Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் உள்ள புலிகளின் வலைமையமைப்பை அரசாங்கம் உடனடியாக அழிக்க வேண்டும் - ஹெல உறுமய

Featured Replies

தெஹிவளை முதல் இன்று (ஜூன்6) கட்டுபெத்த குண்டுத் தாக்குதல் வரையிலான பயங்கரவாத செயற்பாடுகளின் மூலம் பலமான விடுதலைப் புலி வலைமைப்பொன்று கொழும்பில் காணப்படுகின்றமை தெளிவாக புலனாவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் வலைமைப்பை பூண்டோடு அழிக்கப்பதற்கு பொலிஸ், முப்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் உரிய முறையில் வழிநடத்தப்பட வேண்டும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கில் படையினரின் முன்நகர்வுகளை சகித்துக் கொள்ள முடியாத பிரபாரகன் இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொள்வதாக ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவிலியன்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இவ்வாறான தாக்குதல்களின் மூலம் விடுதலைப் புலிகளின் தலைவரின் தோல்வி வெளிப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வன்னி நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் படைவீரர்களிடம் தம்மை பாதுகாத்துக் கொள்வதாக பிரபாகரன் பொது மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதாக சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் வெளிநாட்டு சக்திகளினால் படையினர் மீது மேற்கொண்ட அழுத்தங்கள் காரணமாகவே விடுதலைப் புலிகள் சுதந்திரமாக தாக்குதல்களை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேடுதல்கள், சுற்றி வளைப்புக்கள், வீடுகளை சோதனையிடல், விடுதிகளை சோதனையிடல் போன்ற நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

நன்றி : www.lankadissent.com

  • கருத்துக்கள உறவுகள்

தேரர் என்றால் என்ன , எப்படியான உருவத்தில் இருக்கும் ?

தேரர் என்றால் என்ன , எப்படியான உருவத்தில் இருக்கும் ?

17_08_2006_col_1_435.jpg

20060817008.jpg

untitled.JPG

Edited by Kuddi thampi

  • கருத்துக்கள உறவுகள்

அடச்சீய்.... இதுகளா அதுகள்.

நானும் ஏதும் நல்லதுகளோ எண்டு நினைச்சுப்போட்டன் குட்டித்தம்பி.

வெட்கம் கெட்டதுகள்.

கச்சாமி.

வடக்கைக் கைப்பற்றுவதா? கிழக்கைப் பாதுகாப்பதா? கொழும்பிலுள்ள வலையமைப்பை அழிப்பதா? எதைச் செய்வதென்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை. தலையை உடைத்துக் கொள்கிறேன். யாராவது உதவுகரன்ட....(மகிந்த) :lol:

அரசாங்க படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேச சிவிலியன்களை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

- பா. நடேசன்

சிவிலியன்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இவ்வாறான தாக்குதல்களின் மூலம் விடுதலைப் புலிகளின் தலைவரின் தோல்வி வெளிப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

- ஒமல்பே சோபித

தமிழர்களால் தமிழர்களுக்காக!

சிங்களவர்களால் சிங்களவர்களுக்காக!

மனிதர்களால் மனிதர்களுக்காக?

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களால் தமிழர்களுக்காக!

சிங்களவர்களால் சிங்களவர்களுக்காக!

மனிதர்களால் மனிதர்களுக்காக?

நடேசன் தொடக்கம் மற்றவர்களின் கருத்தை மேற்கோள் காட்டினீரே. புலிகள் புலிகளுக்காக என்று, வன்னியில் நடந்த குண்டு வெடிப்பை புலிகள் மீது குற்றம் சுமத்திய உமது வஞ்சகக் கருத்தை ஏன் மேற்கோள் காட்டவில்லை?

மேற்கோள் காட்டுற அளவுக்கு என்னை பெரியாள் ஆக்கிக்பொடாதையுங்கோ பொன்னையர்.

அது சரி உங்களுக்கும் எனக்கும் ஏதாவது பூர்வ ஜென்ம தொடர்பிருக்கோ! அதான் உங்கட முற்பிறப்பு யாழ் அடையாளத்தை சொன்னீங்கள் எண்டால் பதிலளிக்க வசதியாயிருக்கும்!

எதிரா கருத்து சொல்லுற ஆக்கள் எல்லாம் துரோகிகள் இல்லை. தன்னை எதிரி என இனம் காட்டும் மனிதர்கள் எப்பவுமே ஆபத்தில்லாதவை. ஆனா கூட இருந்தே உதவி செய்வது போல குழி பறிப்பினம் பாருங்கோ. பயங்கரமானவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போரில் ஒரு தரப்பு இன்னுமொரு தரப்பை வெல்லமுடியாது என்பதைத்தான் பொதுமக்கள் மீதான இலக்குகள் வெளிப்படுத்துகின்றன. சிங்கள ஆழ ஊடுருவும் படைகள் வன்னியில் கண்மூடித்தனமாகப் பொதுமக்களை இலக்கு வைப்பதை நிறுத்தினால் தென்பகுதியில் பொதுமக்களும் பாதிக்கப்படாமல் இருக்கலாம்.. வன்னிப் பகுதியில் கிளைமோர்களில் தமிழர்கள் கொல்லப்படும்போது சிங்களவர்கள் அதி ஜாக்கிரதையுடன் இருக்கும்படிதான் சக சிங்களவர்களாலும் சிங்கள அரசாலும் கேட்கப்படுகின்றனர். இவர்கள் தமிழர்களைக் கொல்வதை நிறுத்தும்படி அரசிற்கு எந்தவகையான நெருக்குதலையும் கொடுப்பதில்லை. மேலும் சிங்களவர்கள் கொல்லப்படும்போது வெளிப்படும் மனிதாபிமானம் தமிழர்கள் கொல்லப்படும்போது பொதுவாக வெளிப்படுவதில்லை.

"தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்"

  • கருத்துக்கள உறவுகள்
:lol: என்னிடம் ஒரு அழகான ஆலோசனை இருக்கு, இங்கு வந்து " மனிதாபிமானம்" பற்றி வாய் கிழியக் கதைக்கும் சிலர் சிங்கள இணையத் தளங்களுக்கும் சென்று மனிதாபிமானப் பாடம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். இவர்களின் பாடத்தைக் கேட்டு சிங்களவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் அறிய ஆசை !

ஏனப்பா மனிதம் பேசுபவர்களின் பிறப்பை கேவலப்படுத்த முனையிறியள் சிங்கள இணையத்தில் மனிதம் பேசினால் டோட்டல் பமிலி டமேஜ்.அதோட கூடுதலாக புலி ஆதரவாளன் என்ற பெயரும் கிடைக்கும் என்ன காமடி என்றால் அண்மையில் அறிக்கை விட்ட ஜிம்மி காட்டரையும் புலி ஆதரவாளன் என சொன்னதுதான் அதைவிட கொடுமை பிபிசியினை புலிகளின் கொள்கை பரப்பும் ஊடகம் என சொன்னது

  • கருத்துக்கள உறவுகள்
:lol: அப்ப நாங்கள் மட்டும் மடையங்களா ? எங்களுக்கு இஞ்ச மனிதாபிமானப் பாடம் நடத்தீனம் ??

அதைத்தான் ரகுநாதன் பெரியவா சொல்லுவா கேக்கிறவன் கேனையன் என்றால் எருமை மாடும் எரோபிளேன் ஓட்டும் என

  • கருத்துக்கள உறவுகள்
:lol: மெத்தச்சரி ஈழவன்.

ஏனப்பா மனிதம் பேசுபவர்களின் பிறப்பை கேவலப்படுத்த முனையிறியள் சிங்கள இணையத்தில் மனிதம் பேசினால் டோட்டல் பமிலி டமேஜ்.அதோட கூடுதலாக புலி ஆதரவாளன் என்ற பெயரும் கிடைக்கும் என்ன காமடி என்றால் அண்மையில் அறிக்கை விட்ட ஜிம்மி காட்டரையும் புலி ஆதரவாளன் என சொன்னதுதான் அதைவிட கொடுமை பிபிசியினை புலிகளின் கொள்கை பரப்பும் ஊடகம் என சொன்னது

என்னப்பா இதுக்கெல்லாம் சோர்ந்து போறியள்! ஏன் இங்க எனக்கு முந்தி யாழ்களத்தில நடக்காததா! பறவாயில்லை சிங்ளத்தில தானே ஏசிறாங்கள், தமிழில ஏசினாத்தான் கூட வலிக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

:lol: சாணக்கியன், நீங்கள் எதுக்கும் ஆனந்த சங்கரியிட்டக் கேட்டு மகிந்தவுக்குக் கடிதம் எழுதுறது எப்படி எண்டு தெரிந்து கொள்ளுங்கோ. ஏனென்டால் அவர் செய்யிறதுக்கும் நீங்கள் இங்க செய்யுறதுக்கும் அதிக வித்தியாசம் இல்லை கண்டியளோ. அவரும் தன்ர இனத்தைக் கேள்வி கேட்கிறன் எண்டு வெளிக்கிட்டு அரசு செய்யிற படுகொலைகளை ஒன்றில் நியாயப்படுத்துகிறார் அல்லது அவற்றையும் புலிகளின் தலையில் போடுகிறார். நீங்களோ அரசு செய்யும் கொலைகளை கண்டும் காணாதமாதிரி விடுவதோடு புலிகளை திருத்தப்போகிறேன் பேர்வழி எண்டு சப்பைக் கட்டு கட்டிக்கொண்டு நிக்கிறீங்கள்.

உந்த மனிதாபிமானக் கருத்தையெல்லாம் மகிந்தவுட்ட ஒரு நீண்ட கடிதமா எழுதி விளக்கம் கேட்டுப் பாருங்கோ, சிலவேளை உந்தக் குண்டு வெடிப்பெல்லாம் நிண்டாலும் நிக்கும்.

எங்களுக்கு என்னும் இருப்பது பயம் தான் மனிதாபிமானமெண்டு மறைக்கபாக்கிறமோ தெரியாது...

சிங்களவனுக்கு பயம் கிடையாது... அவன் எதைப்பற்றியும் கலைப்படமாட்டான்... அவன் கவலையெல்லாம் தமிழர்கள் ஈழமடையக்கூடாதெண்டுதான்.

நாங்கள் மனிதாபிமானம் சனநாயகமெண்டு எல்லாத்தையும் கொடுத்து இப்ப மிஞ்சீருக்கிற கோமணாத்தையும் கொண்டுபோறதுக்கு த்தான் எல்லாம் அடுக்குபணினம்.....

அது என்ன தமிழர்கள் கொல்லப்படும் போது மௌனிக்கும் மனிதாபிமானம் கொழும்பிலும் சிங்கள ஏரியாவிலும் குண்டு வெடிக்கும்போது மட்டும் பொத்துக்கொண்டு வருகிறது.......

இப்பொழுது எனக்கு ஒரு சந்தேகம்.

மனிதாபிமானம் என்றால் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
:lol: மனிதாபிமானம் எண்டால் சுயநலம் என்று பொருள். தான் இருக்குமிடத்தில் தனக்கு ஏதும் ஆபத்து வந்துவிடக்கூடாதே என்ற பயம். இருக்குமிடத்திலுள்ளோருடன் சமரசமாய்ப் போகும் குணம்.

:lol: மனிதாபிமானம் எண்டால் சுயநலம் என்று பொருள். தான் இருக்குமிடத்தில் தனக்கு ஏதும் ஆபத்து வந்துவிடக்கூடாதே என்ற பயம். இருக்குமிடத்திலுள்ளோருடன் சமரசமாய்ப் போகும் குணம்.

அட சரியாத்தான் சொல்லியிருக்கிறீங்கள்!

எனக்கு போட்டுப்பாத்தாலும் சரியாவருகுது, உங்களுக்கும் சரியாவருகுது!

  • கருத்துக்கள உறவுகள்

<_< சணக்கியன், நான் உங்கள் மாதிரி மனிதாபிமானவாதியோ அல்லது ஜனநாயக வாதியோ இல்லை. எனக்கு அந்தத் தொப்பி பொருந்தாது.

உங்களுக்குப் பொருத்தம் என்றால் போட்டுக்கொள்ளுங்கள், இல்லையென்றால் அளவானவர்கள் போட்டுக்கொள்வார்கள்.

தமிழர்களால் தமிழர்களுக்காக!

சிங்களவர்களால் சிங்களவர்களுக்காக!

மனிதர்களால் மனிதர்களுக்காக?

அன்பின் சாணக்கியன் உமக்கு மட்டும் ஏன் இப்படி தோணுது உமது சகோதரிகளின் கற்பை பறித்த வர்களிற்கு வக்காளத்து வேண்டுறியல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேற்கோள் காட்டுற அளவுக்கு என்னை பெரியாள் ஆக்கிக்பொடாதையுங்கோ பொன்னையர்.

அது சரி உங்களுக்கும் எனக்கும் ஏதாவது பூர்வ ஜென்ம தொடர்பிருக்கோ! அதான் உங்கட முற்பிறப்பு யாழ் அடையாளத்தை சொன்னீங்கள் எண்டால் பதிலளிக்க வசதியாயிருக்கும்!

என்ன சனநாயகம் பேசுகின்றீங்கள், மனிதாபிமானம் கதைக்கின்றீர்கள், தமிழனின் சாவைக் கேவலமாக எழுதுகின்றீர்கள், இப்படிப்பட்ட உயர்ந்த(?) சிந்தனைகளைக் கொண்டாலே இனவிரோதத்தில் பெரிய ஆள் தானே.

முற்பிறப்பு இருந்தது. அப்போதும் நான் உண்மைத் தமிழனாகத் தான் வந்தேன். சிங்களத்து அடிவருடியாக அல்ல.

அப்ப உங்கடை அடுத்த பிறப்பு என்ன பொன்னையாண்ணை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.