Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடாவில் "சிறிலங்கா நாளில்" தமிழ் மகளிரின் கவன ஈர்ப்புப் போராட்டம்

Featured Replies

கனடாவில் "சிறிலங்கா நாளில்" தமிழ் மகளிரின் கவன ஈர்ப்புப் போராட்டம்

[புதன்கிழமை, 17 செப்ரெம்பர் 2008, 05:58 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]

கனடாவில் சிங்களவர்கள் நடத்தும் "சிறிலங்கா நாள்" அன்று தமிழர்களின் அவலங்களை வெளிப்படுத்தும் பொருட்டு கவன ஈர்ப்புப் போராட்டங்கள் நடைபெற உள்ளன.

இது தொடர்பாக கனடா தமிழ் மகளிர் அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கனடா வாழ் சிங்கள மக்கள் சிறிலங்கா நாளினை களியாட்டப் பொழுதுகளாக்கி வேடிக்கை விநோதங்களோடு Toronto Harbourfront Centre இல் எதிர்வரும் சனிக்கிழமை முற்பகல் 10:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையும் ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையும் விமரிசையாக கொண்டாடவுள்ளனர்.

இலங்கைத்தீவில் மற்றுமொரு பகுதியில் வாழும் எமது மக்களின் மரணத்துள் வாழும் வாழ்வை மூடி மறைத்து இலங்கையை அமைதியான அழகிய கலாச்சார வளமுள்ள தீவு என உலகிற்கு எடுத்துக்காட்டும் முயற்சியாகவே இக்கொண்டாட்டங்கள் திகழ்கின்றன.

இலங்கைத்தீவில், தமிழீழ தாயகத்தில் சிங்கள பேரினவாத சிறிலங்கா அரசின் இன அழிப்பு நடவடிக்கைகளால் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, நோய்களுக்கு மருந்து இன்றி, கல்வி வசதிகள் இன்றி, இழக்கவென இனி எதுவுமே இன்றி, வாழ்வையும் நம்பிக்கைகளையும் தொலைத்து, தெருவோரங்களை தம் வாழ்விடமாக்கி, குண்டுமழை மத்தியில் மரணத்தோடு சதிராடி, சொல்லொணாத் துயருற்று, சொந்த நிலத்திலேயே அகதியாக்கப்பட்டு வாழும் எமது தாயக உறவுகளின் அவல வாழ்வை கனடா வாழ் வேற்றின உறவுகளிற்கு மனதில் உறையும் வண்ணம் எடுத்துச்சொல்ல வேண்டிய மாபெரும் பணி கனடா வாழ் தமிழ் மக்களுக்கு உள்ளது.

அந்த வகையில் எமது மக்களின் அவலங்களை எடுத்துச் சொல்லும் முகமாக எதிர்வரும் சனிக்கிழமை (செப்ரெம்பர் 20), ஞாயிற்றுக்கிழமை (செப்ரெம்பர் 21) ஆகிய இரு நாட்களிலும் பி.ப. 3:00 மணி முதல் பி.ப. 6:00 மணிவரை மாபெரும் பாதையோர அமைதி வழி கவன ஈர்ப்புப் போராட்டத்தினை ரொறன்ரோ மாநகரின் மத்தியில் உள்ள Union Station அருகில் உள்ள Front St W, Bay St, Yong St, Spadina Ave, Lakeshore Blvd, Quees Quay Road வீதிகளுக்கு அருகாமையில் உள்ள நகரின் பிரதான சந்திப்புக்களில் நடத்த கனடா தமிழ் மகளிர் தீர்மானித்துள்ளனர்.

கனடா வாழ் தமிழீழ தேசிய மாந்தர் யாவரும் இந்நிகழ்வில் பங்கேற்பதன் மூலம் இக்காலகட்டத்திற்குரிய முக்கிய வரலாற்றுப் பணியினை ஆற்ற முடியும்.

அன்பு உறவுகள் Union Station Subway க்கு முன்னால் வருகை தரின் அங்கிருந்து வழிநடத்தப்பட்டு மேற்கூறிய வெவ்வேறு சந்திப்புகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

எமது மக்களுக்கு என உதவ உலகின் எந்தவொரு தேசமும் முன்வராத நிலையில் "எமது மக்களுக்கு என என்றுமே நாம் உள்ளோம்" என்பதை உரத்துச்சொல்ல கனடாவில் அனைத்து மாநகரங்களிலும் வாழும் அனைத்து தமிழ் மக்களும் எழுச்சிகொண்டு அணிதிரண்டு வருமாறு வேண்டுகின்றோம்.

மேலதிக விபரங்களுக்கு கனடாத் தமிழ் மகளிருடன் தொடர்பு கொள்ளவும்

ரொறன்ரோ: 416-956-1338

மிசிசாகா: 416-627-8644

ஸ்காபுரோ: 647-637-4803

மார்க்கம்: 905-554-2496

என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுகென்ன விசரே..பேசாம. மான ஆட மயில் ஆட பாக்காம சும்மா போராட்டமும் கவன இறப்பும்...இலவச சண் டிவியை ரோஜெசில நிப்பாட்டி போட்டாங்கள் எண்டு எவ்வளவு கவலைய இருக்கு...நீகள் என்னடா..

பேசாமல் வீடுகளுக்குள்ள கிடவுங்கோ எங்கட கரும்புலிப் பொடியளும் வன்னியல மிஞ்சி இருக்கிற சனமும் தமிழீழம் எடுத்து தருவின வாற விடுமுறைக்கு வலு காயாக போட்டு வரலாம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுகென்ன விசரே..பேசாம. மான ஆட மயில் ஆட பாக்காம சும்மா போராட்டமும் கவன இறப்பும்...இலவச சண் டிவியை ரோஜெசில நிப்பாட்டி போட்டாங்கள் எண்டு எவ்வளவு கவலைய இருக்கு...நீகள் என்னடா..

லோயர் அது மானாட மயில் ஆட அல்ல மான் ஆட மயிர் ஆட என்று எங்கயோ வாசித்ததாக ஜாபகம் :D

அவலங்களை எடுத்துச் சொல்லும் முகமாக என்று வெளில இறங்கி கவன ஈர்ப்பு செய்யிறதோடு சரியோ? ஏதாவது கோரிக்கையை முன் வைக்க மாட்டினமோ.........

கனடா வாழ் சிங்கள மக்கள் சிறிலங்கா தினத்தை களியாட்டப் பொழுதுகளாக்கி வேடிக்கை விநோதங்களோடு

Toronto Harbourfront Centre இல் எதிர் வரும் சனிக்கிழமை

காலை 10:00 மணிமுதல் இரவு 11:00 மணிவரையும்

ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையும் விமரிசையாக கொண்டாடவுள்ளனர்.

இவர்கள் இலங்கைத்தீவில் மற்றுமொரு பகுதியில் வாழும் எம் மக்களின் மரணத்துள் வாழும் வாழ்வை மூடி மறைத்து சிறிலங்காவை அமைதியான அழகிய கலாச்சார வளமுள்ள தீவு என உலகிற்கு எடுத்துக்க காட்டும் முயற்சியாகவே இக்கொண்டாட்டங்கள் திகழ்கின்றன.

இலங்கைத்தீவில், தமிழீழ தாயகத்தில் சிங்கள பேரினவாத சிறிலங்கா அரசின் இனவழிப்பு நடவடிக்கைகளால் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, நோய்களுக்கு மருந்தின்றி, கல்வி வசதிகளின்றி, இழக்கவென இனி எதுவுமேயின்றி, வாழ்வையும் நம்பிக்கைகளையும் தொலைத்து, தெருவோரங்களை தம் வாழ்விடமாக்கி, குண்டுமழைமத்தியில் மரணத்தோடு சதிராடி, சொல்லொணாத்துயருற்று, சொந்த நிலத்திலேயே அகதியாக்கப்பட்டு வாழும் எம் தாயகஉறவுகளின் அவலவாழ்வை கனடாவாழ் வேற்றின உறவுகளிற்கு மனதில் உறையும் வண்ணம் எடுத்துச் சொல்ல வேண்டிய மாபெரும் பணி கனடா வாழ் தமிழ் மக்களுக்கு உள்ளது.

அந்தவகையில் எம்மக்களின் அவலங்களை எடுத்துச் சொல்லுமுகமாக எதிர் வரும்

சனிக்கிழமை (செப்டம்பர் 20),

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) ஆகிய இரு தினங்களிலும்

பி.ப. 3:00 மணி முதல் பி.ப. 6:00 மணிவரை

மாபெரும் பாதையோர அமைதிவழி கவனஈர்ப்புப் போராட்டத்தினை ரொரன்ரோ மாநகரின் மத்தியிலுள்ள

Union Station அருகிலுள்ள Front St W, Bay St, Yong St, Spadina Ave, Lakeshore Blvd, Quees Quay Road

வீதிகளிற்கருகாமையிலுள்ள நகரின் பிரதான சந்திப்புகளில் நடாத்த கனடாத் தமிழ் மகளிர் தீர்மானித்துள்ளனர்.

கனடாவாழ் தமிழீழ தேசிய மாந்தர் யாவரும் இந்நிகழ்வில் பங்கேற்பதன் மூலம் இக்காலகட்டத்திற்குரிய முக்கிய வரலாற்றுப் பணியினை ஆற்ற முடியும்.

அன்புறவுகள் Union Station Subway க்கு முன்னால் வருகை தரின் அங்கிருந்து வழிநடத்தப்பட்டு மேற்கூறிய வௌ;வேறு சந்திப்புகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

எம்மக்களுக்கு என உதவ உலகின் எந்தவொரு தேசமும் முன் வராத நிலையில் “எம்மக்களுக்கு என என்றுமே நாங்கள் உள்ளோம்” என்பதை உரத்துச்சொல்ல கனடாவில் அனைத்து மாநகரங்களிலும் வாழும் அனைத்து தமிழ் மக்களும் எழுகை பூண்டு அணிதிரண்டு வருமாறு பணிவன்போடு வேண்டுகின்றோம்.

மேலதிக விபரங்களுக்கு கனடாத் தமிழ் மகளிருடன் தொடர்பு கொள்ளவும்

ரொரன்ரோ: 416-956-1338

மிசிசாகா: 416-627-8644

ஸ்காபுரோ: 647-637-4803

மார்க்கம்: 905-554-2496

இனியொரு உறவின் உயிர் துறக்குமுன் உரத்தொலிக்கட்டும் எம் குரல்கள்!

http://tamilthesiyam.blogspot.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.