Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வல்லமை தாராயோ..!!

Featured Replies

வல்லமை தாராயோ..!!

vallamaithaaraayostillsov8.jpg

எல்லாருக்கும் வண்ண தமிழ் வணக்(கம்)..இன்று இங்கே உங்கள் முன்னிலையில் நான் பேச எடுத்து கொண்ட விடயம் யாதேனில்..(சா..தமிழை வளர்க்க தானே சில பேர் இருக்கீனம் பிறகு நாம என்னதிற்கு) :D ..சரி..இனி நான் நேரடியாக விசயதிற்குள்ள இறங்கிறன்..

சில கிழமைக்கு முன்னம் நண்பரின்ட வீட்ட போன போது அவரின்ட தங்கச்சி படம் பார்த்து கொண்டிருந்தா..அதுவும் எங்கன்ட பார்த்தீபன் மாமாவின்ட படம்..உடன நான் கேட்டன் என்னடப்பா இப்ப பொண்ணுகளுக்கு பார்த்தீபன் மாமா மாதிரி ஆட்களையும் பிடிக்குமோ எண்டு..

அவா..சொன்னா சா..சா நன்ன படமா போகுது நீங்களும் கொண்டு போய் பாருங்கோ எண்டு..சரி எண்டு நானும் அவாவிட்ட அந்த கள்ள இறுவட்டை எடுத்து கொண்டு வந்துட்டன்..ஆனா எனக்கு இந்த பார்த்தீபன் மாமாவின்ட படத்தை பார்க்கிறது எண்டா பிடிக்காது...ஆனா அன்னைக்கு நேரம் இருந்தது வெளியாள குளிராகவும் இருந்தபடியா பார்போம் எண்டு பார்க்க தொடங்கினேன்.. :D

நடிப்பு -

பார்த்தீபன்

சாயாசிங்

கருணாஸ்

ஆனந்தராஜ்

இசை -

பரத்வாஜ்.

கொஞ்ச நேரம் படத்தை பார்த்து போட்டு நூப்போம் என்பது தான் நம்ம யோசனை ஆனா படம் பார்க்க தொடங்கினவுடன மிச்சத்தையும் பார்போம் என்கின்ற அளவிற்கு படத்தை நகர்த்தி இருக்கிறார்கள்..(என்னை பொறுத்தளவிள)..இப்படி கதைகள் ஒன்னும் புதுசில்ல தான் தமிழ் சினிமாவிற்கு ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக கதையை நகர்த்தி இருக்கிறார்கள்.. :lol:

அப்ப மேலோட்டமா நான் கதையை சொல்லுறன் கேளுங்கோ..அதாவது திருமணம் ஆன பின்பும் காதலை மறக்க முடியாமல் அந்த காதலின் கற்பனையில் வாழ துடிக்கும் அந்த பெண்ணின் ஏக்கம் தான் இந்த "வல்லமை தாரயோ" எண்ட படத்தின் முக்கிய கரு என கூறலாம்..

அதாவது இந்த கதாநாயகின் அத்தை மகன் தான் சேகர்..(இந்த சேகர் கதாபாத்திரத்தில் கெளரவ வேடத்தில் நடிக்கிறார் சிறிகாந்)..இவர்கள் தங்களை அறியாத பருவத்தில் இருந்தே ஒருவர் மீது ஒருவர் அளவுகடந்த அன்பை வைக்கிறார்கள் எண்டு சொல்லலாம்..

இந்த இளம் சிட்டுகள் வாலிபம் அடைக்கிறார்கள்..பட கதாநாயகி வேலையில் விடுமுறை எடுத்து கொண்டு தன் ஊருக்கு வருகிறா ஒரு காதுகுத்து சடங்கிற்கு..(அப்போதும் அவள் மனதில் அந்த சேகர் தான்)..ஆனால் காலங்களின் மாறுதலில் இரு வீட்டாருக்கும் குடும்ப பகை ஏற்பட்டு விடுகிறது..ஆனால் இவள் அவனை தான் இன்னும் காதலிக்கிறாள் அவனும் இவளை தான்.. :(

ஆனால் இவளின் தகப்பனார் ஊருக்கு வரும் இவளை வலுகட்டாயமாக திருமணத்தை செய்து வைக்கிறார்..வேற யாருக்குமல்ல பார்த்திபனுக்கு தான்..அதன் பின் தொடங்கிறது..வினை..இருவரும் அந்த ஊரை விட்டு சென்னைக்கு வருகிறார்கள்.ஆனால் இவளோ திருமணம் ஆன பின்னும் இன்னும் தன் காதலன் நினைவில் காலத்தை ஒட்ட நினைக்கிறாள்.

இவளுக்கு என்ன பிரச்சினை என்று தெரியாமல் தடுமாறுகிறார் பார்தீபன்..ஏன் எனில் இவளின் காதல் சமாச்சாரத்தை பற்றி அவருக்கு தெரியாது..ஆனால் இவளோ தன் கணவனை ஒரு மூன்றாம் தர மனிதராக பார்ப்பது விலகுவது என்று நன்றாகவே நடித்திருக்கா அவ் கதாநாயகி..ஆனால் அதுகெல்லாம் விட்டு கொடுத்து அவளின் மனம் நோகாமல் நடக்க வேண்டும் என்று நடக்கிறார் பார்தீபன்..(ரொம்ப ஓவர்).. :lol:

அதை விட சுவாரசியம் என்னவெண்டால் இருவரும் ஒரே வேலை ஸ்தலத்தில் வெவ்வேறு பிரிவுகளிள் வேலை பார்ப்ப்வர்கள்..இது அவளுக்கு தெரியாது ஏதோ பார்தீபன் தன் பின்னால் வருகிறார் என்று கதாநாயகி உணர்ச்சிவசபடுவது எல்லாம் சுவாரசியாமாக எடுத்திருக்கிறார்கள்..(படத்த

Edited by Jamuna

இந்தப்படம் நான் ப்போது வெளிவரும் என்று, காத்திருந்து, காத்திருந்து பார்த்த படம். இந்தப் படத்திற்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தையும், விமர்சனங்களையும் வாசித்து, எதிர்பார்ப்போடு இருந்தேன். ஆனால் நன்றாக ஏமாற்றிப் போட்டார்கள். ஏற்கனவே விமர்சனங்களைப் படித்தபடியால், படம் பார்த்தபோது, கதை ஓரளவு விளங்கியது. விமர்சனங்கள் இல்லாமல் பார்த்திருந்தால் கதை விளங்கியிருக்கவே மாட்டாது. கிராமமாக இருந்தாலும் அப்பாவை மகள் கட்டிப்பிடித்து விளையாடும் பாசங் கொண்ட மகளுக்கு ஒரு உயிரைப் பணயம் வைத்துத் திருமணம் நடத்துவது ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது. வேற்று மாப்பிள்ளையாக இருந்தால் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இது சின்னவயதிலை இருந்தே முடிவு செய்யப்பட்ட ஒன்று. சிறீக்காந்தை விட்டுவிட்டு, வேறு மாப்பிள்ளையை அவவின்ர அப்பா ஏன் திருமணம் செய்து வைக்கிறார் என்பதற்குச் சரியான (தெளிவான) காரணம் காட்டவில்லை. அதோடு சிறீக்காந் அவவை வீடியோ எடுப்பதற்காக ஸ்பெசலா கமராக்காரரை செட் பண்ணிவிடுகிறாராம், கிராமத்திலை இருக்கிற அம்மா மூலம் அவவுக்கு அவர் கிப்ட் கொடுத்துவிடுகிறாராம். இரண்டு பேரும் நகரங்களிலை (அவ சென்னையிலும், அவர் பெங்களூரிலும்) வேலை செய்பவர்கள். அவ செல்போன் வேறு வைத்திருக்கிறார். இவ்வளவு அக்கறையோடு செய்பவர், அவவிற்குச் சொல்லாமல், அவர் எங்கோ வேலை விசயமாக வெளியிலை போய்விட்டாராம். கிராமத்திலை இருக்கிற அம்மா மூலம்தான் அந்த விசயம் அவவிற்குத் தெரியவருகிறதாம். இவ போன் செய்கிற நேரமெல்லாம் அவர் பதில் பேசவில்லையாம். செல்போன் வைத்திருப்பவர்கள் ஒன்றிரண்டு நாட்களுக்கு வேண்டுமென்றால் ஓவ் செய்து வைத்திருப்பார்கள். இப்படியா நாட்கணக்கில் ஓவ் செய்து வைத்திருப்பார்கள்??? அப்பிடியே ஓவ் செய்திருந்தாலும் வொய்ஸ் மெசேஜ் கூடவா இல்லாமல் இருக்கும்???

அடுத்தது, பார்த்திபனும், அவவும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்திருக்கிறார்கள். ஆனால், ஒருவரையொருவர் தெரியாதாம். ஒரே கட்டிடத்தில், வேறு வேறு கம்பனிகளில் வேலை செய்தாலே, லிப்டில் செல்லும்போது, கன்டீன், பார்க்கிங் அல்லது கீழ்த்தளம் இப்பிடி எத்தனையோ இடங்களில் பார்க்கும் சந்தர்ப்பங்கள் இருக்கும். ஒருவரையொருவர் அறிமுகம் இல்லாவிட்டாலும்கூடப் பார்த்த பரிச்சயம் இருக்கும். ஆனால், இவர்கள் ஒரே கம்பனியில் மட்டும் இல்லாது ஒரே தளத்திலும் வேலை செய்திருக்கிறார்கள். ஆனால், ஒருவரையொருவர் பார்த்ததுகூட இல்லையாம். இப்பிடிக் காதிலை பூ சுத்துற விசயங்கள் நிறைய.

இதிலை மிகவும் மோசமானது என்னவென்றால், முதலிரவுக்கு அந்த அறைக்குள்ளை இவர்கள் இரண்டு பேரும் பிரிந்து படுப்பதற்கு வசதியாக, சோடிக்கப்பட்ட ஒரு கட்டில், சோடிக்கப்படாத ஒரு கட்டில் என்று பிரித்துப் போட்டிருக்கிறார்கள். :huh: முதலிரவிற்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு, இவர்கள் பிரிந்துதான் படுக்கப்போகிறார்கள் என்று ஏற்கனவே தெரியும்போல. அதுதான் இரண்டு கட்டில் போட்டிருக்கிறார்கள். :lol: வடிவேல் இல்லாத குறையை இப்பிடியான காட்சியமைப்புகள் மூலம் இந்தப் படத்திற்கு ஈடு செய்துவிட்டார்கள். ^_^^_^

சரி, ஜம்மு கேட்ட கேள்விக்கு வருகிறேன்.....

நான் பார்த்தீபனாக இருந்திருந்தால், அவவின்ர திமிருக்குக் கன்னத்திலை ஒரு அறை அறைந்திருப்பேன். அவவின் அப்பா, கட்டாயப்படுத்திச் செய்தாலும், திருமணம் முடிந்து, கடத்தப்பட்ட சிறீக்காந்தின் தங்கை விடுவிக்கப்பட்டபின்போ அல்லது சென்னை வந்தபின்போ அவருக்கு விளக்கத்தை அளித்து விலகியிருக்கலாம். ஆனால், அவ பார்த்தீபனின் வீட்டிலேயே இருந்து கொண்டு திமிராக நடந்தது மிகவும் பிழை. இப்படிப்பட்டவர்களை அறைவதில் எந்தப் பிழையும் இல்லை. :icon_idea:

அவவின் நிலையில், நடந்தது அனைத்தையும் பார்த்தீபனுக்கு விளக்கிவிட்டு விலகியிருப்பேன். இடையில் வந்த காதல் என்றால் மறந்துவிட்டுப் புதிய பாதையில் போகலாம். ஆனால், விபரம் தெரியாத நாளிலிருந்தே ஒருவரையாருவர் நிச்சயமாக நினைத்து வந்த காதல் இது. சுலபத்தில் மறந்துவிடக்கூடியது அல்ல. அதுமட்டுமின்றி, சிறீக்காந்தைத் தவிர வேறொருவரை நினைத்துப் பார்க்கவும் முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலை. இந்தப் படத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கு

  • தொடங்கியவர்

அடடா..தமிழ் அச்சு அக்கா படத்தை பற்றிய தங்களின் பார்வை மிகவும் நன்னாக இருக்கு :huh: ...நான் இந்த படம் பற்றி முதலே அறிந்திருக்கவில்லை திடிரென பார்த்த போது வழமையான தமிழ் சினிமாவிலும் இருந்து சற்று ஆறுதல் என்று சொல்ல கூடிய ஒரு திரைபடம் எண்டு சொல்லலாம்.. ^_^

ம்ம்..நிச்சயமாக படம் கொஞ்சம் விளங்கிறது கஷ்டமா தான் இருக்கு..(வழமையாகவே பார்த்திபன் நடிக்கிற படங்களை விளங்குறது கொஞ்சம் கடினம் தானே)..

சரியாக சொன்னியள் ஏன் இவாவை வேறொரு மாப்பிள்ளைக்கு கட்டி கொடுக்கிறார்கள் எண்டு தெளிவான காரணம் கொடுக்கபடவில்லை..(இப்படி பல இடங்களிள் சறுக்கல்கள் தான் தாங்கள் சொல்வதை போல்)..இவ்வாறன இடங்களிள் கூடுதலான கவனம் செலுத்தி இருக்கலாம் எண்டு தோணுகிறது :lol: .ஆனா தமிழ் அச்சு அக்கா ஏனைய தமிழ் சினிமாக்களோடு ஓப்பிடும் போது "வல்லமை தாராயோ" ஆறுதல் எண்டு தான் சொல்ல வேண்டும் இதை பத்தி தாங்கள் என்ன நினைக்கிறியள்..??

நீங்க சொன்னா பிறகு தான் அந்த முதலிரவு காச்சி பத்தி நானும் யோசித்தன்..(சும்மா சொல்ல கூடாது நன்னா தான் படம் பார்த்திருக்கிறியள்) :icon_idea: ..அது செம காமேடி தான் அதை விட பகிடி என்னவெண்டா பார்தீபன் முதலிரவு முழுக்க முளிச்சிருந்து படுத்திருக்கும் அவாவை ஓவியம் வரைவாராம்..(ஆமா இதை நாம நம்மனும் என்ன)...அநியாயதிற்கு நல்லவங்களா இருக்கிறாங்க..

நீங்க வடிவேல் எண்டு சொல்ல தான் ஞாபகம் வருது கருணாஸின் நகைசுவைகள் பிழை இல்லாமல் இருக்கிறது.ஏன் எனின் வடிவேலின் ஒரே மாதிரியான நகைசுவைகளை பார்த்து..பார்த்து அலுத்து விட்டது எண்டு கூறலாம்.தங்களுக்கு எப்படியோ..?? :rolleyes:

அப்படி போடுங்கோ...கன்னத்தில அறையிறதோ உதையலாம் போல இருக்கு படம் பார்கக்க..தானும் கஷ்பட்டு மற்றவனையும் அல்லவா கஷ்டபடுத்துறா இவா..இந்த விடயத்தில் நானும் உங்களை போல தான் செய்வேன் தமிழ் அச்சு அக்கா..

மற்றது...

விபரம் தெரிந்த நாளில் இருந்து வரும் காதலை மறக்க முடியாதோ..??..ஏன்..??..வாழ்க்கையில் வரும் சில சுவாரசியாம அத்தியாங்களாக பார்க்க முடியாதோ..?? :icon_idea:

நன்றி தமிழ் அச்சு அக்கா தெளிவான உங்கள் பார்வையும் அத்துடன் தாங்கள் அந்த பாத்திரமாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பியள் என்பதனை மிகவும் சுவாரசியமால கூறினியள்... அது சரி தாங்கள் இறுதியாக பார்த்த தமிழ் படங்களிள் தங்களை கவர்ந்தது அல்லது பார்க்க கூடிய மாதிரி ஏதாவது படங்கள் உள்ளதோ..?? ^_^

அப்ப நான் வரட்டா!!

ஜமுனா

விமர்சனம் நல்லாத்தான் இருக்கு.

நான் பாத்திபனாய் இருந்தா கதற கதற!!!

விட்டுட்டு போயிருப்பன். :icon_idea:

சாயாசிங்கா இருந்தா இந்தகேனையனுடன்[பாத்திபன்] மீண்டும் சேர்ந்துவாழாமல் வேறுதிருமணம் செய்வேன் :icon_idea:

[தாங்கள் மௌனராகம் படம் பாக்கவில்லைபோலே பாத்திருந்தா இந்தவிமர்சனம் எழுதியிருக்கமாட்டீங்க]

இந்தவிமர்சனத்தையும் பாருங்க :rolleyes:

http://www.rediff.com/movies/2008/jun/27ssvd.htm

Edited by r.raja

விபரம் தெரிந்த நாளில் இருந்து வரும் காதலை மறக்க முடியாதோ..??..ஏன்..??..வாழ்க்கையில் வரும் சில சுவாரசியாம அத்தியாங்களாக பார்க்க முடியாதோ..??

ஜம்மு, அது அவ்வளவு சுலபமில்லை. உங்கள் அப்பா, அம்மாவை அல்லது தங்கச்சியை மறந்து உங்களால் வாழமுடியுமா? இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் மாமன் முறையும் அப்படித்தானே??? ஒருவேளை, அந்த மாமனை (மச்சானை) முதலே பிடிக்காமல் இருந்திருந்தாலோ அல்லது ஈடுபாடு இல்லாமல் இருந்திருந்தாலோ அவ்வாறு நடந்திருக்கலாம். ஆனால், இதில் அப்படியில்லையே. பெற்றோர் முதற்கொண்டு அனைவரும் ஊக்கப்படுத்திய காதல் அல்லவா இது. அதுமட்டுமின்றி, அவர்களும் தீவிரமாகக் காதலித்தாற்கான சைகைகளைத்தான் காட்டியிருக்கிறார்கள்.

இது மெளனராகத்தின் பாதிப்பில்தான் எடுக்கப்பட்டது என்பது சரி. ஆனால், மெளனராகத்திற்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள். முதலாவதாக, பெண் பார்க்க வந்தபோதே, ரேவதி மோகனிடம் தனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்பதைத் தெளிவாகத் தெரிவித்து விட்டார். அடுத்ததாக, ரேவதியை யாரும் மிரட்டித் திருமணம் செய்து வைக்கவில்லை. தனது தந்தையின் உடல்நலத்தைக் கருத்திற்கொண்டு, தனக்கு விருப்பமில்லாதபோதும், திருமணம் செய்யச் சம்மதிக்கிறார். இதில், அவர் மோகனிடம் கோபப்படுவதற்கு நியாயம் உள்ளது. காரணம், ரேவதிக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்தும் மோகன் அவரைத் திருமணம் செய்து கொண்டார். அதோடு, ரேவதி படித்துக் கொண்டிருக்கும் பெண். தனியாக வாழமுடியாத சூழ்நிலை. ஆனால் வல்லமை தாராயோவில், சாயாசிங் ஒரு நல்ல கம்பனியில் வேலை செய்யும் பெண். ஏற்கனவே தனியாக இருந்துதான் வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்.

இன்னொரு வேடிக்கையான விசயம் என்னவென்றால், விவாகரத்து பெறுவதற்காக, பார்த்தீபன் கொடுமைக்காரனாகக் கோர்ட்டில் சித்தரிக்கப்படுகிறார். கணவன், மனைவி இருவரும் சம்மதித்தால், ஒரு வருடம் பிரிந்து வாழ்ந்துபின் இலகுவாக விவாகரத்து பெற்றுவிடலாம். இவர் விவாகரத்து கையில் வரும்வரை, பார்த்தீபன் வீட்டில்தான் தங்கியிருக்கிறார். சென்னை வந்தவுடனேயே, இவர் தான் முதலில் தங்கியிருந்த வீட்டிற்குப் போயிருக்கலாம்தானே.... ஏன் தொடர்ந்தும் பார்த்தீபன் வீட்டிலேயே இருந்தார்????

மொத்தத்திலை இந்தப் படம் காதிலை பூ சுற்றிற விசயம்தான். இதிலை, இந்தப் படத்தின் இயக்குநர் (மதுமிதா) நியூயோர்க்கில் உள்ள பிரபல சினிமாப் பல்கலைக்கழகத்தில் படித்தவராம். பல அவார்டுகள் வாங்கியிருக்கிறார், ஹோலிவூட்டில் வேறு வேலை செய்திருக்கிறாராம். நம்பமுடியவில்லை.

ஜம்மு, மற்ற தமிழ்ப்படங்களில் மசாலா இருந்தாலும் ஒருசில நல்ல விடயங்களாவது இருக்கும். அல்லது எடுக்கப்பட்ட விதங்கள் நேர்த்தியாக இருக்கும்.

சமீபத்தில் வெளியான படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் சந்தோஷ் சுப்ரமணியம். அந்தப் படத்தில் எனக்கு எந்தவிசயமும் உறுத்தவில்லை. நான் தியேட்டருக்குச் சென்று பார்ப்பது அரிது. இதனை தியேட்டரில் சென்றுதான் பார்க்கவேண்டும் என்று சென்று பார்த்த படமிது. அதற்குப் பிறகும் எத்தனையோ முறைகள் திரும்பத் திரும்பப் பார்த்த படம். அதுவும் கிட்டத்தட்ட இதே மாதிரியான கதைதானே?? இதில் திருமணம். அதில் நிச்சயதார்த்தம். ஆனால் எவ்வளவு நேர்த்தியாகப் படம் எடுத்திருந்தார்கள். ரீக்கடையில் வேலை செய்யும் சிறுவன் முதற்கொண்டு பெற்றோர்வரை அனைத்துக் கதாபாத்திரங்களும் நன்றாகப் படைக்கப்பட்டிருந்தார்கள்.

அதில், எனக்கு மிகவும் பிடித்த சில விடயங்கள். ஜெயம் ரவியின் நண்பர்களின் மனைவிகள், அவர், ஜெனிலியாவோடு இருப்பதைப் பார்த்ததும் நிச்சயமானதற்குப் பின், அவர் இப்படிச் செய்வது பிழை என்று வாதாடுவார்கள். அதற்கு அவரது நண்பர்கள், எங்கட பிரண்ட் அவனின் வாழ்நாளில் முதன்முதலாக இதைத்தான் ஆசைப்பட்டிருக்கிறான். அதற்காக நாங்கள் எப்பிடியாவது இருவரையும் சேர்த்து வைப்போம் என்று கூறுவார்கள். அந்த நட்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மற்றது, ஜெனிலியா வீட்டை விட்டுப் போகும்போது, பிரகாஷ்ராஜிடம், பேசும்போது, எங்கள் வீட்டில் நானும் அப்பாவும்தான் என்றாலும் நிறைய ஆட்களோடு இருப்பதாக உணர்ந்தேன். ஆனால் இங்கே நிறையப் பேர் இருந்தும், தனிமையாக உணர்கிறேன் என்று கூறுவார். இப்படி அந்தப் படத்தில் சிறப்பம்சங்கள் நிறைய.

அடுத்ததாக, 'தாம் தூம்' இற்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறேன். இங்கே தியேட்டிரில் வெளியிட்டால், தியேட்டரில்தான் சென்று பார்ப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

[தாங்கள் மௌனராகம் படம் பாக்கவில்லைபோலே பாத்திருந்தா இந்தவிமர்சனம் எழுதியிருக்கமாட்டீங்க]

உதை தான் சொல்லுறது "ஜெனரேசன் கப்".மெளனராகமும் இதுவும் ஒரே மாதிரி தான் இருக்கின்றது ஆனால் டைரக்ஷன் பாக்கியராஜ் இதில் மதுமிதா மற்றும்படி தமிழ் சினிமாவை பொறுத்தவரை அன்று தொடக்கம் இன்று வரை அரைத்த மாவை அரைப்பது தான் வழக்கம் வித்தியாசமாக அரைத்தால் அது எடுபடுவதிற்கு சில வருடங்கள் எடுக்கும் நாங்கள் மெளனராகத்தை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்த்தது போல் இப்பத்தைய இளைய சமுதாயம் (ஜம்முவை போல் சிலர்) வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.

ஜம்மு இன்னும் 20 வருடங்களிற்கு பிறகு இப்படியான ஒரு கதையை வேறு யாராலும் எடுத்திருந்தால் "வல்லமை தாரயோ" படத்தை பார்க்கவில்லையோ என்று அடுத்த இளம் சமுதாயத்தை கேட்பார்கள். :icon_idea:

  • தொடங்கியவர்

ஜமுனா

விமர்சனம் நல்லாத்தான் இருக்கு.

நான் பாத்திபனாய் இருந்தா கதற கதற!!!

விட்டுட்டு போயிருப்பன். சாயாசிங்கா இருந்தா இந்தகேனையனுடன்[பாத்திபன்] மீண்டும் சேர்ந்துவாழாமல் வேறுதிருமணம் செய்வேன்

[தாங்கள் மௌனராகம் படம் பாக்கவில்லைபோலே பாத்திருந்தா இந்தவிமர்சனம் எழுதியிருக்கமாட்டீங்க]

இந்தவிமர்சனத்தையும் பாருங்க

http://www.rediff.com/movies/2008/jun/27ssvd.htm

அட..ராஜாத்தி ராஜா வாங்கோன்னா வாங்கோ... :lol: (பராக்..பராக்)..சரியோ..நான் பகிடிக்கு பிறகு என்னோட கோவித்து போடாதையுங்கோ என்ன..ஒ விமர்சனம் நன்னா இருக்கோ..ஒன்னு சொல்லட்டோ எப்பவுமே விமர்சிக்கிறது தான் லோகத்தில சரியான இலகுவான வேலை பாருங்கோ..நான் சொல்லுறது சரி தானே.. :o

அப்படி சொல்லுங்கோ ஆனா நான் நினைக்கல அவா கதறுவா எண்டு அப்படி ஒரு கதாபாத்திரம் அந்த படத்தில அந்த நாயகிக்கு...ம்ம் இன்னொருத்தரை நினைத்து கொண்டு இன்னொருவர் கூட வாழுறது என்னால நினைத்து கூட பார்க்க ஏலாது.. :rolleyes:

ம்ம்..சரியா சொன்னியள் பார்த்தீபன் சரியான கே** தான் இப்படி யாரும் இருப்பாங்களா..??..யாருக்கு தெரியும் இப்படியும் சிலர் இருக்க கூடும் :lol: ..நான் மெளனராகம் படம் பார்க்கவில்லை நீங்கள் சொன்னா பிறகு அதையும் ஒருக்கா பார்கனும் போல இருக்கு நேரம் கிடைக்கும் போது எடுத்து பார்த்து விட்டு சொல்லுறன் என்ன..ம்ம் தாங்கள் இட்ட இணைப்பையும் வாசித்தேன் நன்றி அண்ணா இணைப்பிற்கும் தங்களின் எண்ணங்களிற்கும்.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஜம்மு, அது அவ்வளவு சுலபமில்லை. உங்கள் அப்பா, அம்மாவை அல்லது தங்கச்சியை மறந்து உங்களால் வாழமுடியுமா? இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் மாமன் முறையும் அப்படித்தானே??? ஒருவேளை, அந்த மாமனை (மச்சானை) முதலே பிடிக்காமல் இருந்திருந்தாலோ அல்லது ஈடுபாடு இல்லாமல் இருந்திருந்தாலோ அவ்வாறு நடந்திருக்கலாம். ஆனால், இதில் அப்படியில்லையே. பெற்றோர் முதற்கொண்டு அனைவரும் ஊக்கப்படுத்திய காதல் அல்லவா இது. அதுமட்டுமின்றி, அவர்களும் தீவிரமாகக் காதலித்தாற்கான சைகைகளைத்தான் காட்டியிருக்கிறார்கள்.

ம்ம்..தாங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரியாக தான் தெரிகிறது :lol: ..ஆனால் ஒருவனை நினைத்திட்டோம் அவன் இல்லாட்டி இருக்க ஏலாது எண்டு இல்லை தானே..(எதிர்பாரத விபத்தில் அவர் சிக்கி மரணித்திருந்தால்)..என்ன செய்வது வாழ்க்கையை கொண்டு செல்ல தானே வேண்டும்..அதையே நினைத்து கொண்டு இருக்க ஏலாது தானே..?? :o

நான் மெளனராகம் படம் பார்க்கவில்லை தமிழ் அச்சு அக்கா தங்களின் கருத்தில் இருந்து அந்த கதையினை ஒரளவு உள்வாங்க கூடியதாக இருக்கிறது..ஆனால் நீங்கள் சொல்வது போல் இரண்டு கதைகளுக்குமிடையில் பல வேறுபாடுகள் உண்டு.மற்றது இந்த "வல்லமை தாராயோ" கதையில் பிற்பாதி அதாவது படமுடியும் தருவாயில் அந்த நாயகியின் "ஈகோ" பிரச்சினையை வடிவாக சுட்டி காட்டி இருந்தார்கள் :unsure: ,இப்படி பலர் இருக்கீனம் உண்மையிலே ஆனால் எல்லாரும் பார்தீபன் போல் விட்டு கொடுப்பார்களோ என்பது தான் சந்தேகம்..

ம்ம்..விவாகரத்து பெற்ற பின் பார்தீபன் வீட்டில் இருப்பது அதை விட வேடிக்கை என்னவெண்டால் பார்தீபனை மறுகல்யாணம் கட்டும்படி இவா சொல்வது..இப்படி அடுக்கி கொண்டு போகலாம்..ம்ம் காதில பூ சுத்தின விடயங்கள் படத்தில் ஏராளம் தான் அது போக நீங்கள் கூறுகின்றீர்கள் மதுமிதா கோலிவுட்டில் கூட வேலை பார்த்தவர் என்று அப்படி எண்டால் இந்த கதை தூசு தான்.. :rolleyes:

ஓமொம் நீங்கள் சொல்வதும் சரி தான் தமிழ் சினிமாவில் ஒன்று இரண்டு நல்ல விடயங்களையும் சேர்கிறவை தான் இல்லை எண்டு சொல்லல்ல,ஆனா என்ன படம் பார்க்கும் போது விசரா இருக்கும் அதாவது தேவையற்ற பாடல்கள் மற்றது வழமை போலவே கதை நகர்வதால் அடுத்தது என்ன நடக்கும் என்பதனை ஊகித்து கொள்ள கூடியதாக இருப்பதால் படம் பார்ப்பதில் சளிப்பு என்னை பொறுத்தளவிள் அப்படி பார்க்கும் போது இந்த படம் சளிப்பிள்ளாத பயணம் என் பார்வையில் என்று சொல்லலாம். :lol:

ம்ம்..சந்தோஷ் சுப்பிரமணியம் நானும் பார்த்தனான் நல்லதொரு படம் நான் நினைக்கிறன் தெலுங்கில் வந்ததை தான் தமிழில் மறுபடி எடுத்தார்கள் எண்டு தெலுங்கில் சித்தார்தின் நடிப்பில் இருந்த துடிப்பு தமிழில் ஜெயம் ரவியின்ட இல்லை தெலுங்கு படத்தை பார்தீர்கள் எண்டால் புரிந்து கொள்வீர்கள்..ஆனால் படம் கடசி வரை நல்லா தான் போச்சுது நல்லதொரு படம்..மற்றது இந்த படத்தில் ஜெனிலியா சொல்வா எனக்கு நடித்து பழக்கமில்லை வாழ்க்கையில் எண்டு அது எவ்வளவு தூரம் உண்மை ஏன் எனில் பலர் நடிக்கிறார்கள் மற்றவர்களுக்காக... :lol:

ஒ.."தாம் தூம்" படமோ இங்கே திரையிடும் போது பார்த்து விட்டு சொல்கிறேன் அதுக்கு முன் இந்த மாத முடிவில் குசேலன் திரைபடம் அதையும் பார்க்க வேண்டும்..நன்றி தமிழ் அச்சு அக்கா தங்களின் எண்ணங்களுக்கு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

உதை தான் சொல்லுறது "ஜெனரேசன் கப்".மெளனராகமும் இதுவும் ஒரே மாதிரி தான் இருக்கின்றது ஆனால் டைரக்ஷன் பாக்கியராஜ் இதில் மதுமிதா மற்றும்படி தமிழ் சினிமாவை பொறுத்தவரை அன்று தொடக்கம் இன்று வரை அரைத்த மாவை அரைப்பது தான் வழக்கம் வித்தியாசமாக அரைத்தால் அது எடுபடுவதிற்கு சில வருடங்கள் எடுக்கும் நாங்கள் மெளனராகத்தை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்த்தது போல் இப்பத்தைய இளைய சமுதாயம் (ஜம்முவை போல் சிலர்) வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.

ஜம்மு இன்னும் 20 வருடங்களிற்கு பிறகு இப்படியான ஒரு கதையை வேறு யாராலும் எடுத்திருந்தால் "வல்லமை தாரயோ" படத்தை பார்க்கவில்லையோ என்று அடுத்த இளம் சமுதாயத்தை கேட்பார்கள். :lol:

ஓ..மாம்ஸ் நீங்க மெளனராகம் பார்த்தனியளோ..?? :o ..எப்பவுமே அரைத்த மாவை அரைக்கும் போது தான் பாருங்கோ புது எண்ணங்கள் தோணும் அப்படி பார்க்க போனால் அரைத்து கொண்டிருக்க வேண்டும் என்ன நான் சொல்லுறது சரி தானே மாம்ஸ்..ஒம் நீங்கள் சொல்வது சரி தான் ஏனேனில் குணா படம் வந்த காலபகுதியில் அது தோல்வி படமாக திகழ்ந்ததாம் எண்டு அறிந்தேன்..(யாருக்கும் தெரியுமோ??) :rolleyes: ..ஆனால் நல்லதொரு படம் அது ஆனால் அன்றைய காலகட்டத்து ரசணை அவ்வாறு இல்லாததால் தோல்வியுற்றதோ தெரியவில்லை.. :unsure:

ஆனால் இப்போது பல படங்கள் அந்த சாடையில் வந்து வெற்றி பெற்றுள்ளது அப்படி பார்குமிடத்தில் நீங்கள் சொல்வதும் சரி போல தான் இருக்கு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்முவின் விமர்சனத்திற்கு பிறகு திருட்டு விசிடியில் (நண்பனின் வீட்டில் இருந்து திருடியது) படம் பார்த்தேன். ..

ம் பார்க்கலாம் . . தற்போதைய இளம் சமுதாயத்தை சற்று விழிப்புணர்வாக்கும். .

பார்த்தீபனின் படங்கள் எப்போதுமே வித்தியாசமானவையாகத்தான் இருக்கும். .

ஆண்கள் எப்போதுமே இப்படித்தான் பார்த்தீபனைப்போலத்தான் காதல் தோல்வி என்றாலும் சிறிது நாட்களிற்கு அந்த நினைவிலேயே வாழ்வார்கள். (மனச்சாட்சி உள்ளவன் எவன் என்றாலும் இல்லையென்று சொல்லட்டும் பார்க்கலாம் )

பெண்களிற்கு சற்று ஈகோ இருக்கும். இருக்கவேணும் . . அதுதான் வாழ்க்கை. . .

  • தொடங்கியவர்

ஜம்முவின் விமர்சனத்திற்கு பிறகு திருட்டு விசிடியில் (நண்பனின் வீட்டில் இருந்து திருடியது) படம் பார்த்தேன். ..

ம் பார்க்கலாம் . . தற்போதைய இளம் சமுதாயத்தை சற்று விழிப்புணர்வாக்கும். .

பார்த்தீபனின் படங்கள் எப்போதுமே வித்தியாசமானவையாகத்தான் இருக்கும். .

ஆண்கள் எப்போதுமே இப்படித்தான் பார்த்தீபனைப்போலத்தான் காதல் தோல்வி என்றாலும் சிறிது நாட்களிற்கு அந்த நினைவிலேயே வாழ்வார்கள். (மனச்சாட்சி உள்ளவன் எவன் என்றாலும் இல்லையென்று சொல்லட்டும் பார்க்கலாம் )

பெண்களிற்கு சற்று ஈகோ இருக்கும். இருக்கவேணும் . . அதுதான் வாழ்க்கை. . .

அட...அப்ப பரவால்ல நான் விமர்சனம் பண்ணி நீங்களாவது படத்தை பார்த்திருக்கிறியள் மாஸ்டர் :( ..என்ன தான் சொன்னாலும் கள்ள சீடியில பார்க்கிற சுகமே தனி தான் என்ன "மாஸ்டர்"..உண்மை தான் பார்த்தீபன் மாமாவின் படங்கள் வித்தியாசமானவை மற்றது சில படங்களிள் என்ன நடக்கிறது எண்டே விளங்காது அப்படியும் அவர் படம் எடுத்திருக்கிறார் எரிச்சலா இருக்கும். :huh:

ஓ..உங்களுக்கும் படம் பிழை இல்லாமல் இருந்ததோ..??..இன்றைய இளைஞர்களை இந்த படம் விழிபுணர்வாக்கும் என்பது என்னால் ஏற்று கொள்ள முடியாது ஏன் எண்டால் இன்றைய தலைமுறையினருக்கு நல்லது எது கெட்டது எது என தெரிந்து கொண்டே பிழை விடுகிறார்கள்..(இதை பற்றிய தங்களின் கருத்து என்ன??).. :mellow:

நான் நினைக்கல "மாஸ்டர்" ஆண்கள் காதலில தோற்றால் சில நாட்களுக்கு அந்த நினைவில வாழுவார்கள் எண்டு..சிலர் இருக்க கூடும் ஆனா இப்ப எல்லாம் ஒரு பஸ்சை விட்டா இன்னொரு பஸ் எண்ட மாதிரி தான்,நீங்கள் இவ்வளவு உறுதியா அடித்து கூறுவதை பார்த்தா மாஸ்டர் உங்களுக்கு ஏதாச்சும் அநுபவமோ..??.. :( (நான் பகிடிக்கு பிறகு கோவித்து போடாதையுங்கோ என்ன)..

என்னது பெண்களுக்கு ஈகோ இருக்க வேண்டுமோ..(அதுவும் ஒரு வகையில் சரி தான்)..அப்போது தான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும் என்ன..கெஞ்சுறதிலையும் ஒரு சுகம் இருக்கு தான்..நான் சொல்லுறது சரி தானே..நன்றி மாஸ்டர் தங்களின் எண்ணங்களுக்கு..அடுத்தது குசேலன் படம் தான் என்ன.. :o

அப்ப நான் வரட்டா!!

ஜம்முவின் விமர்சனத்தை வாசித்துப்பார்த்தேன். படம் பார்க்கணும் போலிருக்கு

நாளைக்கு பார்த்துட்டு எழுதட்டுமோ கருத்தை . தம்பி ஜம்மு நீங்கள் முடிவை சொல்லாமல் போய்விட்டியளே.,ம்ம் நாங்க பார்த்து தெரிஞ்சுக்குறம் சரியோ

இளைய தலைமுறை பிழைவிடுவதை பெருமையாக நினைக்கின்றார்கள். அதுதான் கவலைக்குரிய விடயம். அவர்களிற்கு தெரியும் அது பிழை என்று ஆனால் வெளி உலகத்தின் மத்தியில் அவர்களின் பெயர் வரவேண்டும் என்பதற்காக அதை திரும்ப திரும்ப செய்கின்றார்கள். கண்கூடாகப் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றொம்

நான் பொய் சொல்லமாட்டேன் ஜம்மு. . எனது முதல்காதல்தான் எனக்கு கவிதையை தந்தது. அந்த காதல் இன்றும் என்னுள் இருக்கின்றது. . ஆனால் வலி இல்லை சுகம். . எனது மனைவிக்கும் தெரியும். . . முதல் காதல் நினைவிலேயே 4 வருடங்கள் வாழ்ந்திருக்கின்றேன். . . எங்கிருந்தாலும் அவள் இன்பமாக வாழவேண்டும் என்றே இன்றும் நினைப்பேன். . என்ன இழந்தது அல்லது நான் பிரிந்தது நன்மைக்கே என்றும் எண்ணிக்கொள்வேன். .

குசேலன் படம் ஏற்கனவே மலையாளப்படம் பார்ததுவிட்டேன். குசேலன் படம் ஓடுகின்ற அன்று நல்ல ஆங்கிலப்படம் ஓன்று பார்க்கலாம் என்று இருக்கின்றேன். . அன்றுதான் விடுமுறை. . பார்ப்போம். . .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட விமர்சனம் நல்லாருக்கே...

படத்தை முழுசா பார்த்துட்டு என்னோட விமர்சனத்தை சொல்லுரேன்....

ஆமா என்ன இந்த முறை ஜம்மு பஞ்ச் மிஸ்ஸிங்....

அதனால சங்கத்தில இருந்து ஒரு பஞ்ச்.

கண்ணா காதலுங்கிறது வாழ்க்கைல ஒரு பகுதி மட்டும்தான் ...காதலே வாழ்க்கை இல்லை....

Edited by கறுப்பன்

  • தொடங்கியவர்

ஜம்முவின் விமர்சனத்தை வாசித்துப்பார்த்தேன். படம் பார்க்கணும் போலிருக்கு

நாளைக்கு பார்த்துட்டு எழுதட்டுமோ கருத்தை . தம்பி ஜம்மு நீங்கள் முடிவை சொல்லாமல் போய்விட்டியளே.,ம்ம் நாங்க பார்த்து தெரிஞ்சுக்குறம் சரியோ

ஒ..அப்படியா நி"ல்"லா அக்கா..ம்ம் படத்தை நேரம் கிடைக்கும் போது பாருங்கோ என்ன :lol: ..தாரளமாக பார்த்து விட்டு தங்களின் கருத்தையும் முன்வையுங்கோ அக்கா..அத்துடன் அந்த நிலையில் தாங்கள் இருந்திருந்தீர்கள் எண்டால் நீங்கள் என்ன செய்திருப்பியள் என்பதனையும் எங்களுடம் பரிமாறலாமே..?? :unsure:

எப்பவுமே ஜம்மு பேபிக்கு ஆரம்பம் மட்டும் தான் முடிவில்லை விளங்கிச்சோ ஆனபடியா முடிவை பார்க்க வேண்டியது நீங்க..(கொஞ்சம் ஓவரா போயிட்டமோ).. :unsure:

அப்ப நான் வரட்டா!!

இளைய தலைமுறை பிழைவிடுவதை பெருமையாக நினைக்கின்றார்கள். அதுதான் கவலைக்குரிய விடயம். அவர்களிற்கு தெரியும் அது பிழை என்று ஆனால் வெளி உலகத்தின் மத்தியில் அவர்களின் பெயர் வரவேண்டும் என்பதற்காக அதை திரும்ப திரும்ப செய்கின்றார்கள். கண்கூடாகப் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றொம்

நான் பொய் சொல்லமாட்டேன் ஜம்மு. . எனது முதல்காதல்தான் எனக்கு கவிதையை தந்தது. அந்த காதல் இன்றும் என்னுள் இருக்கின்றது. . ஆனால் வலி இல்லை சுகம். . எனது மனைவிக்கும் தெரியும். . . முதல் காதல் நினைவிலேயே 4 வருடங்கள் வாழ்ந்திருக்கின்றேன். . . எங்கிருந்தாலும் அவள் இன்பமாக வாழவேண்டும் என்றே இன்றும் நினைப்பேன். . என்ன இழந்தது அல்லது நான் பிரிந்தது நன்மைக்கே என்றும் எண்ணிக்கொள்வேன். .

குசேலன் படம் ஏற்கனவே மலையாளப்படம் பார்ததுவிட்டேன். குசேலன் படம் ஓடுகின்ற அன்று நல்ல ஆங்கிலப்படம் ஓன்று பார்க்கலாம் என்று இருக்கின்றேன். . அன்றுதான் விடுமுறை. . பார்ப்போம். . .

ம்ம்..மாஸ்டர் அவர்கள் இந்த தவறினை தெரிந்து கொண்டே விடுவதிற்கு சுற்றுபுற சூழல்களும் செல்வாக்கு செலுத்துகிறது எண்டு சொல்லலாம் :lol: ..ஆனால் அடிப்படையில் இந்த தவறை ஏன் விடுகிறார்கள் எண்டு பார்த்தால் அது அவர்களை சுற்றியுள்ள நண்பர் வட்டமே முதல் இடம் பெறும் என்பது என் கருத்து.. :rolleyes:

அடடா..உங்கள் முதல் காதல் தான் உங்களுக்கு கவிதையே தந்ததா..ம்ம் சில நினைவுகளை அசை போடும் போதும் ஒரு சுகம் ஆனால் அதை மீண்டும் அநுபவிக்க கூடாது எண்டும் மனம் சொல்லும் என்ன மாஸ்டர்..(இதுக்காக பிறகு என்னையும் தப்பா நினைக்கிறதில்ல சொல்லிட்டன்).. :wub:

ஓ..நீங்கள் மலையாளத்திள் பார்த்துவிட்டியளா..(எப்படி படம்)..ஆனால் தமிழில் ரஜனிக்காக பல காட்சிகள் சேர்க்கபட்டுள்ளது எண்டு கூறுகிறார்கள்..எது எப்படி இருந்தாலும் நான் முதல் காட்சி பார்த்து விடுவன் அப்ப தான் எனக்கு நிம்மதி.. :(

அப்ப நான் வரட்டா!!

அட விமர்சனம் நல்லாருக்கே...

படத்தை முழுசா பார்த்துட்டு என்னோட விமர்சனத்தை சொல்லுரேன்....

ஆமா என்ன இந்த முறை ஜம்மு பஞ்ச் மிஸ்ஸிங்....

அதனால சங்கத்தில இருந்து ஒரு பஞ்ச்.

கண்ணா காதலுங்கிறது வாழ்க்கைல ஒரு பகுதி மட்டும்தான் ...காதலே வாழ்க்கை இல்லை....

ஓ..விமர்சனம் நன்னா இருக்கோ.. :D (அப்பாடா நாமளும் அப்ப எனி யாரும் பெரிய மனிசரையும் விமர்சிக்க தொடங்கிட வேண்டும்)..ம்ம்..கறுப்பன் அண்ணா படத்தை பார்த்து விட்டு தங்களின் கருத்தையும் பகிருங்கோ என்ன..ஒ பஞ்சோ அதுவென்னவெண்டா நம்ம ரஜனி படம் வாறபடியால பஞ்சை நாம சொல்லாம இருக்கிறோம்.. :lol:

பரவால்லையே அந்த மாதிரி இருக்கு பஞ் கறுப்பன் அண்ணா..அப்ப நானும் ஒன்னு சொல்லட்டோ.."காதல் என்கிறது வெங்காயம் உரிக்க உரிக்க கண் கலங்கும்".. :lol:

அப்ப நான் வரட்டா!!

யம்மு, காதலர்களின் தவிப்பை அழகாகச் சொல்லும் படம், "கண்ணும் கண்ணும்". பிரசன்னா, மற்றும் கேரளத்துப் புதுமுகம் நடித்த படம். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். :lol:

  • தொடங்கியவர்

யம்மு, காதலர்களின் தவிப்பை அழகாகச் சொல்லும் படம், "கண்ணும் கண்ணும்". பிரசன்னா, மற்றும் கேரளத்துப் புதுமுகம் நடித்த படம். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். :icon_mrgreen:

ஓ..அப்படியோ தமிழ் அச்சு அக்கா..கட்டாயம் பார்க்கிறன் அந்த படத்தை :lol: ..எனக்கு பிரசன்னாவின்ட படம் எண்டால் பிடிக்காது ஆனால் கிட்டடியில் பார்த்த ஒரு படத்தில..(அஞ்சாதே எண்டு நினைக்கிறன்)..அவரின் வில்லதனமான நடிப்பு நன்றாக இருந்தது..நீங்கள் பார்த்தனியளோ..?? :lol:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.