Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதையும் காண் ஒளியும் - நிலவுக்குள் நிழல் இல்லை!

Featured Replies

(1)

பெண். அவளுக்குள்தான் எத்தனை சொரூபங்கள். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அனுபவமாய், பாடமாய், படிப்பினையாய், பாவமாய், கதையாய், காவியமாய்..

பெண்னை நம்பாதே.. அவள் சிரித்துச் சிரித்தே கழுத்தாறுப்பாள் என்பவர் ஒருபுறம். பெண் இல்லாமல் ஒரு மனித வாழ்வா? வாழ்வின் பாதியே அவள்தானே என்பவர் மறுபுறம்.

ஆனால் அவன் அவளை அன்பின் அவதரிப்பாய் நினைத்தான். வாழ்வின் ஆதாரமாய் ஆராதித்தான்.

ஆனால் இன்று அவனது நினைவுகள் கனவுகளாய் கசங்கிவிட்டன. ஆராதனைகள் வெறும் அலட்டல்களாய் அருகிவிட்டன.

ஆயிரமாயிரமாய் ஊற்றெடுத்த எண்ணக் கற்பனைகள் யாவும், அந்தரத்திலே அவலட்ணமாய் அவன் முகத்தில் சேறாய் வந்தொட்டி நாறியபோது, அதைத் தாங்க முடியாது ஆற்றாமையால் துடித்தான். உணர்வுகளின் சரிவைத் தாங்க முடியாமல் தனிமையில் சிறு குழந்தையைப்போல தேற்றுவாரின்றித் தேம்பினான்.

போற்றுவோர் மத்தியில் தூற்றலின்றி வாழ்வேன் என்ற நினைப்பெடுத்த இறுமாப்பு இடம்மாறித் தேய்ந்தமையை ஏற்கத் திராணியற்றவனாய் குலுங்கிக் குலுங்கி அழுதான்.

(தொடரும்...) :rolleyes:

Edited by sOliyAn

ஏன் சோழியன் மாமா, கதையிலாவது அவனை நிம்மதியாக வாழவிடலாம் தானே? எல்லாருக்கும் ஆம்பளைகளை அழவச்சுப் பார்க்கிறதில ஒரு தனிச்சொகம் போல.. தொடருங்கோ.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சோழி அண்ணன் அப்படியே என்ர கதையை சொல்ல வாறது போல எனக்கு அழுகை அழுகையா வருகுது... :unsure::lol::lol:

(நான் என்ர கதை எண்டது.. உலகத்தில பெண்களால பாதிக்கப்படாத ஒரு ஆண் இருக்க முடியாது என்றதால சொன்னன்..!)

கதை நல்ல சுவாரசியமா இருக்கும் என்று நினைக்கிறம். முந்தி எப் எம் 99இல இசையும் கதையும் கேட்ட ஞாபகம் நெஞ்சில் உதிக்குது.. :D:lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நன்றி முரளி, நெடுக்ஸ்!! உங்க வரவேற்புடன் கதை பிசைந்து அப்பப்படும்!! :lol:

நல்லா பிசையுங்கோ. ஆனா எங்கட முகத்த பிசைஞ்சு போடாதிங்கோ. :unsure:

ஆம்பளைகளின்ட வாழ்க்கை சாணித்தட்டு மாதிரி எண்டு சொல்லுறீங்கள் போல இருக்கிது. :lol:

  • தொடங்கியவர்

(2)

வள் இப்படிச் செய்வாள் என அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

காதல் பறவைகளாய் ஆசையெனும் சிறகடிப்பில் வாழ்க்கை என்னும் வான்வெளியில் இன்பகீதம் மீட்டலாம் என்றல்லவா எண்ணினான்?!

கூதல் வரும்காலம் கூண்டுள் அவளுடனே குளிர்காயலாம் என்றல்லவா கோட்டை கட்டினான்?!

பாதகமாய் விதிவந்து பாழ்படுத்தியதா? வேதனையாய் அவளைக் காட்டி வேசமாக்கியதா?!

அவன் மனம் அவளை அழைத்து ஓலமிட்டது..!!

ஒரு நாள் தரிசனமானாள். பலநாள் பழகினாள். உறவாய் மாறினாள். உயிராய் கலந்தாள்.

பாசம் என்றும் நேசம் என்றும் உருவகமானாள். சொந்தம் என்றும் சொர்க்கம் என்றும் சுகந்தமானாள். ஆசை என்றும் அன்பு என்றும் அடைக்கலம் ஆனாள். கோயில் என்றும் வேதம் என்றும் கோலம் ஆனாள்.

ஆனால் இப்போது.. எல்லாமே வேசமென்றும் நாசம் என்றும் காட்டிச் சென்றாளே.. எங்கே சென்றாள்? ஏன் சென்றாள்? அப்படி அவனைப் பிரிந்து செல்ல அவன் செய்த தவறுதான் என்ன?

அவனுக்கே புரியவில்லை. சூழும் சோகத்தின் பாரத்தைச் சுமக்கத் திராணியற்றவனாய் கால்கள் உணர்வற்று வலுவிழக்க, அந்தரத்தில் நிற்கும் பிரமையுடன் தன்பாட்டில் அரற்றினான்.

(தொடரும்...) :o

அட..சோழியான் தாத்தா தண்ட கதையை :D சா..சா கதை சொல்லி வெளிகிட்டார் பாட்டோட..(சரி தாத்தா சொல்லுங்கோ கேட்டு கொண்டே நித்தா கொள்ளளாம் பாருங்கோ).. :o

அது சரி தாத்தா மண்ணை நம்புறோம் ஏன் பெண்ணை நம்ம கூடாது.. :o (இப்ப நான் ஒன்னு சொல்லட்டோ இந்ந கதையில வாறவற் போல அழுதா பெண்களுக்கு அது உரமாக போயிடும் சரியோ) :D ..ஆனபடியா இப்படி எல்லாம் சின்னபுள்ள தனமா அழாமா மண்ணை பதபடுத்துற மாதிரி பெண்ணையும் பதபடுத்த வேண்டும் பாருங்கோ.. :D

கொஞ்சம் கஷ்டம் தான்..(கஷ்டபடாமா எதுவும் கிடைக்காது கஷ்டபடாம கிடைக்கிறது என்னைக்கு நிலைக்காது அல்லோ தாத்தா) :o ..சரி தாத்தா தங்களின் பரிட்சார்த்த "ஓளிபரப்பு" எங்கும் ஒளிக்கட்டும்... :D

தாத்தா கடசி பாடல் என்ன படத்தில வந்தது..(நன்னா இருக்கு).. :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

உங்க கருத்துக்கு நன்றி யம்மு பேபி!! இறுதி இரு பாடல்களும் 'எங்கிருந்தோ வந்தாள்' என்ற படத்திலிருந்து..!

  • தொடங்கியவர்

(3)

சிறுவர் சிறுமியர் வெளியே கலகலப்பாக ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். பெரியவர்கள் சிறு சிறு குழுக்களாக அரசியல் ஆலாபனைகளோடு சிகரட் புகையில் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களைத் தாண்டி மண்டபத்தினுள் நுழைந்து இருக்கையொன்றில் அமர்ந்து சுற்றுமுற்றும் நோட்டமிட்டான். அவரவர் அவரவர்களுக்கு அருகிலிருந்தவர்களுடன் ஏதோ பேசி அந்த மண்டபம் முழுவதையுமே இரைச்சலுக்குள்ளாக்கிக் கொண்டிருந்தார்கள்.

அடுத்ததாக ஒரு நடனம் என அறிவித்தார்கள். அப்போது நடன அலங்காரத்துடன் ஒரு இளநங்கை அவனுக்கருகில் அமர்ந்திருந்தவரிடம் வந்து எரிச்சலுடன் கூறினாள்.

"எங்கடை புரோக்ராமுக்கு நேரமிருக்காம்.. இந்த உடுப்போட எவளவு நேரம்தான் நிக்கிறது?"

திரும்பி அவளைப் பார்த்தான். அவள் கூச்சத்தடன் அவளைப் பார்த்துப் புன்னகைத்தாள். மெல்லென ஒளியொன்று அவனைத் தாக்கியது. அப்போது மேடையில் ஒரு நடன நிகழ்ச்சி ஆரம்பமாகியது.

Edited by sOliyAn

ம்ம்..சோழியன் தாத்தா கத நன்னா போகுது ஆனா கொஞ்சம் கொஞ்சமா தாறது நன்னா இல்ல சொல்லிட்டன்.. :o (நேக்கு பொறுமை எல்லாம் இல்ல எண்டு உங்களுக்கு தெரிய வாய்பில்ல) :icon_idea: ..எனி தெரியனும்..(அட நான் பகிடிக்கு) உங்கள் எழுத்து நடையை நன்கு ரசித்தேன்.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

பாடலை தெரிவு செய்திட்டு கதையின் பகுதிய எழுதிட்டு.. பாடலை இணைக்கும்போதுதானன்.. பாடலை யூரியூப்ல இணைச்சவங்க, அதை வேற இடஙங்களில இணைக்க தடை செய்திருப்பது தெரிய.. நான் படுற பாட்டை யாரிட்டை சொல்லி அழ.. நன்ன நன்ன பாட்டுகளை எனக்கு தனிமடலில அனுப்பினா.. அதுக்கேத்த மாதிரி கதைய கெதியா பிசைவன்தானே.. :(:D

  • தொடங்கியவர்

(4)

தெளிந்த மனதில் அவளது உருவம் சலனம் தந்தது. வதனம் வாஞ்சையாக்கியது. நெஞ்சம் அவளிடம் தஞ்சம் நாடியது.

சுற்றம் சூழல் மறந்து அவள் முற்றம் நாட விழைந்தான். முற்றும் துறந்து அவள் பற்றை நாடிநின்றான்.

அவளைக் காண சந்தர்ப்பங்களை வலிந்தழைத்தான். பொழுதுகளை அவளின் தரிசிப்பிற்காய் தாரைவார்த்தான்.

Edited by sOliyAn

  • 2 weeks later...

சோழியன் மாமா பரீட்சார்த்த ஒலிபரப்பு என்ன திடீரெண்டு நிண்டுட்டுது. மின்சாரத்தடையோ? இல்லாட்டிக்கு சம்சாரத்தடையோ? :lol::o

  • தொடங்கியவர்

கை தட்டினால் சத்தம் வரவேணும் மருமேன்! நானே எழுதி நானே வாசிப்பதில் என்ன பிரயோசனம்.. அதுதான் கொஞ்சநாளைக்கு இடைக்காலத் தடை.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

கை தட்டினால் சத்தம் வரவேணும் மருமேன்! நானே எழுதி நானே வாசிப்பதில் என்ன பிரயோசனம்.. அதுதான் கொஞ்சநாளைக்கு இடைக்காலத் தடை.. :wub:

சோழியண்ணன்.. எங்கையோ ஒரு மூலைக்க நின்று கொட்டு கைதட்டினா கேட்குமா. இந்தத் தலைப்பை.. கதைகள் பகுதிக்கு நகர்த்தி நிர்வாகம் சோழியண்ணனுக்கும் வாசகர்களுக்கும் உற்சாகம் ஊட்டலாமே..! :lol:

  • தொடங்கியவர்

நன்றி நெடுக்ஸ்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.