Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் படையினர் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்கும் நேரம் வந்துவிட்டது - அரசியல்துறை பொறுப்பாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படையினர் என்றுமில்லாதவாறு மிகவும் பலவீனமான நிலையில் வன்னியில் அகலக் கால் பதித்துள்ள, எமக்கு சாதகமான நிலையைப் பயன்படுத்தி எமது நிலங்களை மீட்டெடுக்கும் நேரம் வந்துவிட்டதென விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் நிகழ்த்திய உரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

""மக்கள் புரட்சியின் ஊடாகவே தமிழீழத் தேசிய விடுதலை சாத்தியம் என்பதை கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் ஈகைச்சுடர் லெப். கேணல் திலீபன் கூறியிருந்தார்.

இவ்வாறான மக்கள் எழுச்சியும் புரட்சியும் தற்போது தமிழர் மண்ணில் வியாபித்துள்ளது. தமிழர் மண்ணில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலுள்ள மக்கள் மத்தியிலும் தமிழீழ விடுதலை தொடர்பான எழுச்சி என்றும் இல்லாதவாறு காணப்படுகின்றது.

தமிழர் மண்ணில் தற்போது போர்க்களங்களில் தமிழ் மக்கள் களப்பணிகளை ஆற்றி வருகின்றனர். படையினர் என்றும் இல்லாதவாறு பலவீனமான முறையில் அகலக் கால் பதித்துள்ளனர்.

இதனை எமக்கு சாதகமாகப் பயன்படுத்தி எமது மண்ணினை மீட்டெடுப்பது மட்டுமல்லாது படையினரின் வல்வளைப்பில் உள்ள மக்களையும் நிலங்களையும் மீட்கும் சாதகமான நிலை தற்போது ஏற்பட்டிருக்கின்றது.

தற்பேது இருக்கும் களநிலைமையை எமக்கு சாதகமாகப் பயன்படுத்தி எமது விடுதலையை எமது தலைவரின் காலத்தில் வென்றெடுக்க வேண்டும்.

வன்னியில் செயற்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளை அரசு வெளியேற்றியுள்ள நிலையில் புலம் பெயர்ந்து வாழும் எமது உடன் பிறப்புகள் என்றும் இல்லாதவாறு சர்வதேச நாடுகள் முழுவதிலும் எழுச்சி கொண்டு அந்தந்த நாட்டு அரசுகளுக்கு அரசியல் ரீதியாக அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றனர்.

இந்நிகழ்வானது எமது விடுதலைப் போருக்கு பெரும் பலமாகவே இருக்கும். புலம் பெயர்நது வாழும் எமது உறவுகள் எமது தேசம் விடுதலை அடைகின்ற வரையும் தொடர்ந்து இது போன்ற போராட்டங்களை நடத்தி தமிழீழத்திற்கான பலத்தினை சேர்க்க வேண்டும்.'

  • கருத்துக்கள உறவுகள்

கொக்காவில் தொடரூந்து நிலையத்தைக் கைப்பற்றிவிட்டதாகவும் A9 பிரதான வீதியிலிருந்து 400m தொலைவிலேயே நிற்பதாகவும் இராணுவம் கூறுகின்றது.

Army captures Kokkavil station

The Army captured the Kokkavil railway station in the Kilinochchi district on Thursday, further getting closer to the A-9 main highway, the military said yesterday.

Military sources revealed following fierce fighting throughout the past few days troops of the 57 division gained control of the railway station while consolidating the area.

“Troops are just 400 metres away from the A-9 road,” a senior military official said.Meanwhile, the defence ministry said that at least 11 LTTE cadres were killed in a series of clashes in the Akkarayankulam area in the Kilinochchi district.

On Thursday troops also captured two LTTE trench lines in the Kokkavil area after heavy clashes. Four LTTE cadres were killed during the battle. During subsequent search operations conducted in the area troops recovered the body of a female LTTE cadre along with one T-56 assault rifle.

- The Daily Mirror

வணக்கம் கிருபன்ஸ் தயவுசெய்து கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசியுங்களன்.

வணக்கம் கிருபன்ஸ் தயவுசெய்து கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசியுங்களன்.

எதுவரைக்கும்?

எதுவரைக்கும்?

ஈழம் மலரும்வரை...

Edited by jaalavan

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் மலரும்வரை...

அல்லது ஒதுங்கியிருங்கள்

தயவு செய்து

ஊடகச் சமராடிகளை அரவணைத்துச் செல்லுங்கள் - தமிழ் தேசிய ஊடகமென தம்மை தாமே மார்பு தட்டுபவர்களுக்கு அறைகூவல்!!

என்ற தலைப்பில் வந்திருக்கும் கட்டுரையைப்படியுங்கள்

அல்லது ஒதுங்கியிருங்கள்

ஓம்' பாருங்கோ எல்லோரையும் சேர்த்து செல்லுறதை விட அவவைரை ஓதுக்கி பொட்டு தனிய விசிலப்பம் ,,,,

யார் உங்களுக்கு மற்றவயளை ஓதுக்கிற உரிமையை தந்தது. முதல்ல உந்த கூத்துக்களை நிறுத்துங்கோ !

  • கருத்துக்கள உறவுகள்

அடக்கி வாசிப்பதன் மூலம் கொக்காவிலில் இராணுவம் நிற்பது இல்லையென்று ஆக்கிவிடமுடியுமா? :icon_mrgreen:

ஊடகச் சமராடிகளைப் பற்றி உயிராபத்துக்கள் நிறைந்த சூழலில் இருப்பவர்கள் எழுதுவதை ஏற்றுக்கொள்ளலாம். அதற்காக தமிழ் மக்களைப் பப்பா மரத்தில் ஏற்றும் செய்திகளையும், கட்டுரைகளையும் வாசித்து கிளுகிளுப்படையுங்கள் என்பதை ஏற்றுக் கொள்ளமுடியுமா? யதார்த்தத்திற்குப் புறம்பான வகையில் செய்திகளைத் தந்து விட்டு மற்றவர்களை நொந்து பிரயோசனமில்லை. மேலும் தமிழ்த் தேசியத்தின் மீது நம்பிக்கை வைத்துச் செயற்படுபவர்கள் கற்றுக்குட்டிகளின் வித்துவச் செருக்கை கண்டு ஒதுங்கத் தேவையில்லை. கொண்ட கொள்கையில் நம்பிக்கையுள்ளவர்கள் சிறு சலசலப்புக்களைக் கண்டு ஒதுங்குவது அவர்களின் நம்பிக்கையீனத்தைத்தான் காட்டுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சிலிருந்து பரணி கிருஸ்ணரஜனி எழுதிய "புலிகளின் படைத்துறை ஆளுமை - சில புரிதல்கள்" கட்டுரையில் இருந்து சில பகுதிகள்.. தற்போதும் பொருந்வதாக உள்ளது..

http://www.tamilcanadian.com/tamil/?cat=29&id=227

இங்கு குறிப்பான ஒரு விடயம் என்னவெனில் கள நிலவரங்களின் யதார்த்தத்திற்கு அப்பால் அதீதமான நம்பிக்கைகளையூட்டுவது எந்தளவிற்குப் பாதகமானதோ அதே அளவு பாதகம் நம்பிக்கையீனங்களை வளர்ப்பதும்தான். இது தெரியாதவன் அல்ல நான். ஏற்கனவே முகமாலை மோதல்களை எமது ஊடகங்கள் அணுகிய விதம் குறித்தும் அதீத நம்பிக்கைகளை வளர்த்தது குறித்தும் எனது கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறேன்.

எனவே புலிகளின் படைத்துறை ஆளுமை குறித்து எனக்கு ஆழ்ந்த புரிதல் இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே படைவலுச் சமநிலையை தம்பக்கம் திருப்பும் ஆற்றலை புலிகள் கொண்டுள்ளார்கள் என்ற எனது கருத்தைப் பதிவு செய்திருந்தேன்.

புலிகள் தோற்றுவிட்டார்கள், பலமிழந்து விட்டார்கள் என்ற ரீதியில் பிரச்சினையை அணுக முற்படுவதும் மதிப்பிடுவதும் முதல் தவறு. புலிகள் பலத்துடன் இருக்கிறார்களா இல்லையா என்ற உண்மை நிலைப்பாட்டிற்கும் அப்பால் எதிரிகளுக்கு புலிகளை பலமிழந்தவர்களாகக் காட்டுவதில் சில அரசியல் வெற்றிகள் இருக்கின்றன. அதே போன்று மேற்குலகத்திற்கும் சில சாதகங்கள் இருக்கின்றன. எனவே அதைச்சுற்றியதான பொய்ப் பரப்புரைகளும் புனைவுகளும் எழுவது இயல்பானது. இதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

இன்று எம்மில் பலர் அடைந்திருக்கும் நம்பிக்கையீனங்கள் கூட சிங்களம் எதிர்பார்க்கிற வெற்றிகளில் ஒன்றுதான். போர் என்பது ஆயுதத்தினால் மட்டும் நடத்தப்படுவதல்ல. அது பலவகைப்பட்டது. உளவியற்போர் அதில் முக்கியமான ஒன்று. சமாதான காலத்தில் மிக உக்கிரமாக நிகழும் இந்தப் போரில் எம்மில் பலர் பலியாகிவிட்டார்கள் என்பதன் சாட்சிதான் அந்த நம்பிக்கையீனங்கள். இதில் நாம் இனியாவது முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்பதைத்தான் எனக்கு வந்த எதிர்வினைகள் அடையாளங்காட்டுகின்றன.

சமாதான காலத்தில் ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பின் செயற்பாடுகளை முடக்கிவிட்டு அதைத் தமக்குச் சாதகமாக்கி சில சூழ்ச்சிகள் முலம் வலுச்சமநிலையைத் தம்பக்கம் திருப்பி வைத்திருக்கும் எதிரிகளின் படையாளுமையையும்; அந்தச் சூழ்ச்சிக்குள்ளான விடுதலை அமைப்பின் படையாளுமையையும் ஓரே தட்டில் வைத்து மதிப்பிடுவது சரியானதாகவோ உண்மையானதகவோ ஒருபோதும் இருக்க முடியாது.

புலிகள் என்றில்லை ஒரு விடுதலை அமைப்பின் படைவலுவை ஒரு யுத்த காலத்தில்தான் சரியாக மதிப்பிட முடியும். நீண்ட காலம் சமாதானம் நிலவி - அதிலிருந்து வெளியேறாமலே சில படை நடவடிக்கைகளை நடத்திவிட்டு கொக்கரிக்கும் ஒரு படைத்தரப்பை முன்னிறுத்தி - அந்த சமாதானம் சாகும் தருவாயில் இந்த மதிப்பீட்டை நிகழ்த்துவது போன்ற அபத்தம் உலகத்தில் வேறில்லை.

அண்மைக்காலமாக புலிகளினுடைய முக்கிய கவனம் எல்லாம் சமாதான காலத்தில் தமக்கெதிராகப் பின்னப்பட்டுள்ள சூழ்ச்சிகளிலிருந்து வெளியேறுவது குறித்துத்தான் குவிக்கப்பட்டுள்ளது. இப்போதுதான் மெதுமெதுவாக அதிலிருந்து மீண்டு கொண்டிருக்கிறார்கள். புலிகள் அடையும் இராணுவ வெற்றிகள் தொடர்ந்து தக்கவகை;கப்பட வேண்டியதும் அதை அரசியல் வெற்றியாக மாற்றுவதும் என்று புலிகளின் படை நகர்த்தல்களுக்குப் பல பரிமாணங்கள் இருக்கின்றன. ஆனால் சிங்கள இராணுவத்தின் வெற்றிகள் மட்டுமல்ல தோல்விகள் கூட பலவீனமான அடித்தளத்திலிருந்து மேலெழுபவை.

முழுமையான யுத்த காலத்தில்தான் ஒரு விடுதலை அமைப்பின் இராணுவ வெற்றிகளுக்கு முழுமையான விளைவுகள் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் புலிகளின் அதிகார ஏடான விடுதலைப் புலிகள் இல் வெளிவந்த முன்பக்கக் கட்டுரை சொன்னதைத்தான் அரசியல் பொறுப்பாளர் நடேசன் மீண்டும் கூறியுள்ளார். அன்று மடுவைக் கைப்பற்ற இராணுவம் முயன்று கொண்டிருந்தது; தற்போது கிளிநொச்சியைப் பிடிப்பதைப் பற்றி அறிக்கைகைள் விட்டுக்கொண்டிருக்கின்றது. இதுதான் வித்தியாசம்..

சிங்களப் படைகள் ஆரம்பித்துள்ள வன்னி மீதான பெரும் போர்

வன்னி நிலப்பரப்பு மீது பெருமெடுப்பில் சமரொன்றைத் தொடுத்து அதை ஆக்கிரமிக்கவேண்டும் என்பது மகிந்த அரசின் கனவாக உள்ளது. இந்தச் சமருக்கு ஜே.வி.பி மற்றும் கெலஉறுமய போன்ற அதிதீவிர இன வாதக் கட்சிகள் மட்டுமல்ல ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரவளிப்பதாகப் பகிரங்கமாக அறிவித்துள்ளது

இப்போது வன்னி ஆக்கிரமிப்பு சிங்களக் கட்சிகளின் பொதுக்கனவாகிவிட்டது. சிங்கள மக்களும் அத்தகையதொரு ஆக்கிரமிப்புப் போருக்கு ஆதரவளித்துள்ளனர். சமாதான விரும்பிகளாகக் காட்டிக்கொண்ட சிங்களப் புத்திஜீவிகளும் வன்னி மீதான படையெடுப்பிற்கு ஆதரவு தெரிவித்து சிங்கள ஊடகங்களில் கருத்துரைகள் எழுதி வருகின்றனர்.

வன்னி மீதான படையெடுப்பு முயற்சிகளுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் சில நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன பெருமெடுப்பில் மனித அவலம் நிகழும் என்ற எதிர்பார்ப்பில் அத்தகைய படையெடுப்பை அவை எதிர்க்கின்றன.

ஆயினும், மகிந்த அரசு வன்னிமீதான சமரை நடாத்த விரும்புகின்றது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச வன்னி மீதான படையெடுப்புப் பற்றி அடிக்கடி கருத்து வெளியிட்டுவருகின்றார்.

இதே கருத்தைச் சிங்களத்தின் சனாதிபதியும் - பாதுகாப்பு அமைச்சரும் - முப்படைத் தளபதியுமாகப் பொறுப்பு வகிக்கும் மகிந்த ராஜபக்சவும் வெளியிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தைக் கைப்பற்றியே தீருவோம் என்று அவர் அண்மையில் பகிரங்கமாகக் கருத்துவெளியிட்டுள்ளார்.

கருத்துக்கள் - சூழுரைகளுக்கு அப்பால் இப்போது சிங்கள அரசு வன்னிமீது தனது படையெடுப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கிவிட்டது. மன்னார் களமுனையில் - முகமாலைச் சமரரங்கில் சிங்களப் படைகள் களங்களைத் திறந்துள்ளன. மாந்தைமேற்கு உதவி அரச அதிபர் பிரிவில் மக்கள் இப்போது வசிக்கமுடியாத அளவிற்குக் கடுமையான எறிகணை மற்றும் வான் தாக்குதல்களைச்

சிங்களம் அங்கே நடாத்திவருகின்றது. பல்லாயிரம் மக்கள் இடம்பெயர்ந்து அல்லற்படுகின்றனர்.

முகமாலைச் சமரரங்கிலும் கடந்த இரண்டு மூன்று நாட்களாகப் பெருந்தாக்குதலைப் படையினர் தொடுத்துள்ளனர். கிளாலி - நாகர்கோவில் களமுனைகளில் சிங்களப் படைகள் முன்னேற்ற முயற்சிகளையும் செய்து பார்க்கின்றன. இந்த முன்னேற்ற முயற்சிகள்

எல்லாவற்றையும் புலி வீரர்கள் முறியடித்துப் படையினரை முடக்கிவருகின்றனர்.

வன்னி வாழ் மக்கள் மீது சாவையும் - இடப்பெயர்வு அவலங்களையும் சுமத்தி, கிழக்கு மாகாணச் சமர்களைப்போல, நிலம் ஆக்கிரமி;க்க

சிங்களப்படைகள் ஆசைப்படுகின்றன.

வன்னியைச் சிங்களப் படைகள் ஆக்கிரமித்தால் பெரும் இனப்படுகொலை நடக்கும் என்பது சர்வதேச மனித உரிமைவாதிகளின் கருத்தாகவுள்ளது அதேவேளை வன்னி மக்களை ஒரு பெரும் போருக்குப் புலிகள் இயக்கம் தயார்ப்படுத்தி வைத்திருப்பதால் சிங்களப்

படைகளின் ஆக்கிரமிப்பு ஆசை நிறைவேற வாய்ப்பில்லை என்றும் இராணுவ ஆய்வாளர்கள் கருத்துக்கூறிவருகின்றனர்.

ஒட்டுமொத்தத்தில் ஒரு பெரும் போர் வன்னி மண்ணில் நிகழப்போகின்றது என்று சர்வதேச சமூகம் எதிர்பார்க்கின்றது.

எதிரி ஆசைப்படுவது போல வன்னிச் சமர் சிங்களப் படைகளுக்கு இலகுவானதாக இருக்கப்போவதில்லை. வன்னி மண்ணின் ஒவ்வொரு

குடும்பமும் சமரில் நேரடியாகப் பங்கேற்கும் அளவிற்கு விடுதலைப்போராட்டம் விரிவடைந்துள்ளது. புலிகள் இயக்கத்தின் ஆட்பலமும்

பெருகியுள்ளது. எதிரி தொடுத்த சிறுசிறு தாக்குதல்களையெல்லாம் முறியடித்த புலிவீரர்கள் உற்சாகத்துடனும் - ஓர்மத்துடனும் களமுனையில் காத்திருக்கின்றனர்.

வன்னி வாழ் மக்களும் இத்தகையதொரு உறுதியுடனும் ஓர்மத்துடனும் செயற்படவேண்டிய வரலாற்றுக் கட்டம் அண்மித்துக் கொண்டிருக்கின்றது. “ஜெயசிக்குறு” சமரை மக்களின் முழு ஆதரவுடன் புலிகள் இயக்கம் முறியடித்து வெற்றிவாகை சூடியது இன்று பெருமைமிகு வரலாறாக எம் முன் உள்ளது. மீண்டும் அத்தகையதொரு இராணுவ சாதனைபடைத்து இனமானம் காக்க மக்களை

வரலாறு அழைக்கின்றது. மக்களின் விடுதலைப் பற்றும் - வன்னியின் புவியியற் சூழலும் சிங்களப் படைகளை அச்சமூட்டிக்கொண்டே

இருக்கின்றன. அதனால் தான் கடந்த ஒருவருடகாலமாக வன்னி மீதான பெரும் சமரை எதிரி ஒத்திவைத்துக்கொண்டே வந்தான்.

சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்பிற்குள் உள்ள இடங்களில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை இன்று அவலம் நிறைந்ததாகவே உள்ளது.

கொலைகளும் - காணாமல்போதல்களும் - சித்திரவதைகளும் அங்கே நாளாந்த நிகழ்வுகளாக உள்ளன. மனித உரிமைக் கழகங்களிடம்

தஞ்சம் கோரும் தமிழரின் தொகை அங்கே பெருகிவருகின்றது.

இத்தகையதொரு அவலத்தை மக்கள் மீதும் கட்டவிழ்த்துவிட ஆசைப்படும் சிங்களப்படைகளின் எண்ணத்தை முறியடிக்கவேண்டிய பணி இன்று எம்முன் உள்ளது.

வன்னியில் புலிகள் புரியப்போகும் எதிர்ச்சமர் வன்னியைக் காக்கும் தற்காப்புப் போர் என்ற நிலைக்கும் அப்பால், வன்னியிலிருந்து நிலம் மீட்கும் போராக முழுப்பரிமாணம் பெறுவதற்குமக்களின் ஒத்துழைப்பும் - பங்களிப்பும் மிக அவசியமானதாகும்.

http://www.viduthalaipulikal.com/index.html?kural=137

எதோவெல்லாம் எழுதவெளிக்கிட்டன்........ நிப்பாட்டிடன்...... என்ன.. எல்லம் எங்கட இயக்கத்துக்கு தெரியும்தானே......

:icon_mrgreen:

தயவுசெய்து கருத்துக்களை திரிவுபடுத்தாதீர்கள். நாம் செல்லும் இலக்குதான் முக்கியம்.

நாம் இங்கு வசதிவாய்ப்புக்களுடன் வாழ்ந்து கொண்டு தாயகத்தில் உள்ள நிலைமைகளை

பற்றி விவாதம் புரியக் கூடாது. விவாதம் செய்ய உரிமை இல்லை என கூறவில்லை இது

விவாதம் செய்யும் காலமில்லை. கொக்காவில் பிடிபட்டாலும் கிளி நகர் பிடிபட்டாலும் தாயக

உறவுகள்தான் மீண்டும் எம் நிலங்களை மீடடக்கப்போகிறாற்கள். எனவே நாம் எப்போதும்

அவர்களுக்கு ஆதரவாக மட்டும்தான் செயற்படவேண்டும். அதாவது சரியான கள நிலைமைகள்

அவர்களுக்குதான் தெரியும். அவர்கள் தங்களுடைய திட்டங்களினடிப்படையில் அட்டூழியம் புரியும்

சிங்கள இனவெறிப் படைகளுக்கு முதுகு முறிப்பார்கள்.எம் மண் மீட்பார்கள். அதுவரை நாம்

பொறுமையாகவும் எம் உறவுகளுக்கு முழுமையான ஆதரவாகவும் இருப்போம்..

"எமக்கான காலம் வரும்வரை எதிரியை எம் தோளில் சுமக்கவேண்டும்"

(நாம் எதிரியை சுமக்கவில்லை ஆயினும் பொறுமை வேண்டும்)

Edited by jaalavan

பிரான்சிலிருந்து பரணி கிருஸ்ணரஜனி எழுதிய "புலிகளின் படைத்துறை ஆளுமை - சில புரிதல்கள்" கட்டுரையில் இருந்து சில பகுதிகள்.. தற்போதும் பொருந்வதாக உள்ளது..

http://www.tamilcanadian.com/tamil/?cat=29&id=227

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்' பாருங்கோ எல்லோரையும் சேர்த்து செல்லுறதை விட அவவைரை ஓதுக்கி பொட்டு தனிய விசிலப்பம் ,,,,

யார் உங்களுக்கு மற்றவயளை ஓதுக்கிற உரிமையை தந்தது. முதல்ல உந்த கூத்துக்களை நிறுத்துங்கோ !

  • கருத்துக்கள உறவுகள்

புதியவன் எமக்கு தெரியாத ஒன்றை

அல்லது சந்தேகமான ஒரு விடயத்தை விமர்சிப்பதைவிட

ஒதுங்கியிருப்பது தான் நல்லது

நீங்கள் கோபப்படுவது நன்மைக்காக இருந்தால் கூட

இதன் விழைவுகள் எமக்குத்தான் பாதகமானவை

மக்களை மாந்தைகள்போல் வைத்திருக்கவேண்டாம் என்பது உங்கள் கருத்தாக இருந்தால்

ஒரு படத்தைக்காட்டியே ஒரு பொய்யை ஆயிரம் உண்மைகளாக்கும் தமிழர்களுடன்தான் நாம் வாழ்கிறோம் என்கின்ற யதார்த்தை நாம் நாம் மறக்க்கூடாது

எனவே இப்படியான உண்மையாக்கலுக்கு இடம் பிடித்து எமது எழுத்தாளர்கள் எழுதும்போதுதான் சில மிகைப்படுத்தல்கள் இடம்பெறுகின்றன

அதை உங்களைப்போன்றவர்கள் ஊதிப்பெருக்கி விடுவதைதான் நான் கண்டித்தேன்

அவ்வளவே.............???

புதியவன் எமக்கு தெரியாத ஒன்றை

அல்லது சந்தேகமான ஒரு விடயத்தை விமர்சிப்பதைவிட

ஒதுங்கியிருப்பது தான் நல்லது

நீங்கள் கோபப்படுவது நன்மைக்காக இருந்தால் கூட

இதன் விழைவுகள் எமக்குத்தான் பாதகமானவை

மக்களை மாந்தைகள்போல் வைத்திருக்கவேண்டாம் என்பது உங்கள் கருத்தாக இருந்தால்

ஒரு படத்தைக்காட்டியே ஒரு பொய்யை ஆயிரம் உண்மைகளாக்கும் தமிழர்களுடன்தான் நாம் வாழ்கிறோம் என்கின்ற யதார்த்தை நாம் நாம் மறக்க்கூடாது

எனவே இப்படியான உண்மையாக்கலுக்கு இடம் பிடித்து எமது எழுத்தாளர்கள் எழுதும்போதுதான் சில மிகைப்படுத்தல்கள் இடம்பெறுகின்றன

அதை உங்களைப்போன்றவர்கள் ஊதிப்பெருக்கி விடுவதைதான் நான் கண்டித்தேன்

அவ்வளவே.............???

அண்ணை இங்கு யாரும் எதையும் ஊதிப் பெரிப்பிக்க வில்லை நீங்களாகவே கற்பனை கொள்வதற்கு நான் என்ன செய்ய முடியும் ? தவிர எமக்குள் யதார்தங்களை குறிப்பிடுபவர்களை எங்களில் பல பேர் துரோகி என்ற பட்டத்தை இலகுவாக வழங்குவதும் போராட்டதம்திற்கு எதிராக செய்படுபவர் என்றும் சொல்லி சொல்லியே எம்மவர்களை தள்ளி வைக்கின்றோம் கூடிய வகையில் எம்மவர்களையும் அரவணைத்து செல்வது நான் நல்லது இது பியை எண்டிறியளோ ???

  • கருத்துக்கள உறவுகள்

பிடிக்காத ஆனால் நியாயமான கருத்துக்களை எழுதாமல் இருக்கவேண்டும் என்று மற்றவர்களை நோக்கிச் சொல்லுவது பாசிசம் என்று சொல்வார்கள். தக்க பதில்களைக் கொடுத்துத் தெளிய வைக்க முயலவேண்டுமே தவிர, அடக்கி வாசியுங்கள் என்று அறிவுரை சொல்லக்கூடாது.

பிடிக்காத ஆனால் நியாயமான கருத்துக்களை எழுதாமல் இருக்கவேண்டும் என்று மற்றவர்களை நோக்கிச் சொல்லுவது பாசிசம் என்று சொல்வார்கள். தக்க பதில்களைக் கொடுத்துத் தெளிய வைக்க முயலவேண்டுமே தவிர, அடக்கி வாசியுங்கள் என்று அறிவுரை சொல்லக்கூடாது.

நான் திரும்ப எழுதியும் புரியவில்லை போல் உள்ளது..

நீங்கள் தமிழன் என்ற நிலையில் இருந்து பார்த்தால் புரியும் என நினைக்கிறேன்

ஏதாவது தப்பாக விளங்கியிருந்தால் மன்னிக்கவும்..

நன்றி

வணக்கம்.

பிடிக்காத ஆனால் நியாயமான கருத்துக்களை எழுதாமல் இருக்கவேண்டும் என்று மற்றவர்களை நோக்கிச் சொல்லுவது பாசிசம் என்று சொல்வார்கள். தக்க பதில்களைக் கொடுத்துத் தெளிய வைக்க முயலவேண்டுமே தவிர, அடக்கி வாசியுங்கள் என்று அறிவுரை சொல்லக்கூடாது.

நீங்கள் சொல்ல வேண்டிய பதிலை இன்னும் ஒருத்தர் வேற பகுதியிலை எழுதி இருக்கார்.... :icon_mrgreen:

வன்னியில் சனம் கஸ்ட்டப்படுகிறதாம் என்று பதை பதைப்பவர் உண்மையில் அந்த மக்கல் பற்றிச் சிந்திப்பார் எனில் அதற்க்கான நடவடிக்களைச் செய்வதற்க்கு வன்னிக்குச் செல்ல வேண்டும்.யாழ்க் களத்தில் வந்து மினக் கடக்கூடாது.அவ்வறு மினக் கெட்டுக் கொண்டு இவ்வாறு எழுதுபவர்களின் கரிசனை என்பது போலியானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.