Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணமகள் கிடைத்தாள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மணமகள் கிடைத்தாள்

சந்தாலி ராஜ்யத்து மன்னருக்குப் பல ஆண்டுகளாகக் குழந்தையே பிறக்கவில்லை. தனக்குப்பின் ஆட்சிப் பீடத்தில் அமர ஒரு மகன் வேண்டும் என்று மன்னர் மிகவும் ஆசைப்பட்டார். அந்த ஆசை நேடுங்காலமாக நிறைவேறாததைக் கண்டு, பட்டத்து ராணி மன்னரை மற்றொரு விவாகம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்த, மன்னரும் இன்னொரு பெண்ணை மணந்தார். அவளுக்கும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. அதனால், மேலும் இரண்டு பெண்களையும் மணந்து கொண்டார். அதன் பின்னரும், குழந்தைகள் பிறக்கவில்லை.

மன்னருக்கு வாரிசு தோன்றாமல் இருப்பதைக் கண்டு குடிமக்களும் வருத்தமடைந்தனர். ஒருநாள், அந்த ராஜ்யத்திற்கு ஒரு யோகி விஜயம் செய்தார். யோகியின் சக்தியைப் பற்றிக் கேள்விப்பட்ட முதன் மந்திரி அவரை அரண்மனைக்கு வரவழைத்து மன்னரை சந்திக்கச் செய்தார். சகல உபசாரங்களுடன் அவரை வரவேற்ற மன்னர் அவரிடம் தன் மனக் குறையை வெளியிட்டார்.

imagestory.jpg

அதைக் கேட்ட யோகி, "நீ எப்போதாவது இதைக் குறித்துக் கடவுளைப் பிரார்த்தனை செய்து இருக்கிறாயா?" என்று கேட்டார். "ஒரு போதும் செய்ததில்லை!" என்றார் மன்னர். "அதுதான் நீ செய்த தவறு!" என்ற யோகி, "உனக்கு வாரிசு தேவை என்பதை உணர்ந்தும், கடவுளைப் பிரார்த்தனை செய்யாமல் இருந்து விட்டாய்.

imagestory2.jpg

அவருடைய அருள் இருந்தால், அற்புதங்கள் நிகழும்! நீ உன்னுடைய செல்வத்தில் கால் பங்கை ஏழை எளியவர்களுக்கு தானம் செய்! கடவுளைப் பிரார்த்தனை செய்து கொண்டேயிரு! ஓர் ஆண்டிற்குள் உனக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்!" என்றார்.

மன்னர் அவ்வாறு செய்ய சம்மதித்து யோகியை விழுந்து வணங்கினார். அவரும் மன்னரை ஆசிர்வதித்து விட்டு, விடை பெற்றுக் கொண்டார். அதன் பிறகு, தினமும் மன்னர் இறைவன் வழிபாட்டில் தன் முழு கவனத்தையும் செலுத்தினார். சொத்தில் ஒரு பாகத்தை ஏழைகளுக்கு தானமளித்தார். சில நாள்களிலேயே அவருடைய நான்காவது மனைவி கர்ப்பம் அடைந்தாள். அதையறிந்த மன்னரின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பத்து மாதங்களில், அவள் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். ராஜ்யம் முழுவதும் கேளிக்கைகளும், கொண்டாட்டங்களுமாக இருந்தது.

ஆண்டுகள் உருண்டோடின. குழந்தையும் வளர்ந்து வாலிபனாகியது. திருமண வயதை நேருங்கிய இளவரசனுக்குத் திருமணத்திற்காகப் பெண் பார்க்கும் படலம் ஆரம்பமாகியது. மன்னர் ஒருநாள் அந்தப்புரத்தில் தன் மனைவிகளிடம் அதைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினார்.

"நம் மகனுக்குத் தகுந்த பெண்ணை எப்படித் தேடுவது?" என்று மன்னர் கேட்க, அவர்கள் தங்கள் ராஜ்யத்தில் மட்டுமன்றி அண்டை அயல் ராஜ்யங்களிலும் இளவரசனுக்குரிய பெண்ணைத் தேட வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர். அவர்களிடமே மன்னர் அந்தப் பொறுப்பை ஒப்படைத்த மன்னர், "மணமகள் என் மகனின் அழகிற்கு ஏற்றவாறு அதிரூப சுந்தரியாக இருக்க வேண்டும்.

imagestory3.jpg

அவள் அரச குலத்தைப் சேர்ந்தவளாகவோ, தனவந்தர் வீட்டுப் பெண்ணாகவோ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை" என்று கூறினார். மன்னரின் விருப்பப்படி அனைவரும் முனைந்து பெண் தேடினர்.

ஆனால் இளவரசனின் அழகிற்கு ஒப்பான சௌந்தரிய தேவதை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. தனக்காக பெண் தேடுவதை அறிந்த இளவரசன் தன் அன்னையரிடம் "நான் இப்போது திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை. ஆகவே, எனக்காக நீங்கள் சிரமப்படத் தேவையில்லை. என் மனத்திற்குப் பிடித்தப் பெண்ணை, நானே தேர்ந்தெடுத்துக் கொள்வேன்" என்றான்.

ராணிகளின் மூலம் மகனின் விருப்பத்தையறிந்த மன்னர் கோபமுற்றார். உடனே இளவரசனை அழைத்து, "ஏன் இப்போது திருமணம் வேண்டாம் என்று சொல்கிறாய்? எங்கள் விருப்பப்படி நீ உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும். உனக்கு எது நல்லது என்று எங்களுக்குத்தான் தெரியும்! பேசாமல் சொன்னதைச் செய்!" என்று கட்டளையிட்டார்.

ஆனால் இளவரசன் ஒப்பவில்லை. "நடக்கப் போவது என் திருமணம்! அதற்கு என் அனுமதிதான் முக்கியம்!" என்றான். தன்னை எதிர்த்துப் பேசிய மகன் மீது அடங்காத சினம் கொண்ட மன்னர், "என் சொற்படி நடக்க மறுத்தால், நீ அரண்மனையில் இருக்க முடியாது. நீ இருக்க வேண்டிய இடம் சிறை!" என்று சீறினார். தொடர்ந்து இளவரசன் பிடிவாதம் பிடித்ததால் மன்னர் அவனை சிறையிலிட உத்தரவிட்டார்.

"திருமணத்திற்கு சம்மதிக்கும் வரை அவன் சிறையிலேயே இருக்கட்டும்!" என்று மந்திரியிடம் கட்டளையிட்டார். மன்னரின் கட்டளைப்படி இளவரசன் சிறையில் அடைக்கப்பட்டான்.

உடனிருந்த மந்திரி இளவரசனை நோக்கி, "இளவரசே! மன்னருடைய கட்டளைப்படி நடப்பது என் கடமை! நீங்கள் வீணாகப் பிடிவாதம் செய்யாமல் மன்னரின் விருப்பத்திற்கு இணங்கும் தினத்தை நான் மட்டுமன்றி அனைவரும் ஆவலுடன் எதிர் நோக்கிக் காத்திருப்போம்!" என்று கூறி விட்டுச் சென்றார்.

தன் செய்கையைக் குறித்து சற்றும் வருந்தாத மன்னர் சிறைக் காவலர்களை அழைத்து, "என் மகனைக் காண இங்கே யாரும் வரக்கூடாது. அவனுடைய தாய்மார்கள் கட்டாயம் இங்கு வருவார்கள். அவர்களும் கூட அவனைச் சந்திக்கக் கூடாது. இளவரசன் என்பதால் அவனுக்கு சிறையில் விசேஷ சலுகைகள் எதுவும் தரக்கூடாது. மற்ற கைதிகளைப் போல் அவனையும் நடத்துங்கள்!" என்று கடுமையாக உத்தரவிட்டார்.

சிறைக்காவலர்கள் மன்னரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடந்தனர். யாரையும் இளவரசனை சந்திக்க அனுமதிக்கவில்லை. ஒவ்வொரு நாளும், இளவரசனை திருமணத்திற்கு சம்மதமா என்ற கேள்வியைக் கேட்டனர். இளவரசன் மறுக்க, அந்த விஷயத்தை அன்றாடம் மன்னருக்கு அறிவித்தனர்.

ஒருநாள், இரவில் இளவரசரின் சிறைக்குஅருகே பேச்சுக்குரல் கேட்டு, காவலர்கள் பரபரப்புடன் அங்கு ஓடி வந்தனர். தங்களுடைய கட்டுக்காவலையும் மீறி உள்ளே நுழைந்தவர்கள் யார் என்று அறிய அவர்கள் அங்கு வந்தபோது, அத்துமீறி நுழைந்தவர்களின் குரல் மட்டுமே கேட்டதே தவிர உருவங்களைக் காண முடியவில்லை.

இது என்ன அதிசயம் என்று காவலர்கள் திகைத்துப் போனபோது, வந்தவர்களுடைய உரையாடலிலிருந்து அங்கு வந்து இருப்பது மாய மந்திர சக்திகள் கொண்ட ராஜகுருவும், அவரது குடும்பத்தினரும் என்று தெரிய வந்தது.

imagestory1.jpg

தன் மனைவி, இரு மகள்களுடன் இளவரசனைக் காண வந்த ராஜகுரு தனது மாய சக்தியினால் தன்னையும், தன் குடும்பத்தினரையும் பிறருக்குத் தெரியாமல் மறைத்து விட்டார்.

அப்போது, ராஜகுருவின் மூத்த பெண், "அப்பா! என்னை இன்று இரவு இங்கே தங்க அனுமதியுங்கள். இளவரசரின் மனத்தை எப்படியாவது மாற்றி என்னைத் திருமணம் செய்து கொள்ள இசைய வைக்கிறேன்!"

என்று கூற, நடப்பது எல்லாம் நல்லதுக்கே என்று எண்ணிய காவலர்கள் சும்மாயிருந்து விட்டனர். தங்களுடைய மூத்த மகளை அங்கேயே விட்டுவிட்டு ராஜகுரு மற்றவர்களுடன் அங்கிருந்து சென்றார். அவருடைய மகள் மாயமாக சிறைக் கம்பிகளினூடே புகுந்து இளவரசன் அருகே அமர்ந்தாள்.

திடுக்கிட்டு விழித்துக் கொண்ட இளவரசன் தன்னருகில் அழகே உருவான பெண் ஒருத்தி இருப்பதைக் கண்டு பிரமித்துப் போனான். முதல் பார்வையிலேயே அவளிடம் தன்னை முற்றிலுமாகப் பறி கொடுத்த இளவரசன், அவளை நோக்கி, "உனக்காகவே நான் இதுவரை காத்திருந்தேன். என்னைத் திருமணம் செய்து கொள்வாயா?" என்று கேட்க, அவளும் சம்மதித்தாள். உடனே, தன் விரலிலிருந்த மோதிரத்தைக் கழற்றி, அவளுடைய விரலில் அணிவித்தான். அவளும் தன்னுடைய மோதிரத்தை அவனுக்கு அணிவிக்க, சிறைச்சாலையிலேயே அவர்களுடைய காந்தர்வ விவாகம் இனிது நடைபெற்று முடிந்தது.

காவலர்கள் உடனே ஓடிச் சென்று மன்னரை எழுப்பி நடந்ததைக் கூற, மன்னர் தன் ராணிகளுடன் அங்கு விரைந்தார். தன் மகனுடன் மிக அழகான பெண் ஒருத்தி வீற்றிருப்பதையும், அவர்கள் இருவரும் தம்பதியாகி விட்டதையும் அறிந்து மன்னர் ஒருக்கணம் திகைத்து நின்றார். பின்னர் தான் அவருக்கு அது ராஜ குருவின் பெண் என்று தெரிந்தது.

அதுவரை திருமணத்திற்கு இசையாத தம் மகன் ஒரே நோடியில் மனம் மாறி ராஜகுருவின் அழகிய பெண்ணை சிறைச்சாலையிலேயே மணம் புரிந்ததை எண்ணி வியந்தார். அவள் தன் மகனுக்கு எல்லா விதத்திலும் பொருத்தமாக இருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ந்தார்.இளவரசன் தான் கூறியபடி தன் மணமகளைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டதை எண்ணி மனம் பூரித்தார். சுற்றியிருந்த அனைவரும் மன்னரின் விருப்பப்படியே எல்லாம் நடந்ததைக் கண்டு மகிழ்ச்சியில் திளைத்தனர்.

imagestory5.jpg

அம்புலிமாமாவிலிருந்து .... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கு..சா

அப்படியே நமக்கொன்று :unsure::o:lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு..சா அப்படியே நமக்கொன்று :unsure::o:lol::lol:

முனி!அம்புலிமாமா வேதாளக்கதையையும் சொல்லட்டோ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

முனி!அம்புலிமாமா வேதாளக்கதையையும் சொல்லட்டோ? :D

வேதாள கதையா ஆளவிடுங்க சாமீ :rolleyes::o

அட..அம்புலிமாமா கதை..அச்சா..சா தாத்தா..தா இணைப்பிற்கு நன்றி..றி..தாத்..தா :o அப்படியே ராணி காமிக்ஸ் கதை இருந்தாலும் இணைத்து விடுறியளே..!! :D

எனக்கு அந்த கதை சரியான விருப்பம் பாருங்கோ.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சாமி குறும்பு இது.....அது சரி வேதாளம் இனி எப்ப முருங்கையில் ஏறும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மறுபடியும் ஒரு பள்ளி நாட்களுக்கு சென்ற உணர்வு (பள்ளியில் தான் இப்படியான கதை புத்தகங்கள் படிப்பது கூட ) . நன்றி கு.சா :o

ஜம்மு எங்களுக்கு எங்கட அப்பா கலியாணம் செய்யப்போகிறாயா இல்லை சிறையில் அடைத்துவிடுவேன் என்றால் எப்படி இருக்கும் :rolleyes: ?

  • கருத்துக்கள உறவுகள்

இக் கதையால் பெறும் நீதி யாதெனில்!

திருமணமாகி பி(தொ)ள்ளைப் பாக்கியம் தாமதமாயின் அவசரமின்றி நிதானமாக நாலு கலியாணம் செய்தபின் செல்வத்தில் (இருந்தால்) கால்பங்கு செலவழித்தால் பிள்ளைப் பாக்கியம் உண்டு, யோகியின் அருளால்!!!

நன்றி கு.சா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.