Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவாமி டாக்டர் கமாண்டர் சித்தரின் காயத்திரி மா - அமெரிக்கா

Featured Replies

DR.COMMANDER SELVAM / SRI SRI SELVAM SIDDHAR SATSANG ABOUT GAYATHRI MA- PART 1

நம்பிக்கைகளையும் இந்துத் தத்துவங்களையும் தமக்குச் சார்பாகப் பயன்படுத்தும் ஏமாற்றுக்காரர்களிடம் அறிவுள்ளவர்கள் சிக்கமாட்டார்கள். அறிவினால்தான் தான் வழிப்படுத்தப்படுகிறேன் என்று எண்ணம் உண்டாகாதவரை ஏமாற்றம் அடைந்து கொண்டேதானிருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கைகளையும் இந்துத் தத்துவங்களையும் தமக்குச் சார்பாகப் பயன்படுத்தும் ஏமாற்றுக்காரர்களிடம் அறிவுள்ளவர்கள் சிக்கமாட்டார்கள். அறிவினால்தான் தான் வழிப்படுத்தப்படுகிறேன் என்று எண்ணம் உண்டாகாதவரை ஏமாற்றம் அடைந்து கொண்டேதானிருக்க வேண்டும்.

அறிவுள்ளவர்கள் சிக்கமாட்டார்கள்............. இப்போது மட்டும் நல்ல அறிவா பேசுறிங்கள்.

அறிவுள்ளவர்களாக கீழ்தட்டு மக்கள் முன்னேறவேண்டுமெனில்...... மூடநம்பிக்கைகளை தூக்கி எறியவேண்டாமா? மூடநம்பிக்கைகள் பற்றி பேசம்போதெல்லாம்..... ஏதோ இந்து சமய காவலாளிகள்போல் வந்து நீங்கள் வம்பிளுப்பீர்கள் ஏதாவது ஒன்றை எழுதிவிட்டால் போதும் என்று எதற்கெடுத்தாலும் வம்புஇழுப்பார் சிலபேர் (நீங்கள் அல்ல இதை வாசித்துவிட்டு வருவார்கள் பல இந்து காவலாளிகள் அப்போது பாருங்கள்) சைவமதம் எமது மதமும் அதுதான் அதில் புனிதம் இருப்பின் எமக்கே சிறப்பு..... தவிர மூடர்களின் களியாட்ட தலமாகவும் ஏமாற்றுகாரனின் களமாகவும் இருத்தலால் என்ன சிறப்பு???

தயவுசெய்து சிந்தியுங்கள். என்னோடு கருத்தாடி வெல்லவதெல்ல முக்கியம்..... கருத்தாட போனால் தோல்வி எனக்கே நிச்சயம்.... காரணம் நான் அறிவு பெறுவதே இந்த யாழ்களத்தில்தான் அதற்கு காரணமே உங்களை போன்றவர்கள்தான்.

அதற்காக மூடபக்தியை துக்கி நிறுத்தி யாருக்கு லாபம்??

உங்கள் பிள்ளைகள்தான் பாதிக்கபடபோபவர்கள் (எதிர்கால சந்ததி). புனிதமானதாக.... சிறப்பானதாக.... எமது மதத்தை நாம் வைத்திருந்தால் யாரும் ஏன் அதைபற்றி கதைக்கபோகின்றார்கள். மாறாக ஏமாற்றுகாரன் நாடகமாட கூடிய வகையில் எந்த கேள்வி ஞானமுமில்லாமல் தேங்காயை உடைத்து கொண்டிருந்தால்...... ஒரு தேங்காயை ஒரு ஏழைக்கு கொடுத்தால் கோடி புண்ணியம் அந்த இறைவனிடமிருந்தே கிடைக்குமே?

நான் மதம் என்ற பிரிவிற்கு எதிரான கருத்துடையவனல்ல. மூடநம்பிக்கைகள் உருவாக்கப்படும் ஒன்று. அந்த உருவாக்கத்திற்கு இடத்தைக் கொடுத்துவிட்டு உள்ளதெல்லாம் மூடநம்பிக்கைதான் என்ற முடிவிற்கு வராதீர்கள். மதநம்பிக்கைகளைப் பாவித்து பணம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை நடத்தும் ஏமாற்றுக்காரர்கள் துரதிஷ்டவசமாக இந்து சமயத் திருடர்களிடந்தான் மிக அதிகமாகக் காணப்படுகிறது.

ஒரு விடயத்தினைத் தெளிவில்லாமல் படித்தவர்களே பின்பற்றும் போது கீழ்த்தட்டு மக்களை எவ்வாறு காப்பாற்றுவது.? இது விவாதிக்கப்படுகின்ற விடயம் மட்டுமல்ல, பிரசாரப்படுத்த வேண்டிய விடயமும் கூட.

இன்று வரை எத்தனை வழிகளில் சீர்திருத்தக் கருத்துக்கள் வெளிவந்துவிட்டன. அத்தனை வழிகளாலும் மாற்றங்களைக் காண முடியவில்லையென்றால் எங்கே தப்பு நடக்கின்றது? என்னைப் பொறுத்தவரையில் இரு இடங்களைத்தான் குறிப்பிட முடியும்.

1. மதவாதிகளும் மதப் பரப்புரையாளர்களும் மக்களது பலவீனங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

2. சீர்திருத்தவாதிகளின் எதிர்ப்புணர்வுப் பிரச்சாரம்.

இந்த இருவகையான நிலைப்பாடுகள்தான், இன்றைய நிலைக்குக் காரணம். மூடவழிப்படுத்துபவர்கள் எதையும் பின்பற்றி செயற்பட்டு இலக்கை அடையலாம். ஆனால் பிந்திவரும் சீர்திருத்தவாதம் மிக அவதானமாகச் செயற்பட வேண்டும். நீங்களே அதனை அறிவீர்கள். சீர்திருத்தக் கருத்துக்களெல்லாம் அன்று தொட்டே வெளிவரத் தொடங்கிவிட்டது. சாதி இரண்டொழிய வேறில்லை என்று சொல்லப்பட்ட காலத்தை நோக்கினால், சாதிக் கொடுமையின் தாக்கத்தினை உணரக் கூடியதாகவிருக்கும். ஆனால் என்ன எல்லாம் ஏட்டளவில்தானுள்ளது. பின்பற்றும் நிலையென்பது கிஞ்சித்துமில்லை. ஆகவே அறிவினூடே செயற்படுங்கள். சீர்திருத்தப் போர்வையில் ஏமாற்றுக்காரர்களும் இருப்பார்கள்.

  • தொடங்கியவர்

இறைவன்,

ஒரு சாமியார் ஊடகங்களால் அம்பலப்படுத்தப்படும் போது தான் அவர்' கள்ளச்' சாமியார் ஆகிறார்.முதல் வீடியோவில் பார்த்ததல் தெரியும் எத்தினை 'படித்தவர்கள்' அவர் காலில் விழுந்து வணக்கிறார்கள் என்று. அதுவரை அவரை வேதாந்தி ஞானி புனிதமானாவர் எனத் தான் எல்லாச் சமயக் காப்பளர்களும் சொல்வார்கள்.யாழ்க் கள வேத விற்பன்னர்கள் கூட இந்த வேதாந்தியின் விடியோக்களை இங்கே இணைதிருப்பார்கள், அவர் ஊடாகங்களால் அம்பலப்படுத்தப்பட்டிருக்கா விட்டால்.இவ்வாறு ஒவ்வொரு கோவிலின் கணக்கு வழக்குகளையும் சாமியார்களின் பின் புலங்களையும் ஆராய்ந்தால் அல்லது அம்பலப்படுதினால் இவர்களின் சுய நலங்கள் வெளிக்கும்.அது தில்லை முதல் அமெரிக்கா வரை உண்மையானது.லண்டனுக்கு இந்தியாவில் இருந்து வரும் சாத்ரிகள் சாமியார்களின் விளம்பரங்களைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம் எவ்வாறு மக்கள் இவர்களால் ஏமாற்றபடுகிறார்கள் என்று.மதங்கள் மீதான நம்பிக்கை தான் இவற்றிற்கெல்லாம் அடிப்படையானாது.

இதற்கு அடிப்படைக் காரணம் மதம் புனிதமானாது அது சம்பந்தமான நிறுவனங்கள் அவற்றை நாடாத்துபவர்கள் புனிதமானாவார்கள் என்னும் நம்பிக்கை தான்.பகுத்தறிவுப் பிரச்சாராம் என்பது அந்த நம்பிக்கையைத் தகர்ப்பது.பகுத்தறிவு என்பது கேள்வி கேட்பது அறிவியல் துணை கொண்டு ஆராய்வது.மதம் என்பது மனிதர்களால் ஆக்கப்பட்டது மனிதர்களால் நிர்வகிக்கப்படுவது, மனிதர்களால் வளர்க்கப்படுவது.மனிதனுக்கு அப்பால் வேறு ஒன்றும் இல்லை.ஒரு சிலர் தான் தவறிழைக்கிறார்கள் அதற்காக மதத்தைக் குறை சொல்ல முடியுமா என்று கேட்பவர்களுக்கு, மதம் என்னும் கோட்பாடே நம்பிக்கையின் அடிப்படியானாது.அதனால் தான் அதனை எவரும் தமது நலன்களுக்காகாப் பாவிக்கலாம்.எந்த கோட்பாடும் கருதியலும் ஆய்வுக்கும் பகுத்து அறிதலுக்கும் விமரிசனத்துக்கும் வெளியில் இருக்கிறதோ அவை எல்லாமுமே இவ்வாறு தான் பயன் படுத்தப்படும்.அது மதத்தை தமது அரசியலுக்கு தமது சுய தேவைகளுக்கு தமது சாதிக்கு எனப் பயன் படுத்தும் எல்லோரையும் சாரும்.ஊடகங்கள் அம்பலப்படுத்தும் 'கள்ளச்' சாமியார்களை மட்டும் அல்ல.

பகுத்தறிவுப் பிரச்சாராம் என்பது வெற்றி பெற்றுக் கொண்டு தான் வருகிறது.யாழ்க்களத்தில் ஐந்து வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைப்பாட்டில் இருந்து பல மத நம்பிக்கையாளர்களே வெகு தூராம் வந்திருகிறார்கள் என்பதை நீங்கள் சற்றுப் பின் நோக்கி அவர்கள் எழுதிய கருதுக்களை வாசித்தால் புரிந்து கொள்ளலாம்.

மெல்ல மெல்ல முன் நேற்றங்கள் நடந்து கொண்டு தான் வருகின்றன.காலத்துக்கு ஏற்றவகையில் பகுத்தறிவுப் பிரச்சராம் என்பது இருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருதுக்கும் இடமில்லை.ஏனெனில் பகுத்தறிவு என்பது நம்பிக்கை சார்ந்த விடயமோ புனிதமானதோ கிடையாது.அதுவும் விமரிசனதுக்கு உட்பட்டது தான்.

  • தொடங்கியவர்

மேற்குலகில் இருக்கும் ஒரே ஒரு அதர்ம வேத விற்பன்னர் சுவாமி டாக்ட்டர் கொம்மாண்டர் செல்வம் சித்தரின் புகழ் பாடும் காணொளி- மகாசிராத்திரித் திருவிழா.

Edited by narathar

  • தொடங்கியவர்

நம்பிக்கைகளையும் இந்துத் தத்துவங்களையும் தமக்குச் சார்பாகப் பயன்படுத்தும் ஏமாற்றுக்காரர்களிடம் அறிவுள்ளவர்கள் சிக்கமாட்டார்கள். அறிவினால்தான் தான் வழிப்படுத்தப்படுகிறேன் என்று எண்ணம் உண்டாகாதவரை ஏமாற்றம் அடைந்து கொண்டேதானிருக்க வேண்டும்.

இறைவன்,

நம்பிக்கை என்றால் என்ன? மூட நம்பிக்கை என்றால் என்ன? நல்ல நம்பிக்கை என்றால் என்ன?

அறிவுக்கும், நம்பிக்கைக்கும் என்ன தொடர்பு?

இன்னொரு இடத்தில் இந்து மதமே ஆங்கிலேயாரால் ஒன்றிணைக்கப்பட்ட 450 மதங்களின் கலவை என்று நீங்களே எழுதி விட்டு, 'இந்துத் தத்துவங்கள்' என்று சொல்கிறீர்கள்.அப்படி ஒன்று இல்லை என்பது புரியாமலா எழுதினீர்கள்.

இந்திய உபகண்டத்தில் வாழ்ந்த பல தேசிய இனங்களின் பல மதங்களின் கூட்டுக் கலவை தான் இன்றைய 'இந்து' மதமும் கடவுளர்களும்.இன்றும் ஒரிசாவில் ஆதி வாசிகளின் கடவுளர்களையும் மதத்தையும் , 'இந்து ' ஆக்கிக் கொண்டிருக்கிறது விஎச்பி. ஆகவே பண்டைய மனிதரால் ஆக்கப்பட்ட கருதுக்களின் கலவை தான் இந்த ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான இந்து தத்துவங்கள். இந்த நம்பிக்கைகளே இன்றைய மூடத்தனத்தின் ஊற்று.

Edited by narathar

நாரதரின் கருத்தை ஏற்கிறேன். நம்பிக்கை என்ற ஒன்று அறிவின் வழிப்படுத்தப்பட வேண்டும். நம்பிக்கை என்பது என்ன? மனித சிந்தனையில் திடமாக நிலைத்திருக்கக் கூடிய ஒரு தளம், அப்படியென்று நான் கருதுகிறேன். காண்பதற்குப் பின்னால் செல்வதும், சொற்களைக் கேட்டு எடுபட்டுப் போதலும் மூடத்தனம். நம்பிக்கைகளையும் பிரசாரங்கள் மூலம் தகர்க்கலாம். மூடநம்பிக்கைகளையும் பிரசாரங்கள் மூலம் தகர்க்கலாம்.

இவற்றில் மூடநம்பிக்கையைத் தகர்த்தல் இலகுவான காரியமல்ல. இந்தச் சாமியாரை நம்பும் கற்றவர்கள், ஏன் அவ்வாறு செயற்பட்டார்கள் என்று சிந்தித்தால் அதன் உண்மை தெரியும்.

மிக முக்கியமான விடயம் ஒன்று. மக்கள் ஏமாறும் வழிகளை இந்த சாமி விற்பன்னர்கள் ஏராளமாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இது இந்து சமயத்தில் மட்டுமல்ல, ஏனைய சமயங்களிலும் உண்டு. மந்தழரம் மாயம், தடவுதலினால் குணமாக்குதல், தாயத்துக் கட்டுதல் என அது நீண்டு கொண்டே போகும். படித்தவர்களும் இதற்குப் பலி. எங்கோ அவர்களுக்குள் ஏற்படும் தடுமாற்றமே இதற்குக் காரணமாகலாம். தடுமாற்றம் எவருக்கும் உள்ள ஓர் நிலைதான். அந்த இடத்தில் அறிவின் பயன்பாடும் செயலற்றுப் போகின்றது.

ஊடகங்கள்தான் உண்மையை வெளிப்படுத்தியது. ஆனால் இதற்குப் பின்னர் இது போன்ற சாமியார்கள் உருவாகமாட்டார்கள் என்று கூற முடியுமா? ஆசாமியார்கள் இன்னு வருவார்கள். நம் வாழ்நாள்களிலே எத்தனை சாமியார்களைக் கண்டுவிட்டோம். சொன்னால் நம்பமாட்டீர்கள், எனது கல்விகற்கும் காலத்தில் பிரேமானந்தாவுக்கெதிரான செயற்பாடுடையவனாகவிருந்தேன். (இன்று தமிழ்நாட்டில் சிறையிலிருப்பவர்)

நம்பிக்கை எங்கே சிதைக்கப்படுகிறதோ, அங்கேதான் மூடநம்பிக்கை கூடாரமடித்துக் கொள்கிறது.

  • தொடங்கியவர்

இந்தச் சாமியாரின் மூலதனம் என்ன? மக்களின் கடவுள் நம்பிக்கை தான் அவர் மூலதனம்.அவரின் செலவுகள் என்ன? அர்ச்சகருக்கான சம்பளம் கோவில் கட்ட நிதி, மற்றும் பூசைப்பொருட்கள் தேங்காய் முதலியன.இவை போக அவருக்கு வரும் வருமானத்தில் இருந்து அவர் சம்பாதித்தது என்ன? மில்லியன் டொலர் பங்களா பல கார்கள் இன்னும் பல இவை பல மில்லியன்கள் தேறும்.

இதில் இருந்து தெரிவது என்ன? கோவில்களால் முடக்கப்படும் சொத்துக்களின் பெறுமதி பல மில்லின்கள் இவை பக்தர்களின் 'நம்பிக்கை' என்னும் மூலதனத்தால் வந்தவை.ஆகவே ஒரு தேங்காயின் விலை ஒரு பவுண்டு என்றால் இது பெரிய செலவா என்று கேட்பவர்களிடம் கேட்க விரும்புகிறேன், இந்தச் சாமியார் ஒரு கோவிலை வைத்து எப்படிப் பல மில்லன்களைச் சம்பாதித்தார் என்று?

இவர் அம்பலப்படுத்தப்பட்டார், புலத்தில் இன்னும் அம்பலப்படுத்தப்படாதா கோவில்கள் சாமியார்கள் பூசகர்கள் சாத்திரிகள் சோதிடர்கள் எத்தினை எத்தினையோ? இவர்களால் உருவப்படும் மக்களின் சொத்துக்கள் எத்தினை மில்லியன் டொலர்கள் பவுண்டுகள் ? எல்லோருக்கு மக்களின் கடவுள் நம்பிக்கை தான் மூலதனம்.

  • தொடங்கியவர்

நாரதரின் கருத்தை ஏற்கிறேன். நம்பிக்கை என்ற ஒன்று அறிவின் வழிப்படுத்தப்பட வேண்டும். நம்பிக்கை என்பது என்ன? மனித சிந்தனையில் திடமாக நிலைத்திருக்கக் கூடிய ஒரு தளம், அப்படியென்று நான் கருதுகிறேன்.

நம்பிக்கை என்பது அறிவின் வழிப்படுத்தப்பட வேண்டு என்று சொல்கிறீர்கள்.அறிவென்பது விரிந்து செல்வது நிலையானது அல்ல என்று நீங்களே முன்னைய விவாதங்களில் சொல்லி உள்ளீர்கள்.அப்படியானால் அறிவின் வழிப்பட்ட நம்பிக்கை என்பது மாத்திரம் எவ்வாறு திடமாக நிலைத்திருக்க முடியும்?

  • தொடங்கியவர்

SWAMIJI SRI SRI SELVAM SIDDHARINTERVIEW BY DR.RAJESH MEHRA2

Edited by narathar

  • தொடங்கியவர்

பொய்க் குற்றச் சாட்டுக்களைச் சொல்லிப் பொசிலாரால் கைது செய்யப்பட்ட வட அமெரிக்காவிலையே அதி உயர்ந்த அத்தணர் சர்மா.

COMMANDER SELVAM -FRAUD EXPOSED FOX5 I-TEAM PART 4

Edited by narathar

  • தொடங்கியவர்

அதி உயர் அந்தணர் பண்டிற் சர்மாவின் ச்மச்கிரத மந்திர உச்சாடானமும் அதர்வ வேதம் பற்றிய அருளுரையும்

ஓம் நமச்சிவாயா சிவாய நமகோம் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.