணுவத்தினர் திடீரென ஊருகுள் புகுந்து விட்டார்கள்.அயலில் யாரும் இல்லை.பக்கத்து வீட்டுச் சின்னதங்க மாமி கூட பிள்ளைகளைக் கூட்டிகொண்டு ஓடி விட்டார்.அப்பாவைத் தனியாக விட்டு விட்டு என்னால் எப்படி ஓடமுடியும்,நான் வீட்டிலே ஒளிந்து கொண்டேன்.

வீட்டுகுள் நுழைந்த இரு இராணுவத்தினர் என்னைக் கண்டு விட்டனர்.அதில் ஒருவன் வந்து என் கைகளை இழுத்தான்.நான் திமிறினேன்.என் பலமெல்லாம் அவனுக்கு ஒரு தூசுபோலத் தானே.அவன் தவறான எண்ணத்தோடு மேலாடையைக் கிழித்துக் கொண்டான்.இதை பார்த்த அப்பாவால் எப்படி சும்மா இருக்க முடியும்?அவர் வைத்திருந்த ஊன்றுகோலால் அவனைத் தடுத்து தள்ளினார் ஆத்திரமடைந்த அவன் அப்பாவைப் பிடரியில் பிடித்துத் தள்ளி துப்பாக்கியால் அடிக்கத் தொடங்கினான் :unsure: .மயங்கி கிடந்த அவருக்கு அப்பொழுதே உயிர் பிரிந்திருக்க வேண்டும்.

நான் அப்பாவை பார்பனோ?என்னைப் பாதுகாப்பனோ?தடுமாறி அவரின் மேல் விழுந்து சத்தமாக அழுது கொண்டிருந்தேன்.நான் போட்ட கூச்சலில் கடவுள் போல் இராணுவக் காமண்டர் ஒருவன் உள்ளே வந்தான்.

நடந்தவற்றை நேரில் கண்ட அவனுக்கு இரக்கம் வந்திருக்க வேண்டும்.ஆத்திரத்துடன் அவர்களை பார்த்து ஏதோ பேச அவர்கள் அமைதியாக வெளியேறிப் போனார்கள்.

அக்கா,அப்பாவின் உயிரைக் கொடுத்து தான் எனது மானத்தைக்......காப்பாற்ற வேண்டியிருந்தது இன்னுமொருமுறை மானத்தைக் காக்க எனக்காக இங்கு உயிரை விட யாருமேயில்லை. :)

இப்பொழுதெல்லாம் எனக்கு வாழ்க்கையில் எந்தவொரு பிடிப்புமே கிடையாது.ஜடமாகத் தான் இன்னமும் உலாவுகின்றேன்.அம்மா இறக்கும் போதே நானும் போயிருக்க வேண்டியவள்.எனது விதி இன்னமும் இந்த அவலங்களை அனுபவித்து கொண்டிருக்கின்றேன்..

இப்படியா தொடர்ந்தது அந்த நான்கு பக்கக் கடிதம்.

யாமினியும் சுவிசுக்கு வந்து மூன்று வருடங்களாகிறது அவள் வரும் போதே தாய் உயிருடன் இருக்கவில்லை.முதல் வருடமே "செல்" விழுந்து மாண்டு போனாள்.தகப்பனின் துணையுடன் தான் ஒரே தங்கை பிரியா இருந்து வந்தாள்.அவர்களுக்கு யாழ்பாணத்தில் பெரியளவு சொந்தபந்தங்கள் இல்லை.

தகப்பனுட கூடப் பிறந்தவர் ஒருவர் :) .அவர் கொழும்பில் வாழ்கின்றார்.அவருக்கு சொந்த பந்தங்கள் பற்றி அறிய ஆவலில்லை.தாயோ கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்.தகப்பன் இளைஞனாக இருந்த காலத்தில் மட்டக்களப்பிற்கு படிப்பிக்கப் போனபோது படிபித்த மாணவியையே மனைவியாக்கி கொண்டு அங்கேயே இருந்து விட்டார்.

அதனாலோ என்னவோ அங்கு இன்று வரை அவர்களுக்கு எந்தவித ஒட்டுறவும் கிடையாது.

இந்த மார்கழி வந்தால் பிரியாவிற்கு இருபத்தி மூன்று முடிகிறது.வாழவேண்டிய வயதில் எத்தனை துன்பங்கள் அவளுக்கு.தன்னந்தனியாக எத்தனை துன்பங்களை அனுபவிக்கின்றாள்.

யாமினிக்கு நெஞ்சு பதறியது.சகோதர பாசம் மேலோங்கக் குமுறினாள்.குமிறிக்கொண்டே அழுதாள்.கடிதம் கண்ணீரால் நனைந்து கொண்டிருந்தது.

யாமினி - சேகருக்கு ஒரே வாரிசு ஒரு வயசு சுவான்.அறையில் தூங்கி கொண்டிருந்தவன் எழுந்து அழத் தொடங்கினான்.குழந்தையின் அழுகை கேட்டவள் சட்டென நினைவுக்குத் திரும்பினாள்.கண்ணீரை கைகளாள் துடைத்தவாறே எழுந்து போனாள்.குழந்தையை தூக்கி வந்து பால் கொடுக்கும் போது சுவரில் தொங்கியிருந்த குருவி பதினொரு முறை கூவி மெளனமானது :unsure: .சேகர் வந்து விடுவார் சமைக்க வேணும் என உள் மனம் சொல்லியது.அப்போது மடியிலிருந்த சுவான் உறங்கியிருந்தான்.மறுபடியும் குழந்தையை தொட்டிலில் வளர்த்தியவள் திரும்பி வந்து சமையலறைக்கு போனாள்.

இரண்டரை போல் வேலையிலிருந்து சேகர் வந்தான்.வழமையான வரவேற்பு இல்லாத மனைவியை பார்த்து அவனுக்கு யோசனை.

"ஏன் முகத்தை உம்மென்று வைத்திரூக்கிறாய்?'

அவள் எதுவும் சொல்லாமல் கடிதத்தை கொடுத்தாள்.

வாசித்து முடிந்து நிமிர்ந்த போது மனைவியின் கண்களில் நீர்

பிரியமானவளின் கண்ணீரைப் பார்க்கச் சகிக்காதவனாய்,

"இதுக்கு நாங்கள் என்ன செய்யலாம்?"நீயே சொல்

என்றான்.

"என்ன செய்ய முடியும்?அவளை இங்கே கூப்பிடுறது தான்

ஒரே வழி"

'கூப்பிடுதெண்டால் விளையாட்டா?"சேகர் உணர்ச்சிவசபட்டு போனான்.

"எங்களுக்கு இருக்கிற பிரச்சினை எனக்கு தெரியும்.ஆனால் அவளுக்கு.எங்களை விட்டா வேற யார் இருக்கினம்?அதனாலையப்பா கடனோட கடனா அவளை இங்க கூப்பிடுவன்.இப்பவே சீட்டு ஒன்று ஆரம்பியுங்கோ.பிரியா வந்தாப் பிறகு சுவானை அவளிடம் விட்டுப் போட்டு நானும் வேலைக்குப் போறன்.அதனாலை கடனுகளை ஒரளவுக்கு சமாளிக்கலாம் "தகப்பன் இறந்த துக்கம் மனதில் இருந்தாலும் தங்கையை பற்றி நினைத்திருந்தனயெல்லாம் ஒப்புவித்தாள் யாமினி. :D

சேகர் எதற்கோ யோசித்தான்.ஆனால் யோசனை நீடிக்கவில்லை.சரி அவளை கொழும்பிற்கு வரச் சொல்லி கடிதம் எழுது என மனைவிக்குச் சொன்னான்.

இயந்திர வாழ்க்கையில் நான்கு மாத நான்கு நிமிடமாய் ஓடியது.

ஜரோப்பாவில் ஒரு கோடை காலம்.எதை பார்பது.எதை ரசிப்பது எனக் குழம்பிவிட்டாள் பிரியா.அந்தளவிற்கு அழகாகவும் வளமாகவும் செழித்திருந்தது சுவிற்சலாந்து.

எதிர்பார்த்ததை விட ஒரு படி உயர்ந்திருந்தது அவள் வந்திறங்கிய நாடு.

பிரியா அக்கா குடும்பத்துடன் அறையில் அமர்ந்திருந்தாள்.தனக்கு நேர்ந்த துக்கங்களையும் சந்தோஷங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தாள்.அப்போது யாமினி கணவரிடம் 'நாளைக்கு லீவு எடுக்கிறீங்களா?"என்று கேட்டாள்.

லீவா?எதற்கு?

இவளை பொலிசில் பதிய வேணும்.

'இதோபார்.பிரியா இங்கு வந்ததோடை என்னடை கடமை முடிஞ்சு போச்சு.

நீயே இனி எல்லாத்தையும் கவனிச்சு கொள்.நான் இவளைக் கூட்டிக்கொண்டு போக அதை பார்த்த எங்கட சனம் நாலு கதை கதைக்க.

இதெல்லாம் வேண்டாமப்பா.ஒதுங்கிக் கொண்டான் சேகர்.

'சரி.நானே கவனிக்கிறேன்'என்றாள் யாமினி.

நாட்கள் மிக வேகமாக ஓடுகிறதென்று தான் சொல்லத் தோன்றும்.பிரியா வந்தே நான்கு மாதமாகிவிட்டது யாமினியும் வேலைக்குப் போக தொடங்கியிருந்தாள்.அவள் காலையில் போய் மாலையில் வீடு திரும்புவாள்.சேகர் நான்கு மணித்தியால ஓய்வுக்கு வீடு வந்து திரும்பவும் போவான்,இந்த நேரம் அத்தானும் அக்காவும் பிரியாவிற்கு மாப்பிள்ளையும் பார்க்கத் தொடங்கியிருந்தார்கள். :)

அன்றைக்கு சேகர் வேலை முடிந்து வந்தான்.அவனுடன் ஒரு வாலிபனும் கூட வந்திருந்தான்.அவனுக்கு வி.ஜ.பி வரவேற்புக் கொடுத்தாள் யாமினி.சேகரும் அவளும் சாப்பாடும் கொடுத்தனுப்பினார்கள்.

அந்த இரவே யாமினி தங்கையிடம் கேட்டாள்.

'இப்போ வந்தவனை பற்றி என்ன நினைக்கிறாய்?'

அவள் பதிலுக்கு காத்திராத சேகரும்

'அவனை உனக்குப் பிடிச்சிருக்கா"என்று விசாரித்தான்.

அப்பொழுது தான் பிரியாவிற்குத் தெரிந்தது அவன் தன்னைப் பார்க்கத் தான் வந்திருகிறானென்று

அவனை அவளுக்குப் பிடித்துத் தான் இருந்தது,அகன்ற விழிகள்.அரும்பான மீசையுடன் செக்கச் செவேலென அடக்காமாக இருந்தான்.எந்த பெண்ணுக்கும் அவனை வெறுக்கத் தோன்றாது.

ஆனால் திடீரேனக் கேட்டதும் கூச்சபட்டுப் போனாள்.எதுவும் கதைக்கவில்லை.நாணத்துடன் நிலம் பார்த்தாள் இதை புரிந்து கொண்ட யாமினி. :wub:

இதிலென்னப்பா அவளுக்கு விருப்பு வெறுப்பு.நாங்களென்ன அவளைப் படுகுழியிலா தள்ளப் போறம்.நீங்கள் மேற்கொண்டு அவனுடன் கதையுங்கோ"என்றார்.

அன்றைக்கு காலநிலை அவ்வளவு நன்றாக இல்லை.

பன்னிரென்டு மணிக்கு முன் உடம்பைச் சுட்டெரிக்கும் வெயிலாக கொழுத்தியது.பிற்பாடு பனிகொட்ட ஆரம்பித்திருந்தது.சாப்பிட சேகர் நேராகக் கட்டிலில் போய்ப்படுத்திருந்தான்.

"அத்தான் சாப்பிடேல்ல"போய்க் கேட்டாள் பிரியா.

'பசியில்லை தலையிடிக்குது"என்றான் அவன்.

அலுமாரிக்கு வந்து மாத்திரை எடுத்தாள்.மீண்டும் போய்'இந்தாங்க அத்தான் பனடோல்'நீட்டினாள்.

கட்டிலிருந்து எழுந்த சேகர் ஒரு கையால் பனடோலை வாங்கினான்.அடுத்த கையால் பிரியாவின் இடது மணிகட்டை இறுக்கமாகப் பிடித்து இழுத்தான்,இதை கடுகளவும் எதிர்பார்க்காத அவள் கலங்கிபோனாள்.

ஆத்திரமான தயக்கத்துடன் கையை உதறிவிட்டவள் வெளியே வந்து சுவானைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள்.உடம்பெல்லாம் நடுங்கியது.அப்போது சுவான் அழ ஆரம்பித்து விட்டான்.அவளைத் தொடர்ந்து சேகரும் வெளியே வந்தான்.அவளது இடுப்பிலிருந்த சுவானின் முதுகைத் தடவினான்.அதே கை அப்படியே பிரியாவின் முதுகுப்பகுதியை தழுவத் தொடங்கியது.சேகரின் நடவடிக்கைகளை வித்தியாசமாகத் தெரிய அத்தான் என்று கத்தினாள் அவள்.ஆமாம் நான் அத்தானே தான் தலையாட்டியவாறு இழிவாகச் சொன்னான் அவன்.

அவனது வாயிலிருந்த வந்த அற்ககோல் மணம் அவளது நாசியைத் துளைத்தது.அவளை பயம் கவ்வத் தொடங்கியது.சுவானுடன் மெதுவாக நகர்ந்து தனது றூமிற்குள் நுழைய முனைந்தாள்.

சேகர் அவளுக்கு முன்னான் அவளது அறைக்குள் புகுந்து கொண்டான்.கதவை இழுத்து மூடி சாவியையும் கையிலெடுத்தான்.

"ஏன் கதவை மூடுகிறீர்கள்?"அவளுக்கு நாக்குத் தழுதழுத்தது.

'தெரியல்ல உனக்கு அடுத்த மாதம் கல்யாணம் நிச்சயமாகியிருக்கு"

'அதுக்கு' கலங்கினாள் அவள்.

அதுக்கு முதல் நீ எனக்கு வேணும்,ஒரேயொரு தடவை நீ வேணும் என்றவன் அவளைக் கட்டிப்பிடிக்க முனைந்தான்.அவனது கண்கள் சிவந்து ஒரு மிருகத்தனம் சுடர்விட்டது.

பிரியா என்று கத்தியவாறு அவளைத் துரத்தினான்.அக்கா என நடுக்கத்துடன் கதறினாள் அவள்.அப்போது வெளியில் ரெலிபோன் அலறியது.கதவைத் திறந்து வெளியேறியவன் மீண்டும் பூட்டிவிட்டு ரெலிபோனை தூக்கினாள்.

'என்னங்க நான் யாமினி கதைக்கிறன்.சாப்பிட்டீங்களா?"

மனைவி கேட்டாள்.

'இனித்தான் சாப்பிடப்போறன்'என்றான் மெதுவாக 'பிரியா எங்க அவளை வரசொல்றியா?"

அவளும் சுவானும் நல்ல நித்திரையிலிருக்கிறார்கள் எழுப்பி விடவா என்று கேட்டான்.

'இல்லை தேவையில்லை,இன்றைக்கு வெள்ளிகிழமை நான்வேலை முடிந்து வரும் போது அவளையும் சுவானையும் வெளிகிட்டு இருக்கச் சொல்லுங்கோ கோயிலுக்குப் போகவேணும்"

சரி என்று சேகர் ரெலிபோனை அடித்து வைத்தான்.

திரும்பவும் மிருகத்தனம் அவனுள் தீ போல் மூண்டது ஆவேசமாகத் கதவைத் திறந்து மீண்டும் மூடினான்.

உள்ளே சுவானை அணைத்தவாறு கட்டிலிருந்து அழுது கொண்டிருந்தாள் பிரியா.அவனைக் கண்டதும் சட்டேன எழுந்து கொண்டாள்.

அவளை நெருங்கி இடுப்பிலிருந்து மகனைப் பறித்து கட்டிலில் எறிந்தான்.அந்தப் பிஞ்சு மூச்சு முட்ட அழத்தொடங்கியது.பிரியாவிற்கு மரண பயம் எழுந்தது.ஏன் என்னை இங்கே கூப்பிட்டனீங்கள்?அங்கேயே சாகவிட்டிருக்கலாமே.

தலையிலடித்துக் கொண்டு கதறினாள்.

இந்தக் கதறல்கள் ஒன்றும் அவனின் காதில் ஏறவில்லை முதலில் அவளை அடையவேண்டும் என்ற வேகம் தான் அவனுள் உக்கிரமானது.

ஒரே உந்தலில் பாய்ந்தவன் பிரியாவை பிடித்துக் கட்டிலில் தள்ளினான்.இனி இந்த மிருகத்திடமிருந்து தப்ப முடியாது என உணர்ந்தவ அவள்.ஒட்டு மொத்தமாக பலத்தை திரட்டி அவனைத் தள்ளினாள்.

எத்தனையோ இன்னல்களுக்கு நடுவில் அப்பாவின் உயிரை பலிகொடுத்து அந்த இராணுவத்திடமிருந்து காத்தமானம்;பசுத்தோல் போர்த்திய இந்த மிருகத்திடம் இழப்பதா?கூடவே கூடாது.

நாட்டிலுள்ள இராணுவங்களை படைகொண்டு அழித்து சமாதனத்தை உருவாக்கினாலும் உருவாக்கலாமேயொழிய தஞ்சம் புகுந்த நாட்டில் இலை,மறைகாயாவுள்ள பகுதறிவற்ற இந்த மிருகங்களை அழிப்பதென்னவோ முடியாத காரியம் தான்.இருந்தும் இவர்களை இனங்கண்டு அழித்து என்னைப் போன்ற அபலைகளைக் காப்பதற்கு யாரேனும் முன்வரமாட்டர்களா?எனத் தனது மனதினுள் ஆதங்கத்தை நினைத்தவளுக்கு அந்த ஒன்பது மாடிக்கட்டிட அறையின் ஜன்னல் தான் கண் முன் தோன்றியது.ஒரே நிமிடத்தில் திறந்தாள்.

அக்கா என்ற கூச்சலுடன் வெளியே குதித்து கொண்டாள் பிரியா. :D

களுவாஞ்சிக்குடி யோகன்

அவர்களின் சிறுகதை!!

ம்ம்..மற்றது என்னுடைய பாதுகாப்பு பெட்டக விலாசம் தெரியுமோ இது தான் என்ட பாதுகாப்பு பெட்டக விலாசம்.. :wub:

ஜம்முபேபியின் தெருக்கோடி......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதையை முற்றுமுழுதாக இணைத்தமைக்கு நன்றிடாச்செல்லம் :unsure:

  • தொடங்கியவர்

கதையை முற்றுமுழுதாக இணைத்தமைக்கு நன்றிடாச்செல்லம் :unsure:

அட..நம்மளுகுள்ள என்ன நன்றி தாத்தா.. :wub: (அது வந்து பாதுகாப்பிற்கு மட்டும் தான் வலிந்த தாக்குதலை யாரும் நடத்தினா நம்மன்ட சாமான்களை எல்லாம் பத்திரமா வைத்திருக்க தான் பாருங்கோ :unsure: )..

அப்ப நான் வரட்டா!!

அப்பாவின் உயிரைக் கொடுத்து தான் எனது மானத்தைக்......காப்பாற்ற வேண்டியிருந்தது இன்னுமொருமுறை மானத்தைக் காக்க எனக்காக இங்கு உயிரை விட யாருமேயில்லை

அச்சோ கண்களில் கதை என்று வாசித்த எனக்கே கண்ணில் கண்ணீர் வந்துட்டுது :unsure: . கடிதத்தை வாசித்த அக்கா ஜாமினி எப்படி நொந்திருப்பா.

அட நாய் போன்ற அத்தானை ....................... ஐயோ இராணூவசீருடை அணிந்த நாயை விட இந்த அக்காவின் கணவன் எவ்வளவு கொடூரமானவன்.............. இப்படியானவர்கள் இருக்கும்வரை பொண்ணுகளுக்கு நிம்மதி எப்போ?

:unsure: (எங்கே உந்த கோப முகக்குறி இல்லாமல் ரொம்ப கஸ்டமாக இருக்குப்பா)

அட பாவமே தன் மானத்தையும் அக்காவின் வாழ்க்கையையும் காப்பாற்றும்பொருட்டு பிரியா எடுத்த முடிவு மீண்டும் அழவைச்சிட்டு :wub::wub::)

போங்கோ. எப்பவும் அழுற கதையை தான் இணைக்கிறியள் ஜம்மு. கொஞ்சம் கூட நன்னா இல்லை சொல்லிட்டேன் என்னை அழ வைக்கிறது ஆமா :)

  • தொடங்கியவர்

அச்சோ கண்களில் கதை என்று வாசித்த எனக்கே கண்ணில் கண்ணீர் வந்துட்டுது கடிதத்தை வாசித்த அக்கா ஜாமினி எப்படி நொந்திருப்பா.

அட நாய் போன்ற அத்தானை ....................... ஐயோ இராணூவசீருடை அணிந்த நாயை விட இந்த அக்காவின் கணவன் எவ்வளவு கொடூரமானவன்.............. இப்படியானவர்கள் இருக்கும்வரை பொண்ணுகளுக்கு நிம்மதி எப்போ?

(எங்கே உந்த கோப முகக்குறி இல்லாமல் ரொம்ப கஸ்டமாக இருக்குப்பா)

அட பாவமே தன் மானத்தையும் அக்காவின் வாழ்க்கையையும் காப்பாற்றும்பொருட்டு பிரியா எடுத்த முடிவு மீண்டும் அழவைச்சிட்டு

போங்கோ. எப்பவும் அழுற கதையை தான் இணைக்கிறியள் ஜம்மு. கொஞ்சம் கூட நன்னா இல்லை சொல்லிட்டேன் என்னை அழ வைக்கிறது ஆமா

அட...அட..நிலா அக்காவிற்கே கண்ணீர் வந்துட்டோ..(நிசமா என்னால முடியல்ல :D )...ஒமோம் ஜாமினி அக்கா எப்படி நொந்திருப்பா என்னு நிலா அக்காவை பார்க்க விளங்குது.. :D

ஒமோம் அக்கா..அந்த இராணுவ சீருடை அணிந்த நாய்களிடம் தன் மானத்தை காப்பாற்றி கடசியில இப்படி ஒரு குள்ள நரியிடம் மாட்டுபட வேண்டியதா போயிட்டே என்று நினைக்கையில் நேக்கு கூட மனம் கணக்கிறது :D ...(என்ன செய்யிறது இப்படியான குள்ள நரிகளை கண்டு பிடிக்கிறது கடினம் அல்லோ).. :D

ம்ம்..அதுக்கா இப்படியானவர்கள் இருக்கு மட்டும் பொண்ணுகளுக்கு எங்க நிம்மதி என்னு கேட்கிறது எல்லாம் கொஞ்சம் ஓவராக்கும்..(எங்க நம்ம நெடுக்ஸ் தாத்தா :D )..ஏனேன்டா பல பையன்கல் பொண்ணுகளாள தான் நிம்மதியை இழக்கிறாங்க அல்லோ பிறகென்னவாம்..(ஜம்மு பேபியை போன்ற அச்சா பிள்ளைகளை தவிர).. :lol:

கோபமுககுறி இல்லாதது ஒரு விதத்தில நன்னது தான் இல்லாட்டி எல்லாருக்கும் நேக்கு கோபமுககுறியை போட்டுவிட்டிடூவீனம் அல்லோ..(இது எப்படி இருக்கு :D )...

ம்ம்..பிரியாவால அந்த கணபொழுதில் எடுக்கபட்ட முடிவு பிழை என்றாலும் அந்த சூழ்நிலையில வேற என்ன செய்யலாம் என்று நினைக்கின்ற போது சரியாக தான் மனதில் படுகிறது..உங்களுக்கு எப்படி?? :D

அட..எப்பவுமே சிரித்து கொண்டு இருக்கலாமா..(அப்பப்ப அழணும்)..அப்ப தான் வாழ்க்கை இனிக்கும் அது தான் அழுற மாதிரி கதையையும் இணைக்கிறனான் அல்லோ :D ..சரி..சரி அழுதது காணும் பாருங்கோ..கதையை வாசித்து கண்ணீர்ல் துளி சிந்துகிறோம்..நிஜத்தில எத்தனையோ பிரியாக்களோ?? :D

அப்ப நான் வரட்டா!!

யோகன் அண்ணாவின் "இங்கேயும் ஒரு அவலம்"

சிறுகதை எங்களை சங்கடபடுத்தி விட்டது

வெண்ணிலா அக்கா மட்டுமல்ல

வாசித்து விட்டு நாங்களும் அழுது விட்டோம்.

சந்தோஷ "மூடில்" தெரியும் யோகன் அண்ணா

எப்படி தான் இப்படி எழுதுகிறீர்களோ தெரியவில்லை

எங்கள் குடும்பத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.

உங்கள் கதைகளை விரைவில் நூலுருவில்

கொண்டு வர வேண்டுகிறோம்.

பொருத்தமான நேரங்களில் கதைகளை பிரசுரிக்க செய்யும்

ஜம்மு அண்ணாவிற்கும் கனிஷ்டாவின் நன்றிகள்.

வெள்ளிகிழமை யோகன் அண்ணாவின்

ஆனந்த இரவு நன்றாக இருந்தது.

ஆனந்த இரவை விட சனி கிழமை

கருத்துகளம் மிக மிக அருமையாக

இருந்தது. :lol:

:( ஏன் நிலாக்கா அழக்கூடாதா? ஏன் நிஜமா உங்களாலை முடியலை :(

தம்பி இபப்டியான குள்ளநரிகளை கண்டுபிடிச்சு சுட்டு பொசுக்கணும் உது எப்படி :D

ஓ அப்பப்ப அழணுமோ அதுதான் இப்படி கதை எல்லாம் போடுறியள் ஓ அழுதால் தான் கண் வடிவாக வரும் னு சொன்னியளே ஒருநாள் நான் மறக்கவில்லையாக்கும் :D

:D ஆமா ஆமா நிஜத்தில் எத்தனை பிரியாக்கள் இப்படி குள்ளநரிகளிடம் மாட்டுப்பட்டு தம் வாழ்வை நரகமாக்கிறார்களோ :(

யோகன் அண்ணாவின் "இங்கேயும் ஒரு அவலம்"

சிறுகதை எங்களை சங்கடபடுத்தி விட்டது

வெண்ணிலா அக்கா மட்டுமல்ல

வாசித்து விட்டு நாங்களும் அழுது விட்டோம்.

ஹாய் தங்கைச்சி எப்படி சுகம்?

அட நீங்களும் அழுதுட்டீங்களா :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழ வைக்கிற கதையெல்லாம் வேணாம் ஜம்மு. :icon_idea:

நல்ல ஒரு கதை ஆனா போன இடமெல்லாம் பிரியாவுக்கு இப்படி அவலமா நடந்திருக்க வேண்டாமே :(:(

வெண்ணிலாக்கா,

நாங்கள் இங்கு நல்ல சுகம்

சுகம் விசாரிக்க விட்டாலும்

உங்கள் கருத்துகளை யாழில்

வாசிப்பதுண்டு.

உண்மையில் அழ கூடிய

கதையாதலால் எங்களுக்கும்

கண்ணீர் வந்துவிட்டது. :icon_idea:

வெண்ணிலாக்கா,

நாங்கள் இங்கு நல்ல சுகம்

சுகம் விசாரிக்க விட்டாலும்

உங்கள் கருத்துகளை யாழில்

வாசிப்பதுண்டு.

உண்மையில் அழ கூடிய

கதையாதலால் எங்களுக்கும்

கண்ணீர் வந்துவிட்டது. :(

:( கனி வணக்கம்

ஓ வாசிக்கிறனியளா அபப் சரி.

ஆமா கனி யோகன் அண்ணாவின் இரு கதைகளும் சோகம் நிறைந்ததாகவே அமைந்துவிட்டது. இனி ஜம்மு தான் காதல் கதை எழுதுவார் போலிருக்கு

எங்கே ஜம்மு பேபி . பேபி இருக்கிறியளோ பேபி :icon_idea:

  • தொடங்கியவர்

யோகன் அண்ணாவின் "இங்கேயும் ஒரு அவலம்"

சிறுகதை எங்களை சங்கடபடுத்தி விட்டது

வெண்ணிலா அக்கா மட்டுமல்ல

வாசித்து விட்டு நாங்களும் அழுது விட்டோம்.

சந்தோஷ "மூடில்" தெரியும் யோகன் அண்ணா

எப்படி தான் இப்படி எழுதுகிறீர்களோ தெரியவில்லை

எங்கள் குடும்பத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.

உங்கள் கதைகளை விரைவில் நூலுருவில்

கொண்டு வர வேண்டுகிறோம்.

பொருத்தமான நேரங்களில் கதைகளை பிரசுரிக்க செய்யும்

ஜம்மு அண்ணாவிற்கும் கனிஷ்டாவின் நன்றிகள்.

வெள்ளிகிழமை யோகன் அண்ணாவின்

ஆனந்த இரவு நன்றாக இருந்தது.

ஆனந்த இரவை விட சனி கிழமை

கருத்துகளம் மிக மிக அருமையாக

இருந்தது.

ஓ...அழுதிட்டியளே...(ஒன்னு சொன்னா கோவிக்கமாட்டியளே நானும் தான் வாசித்தனான் நேக்கு அழுகை வரலையே உது ஒன்னும் சும்மா சொல்லல்ல தானே :D )..சரி..சரி கோவித்திடாதையுங்கோ நான் பகிடிக்கு.. :)

ம்ம்..யோகன் அண்ணாவின் எழுதிய கதைகள் வெகு விரைவில் நூலுருவில் வெளியிடபடும் சரியோ..(நானும் ஒரு நூலுருவை வெளியிடட்டே :lol: )..என்ன பார்க்கிறியள் சரி சரி..அட அண்ணாவிற்கு என்னதிற்கு நன்றி எல்லாம் தங்கச்சி வேண்டுமென்டா ஏதாச்சும் வாங்கி தாறது..(இது எப்படி இருக்கு :D )..

ஓ..வானொலி நிகழ்ச்சி கேட்டனியளோ..(ம்ம்..நன்றாக தான் இருந்தது)..எங்கே உங்கள் குரலை காணல்ல என்டு அண்ணா ஏங்கி கொண்டு இருந்தனான் ஏன் தங்கச்சி கடசி மட்டும் வரல்ல :D ..(எனியாவது அண்ணாவிற்காக ஒரு பாட்டை கேளுங்கோ என்ன :lol: )..

ஏனேன்டா வானொலியில நடக்கிற பம்பல் இருக்கே..(ஒருத்தர் எடுப்பார் எடுத்து ஒரு பாடலை ஒருவாவிற்கு கேட்பார் கொஞ்சத்தால இன்னொருவா எடுத்து அவருக்கு கேட்பா :lol: )..கடசியா தான் தெரியும் இரண்டு பேரும் கல்யாணம் கட்டினவை என்டு இப்படி பலதை சொல்லலாம்..பிறகு நாளைக்கு நான் சிட்னியில நடக்கிறதில்லையா என்ன தங்கச்சி.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஏன் நிலாக்கா அழக்கூடாதா? ஏன் நிஜமா உங்களாலை முடியலை

தம்பி இபப்டியான குள்ளநரிகளை கண்டுபிடிச்சு சுட்டு பொசுக்கணும் உது எப்படி

ஓ அப்பப்ப அழணுமோ அதுதான் இப்படி கதை எல்லாம் போடுறியள் ஓ அழுதால் தான் கண் வடிவாக வரும் னு சொன்னியளே ஒருநாள் நான் மறக்கவில்லையாக்கும்

ஆமா ஆமா நிஜத்தில் எத்தனை பிரியாக்கள் இப்படி குள்ளநரிகளிடம் மாட்டுப்பட்டு தம் வாழ்வை நரகமாக்கிறார்களோ

அட...நன்னா அழலாம் பாருங்கோ :D ..(அட அக்கா அழுதா எப்படி தான் தம்பியால தாங்கி கொள்ள முடியும்)..அதனால வந்த முடியாது பாருங்கோ.. :D

அட..நான் சுடமாட்டன் பிறகு என்னை தான் பொலிஸ் மாமா பிடிப்பார் உந்த விளையாட்டிற்கு நான் வரலை..(அட..இன்னும் நான் வாழ்க்கையில அநுபவிக்கவே இல்லையப்பா :lol: )..

இப்ப பாருங்கோ வானமே இருந்து போட்டு அழுது தானே..(அப்படி இருக்கும் போது நாம மட்டும் அழாம இருந்தா நன்னா இருக்கா அல்லோ) :lol: ..ஆனபடியா இருந்து போட்டு அழ இப்படி கதை சரியோ..ஆமாம் இப்படி எத்தனையோ "பிரியாக்கள்" மட்டுமில்ல :) ,இப்படியான "பிரியாக்களிடம்" சிக்கிய எத்தனையோ பிரியன்களும் இருக்கலாம் லோகத்தில என்ன அக்கா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

அழ வைக்கிற கதையெல்லாம் வேணாம் ஜம்மு.

நல்ல ஒரு கதை ஆனா போன இடமெல்லாம் பிரியாவுக்கு இப்படி அவலமா நடந்திருக்க வேண்டாமே

அட..நீங்களும் அழுதிட்டியளோ..(என்ன கொடுமை இது :lol: )..சரி..சரி இன்னி தங்கச்சி நான் எனி கொஞ்ச நாளைக்கு அழுகை கதை போடல்ல என்ன..(போய் கண்ணை துடைத்து போட்டு வாங்கோ :D )..

ஓமோம் போன இடத்தில பிரியாவிற்கு இப்படி அவலம் நடக்காம இருக்க நான் தான் பிரியாவிற்கு பின்னால போய் இருகனும் :) என்ன செய்யிறது அப்ப நான் இல்லாம போயிட்டன்..(என்ன கொடுமை இது :lol: )..

அப்ப நான் வரட்டா!!

கனி வணக்கம்

ஓ வாசிக்கிறனியளா அபப் சரி.

ஆமா கனி யோகன் அண்ணாவின் இரு கதைகளும் சோகம் நிறைந்ததாகவே அமைந்துவிட்டது. இனி ஜம்மு தான் காதல் கதை எழுதுவார் போலிருக்கு

எங்கே ஜம்மு பேபி . பேபி இருக்கிறியளோ பேபி

ம்ம்..வந்துட்டன் என்ன கதையோ..(ம்ம்..அடுத்த படதிற்கு யாரை நடிக்க வைக்கலாம் என்டு யோசித்து கொண்டிருக்கிறன் நடிகர் கிடைத்தவுடன் :lol: )..படத்தை "ரீலிஸ்" பண்ணிடுவன் சா..சா அது காதல் கதையா இருக்காது முற்றிலும் வித்தியாசமான கதையா இருக்கும்.. :D

அப்ப நான் வரட்டா!!

அட...நன்னா அழலாம் பாருங்கோ :lol: ..(அட அக்கா அழுதா எப்படி தான் தம்பியால தாங்கி கொள்ள முடியும்)..அதனால வந்த முடியாது பாருங்கோ.. :)

அட..நான் சுடமாட்டன் பிறகு என்னை தான் பொலிஸ் மாமா பிடிப்பார் உந்த விளையாட்டிற்கு நான் வரலை..(அட..இன்னும் நான் வாழ்க்கையில அநுபவிக்கவே இல்லையப்பா :lol: )..

இப்ப பாருங்கோ வானமே இருந்து போட்டு அழுது தானே..(அப்படி இருக்கும் போது நாம மட்டும் அழாம இருந்தா நன்னா இருக்கா அல்லோ) :lol: ..ஆனபடியா இருந்து போட்டு அழ இப்படி கதை சரியோ..ஆமாம் இப்படி எத்தனையோ "பிரியாக்கள்" மட்டுமில்ல :icon_mrgreen: ,இப்படியான "பிரியாக்களிடம்" சிக்கிய எத்தனையோ பிரியன்களும் இருக்கலாம் லோகத்தில என்ன அக்கா.. :(

அப்ப நான் வரட்டா!!

:icon_mrgreen: சப்பா அக்கா அழுதால் தாங்கிக்க முடியல்லையாம். ஏன் தம்பி இப்படி ஒரு ஐஸ் :icon_mrgreen:

நிலாவின் கண்ணீரிலும்

நிறைய அன்பிருக்கு என

நினைத்து தினம் தினம்

நையாண்டி செய்து என்னை

அழ வைப்பதுதானே உங்க

பொழுது போக்கு :lol:

ஓஒ பிரியன்களும் இருக்கினமோ. அதையும் கதையாக வெளிப்படுத்த சொல்லுங்கோ கதாசிரியரிடம்

அப்புறம் எனக்கொரு சந்தேகம் ஜம்மு

"அழுக்கு" கதையும் இவரே தான் எழுதினவர். அவலம்" இக்கதைய்யும் இவரால் தானே எழுதப்பட்டது.

இப்ப என்ன கேட்க வாறேன் எனில் அப்போது யோகன் மாமா என்றியள் இப்போ யோகன் அண்ணா என்கிறியள். இங்கை தான் முரண்படுது எனக்கு. ஒருக்கா விளக்குங்கோ ஜம்மு. அதுக்காக சொல்லுறேல்லை அழுக்கு எழுதும் போது நான் சின்னதாக இருந்தேன் அப்போ மாமா என்றழைத்தேன். அவலம் வந்தப்போ ஜம்முபேபி வளந்துட்டுது. அதனால் அண்ணா என்கிறேன் னு சமாளிக்கிறேல்லை சொல்லிட்டேன் ஆமா :lol:

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இராணுவக் கொடுமைகளுக்கு அஞ்சி புலம் பெயரும் போது குறிப்பாக பெண்களில் சிலர் வெறி பிடித்த பயண முகவர்களினால் கொடுமைகளுக்கு உள்ளாவதையும் செய்திகளில் படித்திருக்கிறோம். தமிழராகப் பிறந்தும் ஒட்டுப்படைகளாக இருந்து தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுக்கும் கயவர்களினால் கொடுமைகளுக்கு உட்பட்ட சகோதரிகளின் துன்பங்களையும் படித்திருக்கிறோம். புலம் பெயர்ந்த நாடுகளில் பிரியா போல சில சகோதரிகள் சேகர் போன்ற மிருகங்களினால் கொடுமைக்குள்ளவதை நினைக்க இதயம் வெடிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை

கதையில் வரும் சேகர் போன்ற சில ஜென்மங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன

ஆகையால் இந்த கதை பல பேருக்கு பாடமாக அமையலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.