Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடிந்ததாகச் சொல்லப்படும் விடியாத கிழக்கில் மக்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கின் உதயம்.. ஒரு வருடப் பூர்த்தி....!

_44845231_building226.jpg

போர் செய்து போர் செய்து தமிழனின் உரிமைகளை தட்டிப்பறிக்கும் சிங்களம்.. நயவஞ்சகத் தமிழ் குழுக்களுடன் இணைந்து கண்டுவிட்ட கிழக்கு விடிவு.. சாதாரண மக்களுக்கு எந்த விடிவையும் தரவில்லை..!

சிறீலங்கா அரசாலும் அதனோடு இணைந்து இயங்கும் துணைப்படைக் கும்பல்களாலும் விடிந்து விட்டதாகச் சொல்லப்படும் கிழக்கில் விடியாத உணர்வைத் தாங்கும் கிழக்கு மக்கள். பிபிசியின் பார்வையில்..

எங்கும் இராணுவம் நிற்கிறது. சோதனைச் சாவடிகளில் சந்தேகத்தில் சோதனைகள் தொடர்கின்றன. மக்கள் எல்லோருமே புலி என்று சந்தேகிக்கப்படுகின்றனர்.. அச்ச சூழலிலேயே வாழ வேண்டி இருக்கிறது. இப்படிச் சொல்கிறார்கள் கிழக்கு மக்கள்.

"அவர்கள் ( ஆமி) எனது மகனைப் பிடித்துக் கொண்டு போனார்கள். எனது மகனை புலிப்படைப் பயிற்சி பெற்றிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் பிடித்து இப்போ 7 மாதமா சிறையில் அடைத்துள்ளார்கள்.. அவரை விடுவிக்க நான் செய்த முயற்சிகள் எல்லாம் தோற்று விட்டன.." என்று அழுகிறார் ஈச்சலம்பற்றைச் சேர்ந்த ஒரு அப்பா.

மக்கள் சந்தேகத்தின் பெயரில் இராணுவத்தின் இஸ்டத்துக்கு பிடித்துச் செல்லப்படுகின்றனர். இது இன்னும் தொடர்கதையாகவே இருக்கிறது...

உண்மையில் பயிற்சி பெற்றவர்கள் அவர்களுடன் (புலிகள்) வடக்கு நோக்கிப் போய்விட்டார்கள். ஆனால் இன்னும் இராணுவத்தின் சந்தேகம் மக்கள் மீது தொடரவே செய்கிறது.

கிழக்கில் இருந்து விடுதலைப்புலிகள் முற்றாக வெளியேறவில்லை. விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவும் இதர பிரிவுகளும் செயற்படுகின்றன. அதனால் தான் பாதுகாப்பைப் பலப்படுத்தி இருப்பதாக இராணுவ அதிகாரிகள் சொல்கின்றனர்.

_44640792_refugee_camp_226.jpg

கிழக்கில் போர் வெடித்து சுமார் 200,000 மக்கள் அகதிகளாகினர். அரசோ 110,000 மீளக் குடியேறி விட்டதாகவும் மிகுதி 12,000 காத்திருப்பதாகவும் சொல்கிறது. ஆனால் ஆயிரக் கணக்கான மக்களோ அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி இன்னும் அகதி முகாம்களிலேயே வாழ்கின்றனர். குடிதண்ணீர் கூட இல்லை. மசலச கூடம் கூட இல்லை.

_44845233_kavita226.jpg

எப்ப இடிஞ்சு கொட்டுன்னுமோ என்ற பயத்தில்.. இந்த வீட்டில் தான் வாழ்கிறேன்.. எங்கிறார் இந்த அம்மா

ஆனால் பிரித்து போன குழுவின் ஆயுததாரி முதலமைச்சர் பிள்ளையான் சொல்கிறார் வீடுகள் திருத்த அரசு காசு கொடுத்திருக்காம் என்று.

மீளக் குடியமர்ந்த இடங்களில் கூட மின்சாரம் இல்லை. உடைந்த பாடசாலைகள் மற்றும் கட்டடங்கள் திருத்தப்படவே இல்லை. இதுதான் அங்கு இப்போதைய நிலை.

குடியிருப்புத்தான் இப்படி என்றால்.. வாகரை போன்ற இடங்களில்.. தொழில் மீன் பிடித் தொழில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது.

கிழக்கில் மீண்டும் போர் வெடிக்கலாம் என்ற நிலை தொடர்வதால் பெருமளவு சர்வதேச உதவிகள் வந்தடைவதும் தடைப்பட்டுள்ளன.

இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது.. மக்களின் இதயங்களை மனங்களை வெல்ல அரசு இன்னும் நீண்ட பயணம் போக வேண்டி இருக்கிறது என்று சொல்கிறது பிபிசி.

---------------------

Sri Lanka's east in shadow of war

A year after troops overpowered Tamil Tiger (LTTE) rebels in Sri Lanka's eastern province and took control of the area, normality has yet to return.

The government called the victory the "dawn of the east" and held a nationwide celebration on 19 July 2007, days after the last rebel stronghold fell.

மூலம்: http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7514620.stm

Edited by nedukkalapoovan

இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது.. மக்களின் இதயங்களை மனங்களை வெல்ல அரசு இன்னும் நீண்ட பயணம் போக வேண்டி இருக்கிறது என்று சொல்கிறது பிபிசி

மக்களின் இதயத்தை வெண்றவர்கள் வேறு ஆக்கள் இருப்பதால், அரசாலோ இல்லை ஒட்டி இருப்பவர்களாலையோ அதை செய்ய முடியாதுதானே...

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் இதயத்தை வெண்றவர்கள் வேறு ஆக்கள் இருப்பதால், அரசாலோ இல்லை ஒட்டி இருப்பவர்களாலையோ அதை செய்ய முடியாதுதானே... :)

இந்த வசனம் ஒன்று போதும் தயா ! மக்களின் மனங்களை வென்றவர்கள் யார் என்று அந்த பி.பி.ஸி இற்குத் தெரிய நியாயமில்லை. அது இன்னும் அரசு செய்யும் யுத்தம் புலிகளிடமிருந்து மக்களை விடுவிக்கத்தான் என்று தான் நம்புவதோடு மற்றவர்களையும் நம்பவைக்கப் படாத பாடு படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.