Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்த நாடுகளில் பொங்கு தமிழ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த நாடுகளில் பொங்கு தமிழ் இந்நிகழ்வுகளெழுச்சி நடைபெறவுள்ளது. ஐரோப்பா, கனடா, அவுஸ்திரிலேயா அகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் நிகழ்வில் புலம் பெயர் தமிழர்கள் கலந்து சிறப்பிக்க வேண்டிய கடமை இருக்கிறது.

ஜேர்மனி 28/06/2008

நெதர்லாந்து 22/06/2008

டென்மார்க் ,பிரான்சு, நோர்வே 14/06/2008

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் யூலை 6ம் திகதி பொங்கு தமிழ் Mason Park,Underwood Road,Homebush நடைபெறவுள்ளது.

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலியில்

italymj7.jpg

italyoz6.jpg

பிரான்சில்

adbookfi6.jpg

franceul0.jpg

நோர்வேயில்

norwayqi0.jpg

நெதர்லாந்தில்

nederlandkg1.jpg

யேர்மனியில்

germanyaf2.jpg

டென்மார்க்கில்

denmarkux1.jpg

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது உலகளாவிய ரீதியில்நடாத்தப்படுகின்றதா? இல்லை குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமா?

Edited by Paravaikal

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்தில்

newzealandlj6.jpg

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு. நடேசன் அவர்கள் புதினம் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் இருந்து

கேள்வி: புலம்பெயர் நாடுகளில் நடைபெறவுள்ள பொங்குதமிழ் - 2008 நிகழ்வுகளில் புலம்பெயர் உறவுகளும் ஊடகங்களும் எவ்வகையான பங்களிப்புகளைச் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்: தமிழரின் ஒற்றுமை ஓங்கியொலிக்கப் பாடுபட வேண்டும். தமிழரினது தேசியத் தலைமையை மேலும் மேலும் பலப்படுத்த வேண்டும். தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் தலைமையில் தமிழ்மக்கள் ஒன்று திரண்டு - ஒரு கொடியின் கீழ் போராடுகின்றனர் என்ற உண்மையை உலகச் சமூகத்திற்கு உணர்த்திக்காட்ட வேண்டும். புலம்பெயர் தமிழர்களின் ஒருமித்த ஆதரவு புலிகள் இயக்கத்திற்கே என்ற யதார்த்தத்தையும் உலகறியச் செய்விக்க வேண்டும். இந்தப் பணியை ஒரு தேசியப் பணியாகக் கருதி ஊடகங்கள் செயற்பட வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் யூலை 6ம் திகதி பொங்கு தமிழ் Mason Park,Underwood Road,Homebush நடைபெறவுள்ளது.

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பின்லாந்தில்

finalandka9.jpg

சுவிற்சலாந்தில்

pongutamilswissml8.jpg

பொங்கு தமிழ் மூலம் எமது எழுச்சியை உலகிற்கு எடுத்துக்காட்ட நல்ல சந்தர்ப்பம்....

எனவே எமது மக்கள் கூடியளவு ஒத்துழைக்க வேண்டும்....

முன் கூட்டியே அந்தந்த நாட்டு தொலைக்காட்சி பத்திரிகைகளுக்கு முன்கூட்டியே அறிவித்து

எமது எழுச்சியை அவர்கள் மூலம் வெளிக்கொண்டு வாருங்கள்....

டி வி டி, சிடி ரோம் மூலம் எமக்கு நடக்கும் அ நியாங்கள் பிரதி செய்து இலவசமாக வெளி நாட்டு மக்களுக்கு வழங்குங்கள்......

முடியுமானால் காட்சியறைகளை வைத்து விளக்கம் கொடுங்கள்...

கூடினோம் கலைந்தோம் என்று இல்லாமல்.....

சிந்தித்து செயல் படுங்கள் வெற்றி நிச்சயம்......

வாழ்த்துகள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில வருகிற மாதம் 5ம் திகதி நடைபெறவுள்ளது. நேரமில்லை, வேலை என்று சொல்லும் தமிழ்த்தேசியம் கதைப்பவர்களுக்கு இன்னும் 3கிழமை இருக்கிறது. தசாவதாரம் பார்க்க நேரம் இருக்கிறது. ஒகஸ்ட்டில் வரும் கரிகரனைப் பார்க்க நேரம் இருக்கிறது. சிங்கள அணி சிட்னியில வரும் போது சிங்கக் கொடியுடன் வாளை ஏந்தும் சிங்கத்தை பொறித்த உடை அணிந்து செல்ல நேரமிருக்கிறது. ஆனால் பொங்குதமிழுக்கு நேரமில்லை. தமிழ்த்தேசியம் கதைத்தால் மட்டும் போதாது. செயலில் காட்டவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெல்ஜியத்தில்

belgiumyg6.jpg

வெற்றி நிச்சயம்......

வாழ்த்துகள்...!

அப்பு கந்தப்பு கனடாவில எங்கனைக்க அப்பு பொங்குதமிழ் நடக்கப்போகிது? அதையும் ஒருக்கால் ஏலுமெண்டால் விசாரிச்சு சொல்லுங்கோ. கட்டாயம் நாம போவம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில வருகிற மாதம் 5ம் திகதி நடைபெறவுள்ளது. நேரமில்லை, வேலை என்று சொல்லும் தமிழ்த்தேசியம் கதைப்பவர்களுக்கு இன்னும் 3கிழமை இருக்கிறது. தசாவதாரம் பார்க்க நேரம் இருக்கிறது. ஒகஸ்ட்டில் வரும் கரிகரனைப் பார்க்க நேரம் இருக்கிறது. சிங்கள அணி சிட்னியில வரும் போது சிங்கக் கொடியுடன் வாளை ஏந்தும் சிங்கத்தை பொறித்த உடை அணிந்து செல்ல நேரமிருக்கிறது. ஆனால் பொங்குதமிழுக்கு நேரமில்லை. தமிழ்த்தேசியம் கதைத்தால் மட்டும் போதாது. செயலில் காட்டவேண்டும்.

அது சரி அப்பு நிகழ்ச்சி ஒருகிணைப்பார்களின்ட விருப்பம் வந்து குடும்பத்தோட இந்த பொங்கு தமிழ் நிகழ்ச்சிக்கு வாறது தான்,என்ன நான் சொல்லுறது விளங்குதோ. :unsure:

அப்பு கந்தப்பு கனடாவில எங்கனைக்க அப்பு பொங்குதமிழ் நடக்கப்போகிது? அதையும் ஒருக்கால் ஏலுமெண்டால் விசாரிச்சு சொல்லுங்கோ. கட்டாயம் நாம போவம்.

ராசா முரளி இந்த யாழ்களத்திளையும் பொங்குதமிழை கொண்டாடுறதை பற்றி என்ன நினைக்கிறியள். :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒஸ்லோ மாநகரில் ”பொங்கு தமிழ்” மக்கள் எழுச்சி நாள்

அன்பார்ந்த தமிழீழ மக்களே,

நோர்வே வாழ் தமிழர்களால் ஒஸ்லோ மாநகரில் எதிர்வரும்

14-06-2008 சனிக்கிழமை பிற்பகல் ”பொங்கு தமிழ்” நிகழ்வொன்று ஒழுங்குசெய்யப்படவுள்ளது.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழீழ விடுதலைக்கான உரிமைக்குரலை ஓங்கி ஒலிப்பதற்கும், தமிழ் மக்களைப் பேரெழுச்சியுடன் அணிதிரட்டி எமது விடுதலைப் போராட்டத்தின் தார்மீக நியாயங்களை உலகிற்கு உணர்த்துவதும், தமிழரின் தேசியம், தன்னாட்சி, தாயகம் என்பவற்றிற்கு வலிமை சேர்ப்பதும், நோர்வேஜிய மட்டத்தில் தமிழரின் வாழ்வுரிமைக் கோரிக்கைகளை எடுத்துச் செல்வதும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கங்களாகும்.

எனவே நோர்வே வாழ் தமிழர்கள் இந்நிகழ்வின் வெற்றிக்குப் பூரண ஆதரவை வழங்கி தமது தார்மீக கடமையைச் செய்வதற்கு அனைவரும் பெருந்திரளாக ஒன்றுபட்டு அணிதிரண்டு இந்நிகழ்வில் பங்கேற்பதன் மூலம் இதற்கான பங்களிப்பை வழங்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

இதற்கு வேண்டிய பயண ஒழுங்குகளைச் சிறப்பான முறையில் செய்வதற்கு எமக்கு கணிசமான கால அவகாசம் தேவையாக உள்ளதால் இந்நிகழ்ச்சியில் பங்குபற்ற விரும்புவோர் தாமதமின்றி பின்வரும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்.

பிராங்ளின:; 977 39 316 ஜோர்ஜ்: 971 73 269

ரெரி: 900 89 306 ரஞ்சன்: 51 73 92

ஒழுங்குகள்.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

பேர்கன்

-------------------------------

டென்மார்க்கில் பொங்கு தமிழ் ! தமிழகத்தில் இருந்து பிரபல பேச்சாளர் !

டென்மார்க்கில் பொங்கு தமிழ் நிகழ்வு எதிர்வரும் 14.06.2008 ம் திகதி சனிக்கிழமையன்று பி.ப. 15.00 மணிக்கு நடைபெறவுள்ளது. தாயகம், தேசியம், சுயநிர்ணயம் ஆகிய முப்பெரும் கோட்பாடுகளை வலியுறுத்தி இந்த அமைதி ஊர்வல நிகழ்வு நடைபெறவுள்ளது. டென்மார்க்கின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஓகூஸ் நகரத்தில் இந்த எழுச்சி நிகழ்வு உணர்வு பூர்வமாக முன்னெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்வில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து பிரபலமான பேச்சாளர் ஒருவர் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாயகத்தில் சிறீலங்கா அரசாங்கப் பேரினவாதத்தினால் எம் உறவுகள் படும் அவலங்களை சர்வதேச சமுதாயத்திற்கு எடுத்துரைக்க இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

காலத்தை வென்று ஈழத்தை மீட்போம்

பொங்கு தமிழ் என்றே எழுவோம்.

டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் நடாத்தும் இந்த ஊர்வலம் பற்றிய மேலதிக விபரங்களை அறிவதற்கு 22488070 - 26731431 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளும்படி கேட்கப்பட்டுள்ளது.

பெரும் எழுச்சியுடன் நோர்வோ பொங்குதமிழ் நடந்தேறியது. இதனது புகைப்படங்களையும் ஒளிப்பதிவுகளையும் விரைவில் யாழ்களத்தில் காணலாம் என நம்புகிறேன்.

சரி கந்தப்பு தாத்தா நானும் வாரன் :lol: ..ஆனா அதுக்கு முதலில எனக்கு ஒரு விசயம் தெரியனும்..அதுவென்னவென்டா இங்க வாற எல்லாருக்கு "பொங்கல்" கொடுப்பீனமா தாத்தா.. :wub:

சரி..சரி கோவிக்க வேண்டாம் சந்தேகத்தை கேட்டனான் பாருங்கோ.. :lol:

சிட்னியில இருக்கிற எல்லா "டமிழ்சும்" ஒருக்கா வாங்கோ இங்க என்ன..(உங்களுக்கு பல வேலைகள் இருக்க தான் செய்யும் பாருங்கோ) :) ..அத எல்லாம் அப்படி போட்டு விட்டு அங்க வந்தியள் எண்டா நாலு சனத்தை பார்த்த மாதிரியும் போயிடும் தானே. :) .

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வீட்டிற்குள்ள பொங்கிறது முக்கியமல்ல ஊரறிய பொங்கனும் அது தான் முக்கியம்" :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராசா முரளி இந்த யாழ்களத்திளையும் பொங்குதமிழை கொண்டாடுறதை பற்றி என்ன நினைக்கிறியள். :wub:

இந்த கேள்வி மனிதனை உருவாக்கியவர் அல்லது படைத்தவரை பார்த்து மனிதனை பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என்று கேட்பது போல இருக்கு :lol::)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்காவில்

77829716lm8.jpg

69795627ex1.jpg

பெரும்பாலான நாடுகளில் பொங்குதமிழ் இம்முறை மண்டபங்களில் நடைபெறுகிறது. இப்படி நடைபெறுவதினால் எங்களுக்கே செய்திகளைச் சொல்லப்படுகிறதா?. வேற்று நாட்டவர்களுக்கு செய்திகள் போவது என்றால் பூங்கா, முக்கிய இடங்களில் வைக்கலாமே. அப்படி வைப்பதினால் பிரச்சனை ஏற்படுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெல்பேர்ணில் யூலை 5ல் பொங்குதமிழ் நடை பெறவுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
melbourneuq4.jpg

பிரித்தானியாவில் ஜூலை(ஆடி) 12ம் நாள் சனிக்கிழமை (12.07.08) பொங்குதமிழ் நடைபெறுகிறது.

Edited by சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் 5ம் திகதி பொங்குதமிழ் நடைபெறாது. 6ம் திகதி Mason Park,Underwood Road,Homebush என்ற இடத்தில் 11.00 - 2.00 நேரத்தில் நடைபெறும்்

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
sydneyag6.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.