Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நடுவு நிலமை = உண்மை மறுப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடுவு நிலமை என்ற சொல் ஒரு கவர்ச்சிகரமான சொல், இதன் பின் ஒளிந்துகொண்டு சண்டை சம்பத்தப்பட்டவர்களை தவிர மற்ற எல்லோரையும் கவர்ந்துகொள்ளலாம். இந்த உண்மை ஈழத்தமிழ் விரோத/துரோக குளுக்களிடையேயும் மறக்கப்படவில்லை. இது அரசியல்ரீதியில் போராடும் தமிழர்களின் மீது அடிக்கடி ஏவிவிடப்படும் மிகப்பெரிய கருவி (ஆயுதம்) ஆகும். கவலை என்னவென்றால் இதில் பல ஈழத்தமிழ்தேசியவாதிகளும் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர் என்பது தான்.

1) நடுவு நிலை என்பது சண்டையில் சம்பந்தபடாத ஒரு மூன்றாம் தரப்பு, சண்டையிடும் இரண்டு தரப்புபிற்கிடையில் இணக்கபாட்டினை உருவாக்க எடுக்கும் நிலை.

2) தன்னை தான் சீர்தூக்கிப்பார்த்தல், தன் போராட்டத்தின் சிக்கல்களை மறந்து மூன்றாம் மனிதனாக நின்றுகொள்வதல்ல.

தமிழர் அனேகர் இந்த அடிப்படைகளை மறந்து தங்களையும் இந்த போராடத்திர்கு தொடர்பு அற்றவர்கள்போல நடப்பதும், போராட்டம் காரணமாக ஏற்படும் வழமைமாற்றங்களை திருத்தும் படி எமது போராளிகளை பணிப்பதும் முட்டாள்தனமே ஆகும்.

இந்த முட்டாள்தனத்தையே ஈழத்தமிழ் விரோத/துரோக குளுக்கள் நம்பிவாழ்கின்றன, ஒரு எடுத்துக்காட்டாக 10/06/2008 இலண்டனில் நடைபெற்ற மகிந்தவிற்கு எதிரான ஆர்ப்பாட்டதினைபார்க்கும் போது, எமக்கு எதிராக மகிந்தவிற்கு ஆதரவாக நின்ற ஆர்பாட்டகரரால் ஏற்பட்ட பின்னடைவை விட சமாதனத்திற்கு ஆதரவு என்று கூறிக்கொண்டு, சமாதான ஒப்பந்தத்தை முறித்தவர் மகிந்த என்ற முழு பூசனிக்காயை சோற்றில் மறைத்து, சமாதானம், நடுவு நிலை என்ற சொற்கள் கொண்டு ஈழ விடுதலை என்ற உயரிய உண்மையை, போர் காரணமாய் ஏற்படும் வழமைமாற்றங்கள் மூலம் மூடிமறைத்து, பயங்கரவாத சின்னத்தை எம்மீது குத்தி, மாபெரும் நடுவு நிலை நாடகத்தை நடத்தி உண்மை மறுப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். இந்த உண்மையை உணர மறுத்து நடுவு நிலையை என்ற உண்மை மறுப்பை நாம் நாடுவோம் ஆயின், எமது எதிர்காலத்தை அழித்துக்கொண்டவர் நாம் ஆவோம்.

நியாயம்:

ஒவ்வொரு தனிநபரும், குழுக்களும் தமக்கு தாமே சரியானது எண்ணிக்கொள்ளும் கோட்பாடு! அவரவர்கள் தங்கள் சக்திக் கேற்ற வகையில் இதனை பிரச்சாரப்படுத்தவும், திணிக்கவும் முன்னிற்பது வெளிப்பாடு!

நீதி:

பிரச்சனைக்குரிய முதற்தரப்பு மற்றும் இரண்டாம்தரப்பு என்பவற்றுடன் குறித்த இருதரப்பினருடைய எந்தவொரு கோட்பாட்டிலும் கவர்ச்சியோ பாதிப்போ இல்லாத முன்றாம் தரப்பிற்கும் பொதுவான நியாயம்!

தீர்வு:

பலப்போட்டியில் சோர்வடைந்த இருசாராரும் தம்மை தக்கவைத்துக்கொள்ள தமது கோட்பாடுகளில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் போது தோன்றுவது!

முன்னுதாரணம்:

தாம் ஆதரிக்கும் தரப்பிற்காக முன்னரங்கிற்கு சென்று போராடி மடிவது! யாழ்களத்தில் கதையளப்பது அல்ல!

Edited by சாணக்கியன்

முன்னுதாரணம்:

தாம் ஆதரிக்கும் தரப்பிற்காக முன்னரங்கிற்கு சென்று போராடி மடிவது! யாழ்களத்தில் கதையளப்பது அல்ல!

அதாவது இஞ்ச நடுவுநிலமை இல்லை அதாவது ஏற்படமுடியாது எண்டு சொல்லுறீங்களோ? :icon_idea:

அதாவது::::::::::::::::::::::::::::

ஊர் உலகம் எல்லாம் பிச்சை எடுத்து பட்டு வேட்டி கட்டியவன் சொந்தமாக உழைத்து கட்டியனின் கோவணத்தை உருவி விடுவது தான் நடுநிலமை.......................

Edited by வினித்

இதுகூட நல்லாத்தான் இருக்கிது.

ஊர் உலகம் எல்லாம் பிச்சை எடுத்து பட்டு வேட்டி கட்டியவன் சொந்தமாக உழைத்து கட்டிய கோவணத்தை இரண்டு கைகளாலும் பிடித்து இழுத்து உருவிவிடுவது தான் நடுநிலமை.......................

இதமாதிரி...

ஆக்களுக்கு நடுவில நிக்கிறதையும் நடுவுநிலமை எண்டு சொல்லலாமோ? அதாவது ஆமிக்காரன் பிடிச்சு அடிகேக்க முதலாவது ஆளா இருந்து அடிவாங்காமல் - சூடுவாங்காமல் ஆக்களுக்கு நடுவில நிண்டு தப்பிறது :D

நடுவு நிலமை = உண்மை மறுப்பு., ஆய்வு : கொலொம்போ டமில் தலைப்பில் இருந்து இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது

நடுவுநிலமை (யாழ்கள மட்டுறுத்துனர்):

தமக்கு சார்பில்லாத கருத்துகளை எதிர்கருத்துகளை சாட்டாக வைத்து தூக்குவது! :D

தாம் ஆதரிக்கும் தரப்பிற்காக முன்னரங்கிற்கு சென்று போராடி மடிவது! யாழ்களத்தில் கதையளப்பது அல்ல!

ஓமோம்..... எல்லா சுதந்திரவிரும்பிகளும் ஊருக்குபோய்*' சிங்களவனோட சண்ட புடிச்சு குண்டெல்லாம் முடிஞ்சாபிறகு சாவம்.

*' தாய்லாந்தில் இருந்து ஒரு கிழமை நீச்சலாமுங்கோ! :D

  • கருத்துக்கள உறவுகள்

"சாடிக்கு ஏற்ற மூடி "கிடைத்துள்ளது போலுள்ளது. புரிந்தால் சரி. :D:D

"சாடிக்கு ஏற்ற மூடி "கிடைத்துள்ளது போலுள்ளது. புரிந்தால் சரி. :D:D

:D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நியாயம்:

ஒவ்வொரு தனிநபரும், குழுக்களும் தமக்கு தாமே சரியானது எண்ணிக்கொள்ளும் கோட்பாடு! அவரவர்கள் தங்கள் சக்திக் கேற்ற வகையில் இதனை பிரச்சாரப்படுத்தவும், திணிக்கவும் முன்னிற்பது வெளிப்பாடு!

நீதி:

பிரச்சனைக்குரிய முதற்தரப்பு மற்றும் இரண்டாம்தரப்பு என்பவற்றுடன் குறித்த இருதரப்பினருடைய எந்தவொரு கோட்பாட்டிலும் கவர்ச்சியோ பாதிப்போ இல்லாத முன்றாம் தரப்பிற்கும் பொதுவான நியாயம்!

தீர்வு:

பலப்போட்டியில் சோர்வடைந்த இருசாராரும் தம்மை தக்கவைத்துக்கொள்ள தமது கோட்பாடுகளில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் போது தோன்றுவது!

முன்னுதாரணம்:

தாம் ஆதரிக்கும் தரப்பிற்காக முன்னரங்கிற்கு சென்று போராடி மடிவது! யாழ்களத்தில் கதையளப்பது அல்ல!

சாணக்கியத்தின் பெயரால், ஆய்விற்கு தொடர்பு அற்ற ஏலவே தெரிந்த தமிழ்சொற்களுக்கு புதிய பிழையான பொருள் கொடுக்க முனையவேண்டாம். உங்கள் சொற் பொருள் விளக்கங்களுக்கு தனித்தலைபிட்டீராயின் அங்கு வந்து இது பற்றி மேலும் பேசலாம்.

மேற்கண்ட ஆய்வு, யாழ்களத்தில் கதையளப்பவர்கே தவிர மாவீரருக்கானது அல்ல அவர்களுக்கான ஆய்வுகளை செய்ய வன்னியில் 4 லும் தெரிஞ்ச நல்லவர்கள் உள்ளனர்.

மற்றது மேல் குறிப்பிட்ட ஆய்வு மனித உரிமை மீறல்களையும், பயங்கரவாத குற்றசாட்டுக்களையும் அரண்களாக கொண்டு ஒளிந்த சிரி லங்கா அரசு இன்று அவ்வாறு செய்ய முடியாத நிலையில் மூன்றாம் நபர்கள் போல ஒளித்துவந்து சமாதானம், சாதுவீகம், நடுவுனிலமை என்றெல்லாம் வேடம் போட்டுநிற்கிறது, எனவே தான் யாழ்களத்தில் கதையளக்கும் என்போன்றவர்களுக்கு, எமக்கே கதையளப்பவர்களை பற்றி அவதானமாக இருக்கும் படி கூறப்பட்டது.

இன்னும் ஒன்று சிறுபுல்லும் பல்குத்த உதவும் என்றொரு பழமொழி உண்டு, சுயவிமர்சனம் என்பது ஆக்கபூர்வமனதாக இருக்கவேண்டும், ஆர்வத்தை குறைக்க பயன்படக்கூடாது.

இந்தத் தலைப்பை யாழ் கருத்துக்களத்தில் பங்கெடுக்கும் மின்னணுக்களும் பிழை விளங்கிக் கொண்டனபோலும் அதனால் தான் எல்லாக்கருத்துக்களும் நடுவில் நிற்கின்றன போலும். நிர்வாகத்தினர் மின்னணுக்களுக்கு விளக்குவார்களா நடுவு நிலைமை என்றால் நடுவில் நிற்றல் அல்லவென்று?

seevt7.jpg

Edited by ஔவையார்

நடுவுநிலமை என்பது வெட்டி ஒட்டுதலும், இரண்டு வசனங்களில் கோசம்போடுவதும் அல்ல என்பதை யாழ் கள எலிப்புழுக்கைகளுக்கு யாராவது விளக்கம் கொடுப்பார்களா? <_<

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

'நியாத்திற்கும் அநியாயத்திற்கும் இடையில் நடுநிலமை என்று ஒன்றில்லை"

கவிஞர் புதுவை இரத்தினதுரை.

  • கருத்துக்கள உறவுகள்

நடுநிலை என்பது

தாயை அல்லது சகோதரியை அல்லது மனைவியை ஒருத்தன் கெடுத்துக்கொண்டிருக்கும்போ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.