Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

" மகிந்த பிள்ளாயான் இடையே ஆரம்பித்த நிழல் யுத்தம் "

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பிலிருந்து மகான் எழுதிய ” மகிந்த பிள்ளாயான் இடையே ஆரம்பித்த நிழல் யுத்தம் ”

ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் செந்தமிழ்]

தெற்காசிய வலைய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் சந்தித்துக் கொண்ட பதினைந்தாவது உச்சி மகாநாட்டின் மூலம் மஹிந்தா அரசுக்கும் ஒட்டுக்குழுவின் தலைவர் பிள்ளையானுக்கும் இடையில் முதல் முறையாக பாரிய நிழல் யுத்தம் ஆரம்பித்துள்ளது. அரசாங்கத்தின் கைபொம்மையாக செயற்பட்டுவரும் ஆயுதக்குழுவின் தலைவர் பிள்ளையானை பாரத பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் சந்திக்க மறுப்பு தெரிவித்தமை பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்கும், முதல் அமைச்சருக்கும் அடித்த சாவு மணியாகும். 1987ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இதன் மூலம் இலங்கையின் சிறுபான்மை இனமான தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு இணைந்த வடகிழக்கினுடாக பெறப்பட வேண்டும். என்பது பாரத பூமியின் நிலைப்பாடாகும். எனினும் இலங்கையின் இனவாத சக்திகளினால் வடகிழக்கு பிரிக்கப்பட வேண்டும் என உச்ச நீதி மன்றத்தில் வழக்குதாக்குதல் செய்யப்பட்டதையடுத்து இரு வேறு மாகாணங்களாக மஹிந்தாவின் அரசாங்கத்தில் செயற்பட்டுவருகின்றது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது வடகிழக்கில் உள்ள மக்களின் சுயநிர்ணய உரிமைகள் வழங்கப்பட்டு இயல்பு நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அவ்வாறான நிலையில் சர்வசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமாக வடகிழக்கு பிரிக்கப்பட வேண்டும் என மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள எவ்வித சரத்துக்களும் நிறைவேற்றப்படாது வடகிழக்கு பிரிக்கப்பட்டமை தெற்காசிய

வலயத்தின் வல்லரசான இந்தியாவை அவமதித்த செயலாகவே அந்நாடு கருதுகின்றது. இலங்கையின் உச்ச நீதிமன்றம் வடகிழக்கு இணைப்பை ஒருபோதும் இதுவரையில் பிழையென தெரிவிக்கவில்லை. மாறாக இணைக்கப்பட்ட சட்ட முறையை தவறென சுட்டிகாட்டி பிரிக்கப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் ஆயுதக்குழு இயங்கிவரும் நிலையில் கிழக்கு மாகாண சூழ்நிலையை சுட்டிக்காட்டி உள்ளுராட்சி மற்றும் கிழக்கு மாகாண சபை தேர்தல்களை ஒத்திவைக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்த போது அதனை நிராகரித்தது. கல்வித் திறன், அரசியல் திறன், நிர்வாகத்திறன், மற்றும் எவ்வித அனுபவமும் இல்லாது ஆட்கடத்தல், கொலை, கொள்ளை, கப்பம், என தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுபட்டுக்கொண்டுயிருக்க

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர் ரொம்பத்தான் குழம்பிப் போயிருக்கிறார்.. இந்தியப்பிரதமர் வடக்கு-கிழக்கைப் பிரித்தமைக்கு எதிர்ப்புக் காட்டத்தான் முதலைமைச்சர் பிள்ளையானைச் சந்திக்கவில்லை என்பது நம்பக்கூடியதாகவா இருக்கின்றது. மன்மோகன் சிங் சார்க் மாநாட்டிற்கு வருகை தராமல் இருந்திருந்தால், மகிந்தவைச் சந்திக்காமல் இருந்திருந்தால் அவற்றைக் காரணங்கள் என்று சொல்லலாம். டக்ளஸ் மாதிரி ஆயுதமேந்தாமல் ஆயுதம் வைத்திருந்தால், ஜனநாயகத் தலைவன் என்று சந்திக்க நேரம் ஒதுக்கியிருப்பார். எப்படியும் இன்னும் ஒன்றிரண்டு வருடங்களுக்குள் ஆயுதம் ஏந்தாத ஜனநாயக் கட்சியாக அவர்கள் தோற்றம் தருவார்கள்.

தமிழர்களது போராட்டத்தை சிறுபான்மையினரின் சுயநிர்ணயப் போராட்டம் என்று ஒத்துக்கொண்ட நாடுகளின் பட்டியலை யாராவது தந்தால் நல்லது.. புலம்பெயர் நாடுகளில் தமிழர்களால் நடாத்தப்படும் போராட்டங்களிற்கு ஆதரவாக வருகை தரும் அரசியல்வாதிகள் தங்களது சொந்த அரசியல் நோக்கம் காரணமாகத்தான் பங்கேற்கிறார்கள் மற்றும்படி நேரடியாக தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டத்திற்கு ஆதரவான கருத்துக்களை வைத்ததாக நினைவில் இல்லை!

பதிவு இனையத்துக்கு வாற வருடம் 100 ஈரோ மீச்சம் என நினைக்கிறேன். ஏன் எனில வாற வரும பதிவுக்கு இபப்டியான ஆய்வுகள் எழுத வேண்டி இருக்காது.........

நாங்கள் தான் புலம்பெயர் மந்தைக்கள் ஆகி விட்டோம் யாரை பொறுத்த மட்டிலும் எல்லாம் இனி புலம் பெயர் மந்திகள்(மந்தைகள்) லால் தான் வந்தது என்று சொல்லுவார்கள்................

புலம் பெயர் மந்த்தைகளின் ஆர்ப்பாட்டக்ள் செயற்பப்டுகள் காணாதாம்,,,,,,,,,,,,,,,,,,,

என்று ஒருவர் சொல்ல...............

புலம் பெயர் மந்தைகளால் தான் புலிகளின் போராட்டம் இழுபட்டு செல்Kஈரது என்று கரி நாகங்கள் சொல்ல

இங்கை புலம் பெயர் மந்தைகள் குடும்பத்தில் பிரச்சனை வரும் அளவுக்கு கொட்டு கொடுத்து போட்டு இந்தா கீபிர் விழுது மல்ரி பரல் வாங்கி அடிவிழுது என்று காவல்..................

கட்டுரையாளர் ரொம்பத்தான் குழம்பிப் போயிருக்கிறார்.. இந்தியப்பிரதமர் வடக்கு-கிழக்கைப் பிரித்தமைக்கு எதிர்ப்புக் காட்டத்தான் முதலைமைச்சர் பிள்ளையானைச் சந்திக்கவில்லை என்பது நம்பக்கூடியதாகவா இருக்கின்றது. மன்மோகன் சிங் சார்க் மாநாட்டிற்கு வருகை தராமல் இருந்திருந்தால், மகிந்தவைச் சந்திக்காமல் இருந்திருந்தால் அவற்றைக் காரணங்கள் என்று சொல்லலாம். டக்ளஸ் மாதிரி ஆயுதமேந்தாமல் ஆயுதம் வைத்திருந்தால், ஜனநாயகத் தலைவன் என்று சந்திக்க நேரம் ஒதுக்கியிருப்பார். எப்படியும் இன்னும் ஒன்றிரண்டு வருடங்களுக்குள் ஆயுதம் ஏந்தாத ஜனநாயக் கட்சியாக அவர்கள் தோற்றம் தருவார்கள்.

தமிழர்களது போராட்டத்தை சிறுபான்மையினரின் சுயநிர்ணயப் போராட்டம் என்று ஒத்துக்கொண்ட நாடுகளின் பட்டியலை யாராவது தந்தால் நல்லது.. புலம்பெயர் நாடுகளில் தமிழர்களால் நடாத்தப்படும் போராட்டங்களிற்கு ஆதரவாக வருகை தரும் அரசியல்வாதிகள் தங்களது சொந்த அரசியல் நோக்கம் காரணமாகத்தான் பங்கேற்கிறார்கள் மற்றும்படி நேரடியாக தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டத்திற்கு ஆதரவான கருத்துக்களை வைத்ததாக நினைவில் இல்லை!

அதில் உண்மையுண்டு. வடகிழக்கு இணைப்பினை இந்தியா தீர்வுத்திட்டமாக வலியுறுத்துகிறது.

அதில் உண்மையுண்டு. வடகிழக்கு இணைப்பினை இந்தியா தீர்வுத்திட்டமாக வலியுறுத்துகிறது.

என்ன உண்மை வடக்கையும் இனைத்து பிள்ளையனிடம் கொடுக்கவா?

அல்லது சிங் பிள்ளையனுக்கு சொல்லாமல் சொன்னாரா கிழக்கை மீட்டது போதாது வடக்கையும் மீட்டு காட்டு வந்து சந்திகின்றேன் என்று?????????

இன்னும் எத்தனை நாளைக்கு இந்தியாவை நம்பி அழியனும்?

என்ன உண்மை வடக்கையும் இனைத்து பிள்ளையனிடம் கொடுக்கவா?

அல்லது சிங் பிள்ளையனுக்கு சொல்லாமல் சொன்னாரா கிழக்கை மீட்டது போதாது வடக்கையும் மீட்டு காட்டு வந்து சந்திகின்றேன் என்று?????????

இன்னும் எத்தனை நாளைக்கு இந்தியாவை நம்பி அழியனும்?

எனது கருத்து இந்தியா மீதான நம்பிக்கைக்குரியதல்ல. இந்தியா இனப்பிரச்சினைக்குரிய தீர்வாக தான் வெளிப்படுத்தியிருக்கும் தீர்விற்கு இந்தியா பிள்ளையான் சந்திப்பு ஊறுவிளைவித்துவிடும் என்ற நிலை. அவ்வாறான ஒரு சந்திப்பு நிகழுமாயின் அது மகிந்த அரசு வடகிழக்குப் பிரிப்பை மேற்கொண்டதற்குக் கிடைத்த வெற்றி. மகிந்தவும் பிள்ளையான் இந்தியா சந்திப்பு நடைபெற வேண்டுமென்ற அக்கறை கொண்டவர்தான். இந்தியா பிள்ளையானைச் சந்தித்திருப்பின் இந்தியக் கொள்கையில் தீர்வுத்தன்மையில் தெளிவற்ற நிலை உலகத்தின் முன் வெளிப்பட்டு நிற்கும்.

இந்தியாவை பொறுத்த மட்டில் தமிழ் நாட்டில் பிரச்சனையை உருவாக்காத ஒரு தீர்வு( அல்வா) வை இலங்கை தமிழருக்கு ஊட்டி விட்டாலே போதும் அந்த அல்வாவை அன்பாக ஊட்டினாலும் சரி அடிச்சு ஊட்டினாலும் சரி ஆனால் தன்னை பிராந்திய வல்லரசு என்று ஏற்று கொண்டு தனோடு மட்டும் தான் படுக்க வேண்டும்( ஊரில் சில விபச்சாரிகள் இருப்பார்கள் ஆனால் அவர்களை தனோடு மட்டும் தான் படுக்க சொல்லி அந்த ஊரில ஒரு பன்னையார் இருப்பபர்) அது போல.............

அட நாங்கள் இந்தியாவும் உலகமும் தமிழரின் போராட்டத்திற்கு எதிரானவை எண்டொல்லே நினைச்சுப் போட்டம். பதிவுக் கட்டுரையாளர் உலக நாடுகள் மற்றும் இந்தியா ஆகியன தமிழரின் சுயநிர்ணயப் போராட்டத்திற்கு எதிரானவையல்ல என்ற அந்த நாடுகளின் கொள்கையை தெளிவாக விளங்கப்படுத்தியுள்ளார்.

ஆனா... எனக்கொரு சந்தேகம். கட்டுரையை எழுதிய ஆண்ணாச்சிக்கு சுயநிர்ணயம் எண்டா என்னவென்று தெரியுமோ?

தென் ஒசெற்றியாவுக்கு கிடைக்கப் போறது தான் மின்னல் அண்ணை. கொசவோவுக்கும் கிடைச்சதெல்ல கொஞ்ச மாதங்களுக்கு முன்னர்.

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஒசெற்றியாவுக்கு கிடைக்கப் போறது தான் மின்னல் அண்ணை. கொசவோவுக்கும் கிடைச்சதெல்ல கொஞ்ச மாதங்களுக்கு முன்னர்.

ஓ இந்த சுதந்திரமோ குறுக்கண்ணாச்சி, தென் ஒசெற்றியாவுக்கு ரஸ்யா சொல்லும் போது கக்கா இருக்க வேணும். பிறகு கொசவோவுக்கு அமெரிக்கா சொல்லும் போது கக்கா இருக்க வேணும். நீங்கள் யார் சொல்லும் போது கக்கா இருக்கப்போறீங்கள் அண்ணாச்சி. மன்னிக்கவும் மின்னல். குறுக்கின் நக்கலுக்கு நக்கல் மட்டுமே.இவரின் கருத்துக்கள் சில நியாயமாக இருந்தாலும் பல அரசுக்கு வக்காலத்து வாங்குவதாகவே உள்ளது என்னை போல பலரின் பார்வையில்.

Edited by nunavilan

தென் ஒசெற்றியாவுக்கு கிடைக்கப் போறது தான் மின்னல் அண்ணை. கொசவோவுக்கும் கிடைச்சதெல்ல கொஞ்ச மாதங்களுக்கு முன்னர்.

அண்ணை சுயநிர்ணயம் தொடர்பில் எனக்கு கொஞ்சம் விளக்கம் இருந்தது. உங்களின் மேலதிக விளக்கத்திற்கு நன்றி.

ஆனா நான் கேட்டது. கட்டுரையை எழுதிய அண்ணாச்சிக்கு சுயநிர்ணயம் பற்றிய விளக்கம் இருக்கா எண்டு?

இந்தாங்கோ இந்தியா தொடர்பில் எங்கடை இதயச்சந்திரன் அண்ணையின் கட்டுரை.

தமிழக மீனவர்கள் தினந்தோறும் கொல்லப்படும்போதுஇ இந்திய இலங்கையின் நூற்றாண்டு கால ஆழமான உறவினைஇ பிரதமர் மன்மோகன் சிங் வெளிப்படுத்தியுள்ளார்.

சார்க் மாநாட்டில். இது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போலிருந்தது.

கச்சதீவை மீளப் பெற்றால்இ இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறல்கள் தடுக்கப்படுமென தப்புக் கணக்குப் போடப்படுகிறது.

இந்த கச்சதீவு கைமாறிய வரலாற்றை சிறிது பார்க்கலாம்.

கச்சம் என்றால் ஆமை என்றும் பொருள்படும். பச்சை நிற ஆமைகள் நிறைந்த இடமாக அத்தீவு விளங்கியதால்இ அதனை பச்சைத்தீவென்றே முன்பு அழைத்தார்கள்.

பின்னர் கச்சதீவாக மாறிவிட்டது.1882 ஆம் ஆண்டு முதல் இராமநாதபுரம் சேதுபதியின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சதீவுஇ பின்னர் கிழக்கிந்திய கம்பனியால் குத்தகைக்கு எடுக்கப்பட்டது.

பிரித்தானியரிடமிருந்த இந்தியா சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் 1974 ஆம் ஆண்டுவரை இக் கச்சதீவு இந்திய இறையாண்மைக்கு உட்பட்ட பிரதேசம்தான்.

இக் கச்சதீவுக் கையளிப்பில் ஒரு வித அரசியல் சூத்திரமும் புதைந்துள்ளது.1974 ஆம் ஆண்டில்இ இந்தியா பொக்ரனில் நடத்திய அணுகுண்டு வெடிப்பு பரிசோதனையில் இருந்து ஆரம்பமாகிறது இந்த கச்சதீவுப் பரிமாற்றம்.

உலக நாடுகள் பலவற்றிலிருந்து எழுந்த கண்டனங்களை தமது பிராந்திய நலனிற்குச் சாதகமாக பயன்படுத்த முயன்ற பாகிஸ்தான் அரசுஇ ஐ.நா. சபையில் இந்தியாவிற்கெதிராகத் தீர்மானமொன்றினைக் கொண்டு வர முயற்சித்தது.

ஐ.நா.விலுள்ள இலங்கைப் பிரதிநிதியை தம்பக்கம் ஈர்க்கஇ எட்டு நிபந்தனைகளுடன் கூடிய இந்திரா சிறிமா ஒப்பந்தமொன்று 1974 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் திகதியன்று உருவானது.

அணுகுண்டு பரிசோதனையால் எழுந்த எதிர் ப்பலைகளை தணிக்கஇ இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்ட நிலமே இந்த கச்சதீவாகும்.

அதனைத் தொடர்ந்து1976 மார்ச் 23 ஆம் திகதியன்றுஇ மன்னார் வளைகுடா கடல் எல்லையை வரையறுக்கும் ஒப்பந்தமொன்றும் உருவானது.

புதிய உலகக் கோட்பாடு உருவாக முன்னர் நடந்த நிகழ்வுகள் இவை.

ஆகவே இலங்கையின் ஆதரவினைப் பெறஇ இந்தியா வழங்கிய நன்கொடையாகவும் கச்சதீவினைக் கருதலாம் அல்லது கையூட்டாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

சிங்கள தேசத்தை தனது ஆளுகைக்குள் இழுத்துவர இந்தியா மேற்கொண்ட நகர்வுகள் யாவும்இ தமிழ் மக்களின் நலன்களை அடகு வைத்தே முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இத்தகைய இந்திய நகர்வுகளின் படிமுறை வளர்ச்சியில் மாகாண சபைத் திணிப்பும்இ ஆயுத உதவிகளும் பதியப்பட்டுள்ளன.

இந்தியாவின் முழுமையான பார்வையும் அவதானிப்பும் தற்போது சிங்களதேசத்தை நோக்கித் திருப்பப்பட்டுள்ளது என்பதே சரியான கணிப்பாகும்.

தென்னாசியப் பிராந்தியத்தில் முனைப்புப் பெற்றுள்ள வல்லாதிக்க நாடுகளின் முரண்நிலைக் களத்தில்இ தமிழர் நலன் குறித்த மனித நேயப் பார்வை இந்தியா விற்கு அவசியமில்லாமல் போய்விட்டது.

தேசிய இனங்களிடையே நிலவும் முரண்பாடுகளை தனது ஆதிக்க அபிலாஷைகளுக்கான கருவியாக இந்தியா பயன்படுத்துவதை புரிதல் வேண்டும்.அரசியல்இ பொருளாதார ஆக்கிரமிப்பிற்கான இராஜதந்திர நகர்வுகளின் வெளிப்பாடுகளை "சார்க்' மாநாட்டிலும் இந்தியா புலப்படுத்தியது.

ஓர் உலகம்இ ஒரு கனவின் மொத்த உருவ மாக அமெரிக்கப் பேரரசு வெளிக்கிளம்புவ தற்கு முன்னர்இ இலங்கையை தன் வலைக்குள் வீழ்த்தஇ இந்தியா வழங்கிய கச்சதீவு நன் கொடைகள்இ இன்று பிரதிபலனை அறுவடை செய்யும் காலத்தை தொட்டு நிற்கிறது.

சிங்கள தேசத்தைத் தன் காலடியில் விழ வைக்க உபயோகிக்கப்பட்ட தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தைஇ அதற்கு எதிரான தளத்தில் நின்றும் இந்தியா பயன்படுத்துகிறது.

பொருளாதார ஆக்கிரமிப்பினை வெளிப்ப டையாகவும்இ சிங்களதேசம் விரும்பும் தமிழின அழிப்பிற்கான இராணுவ உதவிகளை மறைமுகமாகவும் கடைப்பிடிக்கும் இந்திய இராஜதந் திர இரட்டைப் பாதையானதுஇ குறிக்கோள் எட்ட முடியாத சமாந்தரப் பயணத்தில் முடிவ டையலாம்.

சீனப் பிடிக்குள் சென்றடைந்த மியன்மாரின் எண்ணெய் வளங்களிலிருந்தும் இந் தியா பாடம் கற்கவில்லை.

தவறான பாதையில் தவறவிட்ட அனுகூலங்களைஇ இன்னுமொரு பிழையான பாதையில் பெற்றுக் கொள்ளலாமென முயற்சிப்பது போலுள்ளதுஇ மன்னார் எண்ணெய் வளத்தை முழுமையாகக் கையகப்ப டுத்த இந்தியா மேற்கொள்ளும் நகர்வுகள்.

மன்னாரிலுள்ள இதில் எண்ணெய் வளம் என்பதை விடஇ அக்கடல் பிராந்தியத்துள் எதிரி கால் பதிக்கக் கூடாதென்பதே இந்திய வல்லாதிக்கத்தின் தேவை யாகவிருக்கிறது.

அதாவது வளப்பங்கீடு என்பதற் குமப்பால்இ தமது ஆதிபத்திய எல் லையோடு ஒட்டிய கேந்திர முக்கி யத்துவம்மிக்க கடல்இ தரைப் பிரதே சங்களில் சீனாஇ பாகிஸ்தானின் நிலையெடுப்பு நிகழும் வாய்ப்பினை முறிய டித்தலே இந்திய கொள்கை வகுப்பாளர்க ளுக்கு தற்போது இருக்கும் தலையாய பிரச்சி னையாகவுள்ளது.

கொழும்பில் வாடகை வண்டியில் பயணித்த எம்.கே.நாராயணனின் முதன்மையான பணியும் இதுதான்.

ஏற்கனவே கொழும்பு வட்டாரத்தில் தீவிர விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள "சீபா" எனப்படும் முழுமையான பொருளாதார இருதரப்பு உடன்பாடு சிங்கள தேசிய முதலாளி களால் நிராகரிக்கப்படும் நிலையிலுள்ளது.

இவ்வொப்பந்தம் ஊடாக ஒரு முழுமை யான பொருளாதார ஆக்கிரமிப்பினை தம்மீது இந்தியா செலுத்த முற்படுவதாக சிங்களம் அச்சமடைவதாகவும் கூறப்படுகிறது.

அதாவது பிரித்தானிய காலனித்துவ ஆதிக்கம் முடிவடைந்து 60 ஆண்டுகள் கடந்த பின் னர்இ இந்தியாவின் நவீன காலனி ஆதிக்கத்துள் இலங்கை அகப்பட்டுஇ இந்தியாவின் 27 ஆவது மாநிலமாக இணையும் நிலை தோன்றப்போவ தாகஇ ஜே.வி.பி. எச்ச?க்கின்றது.

வெள்ளைப்புலி நோர்வேயை வெளியேற்றிஇ இந்திய அனுசரணையுடன் இனப்பிரச்சி னையை தீர்க்க முடியுமென்றுஇ முன்னர் இந்தி யாவிற்கு சாமரம் வீசியவர்கள்தான் இந்த ஜே.வி.பி.யினர்.

கொழும்பு அரசியல் களத்தில் தற்போது நோர்வே இல்லை. இன்று சிங்கள தேசத்தின் இறையாண்மைக்குள் ஊடுருவ முயலும் இந்தியாவையும் அகற்றிவிட்டால்இ சீனாவை உள் நுளைத்துஇ தமது சிவப்புச் சாயத்தை அழிய விடாமல் காப்பாற்றிக்கொள்ளலாமென்பதே ஜே.வி.பி.யின் நீண்ட மூலோபாயம்.

ஆனாலும் தலைமைப் பொறுப்பில் இருக் கும் பெருந்தேசிய வாத கூட்டுகள்இ வேகமாக முன்னெடுக்கும் இராஜதந்திர நகர்வுகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் ஜே.வி.பி. யினால் இயங்க முடியவில்லை.

இந்திய "சீபா' விற்குள் அகப்பட்டால்இ சீனா வின் நிரந்தர ஆதரவுஇ விலகிச் சென்று விடு மென்ற அச்சம்இ ஜே.வி.பி.க்கும் உண்டு.

"சார்க்' மாநாட்டில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகளைப் பார்க்கிலும்இ பார்வையாளர்களாகக் காட்சி தந்தவர்களே பலவான்கள் என்பதை கவனிக்க வேண்டும்.

சிங்கள தேசத்தை ஏதாவதொரு அணி இழுத்துச் சென்று விடுமென்கிற அச்சத்தையேஇ இவ்வுலக வல்லரசாளர்களின் "சார்க்' மாநாட்டு பிரசன்னம் புலப்படுத்துகிறது.

ஐ.நா. சபை மனித உரிமைச் சபையின் உறுப்புரிமை நிராகரிக்கப்பட்டுஇ சர்வதேச அளவில் ஏற்பட்ட தலைகுனிவை சரிசெய்ய "சார்க்' மாநாட்டை பயன்படுத்திக் கொண்டது அரசாங்கம்.

மாலைதீவில் நடைபெறவிருந்த மாநாட்டைஇ 300 கோடி ரூபாய் செலவில் இலங்கையில் நடத்த அரசாங்கம் முனைந்த பின்னணியின் தாற்பரியம் இதுவாக இருக்க வேண்டும்.

ஆனாலும் அரசாங்கத்தின் எண்ணம்இ பயங்கரவாதத்திற் கெதிரான தீர்மானம் ஒன்றினூடாக நிறைவேறியுள்ளது.

"சீபா' ஊடாகஇ இந்திய ஆதிக்கத்துள் இலங்கையை இழுத் துவரும் மன்மோகன்சிங் குழுவினரின் நோக்கம் நிறைவே றவில்லை.

அதேபோன்று "பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்' ஒன் றினை இலங்கையுடன் கைச்சாத்திட இலங்கை சென்ற பா கிஸ்தானின் கனவும் நிஜமாகவில்லை.

இறுதிவரை முயன்றும் "சீபா'வை ஒப்பேற்ற முடியாமல் போன நிகழ்வுஇ இந்திய இராஜதந்திர தோல்வியாகவே கணிக்க வேண்டும். திருமலை எண்ணெய் குதம்இ மன்னார் எண்ணெய் படுக்கைஇ காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சா லையென வட கிழக்கு பிரதேசத்தை மட்டும் தமக்களித்துஇ தமிழர் பிரதேசத்துள் இந்தியக் கனவினை முடக்க சிங்கள தேசம் முற்படுவதனை பிரதமர் மன்மோகன்சிங் புரிந்து கொள்வதால்இ முழு இலங்கையையும் தனது கட்டுக்குள் கொண்டுவர "சீபா' உடன்பாட்டினை உயர்த்திப் பிடிக்கி றார்.

இதேவேளை மன்னார் ஆகாயப் பரப்பிலிருந்து புதிய செய்தியொன்று கசிகிறது.

கடந்த சில நாட்களில்இ இலங்கை வான் படைக்குச் சொந் தமான இரண்டு உலங்கு வானூர்திகள் சேதமுற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னாரில் அவசரமாகத் தரையிறங்கிய ஒரு உலங்குவாணூர்தியில்இ இந்தியப் படையினர் பயணம் செய்ததாக சிங்களப் பத்திரிகையொன்று செய்திவெளியிட்டுள்ளது.

இச்செய்தி உண்மையாகவிருந்தால்இ காந்தி தேசத்தின்இ தோல்வியுறும் வெளியுறவுக் கொள்கையின் நீண்ட பட்டியலில் இலங்கையும் இணைந்து கொள்ளுமென்பதே சத்திய மான உண்மையாகும்.

Edited by மின்னல்

சுயநிர்ணயத்தினை இந்தியாவோ இலங்கையோ தரமாட்டாது என்பது வெளிப்படை. அதனால்தானே தமிழீழக் கோரிக்கை. இது சுயநிர்ணயத்திற்கும் மேற்பட்டது. சுதந்திரத் தமிழீழம் என்பதுதான் போராட்டத்தின் முன்னெடுப்பு. அதிலிருந்து தமிழர் போராட்ட சக்தி இன்னமும் விலகவில்லை. அரசியல் தேவைகளுக்காக ஏனைய தீர்வுகள் ஆராயப்படுகின்றன.

அதனிலும் மன்மேகன்சிங் பிள்ளையான் சந்திப்பென்பது இந்தியாவின் கொள்கையைத்தான் காட்டும் அந்தளவிற்கு கீழிறங்கி வருவதற்கு இந்தியா தயாரில்லை. இந்தியா தமிழருக்கு அல்வா கொடுக்கிறதோ இல்லையோ, சிங்களம் இந்தியாவிற்கு அல்வா கொடுத்தே தீரும்.

மின்னல் இதயச்சந்திரன் நல்லதொரு கண்ணோட்டத்தில் கட்டுரை எழுதியுள்ளார். இந்தியாவின் தற்போதைய அசுர பொருளாதார வழர்ச்சி என்பது அதற்கு புதிய வசதி வளங்கள் மூலம் மேலதிக தெரிவுகளை கொடுக்கும். இதற்கு இணையாக இயங்கக் கூடியது சீனா ஒன்றே. அதற்குரிய அனுபவபட்டறிவும் சீனாவிடம் தான் இருக்கு. பாக்கிஸ்தானை பயன்படுத்தி ஏனையவர்கள் தமது நலன்களை முன்னகரத்திக் கொள்வார்கள்.

பொருளாதார வழர்ச்சி தற்போதைய வேகத்தில் சென்றால் குறைந்தது இன்னமும் 10 வருடங்களில் இந்தியாவின் சமூக புவியல் அரசியல் புவியல் (economic geography ->social geography-> political geography) கணிசமான மாற்றத்தை கண்டுவிடும். எமது போராட்டத்தில் இலங்கைத்தீவில் இதன் தாக்கத்தை சரியாக கணிப்பிடுவது முக்கியமானது.

Edited by kurukaalapoovan

என்ன கட்டுரைப் போட்டி நடத்துறியளோ அண்ணமார் ஆள் ஆளுக்கு இந்தா அந்தக் கட்டுரையை பார் இந்த இதைப்பார் இந்தா அதுக்கள்ள பார் இந்தா கொஞ்சம் குனிஞ்சு பார் எண்டுறியள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.