Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா தினத்தை முன்னிட்டு கனடீய தமிழ் காங்கிரஸ் ஒழுங்குபடித்திய இரத்ததானம் வழங்கல் நிகழ்வு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு அந்த அந்த நாட்டு நீரோட்டத்தில் இணையவேண்டும் அரசியலுக்காக மட்டுமன்றி அந்த நாட்டில் வாழ்வதற்கும் தான்.

இதையே தான் சிங்களவனும் தமிழனைப் பார்த்துச் சொல்கிறான்.. ஏன் பிள்ளையானும் டக்கிளசும் சங்கரியும் சொல்கிறார்கள். நாங்கள் சிறீலங்கன் தமிழர்களாக வாழ வேண்டின்.. சிறீலங்காவின் அரசியல் நீரோட்டத்தில் சிறீலங்காவின் இறையாண்மையோடு தேசியத்தோடு ஐக்கியமாக வேண்டும் ஐக்கிய சிறீலங்காவுக்குள் வாழ வேண்டும் என்று..! அடிப்படையில் உங்களுக்கும் அவர்களுக்கும் கொள்கை அளவில் என்ன வேறுபாடு..???! ஆனால் உங்களை நீங்களே கனடாத் தமிழன் என்று கொண்டு அவர்களைப் பார்த்து திட்டுகிறீர்கள்..??! என்னைப் பொறுத்தவரை உங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடில்லை.

நீங்கள் கனடாவில் உங்களுக்கு அளிக்கப்பட்ட வசதிக்காக பூர்வீகத்தை மறக்கிறீர்கள்.. மறைக்கிறீர்கள்... மாற்றுகிறீர்கள்.. அவர்கள் சிறீலங்காவில் தமக்கு அளிக்கப்பட்ட வசதிக்காக தமது பூர்வீகத்தை மறக்கிறார்கள்.. மறைக்கிறார்கள்.. மாற்றுகிறார்கள். :icon_idea:

நாங்கள் கேட்டுக் கொள்வது ஈழத் தமிழர்கள் வாழும் இடத்தால் தம்மைப் பிரித்துக் கொண்டு துண்டு துண்டாகி சிந்திப் போய் தமிழீழம் என்ற தமது பூர்வீக நிலத்தை விட்டிட்டு ஓடிய பலவீனத்தை மறந்து பலவீனப்பட்டு நிற்பதிலும் ஈழத்தமிழன் என்ற நாமத்தையாவது தரித்து ஒன்றுபட்டு உலகத்தமிழத்தினக்கான அந்த மாபெரும் சக்திக்கு ஒரு வழிகாட்டியா நிற்கலாமே என்று..!

தமிழர்கள் ஒன்றுபட்டு ஒத்த சக்தியாக இந்த உலகில் நின்றால் மட்டுமே.. அவர்களை அவர்களின் குரலை உலகம் மதிக்கும். இன்றேல் மிதிக்கும். போகுமிடத்தின் பெயரால்.. துண்டுபட்டுப் போகின்.. தமிழினம், தமிழ்மொழி மேலும் மேலும் சிந்திச் சின்னாபின்னமாகி பலவீனப்பட்டுப் போகுமே தவிர... வேறு எதுவும் நடக்காது.

தமிழகத் தமிழன்.. மலையகத் தமிழன்.. கொழும்புத் தமிழன்.. சிறீலங்காத் தமிழன்.. சிங்கப்பூர் தமிழன்.. மலேசியாத் தமிழன்.. கனடாத் தமிழன்.. மொரிசீயஸ் தமிழன்.. பிரிட்டிஷ் தமிழன்... நோர்வே தமிழன்.. பிரான்ஸ் தமிழன்.. ஜேர்மன் தமிழன்.. சுவிஸ் தமிழன்... இத்தாலி தமிழன்.. டெல்லி தமிழன்... கர்நாடகத்தமிழன்... இப்படியே போய்க் கொண்டிருக்கிறது... தமிழர்களுள் பிரிவினை..! அப்பப்பா தமிழர்களில் மட்டும் இத்தனை தமிழர்களா.. என்று கூடக் கேட்க வைக்கிறது. அடிப்படையில் இந்த வெங்காயத் தமிழன்.. ஒரே பூர்வீகத்தையே கொண்டவன். ஒரு நாட்டுக்காக ஒன்றுபடக் கூட தகுதியற்றவனானதும்.. இந்தப் பேராசையால் தான்..! உலகில் பலவீனப்பட்டுப் போனதும் இந்த அண்டிய இடத்தில் கோலம் மாறும் கொள்கையால் தான்.

சொந்த பூர்வீகத்தான்.. ஈழத்தில் அடிவாங்கி அழிய இன்னொரு பகுதியில் வாழும் தமிழன் அதன் நோ அறியாமல் வாழ்வதும் இந்தப் பூர்வீக இணைப்பை தொலைத்ததால் தான்..! :icon_mrgreen:

யூதர்கள் இஸ்ரேலை தாய் மண்ணாகக் கொண்டு (உண்மையில் அது அவர்களின் பூர்வீக மண்ணே அல்ல) எங்கு வாழிலும் யூதர்களாகவே வாழ்வதனால்... யூதர்கள் தம்மை இஸ்ரேலின் குடிகளாகத்தான் காட்டிக் கொள்கின்றனர். பிரிட்டனில் வாழ்த்தாலும் பிரிட்டிஷ் யூதர்கள் என்று சொல்லிக் கொள்வதை அவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் யூதர்கள் என்றே சொல்லிக் கொள்கின்றனர்.

ஒரு நாட்டின் குடியுரிமை என்பது எப்போதும் பறிக்கப்படக் கூடியது. அது கூட ஒருவகை அடிமைச் சின்னமே..! ஆனால் ஒரு இனத்தின் பூர்வீகம் என்பது அதன் பிறப்பியல் சார்ந்தது. குடியுரிமைக்காக பூர்வீகத்தை விட்டுக் கொடுப்பவர்கள்.. எவ்வாறு பூர்வீக நிலத்துக்கு உரிமை கொண்டாடப் போகின்றனர்.. எல்லாம் மர்மமாகவே இருக்கிறது..!

யூதர்கள் உலகெங்கும் சிந்திக் கிடந்த பலவீனம் உணர்ந்து.. ஓரினமாகி.. இஸ்ரேலை உருவாக்கினார்கள். தமிழர்களோ.. ஒன்றாய்க் கிடந்த பூர்வீகம் இழந்து சிந்திப் போவதால் பலமடைந்து.. ஊரெங்கும்.. உலகமெங்கும் தமிழீழம் பெறுகின்றனராம் .. நல்ல வேடிக்கைதான் போங்கோ..! நீங்களும் உங்கட சுயநலத்துக்காக முன் வைக்கும் கொள்கைகளும் கொண்டு போய் குப்பையில் போடுங்கள். :icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

  • Replies 64
  • Views 8.2k
  • Created
  • Last Reply

நீங்களும் உங்கட சுயநலத்துக்காக முன் வைக்கும் கொள்கைகளும் கொண்டு போய் குப்பையில் போடுங்கள்.

நான் ஆரம்பத்திலேயே சொன்னேன் உங்களுக்கு கனடா எட்டாப் பழம் என்று :):):)

தாங்கள் முதலில் செய்யவேண்டும் அதை விடுத்து மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லமுடியாது

தன்னுடைய சுயநலத்திற்க்காக எரிச்சலுக்காகவும் மற்றவர்களின் மேல் சேறு பூசுவதற்கு தமிழ்தேசியத்தை கையில் எடுக்காதீர்கள்

அது உங்கள் எல்லா எழுத்துக்களிலும் எரிச்சல் பொங்கி வழிகிறது

நேயர்கள் புரிந்து கொள்வார்கள்

காகம் கத்தி மாடு சாகாது :D:D

முதலில் நீங்கள் செய்யுங்கள் அதன் பின்னர் மற்றவர்களுக்கு சொல்லாலம்

சீ சீ இந்தப் பழம் புளிக்கும் ^_^:o

Edited by tamilsvoice

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களில் அநேகர் இப்படித்தான். தங்கள் தவறை.. நியாயத்தைத் தேடமாட்டார்கள். அடுத்தவனுக்கும் தன்னைப் போல எரிச்சல் பொறாமை என்று இலகுவாக தீர்மானித்துவிட்டு.. தான் தான் பெரியாள் தான் செய்வதே சரி என்று நினைத்து விட்டுப் போய்விடுவார்கள். உங்களுக்காக நான் கருத்துப் பகிர்வைச் செய்யவில்லை. எனது கருத்தியல் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவே செய்து கொண்டேன்..! ^_^

Edited by nedukkalapoovan

இங்கு கனடியத்தமிழர்களின் மேல் செறு பூசிக்கொண்டிருக்கும் நேயர்

எந்த ஆதாரத்தை வைத்து எழுதுகிறார் ???????????????

இவர் ஏதோ தானும் தனது குடும்பமும் தான் தமிழ்த்தேசியத்தை வழர்த்து மற்றவர்கள் எல்லாம் கை கட்டி வேடிக்கை பார்ப்பது போல் எழுதுகிறார்

இவருடைய எழுத்துகளில் பொறாமையும் எரிச்சலும் தான் தெரிகிறது ஆனாலு ம் அதையும் தமிழ்த் தேசியத்தின் மேல் உள்ள அக்கறை போல் காட்ட முற்படுகிறார்

இது இவருடைய உண்மையான சுயரூபத்தின் வெளிப்பாடு எனபது அப்பட்டமாகத் தெரிகிறது

இவர் உண்மையில் ஒரு தமிழ்தேசியவாதி என்றால் துரோகிகளைத் தவிர்த்து மற்றய தமிழ்மக்கள் மேல் செறு பூச மாட்டார்கள்

எல்லாத் தமிழ்மக்களையும் ஒன்று திரட்டி எப்படி அவர்களையும் தமிழ்த்தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கு முயற்சிக்க வேண்டும்

அதை விடுத்து தனது தனிப்பட்ட சுயநலத்திற்காக

எந்த வித ஆதரமும் இல்லாமல் தனது கற்பனையையும் எரிச்ச்லையும் எமது இனத்தின் மீது காட்டுவது துரொகத்தனமே

தமிழ்த்தேசியவாதிகள் , ஆதரவாளர்கள் , தமிழ்மக்கள் மீது சேறு பூசுவதும் துரோகத்தனமே

நான் ஏற்கனவே சொல்லி விட்டேன் இப்படியானவர்களின் கருத்துக்களுக்கு பதில் எழுதுவது கேவலமானது என்று

ஒரு தனிப்பட்ட ரீதியில் ஒருவர் அடிக்கடி எழுதி வருவது பற்றி நிர்வாகம் கருத்தில் எடுக்கும் என நம்புகிறேன்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழ் கனடியர்கள்" என்பதில் உலகெங்கும் இருந்து வந்து கனடாவில் பொருளாதார, அரசியல் தஞ்சம் அடைந்தவர்களை குறிப்பாக தமிழ் பேசும் மக்களையும் அல்லது தமிழ் பேசும் பெற்றோரினையும் அவர்களின் வாரிசுகளையும் கொண்டு உள்ளடக்கி இருக்கலாம்...! அதில் எத்தனை பேர் ஈழத்தமிழரின் போராட்டத்தில் ஈடுபாடுகாட்டுகின்றனர் என்பது கேள்விக் குறியே..??!

கனடா வாழ் ஈழத்தமிழர்கள் நிச்சயமாக தம்மை கனடியத் தமிழர்கள் என்று அழைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. உண்மையான ஈழ ஆதரவுள்ள canada based eelam tamils எனது கருத்தில் குறை காண மாட்டார்கள் என்று நம்பலாம். மற்றைய தமிழர்களும் அதன் நியாயப்பாட்டை உணர வேண்டும். உலகத்தமிழினம்.. வாழும் இடத்தின் பெயரால் பிரிவினை காட்டுவதிலும் ஒரு பொதுத்தன்மையை காத்துக் கொள்ள முனைய வேண்டும். அதுவே அவர்களை உலகலாவிய அளவில் ஒற்றுமைப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் உதவும். :o^_^

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத் தமிழன்.. மலையகத் தமிழன்.. கொழும்புத் தமிழன்.. சிறீலங்காத் தமிழன்.. சிங்கப்பூர் தமிழன்.. மலேசியாத் தமிழன்.. கனடாத் தமிழன்.. மொரிசீயஸ் தமிழன்.. பிரிட்டிஷ் தமிழன்... நோர்வே தமிழன்.. பிரான்ஸ் தமிழன்.. ஜேர்மன் தமிழன்.. சுவிஸ் தமிழன்... இத்தாலி தமிழன்.. டெல்லி தமிழன்... கர்நாடகத்தமிழன்... இப்படியே போய்க் கொண்டிருக்கிறது... தமிழர்களுள் பிரிவினை..! அப்பப்பா தமிழர்களில் மட்டும் இத்தனை தமிழர்களா.. என்று கூடக் கேட்க வைக்கிறது. அடிப்படையில் இந்த வெங்காயத் தமிழன்..

நீங்கள் எந்த குப்பேல, மன்னிக்கணும் எந்த நாட்டில வசிக்கிறீங்களோ தெரியாது... ஆனால் நான் வசிக்கும் நாட்டில் வெளிவரும் பத்திரிகைகள் அனைத்தும் நம்மை நோர்வேஜிய தமிழர் என்றும் -Norske Tamiler - பாகிஸ்தான் நாட்டுக்காரனை நோர்வேஜிய பாகிஸ்தானர் Norske Pakistaner என்றும் எழுதுகின்றன. இது நாமாக நமக்குவைத்த பெயரல்ல இந்த சமுதாயத்தாலே வைக்கப்பட்ப பெயர்கள். உதாரணமாக நோர்வே நாட்டு தமிழன் வெளிநாட்டில் காணாமல் போனால் இந்த நாட்டு பத்திரிகைகள் நோர்வேஜிய தமிழனை காணவில்லை என்றே எழுதுகின்றன. அதாவது இவர் ஒரு தமிழர், அத்துடன் நோர்வேஜிய பிரஜையுமாவர் என்பதை ஒரே சொல்லில் குறிப்பிடுகின்றன. இதை ஏன் நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றீர்கள்?

அடிப்படையில் இந்த வெங்காயத் தமிழன்..

நீங்கள் அப்படியென்றால் எல்லோரையும் அப்படியா நினைப்பது? நீங்களே உங்களை கிணற்றுத்தவளை என்று சொல்லிக்கொள்வதா? :)

Edited by snegi

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எந்த குப்பேல, மன்னிக்கணும் எந்த நாட்டில வசிக்கிறீங்களோ தெரியாது... ஆனால் நான் வசிக்கும் நாட்டில் வெளிவரும் பத்திரிகைகள் அனைத்தும் நம்மை நோர்வேஜிய தமிழர் என்றும் -Norske Tamiler - பாகிஸ்தான் நாட்டுக்காரனை நோர்வேஜிய பாகிஸ்தானர் Norske Pakistaner என்றும் எழுதுகின்றன. இது நாமாக நமக்குவைத்த பெயரல்ல இந்த சமுதாயத்தாலே வைக்கப்பட்ப பெயர்கள். உதாரணமாக நோர்வே நாட்டு தமிழன் வெளிநாட்டில் காணாமல் போனால் இந்த நாட்டு பத்திரிகைகள் நோர்வேஜிய தமிழனை காணவில்லை என்றே எழுதுகின்றன. அதாவது இவர் ஒரு தமிழர், அத்துடன் நோர்வேஜிய பிரஜையுமாவர் என்பதை ஒரே சொல்லில் குறிப்பிடுகின்றன. இதை ஏன் நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றீர்கள்?

நீங்கள் அப்படியென்றால் எல்லோரையும் அப்படியா நினைப்பது? நீங்களே உங்களை கிணற்றுத்தவளை என்று சொல்லிக்கொள்வதா? :o

அமெரிக்காவில் வாழும் ஆங்கிலேயர்கள்.. அமெரிக்க ஆங்கிலேயர் என்று சொல்வதில்லை. பிரிட்டன் வாழ் ஆங்கிலேயர்கள்.. பிரிட்டிஷ் ஆங்கிலேயர் என்பதில்லை.. கனடா வாழ் ஆங்கிலேயர்கள்.. கனடிய ஆங்கிலேயர்கள் என்று குறிப்பிடுவதில்லை.. அவுஸ்திரேலியா வாழ் ஆங்கிலேயர் தம்மை அவுஸ்திரேலியர் எங்கின்றனர்.. அப்படியே நியூசிலாந்துக் காரரும். காரணம் அவர்களுக்கு என்று ஒரு பூர்வீக தேசம் இருக்கிறது அல்லது இருப்பதாகக் காட்டக் கூடிய வரலாற்றை உருவாக்கி வைத்திருக்கின்றனர். அதனடிப்படையில் தங்கள் இனத்துவ அடையாளத்தை அமெரிக்கர்.. கனடியர்.. பிரிட்டிஷ் என்று இட்டு வருகின்றனர்.

ஆனால் இனம் பற்றிய சிந்தனையற்ற தமிழர்கள் போகுமிடத்தில்.. தங்களுக்கு வாழ ஒரு சந்து கிடைத்துவிட்டால் போதும் என்ற அடிப்படையில் அந்தந்த இடத்தின் நாமத்தை அடைமொழியாக்கிக் கொள்கின்றனர். இதற்குப் பின்னால் என்ன அடிப்படை இருக்கிறது. வெறும் பிரஜா உரிமை எனும் சலுகையை விட இவர்களிடம் வேறேதும் இல்லை. :)

அடிப்படையில் எல்லோருமே ஒரே பூர்வீகத்தை உடைய தமிழர்கள். நோர்வே நாட்டில் நொஸ்க் தமிழர்கள் எப்படி உருவானார்கள். நோர்வே நாட்டுப் பூர்வீக இன மக்களோடு இனக்கலப்புச் செய்தா..???! கனடாத் தமிழர்கள் எப்படி உருவானார்கள்.. கனடியப் பூர்வீக மக்களோடு இனக்கலப்புச் செய்தா..??! இல்லை. கனடா நாட்டு வதிவுரிமை.. நோர்வே நாட்டு வதிவுரிமை அவர்களின் மொத்த அடையாளத்தையே மாற்றுகிறது எனும் போது.. இவர்களின் பூர்வீக இனத்துவ அடையாளம் இல்லாமல் போகிறது..! இதனால் தான் நான் இந்த அடையாளமிடுதல்களின் அர்த்தமற்ற தன்மையை உணர்கிறேன்.

அந்தந்த நாட்டு ஊடகங்களைப் பொறுத்தவரை.. அவற்றுக்கு தமிழர்களின் இன அடையாளமும் தேசமும் பற்றிய அக்கறையோடு பெயரிடுதலைச் செய்வதில்லை. தமக்கு என்ன வசதி.. அல்லது பெருமை.. அல்லது தங்களின் தேசங்களுக்கு என்ன தேவையோ அவற்றின் அடிப்படையில் அவை செயற்படுகின்றன.

தமிழர்கள்.. உலகெங்கும் வாழ்கின்றனர்.. ஆனால் அவர்களின் பூர்வீகம்.. மொழி உருவாக்கம்.. எங்கிருந்து வந்தது.. என்பதற்கு அடையாளம் இப்போ இவர்களிடம் இல்லை. அது போதாதென்று இப்போ.. நாடுகளின் பெயரால் தமிழர்கள் என்று அடையாளமிட்டுக் கொள்கின்றனர். இவற்றுக்கு எந்த உருப்படியான வரலாற்று அடிப்படையும் இல்லை.

இதே நோர்வே தமிழர்கள் இன்னும் 200 ஆண்டுகளுக்குப் பின்னர்.. நோர்வேயியன் ஆகி இருப்பார்கள்.. தமிழர்கள் என்ற மொத்த அடையாளமும் அங்கு இழக்கப்பட்டு விடும். இது கூட ஒரு வகையில் இன அழிப்புத்தான். குறித்த இனத்தின் பாரம்பரிய நிலம் விழுங்கப்படும் அதேவேளை குறித்த இனத்தின் இன அடையாளங்கள் இன்னொரு இன அலகுக்குள் செருகப்பட்டு அந்த இனம் அதன் தூய்மையை இழக்கச் செய்யப்படுகிறது. இதன் மூலம் அது அதன் இன அழிப்பைத் தானே செய்து கொள்ளத் தூண்டப்படுகிறது.

இன்று மலையத் தமிழர்கள் சிறீலங்காவில் எந்த இன அடிப்படையும் இன்றி.. கூலித் தமிழர்களாக வாழ்கின்றனரோ அந்த நிலை உலகெங்கும் தமிழர்களுக்கு உருவாகும். அதில் பல குழுக்கள் அந்தந்த நாட்டு அடையாளங்களோடு கலந்து காலப்போக்கில் தமிழர் என்ற அந்தப் பின்னடையையும் தொலைத்துவிட்டு நிற்கும் என்பதே யதார்த்தம்.

இதனால் தான் என்னவோ உலகம், தமிழர்களுக்கு நாடு தேவை என்ற நிலையை அங்கீகரிக்காமல்.. தமிழர்களை அகதிகளாக உள்வாங்கிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் இவர்கள் தாங்களாகவே தங்கள் இன அடையாளத்தைக் காலப்போக்கில் இழந்துவிடுவர். தமக்கென்று நாடோ மொழியோ இவர்களுக்கு அவசியமாக இருக்க வேண்டி வராது அவ்வாறான ஒரு நிலையில் தமிழர்களின் இன இருப்பு உலகில் காலப்போக்கில் அழிந்துவிடும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாகக் கூட இருக்கலாம்.

இதையெல்லாம் குப்பை கொட்ட வந்தவை.. தீர்மானிக்கிற அளவில இல்ல. அவையைப் பொறுத்தவரை ஊரில இல்லாத பொருளாதாரம் கனடாவில நோர்வேயில கிடைக்குது. அந்த வகையில கனடிய தமிழர் என்பது அவைக்குப் பெருமை.. நோர்வே தமிழர் என்பது பெருமை... சிங்கப்பூர் தமிழர் என்பது பெருமை.. மலேசியத் தமிழர் என்பது பெருமை. எங்கேயன் அடிவாங்கும் போதுதான் அட எங்கட பூர்வீகம் எங்க என்று தேடுவினம். அண்மையில் மலேசியத் தமிழர்கள் தேடிக் கொண்டது போல..!

ஆனால் சிங்களவன்.. சிறீலங்காவில் தனது நிலையை இனத்துவத்தை நிச்சயம் பாதுகாத்துக் கொள்வான் என்பது மட்டும் திடம்..! :)

Edited by nedukkalapoovan

பொதுவாக ஒரு இனக்குழுமத்தை அவர்களின் பூர்வீக நாட்டை குறிப்பிட்டுதான் அழைப்பது வழக்கம். சிங்கப்பூர், மற்றும் மலேசியாவில் தமிழர்கள் இருந்தாலும் அவர்கள் இந்தியர்கள், சிலோனிஸ்ட் (இலங்கையர்) என்று தான் குறிப்பிடப்படுகின்றனர். மொழி வாரியாக குறிப்பிடப்படுவது குறைவு. ஈழம் வெல்லப்படாதவரை நாம் இலங்கையர் என்ற அடையாளம் தான் கிடைக்கப்போகின்றது. அதனால் தான் என்னவோ இவர்கள் தமிழர்கள் எண்டு குறிப்பிடுகிறார்களோ..?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிழை பிடிக்க வேண்டுமெனில் யாரும் பிடிக்க முடியும். இந்த அதி புத்தி சாலிகளும், இனப்பற்றாளர்களும், நாட்டுப்பற்றாளர்களும். கனேடிய நோர்வேயிய தமிழர்களை பற்றி பேசுவதை விடுத்து தேச விடுதலைக்கும், மக்களுக்கும் எதாவது உருப்படியாக செய்தல் நன்மை பயக்கும்.

தமிழீழம் கிடைக்கும் வரை தமிழர்கள் தமிழால் மட்டுமே அடையாளப்படுத்தப்படுவார்கள். அதை விடுத்து இலைங்கையன் அல்லது சிறிலங்கன் தமிழ்ஸ் என்று சொபல்வதில் பெருமையடிக்கலாம் என்றால் அது அவரவர் விருப்பம்.

யாரினது விருப்பங்களையும் யாரிடமும் திணப்பதிற்க்கு யாருக்கும் உரிமையில்லை. அதே நேரம் அவரவர் கருத்துக்கயை வெளியிடுதையும் நாம் தவிர்க்க தடுக்க முடியாது.

இவ்விடயங்களை பாரிய விடயமாக்கி அதில் மகிழ்வடைய நினைப்பது முட்டாள்த்தனம் அது மட்டுமன்றி நேர விரையும் அதை எழுதுபவர்களும், பதிலளிப்பவர்களும் புரிதல் நன்று.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் கிடைக்கும் வரை தமிழர்கள் தமிழால் மட்டுமே அடையாளப்படுத்தப்படுவார்கள். அதை விடுத்து இலைங்கையன் அல்லது சிறிலங்கன் தமிழ்ஸ் என்று சொபல்வதில் பெருமையடிக்கலாம் என்றால் அது அவரவர் விருப்பம்.

ஏன் எமக்குத்தான் ஈழத்தமிழன் என்ற பூர்வீக வரலாறு சார்ந்த பெயரிடல் இருக்கிறதே. அதைப் பாவிப்பதில் என்ன வெட்கம்.

அதுசரி.. நாங்கள் வெள்ளைக்காரனுக்கு சம்மந்தியாகிட்டமெல்லோ.. ஈழம் என்று எங்கட பூர்வீகத்தைச் சொல்லிச் சொல்லுறது நாகரியமா இருக்காது.. காட்டுமிராண்டித் தனமா இருக்கும் என்றும் நினைக்கிறமாக்கும் ...! :(:)

ஊரில ஆங்கிலம் படிக்கும் போது அறுத்துறுத்து உச்சரிக்க கற்றுக் கொள்வதில் கவனமெடுக்கும் நாம்.. புகலிடத்தில் தமிழ் கற்பிக்கும் போது பிள்ளை கொன்னைத் தமிழில பேசுறதையே ஊக்குவிக்கிறம். ஏனென்றால் அதுதான்... எங்கட பிள்ளை தமிழ் தெரியாமல் இருந்து தமிழ் படிக்குது என்று காட்ட வசதியா இருக்கும்... பெருமை பேச வசதி அளிக்கும் என்று நினைக்கிற ஆக்கள்.... உதுகளைப் பற்றி சிந்திக்க மாட்டம்..! :o

நான் நாடுகள் ரீதியாக சொல்வதெனில்.. குறித்த நாடு வாழ் ஈழத்தமிழர்கள் எங்கிறேன்.. அல்லது இந்தியத் தமிழர்கள் எங்கிறேன்.. (இரண்டும் தமிழர்களின் பூர்வீக நிலங்களாக இருந்தமைக்கான வரலாறு உண்டு). உலகெங்கும் உள்ள தமிழர்கள் உலகத் தமிழர்கள் என்று ஒரு வகைக்குள் அடக்கச் சொல்கிறேன்.. அவ்வளவும் தான். இதைவிடத் திருத்தமாக தமிழர்களின் வரலாறு சார்ந்து அவர்களின் இனத்துவம் குலையாமல் உச்சரிக்க முடியும்.. என்றால்.. அது கூடிய வகைக்கு நன்மையாக இருக்கும். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முயலுக்கு மூன்றே மூன்று கால் தான் என்று சொல்பவர்களிடம் எதை சொல்லி என்ன...!

மொழியால் அடையாளப்படுத்தப்படுவது ஒன்றும் குறைவில்லையே? நீங்கள் சொல்லும் ஈழத்தமிழன் என்பதும் தமிழ் என்ற மொழியை அடிப்படையாக கொண்டே அதன் பூர்வீக வரலாறுகளை நாங்கள் மீளாய்வு செய்கின்றோம் . மாறாக ஈழத்தவன் என்று சொல்லலாம் என்று உங்களால் சொல்ல முடியாதல்லவா? அதிகமாக கனடாவை எடுத்துக்கொண்டால் தேசியத்தை அடிப்படையாக கொண்டே இனக்குழுமங்கள் அழைக்கப்படுகின்றன. ஆனால் தமிழர்கள் மட்டுமே மொழியால் அடையாளப்படுத்தப்படுகின்றனர

  • கருத்துக்கள உறவுகள்

முயலுக்கு மூன்றே மூன்று கால் தான் என்று சொல்பவர்களிடம் எதை சொல்லி என்ன...!

மொழியால் அடையாளப்படுத்தப்படுவது ஒன்றும் குறைவில்லையே? நீங்கள் சொல்லும் ஈழத்தமிழன் என்பதும் தமிழ் என்ற மொழியை அடிப்படையாக கொண்டே அதன் பூர்வீக வரலாறுகளை நாங்கள் மீளாய்வு செய்கின்றோம் . மாறாக ஈழத்தவன் என்று சொல்லலாம் என்று உங்களால் சொல்ல முடியாதல்லவா? அதிகமாக கனடாவை எடுத்துக்கொண்டால் தேசியத்தை அடிப்படையாக கொண்டே இனக்குழுமங்கள் அழைக்கப்படுகின்றன. ஆனால் தமிழர்கள் மட்டுமே மொழியால் அடையாளப்படுத்தப்படுகின்றனர

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொதுவாக ஒரு இனக்குழுமத்தை அவர்களின் பூர்வீக நாட்டை குறிப்பிட்டுதான் அழைப்பது வழக்கம். சிங்கப்பூர், மற்றும் மலேசியாவில் தமிழர்கள் இருந்தாலும் அவர்கள் இந்தியர்கள், சிலோனிஸ்ட் (இலங்கையர்) என்று தான் குறிப்பிடப்படுகின்றனர். மொழி வாரியாக குறிப்பிடப்படுவது குறைவு. ஈழம் வெல்லப்படாதவரை நாம் இலங்கையர் என்ற அடையாளம் தான் கிடைக்கப்போகின்றது. அதனால் தான் என்னவோ இவர்கள் தமிழர்கள் எண்டு குறிப்பிடுகிறார்களோ..?

இலங்கையர் என்று அழைக்கப்படுவதை விட கனேடியத்தமிழன் என்றோ நோர்வேஜியத்தமிழன் என்றோ அழைக்கப்படுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் நான் தமிழன்.

என்ன குறுக்ஸ்.. என்னசொல்றீங்க? (சுருக்கமா 4வரீல சொல்லுங்க.)

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையர் என்று அழைக்கப்படுவதை விட கனேடியத்தமிழன் என்றோ நோர்வேஜியத்தமிழன் என்றோ அழைக்கப்படுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் நான் தமிழன்.

என்ன குறுக்ஸ்.. என்னசொல்றீங்க? (சுருக்கமா 4வரீல சொல்லுங்க.)

நான் எங்கிருப்பினும் எனது பூர்வீகமான ஈழத்தை (அது தமிழீழத்தை.. தமிழரின் பாரம்பரிய நில இருப்பை.. குறிக்கிறது.. சிறீலங்காவையல்ல) குறிப்பிட்டே என்னை வரலாற்றடிப்படையில் இனத்துவ அடிப்படையில் இனங்காட்டிக் கொள்ள விரும்புகிறேன்.

நான் பூர்வீக அடிப்படையில் வரலாற்றடிப்படையில்.. தமிழன் என்றால்.. ஈழத்தமிழன்.. அதாவது தமிழீழத் தமிழன். அதன் பின்னர் தான் இடையில் வந்தவை. நான் எனது வரலாற்றடிப்படையில் அமைந்த பூர்வீக அடையாளத்தை மறைப்பின் எனது எதிர்கால சந்ததியும் மிச்சமுள்ள அடையாளங்களையும் இழக்கும் போது.. தமிழன் என்ற நிலையே இருக்காது என்ற ஆபத்தை உணர்கிறேன்..! :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
கனடாவை எடுத்துக்கொண்டால் தேசியத்தை அடிப்படையாக கொண்டே இனக்குழுமங்கள் அழைக்கப்படுகின்றன. ஆனால் தமிழர்கள் மட்டுமே மொழியால் அடையாளப்படுத்தப்படுகின்றனர
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் எங்கிருப்பினும் எனது பூர்வீகமான ஈழத்தை (அது தமிழீழத்தை.. தமிழரின் பாரம்பரிய நில இருப்பை.. குறிக்கிறது.. சிறீலங்காவையல்ல) குறிப்பிட்டே என்னை வரலாற்றடிப்படையில் இனத்துவ அடிப்படையில் இனங்காட்டிக் கொள்ள விரும்புகிறேன்.

நான் பூர்வீக அடிப்படையில் வரலாற்றடிப்படையில்.. தமிழன் என்றால்.. ஈழத்தமிழன்.. அதாவது தமிழீழத் தமிழன். அதன் பின்னர் தான் இடையில் வந்தவை. நான் எனது வரலாற்றடிப்படையில் அமைந்த பூர்வீக அடையாளத்தை மறைப்பின் எனது எதிர்கால சந்ததியும் மிச்சமுள்ள அடையாளங்களையும் இழக்கும் போது.. தமிழன் என்ற நிலையே இருக்காது என்ற ஆபத்தை உணர்கிறேன்..! :)

நாலு வரீல சொன்னதுக்கு எந் மனமார்ந்த நன்றிகள். :wub:

நாங்கள் கூட இல்லையென்று சொல்லவில்லையே.. நாங்கள் முதலில் ஈழத்தமிழன். அதன் பிற்பாடுதான் மற்றத்தமிழன் எல்லாம். நாங்கள் எழுதும் முறைதான் உங்களுக்கு புரியவில்லையோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நாலு வரீல சொன்னதுக்கு எந் மனமார்ந்த நன்றிகள். :wub:

நாங்கள் கூட இல்லையென்று சொல்லவில்லையே.. நாங்கள் முதலில் ஈழத்தமிழன். அதன் பிற்பாடுதான் மற்றத்தமிழன் எல்லாம். நாங்கள் எழுதும் முறைதான் உங்களுக்கு புரியவில்லையோ தெரியாது.

நான் நினைக்கிறேன்.. நீங்கள் உங்களை நோர்வே தமிழன் என்று சொல்வதையே ஈழத்தமிழன் என்பதை விட அதிகம் விரும்புகிறீர்கள் என்று. அது இன்னும் ஓரிரு தலைமுறைக்குத்தான். அதன் பின்னர் அந்த பின்னடை "தமிழன்" முன்னடை "ஈழம்" கழன்றது போல கழன்று விடும். ஆனால்.. ஊருக்கு... உலகத்துக்குச் சொல்லிக் கொள்வது.. நாம் ஈழத்தமிழர்.. ஈழம் கேட்கிறம் என்று. இதை உலகம் இப்ப நம்பிறதா இல்லை... தமிழர்களின் இரண்டும் கெட்டான் மனநிலையை உலகம் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறது. இந்த நிலையை மாற்றி... நீங்கள் உங்களை நோர்வே வாழ் ஈழத்தமிழன் அல்லது "நோர்வே ஈழத்தமிழன்.." " கனடிய ஈழத்தமிழன்.." என்று இனங்காட்டவே நாம் இங்கு கத்திச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதைக் கூடப் புரிய மறுக்கிறது உங்களது நோர்வே விசுவாசம். ஈழத்தில் இருந்த போது அதன் மீது இப்படி ஒரு விசுவாசத்தை.. நீங்கள் காட்டி இருப்பின்... உலகம்... இப்போ ஈழத்தைப் பெற உதவி இருக்கும். அதுதான் முடியல்ல.. கடல் கடந்தாவது ஈழத்தை குறியிடுங்கள் என்றால்.. அதுகூட அநாகரிகமாகத் தெரிகிறது... இப்படியான ஒரு நிலையில்.. ஈழம் ஈழம் என்று கூட்டத்தோடு கோவித்தா.. போட்டுக்கிறம்..! :)

Edited by nedukkalapoovan

நாம் இங்கு கத்திச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
:D:wub:

இவர் சொல்வது சரிதான்

கனடாவில் இருக்கிற தமிழ்காங்கிறசின் நிர்வாகத்தை இவரிடம் கொடுத்து விட்டு அவர்களை விலகச்சொல்வோம்

கனடாவில் இனி ஒருவரும் வைத்தியாசாலைக்கு செல்லவேண்டாம் , இரத்தம் தேவை எனில் கனடியத்தமிழருக்கு என்று இரத்தம் வன்னியிலிருந்து இவர் அனுப்பி வைப்பார்

உங்களது பிரஜா உரிமையை இரத்து செய்து விட்டு எல்லோரும் அகதிமுகாமில் போய் இருப்பம்

அதைத் தான் இவர் ஆவலோடு எதிர்பார்க்கிறார் ????? ஏனெனில் இவருக்கு இல்லையே ????? :wub:

இவர் களமுனையிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறார் போலும் ??????? :)

Edited by tamilsvoice

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக நீங்கள் இனக்குழுமத்தைச் சார்ந்தவர்கள் அல்ல மொழிக்குழுமத்தவர்கள் என்று கனடாவில் இனங்காட்ட விரும்புகிறீர்கள். அப்போ எதனடிப்படையில் தமிழீழம் என்று கனடாவில் முழங்கிறீர்கள். இதனால் தான் என்னவோ.. கனடிய அரசு உங்களை ஒரு பொருட்டாகவும் மதிக்குதில்ல..! :)

கனடா நேசனல் போஸ்ட் கூட தமிழ் கனடியர் - கனடியத் தமிழர் என்று குழப்பகரமான இரு சொல்லாடலைச் செய்யும் அளவுக்கு உங்கட நிலை கனடாவில்... புலம்பெயர் நாடுகளில்.

நீங்களே ஈழம் என்ற பூர்வீக வாழ்நிலத்தின் அடிப்படையில் உங்களை இனமாகக் கருத மறுக்கும் போது.. கனடா அரசு எப்படி ஈழக்கோரிக்கையை ஏற்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்..??!

நிறைய முரண்பாடுகளோடுதான் கனடிய விசுவாசத்தை வெளியிடுகிறீர்கள். தமிழர்கள் எப்பவும் கூலி போடுற எஜமானர்களுக்கு விசுவாசிகள் தான். அதனால் தான் வரலாற்றில் தங்கள் அடையாளங்கள் தொலைந்து போவதை அறியாமலே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்..! :wub:

தமிழ் இனம் என்பது தமிழ் என்ற ஒரு மொழிக்குழுமத்திலிருந்தே உருவானது. ஒவ்வொரு இனமும் தத்தமது மொழியை அடிப்படையாக கொண்டு தான் உருவாக்கப்பட்டுள்ளது. அதையே நாமும் சொன்னோம். கனேடியர்களே நைசினல் போஸ்ட் பற்றி அலட்டிக்கொள்ளாத போது நீங்கள் ரொம்ப அக்கறையாக அதைப்படிப்பது வேடிக்கையாகவும் சிரிப்பாகவும் இருக்கின்றது.

அதே நேரம் தமிழைப் பேசுகின்ற தமிழர்கள் என்ற இனக்குழுமத்தை சார்ந்த நாம் எமக்கான தாயகம் அமைய வேண்டும் அதை நாம் வாழும் நாடு அங்கீகாரிக்க வேண்டும் என்று கோருவதில் அவர்களே குறை கண்டு பிடிக்காத நிலையில் ஒரு தமிழராய் இருந்து கொண்டு குதர்க்கமாக எழுதுவதன் அர்த்தம் தான் என்னவோ?

தமிழன் மட்டுமல்ல ஏன் நான் மட்டுமல்ல நீங்களும் கூலிக்காக தான் வேலை...! அது படித்து விட்டு கதிரையில் இருந்தால் என்ன.. படிக்காமல் கதிரை துடைத்தால் என்ன பணி புரியுமிடத்தே விசுவாசம் ரொம்பவே அவசியம் இல்லாட்டி வேலை காலி

எங்கள் அடையாளம் தொலைகின்றதா இல்லையா என்று கனாடவுக்கு வந்து பார்த்து விட்டு சொல்லுங்கள். அதை விட நீங்கள் வந்தாலும் நன்மை சொல்ல போவதில்லை ஏனெனில் உண்மையான விமர்சனாக உங்களை நீங்கள் உருவகிக்க முனைத்தரலும் உண்மையில் நீங்கள் ஒரு தன்னிலை வாதி... உங்கள் புள்ளியிலிருந்தே எல்லா கோடுகளும் வரையப்பட வேண்டும் என்றால் மன்னிக்க நாம் அந்நதளவுக்கு முட்டாள்கள் அல்ல!

Edited by Paravaikal

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் எங்கிருப்பினும் எனது பூர்வீகமான ஈழத்தை (அது தமிழீழத்தை.. தமிழரின் பாரம்பரிய நில இருப்பை.. குறிக்கிறது.. சிறீலங்காவையல்ல) குறிப்பிட்டே என்னை வரலாற்றடிப்படையில் இனத்துவ அடிப்படையில் இனங்காட்டிக் கொள்ள விரும்புகிறேன்.

நான் பூர்வீக அடிப்படையில் வரலாற்றடிப்படையில்.. தமிழன் என்றால்.. ஈழத்தமிழன்.. அதாவது தமிழீழத் தமிழன். அதன் பின்னர் தான் இடையில் வந்தவை. நான் எனது வரலாற்றடிப்படையில் அமைந்த பூர்வீக அடையாளத்தை மறைப்பின் எனது எதிர்கால சந்ததியும் மிச்சமுள்ள அடையாளங்களையும் இழக்கும் போது.. தமிழன் என்ற நிலையே இருக்காது என்ற ஆபத்தை உணர்கிறேன்..! :)

தமிழன் என்ற பூர்வீகம், ஈழம் + தமிழன் என்ற பூர்வீகம் எஙங்கே இருந்து முளை விட்டது என்பதை பற்றி சிந்திக்க உங்களால் முடிவதில்லை. தமிழன், ஈழத்தமிழன் எல்லாமே தமிழ் என்ற மொழியிலிருந்தே ஆரம்பிக்கின்றது. தமிழ் இன்றி ஈழத்தமிழனுமில்லை தமிழனுமில்லை அதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அறிவுக்கூர்மையானவர்களை இன்று தான் காண்கின்றேன்.

பூர்வீகம், புண்ணியம் என்று ஏதேதோ சொல்லி பம்மாத்து விட்டு காதில் பூச்சுத்திறதுக்கு காலம் மலையேறிப் போச்சு இப்ப நீங்கள் பூர்வீகம் பற்றி பேசும் முதல் ஏதுக்காக விமானமேறி வந்து பூர்வீகம் பற்றி பேசுறீங்கள் என்று கொஞ்சம் யோசியுங்க. உங்கட பூர்வீகம், மண்ணாங்கட்டி எல்லாம் புளுகு மூட்டை என்றது தெரியுது.

எப்படியாயினும் ஏதோ ஒரு உயிருக்கு பயன்பட்டால் சரி தானே

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் அடையாளம் தொலைகின்றதா இல்லையா என்று கனாடவுக்கு வந்து பார்த்து விட்டு சொல்லுங்கள். அதை விட நீங்கள் வந்தாலும் நன்மை சொல்ல போவதில்லை ஏனெனில் உண்மையான விமர்சனாக உங்களை நீங்கள் உருவகிக்க முனைத்தரலும் உண்மையில் நீங்கள் ஒரு தன்னிலை வாதி... உங்கள் புள்ளியிலிருந்தே எல்லா கோடுகளும் வரையப்பட வேண்டும் என்றால் மன்னிக்க நாம் அந்நதளவுக்கு முட்டாள்கள் அல்ல!

கெடுகுடி சொற்கேளாது என்பார்கள். அடுத்தவன் சொன்னாலும் புரியாது.. தாங்களாகவும் சிந்திக்காதுகள்..! கடந்து வந்த பாதையில் தமிழன் வரலாற்றைத் தொலைத்து நிற்பதை தொடராமல் இருக்கவும் மாட்டார்கள் போல..!

இனம் என்பதை மொழிவாரியா மட்டும் உங்கட கனடா பிரஜா உரிமைக்கு பாதகமில்லாமல் வகுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.. பிரமாதம். உதைக் கொண்டு ஐ நா சபையின் போய் நில்லுங்கள்.. தமிழீழம் கிடைக்கும்..! :wub::)

Edited by nedukkalapoovan

உவையிட நன்றிக் கடனைப் பார்க்க புல்லரிக்குது. :wub:

இதே ஆக்கள் ஊரில பொம்பர் அடிச்சு.. சனத்துக்கு.. போராளிகளுக்கு இரத்தம் வேணும் எண்ட ஓடிப் பதுங்கினவை பாருங்கோ.. இப்ப கனடாவுக்கு நன்றி செய்யினமாம். ஏதோ கனடாவில போயாவது உதை தெரிஞ்சு கொண்டிச்சினமே என்று ஆறுதல் பட்டுக்க வேண்டியதுதான்.

(எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு ஆனையிறவுச் சண்டைக்க இரத்தம் கேட்டு ஒலி பெருக்கில கத்திட்டே போக.. இரண்டு நாள் free pass சாம் என்ற உடன மூட்டை மூட்டையாக் கட்டிக் கொண்டு முத்திரச் சந்தியில கூடிக் கொழும்புக்கு ஓட நின்ற ஆக்களை என்னால இப்பவும் கண் முன்ன காண முடியுது... அதில கன பேர் உங்க கனடாவில தான் பாருங்கோ அகதி. ஊரில அப்படி அகதி என்றதுக்கு உவை பல பேரட்ட எந்த தன்மையும் அப்ப இருக்கல்ல...!

அப்ப எனக்குள்ள பிறந்த வேதனை.. இன்றைக்கு ஓடி வந்தவையின்ர காலடியில நின்று கொண்டு அவையட்ட கேள்வி கேட்டு வைக்க முடியுது. ஒன்று பாருங்கோ.. நீங்கள் கேட்பியள் "நீர் மட்டும் திறமோ என்று" சுய புளுகு என்று நீங்கள் கருதலாம்.. ஆனால் உண்மையைச் சொல்லனும் என்றால்.. நான் பாஸ் எடுத்துத்தான் வந்த நான்.. அனுமதியோட தான் வந்தனான்.. ஓடி வந்திட்டு.. கொழும்பில நின்று "புலியைப் பற்றி நச்சரிக்கல்ல அல்லது போட்டுக்கொடுக்கல்ல" நான் வந்திருக்கும் நாட்டுக்கும் எனது தாய் நாட்டைப் பகடைக் காயாக்கி அல்லது அதற்கு களங்கம் கற்பித்து வரேல்ல..! என்ர தனிப்பட்ட திறமை.. முயற்சிகளால வந்தனான். :lol: )

ஒருவேளை கனடாவும் தமிழகம் போல அகதி முகாமுக்க வைச்சிருந்து இவைட "அகதி" என்ற தோற்றத்துக்கான உண்மை முகத்தைக் காட்டி இருக்கும் என்றால் உந்த நன்றிக் கடன் வெளிப்பட்டிருக்குமோ..??!

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமோ.. கருடன் சொன்னது..! :(

உங்களைப்பத்தி நீங்க சொல்லப்படாது.வேற ஆக்கள் சொல்ல வேணும் அண்ணா? :( . பாஸ் எடுத்து கொழும்புக்குத்தானே வந்த நீங்க? வெளிநாடு போறண்டா பாஸ் எடுத்து வந்தனீங்க? இல்லதானே? நீங்க அடுத்தவங்களை பற்றி சொல்றீங்களே? நீங்க இரத்தம் கொடுத்த நீங்களா? உங்கட தனிப்பட்ட திறனை மெச்சுறம் :lol: ஏனென்றா உங்கட தனிப்பட்ட திறனா அங்கயிருந்து குதிச்சு உங்க வந்து விழுந்தீங்கலாம் மெய்யே? :lol: மற்றவங்களையெல்லாம் கமக்கட்டுக்குள்ள வச்சி தூக்கிக் கொண்டு வந்து போட்டவங்க. அப்படி இல்லையென்றா யாரும் இங்க வந்திருக்க மாட்டினம். வீசா இல்லாம, பாஸ்போட் இல்லாம, யாருடையவும் உதவி இல்லாம உங்களப் போல வந்திருக்க முடியாது பாருங்கோ? :D:lol::D. அதெல்லாம் சுய முயற்சி பாருங்கோ :) உண்மைதான்! உங்கள போல மற்றவங்களால முடியாதுதான்?

Edited by Thalaivan

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப்பத்தி நீங்க சொல்லப்படாது.வேற ஆக்கள் சொல்ல வேணும் அண்ணா? :lol: . பாஸ் எடுத்து கொழும்புக்குத்தானே வந்த நீங்க? வெளிநாடு போறண்டா பாஸ் எடுத்து வந்தனீங்க? இல்லதானே? நீங்க அடுத்தவங்களை பற்றி சொல்றீங்களே? நீங்க இரத்தம் கொடுத்த நீங்களா? உங்கட தனிப்பட்ட திறனை மெச்சுறம் :wub: ஏனென்றா உங்கட தனிப்பட்ட திறனா அங்கயிருந்து குதிச்சு உங்க வந்து விழுந்தீங்கலாம் மெய்யே? :lol: மற்றவங்களையெல்லாம் கமக்கட்டுக்குள்ள வச்சி தூக்கிக் கொண்டு வந்து போட்டவங்க. அப்படி இல்லையென்றா யாரும் இங்க வந்திருக்க மாட்டினம். வீசா இல்லாம, பாஸ்போட் இல்லாம, யாருடையவும் உதவி இல்லாம உங்களப் போல வந்திருக்க முடியாது பாருங்கோ? :(:lol::(. அதெல்லாம் சுய முயற்சி பாருங்கோ :) உண்மைதான்! உங்கள போல மற்றவங்களால முடியாதுதான்?

எப்படி வந்தியளோ தெரியாது.. மனிதக் கடத்தல் வழி மூலம் வந்து.... அந்தப் பழியும் ஈழத்தில் உள்ளவங்க மீதுதான் சுமையா இறங்கி இருக்குது..! எல்லாத்துக்குமா என்ன பரிகாரம் பண்ணப் போறியள்.. கோவில் கட்டி.. கும்பாபிசேகம் செய்யுறது தானோ..??! ஈழத்தில பிரச்சனை என்ற ஒன்று இல்லையென்றால்.. எப்படி.. கனடியப் பூர்வீகம்... நாங்கள்.. எங்களுக்கே சூடி மகிழ்ந்திருக்க முடியும்..! ஆனால்.. ஈழத்தை உச்சரிக்கிறது.. அவமானம்..! :D:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::lol:

இவர் சொல்வது சரிதான்

கனடாவில் இருக்கிற தமிழ்காங்கிறசின் நிர்வாகத்தை இவரிடம் கொடுத்து விட்டு அவர்களை விலகச்சொல்வோம்

கனடாவில் இனி ஒருவரும் வைத்தியாசாலைக்கு செல்லவேண்டாம் , இரத்தம் தேவை எனில் கனடியத்தமிழருக்கு என்று இரத்தம் வன்னியிலிருந்து இவர் அனுப்பி வைப்பார்

உங்களது பிரஜா உரிமையை இரத்து செய்து விட்டு எல்லோரும் அகதிமுகாமில் போய் இருப்பம்

அதைத் தான் இவர் ஆவலோடு எதிர்பார்க்கிறார் ????? ஏனெனில் இவருக்கு இல்லையே ????? :)

இவர் களமுனையிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறார் போலும் ??????? :wub:

நாலுவார்த்தைதான் சும்மா நறுக்கெண்டு கிடக்கு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.