Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயங்கரவாதப் பட்டியலில் உலகத் தமிழர் இயக்கத்தைச் சேர்த்ததை எதிர்த்து வழக்கு

Featured Replies

பயங்கரவாதப் பட்டியலில் உலகத் தமிழர் இயக்கத்தைச் சேர்த்ததை எதிர்த்து வழக்கு

[வியாழக்கிழமை, 19 யூன் 2008, 02:25 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]

கனடிய அரசாங்கத்தால் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் உலகத் தமிழர் இயக்கம் சேர்க்கப்பட்டதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று உலகத் தமிழர் இயக்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக உலகத் தமிழர் இயக்கம்- ஒன்ராறியோ வெளியிட்டுள்ள அறிக்கை:

ஒன்ராறியோ குற்றவியல் சட்டத்தின் கீழ் (Criminal Code) பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் உலகத் தமிழர் இயக்கம் சேர்க்கப்பட்டிருப்பதாக கடந்த திங்கட்கிழமை (ஜூன் 16, 2008) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரால் விடுக்கப்பட்ட அறிவித்தல் எமக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2001 ஆம் ஆண்டில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஒரு சமூக அமைப்பு பயங்கரவாதப் பட்டியலில் கனடிய அரசினால் சேர்க்கப்பட்டது இதுவே முதன்முறை ஆகும்.

இந்நடவடிக்கை உலகத் தமிழர் இயக்கத்துக்கும் பரந்துபட்ட கனடிய தமிழ்ச் சமூகத்துக்கும் பாரதூரமான அபாய ஒலி ஆகும்.

1986 ஆம் ஆண்டில் உலகத் தமிழர் இயக்கம் ஒரு இலாப நோக்கற்ற குழுமமாக ஒன்ராறியோவில் பதிவு செய்யப்பட்டது.

அதன் பின்னர் அது குடியமர்வு ஆலோசனை மற்றும் பண்பாட்டுச் சேவைகளை பல்லாயிரம் கனடிய தமிழர்களுக்கு வழங்கி வந்துள்ளது. ரொறன்ரோ பெரும்பாகப் பகுதியில் அண்ணளவாக 200,000 கனடிய தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் கடந்த 20 ஆண்டுகளுக்குள் கனடாவுக்குப் புலம் பெயர்ந்தவர்கள் ஆவர்.

தமிழ்க் குடிவரவாளர் கனடாவில் புதிய வாழ்வைத் தொடக்குவதற்கும் அவர்கள் பண்பாட்டு உறவுகளை சமூகத்தில் ஒன்றிணைப்பதற்கும் வேண்டிய எல்லாவித உதவிகளையும் செய்வதற்குக் காரணமாக உலகத் தமிழர் இயக்கம் இருந்துள்ளது.

கடந்த காலங்களில் ஆவண மொழிபெயர்ப்பு, மொழிபெயர்த்தல், மொழி மற்றும் தொழிற் பயிற்சி, பிள்ளைகளுக்குத் தமிழ் மற்றும் பண்பாட்டு வகுப்புக்கள், மகளிரின் தேவைகளை நிறைவு செய்யும் வண்ணம் மகளிர் அமைப்பு, 16,000 நூல்கள் கொண்ட நூலகம், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பண்பாட்டுக் கொண்டாட்டங்கள் உட்பட கனடிய தமிழர்களுக்குப் பல்வேறு வேலைத் திட்டங்களையும் சேவைகளையும் உலகத் தமிழர் இயக்கம் வழங்கி வந்துள்ளது.

உலகத் தமிழர் இயக்கம் முற்றிலும் தன்னார்வத் தொண்டர்களின் உழைப்பினாலும் மக்களின் நிதிப்பங்களிப்பினாலும் இயங்கி வந்த அமைப்பாகும்.

பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்ட காரணத்தால் இல. 39 கொன்சென்ரினோ வீதி, ஸ்காபரோவில் உள்ள கட்டடத்தினை விட்டு உலகத் தமிழர் இயக்கம் வெளியேறுகின்றது.

இயக்குநர், அவை உறுப்பினர்கள் தங்களின் செயற்பாடுகளை இடைநிறுத்தி வைத்துள்ளனர்.

இன்று முதற்கொண்டு உலகத் தமிழர் இயக்கத்தின் சேவைகளும் நிறுத்தப்படும். பொதுமக்களுக்கு உரிய நூலகமும் மூடப்படும்.

உலகத் தமிழர் இயக்கத்தின் முன்னாள் தலைவர் சித்தா சிற்றம்பலம், கனடிய அரசின் நடவடிக்கையானது ரொறன்ரோ பெரும்பாகப் பகுதியில் வாழும் தமிழ்ச் சமூகத்துக்கு மட்டும் அல்லாது இலங்கையில் வாழும் தமிழ்மக்களுக்கும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என கவலை தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழர் இயக்கத்தைப் பட்டியலிட்டது சிறிலங்கா அரசின் இன அழிப்பு நடவடிக்கையை மேலும் ஊக்கப்படுத்துவதோடு வன்முறை மற்றும் பயமுறுத்தல்கள் மூலம் மாற்றுக் கருத்துக்கள் நசுக்கப்படும் நிலை நீடிக்க வழிவகுக்கின்றது.

சிறிலங்காவின் பாரதூரமான மனித உரிமை மீறல்களை ஜக்கிய நாடுகள் அவை மற்றும் பொது மன்னிப்பு அவை போன்றவை மீண்டும் மீண்டும் கண்டித்து வருவது தெரிந்ததே.

பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் உலகத் தமிழர் இயக்கம் சேர்க்கப்பட்டதனை எதிர்த்து வழக்காட முடிவு செய்துள்ளது.

கனடிய அரசின் இந்த நடவடிக்கையானது உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் பற்றி யாப்பில் போற்றிப் பதிக்கப்பட்ட அடிப்படை கருத்து உரிமை மற்றும் கூடல் உரிமை ஆகியவற்றின் மீதான தாக்குதலாக கருதுகின்றோம்.

உலகத் தமிழர் இயக்கத்தினை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்தமை எமது அடிப்படை உரிமைகள் யாவற்றையும் அழித்துவிடும் வழுக்கல் பாதையின் முதற்படியாக அமையலாம்.

எனவே கனடிய தமிழர்கள் இதனைப் புலம்பெயர்ந்த தமிழர்களின் குரலை அடைத்து விடும் முற்று முழுதான ஒரு அரசியல் நகர்வாகவே பார்க்கின்றனர்.

ஆகவே உலகத் தமிழர் இயக்கத்தின் இயக்குநர் அவை இந்தப் (பயங்கரவாத) பட்டியலை எதிர்த்து நீதிமன்றத்தில் முழுப்பலத்தோடு வழக்காடுமாறு வழக்கறிஞர்களைக் கேட்டுள்ளோம் என்று உலகத் தமிழர் இயக்கத்தின் முன்னாள் தலைவர் சித்தா சிற்றம்பலம் தெரிவித்தார்.

கனடிய அரசியல் சட்டத்தைத் கனடிய நீதித்துறை உறுதியாகத் தாங்கிப் பிடிக்கும் என்பதில் எமக்கு முழு அளவிலான நம்பிக்கை இருக்கின்றது. எனவே எமக்கு இருக்கும் சட்டப் பரிகாரங்களை முழு அக்கறையோடு முன்னெடுப்போம்.

இது தொடர்பில் உலகத் தமிழர் இயக்க வழக்கறிஞர்கள் Marlys Edwardh, Adriel Weaver (Ruby & Edwardh, தொலைபேசி எண் 416-964 9664) மற்றும் Barbara Jackman (Jackman & Associates), தொலைபேசி எண் 416-653 9964) ஆகியவர்களோடு தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதப் பட்டியலில் உலகத் தமிழர் இயக்கத்தைச் சேர்த்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்

ரொறன்ரோ, யூன் 18/CNW/ - உலகத் தமிழர் இயக்கம் – ஒன்ராறியோ குற்றவியல் சட்டத்தின் கீழ் (Criminal Code) பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக கடந்த திங்கட்கிழமை (யூன் 16, 2008) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரால் விடுக்கப்பட்ட அறிவித்தல் எமக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2001 இல் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஒரு சமூக அமைப்பு பயங்கரவாதப் பட்டியலில் கனேடிய அரசினால் சேர்க்கப்பட்டது இதுவே முதல் தடவை ஆகும். இந்த நடவடிக்கை உ.த. இயக்கத்துக்கும் பரந்துபட்ட கனேடிய தமிழ் சமூகத்துக்கும் பாரதூரமான அபாயவொலி ஆகும். உ.த.இயக்கம் 1986 இல் ஒரு இலாப நோக்கற்ற குழுமமாக ஒன்ராறியோவில் பதிவு செய்யப்பட்டது. அதன் பின் அது குடியமர்வு ஆலோசனை மற்றும் பண்பாட்டு சேவைகளை பல்லாயிரம் கனேடிய தமிழர்களுக்கு வழங்கி வந்துள்ளது. ரொறன்ரோ பெரும்பாகப் பகுதியில் அண்ணளவாக 200,000 கனேடிய தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையினர் கடந்த 20 ஆண்டுகளுக்குள் கனடாவுக்குப் புலம் பெயர்ந்தவர்கள் ஆவர்.; தமிழ்க் குடிவரவாளர் கனடாவில் புதிய வாழ்வைத் தொடக்குவதற்கும் அவர்கள் பண்பாட்டு உறவுகளை சமூகத்தில் ஒன்றிணைப்பதற்கும் வேண்டிய எல்லாவித உதவிகளையும் செய்வதற்குக் காரணமாக உ.த.இயக்கம் இருந்துள்ளது. கடந்த காலங்களில் ஆவண மொழிபெயர்ப்பு, மொழிபெயர்த்தல், மொழி மற்றும் தொழிற் பயிற்சி, பிள்ளைகளுக்குத் தமிழ் மற்றும் பண்பாட்டு வகுப்புகள், மகளிரின் தேவைகளை நிறைவு செய்யும் வண்ணம் மகளிர் அமைப்பு, 16,000 நூல்கள் கொண்ட நூலகம், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பண்பாட்டுக் கொண்டாட்டங்கள் உட்பட கனேடிய தமிழர்களுக்குப் பல்வேறு வேலைத் திட்டங்களையும் சேவைகளையும் உ.த.இயக்கம் வழங்கி வந்துள்ளது. உ.த.இயக்கம் முற்றிலும் தன்னார்வத் தொண்டர்களது உழைப்பினாலும் மக்களது நிதிப்பங்களிப்பினாலும் இயங்கி வந்த அமைப்பாகும்.

பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்ட காரணத்தால் உ.த.இயக்கம் இல. 39 கொன்சென்ரினோ வீதி, ஸ்காபரோவில் உள்ள கட்;டிடத்தை விட்டு வெளியேறுகிறது. இயக்குநர் அவை உறுப்பினர்கள் தங்களது செயற்பாடுகளை இடைநிறுத்தி வைத்துள்ளார்கள். இன்று முதற்கொண்டு உ.த. இயக்கத்தின் சேவைகளும் நிறுத்தப்படும். பொதுமக்களுக்குரிய நூலகமும் மூடப்படும்.

உ.த.இயக்கத்தின் முன்னாள் தலைவர் சித்தா சிற்றம்பலம் கனேடிய அரசின் நடவடிக்கை உ.த.இயக்கத்தைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்டகையானது ரொறன்ரோ பெரும்பாகப் பகுதியில் வாழும் தமிழ்ச் சமூகத்துக்கு மட்டும் அல்லாது இலங்கையில் வாழும் தமிழ்மக்களுக்கும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கவலைதெரிவித்தார். “உ.த.இயக்கத்தைப் பட்டியல் இட்டது ஸ்ரீலங்கா அரசின் இனவழிப்பு நடவடிக்கையை மேலும் ஊக்கப்படுத்துவதோடு வன்முறை மற்றும் பயமுறுத்தல்கள் மூலம் மாற்றுக் கருத்துக்கள் நசுக்கப்படும் நிலை நீடிக்க வழிவகுக்கிறது. ஸ்ரீலங்காவின் பாரதூரமான மனிதவுரிமை மீறல்களை அய்க்கிய நாடுகள் அவை மற்றும் பொது மன்னிப்பு அவை போன்றவை மீண்டும் மீண்டும் கண்டித்து வருவது தெரிந்ததே.”

உ.த.இயக்கம் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டதை எதிர்த்து வழக்காட முடிவு செய்துள்ளது. கனேடிய அரசின் இந்த நடவடிக்கை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் பற்றி யாப்பில் போற்றிப் பதிக்கப்பட்ட அடிப்படை கருத்துரிமை மற்றும் கூடல் உரிமை ஆகியவற்றின் மீதான தாக்குதலாக உ.த.இயக்கம் கருதுகிறது. “உ.த.இயக்கத்தைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்தமை எங்களது அடிப்படை உரிமைகள் யாவற்றையும் அழித்துவிடும் வழுக்கல் பாதையின் முதற் படியாக அமையலாம். எனவே கனேடிய தமிழர்கள் இதனைப் புலம்பெயர்ந்த தமிழர்களின் குரலை அடைத்துவிடும் முற்று முழுதான ஒரு அரசியல் நகர்வாகவே பார்க்கிறார்கள். ஆகவே உ.த.இயக்கத்தின் இயக்குநர் அவை இந்தப் (பயங்கரவாத) பட்டியலை எதிர்த்து நீதிமன்றத்தில் முழுப்பலத்தோடு வழக்காடுமாறு வழக்கறிஞர்களைக் கேட்டுள்ளோம்”; இவ்வாறு உ.த.இயக்கத்தின் முன்னாள் தலைவர் சித்தா சிற்றம்பலம் தெரிவித்தார். “கனேடிய அரசியல் சட்டத்தைத் கனேடிய நீதித்துறை உறுதியாகத் தாங்கிப் பிடிக்கும் என்பதில் எமக்கு முழு அளவிலான நம்பிக்கை இருக்கிறது. எனவே நாங்கள் எங்களுக்கு இருக்கும் சட்டப் பரிகாரங்களை முழு அக்கறையோடு முன்னெடுப்போம்.”

இந்த விடயம் நீதிமன்றத்தில் விரைவில் வர இருப்பதால் திரு. சிற்றம்பலம் இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். மேற்கொண்டு சகலவிசாரணைகளையும் உ.த.இயக்க வழக்கறிஞர்கள் Marlys Edwardh, Adriel Weaver (Ruby & Edwardh), தொலைபேசி எண் 416-964-9664) மற்றும் Barbara Jackman (Jackman & Associates), தொலைபேசி எண் 416-653-9964) ஆகியவர்களோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

-சிஎன்டபுள்யு

இதுவொரு சமூக ஒருங்கிணைப்பு இயக்கமாக பெயரிலும் சரி செயலிலும் சரி இருந்தும் இது தடை செய்யப்பட்டமை பரப்புரைகளுக்குக் கிடைத்த வெற்றியே.

தாயகத்தில் சுட்டுக்கொன்ற பின் பயங்கரவாதி எனப் பெயர் சூட்டல்.

பயங்கரவாதி என சிறையில் குற்றப்பத்திரிகை பிரேரிக்கப்படாமல் நீண்டகாலம் அடைத்து வைத்தல் போன்ற பயங்கரவாத அரசயந்திரத்தின் செயற்பாடுகள் உலகளாவிய ரீதியிலும் தமிழர்களுக்கு எதிராக தோற்றம் பெறுவதற்கான ஆரம்பம்.

எனவே இது முளையிலேயே கிள்ளப்பட வேண்டும்.

இந்தியாவிலும் இம்முனைப்பு ஏலவே இருந்தாலும் முதலமைச்சரிடமிருந்தான அண்மைய செய்தி மீண்டும் ஆரம்பிக்கப்போகிறது என்பதனை கட்டியம் கூறிநிற்கிறது.

என்ன விலை கொடுத்தாலும் இவ்வழக்கு நீதியின் வழி வெற்றிகொள்ளப்படவேண்டும். "விலை" என்பது பணம் அல்ல, கடின முயற்சி என்பதனையே குறிக்கின்றது என்பதைக் கவனத்திற் கொள்க.

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழர் இயக்க செய்தியாளர் மாநாடு

உலகத் தமிழர் இயக்கத்தை குற்றவியல் சட்ட விதிகளின் கீழ் பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் கனேடிய அரசாங்கம் சேர்த்திருப்பதையடுத்து அதன் முன்னாள் நிர்வாகிகள் இன்று செய்தியாளர் மகாநாடு ஒன்றினை நடத்தி தமது நிலைப்பாட்டை வெளியிட்டனர்.

உலகத் தமிழர் இயக்க வழிக்கறிஞர்களின் றூபி அன்ட் எட்வேட் அலுவலகத்தில் இன்று நண்பகல் செய்தியாளர் மகாநாடு இடம்பெற்றது.

அமைப்பின் முன்னாள் தலைவரான சித்தா சிற்றம்பலம் செய்தியாளர் மகாநாட்டில் உரையாற்றும்போது - பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரொக் வல் டே கடந்த திங்கட்கிழமை உலகத்தமிழர் இயக்கம் கனேடிய குற்றவியல் சட்டத்தின் கீழ் பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக வெளியிட்ட அறிவித்தல் அதன் இயக்குனர் சபை உறுப்பினர்களையும், அது அளித்துவந்த சேவைகளினால் பயனடைந்துவந்த ஆயிரக்கணக்கான தமிழ் கனேடியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக சொன்னார்.

உலகத் தமிழர் இயக்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக பல தவறான தகவல்கள் கடந்த சில தினங்களாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் அதன் செயற்பாடுகள் குறித்து விளக்கவேண்டியதன் அவசியம் ஏற்பட்டிருப்பதாக கூறிய சித்தா சிற்றம்பலம் 1986 ம் ஆண்டு ஒன்ராறியோவில் லாபநோக்கமற்ற ஒரு அமைப்பாக உலகத் தமிழர் இயக்கம் பதிவு செய்யப்பட்டது. கடந்த 22 ஆண்டுகாலமாக அது ஆயிரக்கணக்கான தமி;ழ் கனேடியர்களுக்கு குடியேற்றம், கலாசார சேவைகள் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்கி வந்திருக்கிறது என்று தெரிவித்தார்.

தற்போது இந்த அமைப்பு தடை செய்யப்பட்டிருப்பதால் தொடர்ந்து இத்தகைய சேவைகளை அதனால் வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

உலகத் தமிழர் இயக்க நிர்வாக சபையினர் இலக்கம் 39 கொசன்றினோ றைவ் கட்டிடத்தை விட்டு விலகி இயக்குனர் சபை உறுப்பினர்களும் தமது செயற்பாடுகளை உடனடியாக நிறுத்திக்கொள்கின்றனர்.

அதன் பதினாறாயிரம் நூல்களைக் கொண்ட நூலகமும் பொதுமக்களுக்கான சேவையை நிறுத்திக்கொள்கிறது. உலகத் தமிழர் இயக்கம் அதை பயங்கரவாத பட்டியலில் இயக்கம் சேர்துக்கொள்ளப்பட்டமைக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதன் வழக்கறிஞர்களை நாம் கேட்டிருக்கிறோம். கனேடிய சட்ட அமைப்பில் எமக்கு ப+ரண நம்பிக்கை இருக்கிறது என்று சித்தா சிற்றம்பலம் மேலும் தெரிவித்தார்.

உலகத் தமிழர் இயக்கத்தினால் அமர்த்தப்பட்ட வழக்கறிஞரான மார்லிஸ் எட்வேட் விபரம் வெளியிடுகையில் - அந்த அமைப்பு பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்டமை தொடர்பாக அமைச்சருக்கு விண்ணப்பிக்கப்போவதாக கூறினார்.

அமைச்சர் எடுக்கும் முடிவையடுத்து இந்த விடயத்தில் தேவையேற்பட்டால் நீதிமன்றத்தின் துணையை நாடவிருப்பதாகவும் வழக்கறிஞர் மார்லிஸ் எட்வேட் தெரிவித்தார்.

-ரி.வி.ஐ செய்திகள்

இதுவொரு சமூக ஒருங்கிணைப்பு இயக்கமாக பெயரிலும் சரி செயலிலும் சரி இருந்தும் இது தடை செய்யப்பட்டமை பரப்புரைகளுக்குக் கிடைத்த வெற்றியே.

தாயகத்தில் சுட்டுக்கொன்ற பின் பயங்கரவாதி எனப் பெயர் சூட்டல்.

பயங்கரவாதி என சிறையில் குற்றப்பத்திரிகை பிரேரிக்கப்படாமல் நீண்டகாலம் அடைத்து வைத்தல் போன்ற பயங்கரவாத அரசயந்திரத்தின் செயற்பாடுகள் உலகளாவிய ரீதியிலும் தமிழர்களுக்கு எதிராக தோற்றம் பெறுவதற்கான ஆரம்பம்.

எனவே இது முளையிலேயே கிள்ளப்பட வேண்டும்.

இந்தியாவிலும் இம்முனைப்பு ஏலவே இருந்தாலும் முதலமைச்சரிடமிருந்தான அண்மைய செய்தி மீண்டும் ஆரம்பிக்கப்போகிறது என்பதனை கட்டியம் கூறிநிற்கிறது.

என்ன விலை கொடுத்தாலும் இவ்வழக்கு நீதியின் வழி வெற்றிகொள்ளப்படவேண்டும். "விலை" என்பது பணம் அல்ல, கடின முயற்சி என்பதனையே குறிக்கின்றது என்பதைக் கவனத்திற் கொள்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.