Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆப்பிழுக்கத் தயாராகும் பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பிழுக்கத் தயாராகும் பொன்சேகா

-ப.தெய்வீகன்-

எல்லோரும் ஏறிவிழுந்த கழுதையில் சக்கடத்தாரும் எறி சறுக்கி விழுந்தாராம் என்ற நக்கல் மொழி ஒன்று எம் மக்களிடையே வழக்கத்தில் உள்ளது.

பிரபாகரனை பிடிக்கப்போகிறோம் என்று கூறிக்கொண்டு வடக்கில், மேல்வெடி வைத்துக்கொண்டிருக்கும் சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் அண்மைக்கால அறிக்கைகளைப் பார்த்தால் இவர் இராணுவத்தளபதிகள் வரிசையில் அடுத்த சக்கடத்தார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

சிங்கள தேசமும் அதன் படைகளும் எதனை எல்லாம் புரிந்து வைத்திருக்கின்றன என்பதனை நோக்குவதை விட எவற்றை எல்லாம் இன்னமும் புரியாமல் இருக்கிறது என்பதனை பார்க்கும்போது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.

தற்போது விடுதலைப் புலிகளின் பெருங்கோட்டையாக விளங்குவது வன்னி. இதனை முற்றாகப் பிடித்துவிட்டால் புலிகளும் அவர்களின் தலைவர் பிரபாகரனும் அவ்வளவுதான்.

இதில் எந்த ஐயமும் இல்லை. இதனை கொழும்பில் இருந்துகொண்டு அரசின் ஊடகப்பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல போன்று பேசலாம் அல்லது காகிதத்தில் எழுதி வைத்து அழகு பார்க்கலாமே தவிர. யதார்த்தத்தில் இது நடக்கக்கூடியதா? சாத்தியமானதா என்று பார்த்தால்தான் உண்மை நிலை புரியும்.

கடந்த சில மாதங்களாக மன்னாரில் நின்று பூச்சாண்டி காட்டிய கதை போன்று வன்னிக்கதையையும் தமது ஊடகங்களில் அளந்து தள்ளி சிங்கள மக்களின் காதுகளில் பூச்சுற்றுவதற்கே பொன்சேகா தலைமையிலான அரச படைகள் பெரும் பிரயத்தனம் செய்கின்றன.

உண்மையில் வடபோர் முனையில் புலிகளின் தந்திரோபாயங்கள் என்ன என்று சற்று ஆராய்ந்தால்தான் சிறிலங்கா இராணுவத்தளபதியின் எதிர்பார்ப்புக்களும் அதில் உள்ள பாரிய சிக்கல்களும் புரியும்.

மன்னார் எனப்படுவது இராணுவ ரீதியில் பார்க்கப்போனால், புலிகளுக்கு தமது கடற்பலத்தை உறுதி செய்தற்கான இடமாகவே ஆரம்பம் முதல் கருதப்பட்டு வந்த ஒன்று.

தமிழீழ கடற்பரப்பு என்று பார்க்கையில் கிழக்கு முதல் வடக்கு ஊடாக சுற்றிவந்து மேற்கு வரை பெரும்பாங்கான கடலை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது எந்தப் பெரிய போருக்கும் பெரும் பக்கபலமாக அமையும் என்பதில் புலிகள் என்றுமே அசையாத நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஆனையிறவு யாருக்குச் சொந்தமோ அவர்களுக்குத்தான் யாழ்ப்பாணம் சொந்தம் என்று தளபதி பிரிகேடியர் பால்ராஜ் கூறியது எவ்வளவு உண்மையோ தமிழீழத்தின் கடற்பரப்பு யாருக்கு சொந்தமோ அவர்களுக்குத்தான் தமிழீழம் சொந்தமானது என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

அந்த வகையில் மன்னார் கடல் எனப்படுவது கடந்த காலங்களில் புலிகளின் சிறிலங்காவின் தென்பகுதி நோக்கிய நகர்வுக்கு நீர்கொழும்பு, புத்தளம் பகுதிவரை தடையின்றி பயன்படுத்தப்பட்டு வந்தமை அரச படைகள் ஒன்றும் அறியாதது அல்ல. இருந்தும், அவர்களின் கண்ணில் மண்தூவி விட்டு கனகச்சிதமாக தமது காரியங்களை புலிகள் அரங்கேற்றி வந்தனர்.

இராணுவம் கைப்பற்றி விட்டதாக அறிவித்துவிட்ட பின்னரும் மன்னார் எருக்கலம்பிட்டி பிரதேசத்திற்கு கடல் வழியாக சென்று தாக்குதல் நடத்தி முகாமை இரண்டு மணிநேரம் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து விட்டு அங்கிருந்து ஆயுதங்களையும் அள்ளி வந்துள்ளனர் என்றால் அது மன்னார் கடலில் புலிகளின் கை எவ்வளவு ஓங்கியுள்ளது என்பதற்கு சரியான சாட்சி.

மன்னாரில் கடந்த காலங்களில் 90-கள் முதல் புலிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் மற்றும் முறியடிப்பு எல்லாமே படையினருக்கு பாரிய இழப்பை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டவையே தவிர, அங்கு தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்கா

  • கருத்துக்கள உறவுகள்

இன்று எந்தக்கேந்திர முக்கியத்துவமும் இல்லாத மன்னாரை பின்னணியாக வைத்துக்கொண்டு முல்லைத்தீவை பிடித்து புலிகளின் தலைவரை பிடிக்கப்போவதாக அறிக்கை விடுகின்றனர்.

மன்னார் கேந்திர முக்கியத்துவம் இல்லாத பகுதி என்ற முடிவுக்கு எப்படி இந்த எழுத்தாளர் வந்துள்ளார்?

மன்னார் கேந்திர முக்கியத்துவம் இல்லாத பகுதி என்ற முடிவுக்கு எப்படி இந்த எழுத்தாளர் வந்துள்ளார்?

அது மனலாற்றில் சண்டை தொடங்கும் போது அதை காப்பாற்ற மன்னாரை விட்டு விடுவார்கள் என்று ஒரு கணக்கில எழுதுறது தானே ...

மன்னார் கேந்திர முக்கியத்துவம் இல்லாத பகுதி என்ற முடிவுக்கு எப்படி இந்த எழுத்தாளர் வந்துள்ளார்?

இதையெல்லாம் கண்டு கொள்ளக்கூடாதாக்கும்.

மன்னார் களம் தான் பதில் கூறவேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பிழுக்கிற பொன்சேகா! வாலைவிடப்போறாரா விதையை விடப்போறாரா! வாலைவிட்டால் வாலோடு போகும். விதையைவிட்டால் உயிரோடு போகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் பின்வாங்கும் பகுதிகள் எல்லாம் தமிழ் மக்களுக்கு முக்கிய பகுதிகள் இல்லை :D ஆனால் 1-மணித்தியாலம் பிடித்து வைத்திருக்கும் பகுதிகள் தான் அதி முக்கியமான பகுதிகள் :lol:

விடுதலைப் புலிகளின் நகர்வுகளை யாராலும் கணிக்கவோ ஊகிக்கவோ முடியாது என்பது வரலாறு

இது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும்

யுத்தகள ஆய்வுகள் என்பது கடினமானது எல்லாராலும் ஒரு தாக்குதல் செய்தியை வைத்துக்கொண்டு பிண்ணனியை ஊகிக்க முடியாது

இப்படியான ஆய்வுகள் வரவேற்கப்பட வேண்டியவை

அந்த ஆய்வுகள்

தமிழ்மக்களின் குறிப்பாக புலம் பெயர் உறவுகளின் உளவுரணையும் உறுதியையும் ஊக்குவிப்பனவாகவும் மிகைப்படுத்தப்படாததாகவும் இருக்கவேண்டும்

இவை மிகவும் சரியானதாக இருக்கும் என்று எண்ணி விடவும் முடியாது

ஆய்வாளர் தனக்கு கிடைத்த தரவுகளையும் கடந்த கால நிகழ்வுகளையும் வைத்துக் கொண்டு தனது ஊகங்களையும் வைத்துக் கொண்டு தான் எழுதுவார்

ஆகவே அவர் எழுதுவதில் எமக்கு நம்பும் படியானவற்றை எடுத்துக் கொண்டு மற்றவற்றை விடவேண்டியது தான்

ஆனால் எல்லா ஆய்வாளரும் மன்னார் களம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததில்லை என்று தான் எழுதி வருகிறார்கள்

நமது களநாயகர்கள் அதனைத் தீர்மாணிப்பார்கள்

கடந்த கால ஆய்வுகளை வாசிக்கவிரும்பின் இங்கே சென்று வாசிக்கலாம்

http://tamilthesiyam.blogspot.com/

புலிகள் தம்முடைய ஆளணி மற்றும் ஆயுத வளம் என்பனவற்றோடு.. எதிரியின் பலம் பலவீனம் என்பனவற்றையும் கணிப்பீடு செய்து தான் களமுனைகளில் எதிர்ப்பை காட்டுகிறார்கள்....

முகமாலை மற்றும் மணலாறோடு ஒப்பிடும் போது இப்போது மன்னார் முக்கியமற்றதாய் இருக்கலாம்... அப்பிடி இருக்கையில் மனரில போய் படைவலுவை குவிச்சுப்போட்டு முகமாலையில என்ன செய்யுறது? .... அப்பிடி செய்தா றாணுவத்தின்ர திட்டம் தான் வெற்றி பெறும்.

மன்னார் மாத்திரமில்லை ஈழத்தின் எந்தப்பகுதியும் முக்கியமானதுதான்... எங்கள் தாய் நிலத்தை காக்குமளவுக்கு எங்களுக்கு வளங்கள் இல்லை.. இருப்பதை வைத்து திறம்பட செய்வதே நல்லது..

இந்த ஆய்வை கேள்விக்குள்ளாக்கவெண்டு வெளிக்கிட்டங்கள்...

மகிந்த தன்னுடைய ஆப்பை கழற்ற வேண்டுமெனில், பொன்சேகா தனது ஆப்பை மாட்டத்தான் வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.