Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி நகரைப் பிடிப்போம் - கோத்தபாய.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தின் த ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் கிளிநொச்சி நகரை இந்த ஆண்டு இறுதிக்குள் தமது படைகள் கைப்பற்றிவிடும் என்று கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தனது படைகள் பல வெற்றிகளைக் குவித்த வண்ணம் முன்னேறி வருகின்றனர் என்றும்... 6500 சதுர கிலோமீற்றருக்குள் நின்ற புலிகளை 5000 சதுர கிலோமீற்றருக்குள் அடக்கி விட்டுள்ளதாகவும், 13,000 பேராக இருந்த அவர்களின் ஆளணியை 5,000 ஆகக் குறைத்திருப்பதாகவும் கோத்தபாய தெரிவித்திருக்கிறார்.

புலிகளை கிளிநொச்சியில் இருந்தும் அகற்றி காடுகளுக்குள் ஓட அனுமதிக்க மாட்டோம். அவர்களை தேடி அழித்து பூண்டோடு இல்லாது செய்வேன் அப்போதுதான் இந்த நாட்டில் பிரச்சனை தீர்ந்து சமாதானம் வரும் என்றும் கூறியுள்ளார்.

தனது படைகள் புலிகளின் முக்கிய கடற்படை தளத்தைக் கைப்பற்றி தற்போது கிளிநொச்சியினுள் உள் நுழைந்துள்ளனர் என்றும் கோத்தபாய இறுமாப்பு வெளியிட்டுள்ளார்.

--------------

இதற்கிடையே கெகலிய ரம்புக்வல ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்தில்.. படையினரின் அடுத்த இலக்கு பூநகரி - மன்னார் வீதியை மக்கள் பாவனைக்குத் திறப்பதுதான் என்று கூறியுள்ளார். புலிகளின் பலம் பலவீனம் கண்டு படையினர் வெற்றிகரமாக அவர்களை தாக்கி அழித்து வருகின்றனர் என்று ரம்புக்வல படையினர் குறித்து பெருமிதம் வெளியிட்டுள்ளார்.

--------------

Gota confident of capturing Killinochchi by year’s end

Defence Secretary Gotabaya Rajapaksa insists that the army is on target to capture the Kilinochchi town, the Tigers' capital, in the next four months.

"It's possible by the end of this year," he told The Times newspaper in England.

"You can't just push them into the jungles and wait. You have to search for them and completely eradicate them. Only then can peace come."

The army says it has shrunk the Tigers' territory from 6,500 to 5,000sqkm and reduced their forces from 13,000 to 5,000 "cadres". Last month it captured one of the Tigers' main naval bases. Last week it entered Kilinochchi district.

dailymirror.lk

------------------

இதில் ஒரு முக்கிய விடயத்தைக் கவனிக்க வேண்டும்.. புலிகளின் அழிவோடு நாட்டில் சமாதானம் உருவாகும் என்பது.. ஒட்டுக்குழுக்களின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. கோத்தபாய தனது செவ்வியில் தமிழ் மக்களின் உரிமைக்குரலுக்கு தீர்வு என்ன என்பதையோ.. இனப்பிரச்சனைக்கு தீர்வு என்ன என்பதையோ சொல்லவில்லை..!

புலி வாழும் வரைதான் அவர்களுக்கும் வாழ்வு என்பதை கோத்தபாய சொல்லாமல் சொல்லி இருக்கிறார். அதுமட்டுமன்று புலிகள் வாழும் வரைதான் தமிழ் மக்களின் உரிமைக்கான குரல் ஒலிக்கும். மற்றும்படி தமிழர்கள் அடிமைகள் தான் என்பதை கோத்தபாய கோடிட்டுக் காட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் பலமே புலிகள் தான் என்பதை கோத்தபாய உறுதி செய்திருக்கும் இவ்வேளையில்.. புலிகளின் பலத்தை அதிகரிப்பதே.. தமிழ் மக்களை பாதுகாக்கும் என்பது நிதர்சனமான உண்மை..! :lol:

Edited by nedukkalapoovan

புலிகள் பாயும் வரை இவர்களின் பேட்டிகளை வாசிக்கத்தான் வேண்டும் அது எமது யாழ் கள விதி

மன்னித்து கொள்ளுங்கள் எமது தலை விதி

------------------

இதில் ஒரு முக்கிய விடயத்தைக் கவனிக்க வேண்டும்.. புலிகளின் அழிவோடு நாட்டில் சமாதானம் உருவாகும் என்பது.. ஒட்டுக்குழுக்களின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. கோத்தபாய தனது செவ்வியில் தமிழ் மக்களின் உரிமைக்குரலுக்கு தீர்வு என்ன என்பதையோ.. இனப்பிரச்சனைக்கு தீர்வு என்ன என்பதையோ சொல்லவில்லை..!

புலி வாழும் வரைதான் அவர்களுக்கும் வாழ்வு என்பதை கோத்தபாய சொல்லாமல் சொல்லி இருக்கிறார். அதுமட்டுமன்று புலிகள் வாழும் வரைதான் தமிழ் மக்களின் உரிமைக்கான குரல் ஒலிக்கும். மற்றும்படி தமிழர்கள் அடிமைகள் தான் என்பதை கோத்தபாய கோடிட்டுக் காட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் பலமே புலிகள் தான் என்பதை கோத்தபாய உறுதி செய்திருக்கும் இவ்வேளையில்.. புலிகளின் பலத்தை அதிகரிப்பதே.. தமிழ் மக்களை பாதுகாக்கும் என்பது நிதர்சனமான உண்மை..! :lol:

மிகவும் சரியாக சொன்னீர்கள் நெடுக்ஸ் இங்கு புலிகள் என்று எந்தப்பேரினவாதியும் பார்ப்பது தமிழ் மக்களைத்தான் இதன் மூலம் கோத்தபாய என்ன முழு சிங்கள இராணுவ மேலாதிக்கதின் ஆசையுமே புலிகளாகிய மக்களை நசுக்குவதன் மூலம் தமிழர் விடுதலைப்போரையும் அவர்தம் தாயகக்கோட்பாட்டையும் நசுக்கிவிடலாம் என்ற நப்பாசைதான்.

தமிழீழ மக்களாகிய எங்களைப் பொறுத்த வரையில் மோட்டுத்தனமாக கர்ச்சித்த எத்தனையோ கிழட்டுச் சிங்கங்களைப் பார்த்து விட்டோம். சிங்கராஜன் + சிங்கவல்லி வம்ச வழியில் வந்த இந்த சிங்கமும் ஓடி ஒழியும் காலம் வரும்.

இறுதியாக மட்டு அம்பாறை அரசியல் துறையின் அறிக்கையில் இருந்து சிலவரிகளுடன் ........................

அன்பார்ந்த மக்களே!

கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழீழ விடுதலைக்காக தமது சுயநலத்தை துறந்து, தாய் தமிழ் மொழிக்காகவும் தாய்நிலத்துக்காகவும் தன் இன உரிமைக்காகவும் ஒவ்வொரு தமிழனின் பாதுகாப்பிற்காகவும் களமாடி வீரச்சாவடைந்த இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகத்தை சிங்கள பேரினவாத படைகளுடன் இணைந்துநின்று களங்கப்படுத்தும் தேச துரோகிகளின் செயல்களுக்கு அடிபணிந்துபோகாது உரிமை குரல்கொடுத்து தன்மான தமிழர் நாமென தமிழீழ விடுதலைப்போருக்கு தோள் கொடுங்கள்.

எமக்கு தோள்கொடுத்து தாய் மண்ணின் விடுதலைக்கு தோள் கொடுத்த தன்மான தமிழன் என்று ஒவ்வொருவரும் உங்கள் நெஞ்சில் மார்தட்டி சொல்லும் வண்ணம் உங்களின் செயல்களை அமைத்துக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டிநிற்கின்றோம்.

Edited by thamizhanpan

டிசம்பர் மாதமளவில் கிளிநொச்சியை மீட்டெடுக்க முடியும் என்கிறார் பாதுகாப்புச் செயலாளர்

இந்த ஆண்டின் டிசம்பர் மாத இறுதிக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைநகராகக் கருதப்படும் கிளிநொச்சியை மீட்டெடுக்க முடியுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ சூளுரைத்துள்ளார்.

யுத்த முன்நகர்வுகளின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை வனாந்திரப் பகுதிகளுக்கு பின்வாங்கச் செய்வதன் மூலம் முழுமையாக யுத்த வெற்றியை ஈட்ட முடியாதென அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் பதுங்கியிருக்கும் நிலைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களை பூரணமாக தோல்வியடைச் செய்வதன் மூலNமு சமாதானத்தை நிலைநாட்ட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தை வெறும் 5000 சதுரகிலோ மீற்றர் அளவிற்கு குறைப்பதற்கு இராணுவப் படைவீரர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும்இ படையினர் மேற்கொண்ட தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலி போராளிகளின் எண்ணிக்கை 5000 த்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் நான்கு மாத காலப்பகுதியில் புலிகளின் தலைநகர் கிளிநொச்சியை மீட்டெடுக்க முடியுமென லண்டன் டைம்ஸ் செய்தித்தாழுக்கு கோதபாய தெரிவித்துள்ளார். இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஆகியோர் அடிக்கடி யுத்த வெற்றிகள் குறித்து முன்னுக்கு பின் முரணான தகவல்களை வெளியிட்டு வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

நன்றி தமிழ் வின்

Edited by THEEPAN0007

ஈழத்தமிழ் மக்களின் தற்போது மிக மிக முக்கிய காலகட்டத்தில் உள்ளனர்......

அதை பிடித்து விடுவோம், இதை பிடித்து விடுவோம் என கூறி பலவீனமாக்குவான்...

இவ்வளவு காலத்தின் உயிர் இழப்புகள். சொத்து இழப்புகள் பொறுமைகளுக்கு பலன்

நிரந்தர சிங்களத்திடமிருந்து விடுதலையா?

அல்லது நிரந்தர அடிமையாக வாழ்வா?

வெற்றியில் தான் எப்போதும் ஆதரவு என்பதை விட்டு........

எமது இனத்திற்கு நிரந்தர ஆபத்து வந்துள்ளது என்னும் அவசர அடிப்படையில் எவ்வித வேறுபாடு

முரண்பாடுகள் இன்றி எல்லாத்தமிழ் மக்களும் இணைந்து

செயல்பட வேண்டிய காலம் இது...

எப்போது எம்படை பாய வெளிகிடுகிறதோ அன்று முதல் அதிசயவைக்கும் வரையில் நிலைமை

மாறும் அதுவரை எம்மக்கள் ஒற்றுமை காத்து உறுதுணையாக இருப்பது காலத்தின் தேவை....

தமிழர் படை வெல்லும்.

புலம் பெயாந்த தமிழ் மக்கள் நினைத்தால் எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் கோத்தபாயாவை போர்குற்றவாளியாக்கி சர்வதேச போர் குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்த முடியும் அல்லது மகியங்கனைக் காட்டுக்குள் ஓடி ஒழியும் நிலையை உருவாக்க முடியும்.

பிரான்சின் பட்டிணிக்கு எதிரான அமைப்பின் பணியாளர்கள் கொல்லப்பட்ட விடயத்தில் சிறீலங்கா அரசபடைகளே சம்பந்தப்பட்டிருக்கின்றன் என்பதை பல்வேறு தரப்பினர் பிரான்ஸ் அரசாங்கத்தக்கு உணர்த்தியிருக்கின்றனர்.இது தொடர்பாக இதுவரை நடைபெற்ற விசாரணைகளை குற்றவாளிகளான அரச படையினரை காப்பாற்றும் விதமாகவே சிறீலங்கா அரசு மேற்கொண்டிருக்கிறது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கி

Edited by athiyan

நல்ல விடயம் ஆதியன். இந்த விடயம் முன்னெடுக்கப்பட்டால் சில விளைவுகள் தமிழருக்கு ஏதுவான நிலையை உருவாக்கலாம்.

இங்குள்ள தொலைக்காட்சிகள் வலைக்காட்சிகள் வானொலிகள் எல்லாம் தமிழ் தேசியத்தை அதிகம் ஆதரிப்பது யார் என்பது தொடர்பான ஓட்டப் போட்டிகளை நிறுத்திவிட்டு கோத்தபாய சிறீலங்காவின் பாதுகாப்பு செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் இடம்பெற்ற படுகொலைகள் ஆட்கடத்தல்கள் மக்களை இராணுவ நடவடிக்கைகைள் மூலம் கட்டாயமாக இடம் பெயர வைத்தமை.அதி உயர் பாது காப்பு வலயங்கள் என்ற பெயரில் மக்களின் வாழ்விடங்களைப் பறித்தமை.கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர்களை இரவோடு இரவாக வெளியேற்றியமை உட்பட்ட அனைத்து விடயங்களையும் துறை சார் முறையில் ஆங்கிலம் பிரெஞ்சு ஆகிய மொழிகளில் ஆவணப்படுத்தி அனைத்துலக ஊடகப் பரப்புக்குள்ளும் சர்வதேச இராஜதந்திர மட்டத்திலும் அவை சென்றடைவதற்கு முயற்சி எடுக்கவேண்டும்.

இதை எல்லாம் செய்வதற்கு எங்களுக்கு வழங்கள் இல்லை தரவுகள் இல்லை.ஆளணி பற்றாக்குறை என்றெல்லாம் தயவு செய்து நொண்டிச் சாட்டுகள் சொல்ல வேண்டாம்.அப்படி நொண்டிச் சாட்டு சொல்வதாக இருந்தால் தயவுசெய்து தமிழ்தேசிய ஆதரவுத் தளங்கள் என்று முத்திரை குத்த வேண்டாம்

இதுவரை 11 ஆயிரம் பேர் தான் கையொப்பம் இட்டிருக்கிறார்கள்.

கோத்தபாயவின் வழி நடத்தலின் கீழேயே சிறலங்கா அரச படைகள் இயங்கி வரும் நிலையில் இந்த படுகொலை உட்பட தமிழர் தாயகத்திலும் கொழும்பிலும் நடந்த ஆட்கடத்தல்கள் படுகொலைகள் என்பவற்றை சான்றாதாரங்களாக்கி கோத்தபாயாவை போர் குற்றவாளியாக அறிவிக்கும் படி அனத்துலக சமுகத்தைஅ கோரவேண்டும்.பொங்க தமிழுக்கு பொங்கி எழுந்ததைப் போல இந்த விடயத்துக்கு எங்கள் மக்களை பொங்கி எழ வைக்க வேண்டும்.கண்டனங்கள் ஆர்பாட்டங்கள் சட்டரீதியான நடவடிக்கள் என்று இவற்றை முழ உத்வேகத்தடன் செய்ய வேண்டிய இன்றைய வரலாற்றுக்கடமையாகும்.

அதியனின் கருத்தை நானும் வரவேற்கிறேன்.....

இதனை இலகுவான வ்ழிகளிள் கைஜெழுத்து வேட்டைகளை மாற்றினால் எல்லோருக்கும் சென்றடைந்து ஆகக்கூடுதலான பலன் கிடைக்கும்..

த்துடன் வெளினாடுகளிளில் வாழும் இலங்கையரசின் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட எத்தனையோ ஆயிரம்

தமிழ் மக்கள் சர்வதேச நீதி மன்றங்களுக்கு முறையிட்டு வழக்குகள் போட்டு இலங்கையரசை

குற்றவாளியாக கொண்டுவந்து எமக்கு நடக்கும் அ நீதிகளை உலகின் பார்வைக்கு கொண்டுவரமுடியும்..

இதற்கு எமது பிரபலமான வெளினாடுகளில் இயங்கும் சட்டத்தரணிகளும்,வெளினாட்டு சட்டத்தரணிகளும் சேர்ந்த அமைப்புகளை நிரந்தரமாக ஒழுங்கு பண்ணி தொடர்ஷியாக

வழக்குகளை நடத்த முடியும்.. இதனால் இலங்கையின் முகமூடி கிழியும்...

ஏண் உரியவர்கள் நடவடிக்கை எடுக்க முடியாது? ஆமையோட்டினுள் தலையை உள் வைத்துருப்பது போல்

இருந்தால் இலங்கையின் அரச பயஙரவாதம் எல்லா தமிழ் மக்களையும் முழுங்கிவிடும்...

புலம் பெயாந்த தமிழ் மக்கள் நினைத்தால் எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் கோத்தபாயாவை போர்குற்றவாளியாக்கி சர்வதேச போர் குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்த முடியும் அல்லது மகியங்கனைக் காட்டுக்குள் ஓடி ஒழியும் நிலையை உருவாக்க முடியும்.

பிரான்சின் பட்டிணிக்கு எதிரான அமைப்பின் பணியாளர்கள் கொல்லப்பட்ட விடயத்தில் சிறீலங்கா அரசபடைகளே சம்பந்தப்பட்டிருக்கின்றன் என்பதை பல்வேறு தரப்பினர் பிரான்ஸ் அரசாங்கத்தக்கு உணர்த்தியிருக்கின்றனர்.இது தொடர்பாக இதுவரை நடைபெற்ற விசாரணைகளை குற்றவாளிகளான அரச படையினரை காப்பாற்றும் விதமாகவே சிறீலங்கா அரசு மேற்கொண்டிருக்கிறது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கி

பட்டிணிக்கு எதிரான அமைப்பின் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான சர்வதேச விசாரணையை கோருவது அதுவும் பிரான்ஸ் அரச தரப்பிலிருந்து கோர முற்படுவது சிறீலங்கா அரசின் இனப்படுகொலைகளையும் பௌத்த சிங்கள பேரினவாதத்தையும் சர்வதேச சமூகத்துக்கு அம்பலப்படுத்துவதற்கு எங்களுக்கு கிடைத்துள்ள அருமையான சந்தர்ப்பமாகும்.ஆமி மல்லாவிக்கு வந்திட்டானாம் நாயாற்றுக்கு வந்திட்டானாம் என்று உச்சுக் கொட்டிக்கொண்டிருக்காமல் அனைவரும் செயலில் இறங்க வேண்டும்.பிரான்ஸ் வெளி விவகார அமைச்சுக்கு இலட்சக் கணக்கில் மனுக்கள் குவிய வேண்டும்.

கோத்தா நாய் குலைப்பது பயத்தில்.

புலிகள் வலிந்தபோரைத் தொடங்கிவிட்டார்கள் எங்கேதோற்றுவிடுவோமோ என்றபயம் கோத்தாக்கு அதுமட்டுமல்ல

சிங்களமக்களை பொய்சொல்லியே திருப்திப்படுத்தமுடியும். இல்லயென்றால் தேர்தலில் படுதோல்வியை சந்திக்க நேரிடும். மறுபுறத்தில் கருநாய் ஒன்று தெருநாயாக மாறி குலைத்துத்திரிகிறது. தான்தானாம் முதலில் எல்லா வெற்றிக்கும் காரணம்.

வருட இறுதிக்குள் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டுவிடும்- கோதபாய ராஜபக்ஷ நம்பிக்கை

இந்த வருட இறுதிக்குள் விடுதலைப் புலிகளின் தலைநகரான கிளிநொச்சியை இராணுவத்தினர் கைப்பற்றிவிடுவார்கள் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோதபாய ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

“விடுதலைப் புலிகளின் தலைநகரான கிளிநொச்சியை அடுத்த நான்கு மாதங்களில் கைப்பற்றும் குறிக்கோளுடன் இராணுவத்தினர் போராடிவருகின்றனர். இந்த வருட இறுதியில் அதனைக் கைப்பற்றுவது சாத்தியப்படும்” என லண்டன் டைம்சுக்கு கோதபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

“அவர்களைக் காட்டுக்குள் தள்ளிவிட்டுக் காத்துக்கொண்டிருக்க முடியாது. அவர்களைத் தேடி முற்றாக அழிக்கவேண்டும். அதன் மூலம் மாத்திரமே சமாதானத்தை அடையமுடியும்” என்றார் அவர்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த 6,500 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவை, 5,000 சதுரக்கிலோ மீற்றராகக் குறைத்திருப்பதாகவும், உறுப்பினர்களின் எண்ணிக்கையை 13 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாகக் குறைத்திருப்பதாகவும் இலங்கை இராணுவத்தினர் கூறியிருப்பதாக லண்டன் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வார இறுதியில் இடம்பெற்ற மோதல்களில் 115 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோதல்கள் இடம்பெறும் பகுதிகளுக்கு ஊடகவியலாளர்கள் செல்ல அனுமதி இல்லையென்பதால் விடுதலைப் புலிகள் உண்மையாக இழப்புக்கள் ஏற்படுகின்றனவா அல்லது இராணுவத்தினரின் தாக்குதல்களை முகம்கொடுக்காமல் விலகிச் செல்கிறார்களா என்பதை அறியமுடியாதிருப்பதாகவும் லண்டன் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்த மோதல்களில் இராணுவத்தினருக்கு வெற்றியேற்பட்டால் என்ன இழப்பின் விலையாக இந்த வெற்றி கிடைத்தது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilseythi.com/srilanka/gota-2008-08-12.html

தலைவரின் kuselan படத்தை பார்த்திர்களா? அதில் எங்கள் போராட்டத்தை வளர்க்க கூடிய மாதிரி தன்னம்பிக்கை தர கூடிய அவரின் பேச்சு என்னகு இன்னும் ஊக்கம் தந்து இருக்கு.

நான் நினைக்கிறேன் எண்ட சின்ன தளபதியின் வில்லு படம் வரும் போது திருமலை எங்கள் கையில் என்று...

தலைவரின் kuselan படத்தை பார்த்திர்களா? அதில் எங்கள் போராட்டத்தை வளர்க்க கூடிய மாதிரி தன்னம்பிக்கை தர கூடிய அவரின் பேச்சு என்னகு இன்னும் ஊக்கம் தந்து இருக்கு.

நான் நினைக்கிறேன் எண்ட சின்ன தளபதியின் வில்லு படம் வரும் போது திருமலை எங்கள் கையில் என்று...

என்னண்ணை தீடிரென்று இப்படி ???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதவிக்கு புதிசுகளுக்கு கோத்தபாயாக்களின் வாய் இருக்கும்!

பதவியின் பழசுகளுக்கு தொலைந்து போனவன் பேர்போல் பேர்மட்டும்தான் இருக்கும்!

திரும்பி உன்பின்னால் உன்பதவிக்கு இருக்கும் வரலாற்றை பார் கோத்தபாய!

சின்னப்புள்ளையாய் துள்ளிக் குதிக்காதே!

ஆமி பூநகரி போனால் தரவவளிப்பாதையாலை யாழ்ப்பாணத்து சனத்துக்கு சாப்பாட்டு சாமான் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமி பூநகரி போனால் தரவவளிப்பாதையாலை யாழ்ப்பாணத்து சனத்துக்கு சாப்பாட்டு சாமான் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும்...

யாழ்பாணத்து ஆமி தரையால் இந்திய உதவி இல்லாமலே ஓடிப்போகவும் வழிகிடைக்கும்!

யாழ்பாணத்து ஆமி தரையால் இந்திய உதவி இல்லாமலே ஓடிப்போகவும் வழிகிடைக்கும்!

உண்மையும் கூட....!! வளி இல்லாவிட்டால் வாழ்வா சாவா போராட்டம் ஆரம்பித்துவிடுவார்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.