Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் மக்கள் லட்சக் கணக்கில் கூடி சிறிலங்கா இராணுவத்தின் மீதான தமது நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர் - ஐலண்ட்

Featured Replies

இன்றைய ஐலண்ட் தினசரியில் முன் பக்கத்தில் படத்துடன் வந்த செய்தி.

p1newssf4.jpg

வன்னியில் வெகுவாக முன் நேறி வரும் சிறிலங்காப் படையினரின் நடவடிக்கைகள் யாழ்க் குடா நாட்டு மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. நல்லூர்க் கோவிற் திருவிழாவில் ஒரு லட்சம் மக்கள் கூடி பாதுகாப்புப் படையினர் மீதான தமது நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர்.இத் திருவிழாவுக்குப் பாதுகாப்புப் படையினர் பலமான பாதுகாப்பை வழங்கினர்.

The rapid progress on the Vanni front has had a positive impact on the Jaffna peninsula where armed forces are gradually easing restrictions on the civilian community as a confidence building measure. The Nallur kovil festival has attracted a large section of the civilians living in the peninsula. A section of the crowd at Saturday’s ceremony held under heavy security forces presence. Jaffna Security Forces Headquarters estimated at least 100,000 devotees at the annual festival

http://www.island.lk/

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனிலையும் இப்பிடித் தேசிய முனைப்போட தேரிழுக்கிறவை

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் கோவிலுக்கு சென்றாலும் அதை படையினர் சாதகமாக பயன் படுத்தி பிரச்சாரம் செய்து கொள்கின்றான்

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் நடக்கப் போகிறது என்று.. திருவிழா தொடங்கிய போதே சொல்லிவிட்டோமே யாழ் களத்தில். :lol:

சிங்கள இராணுவத்தின் பிரச்சார இயந்திரம் ஒன்றும் அதியசமானதல்ல. அவதானிப்புடன் இருந்தால் முறியடிக்கக் கூடியது. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். சுயமாகவே இயல்பாகவே தமிழீழ சுதந்திர தேச உணர்வு வரப் பெற்றவர்களாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

பிறவுண் வீதியிலும்.. கந்தர்மடத்திலும்.. பிணங்கள் வீழ்கின்றன.. அதைத் தாண்டி..

இதில் மக்களின் இறை நம்பிக்கை மீது குறை சொல்ல முடியாது. ஆனால் அது கண்மூடித்தனமாக இருப்பதுதான்.. கவலை அளிக்கிறது. :lol:

யாழ் குடாவில் 13 ஆண்டுகளாக சிங்கள இராணுவத்தின் இருப்பில் சுகம் கண்டவர்களும் உளர்.. உபத்திரம் கண்டவரும் உளர்.

மக்கள் தன்னுடன் என்று இராணுவம் வலிந்து காட்ட முனைவதே மக்கள் அதனுடன் இல்லை என்பதைக் காட்டுகிறது. இருந்தாலும் பிரச்சார ரீதியில் இது இராணுவத்தின் மனோபலத்தை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. இதற்கான உயிர் விலையை இராணுவத்துக்குக் கொடுக்கப் போவதும்.. இதே மக்கள் கூட்டம் தான்..!

கழுத்தறுப்புக்கு முதல் கடாக்கள் களங்களில் தீனியிட்டு.. பூசைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன..! எப்போ இவற்றை சுயமாகப் புரியப் போகின்றன.. யாழ்ப்பாணத்துப்.. பனங்காய்கள்..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்தியை யாழ் குடாநாட்டு மக்கள் அறிவார்களா ? ஒருவேளை அறியக்கூடியமாதிரி இருந்தால் நிச்சயம் அவர்களின் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் ஆனால் இதையே அடுத்த முறை செய்யமாட்டார்கள் என்று கூறமுடியாது............. ஏனேன்றால் திருவிழாவுக்கு போகவிட்டால் கனபேருக்கு நித்திரையே வராது :lol::lol:

இதுவே நாளைக்கு ஆரியகுளம் சந்தியில இருக்கிற புத்தரின்ர கோமணத்திற்கு சனத்தை சுத்தி வைளைச்சு கொண்டு போய் நடத்திக் காட்டுறதுக்கு எவ்வளவு நேரமமாகும்???

இதுக்கெல்லாம் சனம் என்ன செய்ய முடியும் ?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை யாழ் குடாநாட்டு மக்கள் அறிவார்களா ? ஒருவேளை அறியக்கூடியமாதிரி இருந்தால் நிச்சயம் அவர்களின் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் ஆனால் இதையே அடுத்த முறை செய்யமாட்டார்கள் என்று கூறமுடியாது............. ஏனேன்றால் திருவிழாவுக்கு போகவிட்டால் கனபேருக்கு நித்திரையே வராது :lol::)

அப்படிச் சொல்ல முடியாது சுப்பையாண்ண.

இந்திய இராணுவம் ஆக்கிரமித்து நின்ற போது.. அதுவே ஒட்டுக்குழுக்களைக் கொண்டு நல்லூர் திருவிழாவை பகிஸ்கரிக்க என்று துண்டுப் பிரசுரத்தை விநியோகித்துவிட்டு.. புலிகளின் தலையில் அதைக் கட்டிவிட்டு.. பின்னர் மக்கள் திருவிழாவுக்கு புலிகளின் அச்சுறுத்தலையும் மீறி வர தான் பாதுகாப்பு வழங்குவதாகச் சொல்லிக் கொண்டு உள்ள வீதிகள் எங்கனும் முழத்துக்கு முழம் ஜவான் களையும் தமிழ் தேசிய இராணுவம் என்ற ஒட்டுக்குழுவினரையும் நிறுத்தி.. அதை பெருமெடுப்பில் பிரச்சாரம் செய்து கொண்டது. இப்போதும் அக்காட்சிகள் மனக்கண் முன் நிழலாடுகின்றன.

அப்போ சனமும் கொஞ்சம் குழம்பித்தான் போச்சுது. ஆனால் மக்கள் பலரிடம் அப்போதும் சரி இப்போதும் சரி போராட்டம்.. சுதந்திர வாழ்வு பற்றி சரியான சுயசிந்தனை இல்லை..! எமது மண்ணை எம்மை ஆக்கிரமித்து நிற்கும் எதிரிக்கு எதிராக ரகசியமாக.. சுயமாக போராடும் சக்தியை மக்கள் இன்னும் பெறவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். எதிரியின் இந்த வகையான ஈனத்தனமான பிரச்சாரங்களை முறியடிக்க கூடிய மக்கள் தாமாகவே ஒவ்வொருவருக்குள்ளும் தமிழீழ தேசப் பற்றை ஓங்கி வளர்த்துக் கொள்ள வேண்டும்..!

இராணுவத்தின் இச்செயற்பாட்டுக்காக.. மக்களின் இறை நம்பிக்கையை பழிக்கவோ.. அல்லது.. நாத்திகவாதத்தை விதைப்பதால் இதை தடுக்கலாம் என்பதோ பயனற்ற சிந்தனைகள். மக்கள் தாமாக முன் வந்து இவ்வாறான நிகழ்வுகளை ஆக்கிரமிப்பு இராணுவத்தின் இருப்புக்கு தமது எதிர்ப்பின் அடையாளமாகக் காட்ட பகிஸ்கரிக்க வேண்டும். காரணத்தை பகிரங்கப்படுத்த வேண்டும்.

அப்படி இன்றேல்.. இந்த நல்லூர் இல்லை என்றால்.. நாளை ஒரு காணிவேல் வைத்து இராணுவம் மக்களை அச்சுறுத்தி அழைக்கும். சனம் பயந்து போகும்..! வரதராஜப்பெருமாள் அடையாள அட்டைகளை.. குடும்ப அட்டைகளை பறித்து விட்டு கூட்டத்துக்கு வா என்று சொல்லவில்லையா. அது நடக்கும்..! எதிரி மக்கள் மத்தியில் தான் இருப்பது பலவீனமான நிலையில் என்பதை உணர்ந்துதான் இவ்வாறான பிரச்சாரங்களை முன்னெடுக்கிறான் என்பது தெளிவாகின்ற போதும்.. அதைக் கூட அனுமதிப்பது தவறு.. என்பதை மக்கள் உணர வேண்டும். :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நல்லூர் திருவிழாவுக்கு பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

இன்று நல்லூர் திருவிழாவுக்கு சென்ற மக்கள் தலையாட்டிகள் முன் நிறுத்தப்பட்டனர்

நாளை நல்லூரில் பலர் காணாமல் போய் உள்ளனர்

நாளை மறு நாள் இனம் தெரியாதோரால் ஜந்துக்கு மேற்பட்டோர் படுகொலை

பட்டுத்தான் திருந்த வேண்டும் -------------------------------------------

எல்லாம் அவனுக்கே வெளிச்சம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.